அறிவுஜீவி BJP நண்பர்களிடம் பெறும் முட்டாள் பட்டம் …..!!!


சில அறிவுஜீவி நண்பர்களிடம் நான் மட்டும் தான்
இந்த திட்டம் மற்றும் நிறைவேற்றப்பட்ட முறைகள்
குறித்து நெகடிவ் கருத்து சொல்லி முட்டாள் பட்டம்
வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருந்தேன்.

நல்ல வேளை – எனக்கு துணையாக
நண்பர் வா.மணிகண்டன் இருப்பதை பார்த்தேன்…

அப்புறமென்ன …
எனக்கு கிடைப்பதில் பாதி அவருக்கும் போகுமல்லவா
என்றெண்ணி திருப்தியடையலாமே…!!!

யான் பெற்ற வசவுகளில் சரிபாதியை
அவரும் பெறுவதாக ….!!!!

திரு.வா.மணிகண்டன் தனது ” நிசப்தம் ” தளத்தில்
எழுதி இருக்கும் கட்டுரை கீழே.
திரு. மணிகண்டனுக்கு எனது நன்றிகள்.

( http://www.nisaptham.com/2016/11/blog-post_14.html?
utm_source=feedbu )

——————————————————–

திட்டமும் அமலாக்கமும்
11/14/2016 12:27:00 PM

நான்கு நாட்களாக ஊரில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

பணத்துக்கு பெரும் தட்டுப்பாடு. எந்த ஏடிஎம்மிலும் பணம்
இல்லை. வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள்.
நான்காயிரம் ரூபாயை மாற்றுவதற்கு முக்கால் மணி
நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.

வெள்ளிக்கிழமையன்று நடத்துநராக இருக்கும் சித்தப்பா
‘இதை நிறையப் பேரு பாராட்டுறாங்க’ என்று சொன்ன
நிலைப்பாடு இன்னமும் அப்படியே இருக்குமா என்று
தெரியவில்லை. அவர் திமுக அனுதாபி. அறிவிக்கப்பட்ட
ஒன்றிரண்டு நாட்களில் சிரமங்கள் குறைந்திருந்தால்
அவர் சொன்னது போல மக்கள் ஏற்றிருக்கக் கூடும்.
ஆனால் இப்பொழுது கடுப்பேறியிருக்கிறது என்றுதான்
நினைக்கிறேன்.

சிரமப்படுகிறார்கள். ஐசிஐசியை வங்கியில் நின்றிருந்த போது
‘ஒரு மாசம் முன்னாடியே ஐநூறைக் குறைச்சுட்டு ஏ.டி.எம்ல
வெறும் நூறு ரூபாயை லோடு பண்ணியிருக்கலாம்ல சார்’
என்று காக்கிச் சட்டையணிந்திருந்த பள்ளிக்கூட ப்யூன்
ஒருவர் யோசித்த அளவுக்கு மோடி ஏன் யோசிக்கவில்லை
எனத் தோன்றியது.

அவர் சொன்னது போல நூறு ரூபாயின் புழக்கம் மெல்ல
மெல்ல அதிகரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு சிரமம்
இருந்திருக்காது.

பல வங்கிகளில் கையிருப்பு போதுமானதாக இல்லை.
பணம் கேட்டுச் செல்பவர்களிடம் ‘பணம் இல்ல சார்’
என்று சொல்லி வரிசையிலேயே நிற்க அனுமதிக்காமல்
திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். மீறி வரிசையில் நின்றால்
மாலை நான்கு மணிக்கெல்லாம் வரிசையில் நிற்பவர்களை
உள்ளே அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரும் கொடுக்கும் அடையாள விவரங்களை
வங்கிப் பணியாளர் கணினியில் தட்டச்சு செய்கிறார்.
பிறகு வங்கியின் முத்திரையிட்டு கையொப்பமிட்டு
அவர் அனுப்பி வைத்த பிறகு காசாளரிடம் செல்வதற்கும்
வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

இந்த வேகம் போதுமானதே இல்லை. அடையாள
அட்டைகளை ஸ்கேன் செய்தால் வேகம் கூடியிருக்கும்.
ஆனால் அவ்வளவு தகவல்களையும் சேகரித்து வைப்பது
தொழில்நுட்ப ரீதியாக கடினமான காரியமாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு மனிதரும் தங்களது அடையாள அட்டையை
பிரதி எடுக்கும் போது நாடும் முழுவதும் பல கோடிக்
கணக்கான டன் காகிதங்கள் வீணடிக்கப்பட்டிருக்கும்.

அடையாள அட்டைக்கு ஒரு காகிதம் என்றால்
விண்ணப்பத்திற்கென ஒரு காகிதம். ஆக, ஒவ்வொரு
மனிதரும் குறைந்தபட்சம் இரண்டு தாள்களை வீணாக்க
வேண்டியிருக்கிறது.

xeroxing

பணப்பரிமாற்றம் முழுமையாக நடந்து முடிக்கும் போது
காகிதங்களுக்கு என மட்டும் பல கோடி மரங்கள்
வெட்டப்பட்டிருக்கும். ‘சுவச் பாரத்’ என்று பேசுகிறவர்கள்
இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

அதைத் தவிர, ஒவ்வொரு மனிதனும் தனது வேலையை
விட்டுவிட்டு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. இப்படி
மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் போது அவனது
உற்பத்தித் திறன் வீணடிக்கப்படுகிறது. சராசரியாகக்
கணக்கு எடுத்தாலும் கூட ஒவ்வொரு நாளும் நாட்டின்
productivity வீணாகப் போகிறது என்று பார்த்தால்
வாயடைத்துப் போகும். பெரிய திட்டத்தை அறிவிக்கும்
முன்பாக இத்தகைய மறைமுக விளைவுகளைக்
குறைப்பதற்காக ஏன் அரசாங்கம் எதையுமே
யோசிக்கவில்லை எனத் தெரியவில்லை.

திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே இது சிறந்த
திட்டமெனத் தோன்றியது. திட்டம் சிறந்ததுதான்.
தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
காய்கறி விற்பவர், ஆட்டோக்காரர், தள்ளுவண்டிக்
கடைக்காரர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளும்,
வணிகர்களும், தொழிலதிபர்களும் மாட்டிக் கொண்டு
விழிப்பார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைக்கும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால்
போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் கோட்டை
விட்டிருக்கிறார்கள். மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கியின்
மூலமாக நூறு ரூபாய்த் தாள்களை அதிகளவு புழக்கத்தில்
விட்டிருக்கலாம். புது நோட்டுக்களை தேவையான அளவு
இருப்பு வைத்திருக்கலாம். வங்கிகளில் மக்களின்
விவரங்களைப் பெறுவதற்கான வசதிகளைச்
செய்திருக்கலாம்.

மக்களின் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது போன்றவை
குறித்தெல்லாம் முன்பே யோசித்து முடிவு செய்திருக்க
வேண்டும்.

இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்.
திட்டத்தை அறிவித்துவிட்டு மோடி ஜப்பானுக்கு
விமானம் ஏறியதைத்தான் ஜீரணித்துக் கொள்ளவே
முடியவில்லை.

அவசரமாக அறிவிக்க வேண்டுமென்றால் ஜப்பான்
பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இல்லையெனில்
ஜப்பானிலிருந்து திரும்பி வந்து அறிவித்திருக்கலாம்.

நூற்றியிருபது கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகிற
திட்டமொன்றை அறிவிக்கும் போது பிரதமர், அமைச்சர்கள்,
நிதித்துறை அதிகாரிகள் என அனைவரும் இரவு பகலாகக்
கண்காணித்து பிரச்சினைகளை அவ்வப்போது சரி
செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு அறிவித்துக்
கொண்டிருக்க வேண்டும்.

இதைக் கூடச் செய்யாமல் ஜப்பானுக்குச் சென்று
‘என்னைக் கொன்றாலும் பரவாயில்லை’ என்று
நீலிக் கண்ணீர் வடிப்பது அசிங்கமாக இருக்கிறது.

உள்நாட்டிலேயே இருந்து உன்னிப்பாக கவனிப்பது
என்பது பிரதமரின் தார்மீகக் கடமை இல்லையா?

முதலில் ஒன்றிரண்டு நாட்களில் நிலைமை கட்டுக்குள்
வந்துவிடும் என்றார்கள். இன்றைய தினம் வரைக்கும்
பணத்துக்காக மக்கள் அலைந்து கொண்டுதான்
இருக்கிறார்கள். ‘மக்கள் வெறுப்பு’ என்கிற
ஒரு அம்சம் போதும்- எவ்வளவு பெரிய திட்டத்தையும்
அடித்து நொறுக்குவதற்கு. அதைத்தான் சம்பாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

இன்னமும் மூன்று வாரங்களில் நிலைமை சரியாகிவிடும்
என்கிறார்கள். ஆனால் சந்தோஷம்தான். ஆகுமா என்பது
சந்தேகம்தான்.

மக்களை அலைகழிப்பது மட்டுமில்லாமல் இதுவொன்றும்
தவறே நடக்காத வழிமுறை என்று சொல்ல முடியவில்லை.

ஏகப்பட்ட பேர் தில்லாலங்கடி வேலைகளையும்
ஆரம்பித்திருந்தார்கள்.

ஒருவருக்கு நான்காயிரம் ரூபாய்தான் ஒரு நாளைக்கான
அளவு என்பதால் PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர்
அடையாள அட்டை என்று ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று
மூன்று நான்கு வங்கிகளில் நின்று பனிரெண்டு அல்லது
பதினாறாயிரம் ரூபாயை மாற்றிக் கொள்கிறார்கள்.
எதற்காகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால்
செய்கிறார்கள்.

வங்கிகளிலும் சில கசமுசா வேலைகள் நடப்பதாகச்
சொல்கிறார்கள். பெங்களூரில் ‘நீங்க ஏற்கனவே பணத்தை
மாத்திட்டீங்க’ என்று சிலரிடம் சொல்லி அனுப்பிவிட்டதாகச்
செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. எவ்வளவு தூரம் உண்மை
என்று தெரியவில்லை. ஆனால் இது நடந்திருக்க
வாய்ப்பிருப்பதாக வங்கி நண்பர்கள் சொல்கிறார்கள். நமது
வாக்கை யாரோ செலுத்துவது போலத்தான்.

சில வங்கிப் பணியாளர்களிடம் பேசிய போது அவர்கள்
சொன்ன தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது.
இன்னமும் விவரங்கள் வெளியே வரத் தொடங்கும் போது
விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.

திட்டத்தை அறிவிப்பதால் மட்டுமே அத்தனையும் சீர்
செய்யப்படுவதில்லை. எப்படி அமுல்படுத்தப் போகிறோம்,
சாமானியர்கள் பாதிப்படைவதை எப்படிக் குறைக்க போகிறோம்,
பெருச்சாளிகளுக்கு எப்படிக் கண்ணி வைக்கிறோம் என்று
நிறைய அலசி ஆராய்ந்து செய்திருக்க வேண்டும். அதைச்
செய்திருந்தால் இவ்வளவு நாட்கள் இவ்வளவு பேர் திணறிக்
கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஆனால் ஒன்று- நாம் அறிவாளி மாதிரி அதையும் இதையும்
பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இத்தகையை
விவகாரங்களில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக்
கணிக்கவே முடியாது. உ.பி.தேர்தலுக்காக காத்திருக்கலாம்.

