“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…”

vaaimai

“நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…”

– என்று ஒரு பின்னூட்டத்தின் மூலம் எனக்கு
எழுதி இருக்கும் நண்பருக்கான இந்த விளக்கம்
இந்த தளத்தின் வாசக நண்பர்கள் அனைவருக்கும்
சென்றடைய வேண்டும் என்று நான் நினைக்கிறபடியால்,
இந்த விளக்கத்தையே ஒரு தனி இடுகையாக
பதிப்பிக்கிறேன்.

————————

// நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…//

அந்த நண்பரிடம் கேட்கிறேன்….
அவர் மூலம் மற்றவர்களுக்கும் இந்த இடுகை மூலம்
சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.

எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறீர்கள்…?
அவர் உங்களுக்கு பிடித்தவர் அல்லது
வேண்டப்பட்டவர் என்பதால், அவரைப்பற்றி யாரும்
விமரிசனம் செய்யக்கூடாதா?

முதலில் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.

இந்தியா ஒரு சுதந்திர நாடு.
இந்த நாட்டின் அரசியல் சட்டம், அதன் குடிமக்கள்

ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை எந்தவித
பயமோ, நிர்ப்பந்தமோ இன்றி வெளிப்படுத்த
அடிப்படை உரிமைகளை கொடுத்துள்ளது.

இந்த உரிமை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
அந்த கட்டுப்பாடுகளை மீறும்போது, அந்த சட்டமே
மீறுபவர்களை கவனித்து, கட்டுப்படுத்தும்.
தொடர்ந்து மீறினால் – தண்டிக்கவும் செய்யும்..

அதே போல், யார் வேண்டுமானாலும்
wordpress -ல் blog துவங்கி,
சுதந்திரமாக தங்களது கருத்துக்களை எழுதி
வெளியிட – சட்டம் அனுமதி கொடுத்திருக்கிறது.
இது அடிப்படை.

நான் சட்டம் படித்தவன் தான்….
சட்டவிதிகளின்படி, எனக்கான எல்லைகள்
எங்கே துவங்கி எங்கே முடிகின்றன என்பது
நன்றாகவே தெரியும்.
என் எழுத்துக்கள் எப்போதுமே சட்ட எல்லையை மீறாது.

இது என்னால் துவங்கப்பட்டுள்ள வலைத்தளம் (Blog).
சட்ட விதிகளை மீறாத வகையில் –
இதில் எனது கருத்துக்களை நான் சுதந்திரமாக
வெளியிடுவதை யாரும் தடுக்க முடியாது….

என்னை மிரட்டியோ, தரக்குறைவாக கடிதங்கள்
எழுதியோ – யாரும் தடுக்க முயல்வது சரி அல்ல.

சட்டப்படி, நான் இங்கு எழுதுவதை தவறு என்று
நீங்கள் சொல்ல முடியாது /சொல்லக் கூடாது.
இது சட்டபூர்வமான நிலை.

மற்றபடி உணர்வுபூர்வமாக தவறு என்று
நீங்கள் சொல்ல வந்திருந்தால் –
சில விஷயங்களை உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

ஒருவருக்கு சரி என்று தோன்றுவது மற்றவருக்கு
தவறு என்று தோன்றலாம்.

திரு. ஜக்கி அவர்களை விமரிசித்தால்
உங்களுக்கு பிடிக்காது….
அதே போல், கலைஞர் அவர்களை விமரிசித்தால்
வேறு சிலருக்கும்,
ஜெ. அவர்களை விமரிசித்தால் வேறு சிலருக்கும்,
பாஜக வை விமரிசித்தால் வேறு சிலருக்கும் –
சில பொருளாதாரக் கொள்கைகளை விமரிசித்தால்
வேறு சிலருக்கும் பிடிக்காமல் போகலாம்.

எல்லாருக்கும் பிடித்ததை மட்டும் எழுதுவதற்காக
நான் இந்த வலைத்தளத்தை துவக்கவில்லை.

