கொள்ளையோ கொள்ளை – அண்ணனும் தம்பியும் கூட்டு சேராமலே கொள்ளை….!!!

ongc-khyg

ஆந்திராவில் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில்
( KG Basin ) மத்திய அரசுக்கு சொந்தமான ONGC மற்றும்
( பெரிய அம்பானியின்…) ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு
அடுத்தடுத்த படுகைகளில் எரிவாயு உறிஞ்சியெடுக்க
உரிமம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதில் ONGC-க்கு சொந்தமான இடத்திலிருந்து (பூமிக்கு
வெகு கீழே) துளை போட்டு பக்கத்திலுள்ள தனது
சுரங்கத்தில் வாயு வந்து சேரும்படி திருட்டு வேலை செய்து
கடந்த பல வருடங்களாக ரிலையன்ஸ் நிறுவனம்
ஏமாற்றி வந்தது கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டது.

ONGC இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்ததன் விளைவாக, உயர்நீதிமன்றம் இதில்
மூன்றாவது தரப்பினர் ஒருவரை நியமித்து விசாரிக்க
உத்திரவிட்டது.

அதன் பேரில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் ஓய்வுபெற்ற
நீதிபதி ஏ.பி.ஷா அவர்களின் தலைமையில் ஒரு குழுவை
அமைத்தது.

ஜஸ்டிஸ் ஷா அவர்கள் ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை
மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.

அவரது அறிக்கையின்படி, 2009-லிருந்து 2015 வரையிலான –
சுமார் ஏழு ஆண்டு காலகட்டத்தில் – அதாவது திருட்டு
வெளியாகும் வரை உள்ள காலத்தில், சுமார் 11,000 கோடி
ரூபாய் மதிப்பிலான (பதினோரு ஆயிரம் கோடி ) ONGC -க்கு
சொந்தமான எரிவாயுவை, ரிலையன்ஸ் நிறுவனம் பூமிக்கு
அடியில் துளை போட்டு, தன் சுரங்கத்திற்கு இழுத்து, பின்னர்
அதை உறிஞ்சி வெளியே எடுத்து விற்பனை செய்திருப்பது
கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்டிஸ் ஷா அவர்கள் ரிலையன்ஸ் கம்பெனியிலிருந்து
11,000 கோடி வரையிலான ( அவர்கள் திருட்டுத் தனமாக
எடுத்துக் கொண்ட எரிவாயுவின் சர்வதேச விலை )
நஷ்ட ஈட்டை வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரை
செய்திருக்கிறது….

இது திருடி எடுத்துக் கொண்ட எரிவாயுவின் விலைமதிப்பு
மட்டுமே. பெனால்டி எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை….

இருந்தும், மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் (மட்டும்…)
நஷ்ட ஈடு கேட்டு ரிலையன்ஸ் கம்பெனிக்கு நோட்டீஸ்
கொடுத்திருக்கிறது.

ரிலையன்ஸ் கம்பெனி அதையும் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்ட சிக்கல்களை எல்லாம் இழுத்து விட்டிருக்கிறது…..
வழக்கு போகிற போக்கை பார்த்தால் –
இது எந்த ஜென்மத்தில் முடியும் என்பது தெரியவில்லை…

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தம்பி கொள்ளை….
பாஜக ஆட்சியில் அண்ணன் கொள்ளை….

இருவரும் கூட்டாக இருந்தால் வெவ்வேறு கட்சிகளின்
ஆட்சிகளில் பலன் பெற இயலாதென்று
யூகித்து தான் தனித்தனியே பிரிந்து இவர் ஒரு கட்சிக்கும்
அவர் ஒரு கட்சிக்கும் ஆதரவாளராகி விட்டார்களோ
என்று தோன்றுகிறது….!!!

எல்லாம் வியாபாரம்….
கொள்ளை வியாபாரம்….!!!

இது குறித்து தமிழில் விரிவான, சரியான செய்திகள்
கிடைக்கவில்லை… நண்பர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்
பொருட்டு ஆங்கிலத்தில் வெளியான செய்திகளிலிருந்து
( வெவ்வேறு தகவல் தளங்களிலிருந்து ) திரட்டப்பட்ட சில
சாராம்சங்களை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

————————

ongc-kg_basin

Government constituted the Shah panel on December 15, 2015 to look
into the dispute between RIL and ONGC. The panel was to submit its
report in three months but was given two extensions. (Reuters)
Justice AP Shah Committee today submitted a ‘comprehensive report’
on the compensation Reliance Industries should pay to ONGC for

producing state-run firm’s gas for the past seven years.
The one-man Committee headed by Ajit Prakash Shah, former Chief
Justice of Delhi High Court, submitted to Oil Minister Dharmendra
Pradhan a report containing not just the compensation to be paid for ONGC’s gas migrating to adjacent KG-D6 block of RIL in the Krishna Godavari basin, but also recommendations for avoiding such disputes in future.

