குஜராத் சி.எம். 25 கோடி – பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான புகார்….

17tvkz_prashand_bh_1459380f

முதலிலேயே சொல்லி விடுகிறேன்….
பாஜக நண்பர்கள் என் மீது பாயக்கூடாது.
இந்த இடுகையில் ஒரு கருத்து கூட என்னுடையதாக
இல்லை. செய்தித்தளங்களில் நேற்றும் இன்றும் வெளியான
சில செய்திகளை நான் இங்கு தொகுத்து மட்டுமே
தருகிறேன்…..

நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்டில்)
மூத்த வழக்குரைஞரும், லஞ்ச ஊழல் சம்பந்தமாக பல
முக்கிய வழக்குகளைத் தொடுத்திருப்பவருமான
திரு.பிரசாந்த் பூஷண் அவர்கள் –

வருமான வரி இலாகா மற்றும் சிபிஐ நடத்திய ரெய்டில் – சில
மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல அரசியல்
தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் தொடர்பாக
கிடைத்த பல ஆவணங்களை அப்படியே போர்த்தி மூடி,
மேல் நடவடிக்கை இல்லாமல் செய்து விட்டதாகவும்,

அந்த ஆவணங்களை வெளிகொணர்ந்து, அவற்றின் மேல்
நடவடிக்கைகளை எடுக்க, Central Board of Direct Taxes மற்றும்
Central Vigilance Commission ஆகியவற்றிற்கு சுப்ரீம் கோர்ட்
உத்திரவிட வேண்டுமென்றும் கோரி ஒரு வழக்கு
தொடர்ந்திருக்கிறார்.

இதே செய்தியை டெல்லி சட்டமன்றத்தில், நேற்றைய தினம்
டெல்லி முதல்வர் திரு.அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து
பேசி இருக்கிறார்….

வலைத்தல நண்பர்கள் சுலபமாக புரிந்துகொள்ள வசதியாக,
டெல்லி சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய பத்திரிகைச் செய்தியை
நான் அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

—————————————————————–

டெல்லி சட்டப்பேரவையில் இன்று ( 15/11/2016 ) முதல்வர்
அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி
மீது லஞ்ச-ஊழல் புகார் எழுப்பினார்.

அதாவது வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆன பிரசாந்த்
பூஷன், மத்திய நேரடி வரி ஆணையத்திற்கு அளித்த புகாரில்,
இரண்டு மிகப்பெரிய தொழிலதிபர் முதலைகளிடமிருந்து
வருமான வரித்துறையினர் பெற்ற ஆவணங்களின்படி பிரபல
அரசியல் தலைவர்களுக்கு பெரிய அளவில் தொகை
கொடுத்திருப்பது தெரியவந்திருப்பதாக கூறியிருந்தார், இதனை
தி இந்து (ஆங்கிலம்) செய்தியாக வெளியிட்ட பிறகு அரவிந்த்
கேஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆதித்ய பிர்லா நிர்வாகக் கார்ப்பரேஷன் தனியார் நிறுவனத்தின்
ஷுபேந்து அமிதாப் வருமான வரித்துறைக்கு அளித்துள்ள
அறிக்கையை மேற்கோள் காட்டி பேசினார் அரவிந்த்
கேஜ்ரிவால்.

கடந்த அக்டோபர் 2013-ல் நிலக்கரி சுரங்க முறைகேட்டு ஊழல்
விசாரணையில் ஆதித்ய பிர்லா குழுமத்தை சிபிஐ ரெய்டு
செய்த பிறகு இந்த உண்மைகள் தெரியவந்ததாக கேஜ்ரிவால்
குறிப்பிட்டார். இந்த ரெய்டின் போது ஆதித்ய பிர்லா
குழுமத்தில் பெரிய அளவில் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இது
வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

“நவம்பர் 16, 2012 தேதியிட்ட குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது
அதில் குஜராத் முதல்வர் ரூ.25 கோடி என்று
குறிப்பிடப்பட்டிருந்தது, எனவே குஜராத் முதல்வருக்கு
அப்போது ரூ.25 கோடி அளிக்கப்பட்டது இதன் மூலம்
தெரியவந்துள்ளது. இது குறித்து வருமான
வரித்துறையினரிடம் ஷுபேந்து அமிதாப் தெரிவிக்கும் போது
இதெல்லாம் சொந்தக் குறிப்புகளே என்று கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினர் ஷுபேந்து அமிதாப்பை கேள்வி
கேட்கும் போது, இவரோ அல்லது நிறுவனத்தின் எந்த ஒரு
அதிகாரியோ கடந்த காலத்தில் குழுமத்தின் நிறுவனமான
குஜராத் அல்காலி கெமிக்கல்சை குஜராத் சி.எம் என்று
குறிப்பிட்டுள்ளார்களா என்று கேட்ட போது ஷுபேந்து அமிதாப்
அந்த கேள்விக்கு மழுப்பினார்.

