பாஜகவைத் தவிர – அனைத்து கட்சிகளின் பண பலமும் அழிக்கப்பட்டதா…?

..

..

நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன்
பின்னால் அரசாங்கம் சொல்லி இருக்கும் காரணங்கள்
மட்டும் தான் உள்ளனவா அல்லது
வெளியே சொல்லாத, சொல்ல முடியாத –
வேறு காரணங்கள் எதாவது உண்டா….?

சொல்லி இருக்கும் காரணங்களை விட சொல்லாத
காரணம் தான் அதி முக்கியமானது என்பது நிஜமா…?

பாஜக, தான் வலுவாக இல்லாத,
தான் ஆட்சியை பிடிக்க இயலாத மாநிலங்களில் –
செல்வாக்கான கட்சிகளின் பணபலத்தை
உடைத்தெரிவதன் மூலம்
ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை உருவாக்க
திட்டமிட்டிருப்பது உண்மையா…?

பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் வசதியை
பயன்படுத்திக் கொண்டு, மற்ற கட்சிகளின் பணபலத்தை

உடைத்தெரிவதற்காகவே கொண்டு வரப்பட்ட
திட்டமா…?

இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியுமா …???

அரசியல் கட்சிகளின் நிதி நிலை குறித்து சட்டங்கள்
என்ன கூறுகின்றன….?

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட,
அகில இந்திய அளவிலான அரசியல் கட்சிகளின்
எண்ணிக்கை – 6
மாநில கட்சிகளின் எண்ணிக்கை- 46
அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை – 1112

வருமானவரி சட்டம் பிரிவு 13-A-ன் கீழ்,
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்,
வருமான வரியிலிருந்து
விலக்கு பெறுகின்றன.

ஆனால், இந்த வரிவிலக்கு ஒரு விதிக்குட்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானம் குறித்த
விவரங்களை தெரிவிக்கும் Income Tax Return-ஐ,
வருமான வரி இலாகாவிற்கு அளிக்கும் கட்சிகள் மட்டுமே

இந்த வரி விலக்கு சலுகையை பெற முடியும்.

( ஆனால், சில கட்சிகள் இத்தகைய Tax Return-ஐ ஒழுங்காக
சமர்ப்பிப்பது இல்லை … ஆனாலும் இவற்றின் மீது
எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக
தெரியவில்லை. )

அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை –
உறுப்பினர் சந்தா, சொத்துக்களின் மீதான வருமானம்
என்று பலவகைகளில் பெற்றாலும், பெரும்பாலும்,
வெளியாரின் நன்கொடை மூலம் பெறுகின்றன.

சட்டப்படி, 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடையாக
பெறப்படும்போது, நன்கொடை கொடுப்பவர் பற்றிய
விவரங்களும் பதிவு செய்யப்பட, அறிவிக்கப்பட வேண்டும்.

20,000-க்கு குறைவாக பெறப்படும் நன்கொடைகளுக்கான
எந்தவித விவரங்களையும் சட்டங்கள் கோருவதில்லை.
( அனைத்து கட்சிகளுக்கும் இந்த விதி சாதகமாக
இருப்பதால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
இந்த விதியை மாற்ற முயற்சி எடுப்பதில்லை / எடுக்க
உடன்படுவதில்லை )

ஆனால், அத்தனை கட்சிகளுமே சொல்லி வைத்தாற்போல்,
தங்களது வருமானத்தில் 75 சதவீதத்திற்கு மேல்,
இந்த ( 20,000-க்கு உட்பட்ட சிறு நன்கொடைகள் )
பிரிவின் கீழ் தான் காட்டுகின்றன.
இந்த கிராப் அதை விளக்கும்…..

political-funds

இது ஒருபக்கம் இருக்கட்டும்.

கணக்கில் காட்டப்படும் இந்த வருமானம் மட்டுமே
தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகளால் செய்யப்படும் /
செய்யப்பட வேண்டிய செலவுகளுக்கு போதுமானதா…?

ஒரு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ( தமிழ்நாட்டை
உதாரணமாக எடுத்துக் கொண்டால் ) முக்கிய கட்சிகள்

ஒவ்வொன்றினாலும், குறைந்த பட்சம் சுமார் 500-600 கோடி
ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன.

இந்த பணம், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட
வகைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை…..

ஓட்டுக்களை கவர, வோட்டர்களை கவர்ந்திழுக்க …..

உழைக்கும் கட்சித்தொண்டர்களை கவனித்துக் கொள்ள ….

