விருவிருப்பான “வேலூர் தங்கக்கோயில்” ப்ளஸ் “சுப்ரமணிய சுவாமியே நமஹ” கதை….

,,

..

வேலூரில் அமர்க்களமாக நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து, புகழ் பெற்று வரும் தங்கக் கோயில்
பற்றி அநேகமாக எல்லாருமே அறிந்திருப்பீர்கள்.

அதைப்பற்றிய விஷயம் தான் –
முதலில் அது பற்றி அண்மையில், ஒரு இதழில் வெளிவந்த
கட்டுரையை கீழே தந்திருக்கிறேன். அதை படித்து விடுங்கள்..

பின்னர் நான் சொல்ல வந்ததை சொல்கிறேன் –

vel-koil-1-001a

vel-koil-2-001a

vel-koil-3-001a

என் குறிப்பு –

மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒருதடவை
தெற்கேயிருந்து சென்னை நோக்கி ரெயிலில் வந்து
கொண்டிருந்தேன். இரண்டாம் வகுப்பு ஏ.சி. ( இந்த தகவல்
இங்கு அவசியம்…)

விழுப்புரத்தில் ஒரு நபர் ஏறினார்… என் அருகே அவருக்கு
இடம் – சென்னை வரை கூடவே பயணிக்கிறார்….!

அவர், சென்னை போய், அங்கிருந்து டெல்லிக்கு
விமானத்தில் பயணிக்கப் போவதாகச் சொன்னார்.
அந்த மாதத்தில் அது மூன்றாவது
தடவை என்றும் சொன்னார்…!!!

கொஞ்சம் வித்தியாசமான நபராகத் தெரியவே –
தொடர்ந்து பேச்சு கொடுத்துக் கொண்டு வந்தேன்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த
முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு,
சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து செய்ய முடியாத
சில காரியங்களை இவர் நம்பகமான முறையில்
செய்து கொடுக்கிறார் என்பது தெரிய வந்தது….

வேலூர் கோயிலைப் பற்றி பேச்சு வந்தது…
அதன் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தேன்….
உள்ளூர் பிரமுகர்களைத் தவிர,
அவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகளைத் தவிர –

இதில் ஆர்வமுடைய மற்ற அரசியல்வாதிகளின்
பின்னணி குறித்து அவருக்கு எதாவது தெரியுமா என்று
விசாரித்தேன்…

அவருக்கு ஓரளவிற்கு தெரிந்திருந்தது…..
ஆனால், விவரமாக பேசுவதை தவிர்த்தார்….

“நாயுடுகாருவே நமஹ ”
“சுப்ரமணிய சுவாமியே நமஹ”

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

விருவிருப்பான “வேலூர் தங்கக்கோயில்” ப்ளஸ் “சுப்ரமணிய சுவாமியே நமஹ” கதை…. க்கு 18 பதில்கள்

 1. தமிழன் சொல்கிறார்:

  இதைப் பற்றி (ஆன்மீக மடங்கள்.. எல்லா மதத்திலும்)ப் பேசத் தயங்குவதால்தான் (பொதுவா.. தெய்வக்குத்தம்னு நினைக்கறது), அவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுத்ததாக ஆகிவிடுகிறது.

  அறக்கட்டளைதான் நம் இந்தியாவின் புற்று’நோய். அது ஆன்மீகம்னாலும் சரி, அரசியல் கட்சினாலும் சரி. எந்த டொனேஷனும் அரசிடம் மட்டும்தான் அளிக்க இயலும், அதிலிருந்து என்.ஜி.ஓக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இருந்தால் ஒழிய இந்தக் கொள்ளையர்களைத் தவிர்க்க முடியாது.

  இது அரசியல் கட்சிகளுக்கும், ஆன்மீக மடங்களுக்கும், தனியார் கோவில் நிர்வாகத்தினருக்கும் பொருந்தும். “நாந்தான் கடவுள்” என்று யார் சொன்னாலும், எந்த அமைப்பு சொன்னாலும், அங்கு பெரிய பிரச்சனை, அதுவும் தேசத்துக்கு எதிரான பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

 2. தமிழன் சொல்கிறார்:

  பிரியங்கா காந்தி இங்கு வந்துபோயிருக்கிறார் (யாரு… பிரியங்கா.. நேரா இந்தக் கோவிலுக்கு. இதைத் தவிர அவர் சென்ற இடம் நளினி இருந்த சிறைச்சாலை). நம்ப முடிகிறதா? இதுவும், ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள மடங்களும்……

 3. Mah சொல்கிறார்:

  செந்தில் என்கிற பெயரில் எனது விமரிசனம் வலைத்தளத்தில்
  அடிக்கடி மறுமொழி எழுதுவதாக வந்து தரக்குறைவாக
  எழுதிக்கொண்டிருக்கும் நபருக்கு –