—————————————————————–

திட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை –
failure in execution என்பதைப் பற்றித்தான்
குறைகூறுகிறோம், வருத்தப்படுகிறோம்
என்பதைக்கூட யோசிக்க மறுத்து –

பெரும்பாலும் படித்தவர்கள்,
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தவர்கள் –
அறிவுஜீவிகள் –
யார் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்
என்று நாம் எதிர்பார்ப்போமோ – அத்தகையோரில்
பெரும்பாலானோர் கண்களை மூடிக்கொண்டு
காதுகளை பொத்திக்கொண்டு –

பாஜக / மோடிஜி அரசு செய்யும் எந்த
செயலையும்,

ஒரு விதிக்கப்பட்ட கடமை போல் –
ஆதரிக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது ….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to அறிவுஜீவி BJP நண்பர்களிடம் பெறும் முட்டாள் பட்டம் …..!!!

 1. கருப்புசாமி சொல்கிறார்:

  http://tamil.oneindia.com/news/india/people-shocking-over-the-centre-s-indelible-ink-marks-267269.html

  தற்போது வங்கிகளுக்கு சென்று அதிகபட்சம் ரூ4,500 பெற்றால் அழிக்க முடியாத அடையாள மை வைப்போம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  அப்படியானால் ஒருவர் – ரூ4,500க்கு மேல் வங்கிக்குப் போய் பணம் எடுக்கவே கூடாதா?
  – வங்கிகளில் மை வைக்கும் நடைமுறை எத்தனை நாள் அமலில் இருக்கும்?
  – அந்த மை அழியும் வரை வங்கி பக்கமே எட்டிப் பார்க்க கூடாதா?
  – அப்படி போனால் கருப்பு பணத்தை வெள்ளையாக்க வந்த தேசதுரோகி என உள்ளே தள்ளிவிடுவார்களா?

  ””””””””””””””””””””””””””””””””””””””””””””’

  விரல்’லே எல்லாம் மை வெச்சா
  கையை தூக்கி
  இல்லே பாக்கணும்..
  அதிகாரிக்கு ஏன் அவ்வளவு சிரமம் ?

  நீட்டா நெத்தில போட்டுடுங்க ஒரு நாமம்.
  பாக்கற பய தானே புரிஞ்சுக்குவான்.

  • LVISS சொல்கிறார்:

   Mr Karuppuswamy I think this will be in force till Dec 30th -It should be if it is to be effective– Rs 4500 limit is only for exchanging notes –If you surrender anything above that it will be credited to your account -For your needs you can draw from your account after that —
   The ink is put only when you exchange your notes for cash —

 2. LVISS சொல்கிறார்:

  RBI has clarified about ID cards Probably some banks asked for copies of them

  http://timesofindia.indiatimes.com/india/Dont-need-ID-copies-to-exchange-old-currency-notes-says-Reserve-Bank-of-India/articleshow/55446458.cms

  The whole exercise is being monitored by the RBI and reported to them by the banks –What difference will it make if the PM stayed in India –Moreover these trips are arranged long back –Repeatedly this non issue is being brought into discussion –In any case as soon as he arrived he has begun addressing the issue —
  To reduce the instances of the same persons coming again and again thereby depriving many others the system of inking has been introduced –This is done only for cash transactions —
  One more thing ,.If I have understood it correctly , the scheme provides for exchanging upto Rs 4500 per person and not per person per day –It is not like drawing from ATM on a daily basis –So it makes sense to follow this inking procedure –Let us hope the crowd gets reduced progressively from today —
  Every one says it could have been executed better –Bu nobody I have heard giving useful suggestion — I stick to my view that right from the first day the people shd have been asked to go to their banks where they have their account to get this done — Dealing with cash transactions for those who do not have accounts could have been assigned to post offices –This is one way of stream lining the procedure -How to put my suggestion to the Finance Ministry or RBI
  RBI which is not a bank is also helping people by giving changes —

 3. LVISS சொல்கிறார்:

  One advantage of this inking process –The person who gets his cash exchanged in one bank and got ink put on his finger cannot go to another bank after that with another idendity card for exchanging cash –After all ,people may have more than one idendity card —

 4. selvarajan சொல்கிறார்:

  // அன்றைக்கு ஒரு சுல்தான் துக்ளக்… இன்றைக்கு ஒரு பிரதமர் மோடி! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thuglak-modi-267310.html

  இந்த செய்தியில் மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் — முத்தாய்ப்பாக கூறியிருப்பது — சிந்திக்கதக்கது —– //நூற்றாண்டுகளாய் இருந்த பொருளாதார கண்ணி அறுக்கப் பட்டிருக்கிறது. மறுபடியும் இணைப்பது சுலபமான பணி கிடையாது. இந்த பிரச்சனையின் மறு பக்கம் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் புதிய, புதிய வழிகளில் தங்களது கரன்சியை வெள்ளையாக்கிக் கொண்டிருப்பது. ஆகவே இதில் மோடி அரசு சாதிப்பதற்கு வேறு ஏதோ பெரியாதாக இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது. மக்களிடமிருந்து மண்ணையும், பொன்னையும் (பணத்தையும்தான்) பிடுங்கிய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது வரலாறு. ‘துக்ளக் தர்பார்’ என்ற சொல்லாடலுக்கு இணையாக அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு ‘மோடி தர்பார்’ பேசப்படும். இது இன்னுமொரு மோசமான வரலாற்று நிகழ்வாகப் போகிற நடவடிக்கை! // …

  அன்றாடங்காச்சிகளின் ” அடிவயிற்றில் அடித்துவிட்டு — வங்கிகளில் — ஏ .டி . எம் . களில் புதியா நோட்டுகளை நிரப்பினால் மட்டும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று இவர்கள் நினைப்பது — அரைவேக்காட்டு தனம் என்பதை தவிர வேறொன்றுமில்லை —

  மக்களை வெட்டிப்பயலுக என்று நினைத்து மை வச்சுக்கோ — விட்டால் ” பச்சைக் குத்திக்கோ என்று — புது நிபந்தனைகளை விதித்துக்கொண்டே இருப்பது — எள்ளிநகைக்க கூடிய செயல் — திட்ட விட்டமான — திடமான ஒரு முடிவுடன் செய்யாத செயலை நடைமுறைப் படுத்தியவரை — ” முஹம்மது பின் துக்ளக் ” — என்று அழைக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டது — சரிதானே …. ?

