சிரமத்தை குறைக்க எப்படி உதவலாம்….?

handshake

இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்காவது
பிரச்சினைகள் தொடரவே செய்யும். எனவே,
இப்போது அரசாங்கமும் சரி, பொது மக்களும் சரி –
பிரச்சினையை இப்போதைக்கு சமாளிக்க என்ன செய்ய
முடியும் என்று யோசித்து செயல்படுவதே
சிரமங்களை குறைக்க உதவும்.

அரசைப் பொருத்தவரை –
ரிசர்வ் வங்கி கிளைகளைப் பொருத்த வரை –
ஸ்டேட் பாங்க் கிளைகளைப் பொருத்த வரை –
அவர்கள் ஒரே ஒரு நடவடிக்கையை உறுதிப்படுத்தினால்
பொது மக்களின் துன்பங்களில் பெரும்பகுதியை
குறைத்து விடலாம்.

ஒவ்வொரு ஊரிலும்,
நகரங்களாக இருந்தால்,
ஸ்டேட் வங்கியின் ஒவ்வொரு பெரிய கிளையிலும் –

வங்கிகள் அனைத்திலும் நிச்சயமாக ஒரு ATM
இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ATM -ல்
மட்டுமாவது, 24 மணி நேரமும் பணம் கிடைக்க
ஏற்பாடு செய்ய வேண்டும்.

எவ்வளவு நேரமானாலும் சரி,
காத்திருந்தால் நிச்சயம் பணம் கிடைக்கும் என்கிற
நம்பிக்கையும், நிம்மதியும் மக்களுக்கு கிடைக்கும்.
வங்கியுடன் இணைந்த ATM என்பதால், பணம் தீரத்தீர,
மீண்டும் நிரப்புவதில் -வங்கிகளுக்கு அதிகம் பிரச்சினை
இருக்காது.

இந்த ஒரு நடவடிக்கை மட்டுமே கூட மக்களுக்கு
பெருத்த relief -ஐ கொடுக்கும்.

ஏற்கெனவே, பெருத்த சுமைகளை ஏற்று
இயன்ற அளவு செயல்பட்டுக் கொண்டிருக்கும்
வங்கிகள் சந்தோஷமாக இதை
செயல்படுத்த முன்வரும். ஆனால், சம்பந்தப்பட்ட பொறுப்பில்,
அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து இதற்கான
உத்திரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்..
செய்வார்களா…?

( நான் எனக்குத் தெரிந்த இந்த யோசனையை,
சென்னை ரிசர்வ் வங்கிக்கும், ஸ்டேட் வங்கி தலைமைக்கும்
அனுப்பி இருக்கிறேன்…. ஏற்று செயல்பட
முன் வருவார்களா – அல்லது அவர்களுக்கு வேறு எதாவது
நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றனவா – தெரியவில்லை…)

சாதாரண நடுத்தர, கீழ்மட்ட, பொருளாதார சூழலில்
வசிக்கும் மக்களுக்கு சிரமத்தை குறைக்க எனக்கு தோன்றும்
சில யோசனைகள் –

மளிகை சாமான் –
– ஓரளவு பெரிய மளிகைக்கடைகள் – ஏழை, நடுத்தர
மக்களுக்கு 15 நாட்களுக்கு – கடனில் பொருட்களை
கொடுக்க முன்வர வேண்டும்.
பழக்கமுள்ளவர்கள், தெரிந்தவர்கள் இதற்கு
(கடன் நிச்சயம் திரும்ப வந்து விடும் என்பதற்கு )
உறுதி அளித்து உதவலாம்.

காய்கறி, கனி வகைகள் –
பழமுதிர்சோலை போன்ற பெரிய கடைகள்
credit card / debit card -களை ஏற்றுக் கொண்டு எவ்வளவு
வேண்டுமானாலும் காய்கறி, கனி வகைகளை
கொடுக்கின்றன.

credit card / debit card -வைத்திருப்பவர்கள், குறைந்த பட்சம், அத்தகைய வசதி இல்லாத – தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்,
தங்கள் குடியிருப்புகளின் அருகே வசிப்பவர்களுக்கும் –
தங்கள் கார்டை பயன்படுத்தி காய்கறி, கனி வகைகளை
வாங்கிக் கொள்ள உதவலாம். நான்கைந்து நாட்களுக்கு
சேர்த்து ஒரே தடவையில் வாங்கிக் கொள்ளலாம்.

பால் –
ஆவின் நிறுவனம் பழைய நோட்டுக்களை இன்னமும்
பெற்றுக் கொள்கிறது. ஒரு மாதத்திற்கு தேவையான
கார்டை முன்பணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பணமாக கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு
credit card / debit card – வைத்துள்ள நண்பர்கள் உதவ
வேண்டும்.