பலவகை சன்மானங்கள் தரப்பட ….!!!

என்று, எந்த கணக்குக்கும் உட்படுத்தப்படாத வகையில்
செலவழிக்கப்படுகின்றது. இந்த செலவு முழுவதும்
கணக்கில் காட்டாமல், கையில் வைத்துக் கொண்டுள்ள
ரொக்கப்பணத்திலிருந்தே ஈடு செய்யப்படுகிறது.

எனவே, ஒவ்வொரு முக்கியமான
அகில இந்திய கட்சியிலும்,

முக்கியமான மாநில கட்சியிலும்,

கணக்கில் வராத ரொக்கப்பணம் கோடிக்கணக்கில்
இருக்கவே செய்கிறது.
அது பாஜக, காங்கிரசானாலும் சரி,
திமுக, அதிமுகவானாலும் சரி….
சமாஜ்வாதி, பஹுஜன் சமாஜ்வாதியானாலும் சரி.

அடுத்த சில மாதங்களுக்குள் 5 மாநிலங்களில்
சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கின்றன.
இந்த தேர்தல்களை சந்திக்க, கட்சிகளுக்கு பணபலம்
மிக மிக அவசியம்….

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில்
அடுத்த 4 மாதங்களில் வரும் சட்டமன்ற தேர்தலில்
முக்கிய கட்சிகளான S.P., B.S.P.,
Congress, B.J.P. ஆகிய 4 கட்சிகளுமே பணத்தை
வாரி இறைக்க வேண்டியிருக்கும்.

எனவே, அனைத்து கட்சிகளும்
பெருத்த தொகையை ரொக்கமாக கையில்
வைத்திருக்கின்றன.

இவை அனைத்தும் 500-1000
நோட்டுகளாகவே இருக்கும் என்பதை தனியே சொல்ல
வேண்டியதில்லையே…

பாஜக அரசு 500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லா
நோட்டுகளாக அறிவித்ததன் மூலம் இந்த கட்சிகள்
அனைத்தும் – ( தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய
கட்சிகளும் கூடத்தான் …) –

தங்களது பணபலத்தை மொத்தமாக
பறிகொடுத்திருக்கும். ( 500-1000 நோட்டாக இல்லாத
சொத்துக்கள் மட்டும் தப்பிக்கும்….)

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளவா
பாஜகவின் அரசு இந்த நடவடிக்கைகளை
எடுத்திருக்கும்…..? அதுவும் தேர்தல் நெருங்கும்போது…?

எனவே, நாடு முழுவதுமுள்ள பாஜகவின் பணபலத்தை
பத்திரப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருக்கும் என்பதை யாரும் யூகிக்கலாம்.
அமீத் ஷாவிற்கு தெரியாத அரசு ரகசியமா….?
அதுவும் இந்த திட்டத்தின் முக்கிய குறிகோள்களில்
எதிர்க்கட்சிகளை முடமாக்குவதும் ஒன்று என்னும்போது…?

மத்திய அரசு இதுவரை பல புத்திசாலிகளான,
பிரதமர்களை பெற்றிருக்கிறது….

ஆனால் தந்திரம், நரித்தனம்
என்பதெல்லாம்
புத்திசாலித்தனத்திலிருந்து
மாறுபட்டவை அல்லவா…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to பாஜகவைத் தவிர – அனைத்து கட்சிகளின் பண பலமும் அழிக்கப்பட்டதா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  Not a convincing article. எல்லோரும் தன் கட்சி (அரசியல் கட்சிகளின்) நலன் மட்டும் பார்ப்பார்களேயானால் யார் நாட்டைப்பற்றிக் கவலைப்படுவது? எந்த முடிவும் சாதக பாதகங்களைக் கொண்டது. பிரதமர் அவர்கள் துணிந்து ஒன்றைச் செய்திருக்கிறார். அதனால் சாதாரண, சட்டம் பற்றிய தெளிவோ அல்லது அதை மதிக்கும் எண்ணமோ இல்லாத மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தன் வருமானத்துக்கும் பணத்துக்கும் கணக்குக் கட்டவேண்டியது குடிமகனின் கடமை. போலீஸ் விசாரணையிலோ, தினப்படி பயணங்களிலோ, கட்சி ஊர்வலங்களினாலோ, ஹர்த்தாலினாலோ, even விழாச்சத்தங்களினாலோ, தீபாவளி வெடிச்சத்தத்தினாலோ பலரும் பாதிப்படையத்தான் செய்கிறார்கள். “பலருக்கு நன்மை” “சிலருக்குத் தொல்லை” என்பதையும், Long Term Benefit என்பதையும்தான் கணக்கில் வைக்கவேண்டும்.

