சட்டமா – தர்மமா…? மூத்த வழக்குரைஞர் பராசரன் ……

 

law-and-dharma-k-parasaran

தலைமை நீதிபதியுடன் திரு பராசரன் அவர்களும், டாக்டர் என்.ஆர்.மாதவ மேனன் அவர்களும்

புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்களின்
90-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரைக் கெளரவிக்கும்
வகையில் அண்மையில் “சட்டமும் தர்மமும்’ என்ற ஆங்கில
நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் எனக்கு விசேஷ அக்கரை ஏற்பட
ஒரு தனிப்பட்ட காரணம் உண்டு.

பல மூத்த சட்ட அறிஞர்களின் உரையை கேட்க /பார்க்க
வாய்ப்பு ஏற்பட்டது என்பதோடு –

இந்த விழாவில், நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட
தற்போதைய சத்தீஸ்கர் மத்திய பல்கலைக்கழக வேந்தர்
டாக்டர் என்.ஆர்.மாதவ மேனன், அவர்களிடம் –

ஒரு வருடம் criminal law கற்கக்கூடிய ஒரு அருமையான
வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்னர் எனக்கு கிடைத்திருந்தது.
அவருடன் பலமுறை காரசாரமாக விவாதம் செய்திருக்கிறேன்….!

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நிகழ்ச்சியில்
தான் அவரை பார்க்கிறேன். மிக உயர்ந்த பதவியில் அவரைக்காண
மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர்.

நிகழ்ச்சியில், “சட்டம், சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி’
என்கிற தலைப்பில் திரு எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
திரு. குருமூர்த்தி, பேசும்போது –

1980-இல் “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு எதிராக
அன்றைய காங்கிரஸ் அரசு தொடுத்த வழக்கில்,
வழக்குரைஞர் பராசரனின் அணுகுமுறையை வியந்து
பாராட்டினார்.

” தனிப்பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி மீண்டும்
ஆட்சியைப் பிடித்திருந்த நேரம். சிறிய விதிமுறை
மீறல்களைக் காரணம் காட்டி தில்லியிலுள்ள இந்தியன்
எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கட்டடத்தையே இடித்து விடுவது
என்று செயல்பட்டது காங்கிரஸ் அரசு. அப்போது தலைமை
அரசு வழக்குரைஞராக இருந்த கே. பராசரன், அந்த அநீதிக்குத்
துணை போக மறுத்துவிட்டார். அரசு வழக்குரைஞரானதால்
இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிமன்றத்திலேயே
துணிந்து கூறிவிட்டு வெளியேறிவிட்டார். தர்மத்தை மீறிய
எந்தச் செயல்பாட்டுக்கும் துணை போகாதவர் கே. பராசரன்”
என்றார் எஸ். குருமூர்த்தி.

திரு. கே.பராசரன் அவர்கள் ஏற்புரையாற்றியபோது
பேசியதிலிருந்து ஒரு பகுதி –

சட்டம் என்பது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே.
சட்டமா – தர்மமா என்று பார்க்கும்போது, தர்மத்தின்
அடிப்படையில் அமையாத சட்டம் ஏற்புடையதல்ல.

தர்மத்தின் அடிப்படையில்தான் சட்டம் இயங்க வேண்டும்
என்பதை எனக்கு வழக்குரைஞர் தொழிலில் குருவாக
இருந்த எனது தந்தை கேசவ ஐயங்கார் கற்றுத் தந்த பாடம்.

அவருக்கு குருவாக இருந்தவர் பிரபல வழக்குரைஞர்
டி.ஆர். ராமச்சந்திர ஐயர். அந்த ஜாம்பவான்களின் வழியில்
அவர்களது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்பட
முடிந்தது என்பதுதான் எனது மிகப்பெரிய தொழில்
ரீதியிலான ஆறுதல்.

