மீண்டும் திமுகவில் திரு.அழகிரி – திரு.ஸ்டாலின் நம்பும் செய்தி நிறுவன தகவல்…

முன்னுரை – செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே இது பதிவாகி விட்டது. மக்கள் படும் அவதிகள், இந்த நடவடிக்கை குறித்து அவர்களது கருத்து
ஆகியவற்றை நேரில் தெரிந்து கொள்ள, காலையில் பல
இடங்களுக்கும் செல்கிறென். திரும்ப வந்து என் அனுபவங்களுடன் செல்லாத பணம் குறித்த இடுகையை 09/11/2016 – 12 மணிக்கு மேல் வெளியிடுகிறேன்.

அதற்குள்ளாக, தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்பும்
நண்பர்கள், இந்த இடுகையின் மறுமொழி பகுதியிலேயே
பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த இடுகையில் இது குறித்து விவரமாக சந்திப்போம்.

-காவிரிமைந்தன்

go-puram-photo-001a

– திரு.அழகிரியை மீண்டும் திமுகவுக்குள் கொண்டு வர
கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பமும் விரும்புகிறது ….

– யோசனை கலைஞரின் மகள் செல்வியுடையது.
திருமதி ராசாத்தி அம்மாள், கனிமொழி, மாறன் சகோதரர்கள்
உள்ளிட்ட அனைவரும் இதனை வரவேற்கின்றனர்…..

– திமுகவில் உள்ள 7 அறக்கட்டளையிலும், திரு.ஸ்டாலின்
மட்டுமே தனித்து அதிகாரம் செலுத்துவதை குடும்பம்
விரும்பவில்லை…

– கலைஞரும் இதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்.
3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிவடைந்தவுடன்,
கலைஞரே, அழகிரியின் re-entry -ஐ அறிவிப்பார்……

———————————–

செய்தித்தாள் எதிலும் இந்த விஷயங்கள் வரவில்லையே
என்கிறீர்களா…? மிக மிக நம்பகமான இடத்திலிருந்து தான்
இந்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கடந்த 5-ந்தேதியன்று, ஜுனியர் விகடன் குறித்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் திரு. ஸ்டாலின்.

அந்த அறிக்கையில்,

“தமிழகத்தின் பழம்பெரும் இதழ் “ஆனந்த விகடன்”.
அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள்
பத்திரிகைத் துறையிலும், திரைப்படத் துறையிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தவர். அத்தகைய “ஆனந்த விகடன்”
குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் “ஜுனியர் விகடன்”…

இதிலே இடம் பெற்றுள்ள செய்திகள், முழுவதும் உண்மை
என்பதை மக்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

இந்தியப் பத்திரிகைத் துறையில் மிகச் சிறந்த நம்பகத்
தன்மையை வளர்த்துக் கொண்டுள்ள குழுமத்திலிருந்து
வெளிவரும் இதழ், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போகிற
போக்கில் ஏனோ தானோவென்று, முக்கியமான செய்திகளை
வெளியிட வாய்ப்பே இல்லை……..

– என்றெல்லாம் ஜுனியர் விகடனின் நம்பகத்தன்மைக்கு
சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் திரு.ஸ்டாலின்.
எனவே, அந்த ஜூனியர் விகடனில் வெளிவந்திருக்கும்
இந்த செய்தி பொய்யாக இருக்க முடியுமா…?

go-puram-1-001a

go-puram-2-003a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மீண்டும் திமுகவில் திரு.அழகிரி – திரு.ஸ்டாலின் நம்பும் செய்தி நிறுவன தகவல்…

 1. selvarajan சொல்கிறார்:

  ” நடக்கும் என்பார் நடக்காது — நடக்காது என்பார் நடந்து விடும் ” ஜுனியர் விகடனில் வந்துள்ள செய்தி நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமையுமா என்பது போக– போகத் தெரியும் — துர்காவைப்பற்றி குறிப்பிட்ட ஜூ .வி. — முக்கியமானவரான ” மருமகனைப்பற்றி ” கூறாமல் தவிர்த்துள்ளது எனோ … ? பங்காளிகள் சண்டை ஓயுமா … ? ஏழு அறக்கட்டளைகளிலும் ” அழகிரியின் ” வாரிசை எதிலாவது இணைத்துக்கொண்டால் — ஏதாவது பலன் உண்டா என்பதும் தெரியும் — கலைஞர் மீண்டும் தனது ரெடிமேடு டயலாக்கான — ” இதயம் இனித்தது — கண்கள் பனித்ததது ” என்பதை கூற ஒரு வாய்ப்பு — கிடைக்குமா …. ?

