500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…?

MARKETS-INDIA/RUPEE

MARKETS-INDIA/RUPEE

பெரிய பெரிய அரசு மருத்துவ மனைகளில்,
(நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவியாக )
எக்மோர், செண்டிரல் போன்ற பெரிய ரெயில் நிலையங்களில் –
(வந்திறங்கும் வெளியூர் பயணிகளுக்கு உதவியாக )

கட்டிடத்திற்கு உள்பக்கமாக ( வெளியார் கூடாதபடி )
உதவி கவுண்டர்களை (help centres ) அமைத்து,
அவசியம் தேவைப்படுவோருக்கு ரேஷன் முறையில்
ஒரே ஒரு 500 ரூபாய் பெற்றுக் கொண்டு பதிலுக்கு
ஐந்து நூறு ரூபாய் என்று கொடுக்க ஏற்பாடு செய்ய

முடியாதா…? இது ஒரு கடினமான காரியமா ?
சில தொண்டு நிறுவனங்களை துணைக்கு அழைத்துக்கொண்டு
மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ இதை ஏற்பாடு
செய்திருக்கலாமே…?

இந்த நோட்டுக்களை செல்லாததாக்கும் திட்டம் பற்றி
குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னரே மத்திய
அரசின் உயர்மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்….
அப்படி இருக்கையில், புதிய நோட்டுக்கள் அச்சானவுடன்,

அவற்றை வங்கிகளுக்கு அனுப்பி, அரசு பின்னால்
அறிவிக்கக்கூடிய நாளில் புதிய நோட்டுக்கள்
புழங்க விடப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.
இதில் ரகசியம் வெளியாகும் என்கிற பயமே தேவையில்லை.
இது ஏற்கெனவே அவ்வப்போது புதிய ரக நோட்டுகளை
வெளியிடும்போது கடைபிடிக்கப்படும் முறை தான்.

வங்கிகளை மூட வேண்டிய அவசியமே இன்றி,
இத்தனை நாட்களுக்குள் வங்கிகளில் பழைய
500 -1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதியதை
பெற்றுக் கொள்ள வேண்டுமென்று உத்திரவு போடலாம்.
இத்தனை நாட்களுக்குப் பிறகு பழைய நோட்டுகள் செல்லாது
என்று அறிவித்து விடலாம்.

ஏற்கெனவே பழக்கப்பட்ட முறை தானே இது.
இதில் சாதாரண பொது மக்களுக்கு இந்த அளவு பாதிப்பு
இருக்காதே…?
( ATM களில் மட்டும் ஸிஸ்டத்தை மாற்றி அமைக்க
ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை தேவைப்படலாம்..)

மிக புத்திசாலித்தனமாக யோசித்திருப்பதாக நினைத்து
படுமுட்டாள்தனமாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது
சில விஷயங்களில் –

மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகளில், ரெயில்வே
கவுண்டர்களில் பழைய 500-1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லும் என்று அறிவித்தது. ஆனால், பாக்கி சில்லறை
மீதி கொடுக்க – அந்த கவுண்டர்காரர்களுக்கு பணம்
எங்கிருந்து வரும் …?
இதில் மிக மிக கொடுமை – சுடுகாடுகளில்
இந்த நோட்டுகள் செல்லும் என்று அறிவித்தது.

இதில் மிகப்பெரிய plus point ஒன்றுண்டு –
பெரிய பெரிய அரசியல் கட்சிகளின் பணபலம் சுத்தமாக
தகர்க்கப்பட்டது…. அவற்றின் “வாங்கும் சக்தி” அழிக்கப்பட்டு,
வரும் காலங்களில் –

தேர்தல்களில் சில “உண்மை”யான
முடிவுகள் கிடைக்ககூடும்.

ஆனால், இதிலிருந்து இரண்டு கட்சிகளுக்கு விதிவிலக்கு
தரவேண்டி இருக்கும்…..
ஆளும் பாஜகவும்…. கம்யூனிஸ்ட் கட்சிகளும்….

கம்யூனிஸ்ட் கட்சிகளில்
பணம் இருந்தால் தானே- பறி கொடுக்க…!!!

