பாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்…..

..

..

நாம் சொன்னபோது பாஜக அன்பர்கள் கொதித்து எழுந்தனர்.
எது சரி, எது வரையில் சரி என்பதை கீழ்க்காணும்
செய்தித் தலைப்புகளும், புகைப்படங்களும் நிரூபிக்கின்றன….

atm

” ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தின்
லாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாமையால்,
சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலான
ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆயிரக்கணக்கான பெட்டிக்
கடைகளிலும், சிறுவணிக நிறுவனங்களிலும் எவ்விதப்
பரிவர்த்தனையும் இல்லை.”

atm-crowd

bjp-deposit

f-post-headlines

f-p-h-lines

public-and-pmji

“மக்களைப் பிச்சைக்காரனாக்கிய மோடி!”
-பணத்துக்காக பரிதவிப்போரின் ஆதங்கம்!

h-post

” உழைத்து சம்பாதித்த பணத்தைத் தவிர வேறெந்த
வருமானமும் இல்லாத இந்த அப்பாவி மக்கள் கடந்த 4
நாட்களாக, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து
வருகிறார்கள். ”

atm-size

atm-size-2

விமரிசனத்தைக் கண்டு ஆத்திரப்பட்டவர்கள், இப்போது
யதார்த்த நிலையைக் கண்ட பிறகாவது வறட்டுத்தனமாக
பேசுவதை நிறுத்தி விட்டு, மக்களின் சங்கடங்களை
போக்க வேகமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

————————————————–

..

பின் குறிப்பு –

இரண்டு நாட்களாக பயணத்தில் இருந்தேன்…
சங்கரர் பிறந்த மண்ணைத்தேடி சென்றிருந்தேன்…
கூடவே இன்னமும் சில….
பயணத்தின் இடையில் எழுதலாம் என்று
நினைத்திருந்தேன். ஆனால் எழுதக் கூடவில்லை…

இப்போது மோடிஜியின் அருளாசியால்,
கைச்செலவுக்கு ( புதிய ) பணம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறேன்.
பயணம் பற்றி தனியே, விவரமாக எழுதுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to பாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்…..

 1. Srini சொல்கிறார்:

  Great work done in consolidating all the photographs together. Its a commendable job.

  Even NDTV has done a similar campaign requesting for videos and photos and their website is also doing a wonderful service to the country by highlighting the shortcomings. Three great men of this century, mani Shankar iyer, Derek o brain and one more are writing opinion columns and showing the world the scam behind this policy.

  Rahul Gandhi also visited the ATM and got only 4000 cash. This shows his humility and down to earth life. His mother also would have come and stood in the queue, but unfortunately, she is not well.

  Mamta who wears only rubber slippers was the first one to raise voice against this inhuman, anti people, corrupt black money policy.

  Mulayam, mayawthi are the few bold politicians who raised concerns immediately.

  Another people crusader Mr. Kejriwal is working 24/7 collecting evidences to roll back this policy. Kejri being worked on IT dept earlier, knows in and out of this and his only motive to make india great. His guru anna hazare, who has lost his memory, appreciated this initiative, which is sadly contradicting.

  India is still surviving only becoz of few people like this who think only about people 24/7. they dont have any other thought in their mind.

  And our PM is not bothered at all, he made the announcement and ran away immediately to Japan without even taking rest to take selfies in the train. last time, he missed seeing some sites in japan, so without taking even a nap, he left immediately.

  • B.V.Subramanian சொல்கிறார்:

   அரைவேக்காட்டுத்தனம் –
   பொருளாதார நிபுணர்கள் கருத்து.

   அம்பானியையும் அடானியையும்
   விட்டு விட்டு, அப்பாவி பொது மக்களை
   அடிக்கிறார்:
   பெரும்பாலான பொதுமக்களின் கருத்து.

   இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 2. LVISS சொல்கிறார்:

  I would like to share my views on this confusion — The ATMs went out of cash very soon –Why? I think the people are allowed to withdraw from any bank ATM now –This idea that customers can use ATMs of every other bank is not a good idea .at least in a situation like this — The ATM when replenished can at the most ,( in my estimate ), allow say a 1000 to1500 withdrawals — Each branch of a bank will have more than 1000 customers itself of its own -Where will they go if they cannot use their own ATMs — Moreover a person used to one type of ATM may not be able to use another bank ATM with the same quickness –(For this reason I use only my bank ATM) At least for this the banks should have been asked to attend to their customers only — Now what is happening is instead of gong to the bank where one has his account a person walks into the nearby available bank and spends the whole day –Or use their ATM and deprive one of their customers to withdraw from his ATM —
  If you deposit the money into your account in the branch where you have your account there wont be need for ID proof — you can also withdraw after that — I advised one person to go the bank where he has his account== It took him the regular time to exchange his old notes –My brother in law spent just 40 minutes to exchange his old notes in the Bank where he has his account — He told me he was not asked any ID proof– He also told me that he deposited the old notes by just filling up a pay in slip as is done usually and withdrew Rs 4000 by cheque —
  Another thing is that the banks should have been asked to do is open seperate counters for senior citizens–
  The ATMs which have been configured to handle different notes have to be reconfigured to give only 2000 as of now — Today more ATMs were open on the main roads –Again the ATMs have to be reconfigured to give 4000 after some time –From the look of it normalcy would return by next midweek — As for me I am waiting for the crowd to subside —

 3. LVISS சொல்கிறார்:

  I went thro the news item regarding the deposit in some of the websites — It looks like an allegation by one party —
  Even in the Tamil headlines reproduced in the article it is asking “panam deposit seydhadha?”–

 4. Amuthan சொல்கிறார்:

  அய்யா செய்யாத தவறு என்று கூறாதீர்கள்!
  நன்கு சிந்தித்து பாருங்கள், செய்த தவறுக்குத்தான் இந்த தண்டனை!!!!

 5. Ra சொல்கிறார்:

  ஒரு 15 நாள் கழிச்சு , அப்புறம் பாருங்கள்…

  நாம்ம மக்கள் எல்லாம் மறந்துருவங்க…

  மோடி புண்ணியத்துல, பண்ணியிருக்க வேண்டிய செலவு 10 ஆயிரம் பண்ண முடியலை….

  அது இப்போ சேமிப்பு ஆயிருச்சின்னு சொல்வாங்க…

 6. NS RAMAN சொல்கிறார்:

  I am traveling for last three days in three different states and discussing from auto driver to smsll owners every one suffering complaining but not against basic intentions of this move.

  Some. More advanced steps could have been made

  but common man clear about this move . So called educated mass and media as usual shouting and creating panic

  • B.V.Subramanian சொல்கிறார்:

   Mr.Raman,

   Though the 3 States mentioned by you
   may not include Delhi, You could have atleast
   used TV news to see the pathetic scenes
   at Delhi Chandni chowk and understand the
   seriousness of the issue.

   • NS RAMAN சொல்கிறார்:

    Pl come out of home talk to people

    India is big enough other than chandini chowk
    TV channels for sensation and more panic

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Mr.NSRAMAN,

     உங்களுக்கு நான் பதில் சொல்கிறேன்.
     நான் ஏற்கெனவே தெருக்களில் தான் இருக்கிறேன்.

     நீங்கள் தான் “மோடிஜி/பாஜக” மாயையில் மூழ்கி
     இருக்கிறீர்கள்.

     இன்று காலையிலும், மாலையிலும் சென்னையில்
     ரிசர்வ் வங்கி முன்னர் வந்திருந்தீர்களானால் –
     அங்கு மக்களின் கண்ணீர்க்கதைகளை
     கேட்டிருந்தால் / பார்த்திருந்தால் –
     உங்களுக்கு கொஞ்சமாவது விழிப்பு வந்திருக்கும்.

     பலர்- கண்ணிருந்தும் குருடர்களாக,
     காதிருந்தும் செவிடர்களாக இருக்கிறார்கள்.
     இன்று ஏழைகள் வடிக்கும் கண்ணீருக்கு
     காரணமானவர்களுக்கு
     காலம் நிச்சயம் தண்டனை கொடுக்கும்.

 7. Ra சொல்கிறார்:

  ஒண்ணே ஒன்னு சொல்லிக்குறேன்…

  மோடி,23ந்தேதிக்கு மேல அறிவிச்சிருக்கலாம்.

  மாசகடைசியல , எப்படியும் , யாரு கிட்டயும் , காசு இருந்திருக்காது…

  பேங்குலயும்..கூட்டமே இருந்திருக்காது…

 8. appannaswamy சொல்கிறார்:

  பேரன்புமிக்க அய்யா,

  காலடி மண்ணை மிதித்து அனுபவித்துத் திரும்பும் வழியில் கோவையில் நேரமிருந்தால் சாந்தி சோசியல் சர்வீஸ் க்கு விஜயம் செய்து தங்களது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் இவ்வலைத்தளத்தில்.