  • தமிழன் சொல்கிறார்:

   செல்வராஜன் சார்… தளத்தில் எழுத விருப்பமில்லை. ஒன் இந்தியா செய்திச் சேனலின் பின்புலம் தெரிந்தால், நீங்கள் அதனைக் கோடிட்டுக் காண்பித்திருக்கமாட்டீர்கள்.

 5. தமிழன் சொல்கிறார்:

  அன்புள்ள கா.மை.சார்,

  உங்கள் Point of Viewவைப் புரிந்துகொள்ளமுடிகிறது. கணிணித் துறைல ஒரு வழக்கம் உண்டு. Security சம்பந்தமான மென்பொருள் செய்யும்போதோ அல்லது hardware device செய்யும்போதோ, professional திருடர்களை ஆலோசகர்களாகக் கொண்டு இதனைச் செய்வார்கள். உதாரணமாக, Fashion storesல துணிகள் நிறையத் திருடுபோவது சகஜம். வாடிக்கையாளர்கள் திருடுவார்கள். இதற்காக ஒரு device துணிகள்ள attach செய்திருப்பார்கள். இதனை காஷியர்தான் எடுப்பார் (ஒர் device மூலமாக). இல்லாட்டா, வாடிக்கையாளர்கள் security gateமூலம் செல்லும்போது அது அலார்ம் அடித்துக் காட்டிக்கொடுத்துவிடும். Professional திருடர்கள், remove செய்யும் deviceஐ எங்கேயாவது பெற்று (அல்லது Online தளத்தில் வாங்கி) கடைக்குள் கொண்டுவந்து, புதுத்துணியிலிருந்து பிறர் அறியாவண்ணம் எடுத்து அதனைக் கடைக்கு வெளியே கொண்டுசென்றுவிடுவார்கள். திருடன் எப்படி எப்படியெல்லாம் யோசிப்பான் என்று தெரிந்துகொள்வதற்காக மென்பொருள், வன்பொருள் தயாரிப்பாளர்கள் இந்தத் திறமையான திருடர்களையே வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். இது வங்கிகளை hack செய்து பணத்தைத் திருடுபவர்களுக்கும் பொருந்தும். இது ஒரு பெரிய சப்ஜெக்ட்.

  நமது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தியவர்கள் திறமைசாலிகளா இல்லையா? எத்தனை மூளைத்திறன் அதை யோசித்து (காணாக்குறைக்கு ஆங்கிலேயன் யோசித்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டும்) பண்படுத்தி சட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். அது குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமா இல்லையா? எத்தனை கோடிப்பேர் (சரி… லட்சக்கணக்கான பணக்காரக் குற்றவாளிகள்) சட்டத்திலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்? அப்போ, குற்றம் சட்டத்தினுடையதா, வக்கீல்களுடையதா, நீதிமன்றத்தினுடையதா அல்லது நம் பாராளுமன்றத்துடையதா? நம் ஒவ்வொருவருக்கும் ஒரு opportunity கொடுத்தால் எல்லாச் சட்டத்தையும் மாற்றும் அளவுக்கு ஆளாளுக்கு ஒரு யோசனை தரமுடியும்.

  இதுபோல்தான், ஒரு Core அறிவாளிகள் team யோசித்து ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள். மனசாட்சி இல்லாத, இந்திய நாட்டுக்கு எதிரான, தேசப்பற்றில்லாத கடைந்தெடுத்த ….யோக்கியர்கள் (அவர்களை வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்று சொல்வது உங்கள் இஷ்டம்), தங்க நகைகளை விற்றோ (பழைய பணத்தைப் பெற்றுக்கொண்டு), அல்லது நேர்மையற்ற குடிமகன்’களைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து பணத்தை மாற்றியோ, அரசு எடுத்த சட்டத்திலிருந்து தப்ப முயல்கின்றனர். அரசு உடனே REACT செய்ய முனைகிறது. இதனை எப்படிவேண்டுமானாலும் விமரிசிக்கலாம். ஆனால் அரசின் நோக்கம் நேர்மையாகத்தான் படுகிறது. மழையினால் சென்னை பாதிக்கப்பட்டபோது, எத்தனை வியாபாரிகள் (சிறு கடைகள் உள்பட) மழையைச் சாக்காக வைத்து விலையைக் கன்னா பின்னா என்று ஏத்தி விற்றனர்? மக்களுக்கு உண்மையாகவே உதவியது யார்? ஆராய்ந்து பார்த்தால், மக்களோடு இருக்கிற சக மக்கள்தான். அவர்கள்தான், சாதி, இன, மத வேற்றுமை பாராது சக இருதயர்களுக்கு உதவினர். அதைத்தான் நாமும் செய்யவேண்டும் என்று நீங்களும் எழுதியிருந்தீர்கள்.

  அரசு ஏன் இப்படி திடும் திடும் என்று புதிது புதிதாக (4000ம் தான் எடுக்க வேண்டும், மை போடப்படும் போன்றவை) அறிவிக்கவேண்டும்? ஏனெனில், சாதாரண மக்களும் OPPORTUNITYஐ வைத்துத் திருடர்களாக ஆகின்றனர் (சிலர்/பலர்). இதனால் நோக்கம் பழுதாகிவிடக்கூடாது என்று புதிய ruleகளைக் கொண்டுவருகின்றனர். அரசு ஒரே நேரத்தில் பல முனைகளில் போராட இயலாது (ஏனெனில் Law Enforecement ஆட்கள் லிமிடட்). இதனால்தான், காவலர்களுக்கும் பல அதிகாரிகளுக்கும் ரூபாய் மாற்றுவதில் மாற்று ஏற்பாடுகள் செய்தனர். அதேபோல் மூத்த குடிமகன்’களுக்கும் ஒரு கவுண்டர் செயல்பட ஏற்பாடு செய்ததாக அறிகிறேன். இத்தனை அழுத்தத்திலும், வங்கி ஊழியர்களில் செயல்பாடு பாராட்டுக்குரியது. அதனையும் செயல்பட விடக்கூடாது என்று வங்கி ஊழியர்களின் சங்கத் தலைவர் அறிவிக்கை விட்டது உங்கள் கவனத்திலிருந்து தப்பியிருக்காது என்று நினைக்கிறேன்.