பாஜகவைப் பொருத்த வரை –
ஒரு மிகப்பெரிய சந்தேகம்
எழுவதை தவிர்க்க முடியாது…

பிரதமரும், பாஜக தலைவரும் இந்த திட்டத்தை
கொண்டு வருவதன் மூலம் “சொந்த செலவில் சூன்யம்”
வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க
முடியுமா..?

எனவே, தங்கள் கட்சிக்கு “எந்தவித பங்கமும்” வராதபடி
முன்னேற்பாடு செய்து கொண்டிருப்பார்கள் என்றே
தோன்றுகிறது. அதான் 6 மாதம் டைம் இருந்ததே….!!!

முக்கியமாக நிதியமைச்சர் இன்று கூறி இருக்கும் ஒரு
வாசகம் பாஜகவின் அரசியல் எதிரிகளை பலவீனமாக்குவதும்
இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என்று
உறுதிபடுத்துவது போல் இருக்கிறது…

திரு.ஜெட்லி அவர்களின் இன்றைய வார்த்தை இது –
” POLITICAL FUNDS WILL BE NOW VISIBLE “….

நிதியமைச்சரின் இன்னும் சில வார்த்தைகள்
எரிச்சலை கிளப்புகின்றன –

” Opposition is justifying Black Money “…
( குறைகளைக் கூறினால் -இப்படி கமெண்ட்டா…? )

“Want economy to be Cashless”….

(இந்த நாட்டின் மக்கள் அனைவரும் இவரைப் போல்
கோடீஸ்வரர்கள் அல்லவே…. காய்கறி விற்பவரும்,
ஆட்டோ ஓட்டுநரும், டீக்கடைக்காரரும் தங்களது
தினசரி தேவைகளை வாங்கவோ, விற்கவோ –
“செக்”கோ, க்ரெடிட் கார்டோ பயன்படுத்த முடியுமா..? )

“FARMERS can keep money in BANKS”

(இந்தியாவில் வங்கி இல்லாத கிராமங்கள் இன்னும்
எத்தனை இருக்கின்றன என்பது நிதியமைச்சருக்கு
தெரியாதா…? )

நிறைய எழுதலாம்….
நான் ஒருவன் மட்டும் எழுதிக்கொண்டே போவதை விட
நீங்களும் சேர்ந்து விவாதிப்பது தான் சரியாக இருக்கும்.

பின்னூட்டங்களில் சந்திப்போம்.

—————————————-
பின் சேர்க்கை –

இன்னும் சில விஷயங்கள் எழுத நினைத்தேன்.
அதற்குள் ஒரு அவசர அழைப்பு வந்ததால் வெளியே
செல்ல நேர்ந்தது. பிறகு பின்னூட்டத்தில் சேர்க்கலாமென்று
நினைத்து சென்று விட்டேன்.. ஆனால், இவற்றையும் இடுகையில் சேர்த்தால் தான் முழுமையாக இருக்குமென்று
தோன்றுவதால், இங்கேயும் சேர்க்கிறேன்.

—————————————–

1) ஒரு முக்கியமான விஷயம் உதைக்கிறது.
ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரண்டாயிரம்
ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட என்ன காரணம்…?

எதிர்காலத்தில் மீண்டும் பதுக்க நினைப்பவர்களுக்கு,
பெரிய மதிப்பிலான நோட்டு இருப்பது வசதியாகி
விடாதா..?

2) கருப்புப்பணம் என்பதை விட வேறோரு விஷயம்
தான் புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்த முக்கிய காரணம்
என்று தோன்றுகிறது.

பாகிஸ்தான் பெரும் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை
கராச்சியில் அச்சடித்து, நேபாளம்-பீஹார் வழியாகவும்,
பங்களாதேஷ்-கொல்கத்தா வழியாகவும், இந்தியாவுக்குள்
கொண்டு வந்து புழக்கத்தில் விட்டிருக்கிறது. இந்தியாவின்
பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு இதன் அளவு
மிகுந்திருக்கிறது. எதிர்காலத்தில் மேற்கொண்டு
பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டுக்கள் வருவதை
தடுப்பதும் புதிய நோட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

3) தங்கத்தின் விலை பவுனுக்கு 1480 ரூபாய் ஏறி விட்டது
என்கிற செய்தி, கருப்புப் பணம் எவ்வளவு வேகமாக “தங்கமாக”
மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் மீது
அரசின் கட்டுப்பாடு செல்லவில்லை என்பதையும்
வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

4) ஏற்கெனவே நிகழ்ந்தவை ஒரு பக்கம் இருக்கட்டும்.
குறைந்த பட்சம் மேற்கொண்டு நடப்பவையாவது
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்பட
வேண்டும்.