As much as 11.122 billion cubic meters of ONGC gas had migrated
from its Godavari-PML and KG-DWN-98/2 blocks to adjoining KG-D6 of
RIL between April 1, 2009 and March 31, 2015. At prevailing prices, the gas was worth Rs 11,000 crore.

While ONGC’s reservoirs have almost emptied, RIL continues to
produce gas from D1&D3 fields in KG-D6 block, some of it being of
ONGC.
————————-

D&M had in its November 2015 report indicated that as on March 31,
2015, 44.32 per cent of the gas initially in place in Godavari PML and 34.71 per cent in KG-DWN-98/2 (both of ONGC) had migrated to KG-D6 of RIL. The report projected a higher proportion of gas migration and its production through RIL operated KG-DWN-98/3 (KG-D6) block by end of 2019.

————————–

DeGolyer and MacNaughton (D&M), had in its November 30 report,
established that reservoirs in ONGC’s Krishna Godavari basin KG-
DWN-98/2 (KG-D5) and the Godavari-PML are connected with
Dhirubhai-1 and 3 (D1 & D3) field located in the KG-DWN- 98/3 (KG-
D6) Block of RIL.

It states that as much as 11.122 billion cubic meters of ONGC gas has migrated from Godavari-PML and KG-DWN-98/2 to KG-D6. Of the
58.68 bcm of gas produced from KG-D6 block since April 1, 2009,
49.69 bcm belongs to RIL and 8.981 bcm could have come from
ONGC’s side, D&M said.

At gas price of USD 4.2 per million British thermal unit, the volume of gas belonging to ONGC which RIL has produced comes to USD 1.7 billion (Rs 11,055 crore).

——————————-

RIL has said it would seek arbitration under the terms set out in the production-sharing contract.

“The claim of the Government is based on misreading and
misinterpretation of key elements of the PSC (production sharing
contract) and is without precedent in the oil & gas industry, anywhere in the world,” according to a statement from RIL.

———————

RIL stated that the quantification of the amount to be paid was
“without any basis and arbitrary” and was not based on any law.

“RIL proposes to invoke the dispute resolution mechanism in the PSC
and issue a Notice of Arbitration to the Government,” the company
statement said.

———————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to கொள்ளையோ கொள்ளை – அண்ணனும் தம்பியும் கூட்டு சேராமலே கொள்ளை….!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  நூறு இருநூறு திருடினால் திருடனுக்கு தர்ம அடியும், சிறைத்தண்டனையும் உண்டு. பாவம், அவன் சின்ன திருடன்… பெரும் கோடிகளில் கொள்ளை அடித்தால் ராஜ உபச்சாரம்,வெறும் அபராதம் மட்டுமே. தர்ம மகாராசவின் கடைக்கண் பார்வை வேறு உள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   // வெறும் அபராதம் மட்டுமே //

   அபராதம் கூட அல்ல நண்பரே.
   திருட்டுத்தனமாக எடுத்த எரிவாயுவுக்கு
   உண்டான காசு – அவ்வளவே.

   அது கூட ஜட்ஜ் சொன்னதில் ஆயிரம் கோடி கம்மியாக…!!!
   (ஜட்ஜ் சொன்னது 11,000 கோடி )

   -வாழ்த்துகள்,
   காவிரிமைந்தன்

 2. தமிழன் சொல்கிறார்:

  இது நான் அடிக்கறதைப் போல அடிக்கிறேன். நீ அழறதைப் போல அழு என்பதாக இருக்காது என்று என்ன நிச்சயம்? அல்லது யாருக்கேனும் கொடுக்க விட்டுப்போய் அவர்கள் இதைப் பெரிய செய்தியாக ஆக்குகிறார்களா?

  தமிழகத்தில்தான் நாம் தொலைபேசித்துறை ஜி.எம் எப்படி நடந்துகொண்டார் என்று பார்த்தோமே (தயானிதி விஷயத்தில்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   உண்மை. அதே கதை தான்.

