டாட்டாவிற்கு – கர்ண மாமன்னர் மோடிஜி என்ன கொடுத்தார்…..? எதைக்கொடுத்தார்…?

nano-inauguration

தோல்வியுற்ற திட்டம் என்று இப்போது அறிவிக்கப்படும்
டாட்டாவின் கனவுத்திட்டமான நானோ கார் தயாரிக்கும்
திட்டத்தை, மேற்கு வங்கம் சிங்கூரிலிருந்து
குஜராத்தின் “சதானந்த்”-க்கு கொண்டு வருவதற்காக –

மோடிஜி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது,
டாட்டாவிற்கு அளித்த சலுகைகள் குறித்த விவரங்கள் –

டாட்டா நானோ தொழிற்கூடத்திற்கு
9570 கோடிகள் கடன் … அதுவும் 0.1 % வட்டிக்கு –
20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்படலாம்…
முதல் இரண்டு ஆண்டுகள் ஒன்றும் கொடுக்க வேண்டாம்…

கிட்டத்தட்ட 1000 ஏக்கர் நிலம்
விவசாயிகளிடமிருந்து சதுரமீட்டர் ரூபாய் 120 என்று
குஜராத் அரசால் வாங்கப்பட்டு

சதுரமீட்டருக்கு வெறும் 90 ரூபாய் என்கிற விலையில்
டாட்டா கம்பெனிக்கு விற்கப்பட்டது…

பத்திரப்பதிவிற்கான வரியிலிருந்து விலக்கு ….
(சுமார் 20 கோடி..)

மேற்கு வங்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்களை
அங்கிருந்து குஜராத்திற்கு கொண்டு வருவதற்கான
செலவிற்காக –

முற்றிலும் இனாமாக – 700 கோடி ரூபாய்

சலுகை விலையில் மின் சப்ளை….
( 200 KVA power supply up to project receiving station,
exemption from electricity duty )

சலுகையில் தண்ணீர் …
14,000 cubic meter per day water supply at project site,
facilities for disposal of hazardous waste,

சலுகையில் எரிவாயு சப்ளை –
pipeline for supply of natural gas to the project site.

சலுகையாக – தொழிற்சாலை அருகே குடியிருப்புகளை
கட்ட வசதியாக, 100 ஏக்கர் நிலம்….

அளிக்கப்பட்ட சலுகைகளின் மொத்த மதிப்பு-
சுமார் 30,000 (முப்பதாயிரம்) கோடி ரூபாய்….!!!

————-

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கார் ப்ராஜெக்டுக்கு
கொடுக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களை
தகவல் அறியும் உரிமை சட்டங்களின் கீழ் கேட்டபோது –
இவை வர்த்தகம் சம்பந்தப்பட்ட ரகசியங்கள் என்பதால்
தரப்பட முடியாது என்று குஜராத் அரசு மறுத்திருக்கிறது….
( the government declined to make available information
under the Right to Information Act taking the plea that it was business secrets ….)

——————-

ஒரு மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்தபோதே
இவ்வளவு தான தர்மங்கள் என்றால்,

ஒரு நாட்டிற்கு பிரதமராக இருக்கும்போது,
தொழில்கள் வளர SORRY தொழிலதிபர்கள் வளர,
எவ்வளவு – தான, தர்மங்கள் செய்ய முடியும்…..???

—————-

என்ன கொடுத்தார் –
எதைக்கொடுத்தார்… என்றிவர்கள் எண்ணும் முன்னே –
பொன்னும் கொடுத்தார்,
பொருளும் கொடுத்தார் –
போதாது போதாதென்றால் –

தன் ராஜ்ஜியத்தையே கொடுப்பார் ….
வாழ்க வாழ்க – கர்ண மாமன்னர் வாழ்கவே …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to டாட்டாவிற்கு – கர்ண மாமன்னர் மோடிஜி என்ன கொடுத்தார்…..? எதைக்கொடுத்தார்…?