– அடுத்த 10-15 நாட்களுக்கு நிச்சயமாக இந்த பதட்டம்
பொது மக்களிடையே நீடிக்கும்.

– வங்கிகளின் உழைப்பு பொது மக்களின் தேவையை
எதிர்கொள்ளும் அளவிற்கு இருக்குமா என்பது பதட்டத்திற்கான
ஒரு முக்கியமான காரணம்.

– இதில் – மத்திய அரசின் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி,
பொதுத்துறை / தனியார் துறை வங்கிகள் என்று மூன்று வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு
உழைத்தாக வேண்டும்.

– – வங்கிகளில் கூடுதலாக ஊழியர்களை தற்காலிகமாக
சேர்த்துக் கொண்டு ஸ்பெஷல் கவுண்டர்களை ( exclusive
special counters ) திறக்க வேண்டும்.

– – பொதுமக்கள் பணிக்கு லீவு போட்டு விட்டுத்தான்
பணம் எடுக்க முடியும் என்றில்லாமல், இந்த கவுண்டர்கள்
காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து
பணியாற்ற வேண்டும். குறைந்த பட்சம் ஒரு வாரமாவது
இப்படி செயல்பட்டால் தான் கூட்டம் / பதட்டம் குறையும்..

– ATM -களில் இப்போதெல்லாம் பெரும்பாலும் வாரத்திற்கு
ஒருமுறை தான் பணம் நிரப்புகிறார்கள். இவை தற்போதைய
விசேஷ தேவையை கருத்தில் கொண்டு, தீரத்தீர நிரப்ப
வேண்டும்.

– பாகிஸ்தான் வழியாக நுழைந்த கள்ள நோட்டுக்கள்
மக்களிடையே புழக்கத்தில் வந்திருக்கலாம். அப்பாவி
பொதுமக்கள் இதன் காரணமாக தொல்லைக்கு ஆளாகாமல்
அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, பொதுமக்களின் நம்பிக்கையோடும், ஆதரவோடும்
அறிமுகப்படுத்தப்படும் திட்டம் தான் வெற்றிகரமான
செயல்படும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொண்டு,
இயன்ற வரை மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில்
இந்த பிரச்சினையை கையாள வேண்டும்.

நல்லதே நடக்க வேண்டுவோம்.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…? க்கு 27 பதில்கள்

  1. Karthik சொல்கிறார்:

    Ayya
    Mutrilum unmai..those who need at hospital, cremation, transport, debt settlement, vegetable farmer to vegetable wholesaler….all are suffering. They should have done alternative arrangement for the needy. It is really showing that they have not done proper analysis and mundrikottai thanam….

    plus opportunist who is using this for business activities. very sad.

    education system ruined us. Student must be taught traits, mercy, discipline, respect then knowledge. Otherwise, we will be lost in longrun.

    • தமிழன் சொல்கிறார்:

      “Education System ruined us” – இது தவறு. இந்தியர்கள் சுய’நலமாகவும், தேசபக்தி இல்லாதவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இதன் காரணம் என்ன? நம்முடைய சட்டங்களும், அரசியல்வாதிகளும்தான். திருடுபவனையும், கொள்ளையடிப்பவனையும் நியாயவாதி என்று புகழும் சட்டம், நியாயமான எளிய மக்களையும் கெடுக்கிறது. எந்த அரசியல்வாதிகளை (அல்லது நீதிபதிகளை) எடுத்துக்கொள்ளுங்கள். நேர்மை கிஞ்சித்தும் இருக்கிறதா? (99%). வெட்கம் இல்லாமல், சந்திரபாபு நாயுடு, 18 மாதமான குழந்தையின் சம்பாத்தியம் 10 கோடி என்று சொல்லமுடிகிறது. சரத்பவார், எவ்வளவு சம்பாதித்தார் என்று யாருக்குமே தெரியாது. அவருடைய சொந்தக் கப்பல், புயலில் தரை தட்டி நின்றதற்கு, அரசுப்பணத்தில் வெளியே எடுத்து அவருடைய ஊருக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒவ்வொருவரும் கொள்ளையர்களாக இருக்கும்போது, எளிய மக்கள் எவ்வாறு நேர்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியும்? ஊருக்கு நியாயம் பேசும் ப.சி, அவர் ஆயுள் முழுவதும் சம்பாதிக்க முடியாததை, அவருடைய 30 -45 வயது பையன் சம்பாதித்துவிட்டான் என்று கூசாமல் புளுகுகிறார். கேட்டால் ‘சட்டப்படி’ என்று சொல்கிறார். அவரும் அவர் பையனும் மிகுந்த படிப்பு படித்தவர்கள்.

