தங்கம், டாலர் – இன்று கருப்பில் என்ன விலை – யார், எதற்காக – வாங்குகிறார்கள் …?

gold

நான், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான
அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல. பல தடவை
அவரது பைத்தியக்காரத்தனங்களை விமரிசித்திருக்கிறேன்.

ஆனால், இப்போது அவர் முன்வைக்கும் சில விஷயங்கள்,
கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும் கூட,
நிறைய உண்மைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

CNN செய்தி தொலைக்காட்சியில் அவரது முழு பேட்டியையும்
பார்த்தேன். அவர் நிறைய ஆதாரங்களை காட்டினார்.
சில வங்கி கணக்குகளில் ஜூலை மாதத்திலிருந்து எப்படி
கோடிக்கணக்கில் ஏற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை
புள்ளி விவரங்களுடன் காண்பித்தார்.

ஜூன் மாதம் வரை, அனைத்து வங்கி டெபாசிட்டுகளும்
நெகடிவிலேயே இருந்திருக்கின்றன. ஜூலையிலிருந்து
முக்கியமாக ஜூலையில் மட்டும், விருவிருவென்று ஏறுகிறது.

நிதியமைச்சர் 7-வது சம்பள கமிஷனை காரணம்
காட்டுகிறார். அது வெறும் சப்பைக்கட்டு. 7-வது சம்பள
கமிஷன் பணம் அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் கடைசியில்
தான் கிடைத்தது. அந்த பணம் கூட இவ்வளவு அதிக
டெபாசிட்டுக்கு காரணமாக இருக்க முடியாது.

விவரமாக அவற்றை ஆராய்ந்தால், இந்த வங்கி
டெபாசிட் விஷயத்தில் நிறைய அதிர்ச்சியான உண்மைகள்
கிடைக்கக்கூடும்…. வலையில் எங்காவது கிடைக்கிறதா என்று பார்ப்போம். நண்பர்களும் தேட வேண்டுகிறேன்.

தொலைக்காட்சி பேட்டியை சுருக்கமாக எழுதலாம் என்று
நினைத்திருந்தபோது, இப்போது அதை நக்கீரன் செய்தி
தளத்தில் பார்த்தேன். அப்படியே கீழே வெளியிடுகிறேன்.
முடிந்தால், நண்பர்கள் அந்த பேட்டியை தொலைக்காட்சியில்
பார்க்கவும். அது இன்னும் விரிவாகவும், இந்தி மொழியில்
இருந்தாலும் கூட, பயனுள்ளதாகவும் இருக்கும்.

—————————————————————–

கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்:
மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’மத்திய அரசின் இந்த
நடவடிக்கை சாதாரண மக்கள் மீது தொடுக்கப்பட்ட
கடுமையான தாக்குதல் ஆகும். இது கருப்பு சந்தையில்
உள்ளோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறுவது பற்றிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு முன்பாகவே பஞ்சாப் மாநில பா.ஜனதாவின் சட்டப்பிரிவு தலைவர் சஞ்சீவ் கம்போஜ் புதிய ரூ.2,000 நோட்டுகளுடன் காணப்படுவது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் பரவி உள்ளது. நான் கூறுவது ஒன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் முடிய நாட்டின்
அனைத்து வங்கிகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்
டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய காலாண்டு காலத்தில் மிகவும் குறைவாகவே வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பழைய ரூ.500, ரூ.1,000
நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு
முன்பாகவே அதுபற்றிய தகவலை பா.ஜனதா தனது
கட்சிகாரர்களுக்கும், நெருக்கமான அனைவருக்கும் தெரிவித்து
இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கருப்பு பணம் ஒழிப்பு என்கிற பேரில் மிகப்பெரிய அளவில்
ஊழல் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. ஏ.டி.எம்.களில்
பணம் எடுக்க முடியாமல் மக்கள் காலையில் இருந்தே நீண்ட
வரிசையில் நின்று அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களிடம் கருப்பு பணம் இருக்கிறதா என்ன?…

இந்த வரிசைகளில் மிகப்பெரும் தொழில் அதிபார்களோ, கருப்பு பணத்தை பதுக்கியவர்களோ இருக்கிறார்களா என்ன?…

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணம் எதுவும் வெளியே வரவில்லை.

