ஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..?

..

..

ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கும் திட்டத்தில்
மத்திய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களுக்கு
உண்மையில் விருப்பம் இல்லையென்றும், பிரதமரின்
கட்டாயத்தில் நிகழ்ந்த இந்த அறிவிப்பின் பின் விளைவுகளால்,
திரு.ஜெட்லி மிகவும் எரிச்சலில் இருக்கிறார் என்றும்…..
விகடன் செய்தியில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.
இது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது குறித்து
நம்மால் தீர்மானிக்க முடியவில்லை.

மேற்கொண்டு போவதற்கு முன் முதலில் கட்டுரையை
படிப்போமே –

——————————————————–

‘கிரடிட் உங்களுக்கு…எனக்கு டெபிட்டா?’ -வெடிக்கும்
மோடி-ஜெட்லி மோதல்

jaitley-and-modiji

புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய விவகாரத்தில்
பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் முட்டல்
மோதல்கள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் பா.ஜ.க
நிர்வாகிகள். ‘ அரசின் முடிவால் நிதி அமைச்சகம் மீள
முடியாத கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டது’ என அவர்
வேதனைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என
கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்
தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி
தொலைக்காட்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு
உரையாற்றினார் பிரதமர். அவரது உரை முடிந்த மறுகணத்தில்
இருந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் மற்றும்
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்
சக்தி காந்த தாஸ் ஆகியோர் பேட்டியளித்தனர்.

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் முடிவு ஏன்
எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக பேட்டியளித்தார் சக்தி
காந்த தாஸ். நிதித்துறை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இந்த
முடிவுகளின்போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
தலைகாட்டவில்லை. அவரது துறையின் செயலர் மட்டுமே
மக்களுக்காக உரையாற்றிக் கொண்டிருந்தார்.

“மத்திய அரசு எடுத்த இந்த முக்கியமான முடிவின்
பின்னணியில் ஜெட்லி இருப்பதை பா.ஜ.க மேலிடம்
விரும்பவில்லை. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சில
நிர்வாகிகள் அருண் ஜெட்லியை ஒதுக்கி வைப்பதையே
விரும்புகின்றனர். அதனாலேயே, இந்த விவகாரத்தில்
மோடியை மட்டும் முன்னிறுத்தி அறிவிப்பு வெளியானது.

இதனை அருண் ஜெட்லி ரசிக்கவில்லை” என டெல்லியில்
நடப்பவற்றை நம்மிடம் விளக்கிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
“ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, கடந்த ஓர் ஆண்டாகவே
ஆர்.பி.ஐ மற்றும் நிதித்துறை அமைச்சகத்துக்குள் விவாதம்
நடந்து வந்தது. ‘இதனால் கறுப்புப் பணத்தை ஒழிப்பது சிரமம்’
என ஆர்.பி.ஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் பேசிவந்தார்.

ஆனால், ‘ பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் புழக்கம்
அதிகமாக இருக்கிறது. ஏறக்குறைய 1.2 லட்சம் கோடி ரூபாய்
அளவுக்குக் கள்ள நோட்டுகள் புழங்குகின்றன. நாட்டின்
பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளும் நடக்கின்றன’
என உளவு அமைப்புகள் வழியாக அரசுக்கு அறிக்கைகள் வந்து
கொண்டிருந்தன.

இதுகுறித்து, பொருளாதார நிபுணர்களுடன் தீவிரமாக
ஆலோசித்து, இப்படியொரு முடிவை எடுத்தார் மோடி.

இப்படியொரு அதிரடி நடத்தப்படுவதை ஜெட்லி
விரும்பவில்லை. இதுகுறித்து, பிரதமருடன் நேரடியாகவே
விவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், ‘ நீங்கள் அமைதியாக
இருங்கள்’ என உறுதியான குரலில் தெரிவித்தார் பிரதமர்.

அதனால்தான், அறிவிப்பு வெளியான நாளில் அருண் ஜெட்லி
அருகில் இருக்கவில்லை.