  தங்க நகை வியாபாரிகளின் நேர்மையற்ற செயலைப் பற்றியும் எழுதலாம். இது பின்னூட்டத்தின் நீளத்தை இன்னும் அதிகப்படுத்திவிடும்.

  நம் நாட்டில் நேர்மையாக இருப்பதைவிட நேர்மையாக இருப்பதுபோல் காண்பிக்கவேண்டும். அல்லது எதனையும் விளம்பரப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நம்பிக்கை வராது. இதனால்தான், பல அரசியல்வாதிகள் நிறைய விளம்பரப்படுத்துகிறார்கள்.

  5 லட்சம் முதல் போட்டு வியாபாரம் செய்பவர், 5 லட்சத்துக்குக் கணக்கு வைத்திருக்கவேண்டும். இந்த நிகழ்வு ஒரு ‘கண் திறப்பு’க்கான நிகழ்வு. இது கார்டு மூலம் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்குமானால், அது இந்தியாவுக்கு நல்லது.

  இதனை ஆதரித்தால் பாஜகாவாகவும், எதிர்த்தால் காங்கிரசாகவும் இருக்கத் தேவையில்லை. This is like a project. ஓட்டைகளைக் கண்டவுடன் அதனை அடைக்க முயல்கிறார்கள். வேறு வழி இல்லை. உபவாசம் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அன்று நிறையப் பசிப்பதுபோல, மக்கள், 500/1000 செல்லாது என்று சொன்னவுடன், 25,000 ரூபாயை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள (மாற்றிய ரூபாயை) நினைக்கிறார்கள். அதனை, மீடியாச் செய்திகளும் ஊக்கப்படுத்துகின்றன. Panicking is the cause of all these problems.

  பின்னூட்டம் இன்னும் நீள்வதால், இத்துடன் நிறுத்துகிறேன்.

 6. Alathur Giri Giri சொல்கிறார்:

  இது நூறு சதம் உண்மை…

  அடையாள அட்டைக்கு ஒரு காகிதம் என்றால்
  விண்ணப்பத்திற்கு ஒரு காகிதம். ஆக, ஒவ்வொரு
  மனிதரும் குறைந்தபட்சம் இரண்டு தாள்களை வீணாக்க
  வேண்டியிருக்கிறது. பணப்பரிமாற்றம் முழுமையாக நடந்து முடிக்கும் போது
  காகிதங்களுக்கு மட்டும் பல கோடி மரங்கள்
  வெட்டப்பட்டிருக்கும். ‘சுவச் பாரத்’ என்று பேசுகிறவர்கள்
  இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.அடையாள
  அட்டைகளை ஸ்கேன் செய்திருந்தால் வேகமும், கூடியிருக்கும்.மரங்களும் தப்பி இருக்கும்..

  xeroxing

 7. selvarajan சொல்கிறார்:

  // மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்
  in ஊழல் – முறைகேடுகள், நுகர்வு கலாச்சாரம், பா.ஜ.க by வினவு, November 15, 2016
  எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000. // http://www.vinavu.com/2016/11/15/janardhan-reddy-daughter-wedding-500-crore-budget/ —— முடிந்தால் ” நண்பர்கள் ” படித்து — ஆச்சர்யம் — அல்லது அவஸ்த்தையுறலாம் …. ” அறிவு ஜீவிகளைப் போல ” பின்புலம் — முன்புலம் என்பதெல்லாம் அறிந்தவர்களும் சொடுக்கி படித்துக் கொள்ளலாம் —

  இன்றுவரை ஒன்றுமே அறியாத — தெரியாத ” பாமரன் தான் ” நான் — ! எனக்கு கொஞ்சம் அறிவு கம்மி என்பது — திரு .கா.மை . அவர்களுக்கும் நன்கு தெரியும் — அதனால் தான் நான் சில — ” கோடிட்டுக் காட்டும் ” காட்டும் பின்னூட்டங்களை — அவருக்கே சொந்தமான ” தளத்தில் ” அனுமதித்து இருக்கிறார் போல தெரிகிறது — !!

  நான் பெரும்பாலும் யாருடைய ” கருத்து . ? பதிவுக்கும் ” — மறுமொழி தெரிவிக்காத — தெரிவிக்க தெரியாத ” ஒரு அரைக்குறை ” என்பதுமட்டுமில்லாது — மறுமொழிக்காக ஏங்குபவனும் இல்லை என்பதும் — என்னை பொறுத்தவரை … உண்மைதானே … ?