இந்த தளத்தின் பெயரே ” விமரிசனம் ” தான்.
எனவே, அதன் முகப்பில் ” about” column பகுதியில்,
நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதை
இங்கே உங்களது பார்வைக்கு
கொண்டு வர விரும்புகிறேன்.

——————–

இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.

———————-

இந்த வலைத்தளத்தை துவக்கிய நாளிலிருந்து –
இன்று வரை, இந்த கொள்கைகளை தவறாமல்
கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்.

சில சமயங்களில் கடுமையான சொற்களால்
நான் விமரிசனம் செய்திருக்கலாம். ஆனால் –

இந்த வலைத்தளத்தில் ஆபாசமாகவோ,
தரக்குறைவாகவோ, உண்மைக்கு புறம்பானதாகவோ
எதையும் எழுதி விடக்கூடாது
என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் யாரும்
விமரிசனத்திற்கு உட்பட்டவர்களே.

நீங்கள் குறிப்பிடும், திரு.ஜக்கி வாசுதேவ் பொதுவாழ்வில்
ஈடுபட்டிருப்பவர். அவரை போற்றுபவர்களும்
இருக்கிறார்கள். அவரால் பாதிப்புக்கு உள்ளாகி
விமரிசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவரால் தங்கள்
கோடிக்கணக்கான சொத்துக்களை, பிள்ளைகளை
இழந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே பொது தளங்களில் அவர் மீது ஏராளமான
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு
விவாதிக்கப்பட்டிருக்கிறது. பல செய்தித்தாள்களிலும்,
டிவி விவாதமேடைகளிலும் இதைப்பற்றி எல்லாம்
விவரமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவரது
நடவடிக்கைகளும் விமரிசனத்திற்கு உட்பட்டவை தான்.

இந்த தளத்தில் நான் எழுதும் இடுகைகள்,
என் 74 வருட வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட,
ஏற்படும் அனுபவங்கள்,
பல அரசியல், சமூக நிகழ்வுகள் –
என் சிந்தனையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் –
ஆகியவற்றின் அடிப்படையில் –

அந்தந்த தலைப்பில் எனது கருத்துக்களை,
என் மனம் சொல்லும் விஷயத்தை மட்டுமே
வெளிப்படுத்துபவை .

இதை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம்
யாருக்கும் கிடையாது.
அப்படி யாரும் நினைப்பதும் இல்லை.
நிர்பந்திக்கவும் முடியாது…

நான் என் கருத்துக்களை இடுகைகள் மூலம்
வெளியிடுகிறேன். நண்பர்கள் அவரவர்
கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலம்
தெரிவிக்கிறார்கள்.

ஆக, அனைத்துவிதமான கருத்துக்களும்,
வாசக நண்பர்களை சென்றடைகின்றன.

எதை ஏற்பது, எதை ஏற்பதில்லை என்பதை
முடிவு செய்வது வாசக நண்பர்களே.….!
எதையும் யார் மீதும் திணிக்க முடியாது….

அதே போல், நான் இந்த விஷயத்தை தான் எழுத வேண்டும்,
இந்த விஷயத்தை எழுதக்கூடாது என்று சொல்பவர்
முன் ஒரு கேள்வியை எழுப்ப விரும்பிகிறேன்.

பல நாளிதழ்கள், வார இதழ்கள் – நக்கீரன், ஆனந்த விகடன்,
ஜூனியர் விகடன், குமுதம், ரிப்போர்ட்டர், போன்றவை
பல விஷயங்களைப் பற்றி – ( திருவாளர் ஜக்கி வாசுதேவ்
அவர்கள் உட்பட ) நிறைய எழுதுகின்றனவே.
நீங்கள் அந்த மீடியாக்களின் அலுவலகம் முன்பு போய்
நின்று, உங்களுக்கு பிடித்தவர்களைப்பற்றி எழுதக்கூடாது
என்று நீங்கள் போராடியது உண்டா…?

அல்லது எனக்கு எழுதுவது போன்ற ஆபாச கடிதங்களை
அவர்களுக்கு எழுதியது உண்டா…?