  அன்புடன்-
  அப்பண்ணஸ்வாமி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அப்பண்ணஸ்வாமி,

   தங்கள் யோசனைக்கு நன்றி.
   ஆனால், நான் சென்னை திரும்பி விட்டேன்.
   அடுத்த முறை கோவை வரும்போது அவசியம்
   சென்று வருகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. LVISS சொல்கிறார்:

  Times of India has published an article according to which only 440 customers can be served in a day by the ATM- How it is worked out —
  There are 4 trays Each tray can hold 22 packets of 100 rupee notes Each packet will have 100notes Each tray will have notes to the value of 2.2 lacs –So for 4 trays it will be 880000 –At Rs 2000 per person it can serve only 440 customers — No wonder the ATMs run out of cash soon –

  • B.V.Subramanian சொல்கிறார்:

   So even after 6 months of thorough study,
   they failed to know this and announced
   that all can collect money thro ATM.

   • LVISS சொல்கிறார்:

    Not that the govt doesnt know about the ATM —ATMs which were dispensing cash to about 200 to 300 persons are now flooded with thousands of customers —
    Leave alone ATMs, even banks,,except currency chest branches , hold only a certain amount of currency —

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   Mr.ELVIS,

   Did you notice Mr.Selvarajan has written the following
   meant for people like you only :

   ஒரு ” ரெடிமேடு ” கூட்டம்

   // முச்சந்தியில் நிற்பவர்கள் — வேலை இருந்தும் — கூலி கிடைக்க வழியில்லை என்று வயிற்றில் ஈர துணியை போட்டுக்கொண்டு முடங்கி இருப்பவர்கள் — போன்ற இன்னும்பலரை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்க தவறியவர்களை கண்டிப்பாக பாராட்ட ஒரு ” ரெடிமேடு ” கூட்டம் //

 10. LVISS சொல்கிறார்:

  There is no limit on the old notes that can be deposited in an account — Deposits of Rs 10 lakhs are already getting reported to RBI —

 11. selvarajan சொல்கிறார்:

  நோட்டை கையில் வைத்துக்கொண்டு — மாற்ற முடியாமல் — பரதேசியாய் அங்கும் இங்கும் — அலைந்துகொண்டு திரிபவர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க திராணியற்று — அறுகதையற்று — சப்பைக்கட்டு கட்டும் — கோமாளிகளை நினைத்தால் எரிச்சல் தான் ஏற்படுகிறது ….

  பட்டினிகிடப்போர் — மருந்துவாங்கினாலும் மீதி சில்லறை பெற முடியாதோர் — நிர்ணயித்த திருமணத்தை எப்படி நடத்துவது என்று முழி பிதுங்கி நிற்பவர்கள் — முகூர்த்த்ததையும் தள்ளிப்போட முடியாமல் முச்சந்தியில் நிற்பவர்கள் — வேலை இருந்தும் — கூலி கிடைக்க வழியில்லை என்று வயிற்றில் ஈர துணியை போட்டுக்கொண்டு முடங்கி இருப்பவர்கள் — போன்ற இன்னும்பலரை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்க தவறியவர்களை கண்டிப்பாக பாராட்ட ஒரு ” ரெடிமேடு ” கூட்டம் இருக்கத்தான் செய்யும் — அதுதான் — பாழாய் போன — ஜனநாயகம் —

  இந்த நோட்டுப்பற்றிய செயல் ஒரு முன்னோட்டம் தான் — மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்று அளவெடுக்க முயன்றிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது — இதைவிட பெரிய ” அதிர்ச்சியாக ” வேறொன்றை நடைமுறை படுத்த போகிறார்களோ என்கிற — பக்கவாட்டில் ஒரு கவலையும் ஏற்படத்தான் செய்கிறது — இந்த அரசாங்கத்தின் செயலை முன்கூட்டியே அறிந்து தெரிந்து வைத்திருக்கும் — ” அறிவு ஜீவிகள் ” மக்களிடம் தெரிவித்தால் கொஞ்சம் முன்னேற்பாடோடு இருக்க வழி வகை கிடைக்கும் — ஏனென்றால் தற்போதைய ” செல்லாத நோட்டு ” விவகாரத்தையே தெரிந்து வைத்திருந்த புத்திசாலிகள் அல்லவா — அவர்கள் …. ?