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  நண்பரின் முகநூல் பதிவு…
  Shahjahan R
  16 mins · New Delhi ·
  தியாகம் பண்ணுங்க, கடமை ஆத்துங்க. விரல்ல என்ன, மூஞ்சியில கரியை அப்புனாலும் ஏத்துக்குங்கோ…ன்னு கூவுறவங்கல்லாம் இந்தப்பக்கம் வராதீங்கப்பூ….
  வாங்குன கடனை திருப்பிச் செலுத்தாத 63 கம்பேனிகளுடைய 7000 கோடி ரூபாய் நிலுவையை பாவம்… போனாப்போகுதுன்னு தள்ளுபடி செஞ்சிருக்கு ஸ்டேட் பேங்க். இப்ப வெளிய வந்த செய்தி.
  ஆனா நம்மகிட்டே கறுப்புப் பணம் இருக்கான்னு செக் பண்ணுவாங்க. இருக்கிற பணத்தை எல்லாம் பேங்க்ல போடச் சொல்லுவாங்க.
  இவங்க வேற பேர்ல புது கம்பெனி ஆரம்பிப்பாங்க. நாம போடற பணத்தை இவனுகளுக்கு அவங்க மறுபடியும் கடனாக் குடுப்பானுக.
  இவங்க மறுபடியும் பாக்கி வைப்பாங்க.
  அவங்க மறுபடியும் தள்ளுபடி பண்ணுவாங்க.
  நாம செத்து செத்து வெள்ளாடலாம்.
  போங்கடாங்…………………….

  DNA Exclusive: SBI writes off loans of 63 wilful defaulters | Latest News & Updates at Daily News & Analysis
  DNA Exclusive: SBI writes off loans of 63 wilful defaulters – India’s largest public sector bank has dropped more than Rs 7,000 crore, more than 80 per cent of the…
  DNAINDIA.COM

  நாம வேற கருத்து சொன்னால், நம்மை தேசத்துரோகி ரேஞ்சுக்கு எழுதுவாங்க…

 9. gopalasamy சொல்கிறார்:

  Manikandan is a DMK/Congress supporter. Kalignar’s statement is also having valid points. To oppose Modi all should join together.

 10. today.and.me சொல்கிறார்:

  //ஒருவருக்கு நான்காயிரம் ரூபாய்தான் ஒரு நாளைக்கான அளவு என்பதால் PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என்று ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று
  மூன்று நான்கு வங்கிகளில் நின்று பனிரெண்டு அல்லது பதினாறாயிரம் ரூபாயை மாற்றிக் கொள்கிறார்கள். எதற்காகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் செய்கிறார்கள். //

  எதற்காக என்று மேலோட்டமாகப் பார்த்து தெரியாது என்று முடிவுசெய்யக்கூடாது. 8மணிக்கு டிவியில் தோன்றி நள்ளிரவு 12 மணிமுதல் உங்கள் பணம் வெளியிடங்களில் செல்லாது, வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று யாருமே குறிப்பாக கள்ளப்பணம் வைத்திராத மக்கள் தலையில் இடியைப் போடும்போது அவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் கையிருப்பை எவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றத்தான் நினைப்பார்கள்.

  // சிரமப்படுகிறார்கள். ஐசிஐசியை வங்கியில் நின்றிருந்த போது ‘ஒரு மாசம் முன்னாடியே ஐநூறைக் குறைச்சுட்டு ஏ.டி.எம்ல வெறும் நூறு ரூபாயை லோடு பண்ணியிருக்கலாம்ல சார்’ என்று காக்கிச் சட்டையணிந்திருந்த பள்ளிக்கூட ப்யூன் ஒருவர் யோசித்த அளவுக்கு மோடி ஏன் யோசிக்கவில்லை எனத் தோன்றியது. அவர் சொன்னது போல நூறு ரூபாயின் புழக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது.

  இன்றைக்கும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள். மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கியின் மூலமாக நூறு ரூபாய்த் தாள்களை அதிகளவு புழக்கத்தில் விட்டிருக்கலாம். புது நோட்டுக்களை தேவையான அளவு இருப்பு வைத்திருக்கலாம்.//

  நான் அப்படி நினைக்கவில்லை காமைஜி.

  வங்கிகள் மூலம் தேவையான நூறு ருபாயத்தாள்களை விநியோகம் செய்யும்படி குறிப்பிட்ட காலத்திற்கு முன்பிருந்தே (சர்க்குலர் மே 16) வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டும், அது செயலாக்கம் பெறாத நிலையில் மீண்டும் மறுநினைவூட்டல் கடிதம் ஒன்றை ஆர்பிஐ தனது வங்கிகளுக்கு அனுப்பியிருக்கிறது.

  https://scontent.fbom3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/15036409_1742446276079826_1799136852607743447_n.jpg?oh=2f074c191e80037ca4e9ccb15e0aa374&oe=58B98FEA

  நாடுமுழுவதும் நிகழ்ந்த இந்த குறைபாட்டை வேண்டுமென்றே நிகழ்த்தியது யார்? அல்லது ஏன்?

  வேண்டுமென்றே மக்களை அடிப்பதற்றத்தில் வைத்திருப்பதும், நிலைமை மோசமாகும்போது நம்மஊரு டலீவர் போல பொதுமேடையில் ஏறி இந்த இந்திய நாட்டுக்காக என் குடும்பத்தையே தியாகம் செய்திருக்கிறேன் என்று கண்ணீர்மல்க தொண்டை வற்றி ஸ்லோமோஷன் டயலாக் பேசுவதும், இதற்கு இடையிலேயே தனது கட்சிப் பொறுப்பாளர்களைக் கொண்டு மிரட்டும் தொனியில் பேட்டிகொடுப்பதும் ……..

  பார்த்தால்
  தெரியாத்தனமாக செயல்முறைகளைக் கோட்டைவிட்டார்கள் என்று சொல்லமுடியவில்லை.

  வேண்டுமென்றே செய்திருப்பதாக
  பல்லாயிரம் கோடி வராக்கடன்களால் வங்கிகளை திவாலாக்கிய தங்கள் சகாக்களைக் காப்பாற்றவேண்டும், அதே வேளையில் வங்கிகளையும் காப்பாற்றவேண்டும். அதேவேளையில் இந்த இரண்டைப் பற்றியும் பொதுமக்கள் பேசிவிடவும்கூடாது என அவர்கள் மனதை திசைதிருப்பி பதற்றத்தில் வைக்கவும்வேண்டும் என்று திட்டமிட்டே செய்யததாகத் தோன்றுகிறது.