      முதலில் இந்தியாவில், சொத்துரிமை என்பதே விலக்கிக்கொள்ளப்படவேண்டும். உன் சந்ததிக்கு நீ சம்பாதித்தது போக முடியாது. பெற்றோர் இறந்தபின், அவர்களின் சொத்து 50% வரி போடப்பட்டு மீதிதான் வாரிசுக்குச் சேரும். அதுவும் வாரிசு இறந்தபின், அரசாங்கத்தைச் சேரும். இந்த மாதிரி நிலைமைதான் பிரித்தானியா, அமெரிக்காவில் உள்ளது. இங்கு இல்லாததால்தான் பலர் (அதிலும் அரசியல்வாதிகள், கம்பெனிகள்) 20வது வாரிசுக்கும் சொத்து சேர்க்கும் அவலம் நடக்கிறது.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        தமிழன்,

        // உன் சந்ததிக்கு நீ சம்பாதித்தது போக முடியாது.
        பெற்றோர் இறந்தபின், அவர்களின் சொத்து 50% வரி
        போடப்பட்டு மீதிதான் வாரிசுக்குச் சேரும்.
        அதுவும் வாரிசு இறந்தபின், அரசாங்கத்தைச் சேரும்.
        இந்த மாதிரி நிலைமைதான் பிரித்தானியா,
        அமெரிக்காவில் உள்ளது. //

        இப்படி ஒரு சட்டம் இருப்பது
        எனக்கு தெரியாது. கேட்கவே உற்சாகமாக
        இருக்கிறது. மேற்கொண்டு விவரங்கள்,
        லிங்க் எதாவது கிடைத்தால் தயவுசெய்து,
        என் மெயிலுக்கு
        அனுப்பி வையுங்களேன்.

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  2. தமிழன் சொல்கிறார்:

    இது அண்டை நாடுகள் புழக்கத்தில் விடும் பணத்திற்கும், பதுக்கி சாக்கில் வைத்திருக்கும் பணத்திற்கும் எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே தோன்றுகிறது. 8 வருடங்களுக்கு முன்பாகவே, நேபாளில், (செலவழிப்பதற்காக) 100 ரூ மட்டும்தான் எடுத்துச்செல்லவேண்டும் என்றும் 500, 1000 செல்லாது எனவும் சொன்னார்கள்.

    இன்னும் ஒரு வாரத்திற்கு கஷ்டம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதாகிலும் interim measure எடுக்கப்படும். வங்கி ஊழியர்களுக்கும் கொஞ்சம் அதிக வேலைப்பளு இருக்கும்.

    எனக்கென்னவோ,அனைத்து அறக்கட்டளைகளையும் அரசுடைமையாக்குவதும்,, அரசியல்வாதிகள், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கழகங்களில் முற்றிலுமாகப் பங்கேற்கமுடியாது என்ற கட்டுப்பாடு வருவதும், வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் (அல்லது நெருங்கிய உறவினர்கள், மனைவி, குழந்தைகள்) அரசியலுக்கு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டவர்கள் என்று நெருக்கடிகாலச் சட்டம் போட்டால், இதைவிட அதிகமாகப் பலன் இருக்கும். சாதாரண மக்களுக்குத் துன்பம் வந்து சேராது.