வருமான வரி பிரகடன திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும்
பணம் மத்திய அரசின் கருவூலத்தில்தான் டெபாசிட்
செய்யப்படவேண்டும். ஆனால் அதிக மதிப்புள்ள பணம்
செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில்
குறிப்பிட்ட சிலருடைய பணம் மட்டும் அவர்களுடைய வங்கிக்
கணக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் அம்பானி,
அதானி, சரத்பவார், சுபாஷ் சந்திரா, பாதல் ஆகியோர் கருப்பு
பணத்தை குவித்து இருக்கிறார்களா? அல்லது விவசாயிகள்,
ரிக்ஷா இழுப்போர், கடைக்காரர்கள், தொழிலாளிகள் கருப்பு
பணம் வைத்திருக்கின்றனரா?…

எனவே, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்கூட்டியே பா.ஜனதா தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு இதுபற்றிய தகவலை தெரிவித்து அவர்கள் கருப்பு பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியிருக்கவேண்டும்.

செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை
பெறுவதற்கு அதிக கமிஷன் பெற்றுக் கொண்டு அவற்றை
வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுப்பதும் ஒரு பக்கம்
நடக்கிறது. பெரும் அளவு தொகைகளுக்கு இந்த தரகு வேலை
நடக்கிறது.

இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது? இப்படி கமிஷனை
பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பது
கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக அதை
ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

us-dollar

இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். கருப்பு பணமும்
குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். இன்று ஒரு அமெரிக்க
டாலரை ரூ.120 கொடுத்து வாங்குகின்றனர். தற்போது 10 கிராம் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. இதை மக்கள் இனி ரூ.60 ஆயிரம் கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்படும்.

கருப்பு பணம் பதுக்கியவர்கள் சொத்துகளையும் வாங்குகின்றனர். எனவே கருப்பு பணம் அதிகரிக்கத்தான் செய்யும்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பை மட்டும் வெளியிட்டு இருந்தால் அதற்காக மத்திய
அரசை பாராட்டலாம். ஆனால், புதிய ரூ.2,000 நோட்டை
வெளியிட்டதில் கருப்பு பண பிரச்சினை தீருமா?… என்பது
கவனத்தில் கொள்ளப்படவில்லை. புதிய ரூ.2000 நோட்டு
ஊழலுக்கும் கருப்பு பணத்துக்கும்தான் வழி வகுக்கும்.

ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் பழைய ரூ.500, ரூ.1,000
நோட்டுகளை மாற்றுபவர்களுக்கு 200 சதவீதம் அபராதம்
விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு என்ன
அர்த்தம்?… மக்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய
வேண்டாம் என்பதுதானே?…

வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் வெளியே நீண்ட கியூ வரிசையில் நிற்பவர்கள் யார்?… குடும்பத் தலைவிகள், சிறுவணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்தான். இவர்கள் யாரும் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள்.

ஏழை, எளிய மக்கள் தங்களது மகள்களின் திருமணத்துக்காக
கடந்த 10 வருடங்களில் சிறுகச் சிறுக ரூ.5 லட்சம் முதல் ரூ.6
லட்சம் வரை சேமித்து வைத்து இருப்பார்கள். அதற்கு
அபராதம் விதித்தால் எப்படி? கடவுள் உங்களை மன்னிக்க
மாட்டார்.

தவிர அதிக அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய 500
மற்றும் 1,000 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படவில்லை. இது நமக்கு தெரிகிறது. இதை அவர்களும் நன்றாகவே அறிவார்கள்.

எனினும் வேண்டும் என்றே நெருக்கடியை உருவாக்குவதற்காக இப்படி செய்து இருக்கின்றனர். எனவே பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு
உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்திய தொழில் அதிபர்களின் உண்மையான கருப்பு பணம்
சுவிஸ் வங்கிகளில் உள்ளது. பிரதமர் ஆவதற்கு முன்பு மோடி
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும்
கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவேன் என்று
உறுதிமொழி அளித்தார்.

ஆனால் இதுவரை இந்த விஷயத்தில் எதுவும் செய்யவில்லை.