முயன்று பார்க்க வேண்டியது தானே…?
செய்திருந்தால், கம்பி எண்ணிக் கொண்டிருக்க
வேண்டி இருக்கும். ஏனெனில் –
எழுத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும்
நீங்கள் கொடுத்து வருவதல்ல…
இந்த நாட்டின் அரசியல் சட்டம் கொடுத்திருப்பது.

செய்தித்தாள்களில், வார இதழ்களில், உங்களுக்கு
பிடிக்காத மாதிரி எழுதப்பட்டிருந்தால், என்ன செய்கிறீர்கள்..?
அந்த இதழ்களை வாங்க மறுக்கிறீர்கள்….
அவற்றை தவிர்க்கிறீர்கள்…
அதையே இங்கும் செய்ய உங்களுக்கு
நான் ஆலோசனை கூற விரும்புவேன்….

உங்களுக்கு என் வலைத்தளத்தில் எழுதப்படுவது
பிடிக்கவில்லை என்றால் – படிக்காதீர்கள்…
இங்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்களாகவே follow /subscribe போட்டு,
இடுகைகளை வரவழைத்து படித்து விட்டு
பின் வருத்தப்படுவானேன்…?

இந்த வலைத்தளத்திற்கு வந்து இதையெல்லாம்
படிக்கும்படி யார் உங்களை
கட்டாயப்படுத்துகிறார்கள்…?

இந்த வலைத்தளத்திற்கு வருபவர்களை
மூன்று வகையில் பிரிக்கலாம்.

1) வந்து படித்து விட்டு, கருத்து எதுவும் தெரிவிக்காமல்
செல்பவர்கள்….( இவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள்.)

2) இதில் சொல்லப்படும் கருத்துக்களை ஆமோதித்து,
தங்கள் பங்குக்கு இன்னும் சில ஆதரவான கருத்துக்களையும்
பின்னூட்டம் மூலமாக சொல்பவர்கள்….

3) இதன் கருத்துக்களை ஏற்காமல், பின்னூட்டங்களின்
மூலம் எதிர்கருத்து சொல்பவர்கள்.

இந்த மூன்று பிரிவினரையும் இந்த தளம் வரவேற்கிறது.
பின்னூட்டம் எழுதுபவர்கள் யாரையும் நான் சாதாரணமாக
தடுப்பதில்லை….

அசிங்கமாகவும், ஆபாசமாகவும், தரக்குறைவாகவும்
பின்னூட்டம் எழுதுபவர்களை மட்டுமே தடை செய்கிறேன்…

அல்லது அவர்களது பின்னூட்டங்களை நீக்குகிறேன்.

இந்த விமரிசனம் வலைத்தளத்தில் நான் எதிர்பார்க்கும்
தரத்தை காப்பதற்காக நான் எடுத்துக் கொண்டுள்ள
உரிமை அது. இதை குறை சொல்ல யாருக்கும் உரிமை
இல்லை.

உங்களுக்கோ, நீங்கள் பரிந்து பேசும் நபருக்கோ,
வேறு யாருக்குமோ – இந்த தளத்தில் எழுதப்படும்
கட்டுரைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் –

தாராளமாக அதை பின்னூட்டங்களில்
– நாகரிகமான முறையில் – வெளிப்படுத்தலாம்.
மாறுபட்ட கருத்தை சொல்வதற்காக எந்த பின்னூட்டமும்
இந்த தளத்தில் தடை செய்யப்படுவதில்லை.
நீங்கள் இங்கு வெளியாகி இருக்கும் எந்த இடுகையில்
வேண்டுமானாலும் அதை நடைமுறையில் பார்க்கலாம்.

மாறாக, யாரோ ஒரு தனி மனிதருக்கு பிடிக்கவில்லை
என்பதற்காக,

எதையும் எழுதுவதோ – அல்லது
எழுதாமல் இருப்பதோ

என்னால் இயலாத செயல் என்பதை தயவுசெய்து
புரிந்து கொள்ளவும்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் –

இங்கு எழுதப்படும் கருத்துக்களில் உங்களுக்கு
உடன்பாடு இல்லை என்றால், நீங்கள் மாற்று கருத்து
கூற விரும்பினால் –
தாராளமாக பின்னூட்டம் மூலம் அதைச் செய்யலாம்.