  அரசியலில் இருப்பவர்கள் உள்நோக்கம் இல்லாமல் செய்த, தனக்கு ஆதாயமில்லாமல் செய்த ஒன்றையாவது பட்டியலிடுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   // Not a convincing article-//
   என்று சொல்லி விட்டு,

   //அரசியலில் இருப்பவர்கள்
   உள்நோக்கம் இல்லாமல் செய்த,
   தனக்கு ஆதாயமில்லாமல் செய்த
   ஒன்றையாவது பட்டியலிடுங்கள்.//

   என்று முடித்தால், என்ன அர்த்தம்….?

   – இதுவும் உள்நோக்கத்துடன்,
   தனக்கு ஆதாயத்துடன் செய்யப்பட்ட
   ஒன்று –

   என்று இந்த இடுகை சொல்வதை
   ஏற்பதாகத்தானே அர்த்தம்….?

   எப்படியும் உண்மை சந்தில் புகுந்து
   வெளிவந்து விடுகிறது பாருங்கள்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    இல்லை கா.மை சார். எந்த முடிவிலும், இதுவும் ஒரு aspect. உங்கள் கட்டுரை, ஒரேயடியாக மோடி அவர்களின், பா.ஜ.கவின் சுய’நலத்துக்காக இந்த முடிவு (அதாவது மற்ற கட்சிகளின் பணத்தை பணாலாக்க) எடுக்கப்பட்டது என்பதுபோல் தொனிக்கிறது.

    • B.V.Subramanian சொல்கிறார்:

     தமிழன் சார்,

     பஞ்சாப், உத்திர பிரதேச தேர்தல்
     கண்ணோட்டத்தோடு இந்த முடிவுகள்
     எடுக்கப்பட்டிருக்கலாம் என்று
     டெல்லி செய்தி சேனல்களே சொல்கின்றனவே.

     எனவெ, முற்றிலும் சுயநலம் காரணமாக இருக்காவிட்டாலும்,
     தேர்தலும் ஒரு காரணம், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதும்
     ஒரு காரணம் என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப தமிழன்,

     அந்த தொனி கட்டுரையில் இருக்கத்தான் செய்கிறது.
     நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன்.

     ஆனால், அந்த தொனி, எண்ணம் – ஏன் வந்தது…?
     ஒருவரைப்பற்றி “பாவி” என்றோ, “அப்பாவி” என்றோ
     நமக்கு கருத்து உருவாவது எப்படி…?
     அவர்களது முந்தைய சரித்திரத்தை,
     பழைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது தானே…?

     தேர்தலில் வெற்றி என்று வரும்போது,
     பாஜக எந்த அளவிற்கும் போவதை நிறைய
     பார்த்தாகி விட்டது.

     டெல்லி சட்டமன்ற தேர்தலில்,
     பீஹார் சட்டமன்ற தேர்தலில்,
     தான் வகிப்பது “பிரதமர்” பதவி என்பதை
     பற்றி கூட கவலைப்படாமல் எந்த அளவிற்கு,
     கீழிறங்கி பேசினார்…?
     எவ்வளவு கேவலமான வார்த்தைகளை,
     ஒரு பிரதமர், ஒரு மாநில முதல்வரைப்பற்றி
     பேசக்கூடாத விஷயங்களை எல்லாம் பேசினார்…?
     பார்த்தோமே…. அதுதான் இந்த எண்ணம் வந்ததற்கு காரணம்..!

     பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் ஒழிய வேண்டும்,
     இவர் பிரதமராக வரவேண்டும் என்று எழுதியவன் தான் நானும்.

     என் எண்ணங்கள் மாறுவதற்கு முழுக்க முழுக்க –
     அவ்வப்போது நிகழும் செயல்களே காரணம்.

     இப்போது நான் எழுதுவதும் மாறுதலுக்கு
     உட்பட்டது தான். அவ்வப்போது ஏற்படும்
     நிகழ்வுகளுக்கு ஏற்ப என் மனதில் தோன்றுவதை
     இங்கு எழுதி வருகிறேன். அவ்வளவே…!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • Srini சொல்கிறார்:

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1648881
    it all depends on which party color lens we all are wearing. I am including myself also.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஸ்ரீநி,

     // it all depends on which party color lens
     we all are wearing//

     நீங்கள் கூறுவதை ஏற்கிறேன்.