எனவே கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் முதலில் சுவிஸ்
வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் இந்தியர்களை
உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=177358 )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to தங்கம், டாலர் – இன்று கருப்பில் என்ன விலை – யார், எதற்காக – வாங்குகிறார்கள் …?

 1. ராகவேந்திரா சொல்கிறார்:

  Mr.K.M. well said Sir.

  In Tirunelveli Mr.Yechuri has said –

  // கருப்புப் பணத்தைதான் அனைவரும்
  தங்க நாணயங்களாகவே மாற்றிவிட்டனர்.
  நகைக் கடைகளை விடிய விடிய திறந்து வைக்க
  யார் அனுமதி கொடுத்தது?

  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sitaram-yechury-condemns-centre-on-demonetisation-267071.html

 2. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் தேர்தலுக்காக வைத்திருந்த கருப்பு பணம் போன விரக்தி யில் பேசுவதாவது நியாயம், நக்கீரன் லின்க் கொடுத்து இதை எதிர்க்கும் அளவுக்கு உங்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
  1. இன்றைய நவீன உலகில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் (பிணம் தின்னி கழுகு மீடியாக்கள் கூட அறியாமல்) இதை தெரியப்படுத்துவது சாத்தியமா?
  2.வரிசையில் தொழிலதிபரோ,கருப்பு பணம் வைத்திருப்பவரோ எப்படி இருப்பார்? அவர் வைத்துள்ளது கருப்பு பணம் எனும்போது?
  3.செப்டம்பர் 30 வரை கருப்பு பணம் கணக்கு காட்ட கெடு கொடுக்கப்பட்டது நினைவில்லை போலும்?
  4.செப்டம்பர் வரை அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாம்.. என் அறிவுக்கு எட்டிய வரை வங்கிக்கு வந்துவிட்டாலே அந்த பணம் கணக்கில் வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்?

  5.சாமானியருக்கு சிரமம் இருக்கும் என்று தான் அனைவருக்கும் தெரியுமே? அதையும் ஏற்று தானே வரவேற்பு செய்கின்றனர்?
  உங்களை நேர்மையாளர் என்று நினைத்து தான் உங்கள் கருத்துக்களை படித்து வந்தேன் இதுவரை..
  ஆனால் இந்த விசயத்தில் உங்கள் நோக்கம் நாட்டு நலனையும் தாண்டி மோடி வெறுப்பு தான் எனும்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மாயா,கருணா போன்றோர் எதிர்க்கும்போது ( நிதீஷ், நவீன் போன்றோர் ஆதரிக்கும் நிலையில்) மோடியின் செயல்பாடுகள் மற்றும் அவர் திட்டங்கள் மீதும் அதிக நம்பிக்கையும், அவர் மீது மரியாதையும் வருகின்றது..
  உங்கள் நோக்கம் வெளிப்பட்ட பின்பும், நக்கீரனை விட்டுவிட்டு,உங்களை ஏன் படிக்கவேண்டும்? எங்களுக்கு ஒரு நக்கீரன், ஒரு வினவே போதும்…

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
   அது நக்கீரனின் செய்தித்தளம்.
   தளம் நக்கீரனுடையதாக இருந்தாலும்,
   கே.எம். குறிப்பிட்டிருப்பது, அதில் வந்திருக்கும்
   அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களின் பேட்டியை .