   விஷயம் வெளிவந்து விட்டது…
   எனவே, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் –
   நீ அழற மாதிரி அழு…
   கதை இப்போதைக்கு முடியாது…
   International Arbitration என்று சொல்லி
   இழுத்தடிப்பார்கள் பாருங்கள்..

   10,000 கோடிக்கு வட்டி எவ்வளவு ஆயிற்று…?

   அடேயப்பா.. ரிலையன்ஸ் கம்பெனி
   எப்படி எல்லாம் வளர்கிறது இந்த நாட்டில்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Srini சொல்கிறார்:

  Respected Sir,
  Great post sir. Continue good efforts to bring out corruption to public. same way kindly write about the unnoticed corruption that’s going on in Tamil Nadu. Namma ooru tea kadai kaarar panneer and family, and mannargudi mafia patriyum konjam ezthungal sir. Only people like you can bring awareness to tamilnadu people.

  Pranams
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   வருக. சாதாரணமாக நான் பாஜகவை
   விமரிசித்தால் தான் உங்களுக்கு கோபம் வரும்.
   இப்போது அம்பானிஜி -யை விமரிசித்தால் கூட கோபம் வருகிறதே…! ஒரு வேளை – அம்பானிஜி-யும் பாஜக வில்
   சேர்ந்து விட்டாரா என்ன …?

   எனக்கு ஆதாரங்களுடன் தெரிய வருவதைப்பற்றி தான்
   நான் எழுத முடியும் என்பதை உங்களால்
   உண்மையாகவே புரிந்து கொள்ள முடியவில்லையா…?

   நீங்கள் கூறியுள்ள மற்ற “சமாச்சாரங்கள்” பற்றி, உங்களிடம்
   எதாவது தகவல்கள் /ஆதாரங்கள் இருந்தால் அனுப்பி வையுங்களேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   வெறுமனே லிங்க்கை மட்டும் கொடுத்து விட்டு போவதற்கு
   பதிலாக, இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்பதையும்
   சொன்னீர்களானால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    If the govt had kept quiet they would have said it is because of friendship –Now they will say the govt did it to save its skin–Either way they are at the receiving end — But the fact that they initiated action in 2014 itself shows that they may have gone into the aspect of leakage of income —
    Your blogs make me dwell into the aspects of the govt – I neither support or oppose blindly –There are a few things I am not in agreement with the govt but I want to look at the positive side –Any govt has both positive and negative side —
    The govt should spare no efforts to get the money from the company-Hundred of crores of money is no small amount for a big country like ours –Do what it takes to recover fully is my stand on this issue –

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,

     உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
     நன்றி.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  ” சுனாமி – பினாமி – & அம்பானி ” …. ! எந்த — யாருடைய ஆட்சியாக இருந்தாலும் – இவர்களுக்கு மவுசு அதிகம் தான் – ஏனென்றால் ” முதலாளிகள் ” அல்லவா .. ? அரசுகளுக்கும் — இவர்களுக்கும் என்று எழுதப்படாத — { எழுதப்பட்ட } பொதுவான ஒன்று தான் — இவர்களுக்கான ” பொது சிவில் சட்டமோ ” … ? சமீப காலமா செய்திகளில் — விவாதங்களில் கேள்விப்படுகிற — பொதுவான ஒரு விஷயம் ” பொது சிவில் சட்டம் ” … அந்த ஞாபகம் குறுக்கே வந்து இடைஞ்சல் பண்ணுது ….

  இவர்களின் சிம் கார்டு விற்பனைக்கே இவர்களது நிறுவனத்திற்கு தனி மனித அடையாளமான ” ஆதார் எண் விவரங்களையும் — கைவிரல் ரேகையையும் ” மத்திய அரசு கொடுத்து சரி பார்க்க கூறியது — சரியா … தவறா …. ? என்பதே புரியாமல் திண்டாடும் நமக்கு — எதையும் தாங்கும் இதயம் படைத்த — இறைவனுக்கு நன்றி கூறுவோமா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ரிலையன்ஸ் ஜியோ விவகாரத்தில்
   நிறைய தில்லுமுல்லுகள் நிகழ்வது
   தெரிகிறது.

   ஆனால், இலவசத்திற்கு ஆசைப்பட்டு,
   மக்கள் தாமாகவே முன்வந்து
   முட்டாளாக விரும்பினால் …?

   இந்த அலைகள் அடித்து முடிந்த பிறகு,
   சில காலம் கழித்து இது குறித்து பெரும் புகார்கள்
   எழும் என்று தோன்றுகிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.