  இதனால் ” கருப்புப்பணத்தை ” ஒழித்து விட முடியுமா …. ? 500 — 1000 ரூபாய் நோட்டுக்களை திடீரென்று செல்லாது என்று கூறி — வங்கிகளின் மூலம் திருப்பி வாங்குவது என்பது பெரும் பண முதலைகளுக்கு அதிர்ச்சியாக இருப்பது ஒரு பக்கம் இருக்க …. நடுத்தர மற்றும் அடிமட்ட வர்க்கத்திற்கு — அடுத்த வேலை உணவுக்கு தேவையானதை வாங்கக்கூட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளியது தான் ” பேரிடியாக ” தற்போது இருக்கிறது ….

  இந்த ரூ 500 — போய் புது 500 — 2000 நோட்டுகள் வந்தால் மீண்டும் கறுப்புப்பணம் நாட்டில் இருக்காது என்று நினைப்பது சரியா — ? என்ன ரூ 1000 ரூபாய் நோட்டை பதுக்கும் அதே இடத்தில் — அதைப்போல இரண்டு மடங்கு மதிப்பிலான ரூ 2000 — நோட்டுகளை வைக்க போகிறார்கள் — அவ்வளவு தானே …. ?

  இது நல்லதாக படவில்லை. பணப்பதுக்கலுக்கே இது வழிவகுக்கும். வங்கி அட்டைகள் மூலம் பண பரிவர்த்தனை — வர்த்தகம் செய்ய வலியுறுத்தும் இவர்கள் — அந்தவித வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைக்கு வரியும் விதிப்பது தான் — வேதனை– வேடிக்கை ……

  ஒரு குறிப்பிட்ட வங்கி அட்டையின் மூலம் — வேறொரு வங்கியில் கணக்கு வைத்துள்ள கடைக்காரரிடம் பணம் செலுத்தினால் அதற்கும் வரி பிடித்தம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது ….

  .கறுப்பு பணப் பதுக்கலுக்கு எளிமையான வழியை வகுக்கும் ” புது ரூபாய் தாள்களை ” வெளியிட போகிறார்களா … ?. இனிமேலாவது ” ரிசர்வ் வங்கி ” கார்டுகளின் மூலம் செய்யும் அனைத்துக்கும் வரி விதிக்ககூடாது என அறிவிக்குமா … ?…

  எது எப்படியோ ” தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் ” கொடுக்கும் அனைவரும் கறுப்பு பணத்தையே நம்பி இருப்பதற்கு — ஒரு ஆப்பு — . இனி ஓட்டுக்கு பணம் கொடுப்பது சுலபமான காரியம் இல்லை — என்பதால் பணப்பட்டுவாடா கொஞ்சமேனும் குறைய ஒரு வாய்ப்பு —- பல ” மொடாமுழுங்கிகள் ” அரசியலை விட்டே ஒதுங்க வேண்டிய நிலை வருமா … ? . பணம் இருப்பவர்கள் ஜெயிக்கலாம் என்ற நிலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த ” மோடிஜியின் ” முடிவு அமைய ஒரு வாய்ப்பாகுமா …. ?

  பாவம் … சிறிது காலத்திற்கு துன்பப்பட போவது நம்மை போன்றவர்கள் — எந்த ஒரு அத்தியாவசிய பொருளையும் பெற முடியாமல் திண்டாடப்போவதும் நாம்தான் — வங்கிகளுக்கு நம்மை நாயாக அலையவிட்டு — வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாகி போச்சு மோடி அரசுக்கு — முன்பு “காஸ் ” க்கு அடையாளங்களை கொடுக்க அலைந்தது — ஒரு அனுபவம் — அடுத்து நம்மிடம் உள்ள பணத்தை செலவு செய்ய முடியாமல் அல்லாட போவது அடுத்த அனுபவம் …. இன்னும்என்னென்ன அலைச்சல்கள் எதிர்நோக்க போகிறார்களோ ” நமது சிட்டிசன்கள் ” …. ?

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  ஏற்கணவே சாதாரண மக்கள் வங்கிகளுக்கு சென்றால் ஏக மரியாதை.இனி கேட்கவே வேண்டாம் ராஜ மரியாதை தான்.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.