செல்லாத நோட்டு குறித்து மற்றும் – மீண்டும் திமுகவில் திரு.அழகிரி – திரு.ஸ்டாலின் நம்பும் செய்தி நிறுவன தகவல்…

..

..

முன்னுரை – செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே இது பதிவாகி விட்டது. மக்கள் படும் அவதிகள், இந்த நடவடிக்கை குறித்து அவர்களது கருத்து
ஆகியவற்றை நேரில் தெரிந்து கொள்ள, காலையில் பல
இடங்களுக்கும் செல்கிறென். திரும்ப வந்து என் அனுபவங்களுடன் செல்லாத பணம் குறித்த இடுகையை 09/11/2016 – 12 மணிக்கு மேல் வெளியிடுகிறேன்.

அதற்குள்ளாக, தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பும்
நண்பர்கள், இந்த இடுகையின் மறுமொழி பகுதியிலேயே
பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த இடுகையில் இது குறித்து விவரமாக சந்திப்போம்.

-காவிரிமைந்தன்

go-puram-photo-001a

– திரு.அழகிரியை மீண்டும் திமுகவுக்குள் கொண்டு வர
கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் விரும்புகிறது ….

– யோசனை கலைஞரின் மகள் செல்வியுடையது.
திருமதி ராசாத்தி அம்மாள், கனிமொழி, மாறன் சகோதரர்கள்
உள்ளிட்ட அனைவரும் இதனை வரவேற்கின்றனர்…..

– திமுகவில் உள்ள 7 அறக்கட்டளையிலும், திரு.ஸ்டாலின்
மட்டுமே தனித்து அதிகாரம் செலுத்துவதை குடும்பம்
விரும்பவில்லை…

– கலைஞரும் இதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்.
3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிவடைந்தவுடன்,
கலைஞரே, அழகிரியின் re-entry -ஐ அறிவிப்பார்……

———————————–

செய்தித்தாள் எதிலும் இந்த விஷயங்கள் வரவில்லையே
என்கிறீர்களா…? மிக மிக நம்பகமான இடத்திலிருந்து தான்
இந்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கடந்த 5-ந்தேதியன்று, ஜுனியர் விகடன் குறித்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் திரு. ஸ்டாலின்.

அந்த அறிக்கையில்,

“தமிழகத்தின் பழம்பெரும் இதழ் “ஆனந்த விகடன்”.
அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள்
பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய “ஆனந்த விகடன்”
குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் “ஜுனியர் விகடன்”…

இதிலே இடம் பெற்றுள்ள செய்திகள், முழுவதும் உண்மை
என்பதை மக்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

இந்தியப் பத்திரிகைத் துறையில் மிகச் சிறந்த நம்பகத்
தன்மையை வளர்த்துக் கொண்டுள்ள குழுமத்திலிருந்து
வெளிவரும் இதழ், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போகிற
போக்கில் ஏனோ தானோவென்று, முக்கியமான செய்திகளை
வெளியிட வாய்ப்பே இல்லை……..

– என்றெல்லாம் ஜுனியர் விகடனின் நம்பகத்தன்மைக்கு
சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் திரு.ஸ்டாலின்.
எனவே, அந்த ஜூனியர் விகடனில் வெளிவந்திருக்கும்
இந்த செய்தி பொய்யாக இருக்க முடியுமா…?

go-puram-1-001a

go-puram-2-003a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

4 Responses to செல்லாத நோட்டு குறித்து மற்றும் – மீண்டும் திமுகவில் திரு.அழகிரி – திரு.ஸ்டாலின் நம்பும் செய்தி நிறுவன தகவல்…

 1. selvarajan சொல்கிறார்:

  // எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம்.. சமூக வலைதளங்களில் மக்கள் கடும் கொந்தளிப்பு!
  500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது எமர்ஜென்ஸியை மிஞ்சிய சர்வாதிகாரம் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்….. // http://tamil.oneindia.com/news/tamilnadu/social-media-erupts-against-modi-s-announcement/slider-pf214247-266705.html —- அய்யா … !!! பெரும்பாலான அரசியல் கட்சிகளும் — அரசியல்வாதிகளும் — பணமுதலைகளும் — கார்போரேட்டுகளும் — நடிகர்களும் என்று சகட்டுமேனிக்கு ” மோடியை ” இந்த செயலுக்காக பாராட்டுவது — ” உளமாறவா … இல்லை உதட்டளவிலா …? “

 2. LVISS சொல்கிறார்:

  What I learned about this demonetisation exercise — One , ,that spade work for this was started six months ago —It was not a sudden decision–Only six persons were in the know about it —
  There was a cabinet meeting and the PM met the President before the announcement was made and explained to him about the step –Probably the cabinet ministers were informed about this in the meeting — It is to be noted that the President who was himself a finance minister welcomed the measure —
  I understand that the new notes have already been printed –One day gap is given so that the banks can replace the old notes with new or other notes in the ATMs —
  We will know when we draw cash from ATM on Thursday — More details will emerge as days go by —

 3. B.V.Subramanian சொல்கிறார்:

  Mr.Elvis

  //Only six persons were in the know about it //

  Can you tell who were they ?

  //President who was himself a finance minister welcomed the measure//

  What else He can do ?

  // when we draw cash from ATM on Thursday //

  So you even do not know that ATMs will remain closed on THURSDAY ALSO.

  BJP people will blindly support whatever their party does.

 4. LVISS சொல்கிறார்:

  Mr Subramanian I will try to answer your questions verbatim
  1) Four persons in the RBI the FM and the PM –This is what I gathered– Any way there are two links below on the subject

  http://scroll.in/latest/821097/narendra-modi-decided-to-scrap-rs-500-and-rs-1000-notes-six-months-ago-reports

  http://www.thehindu.com/news/national/demonetisation-of-rs-500-1000-notes-move-was-in-the-pipeline-for-months/article9321244.ece

  2)It was not referred to the President for his acceptance – He was informed of the measure by the PM — He must be fully aware of the implications of this step —
  3)I have to watch the PM speech again to confirm this — Anyway I concede that you are right –
  4) There are BJP people Congress people AIADMK people DMK people and they support whatever the party does –What is wrong in it ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.