  மற்றபடி இதினாலெல்லாம் கள்ளப்பணம் ஒழியாது, 2000மாக ஒளிக்கப்படும் என்பது இவர்களுக்கு தெரியாதா என்ன?

 11. today.and.me சொல்கிறார்:

  காமைஜி,

  அப்படியே, எத்தனை மாதங்களுக்கு முன்பிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறித்தும்,

  அதில்
  ரிலையன்ஸின் அதிமுக்கிய பதவியில் இருந்தவரும்,
  சுமார் 65 நாட்களுக்கு முன்புதான் ரிசர்வ்வங்கி ஆளுநராக
  ஆளும் மோடிசர்க்காரால் நியமிக்கப்பட்ட உர்ஜித்பட்டேலின் கையெழுத்து அச்சானது எப்படி என்றும்,

  2000ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்போவதுபற்றி அம்பானிகளுக்கும் அடானிகளுக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பே இல்லை என்பது பற்றியும்

  மணிகண்டனாவது நீங்களாவது
  கேள்விஎழுப்பியிருந்தால் தேவலை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   தவறு தான்.
   ஏற்கெனவே எந்த பாஜக அறிவுஜீவி என் மீது
   பாயப்போகிறாரோ என்று பயந்து கொண்டே
   எழுதுவதால், சில முக்கிய பாயிண்டுகளை
   மறந்து விடுகிறேன்…. 🙂 🙂

   நீங்கள் எழுப்புவது மிக முக்கியத்துவம் பொருந்திய
   ஒரு கேள்வி….
   இது அகில இந்திய அளவில் எழுப்பப்படும் என்றே
   நினைக்கிறேன்….

   பார்ப்போம் – என்ன விளக்கம் தருகிறார்கள் என்று.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. today.and.me சொல்கிறார்:

  எந்தவொரு தனிமனிதனும், 2000ரூபாய் நோட்டுகளை வங்கியிலிருந்து எடுக்க அதிகபட்ச வரம்பு 24,000 என்று நடைமுறையில் இருக்கும்போது,

  லஞ்சமாக
  2,90,000 ரூபாய்
  அதுவும்
  புதிய இரண்டாயிரம் நோட்டுகளாக

  எங்கே?

  நம்ப குஜராத்தில்தான்..

  http://www.huffingtonpost.in/2016/11/16/bribe-of-2-9-lakh-in-new-2000-notes-uncovered-in-gujarat-repor/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப டுடேஅண்ட்மீ,

   குஜராத் எப்போதும் “எதிலும்” முதன்மை
   வகிக்கும் போலும்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஒரு வங்கி மேனேஜரின் துணை இல்லாமல்
    இது நடந்திருக்காது.

    புலனாய்வு போலீஸ் நினைத்தால், ஒரு மணி நேரத்தில்
    எந்த வங்கியில் நடந்தது என்பதை கண்டுபிடித்து விடலாம்.

    கருப்புப் பண முதலைகள், வங்கி மேனேஜர்களை வளைக்க
    வலை வீசுவார்கள். பாவம், பலவீனமானவர்கள்
    சிக்கிக் கொள்வார்கள்.
    இந்த பலவீனம் கேன்சரைப் போல் வேகமாக பரவி விடக்கூடிய
    ஆபத்து இருக்கிறது. அரசு விரைந்து செயல்பட
    வேண்டும்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 13. Ponnivalavan சொல்கிறார்:

  From 08.11.2016, my mind is restless. The PM had announced the ban on 500 & 1000 rupees notes. A wise move without full preparedness and under estimate of hardship to be faced by ordinary people.

  But the corrupt people already started to accumulate their black money in the form of new notes using 10 or more ways to change their old notes. Some people making money in doing exchange business for others.

  For the past 11 days I am thinking over alternatives to remove the sufferings of the poor people who could not change their old currency that too in small values. One plan emerged out from my mind which is given below.

  I strongly hope that it would bail out to considerable extent. I am not an economic advisor or banking person to influence the top people. I am posting this on the walls of some of my FB contacts who have very good contacts so that it may get a glimpse of any one of persons who are at decision making level.

  I will be happy even some aspect of this is followed/implemented…

  BAIL OUT BAN – PLAN (BOBP)

  The grave situation as a result of banning of Rs.500 and Rs.1000 notes on 08.11.2016 night, can be tackled by taking immediate following steps:

  1. Relax the ban on Rs.500 notes:
  The recent series notes of 500 rupees, bearing signature of Raghuram Rajan and bearing year of print as 2015, can be allowed for circulation by lifting the ban on such notes only immediately.

  2. Separate assessment scheme ( you may call it VDS II ) for deposits of old notes (banned notes) from 09.11.2016 to 31.12.2016:

  The persons who deposit such notes can be classified as:
  A. Old Assessee (who is being assessed or filed IT returns for the Asst. Year 2016-17 and or previous Asst. Years.
  B. New Assessee who obtained/applied Pan Card on or after 01.04.2016 but before 09.11.2016 and yet to file any IT Return.
  C. Non Assessee who does not fall within above two category and who do not have any bank account.

  3. For A type Old Assessees:
  They can deposit upto 1.00 crore of cash of banned currencies in any one of the banks in which they have their regular banking transactions.

  Tax will be levied on the deposit amount as follows:
  • On First Rs.1000000/- tax at 10%
  • On the Next Rs.1000000/- tax at 20%
  • On the Next Rs.1000000/- tax at 30%
  • On the Next Rs.7000000/- tax at 40%
  • On the Rest, tax at 50%
  • No Cess, No Surcharge and no other charge on tax.

  For B type New Assessees:
  They can deposit upto 1.00 crore of cash of banned currencies in any of the banks in which they have accounts. Important point is that they have to submit their Pan Card Application form or Acknowledgment Copy of Pan Card applied on or after 01.04.2016 but before 09.11.2016 along with the deposit.