வருமான வரித்துறையினர் கைப்பற்றிய மற்றொரு
ஆவணத்தில், புரோஜெக்ட் ஜே.என்விரான்மெண்ட் அண்ட்
ஃபாரஸ்ட் தலைப்பில் ரூ.7.08 கோடி அளிக்கப்பட்டுள்ளதும்
காட்டப்பட்டுள்ளது. இது ஜெயந்தி நடராஜன் அமைச்சராக
இருந்த போது, இந்தக் காலக்கட்டத்தில் நவம்பர் 8, 2011 முதல்
ஜூன் 17, 2013 வரை ஆதித்ய பிர்லாவின் ஒரு 13
திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி
கிடைத்துள்ளது.

இது குறித்து பிப்ரவரி 27, 2014-ல் வருமானவரித்துறை தனது
அப்பிரைசல் அறிக்கையில் குஜராத் சிஎம் மற்றும் புரோஜெக்ட்
ஜே பெயரில் பணம் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப் பட்ட
போது ஷுபேந்து அமிதாப் நேரடியாக பதில் கூறாமல் மீண்டும்
மழுப்பியுள்ளார்.

இது குறித்த மேல் விவரங்களுக்கு –
http://www.thehindu.com/news/national/bhushan-seeks-investigation-
into-political-payouts/article9345953.ece
http://www.thehindu.com/todays-paper/kejriwal-takes-graft-charge-to-pms-doorstep/article9350777.ece

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to குஜராத் சி.எம். 25 கோடி – பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான புகார்….

 1. LVISS சொல்கிறார்:

  Why the names of other politicians are not mentioned–That itself shows — In any case this shd be probed to see how much of it is true —

 2. LVISS சொல்கிறார்:

  Got this definition of a blog from website
  A blog is sometimes referred to as an online personal journal -It is a short term for webblog -You are quoting from some other source and saying people shd not be angry with you — Why shd anyone get angry for this —You say it is not your view –So on whom shd anger be directed if at all -Leave alone BJP friends no one will get angry with this —

 3. gopalasamy சொல்கிறார்:

  BJP and MODI got badly exposed. IN next election they can not get their deposit also. After UP election there may be changes and the golden rule of Sonia Gandhi will come back. It is proved several times except Nehru’s family nobody is firt to rule India.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலசாமி,

   அப்படி எல்லாம் அவசரப்பட்டு எந்த தற்கொலை
   முடிவுக்கும் வந்து விட வேண்டாம்…..
   அடுத்த தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது.
   அதற்குள் என்னென்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து
   பார்ப்போமே….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Srini சொல்கிறார்:

   amma kunam adainthu naatin prathamar aga vara vendum endru man soru ssapiduvom. ellam sariyagividum… endru iilayel, naalayavadhu nadakum.

 4. selvarajan சொல்கிறார்:

  தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்த்து சலிப்படைந்துள்ள மக்கள் — மீண்டும் ” ஆட்சியே பரவாயில்லை ” என்ற குழப்பத்தை போக்க —- மோடிஜி ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்களில் அவரது ஆட்சியில் ….. ” செய்த சாதனைகளையும் — மக்களுக்கு கொடுத்த வேதனைகளையும் ” — அறிவு ஜீவிகள் யாராவது பட்டியலிட்டால் — ” பாமரன்களுக்கும் ” ஒரு விளக்கம் கிடைக்கும் அல்லவா … ?

 5. தமிழன் சொல்கிறார்:

  சி.எம். 25 கோடி – ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் (இத்தாலி சம்பந்தப்பட்டது), நம் கோர்ட் அல்ல, இத்தாலி கோர்ட்டில் வழக்கு நடந்ததில், ஒரு ஆவணத்தில், A.P – x கோடி என்று (பணம் மறந்துவிட்டது. இது அஹ்மது படேலைக் குறிப்பதாகச் சொன்னார்கள்) இருந்தது. அதிலேயே பல Code Word காங்கிரஸ் தலைவர் சோனியாவைக் குறிப்பதாக இருந்தது. இவை போன்று வரும் செய்திகளில் உண்மை இருக்கலாம், அல்லது தப்பிப்பதற்காக குற்றவாளிகள் செய்யும் தந்திரவேலையாகவும் இருக்கலாம். பொதுவாக இவைகள் உண்மையாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

  இந்திய அரசியலைப் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் சிந்தனை செய்தால் வேதனைதான் மிஞ்சும். அரிசிக்கேற்ற உப்புமா. மக்களுக்கேற்ற தலைவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.