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   விவேக்,
   செஞ்சது தவறுன்னு காமை சொல்லவில்லை.
   செய்வன திருந்தச்செய் என்பதே அவரின் வருத்தம்.
   ரெண்டு நாளில் சரியாகிவிடும் என்றவர்கள் வங்கிகள் சனி ஞாயிறு வேலை செய்யச்சொல்லி பணித்தனர். என்ன ஆச்சு?
   சகஜநிலை வர மூன்று வாரம் ஆகலாம்னு நிதியமைச்சர் சொல்றார்!
   சகஜநிலைக்கு அர்த்தம்…
   பசி பட்டிணி பழகிவிடும்
   அல்லது ஐநூறு அல்லது ரெண்டாயிரம் மொத்தமா செலவழிப்பது என்பதாகும்.
   டாஸ்மாக்குல வந்த அனைத்து நூரு ரூபாய்களும் போக்குவரத்து கழகங்களில் வசூலான அனைத்து பணத்தாள்களும் ஏற்கனவே கள்ள வியாபாரிகளால் மாற்றப்பட்டுவிட்டன!!
   பதுக்கல் வியாபாரிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஆறு மதம் அல்லது ஒராண்டுக்கான சம்பளத்தை அட்வான்சாக கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
   Black money என்பது பணமட்டுமல்ல நண்பரே!
   தங்கமும்தான்.
   ஏன், நீங்களும் நானும் வாங்கிய சொத்துக்களிளும் அது இருக்கத்தான் செய்கிறது!
   இன்று மோடியின் முடிவால் பாதிக்கப்பட்டது நிச்சயமாக அடித்தட்டு மக்களே!
   ஆறு மாதமாக ரகசியமாக அனைத்து ஏற்பாடுகளையும் கனக்கச்சிதமாக செய்ததாக மார்தட்டும் இவர்களுக்கு அடிதட்டு மக்கள் கவனத்தில் வராதது மிகவும் வருத்தமான விஷயமே!
   ATM-ல் தேவையான அளவுக்கு 100 ரூபாய் தாளை வைக்க தெரியவில்லை!
   இன்னும் புதிய 500, 2000 தாள்களை ATM-ல் பொட வசதியுமில்லையாம்!
   வேஸ்ட் ஆஃப் மான் பவர் எனபதை தனி டாபிக்காக விவாதிக்கலாம்.
   இப்படி ஏகப்பட்ட குழப்பங்களை கூறிக்கொண்டே போகலாம்…

  • ராகவேந்திரா சொல்கிறார்:

   Admission of failure by BJP M.P. and Leader

   This remark is from Dr.Subramanian Swamy :

   ” From what is happening in small towns and rural areas.
   it seems that MoF made no contingency plan for
   denomination for the last 2 1/2 years. “

 3. senthil சொல்கிறார்:

  நான் உங்க ப்ளாக் ல எழுதின…அழிச்சுடறீங்க….என்ன திட்டறீங்க….

  அப்புறம்…நீங்க ஏன் எனக்கு மெயில் அனுப்பரீங்க?

  சரி….பரவா இல்லை

  எப்படியோ…எல்லோரும் நல்ல இருந்தா …சரி..

  On Nov 13, 2016 12:34 PM, “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” wrote:

  > vimarisanam – kavirimainthan posted: ” நான், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி
  > முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல. பல தடவை அவரது
  > பைத்தியக்காரத்தனங்களை விமரிசித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர்
  > முன்வைக்கும் சில விஷயங்கள், கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும் க”
  >

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   செந்தில்,
   நீங்க follow பண்ண ரிஜிஸ்டர் பண்ணதாலேதான் உங்களுக்கு மெயில் வருது.
   தேவையில்லாத பட்சத்தில் நீங்களே unsubscribe பண்ணிடுங்க!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்ப அஜீஸ்.

    அந்த செந்தில் என்று சொல்லிக்கொள்ளும்
    நபருக்கு இந்த விஷயம் ஏற்கெனவே தெரியும்.
    வேண்டுமென்றே தான் இப்படி பின்னூட்டம்
    எழுதி இருக்கிறார்.

    என்னை தொல்லைப் படுத்த வேண்டும் என்று
    தொடர்ந்து பல மாதிரி விஷயங்களில் முயற்சித்து
    வருகிறார். காரணம் – அவருக்கு மிகவும் பிடித்த
    சிலரை நாம் இந்த தளத்தில்
    விமரிசித்தது /விமரிசித்து கொண்டிருப்பது தான்.

    யார் அந்த அவருக்கு பிடித்த நபர்கள் தெரியுமா…?

    பிரபல சமூக சேவகர், புகழ்பெற்ற சந்நியாசி –
    ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்,
    சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்,
    திருவாளர் ந.மோ. அவர்கள்….

    இவர்களைப் பற்றி நாம் எழுதுவதை அவர் பொறுக்க
    மாட்டாராம். இப்படித்தான் தொல்லை படுத்துவாராம்…
    படுத்தட்டும்…. நான் சகித்துக் கொள்வேன்.