  இங்கே மக்களிடம் புலம்பலை கிளப்பிவிட்டு — ஜப்பானில் புல்லெட் ரயில் பார்க்க கிளம்பிவிட்டார் …. எந்த வெளி நாட்டிலிருந்தும் நம் நாட்டு முதலைகளின் கருப்புப் பணத்தை கொண்டு வர இயலாதவர் — எல்லா வெளிநாட்டிற்கும் ” சுற்றுலா ” சென்றுகொண்டே இருக்கிறார் … செல்லும் நாடுகளில் அவர் கூறும் ஒரே டயலாக் ” “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”…… இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையோ என்று கொஞ்சமாவது அறிவுள்ளவர்களை யோசிக்க வைக்கிறதோ … ?

 12. Guru சொல்கிறார்:

  வணக்கம்

  உங்கள பதிவை அணைத்தும் படிப்பது உண்டு ஆனால் மறுமொழியிடுவது இல்லை.
  500 மற்றும் 1000 பயண்படு தடை சரி தவறு பற்றி பேசவில்லை.
  ஆனால் நான் கூறவருவது மக்களின் மன நிலை மற்றும் அவர்கள் மற்றவர்களின் மிது வைத்துள்ள நம்பிகை ….. மக்கள் சிறிது சிரமமே மறுப்பதற்கில்லை. சில கருத்துகள் 100 50 சில்லறை தட்டுப்பாடு தொட்ர்பாக … சில நடந்த காட்சிகள்.
  1. எனது நண்பர் ஒருவர் கூறியது அவரிடம் 20000 ருபாய்க்கு 100 50 20 சில்லறையாக இருக்கிறது என்றார் நான் எப்படி என்றேன் அவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சேமிப்பு வங்கி கணக்கு 4 numbers in sbi யில் உள்ளது. அவரிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் வங்கியில் deposit செய்யாமல் 4 அதார் கார்டு முலம் இவ்வளவு பணம் பெற்றுள்ளர் (not deposit in his sb a/c but got changes rs100, 50 and 20 through one person or a/c limit 4000/- x 4 his family aadhar card via) அவருக்கு தற்போது அவ்வளவு பணம் உபயோகப்படுத்தமட்டர் (ஒரு சிக்கன போர்வழி) நான் பிறகு எதற்கு இவ்வளவு பணம் மற்ற வேண்டும் என்று கேட்டேன்… சும்மா ஒரு safety தான் என்றார். இதானல் ஒரே இடத்தில் 20000 சில்லறையாக முடங்கியுள்ளது. இவர் போல் சில பேர் செய்வதை பார்தேன். அப்படி எனில் நாடு முழுவதும் இந்த சி(ப)ல பேரால் … இது பற்றி தாங்கள் எண்னாம்…
  2. ஏன் வியாபாரிகள் வியாபாரத்தை நிறுத்தவேண்டும் அல்லது வியாபாரமே செய்யமுடியால ரொம்பபாதிப்பு ….. காஷ்டமாயிருக்கு….
  A trader purchase product (vegetables, groceries from agent / dealer / whole seller via credit base not immediate payment min one week to one month this same circle agent to dealer etc…
  now trader give product to very known person only. if u want money transfer amt using of RTGS, cheque. Govt./ RBI not close / any restitution in net transfer / debit card transaction so they use this option maximum, any difficult in this.. காரணம் ஒருவர் மிது ஒருவருக்கம் நம்பிகையில்லை…. ஒருவித தேவைற்ற பயம் அல்லது அப்படி காட்டிகொள்வது.
  and last one our famous media (meanly electronic media) their one and one policy dnt decrease panic. only increase TRB.
  பிகு நெல்லை பாளையங்கோட்டையில் ஒருவர் ( Hotel Sri Balaji) கடந்த 4 நாட்களாக சாப்பிடிவருவாகளிடம் பணம் இருந்தாள் (100, 50) வாங்கிகொள்வார் இல்லை எனில் கிடைக்கும் போது தருமாறு (நேரிலோ அல்லது வங்கியில் செலுத்துமாறு) கூறுகிறார் ( http://timesofindia.indiatimes.com/city/madurai/this-hotel-stands-out-gives-free-food-to-those-stuck-with-old-notes/articleshow/55363861.cms )
  எதே எனக்கு தோன்றியாதை பதிவு செய்துள்ளோன் … மற்றது உங்களது கருத்தில்
  அன்புடன்
  கங்கை வெ. குரு
  நெல்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.