நிதி அமைச்சருக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், அவரது
துறையின் செயலரை முன்னிறுத்தினார் மோடி. இதனை
எதிர்பார்க்காத அருண் ஜெட்லி, ‘ ராஜினாமா செய்துவிடுவேன்’
எனக் கூறியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். புதிய ரூபாய்
நோட்டுகள் விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும்
முட்டல் மோதல் அதிகரித்திருப்பது உண்மை” என்றார்
விரிவாக.

“ஆட்சி அதிகாரத்திற்குள் நிதி அமைச்சராக இன்னமும்
சிதம்பரம்தான் தொடர்கிறாரா எனக் கேள்வி எழுப்பும்
அளவுக்கு, அவருடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் ஜெட்லி.

இதை ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய நிர்வாகிகள்
விரும்பவில்லை. குறிப்பாக, சிதம்பரம் தொடர்பாக பல
விவகாரங்களை கிடப்பில் போடுவதில், ஜெட்லி ஆர்வமாக
இருக்கிறார் என அமித் ஷா மூலமாக தகவல் கொண்டு
செல்லப்பட்டன.

‘ஆட்சி அதிகாரத்தில் ஜெட்லியின் தேவை அவசியம்’ என்பதால்
பிரதமரும் அமைதியாக இருந்தார். பா.ஜ.க மேலிடத்தைப்
பொறுத்தவரையில், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்
சிங் ஆகியோரை கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும்
என்பதில் உறுதியாக உள்ளனர். சுஷ்மா உடல்நலக் குறைவால்
பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஜெட்லியோடு சேர்த்து
ராஜ்நாத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வேலைகள்
வேகமெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதிதான் பிரதமரை
முன்னிறுத்திய ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்த அறிவிப்பு.

இதில், தன்னை கலந்து ஆலோசிக்காமலும் நிதித்துறையின்
முக்கிய அதிகாரிகளை பிரதமர் அலுவலகம் பயன்படுத்திக்
கொள்வதையும் மிகுந்த கோபத்தோடு கவனித்து வருகிறார்
அருண் ஜெட்லி. ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல்,
மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்கெல்லாம், பதில் கொடுக்க வேண்டிய இடத்தில்
நிதித்துறை அமைச்சர் இருக்கிறார். மக்களின் சாபத்திற்கு பதில்
கொடுக்க முடியாமல் நிதித்துறை அதிகாரிகள் திணறி
வருகின்றனர். ஒருகட்டத்தில், கொந்தளித்த ஜெட்லி,
‘இதற்கான கிரடிட் அனைத்தையும் பிரதமர் எடுத்துக்
கொண்டார். டெபிட் மட்டும் என் கணக்கில்
சேர்க்கப்பட்டுவிட்டது’ என ஆதங்கப்பட்டாராம். பிரதமருக்கும்
நிதி அமைச்சருக்கும் இடையிலான விவகாரம், சில நாட்களில்
உக்கிரமாக வெடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர்
நிதித்துறை வட்டாரத்தில்.

பிரதமரின் அறிவிப்பு குறித்து பேசிய நிதி அமைச்சர் அருண்
ஜெட்லி, ‘ சில நாட்கள் பணப்புழக்கத்தில் சிக்கல் இருக்கலாம்.
கணக்கில் வராத பணம் அரசின் நடவடிக்கையால் தனியாரிடம்
இருந்து அரசுக்கு கிடைக்கும். எதிர்காலத்தின் நல்ல
நிர்வாகத்துக்காக தற்காலிக இடையூறுக்கு நாம் தயாராக
வேண்டும்’ என்றார்.

‘இதை பிரதமருக்காக சொல்கிறாரா? ஆட்சி அதிகாரத்தில்
ஏற்பட்டுள்ள தற்காலிக இடையூறு என்பதை மறைமுகமாக
சுட்டிக் காட்டுகிறாரா’ எனவும் கேள்வி எழுப்புகின்றனர்
நிதித்துறை வட்டாரத்தில்.