 1. Naaga சொல்கிறார்:

  Poda Kizha Naaye

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப Naaga,

   முக்கிய பதவி வகிப்பவர்களை
   இன்னமும் கௌரவமாக விளிக்க
   கற்றுக் கொள்ளுங்கள்….
   நான் அவரை எவ்வளவு மரியாதையாக
   எழுதுகிறேன் – கவனித்தீர்களா ….!!!

   செப்டம்பர் 17, 1950 – என்றால்
   66 வயது தானே ஆகிறது…..
   அதற்குள்ளாக அவரை நீங்கள்
   கிழவர் என்று கூறுவது சரி இல்லை…..!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. M.செய்யது சொல்கிறார்:

  மோடிஜியை விமர்சித்தால் எப்படி பட்ட வாழ்த்துக்கள் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் மேலே உள்ளது தயவுசெய்து நீக்கி விடாதீர்கள் அய்யா. பிஜேபி மற்றும் அதன் ஆதரவாளர்களின் தரம் இப்போது புரிகிறதா அய்யா !!!

  M.செய்யது
  Dubai

  • ராஜ் சொல்கிறார்:

   மோடியை விமர்சித்தால் வரும் வசையை விட பல நூறு மடங்கு வசை நம்ம பிஜே ( தவ்ஹீத் ஜமாஅத் ) விமர்சித்தால் கிடைக்கும் பாய்

   • M.செய்யது சொல்கிறார்:

    விமர்சம் நிச்சயம் தேவை ஆனால் அது நாகரிகமாக இருக்கவேண்டும் என்பதுதான் நமது ஆசை ராஜ் தம்பி.

    M. செய்யது
    Dubai

    • ராஜ் சொல்கிறார்:

     அந்த பின்னூடடம் கேவலமானது என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் முக்கிய விடயம் பிஜேபி அல்லக்கைகளை விட பிஜே அல்லக்கைகள் கேவலமானவர்கள்

     • M. செய்யது சொல்கிறார்:

      இதிலிருந்து தெரிகிறது தங்களின் நிறம் ! ஒருவனை பார்த்து ஏண்டா திருடினாய் என்று கேட்டால் அவன் நான் மட்டுமா திருடினேன் அவன் திருடினான் இவன் திருடினான் என்பது போல் உள்ளது தங்களது பதில் தங்கள் கூட விவாதிப்பதில் பயனில்லை . நன்றி .

      M. செய்யது
      Dubai

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Whom he is saying. I am confused.

 4. Amuthan சொல்கிறார்:

  அப்படியே அதனால் கிடைத்த பலன்கள் கொஞ்சம் இருந்தாலாவது பதிவிடுங்களேன்.
  ஏனெனில் ஒரு மிகப் பெரிய தொழில் நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறுவுவதற்கு அதற்கு அரசு சில காரியங்களை செய்து தான் ஆக வேண்டியுள்ளது. இது குஜராத்தில் மட்டுமல்ல. தமிழகம், புதுவையிலும் கூட. இப்போது இருக்கும் நிலையில் அனைத்து படித்த இளைஞர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு என்பது எட்டா கனியாக உள்ளது. எனவே அவர்களுக்கு ஏதாவது ஒரு நிலையில் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு இந்த மாதிரியான தொழில் முனைவோரை ஆதரித்தாக வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதானால் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தப் பகுதி மக்கள் பெரும் பொருளாதார வளர்ச்சியை மறுப்பதற்கல்ல.
  மேலும் இவை அனைத்தையும் விட இன்றைய இளைஞர்களுக்கு சரியான இந்த மாதிரியான உற்பத்தி ரீதியிலான சூழ்நிலையை அமைத்து கொடுப்பது நம் அனைவரின் கடமை ஆகும். ஏனெனில் இந்தியா இன்னும் உற்பத்தி அளவில் பின் தங்கிதான் உள்ளது. சேவைத் துறையில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.
  (தாங்கள் மேற்கூறிய கடன்தொகை இதுவரை வராக்கடன் ஆகாமல் இருப்பதை நினைத்து சந்தோசப் பட்டுக் கொள்ள வேண்டும்.)