  3. தமிழன் சொல்கிறார்:

    உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஹவாலா பேர்வழிகள் எப்படி பணத்தைப் பதுக்கிவைத்துள்ளார்கள் என்று. இப்போ, பணத்தை நல்லதாக்கித் தருகிறேன் என்று ஒரு கும்பல் முளைத்து ஆதாயம் தேடாமல் இருக்கவேண்டும். நம்ம ஊர்லதான் அதெல்லாம் சாதாரணமல்லவா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தமிழன்,

      ஏற்கெனவே சில இடங்களில் ஆட்டம்
      துவங்கி விட்டதாக தெரிகிறது.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. சாமி சொல்கிறார்:

    //வங்கிகளை மூட வேண்டிய அவசியமே இன்றி,
    இத்தனை நாட்களுக்குள் வங்கிகளில் பழைய
    500 -1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதியதை
    பெற்றுக் கொள்ள வேண்டுமென்று உத்திரவு போடலாம்//

    அவ்வளவுதான். வங்கி அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு அத்தனை 500, 1000த்தையும் “வெள்ளை”யாக்கி விடுவார்கள் நம் “களகத்தவர்கள்” அதாவது இரவோடு இரவாக நூறெல்லாம் வெளியே போய் 500, 1000 ஆகி விடும். எல்லாவற்றிற்கும் இரவோடு இரவாக “டினாமினேஷன்” ஸ்லிப்பில் மாற்றி எழுதி விட்டால் போகிறது. யார் சரி பார்க்கப் போகிறார்கள் அதனை?

    இப்பொழுதே அப்படிச் செய்ய வாய்ப்புண்டு என்பதால் தான் வங்கிகளுக்கு விடுமுறை. இனி கிராமப்புறங்களில் ஒவ்வொரு ஆளாகப் பிடித்து 4000 ரூபாயை நூறு நூறாக மாற்றிக் கொடுத்தால் (அல்லது புதிய பணமாகக் கொடுத்தால்) இவ்வளவு கமிஷன் என்று தமது கட்சி ஆட்கள் மூலம் வேலையைத் துவங்கி விடுவார்கள் பாருங்கள்.

    ஆனால் இதெல்லாம் லட்சம் லட்சமாகப் பதுக்கினவர்களுக்குச் சாத்தியம்.

    லட்சத்து எழுபத்தாறாயிரமாக பெட்டிகளில் கோடி கோடியாகப் பதுக்கி வைத்திருப்பவர்கள் என்ன செய்வார்கள்? திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி தான்!

    சே, இந்தத் திட்டத்தை மோடி சமீபத்திய தமிழக தேர்தலுக்கு முன்பாக அறிமுகப்படுத்தியிருக்கலாம்! சிலருக்கு நெஞ்சுவலியே வந்திருக்கும். இப்போதும் சிலர் ‘குய்யோ முறையோ’ என்று கதறிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. குறிப்பாக பினாமி பெயர்களில் கல்லூரி வைத்திருப்பவர்கள் மூட்டை மூட்டையாகப் பதுக்கிய பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனராம்!

    ஹே ராம்!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப சாமி,

      எல்லா அரசியல் கட்சிகளின் பணமும்
      இந்த சட்டத்தின் மூலம் தொலைந்தால்
      அது தான் நம் நாட்டு அரசியலில்
      ஒரு விடிவின் தொடக்கமாக இருக்கும்.

      ஆனால் – நான் இடுகையில் சொன்னது போல்
      ஒரு சந்தேகம் இருக்கவே செய்கிறது…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பின் சேர்க்கை –

    இன்னும் சில விஷயங்கள் எழுத நினைத்தேன்.
    அதற்குள் ஒரு அவசர அழைப்பு வந்ததால் வெளியே
    செல்ல நேர்ந்தது. பிறகு பின்னூட்டத்தில் சேர்க்கலாமென்று
    நினைத்து சென்று விட்டேன்.. ஆனால், இவற்றையும் இடுகையில் சேர்த்தால் தான் முழுமையாக இருக்குமென்று
    தோன்றுவதால், இங்கேயும் சேர்க்கிறேன்.

    ——————————————————————

    1) ஒரு முக்கியமான விஷயம் உதைக்கிறது.
    ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரண்டாயிரம்
    ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட என்ன காரணம்…?