     சிலர் நிலைமைக்கேற்ப, சூழல் மாறுவதற்கு ஏற்ப
     கண்ணாடிகளை மாற்றிக் கொள்கிறார்கள்.

     ஆனால் பலர் வெளிச்சத்தில் போடும்
     அதே கருப்புக் கண்ணாடியைத்தான்,
     இருட்டிலும் கூட போட்டுக் கொள்வேன்
     என்று அடம் பிடிக்கிறார்கள் என்ன செய்வது…?

     ( இதில் நானும் அடங்குவேன்….. 🙂 🙂 )

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  All the parties are going to be affected by it including the BJP if at all–When there is no limit to deposit the demonetised notes why are the parties making such a noise about it –They can always draw the money they want and spend it in the legitimate manner —- Will any ruling party do anything that will affect its own finances during elections —These kind of accusations are to be expected —-
  One of the three aims of this demonetisation , which I think is most important , is cutting terror funding and attacking fake currency — Fake currency is no currency at all —

 3. Bagawan சொல்கிறார்:

  Those who support BJP and its governments in demonitization of Rs 500 & 1000 currency notes with out proper plan of action and by making common man life miserable in the name of eradicating black money, I am asking 1. Why the BJP government not taken any action to bring all the political parties under RTI and its donations transparent, 2.what action the government taken for recovering NPA of more than 6 lakh crores defrauded from the banks and why the government is against disclosing of the Major defaulters name. 3. What guarantee the government give to common man that deposited amount is not defrauded again?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாஜக நண்பர்கள் யாராவது,
   மேலே, நண்பர் பகவான் கேட்டிருக்கும்
   கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம்
   அளித்தால் தேவலை….!!!

   1. Why the BJP government not taken any action
   to bring all the political parties under RTI and
   its donations transparent,

   2.what action the government taken for recovering
   NPA of more than 6 lakh crores defrauded from
   the banks and why the government is against
   disclosing of the Major defaulters name.

   -வீம்புக்காக எதையாவது எழுதாமல்,
   sincere -ஆக, CONVINCING -ஆக
   எழுத வேண்டும் என்று
   கேட்டுக் கொள்கிறேன்….

   யாராலும் முடியவில்லை என்றால்
   பரவாயில்லை. “பகவான்” கோபித்துக் கொள்ள
   மாட்டார்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Senthil சொல்கிறார்:

    you are doing all the nonsense
    opposite to us just by writtings ….
    We have limit to our patience…..

   • தமிழன் சொல்கிறார்:

    ‘நாம் அதிபர் முறைத் தேர்தலில் இல்லை. பாராளுமன்ற கட்சி அங்கத்தினர்கள் கூடித் தேர்ந்தெடுக்கும் பிரதமர்தான் ‘நம்மை 5 வருடம் ஆளமுடியும். அதுக்கே எவ்வளவு சிரமங்கள் என்பது தெரியும்தானே (சரண்சிங், விபி சிங், சந்திரசேகர் இன்னும் பலர்). எம்.பிக்கள் எப்படி அந்த இடங்களுக்கு வருகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இத்தகைய அரசியலில், மாண்புமிகுக்களும், அவர்களை அந்த இடத்துக்கு வருவதற்கு வழி செய்யும் தொழில் அதிபர்களும் பாதிப்படைவதான காரியத்தை எடுத்தோம் கவிழ்தோம் என்று செய்ய இயலாது. இந்திராகாந்தி, அரசு தந்த உறுதிமொழிக்கு மாறாக மன்னர் மானியங்களை ஒழித்தார் (சரி தவறு என்பதல்ல. அரசு தந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதே போன்றுதான் காஷ்மீரிலும்) செய்வதற்கான விஷயங்கள் நிறைய. சிலவற்றை (பலவற்றை) ஆசை இருந்தும், நியாயமாக இருந்தும் செய்தல் இயலாது. என்னைக்கேட்டால் RTI ராணுவ மற்றும் அரசு purchaseகளுக்கு முதலில் தரவேண்டும். எதையும் மறைக்கக்கூடாது. ஆனால் செயல்முறையில் இது சாத்தியமில்லை. அறக்கட்டளைகள் முழுவதுமாக அரசுடமையாக்கவேண்டும். ஒருவன் பொருளாதாரத் தவறு செய்தால், அவன் குடும்பம் முழுவதும் சிறைப்படுத்தப்படவேண்டும், குற்றவாளிகளாக இனம் காட்டப்படவேண்டும். ஏனெனில், குடும்பம்தான் அதனை அனுபவிக்கிறது (மல்ல்யாவின் பையன் தீபிகாவோடு போட்ட ஐபில் ஆட்டம் நினைவுக்கு வருகிறதா? எப்படி அந்தப் பணம் வந்தது? இன்றைக்கு மல்ல்யாவின் குடும்பத்தைச் சிறையில் வைத்தால் உடனே அவர இந்தியா வருவார்). Donationக்குக் கணக்கு காண்பிக்க எதற்கு லிமிட்? 1 ரூபாய் கொடுத்தாலும் கொடுத்தவரின் அடையாளம் பதியப்படவேண்டும் என்று சட்டம் கொண்டுவரலாமே. RTIஐக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றனர் (இதை உபயோகப்படுத்தி கட்சியின் ரகசியங்கள் வெளியாகிவிடும் என்று). இதே காரணத்தால் அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றனர் (மக்கள் ஆதரவில்லாத கட்சிகளைத் தவிர). Disclosing defaulters name – இதற்கு சட்டத்தின் வடிவில் problem இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது பிரதமர் கட்சிக்காரர்களும் காரணமாக இருக்க முடியும்.