  நான் விடுக்கும் அறிவிப்பு –

  சில மாதங்களுக்கு முன்பாக நீங்கள் தொடர்ந்து ஆபாசமாக
  பின்னூட்டங்கள் எழுதியபோது பல தடவை உங்களுக்கு
  அறிவிருத்தியும் கேட்காமல் தொடர்ந்து தொந்திரவு
  கொடுத்துக் கொண்டே போனதால் – நான் மேல் நடவடிக்கை
  எடுக்க முனைந்த போது,

  மன்னிப்பு கேட்டீர்கள்….
  இனி இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று
  கூறி மன்னிப்பு கோரினீர்கள்.
  இளைஞராகத் தெரியும் நீங்கள் விபரீதம் புரியாமல்
  எழுதி விட்டீர்கள் என்று நினைத்து நானும் அதோடு விட்டு விட்டேன்.

  ஆனால், இது சம்பந்தமான உங்களது மெயில்கள்,
  எனது எச்சரிக்கை கடிதம் – உங்களது மன்னிப்பு கடிதம் –
  அனைத்தையும் நான் என் வசம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

  இப்போது மீண்டும் விமரிசனம் வலைத்தளத்தில்
  அருவருக்கும்படி பின்னூட்டங்கள் எழுத துவங்கி
  விட்டீர்கள். நான் சில முறை எச்சரித்தும்
  நீங்கள் கேட்பதாகத் தெரியவில்லை.

  இருந்தாலும், இறுதியாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு
  தர விரும்புகிறேன் –

  உங்களின் தவறான நடவடிக்கைகளுக்கு
  மன்னிப்பு கேட்டுக் கொண்டு,
  இனி இந்த தளத்தில் எதையும் எழுத மாட்டேன்
  என்று உறுதிமொழியும் கொடுத்தால்
  இப்போதைக்கு மேல் நடவடிக்கைகளை
  நிறுத்தி வைக்கிறேன்.

  -காவிரிமைந்தன்

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  ” எலைட் குடிகளுக்கும் … ஊழலில் ஊறியவர்களுக்கும் … அவர்களது கால் நக்கிகளுக்கும் ” கடுப்பேத்தற மாதிரி பதிவுகளை இடுவது … சரியா …..?

 5. Mah சொல்கிறார்:

  //வேண்டுமென்றே
  என்னால் நிர்வகிக்கப்படும்
  “விமரிசனம்” வலைத்தளத்திற்கு வந்து,
  தொடர்ந்து தொந்திரவு கொடுத்துக் கொண்டே
  இருப்பதனாலும் –//

  உன் வீட்டுக்குல் வைத்து. …உன் வலைத்தளத்திய்..நிர்வகி..
  யார் கேட்க போகிறார்கள்?

  ஏன் என் உயிரினும் மேலான குருவை பற்றி…தர குறைவாக எழுதினாய்?

  அதற்கு நீயே முழு பொறுப்பு…
  ..
  .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களுக்கு,

   செந்தில் என்கிற பெயரில் துவங்கி –
   பிறகு ஏழெட்டு வெவ்வேறு பெயர்களுடன்,
   (க, கா, ஜெயலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி, மஹா ….)
   வெவ்வெறு email ID- க்களுடன் தொடர்ந்து
   எனக்கு தொந்திரவு கொடுத்து வரும்
   நபர் கடைசியாக அனுப்பி இருக்கும்
   இரண்டு மெயில்கள் தான் -மேலே maha(lakshmi)
   என்கிற பெயரில் வெளிவந்திருப்பது.

   அவரிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்த
   ஆபாசமான மெயில்களை எல்லாம்
   நான் delete செய்து கொண்டே வந்ததால்,
   பெரும்பாலானவற்றை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

   அவரைப்பற்றி நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
   என்பதற்காக தான் கடைசி 2 மெயில்களையும்
   மேலே அப்படியே வைத்திருக்கிறேன்.

   அவரது main grouse against me என்னவென்றால் –

   நான் அவரது குரு- க்களான கீழ்க்கண்ட
   நபர்களைப்பற்றி இந்த வலைத்தளத்தில்
   விமரிசனம் எழுதியது தவறாம்….
   இனி எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமாம்….

   திருவாளர் நித்யானந்தா,
   திருவாளர் ஜக்கி வாசுதேவ்,
   திருவாளர் ந.மோடி

   இந்த ஒரு நபருக்காக, பின்னூட்டங்களுக்கு filter போட
   எனக்கு விருப்பமில்லை. அவ்வப்போது Spam போட்டாலும்,
   wordpress மீண்டும் அனுமதித்து விடுகிறது.