    எதிர்காலத்தில் மீண்டும் பதுக்க நினைப்பவர்களுக்கு,
    பெரிய மதிப்பிலான நோட்டு இருப்பது வசதியாகி
    விடாதா..?

    2) கருப்புப்பணம் என்பதை விட வேறோரு விஷயம்
    தான் புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்த முக்கிய காரணம்
    என்று தோன்றுகிறது.

    பாகிஸ்தான் பெரும் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை
    கராச்சியில் அச்சடித்து, நேபாளம்-பீஹார் வழியாகவும்,
    பங்களாதேஷ்-கொல்கத்தா வழியாகவும், இந்தியாவுக்குள்
    கொண்டு வந்து புழக்கத்தில் விட்டிருக்கிறது. இந்தியாவின்
    பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு இதன் அளவு
    மிகுந்திருக்கிறது. எதிர்காலத்தில் மேற்கொண்டு
    பாகிஸ்தானிலிருந்து கள்ள நோட்டுக்கள் வருவதை
    தடுப்பதும் புதிய நோட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

    3) தங்கத்தின் விலை பவுனுக்கு 1480 ரூபாய் ஏறி விட்டது
    என்கிற செய்தி, கருப்புப் பணம் எவ்வளவு வேகமாக “தங்கமாக”
    மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் மீது
    அரசின் கட்டுப்பாடு செல்லவில்லை என்பதையும்
    வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

    4) ஏற்கெனவே நிகழ்ந்தவை ஒரு பக்கம் இருக்கட்டும்.
    குறைந்த பட்சம் மேற்கொண்டு நடப்பவையாவது
    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்பட
    வேண்டும்.

    – அடுத்த 10-15 நாட்களுக்கு நிச்சயமாக இந்த பதட்டம்
    பொது மக்களிடையே நீடிக்கும்.

    – வங்கிகளின் உழைப்பு பொது மக்களின் தேவையை
    எதிர்கொள்ளும் அளவிற்கு இருக்குமா என்பது பதட்டத்திற்கான
    ஒரு முக்கியமான காரணம்.

    – இதில் – மத்திய அரசின் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி,
    பொதுத்துறை / தனியார் துறை வங்கிகள் என்று மூன்று வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு
    உழைத்தாக வேண்டும்.

    – – வங்கிகளில் கூடுதலாக ஊழியர்களை தற்காலிகமாக
    சேர்த்துக் கொண்டு ஸ்பெஷல் கவுண்டர்களை ( exclusive
    special counters ) திறக்க வேண்டும்.

    – – பொதுமக்கள் பணிக்கு லீவு போட்டு விட்டுத்தான்
    பணம் எடுக்க முடியும் என்றில்லாமல், இந்த கவுண்டர்கள்
    காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து
    பணியாற்ற வேண்டும். குறைந்த பட்சம் ஒரு வாரமாவது
    இப்படி செயல்பட்டால் தான் கூட்டம் / பதட்டம் குறையும்..

    – ATM -களில் இப்போதெல்லாம் பெரும்பாலும் வாரத்திற்கு
    ஒருமுறை தான் பணம் நிரப்புகிறார்கள். இவை தற்போதைய
    விசேஷ தேவையை கருத்தில் கொண்டு, தீரத்தீர நிரப்ப
    வேண்டும்.

    – பாகிஸ்தான் வழியாக நுழைந்த கள்ள நோட்டுக்கள்
    மக்களிடையே புழக்கத்தில் வந்திருக்கலாம். அப்பாவி
    பொதுமக்கள் இதன் காரணமாக தொல்லைக்கு ஆளாகாமல்
    அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக, பொதுமக்களின் நம்பிக்கையோடும், ஆதரவோடும்
    அறிமுகப்படுத்தப்படும் திட்டம் தான் வெற்றிகரமான
    செயல்படும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொண்டு,
    இயன்ற வரை மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில்
    இந்த பிரச்சினையை கையாள வேண்டும்.

    நல்லதே நடக்க வேண்டுவோம்.