    வெகு சுலபமாக கத்தரித்து விடலாம் –
    filter போடலாம். ஆனால், இது மற்ற நண்பர்கள்
    பின்னூட்டங்களை உடனுக்குடன் பார்க்க முடியாமல்
    போகும். நான் அதை விரும்பவில்லை.

    விடுங்கள் – அவருக்கே ஒரு நாள் புரியக்கூடிய
    சூழ்நிலை உருவாகும்….

    அதுவரை, அவர் போடப்போட,
    நான் நீக்கிக்கொண்டே போகிறேன்…
    அவ்வளவு தானே…

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  // ஊழல் செய்தவர்களால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது- மோடி திடுக் பேச்சு //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/even-if-burnt-alive-won-t-stop-fight-against-black-money-says-modi-267088.html — அருமையான பேச்சு … ? பரிதவிக்கும் மக்களிடம் பச்சாதாபம் தேடும் முயற்சியா … ? துன்பம் படும் வேளையில் ” ஒரு சிரிப்பு ” செய்தி கூறுகிறார் அது : — // நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் மற்றும் பிற ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ரூ.4000 மாற்ற வரிசையில் காத்திருக்கின்றனர். // நண்பர்கள் யாராவது – அப்படிப்பட்டவர்களை வரிசையில் கண்டால் — போட்டோ எடுத்து அனுப்புங்களேன் — எல்லோரும் ரசிப்பார்கள் … தேடிப்பார்த்தும் ஒரு எம் .எல்.ஏ — ஒரு எம் .பி. — ஒரு தொழிலதிபர் — ஏன் ஒரு நகைக்கடை முதலாளி — போன்ற எவரையும் வரிசையில் காண முடியவில்லை என்பதே — வரிசையில் தினமும் நின்று அல்லாடும் மக்களின் குறை … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இன்று – முதலில், கோவா-விலும்,
   பிறகு பெல்காமிலும் – சிவாஜியை தோற்கடிக்க
   வைக்கும் நடிப்பு, வசன உச்சரிப்பு….!

   ஹிந்தி மொழி தெரியாதவர்கள்
   ஒரு மிகச்சிறந்த மேடை நாடகத்தை
   தவற விட்டு விட்டனர்….

   இந்த நாட்டிற்கு சேவை செய்ய இவர்
   குடும்பத்தை (?), உறவினர்களை … தியாகம்
   செய்தாராம்…

   எனக்கு 1976-ல் எமெர்ஜென்சியை
   கொண்டு வரும்போது இந்திரா காந்தி அவர்கள்
   பேசியது, நடந்து கொண்டது எல்லாம் இப்போது
   நினைவிற்கு வருகிறது….

   வங்கிகளில், க்யூ தொடர்ந்தால்,
   மக்கள் கொந்தளிப்பு அதிகரித்தால் –
   financial emergency அறிவிப்பு வந்தால்
   ஆச்சரியப்படுவதற்கில்லை…!

   முதலில் ஒரே ஒரு நாள்- 24 மணி நேரம்
   பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்…

   பிறகு நிதியமைச்சர் நேற்று – 2-3 வாரங்கள்,
   டிசம்பர் முதல் வாரம் வரை என்று சொன்னார்…

   இன்று இவர் 50 நாட்கள் பொறுக்கச் சொல்கிறார்…

   பொறுக்கச் சொல்கிறார்கள் –
   ஏற்கெனவே மக்கள் தெருத்தெருவாக
   வங்கி வங்கியாக, ATM, ATM-ஆக
   பொறுக்கிக் கொண்டு தானே இருக்கிறார்கள்…

   இன்று ரிசர்வ் வங்கி வாசலில்
   ஒரு நோயாளிபெண்மணியும்,
   ஒரு வயதான குடும்பஸ்தரும் பேசும்போதே
   அழுததை டிவி செய்திகளில் பார்த்திருக்கலாம்.

   மக்கள் மன்னிப்பார்களோ என்னவோ தெரியாது..
   இறைவன் நிச்சயம் இந்த பாவிகளை
   மன்னிக்கவே மாட்டார்….

   -காவிரிமைந்தன்

 5. palaniappan சொல்கிறார்:

  new governer sign new currency.but govt tell we plan 6 month before. that time raguram rajan rbi governer.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.