  Tax will be levied on the deposit amount as follows:
  • On the First Rs.500000/- tax at 10%
  • On the Next Rs.500000/- tax at 20%
  • On the Next Rs.500000/- tax at 30%
  • On the Next Rs.8500000/- tax at 40%
  • On the Rest, tax at 50%
  • No Cess, No Surcharge and no other charge on tax.

  For C type Non Assessees:
  They can deposit upto 1.00 crore of cash of banned currencies in any of the bank in which they have accounts opened on or before 08.11.2016. If they do not have any bank account, then they have to open new bank account only in any of the Nationalised Banks and can deposit. Important point is that they have to submit their Pan Card Application form or Acknowledgment Copy of Pan Card applied on or after 09.11.2016 along with the deposit.

  Tax will be levied on the deposit amount as follows:
  • On the First Rs.250000/- tax at 10%
  • On the Next Rs.250000/- tax at 20%
  • On the Next Rs.250000/- tax at 30%
  • On the Next Rs.250000/- tax at 40%
  • On the Rest, tax at 50%
  • No Cess, No Surcharge and no other charge on tax.

  4. For deposits above 1.00 crore, all the A, B and C type of persons should deposit their banned currencies in either State Bank of India or in Reserve Bank of India only.

  5. For C type of Non Assessees, their Pan Allotment is to be completed within 7 days and should be conveyed to the bank where they had deposited their banned currency notes and to the persons who applied.

  6. This VDS II Scheme Assessment is different and one time only and processing will be done between 01.01.2017 and 31.03.2017 by the respective Assessment Officers of IT department with the particulars received from the Banks with respect to amount, Assessee type and Pan Particulars. And the Assessment Orders should be completed on or before 30.06.2017.

  7. NO QUESTIONS ASKED.

  8. Regular Assessment will be done for other regular business activities as per the existing IT Provisions. In that regular assessment, this deposit of banned currency will not be included for tax purpose. But can be shown as asset in the IT Return. Income arising out of such assets will be taxable as and when it is earned subject to the respective provision of the Income Tax Act.

  9. Disputes arising out of depositing some others currency in one’s own bank account or depositing own currency in some others account will not be entertained in the court of law under any provisions of any act for these deposits under VDS II Scheme. The Point is that NO BODY SHOULD DEPOSIT THEIR OWN BANNED CURRENCY INTO SOME OTHERS ACCOUNT AND OTHERS BANNED CURRENCY INTO ONES OWN ACCOUNT.

  10. Withdrawal Limit:

  • For A type Old Assessees, new currency equivalent to one fourth of the banned currency they had deposited into their bank account subject to maximum of Rs.30000/- per week. This Rs.30000/- per week limit applies to all other bank account holders who did not deposit any banned currency during 09.11.2016 to 31.12.2016 but have sufficient amount in excess of Rs.30000/- in their bank accounts on the end of 08.11.2016 or who deposit unbanned currencies after 08.11.2016.

  • For B type New Assessees, new currency equivalent to one fourth of the banned currency they had deposited into their bank account subject to maximum of Rs.15000/- per week. This Rs.15000/- per week limit applies to all other bank account holders who did not deposit any banned currency during 09.11.2016 to 31.12.2016 but have sufficient amount in excess of Rs.15000/- in their bank accounts on the end of 08.11.2016 or who deposit unbanned currencies after 08.11.2016.

  • For C type New Assessees, new currency equivalent to one fourth of the banned currency they had deposited into their bank account subject to maximum of Rs.7500/- per week. This Rs.7500/- per week limit applies to all other bank account holders who did not deposit any banned currency during 09.11.2016 to 31.12.2016 but have sufficient amount in excess of Rs.7500/- in their bank accounts on the end of 08.11.2016 or who deposit unbanned currencies after 08.11.2016.

  11. Exchange of Notes:

  Only to those who do not have bank accounts.
  • Rs.5000/- per person per week on showing proof of Aadhaar Card.
  • Rs.50000/- for farmers on showing proof of cultivable land holding.
  • Rs.250000/- for wedding.
  • Rs.100000/- for funeral expenses.
  And the exchange should be done only at a bank very near to the persons living as evidenced by Aadhaar Card. If Aadhaar Card is not available then proof of Ration Card or Voter ID can be taken.

  12. Allowing old notes: (upto 30.11.2016)
  • Only for payment of local body taxes, gas bills
  • At Cremation ground
  • Loan repayments to all type of bank loans including loans in co-operative societies.
  • Petrol Bunks upto 30.11.2016

  13. Out of the net proceeds after tax and limited withdrawals during 09.11.2016 to 31.12.2016, 50% of the amount has to be invested in any of the following with lock-in period of 2 years:
  • PPF of ones own account or in dependent account.
  • NSC
  • Govt. issued Bonds
  • Govt. authorized Gold Fund

  Balance 50% he can use as he likes.

  14. Incentives for the Bank Staff
  • 2% of the tax collection out of this VDS II scheme is to be set aside for payment of incentives to the bank staff without whose help the process could not have been done.
  • Out of this, 50% is to be divided among the cashiers and assistant to cashiers who handled the counters and exchanges. And the balance 50% is to be divided by the other staff members of the banks and departmental staff involved in this operation. This incentive is subject to minimum of one month’s salary and maximum of 3 months’ salary.

  15. Compensation of Rs.15.00 lakhs is to be given to the legal heir(s) of the persons who lost their life during exchange of new notes for old banned currencies.

  ……………….prepared by (Mr.) Aruna Ponnivalavan, Chennai
  eMail Id: anbudan@gmail.com ; http://www.facebook.com/anthaadhi

  I am 54 years old; B.Com. Graduate. CA not completed. Had audit and accounting experiences.

  For every point i have given out in the plan, i have a valid reason and logic…

  If you like it, please share….

  (i started preparing this by 11.00 pm on 19.11.2016 and completed by 04.25 am on 20.11.2016 and posted now)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.