  6. LVISS சொல்கிறார்:

    In one of the channels today evening (,I dont remember the channel because I watch many one by one ), a small time vendor (of vegetables I think) in north India was asked whether he is accepting 500 notes –He said yes I am accepting it -I will deposit it in my account tomorrow — This man shows the way to deal with the situation without panicking –There is time till Dec 30 to deposit in the Bank — So theoretically he can accept these notes till that time — Compare it with the noise made by some political parties —
    I am not sure but I guess that the printing on 2000 notes will be kept at this level and slowly withdrawn from circulation —
    Today there was an announcement that Banks will function on Saturday and Sunday —

  7. LVISS சொல்கிறார்:

    I do not know how many people remember this –When Raghuram Rajan was the RBI Governor people were asked to deposit 500 rupee notes printed upto a certain year (2012? The year of printing is on the backside of the notes) in the banks) –The people were given time to do this –This was extended twice and probably the people were not responding –This step taken by the govt will force the people to deposit the notes —
    The PM said in a broadcast not to blame the govt if it gets tough after 30 sep when the time for voluntary disclosure ended —

  8. today.and.me சொல்கிறார்:

    ரொம்ப சீரியஸா விவாதிக்கிறமாதிரித் தெரியுது,

    ச்சும்மா ஒரு மாறுதலுக்கு

    //https://www.youtube.com/watch?v=a7PmkYx8XWA//

  9. R.Gopalakrishnan சொல்கிறார்:

    There is a message doing rounds in whats app. That is Mukesh Ambani-Rio-free upto
    30th Dec 16.Already knew-Deadline for exchange of 500 & 1000 upto 30th Dec 16. Does it not
    ring a bell.

  10. LVISS சொல்கிறார்:

    IBA has come out with an announcement that all bank branches have made adequate arrangements for exchange of notes –Tomorrow we can confirm this —
    Banks will be open on Saturday and Sunday –No toll fee till Nov 11 th to remove bottleneck in traffic – –OIl companies have urged petrol bunks to accept the demonetissed notes till Nov 11th —
    From the look of it the situation may stablise much earlier than we feared —

  11. Ra சொல்கிறார்:

    கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து விட்டு இதை செஞ்சிருக்கலாமே?
    டிச., 31 க்கு பிறகு 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கலாம்.

    அப்படி அறிவித்தால் அது அபத்தத்தின் சிகரமாக இருக்கும்.

    பஸ்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் முன்னறிவிப்பின்றி திடீரென ஏறினால் தான் செக்கிங்கினால் பலன் இருக்கும்.

    ‘பஸ் புறப்படும் போதே இன்று திருப்பரங்குன்றம் அருகே செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறப் போகிறார்’ என்று அறிவித்தால் பிறவித் திருடன் கூட, ஒன்றுக்கு இரண்டாய் பயணச்சீட்டு வாங்கிவைத்து கொண்டு அதை பெருமையுடன் காண்பிப்பான்.

  12. Ra சொல்கிறார்:

    சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் கழித்து இன்று தான் இந்திய பொருளாதாரம் வயதுக்கு வந்திருக்கிறது. ….

    இன்று நடப்பது பூப்புனித நீராட்டு விழா…

    ஆங்காங்கே சில வலிகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்யும்….
    அதை பெரிது படுத்தாதீர்கள். நாடு அடையப் போகும் நல்லதை எண்ணிப் பாருங்கள்.

    நல்லவர் சொத்துக்கு நாசம் இல்லை. நடப்பது எல்லாம் நன்மைக்கே.

  13. selvarajan சொல்கிறார்:

    // நான் சொல்லலை.. இந்தியர்கள் முட்டாள்கள்.. கட்ஜு அதிரடி! 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் சொன்னதை மக்கள் நிரூபித்து விட்டனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.//
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/katju-slams-indians-welcoming-currency-abolition-266790.html …..

    • தமிழன் சொல்கிறார்:

      மார்க்கண்டேய கட்ஜு, பழைய சி.பி.ஐ இயக்குனர், முந்தைய சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்(?) – இவர்கள்லாம் எப்படி அப்படிப்பட்ட பொறுப்பான பதவிக்கு வந்தார்கள் என்று ஆச்சரியப்படும் அளவு அவர்கள் நடந்துகொள்கின்றனர் (நடந்துகொண்டனர்). தவளை வாயர்கள் (loose talkers) நம்முடைய ‘நீதிமன்றத்தின் தலைமை பீடத்தில் இருந்தார்கள் என்பதையே ஜீரணிக்க இயலவில்லை.

