“மரணத்தை பரிசளிக்கும் மன்னன்” – சீதாராம் எச்சூரி

_yechury

இன்று பாராளுமன்றத்தில் திரு.சீதாராம் யெச்சூரி
அவர்கள் பேசியதைப் பற்றிய செய்தி சுருக்கம்
தமிழில் கீழே –

——————————–

ஒரு குளத்தில் உள்ள முதலைகளையெல்லாம் கொல்லப்
போகிறேன் என்று கூறி அந்தக் குளத்தின் நீரையெல்லாம்
பிரதமர் மோடிவடித்துவிட்டார். ஆனால் மிகப் பெரும்
முதலைகள் எல்லாம் ஊர்ந்து வெளியில் சென்று சுகபோகமாக
வாழ்கின்றன , குளத்தில் உள்ள சிறிய மீன்கள் எல்லாம்
செத்துக் கொண்டிருக்கின்றன’. என்று நாடாளுமன்றத்தில்
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் எச்சூரி
கடுமையாக விமர்சித்துள்ளார்.

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர்
மோடியின் அறிவிப்பால் கடந்தஒரு வார காலத்திற்கு மேலாக
ஒட்டுமொத்த நாடும் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர்,
புதனன்று துவங்கியது.

இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த
எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஒத்திவைப்புதீர்மானம் கொண்டு
வரப்பட்டு, உடனடியாக விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தப்
பட்டது.

மாநிலங்களவையில் முதல்நாள் அரசால்திட்டமிடப்பட்டிருந்த
அனைத்து பிரச்சனைகளும் ஒத்திவைக்கப்பட்டு, ரூபாய்
நோட்டு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியதால் அரசு ஒப்புக்
கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது பேசிய சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சீத்தாராம் யெச்சூரி,
மோடி அரசின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக
விமர்சித்தார்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியநாட்டில் வெறும்
2.6 கோடி மக்கள் மட்டுமே கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளனர்
.பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் ஏழைகளை வதைத்த மன்னர்
குடும்பத்தினருடன் மோடியை ஒப்பிட்டார்.

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால்
என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி
காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல,

இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன,
பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள்
என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்கிறார் பிரதமர்
நரேந்திரமோடி.

பிரெஞ்சு புரட்சியின் போது அந்நாட்டின் மகாராணி மேரி
ஆண்டோநிட்டே, சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லை என்று
கதறிய ஏழைகளை பார்த்து,கேக் சாப்பிடுங்களேன் என்று
கூறியதை நினைவுகூர்ந்த யெச்சூரி, பிரெஞ்சு மகாராணியை
போல இன்றைக்கு பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகள்
இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய்களை
பயன்படுத்துங்கள் என்கிறார் என சாடினார்.

“ரோமானிய மன்னரை பற்றி அவரது அவையிலிருந்த செனட்
உறுப்பினர் ஒருவர், இப்படி கூறுவார்: ரோமைப் பற்றி நமது
மன்னருக்கு நன்றாக தெரியும். ரோம் என்றால் மாபெரும்
மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தின் முன்பு கண்கட்டி
வித்தைகள் காட்டி, அவர்களது கவனத்தை திசை திருப்புவார்.

அவர்கள் அதில் மயங்கி உண்மைகளை தேடிக்
கொண்டிருக்கும் வேளையில், அவர்களது சுதந்திரத்தை
பறித்துக் கொள்வார். ரோம் நகரத்து இதயத் துடிப்பு என்பது
இந்த மாபெரும் செனட் சபையின் மார்பிள் கற்களில் இல்லை;
இந்த இதய துடிப்பு மக்கள் கூட்டம் அமர்ந்திருக்கிற மண்ணில்
இருக்கிறது.

அவர்கள் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டுஇருக்கும்
வேளையில், மன்னன் அவர்களுக்கு மரணத்தை பரிசளித்தான்”

தனது பேச்சின்போது –
கொல்கத்தாவில் நவம்பர் 8ம்தேதியன்று
ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு
முன்பே இந்தியன் வங்கி கணக்கில் பாஜக சார்பில்
கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட்செய்யப்பட்டுள்ள
விபரத்தை ஆதாரத்துடன் அவையில் முன்வைத்தார் யெச்சூரி.

ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலிருந்து 86 சதவீத
பணப்பரிவர்த்தனையை செல்லாதது ஆக்கிவிட்ட பிரதமர்
மோடியால், பணமில்லாத பரிவர்த்தனையை எப்படி கொண்டு
வர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கறுப்புப்
பொருளாதாரமே எனக் குறிப்பிட்ட யெச்சூரி, கறுப்புப்
பொருளாதாரம் என்பது ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும்,
தங்கத்திலும், இதரப் பல வடிவங்களிலும் முதலீடு
செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கறுப்புப் பணத்தை கைப்பற்றப்போவதாக பிரதமர் மோடி
கூறுகிறார். ஆனால், உண்மையில் கறுப்புப்
பணம்வெளிநாடுகளில், பாதுகாப்பான ‘சொர்க்கங்களில்’
பாதுகாப்பாகவே உள்ளது என்றும் யெச்சூரி கூறினார்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “மரணத்தை பரிசளிக்கும் மன்னன்” – சீதாராம் எச்சூரி

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Why PM did not take part in this important discussion. A couple of my relative both working in
  bank are coming home every day by 10 pm after work. Both of them are staunch supporters
  of BJP
  Now they are cursing..

  • Narasimhan சொல்கிறார்:

   O is that so ! Let them talk to police personnel, doctors in emergency wards or maintenance personnel working refinery and such continuous process plants or the farmers who are waiting for their corps to be harvested.. Once in a lifetime the bank employees have been asked to shoulder some burden and they do not like it a bit. The bank personnel one of the pampered lot in our country especially the public sector banks.

 2. LVISS சொல்கிறார்:

  After reading this I tried to find about Marie Antoinette-This is what I found – refer para 3 –

  http://www.history.com/news/10-things-you-may-not-know-about-marie-antoinette

 3. LVISS சொல்கிறார்:

  Sorry it shd be para 7 and not 3 where there is a reference to this —

 4. LVISS சொல்கிறார்:

  The cover story of “Reporte” dated 15.11..2016 is “” Indiavai meetedutha mega atma” -There are two sides to a coin –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.