—————————————————————-

திரு.ஜெட்லி அவர்களுக்கு இந்த விஷயத்தில்
சம்மதமில்லை என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது.
கடுமையான பின் விளைவுகளுக்கு அவரே பதில் சொல்ல
வேண்டிய நிலையில் இருப்பதாலும், மக்கள் நடுவே,
அவரது அமைச்சகம் மிகவும் கெட்ட பெயர் எடுத்திருப்பதாலும்,
அவர் மிகவும் எரிச்சலில் இருப்பார் என்பதையும் யூகிக்க
முடிகிறது.

ஆனால், விகடன் கட்டுரை சொல்லும் அளவிற்கு
அவர் தனது எதிர்ப்பு எண்ணங்களை இப்போதைக்கு
வெளிப்படுத்துவார் என்று தோன்றவில்லை.

இன்னும் சில மாதங்கள் கடந்து,
இறுதியாக இந்த திட்டம் குறித்து மக்கள் மத்தியில்
எழும் ஆதரவு அல்லது எதிர்ப்பை பொறுத்தும்,
கட்சி அளவில், இது மோடிஜிக்கு எந்த அளவிற்கு
சாதகம் அல்லது பாதகம் ஏற்படுத்துகிறது
என்பதும் தெரிந்த பிறகே தான் அவர் வெளிப்படையாக
வரக்கூடும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஜெட்லிஜிக்கும், மோடிஜிக்கும் …இடையே பிரச்சினை – விகடன் சொல்வது எந்த அளவிற்கு உண்மை …..?

 1. NATCHANDER சொல்கிறார்:

  Arun Jitley has every reason to deplore..
  Some of the reasons are enumerated below
  the two cancelled notes account for 86percent of all currency in circulation
  more than 90percent of all transactions are conducted in cash and more than 85percent of workers get their incomes in cash
  the resulting chaos has been enormous and shows no signs of ending…
  PITFALLS WITH MODIS GRAND PLAN HAVE BEEN WORSENED BY IMPLEMENTATION INEPTITUDE…

 2. NATCHANDER சொல்கிறார்:

  NOT enough new currency has been made available so cash machines are empty and banks are stretched beyond capacity..
  the higher denomination of 2000 rs is unhelpful for daily transactions
  the lack of cash has reduced consumption and demand which had hasd a knack on sales traders incomes productivity and employment
  employers cannot pay in new notes and small producers cannot get working capital from the moneylenders they rely on…

 3. NATCHANDER சொல்கிறார்:

  Farmers are in dire straits
  they cannot purchase inputs for the nextsowing season..
  they cannot afford to BEAR THE PAIN FOR FIFTY DAYS as our p.m asked..
  because theystand to lose all for their last crop and for the coming one
  Ironically a flourishing black market has emerged for the old notes trading at a 20percent discount..
  big players can get away with a small loss and plan on restarting their illegaL ACTIVITIES
  ONCE the new notes are fullu in circulation..
  but no one will compensate the millions of indians who have lost incomes and employment in the intervening period..

 4. NATCHANDER சொல்கிறார்:

  No wonder when the govt claimed that its latest SURGICAL STRIKE would involve some collateral damage
  the indian supreme court said this was more like a carpet bombing..
  MODIS PENCHANT FOR OPTICS THIS TIME
  HAS ACQUIRED TRULY DAMAGING PROPORTIONS..

 5. LVISS சொல்கிறார்:

  After the announcement was made there was a press conference where the FM and others including the Chief Economic Adviser took questions on the issue — Jaitley also has given a few interviews in channels after the announcement—He has countered Chidambaram’s charges — — Jaitley revealed in one of the interviews that the PM told him that he was prepared to face any fall out because of this —
  The announcement was made after the cabinet meeting –The impending speech was repeatedly beamed to the viewers —
  Quite a lot of people appear to wishing that this scheme should fail –They are not realising that one of the aim of this is to weed out fake 500 and 1000 rupee notes —Credit or debit will be for the govt as a whole — If some unscrupulous person manages to push a fake currency into ones hands it is like holding a poisonous snake –If you can imagine this scenario you will appreciate the secrecy and urgency of this step taken by the govt —
  You yourself are doubting “Endha alavirku unmai ” and are not able to decide how far it is true –Then why hang on to this article —