   ஒருவரை நிரந்தரமாக Spam போட
   wordpress மெயிலில் எதாவது வழி இருக்கிறதா…?
   நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால்,
   தயவுசெய்து எனது personal mail ID க்கு
   தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   இந்த ஆசாமியால், உங்களுக்கு ஏற்படும்
   தொந்திரவுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா…! ” Lunacy Act ” பற்றி ஒரு இடுக்கை பதிவிடுங்களேன் … சிலருக்கு உபயாேகமாக இருக்கும் …. இல்லையா…?

   • இளங்கோ சொல்கிறார்:

    அந்த நித்யானந்தா ஒரு பொறுக்கி.
    போலி சாமியார்.
    அவனை மகான் என்றும்
    அவனுக்கு சீடன் என்று சொல்லிக்கொள்ளும்
    இந்த மடையன் இன்னொரு பொறுக்கியாகத்தானே
    இருக்க முடியும். நாய் குரைக்கிறது என்று
    நீங்கள் just delete செய்து விட்டு போய்க்கொண்டே
    இருங்கள். இந்த நாய் குரைப்பதற்கெல்லாம்
    நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே
    இல்லை.

 6. Ma சொல்கிறார்:

  அனுப்பு உன் நோட்டிஸ் …உண்மைக்காக நேர்மையாய் .
  சிறை செல்ல தயார்..

 7. Ma சொல்கிறார்:

  அனுப்பு உன் நோட்டிஸ் …உண்மைக்காக நேர்மையாய் .
  சிறை செல்ல தயார்.. ..

 8. Amuthan சொல்கிறார்:

  நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே!…… உங்களுக்கு எப்படி ஒருவரைப் பற்றி விமர்சினம் செய்ய சுதந்திரம் இருக்கிறதோ அதோ போல் உங்கள் விமர்சினகளுக்கு பதில் விமர்சினம் செய்யும் சுதந்திரமும் எங்களுக்கு இருக்கிறது. அதற்காக ஒரு சாராரை நீங்கள் இதை சார்ந்தவர் அல்லது அதை சார்ந்தவர் என குறிப்பிடுவது சரியல்ல. பின்னூட்டம் இடும் கருத்துக்களை மட்டும் விவாதிப்போம், அது தான் அறிவிக்கு வழி வகுக்கும். மற்ற படி நீங்கள் இந்த கட்சி/அந்த கட்சியின் ஆதரவாளர் என வெளிப்படையாக குறிப்பிடும் போது அது உணர்வுக்கு இடம் கொடுக்கும். மேலும் நீங்கள் ஜாக்கி வாசுதேவை பற்றி எழுதியது ஒரு மதம் சார்ந்த பிரச்சினை. மாற்று மதத்தவரால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக எழுதிவிட்டீர்கள். நீங்களும் சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு எழுதி விடுகிறீர்கள் என நினைக்கிறேன். இந்த மாதிரியான விசயங்களை எழுதும் பொழுது சற்று ஆராய்ந்து நடுநிலையோடு எழுதுங்கள்.
  மன்னிக்கவும்!…. இது என்னுடைய கருத்துதான்!…
  இது தொடர்ப்பாக நீங்கள் எனக்கு தனிப்பட முறையிலும் மின்னஞ்சல அனுப்பலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப அமுதன்,

   நீங்கள் யாருக்காக பரிந்து இதை எழுதினீர்கள் என்று
   தெரிய வந்தால் உண்மையிலேயே வருத்தப்படுவீர்கள்.

   இந்த தளத்தில் வெளிவந்த இடுகைகளுக்காக –
   மிக மிக அசிங்கமான, தரக்குறைவான சொற்களால்
   எனக்கு கடிதங்கள் அனுப்பிய ஒரு நபருக்கு
   ஆதரவாக உங்கள் பின்னூட்டம் அமைந்திருப்பதில்
   நான் வருந்துகிறேன்.

   நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்காக
   உங்களுக்கு பதிலெழுத துவங்கியபோது,
   அது எல்லா நண்பர்களுக்கும்
   போய்ச் சேர்ந்தால் நல்லது என்று
   தோன்றியது. எனவே, அதை ஒரு
   தனி இடுகையாகவே போடுகிறேன்.

   நீங்கள் எப்போதும், உங்கள் கருத்துக்களை
   தாராளமாக இங்கே தெரிவிக்கலாம்.

   நான் என் கருத்துக்களை இடுகைகள் மூலம்
   வெளியிடுகிறேன். நண்பர்கள் அவரவர்
   கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலம்
   தெரிவிக்கிறார்கள்.