பட்டறிவு, மனசாட்சியின் பாற்பட்ட தர்ம நியாய சிந்தனை
இவை இரண்டும்தான். ஒரு நல்ல வழக்குரைஞரின்
அடிப்படை குணாதிசயமாக இருக்க வேண்டும்.
இதற்கு டி.ஆர். ராமச்சந்திர ஐயர் ஒரு வழக்கில்
கையாண்ட வாதத்தை உதாரணமாகக் கூறலாம்.

ஜமீன்தார் ஒருவர் அவரது தாயாருக்கு மிகக் குறைவான
ஜீவனாம்சம் மட்டுமே வழங்கி வந்தார். தனது ஜீவனாம்சத்
தொகையை அதிகரிக்கக் கோரும் ஜமீன்தாரின் தாயாருக்காக
டி.ஆர். ராமச்சந்திர ஐயர் வாதாடினார்.

வழக்கு தொடர்பான ஆதாரங்களும், தஸ்தாவேஜுகளும்
கட்டுக் கட்டாக இருந்தன. ஆனால், டி.ஆர். ராமச்சந்திர ஐயர்
அவற்றில் எதையுமே தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

எந்தவித சட்ட நுணுக்கத்துக்குள்ளும் நுழைந்து தனது
கட்சிக்காரருக்கு வலு சேர்க்க முயலவில்லை.

அவர் முன்வைத்த வாதம் தர்மத்தின் அடிப்படையில்
அமைந்தது.

” ஜமீன்தார் பன்றிப் பண்ணை வைத்திருக்கிறார்.
மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார்.
குதிரைப் பண்ணை வைத்திருக்கிறார்.
ஜமீன்தார் எனது கட்சிக்காரரை அவரைப் பத்து மாதம்
சுமந்து பெற்று, அவருக்கு ஜமீன்தார் என்கிற
அந்தஸ்த்தைப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த
தாயார் என்று கூடப் பார்க்க வேண்டாம்.
அவர் விலங்கினங்களைப் பராமரிக்கச் செலவிடும்
தொகையைத் தனது தாயின் பராமரிப்புக்குத் தந்தால்
போதும் என்று தான், எனது கட்சிக்காரரின் சார்பில்
தாழ்மையுடன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்”

என்று தனது வாதத்தை முன்வைத்தபோது, அதற்கு மேல்
அங்கே சட்டம் தேவைப்படவில்லை. தர்மம் வென்றது.

வழக்குரைஞர் தொழில் புனிதமானது.
“”நீதிபதிகளுக்கு நியாயம் வழங்கத் துணை புரியும்
வழக்குரைஞர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள்
என்று செயல்படுவது சரியான அணுகுமுறையல்ல.
அது ஆரோக்கியமான சூழலுமல்ல. சாமானியனுக்கும்
நீதி கிடைக்க வேண்டும். தர்மம் மேலோங்க வேண்டும்”
என்றார் அவர்.

நேரமும், ஆர்வமும் இருப்பவர்கள்
கீழ்க்கண்ட வீடியோ லிங்கில் விழா உரைகளை
கேட்கலாம்/பார்க்கலாம் –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சட்டமா – தர்மமா…? மூத்த வழக்குரைஞர் பராசரன் ……

 1. Hariharasubramanian.R. சொல்கிறார்:

  Mr.Kavirimainthan,

  Thanks a lot for introducing this
  wonderful occasion & video.
  I regularly read of your Blog for
  the last two /two and half years
  since a Friend introduced this to me.
  I have been watching with surprise the various
  topics of interest you are handling here.
  We are lucky to share
  your vast experience and knowledge.
  I wish you a healthy and peaceful life.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.ஹரிஹரசுப்ரமணியன்,

   வருக. முதல் முறையாக இங்கு எழுதுகிறீர்கள்
   என்று நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா…! மாேடியின் ஐநூறு…ஆயிரம் … நாேட்டுகள் பற்றிய திடீர் அறிப்பு … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.