 6. selvarajan சொல்கிறார்:

  // ‘மோடியின் அறிவிப்பு அரசியல் தமாஷ்’: சீன பத்திரிகை விமர்சனம் ….. // http://www.vikatan.com/news/world/72796-modis-announcement-end-as-costly-political-joke-says-chineses-media.art —- அரசியல் தமாஷ் என்கிறது சீன பத்திரிக்கை — ? ஆனால் உலக நாடுகளுக்கு – தான் ஒரு ” சர்வ அதிகார ஜனநாயகவாதி ” என்று காட்ட நினைத்து — எடுத்தேன் – கவிழ்த்தேன் என்பதைப்போல இந்த திடீர் உத்திரவை பிரகடனப்படுத்தி விட்டு —- அறிவித்துவிட்டு —

  இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் — புரியாமல் முழி பிதுங்கி தவிப்பது — இவர்களின் தின அறிவிப்புக்களின் படி நன்கு புலனாகிறது — என்பதும் — அவரது சகாக்களுக்குள் சில பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது என்பதும் போக – போக — தெரியுமா …. ?

 7. ஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:

  “இந்த அரசாங்கம் மக்களுக்கு சொல்லாத, ஆனால் நம்பிக்கைக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன். அரசின் இந்த நம்பிக்கையில் சிறிதளவு பொருளாதார உண்மையும் உள்ளது. ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சுமார் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் பணம் இந்நாட்டில் புழுங்குகின்றது. இந்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால், இத்தனை கோடி பணமும் வங்கி கணக்கிற்கு வந்தாக வேண்டும். எல்லா பணமும் வந்துவிட்டால் ஓகே, ஆனால் அரசாங்கம் என்ன நம்பிக்கைக்கொண்டிருக்கிறது என்றால் இதில் கணிசமாக அளவு பணம் வங்கிகளுக்கு வராது என்று நினைக்கிறது. இப்படி திரும்ப வராத பணம் கறுப்பு பணம் அல்லது தவறான வழியில் ஈட்டப்பட்ட பணம் என்று முடிவெடுக்கப்படும். இப்படி திரும்ப வராத பணம் அனைத்தும் அரசிற்கு இலாபமே. இதனை திரும்ப அச்சடித்துக்கொண்டு அதனை அரசு செலவழிக்கும்.

  எவ்வளவு பணம் திரும்ப வராது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரகுராம் ராஜன் ஒருமுறை இதுக்குறித்து பேசும் போது, பெரும்பான்மையான 500, 1000 ரூபாய்கள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிடும் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால், கறுப்பு பணம் என்று நினைக்கப்படும் பணத்தை வங்கிகளுக்கு கொண்டுவர பல்வேறு வழிகள் உள்ளன. அதனாலேயே அவர் அப்படி கூறினார். நிச்சயமாக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை ரகுராம் ராஜன் அனுமதித்திருக்க மாட்டார். 2015 ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் இக்கேள்வி அவர் முன்பாக வைக்கப்பட்டது. இப்படியான திட்டத்தில் சிறிதளவே பலன் உள்ளது என்றும், அதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையானது மிக அதிகம் என்பதால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறினார்”

  ப.சிதம்பரம், இந்தியா டுடே ஊடகத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதியை தான் நான் மேலே மொழி பெயர்த்திருக்கிறேன். என்னா அறிவுய்யா இந்த மனுஷனுக்கு என்பது தான் என் முதல் எண்ணமாக இருந்தது. மிகப்பெரிய பொருளாதார நுணுக்கங்களை கூட மிக எளியமையான விளக்கும் சிதம்பரத்தின் பாணி வெகுவாகவே கவர்ந்தது. இப்படியான ஒரு அறிவு, ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி பெருமளவு பயன்படாமல் போய்விட்டதே என்று வருத்தமும் மேலோங்கியது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் தொடர்பாக பல்வேறு நுணுக்கமான விசயங்களை அறிந்துக்கொள்ள கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய நேர்க்காணல்: http://indiatoday.intoday.in/story/chidambaram-to-india-today-demonetisation-black-money/1/812531.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப ஆஷிக் அஹ்மத்,

   நீங்கள் சொல்லும் இந்த கருத்தை 100 % நான் ஏற்கிறேன்.
   இது குறித்து நானே எழுதுவதாக இருந்தேன்.
   எனவே, நீங்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன்.