 5. LVISS சொல்கிறார்:

  The Nano project is in Sanand -The link below has some information about this place which may of interest to some readers

  http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Crorepati-workers-of-motown-Sanand/articleshow/50082585.cms?

 6. LVISS சொல்கிறார்:

  There is a mention of two year no repayment period — This is the start up period given to new companies by the banks usually for term loans — This period would vary from 6 months to say two or three years depending on the types of industries — Tatas might have been the beneficiary of many concessions for this project —What is to be seen is whether any subsequent audit reports have raised questions or objections on this —

 7. LVISS சொல்கிறார்:

  Mr K M I am sorry I am flooding this blog with many links — Your blog made me to find some details on this project and its impact in the village — I hope you will excuse me for posting many links —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   நீங்கள் கொடுத்த அத்தனை link-களும்,
   நிலம் விற்ற விவசாயிகளுக்கு குஜராத் அரசு
   நல்ல இழப்பீடு வழங்கி இருக்கிறது என்பதைப்பற்றி
   சொல்வதாக இருக்கிறது.
   அதைப்பற்றி நான் இடுகையில் குறை ஒன்றுமே
   சொல்லவில்லையே…

   என் இடுகையில் சொல்லப்பட்டிருக்கின்ற
   விஷயங்களை மறுப்பதற்கு உங்கள் லிங்க்குகள்
   எதுவும் உதவியாக இல்லையே…

   இவ்வளவு கோடிகள் அரசாங்க பணம் –
   மக்கள் பணத்தை
   டாட்டா-விற்கு அள்ளிக்கொடுப்பதற்கு
   பதிலாக, குஜராத் அரசாங்கமே இந்த தொழிலைத்
   துவங்கி இருக்கலாமே…!

   இத்தனை கோடிகள் கொடுத்தும், இந்த ப்ராஜக்ட்
   ஏன் failure ஆனது…?

   தகவல் அறியும் சட்டத்தில் இது குறித்த விவரங்கள்
   கேட்டபோது அவை “ரகசியம்” என்று குஜராத்
   அரசால் தடுக்கப்பட்டது ஏன்…?

   மோடிஜி பணக்கார தொழில் அதிபர்களைத்தான்
   ஆதரிக்கிறார் என்கிற குற்றச்சாட்டைத் தானே
   இது நிரூபிக்கிறது…?

   தமிழ்நாட்டை ” வியாபாரம் செய்வதற்கு உகந்த
   மாநிலம் இல்லை” ( not easy to do business )
   என்று புள்ளி விவரங்களை உலக வங்கிக்கு
   திரித்துக் கொடுத்து statement விட வைத்திருக்கும்
   மத்திய அரசுக்கு தலைமை வகிப்பவர் –
   business(men) friendly யாக இருந்தார் என்பதற்கு
   சற்றும் நியாயமில்லாத
   இதைப்போன்ற உதவிகள் தானே காரணம்…?

   நான் இந்த விவரங்களை உங்களுக்காக
   மட்டும் எழுதவில்லை…..
   நீங்கள் மாற மாட்டீர்கள் என்பதை நான் உணர்வேன்.
   ஆனால், உங்கள் லிங்க்குகளை படிக்கும் நண்பர்கள்
   இந்த நியாயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்
   என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. பூமி சொல்கிறார்:

  http://m.thehindu.com/opinion/op-ed/a-covert-surgical-strike/article9258730.ece
  👆இதை பற்றியும் எழுதுங்கள்

 9. Alathur Giri Giri சொல்கிறார்:

  முடிந்தால் விமர்சனத்தை விமர்சிக்க வேண்டும், விமர்சனம் எழுதியவரை அல்ல…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.