  14. Ra சொல்கிறார்:

    சர்வ சாதாரணமாகவோ ஆட்சியை பிடித்த ஆர்வத்திலோ எடுத்த முடிவல்ல இது.

    இன்று வேண்டுமானால் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் தடாலென அறிவித்துவிட்டார்.

    ஆனால் இதன் பின்புலத்தை ஆராயும் போது எவ்வளவு பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது கண்கூடாக தெரிகிறது.

    1.ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கருப்பணத்தை கண்டறிய குழு அமைத்தது.

    2.பிரதமர் சென்ற நாடுகளில் எல்லாம் கருப்புபண பதுக்கலை பற்றி விவாதித்தது.

    3.சுவிஸ் உட்பட அனைத்து நாடுகளில் இருந்து கருப்பு பணத்தை வெளியேற்றி வேறுவழி இல்லாமல் இந்தியாவுக்குள் கொண்டுவர வைத்தது.

    4.இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்ககூடாது என்று ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் வங்கி கணக்கை உருவாக்கியது.

    5.இந்தியாவுக்குள் வந்த கருப்பு பணத்தை பினாமிகள் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முடக்க முடியாத அளவுக்கு அத்துறையில் சட்டங்களை கடுமையாக்கியது.

    6.பணமுதலைகள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அதற்கு அபராதம் மட்டும் விதித்தது.

    7.அதற்கு காரணம் இவர்களும் முந்தய காங்கிரஸ் ஆட்சி போலவே விட்டுவிடுவார்கள் என்று அப்போதும் அலட்சியமாகவே இருந்து விட்டனர் கருப்பு முதலைகள்.

    8.மிகச்சரியான தருணம் அமெரிக்க தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் தருணத்தில் ஒரு பொருளாதார தேக்க நிலை உருவாகும் அப்போது நாம் சுதாகரித்து விடலாம் ஆகையால் இப்போது அறிவித்துள்ளார் நமது பிரதமர்.

    ஏழை மக்களுக்காக எவ்வளவு உழைப்பு. இது போன்ற தலைவர் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது.

    நன்றி

  15. Ra சொல்கிறார்:

    Govt have the account of how much old 500 and 1000 currency notes issued…

    By 31st Dec , govt will know , how much old money in bank…after all money deposited from public

    Where is the balance?

    That is block money….

    Now, govt will print new currency notes ….equalent to the money which is being missed…

    That will be purely govt money…..

    hope, next budget to have surplus money…

    Senthil

    • LVISS சொல்கிறார்:

      Mr Ra you are absolutely right –This is how it is going to be — At the end of every day banks will furnish the details of old notes deposited —
      One thing I am not certain is whether the RBI will print money equivalent to black money or keep the money in circulation at the same level –I also think that after some time the banks will be asked to retain the new 2000 notes deposited by the customers and not to reissue to the public– This may be replaced by notes of smaller denomination because the people will prefer notes of lower denominations – –
      -Your previous comment is also correct and it was corroborated by many people —

  16. ஜிஎஸ்ஆர் சொல்கிறார்:

    http://gsr-gentle.blogspot.ae/2010/12/indian-future-currency.html

    ஜிஎஸ்ஆர் எழுதிய எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்?

    இதை முழுவதுமாக படித்தால் நிச்சியம் என்னை பற்றி என்னை நினைப்பீர்கள் ஆம் தற்போது இந்திய பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என் கனவுகளின் ஒரு தொடக்கம் தான், ஆம் இப்பொழுது நடந்திருக்கும் இந்த பணம் செல்லாது என்கிற அறிவிப்பை குறித்து அதனை ஒத்ததாக கடந்த DEC 24, 2010 அன்று நான் எழுதிய பதிவை படித்து பாருங்கள்.

    எதுவாக இருந்தாலும் அவசியம் ஒரு பதில் அனுப்புங்கள் ப்ளீஸ்..

    வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.

    நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.

    இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.

    முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.

    இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.
    ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.

    மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!

    சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

    இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.

    அன்புடன்
    ஜிஎஸ்ஆர்
    http://gsr-gentle.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s