   ஆக, அனைத்துவிதமான கருத்துக்களும்,
   வாசக நண்பர்களை சென்றடைகின்றன.
   எதை ஏற்பது என்பது அவரவர் சித்தம்….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. Senthil சொல்கிறார்:

  திரு காமை

  நேர்மையாக வெளியீடு வீர்கள் என் நம்புகிறேன்…

  இரவில் தூக்கம் வராமல் பித்த பிடித்தி மாதிரி என்னுள் இருந்து உங்கள் மீது வரும் வெறுப்பையும் , வேதனையும் , தற்கொலையை என்னதியும, மன வலியையும் ….வார்த்தைகளால் விளக்க முடியாது…

  உங்களை தகாத வர்திகளால் எழுதியது எல்லாம் அதன் மிக மிக சிறிய வெளிப்பாடு தான்…அதற்கான சட்ட படியான எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்கிறேன்..

  இப்பொழுதும் சத் குரு பரபிரம்மா மிக பழைய புகை படம்..குன்னூர் பகுதி களில் , எங்கள் மக்கள் வைத்திருப்பதை கனா முடியும்…

  பல லட்சக்கணக்கான பக்ததர்கள் தொடரும் சத் குரு வை பற்றி அபாண்டம் எலத்தாதீக்கள் என் நான் பலமுறை உங்கலாய் வேண்டி கொண்ட பிணுஉடங்களையும் உங்கள் இடுகையில் சேர்க்க வேண்டுகிறேன்

  நன்றிகள்
  செந்தில்

 10. selvarajan சொல்கிறார்:

  திரு கா.மை அவர்களின் தளத்தின் பெயர் ” விமரிசனம் ” என்பதுதான் …. செய்தி தாள்களில் — ஊடகங்களில் — தின நடைமுறை எதார்த்தங்களில் இருந்து பல செய்திகளை — அவரது பாணியில் இடுக்கையாக வெளியிட்டு விமரிசிக்கிறார் என்பதை புரிந்தவர்கள் — அறிந்தவர்கள் அவரை ” தனிமனித தாக்குதல்களை ” தொடுக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம் ….

  ” அனைத்துக்கும் ஆசைப்படு ” என்றவரும் — ” கதவைத் திற காற்று வரட்டும் ” என்றவரும் எவ்வளவோ சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு — விமரிசனங்களுக்கும் — ஊடகங்களின் தாக்குதல்களுக்கும் — பல எதிர் நடவடிக்கைகள் எழுந்த போதும் — எந்தவித எதிப்பும் தெரிவிக்காமல் — அவர்களது மையங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் — அதன் காரணம் என்னவென்றால் — ” மனப்பக்குவம் ” அடைந்து விட்டவர்கள் என்று வெளியே காட்டுவதற்க்காக கூட இருக்கலாம் …..

  அப்படிப்பட்டவரை { ர்களை } தன்னுடைய ” குரு ” என்று கூறிக்கொள்ளுபவர்களுக்கு ஏன் அந்த வித மனப்பக்குவம் ஏற்படவில்லை என்பதை பற்றி சிஷ்யர்கள் தான் சிந்திக்கவும் பதில் அளிக்கவும் வேண்டும் ….

  விமரிசனங்களை தாங்கி கொள்ளாமல் தனிமனித தாக்குல்களை குருமார்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா … ? இந்தவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து — ஈஷா மையத்தைப்பற்றி இடுக்கை வெளியிட்டதில் இருந்து — இன்றுவரை திரு கா.மை .அவர்களை விகார மனதுடன் — விரசமாக — ஆபாசமாக விளித்து ” பல பின்னூட்டங்களை ” பதிவிட்டுக்கொண்டே இருக்கும் — நண்பர் தனது குருவை பற்றியும் — அவரது பக்குவ நிலையை பற்றியும் — அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தான் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளுகிறோம் என்பதைப்பற்றியும் சிந்தித்து இருக்கிறாரா … என்பதே ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது ….

  திரு கா.மை. அவர்கள் ஏதோ புதிதாக கண்டுபிடித்து எழுதியைப்போல நினைத்து கண்டமேனிக்கு பின்னூட்டம் இடும் அந்த நண்பர் — கா.மை. மேற்கோள் காட்டியுள்ள ” சவுக்கு — நக்கீரன் ” போன்ற இன்னும் பல தளங்களில் அவரது குருவைப்பற்றி — கடுமையான செய்திகள் பதிவான போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – என்பது அவருக்கே வெளிச்சம் …..

  விவாதங்களை விரிவாக — ஆணித்தரமாக எடுத்துக்கூறுவது அனைவருக்கும் பயன்படும் — ஆனால் விதண்டாவாதமாக — விரசமாக — தனிமனித தாக்குதல் என்பது ஒருவருக்கு இழுக்கை தான் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தால் — யாருக்கும் மன வருத்தம் ஏற்படாது …. அல்லவா .. ?

  பக்குவப்பட்ட மனதோடு — தனிமனித தாக்குதல்களை விடுத்து — அனைவரையும் அரவணைத்து — ” அனைத்துக்கும் ஆசைப்படு ” என்றால் — நல்லது தானே …. ?.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s