ஆட்டோ பயணம் –
தெரிந்தவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடனுக்கு
ஓட்ட தயாராக இருக்கிறார்கள்..( பழக்கமான ஆட்டோ
ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் கடனுக்கு
பெட்ரோல்/டீசல் போட ஏற்கெனவே உதவுகின்றன…)

தங்கள் இல்லத்தில் மாத சாமான் வாங்கி ஸ்டாக்
வைத்திருக்கும் இல்லத்தரசிகள்,

தங்களுக்கு 15 நாட்களுக்கு மட்டும்
தேவையானவற்றை வைத்துக் கொண்டு,
அதிகமாக இருப்பதை தங்கள்
பக்கத்து, அடுத்த வீட்டுக்காரர்களுக்கு
கொடுத்து உதவலாம்.
( கூச்சம் காரணமாக அவர்களாக கேட்கத்தயங்கக்கூடும்.
வாலண்டியராக, நீங்களாகவே உங்களுக்கு எதாவது
உதவி தேவையா என்று கேட்டு உதவலாம்…)
சிறிய ஊர்களில், கிராமங்களில் இத்தகைய
பிரச்சினை எழாது. அது தானாக, இயல்பாகவே நடைபெறும்.

வேறு வழி இல்லை என்கிறபோது,
மக்கள் தான் தங்களுக்குள் ஒருவருக்கொருவர்
உதவி செய்து, சிரமங்களை குறைத்துக்கொள்ள
ஒத்துழைக்க வேண்டும்.

நம்பிக்கையோடு செயல்படுவோம்.
அரசு ஒழுங்காக திட்டமிட்டு செயல்பட தவறியதால்
ஏற்படும் துன்பங்களை –
நாம் நம்பிக்கையோடும், ஒத்துழைப்போடும் எதிர்கொண்டு
சரி செய்து கொள்வோம்.

நிலைமை விரைவில் மாறி விடும் – என்று
நம்பிக்கையோடு செயல்படுவோம்
வாருங்கள் நண்பர்களே….

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சிரமத்தை குறைக்க எப்படி உதவலாம்….? க்கு 9 பதில்கள்

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! தாங்கள் கூறியுள்ள ” யோசனைகளை ” ஓரளவு கடைபிடிக்கப்படும் என்று நம்புவோமாக …. ! இந்த சந்தர்ப்பத்தில் ” நமது முதல்வர் ” மருத்துவமனையில் இல்லாமல் இருந்து இருந்தால் ஆவின் பால் கிடைப்பதைப்போல — நம் மக்களின் இந்த பரிதவிப்புக்கு ஏதாவதொரு — பரிகாரம் கண்டிப்பாக தேடி இருப்பார் என்பதும் — அத்தியாவசிய பொருள்கள் எளிமையாக கிடைக்க ஒரு வழி பிறந்திருக்குமா …. ?

  // இந்தியாவில் “பணக் கலவரம்” மூளும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/atms-run-dry-cash-peopel-patience-267123.html —- ஏதாவது ஒரு விரைவான நடவடிக்கை அரசு எடுக்காவிட்டால் இந்த செய்தியின் படி நடந்தாலும் நடக்கலாம் — அல்லவா …. ?

 2. R KARTHIK சொல்கிறார்:

  This particular article makes more sense as we are anyhow facing this situation and lets do our best to reduce the pain of each other.

  வாழு வாழவிடு.

 3. selvarajan சொல்கிறார்:

  அருமையான செய்தி ஒன்று ; — // தவிக்கும் மக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கையில் பணமிருந்தும் மருத்துவ செலவுகளுக்கு தவிப்பவர்களுக்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் உதவி செய்ய முன் வந்துள்ளனர். //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/india-thowheed-jamath-swipe-medical-emergencies-267140.html —- அய்யா … ! தாங்கள் கூறியது // பணமாக கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு
  credit card / debit card – வைத்துள்ள நண்பர்கள் உதவ
  வேண்டும். // நடைமுறைக்கு வந்துகொண்டு இருக்கிறது … எல்லோரும் இவ்வாறு செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை ….!!!

 4. LVISS சொல்கிறார்:

  There is one problem with replenishment of cash in ATMs — The work is mostly outsourced -I have shared my views in one of your previous blog —

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  What about people buying diabetics and regular monthly life saving medicines?

 6. B.V.Subramanian சொல்கிறார்:

  இன்று மாலை ஹாங்காங்கில் செய்தியாளர்களிடையே
  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பேசி இருக்கிறார்;

  நிதியமைச்சகம் சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்து
  செயல்படாதது மன்னிக்க முடியாதது:

  பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹாங்காங் சென்றுள்ளார். அங்குள்ள பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ளும்போது நிதியமைச்சகம் போதிய முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

  ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பது மிக முக்கியமான விஷயம். இதற்காக திட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்து நிதியமைச்சகம் முழுமூச்சுடன் பணியாற்றியிருக்க வேண்டும். மேலும், பணத்தை மாற்றிக் கொடுக்கும் இடத்தில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறி விட்டனர். நிதியமைச்சகம் சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்து செயல்படாதது மன்னிக்க முடியாதது.

 7. LVISS சொல்கிறார்:

  According to a news report the RBI had asked banks to calibrate 25% of their ATMs to dispense 100 rupee notes —

  http://timesofindia.indiatimes.com/business/india-business/RBI-had-asked-banks-on-November-2-to-calibrate-ATMs-for-Rs100-notes/articleshow/55419576.cms

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s