    மாற்றத்திற்கான வழி வகுப்போம், யுத்தம் செய்யமாட்டோம் என்று சொன்ன ஒபாமா அவர்களே, ஓரளவு மென்மையாகத்தான் பணிசெய்ய நேரிட்டது. நியாயம் செய்த லிங்கனுக்கு எவ்வளவு எதிர்ப்பு நேரிட்டது என்பதும் நமக்குத் தெரியும். அவர் அதை எண்ணிக்கலங்காததால்தான் வரலாற்றில் நிலைபெற்று நிற்கிறார். இப்போது டிரம்ப் அவர்கள் எடுத்துள்ள Strong நிலைப்பாடுகளும் மென்மையாகிவிடும் என்றே நினைக்கிறேன் (அதில் நியாயங்கள் இருந்தாலும், நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும்)

    ஒவ்வொன்றாக இந்திய அரசு செய்யும் என்று நம்புவோம். இவைகள் நாட்டுக்கு நல்லது என்பது எல்லாக் கட்சிகளுக்கும் தெரியும்.

   • Vicky சொல்கிறார்:

    ஒரு விஷயம் செய்யும்போது ஏன் இன்னும் இதெல்லாம் செய்யலன்னு கேட்டுட்டே இருக்கலாமே. இந்த கேள்வி இதில் எதை செய்யும்போதும் கேட்கலாம்தானே?

 4. Senthil சொல்கிறார்:

  Keep quite…

 5. Senthil சொல்கிறார்:

  You anti -national

 6. arun சொல்கிறார்:

  மோடி சொல்ராரு ஒரு இன்டர்வியூல இது 10 மாதம் முன்பே போட்ட பிளேன்னு அப்ப நீங்களே புரிஞ்சுகோங்க,,,

 7. Senthiiiii சொல்கிறார்:

  this km,son of prostitute , ……
  …..

  never accept this km, who is anti national , spreading routers against our central government…

 8. தமிழன் சொல்கிறார்:

  சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள். ‘Anti National’ என்ற பின்னூட்டமே தவறானது. அரசு செய்யும் எதையும் அதன் சாதக பாதகங்களை விவரித்து எழுதுவதோ அல்லது பாதகங்களையே சுட்டிக் காண்பிப்பதோ ‘தேசவிரோதம்’ அல்ல. ஒரே கருத்து, வட கொரியா போன்ற நாட்டில்தான் சாத்தியம். நமக்கு கருத்து ஜன’நாயகம் முக்கியம்.

  நாளை, அரசு, இந்தியாவின் தேவைக்காக ஒவ்வொருவர் வங்கி சேமிப்பிலிருந்து 5000 ரூபாயை எடுத்துக்கொள்கிறது என்று சட்டம் போட்டால், நான் பாதிக்கப்பட்டால் எதிர்க் குரல் எழுப்பத்தான் செய்வேன். அதற்காக நான் தேசவிரோதியாகிவிடுவேனா? 5 கோடி வைத்திருப்பவர், அதனை ஆதரிக்கவும் செய்யலாம். அதனால் அவர் தேசப்பற்றாளராகிவிடுவாரா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.