   // என்னா அறிவுய்யா இந்த மனுஷனுக்கு என்பது தான்
   என் முதல் எண்ணமாக இருந்தது. மிகப்பெரிய பொருளாதார
   நுணுக்கங்களை கூட மிக எளியமையான விளக்கும்
   சிதம்பரத்தின் பாணி வெகுவாகவே கவர்ந்தது.
   இப்படியான ஒரு அறிவு, ஊழல் போன்ற பிரச்சனைகளில்
   சிக்கி பெருமளவு பயன்படாமல் போய்விட்டதே என்று
   வருத்தமும் மேலோங்கியது. ரூபாய் நோட்டுக்கள் வாபஸ்
   தொடர்பாக பல்வேறு நுணுக்கமான விசயங்களை
   அறிந்துக்கொள்ள கண்டிப்பாக எல்லோரும்
   பார்க்க வேண்டிய நேர்க்காணல்:
   http://indiatoday.intoday.in/story/chidambaram-to-india-today-demonetisation-black-money/1/812531.html

   //

   • LVISS சொல்கிறார்:

    As per a news report today “80% of the liquidity that the govt wanted to maintain in the market has been achieved –As and when the remaining is achieved the facility (of exchanging old notes ) could be phased out – -Once the required amount has been brought back into the system the facility for exchange shd be discontinued –In all likelihood this may happen before Dec deadline — The amount of exchange was probably reduced to Rs 2000 because of 80% of the liquidity being achieved —
    One more thing-The public appears to have mistaken this exchange facility for getting changes in lower denominations — From what could be seen it is not so The first priority seems to be to get the people to deposit the the old notes and replace them with new notes ASAP –Even if there is a slowing down on the exchange there is still time upto DEc end to get the old notes from the people – The shortfall , ie the old notes not returned to the system after the final count in Dec , could be replaced by printing fresh notes to put back the total money in circulation in place–

    I have been visiting my bank for the past few days and was unable to breach the crowd -In the last two days I could walk in more freely and get 100 rupee notes –In one single building there are three banks –The crowds were manageable and looked like an ordinary day banking –Still , even this over crowding in banks could have been avoided by better planning –Now the banks are giving priority to their own customers who have been left in the lurch —

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Entire vikatan group of magazines are totally untrustworthy. I was crazy to read vikatan group
  of magazines once..

 9. R.Gopalakrishnan சொல்கிறார்:

  This is a reminder to complete your Adi Sankarar article.

 10. selvarajan சொல்கிறார்:

  // புது 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க 7 மாதமாகுமாம்…. போட்டுடைக்கும் ப. சிதம்பரம் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/will-take-7-months-replace-equivalent-banned-currency-says-chidambaram-267550.html? — அப்போ அதுவரை இவர்கள் தினம் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டு — புது — புது கண்டிஷன்களை போட்டுக் கொண்டு — காலத்தை ஓட்டுவார்களா …. ?

  // ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம்: எச்சரித்த உச்சநீதிமன்றம்! // http://www.dinamani.com/india/2016/nov/18/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2600893.html

  // ரூபாய்: கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. மத்திய அரசுக்கு ஐ.பி. வார்னிங்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/demonetisation-opposition-may-try-flare-up-riots-warns-ib-267624.html யார் எந்த எச்சரிக்கை கொடுத்தாலும் — அசையாமல் இருக்கும் அரசு — ஒண்ணுமே புரியலையே — கலவரங்கள் உருவாவுவதை — விரும்புகிறதா …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.