ஒரே ஒரு condition –
தரமான, நாகரிகமான வார்த்தைகளில் அவை
தெரிவிக்கப்பட வேண்டும்… அவ்வளவே.

கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இந்த வலைத்தளம்
இயங்குகிறது. இங்கு எழுதப்படும் இடுகைகளை,
கருத்துக்களை பலர் வரவேற்கின்றனர்….
பலருக்கு நான் எழுதும் விதம் பிடிக்கிறது…
பலர் இதை ஒரு நல்ல கருத்து பரிமாற்றத்துக்கான,
தரமான விவாதத்திற்கான இடமாக பார்க்கின்றனர்.

இங்கு அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள்
வருகின்றனர். அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள்
வருகின்றனர். அனைத்து வயது, பொருளாதார பிரிவுகளை
சேர்ந்தவர்களும் வருகின்றனர்.

இந்த தளத்தின் மூலம் நான் ஆயிரக்கணக்கான
நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். அவர்களுடன் பல
விஷயங்களில் கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறேன்.
பல நண்பர்கள் அறிவார்ந்த சூழலில் செய்திகளை
தந்திருக்கிறார்கள்.
அவர்களால் நானும், என்னால் அவர்களும் – நல்ல
பலன்களை பெற்றிருக்கிறோம்.

இந்த தளத்தில் எழுதுவதால்,
என் அம்மா, மனைவி, மகள் போன்ற இல்லத்தினரை
அசிங்கமாக திட்டும் முதல் நபரை இப்போது தான்
சந்திக்கிறேன். மன பக்குவம் இல்லாத இந்த மனிதர்
தன்னை திரு.நித்யானந்தா, திரு.ஜக்கி வாசுதேவ்
ஆகியோரின் சீடர் என்று வேறு கூறிக்கொள்கிறார்.
அவரது குருமார்கள் இதைத்தான் அவருக்கு
கற்றுக் கொடுத்திருக்கிறார்களா…?

அவருக்கு பரிந்து, எனக்கு பின்னூட்டம் எழுதி இருக்கும்
நண்பர் அவரது இத்தகைய நடவடிக்கையை ஏற்கிறாரா…?
ஆதரிக்கிறாரா…?
இல்லையென்றால் – அந்த நபருக்கு புத்தி சொல்லும்
பொறுப்பை அவரே ஏற்பாரா…?

– இந்த கருத்துக்களை விவரமாக விவாதிக்க
ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக,
உங்களுக்கு நன்றிகளுடனும்,

– நண்பர்கள் அனைவருக்கும்
வாழ்த்துகளுடனும்,
காவிரிமைந்தன்
19/11/2016

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to “நீங்கள் ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியது தவறே…”

 1. Senthil சொல்கிறார்:

  கட்டினால் மட்டும் தானா…..??? க்கு 13 பதில்கள்

  Senthil சொல்கிறார்:
  4:26 முப இல் நவம்பர் 3, 2016

  Really….happy to read the post , happyness is not about the building demolished or the team’s achivement , It is that in the post that every one is praised and no one is being criticized.

  Happy becomes double to see this from KM sir,

  let us spread the positive vibrations.

  Nithyanandham
  senthil

  ———–
  Dear KM sir,

  The above too….. my comment and posted so many auspicious comments , in different names.

  Most of such comments were deleted…it is alright

  I already shared my mail id,mob number,native & place of work, So , why do I use different names? You might put my name and maid id in spam list , so that i couldn’t post. Thus,used different names.

  ——

  We all of us know about vinaviucom,nakkiran,sun tv etc…that they .are producing/fabricating sensational based news,not reality based.So,no one trust. & give no importance.

  if you see jaya news….they always trying to establish as tamilnadu become heaven like.if you see kalinger news….they always trying to establish as tamilnadu become hell like.So,we all know that they are party based one sided channels.So,no one trust. & give no importance.

  Kindly See how your fans comments in your blog.Their comments may be support or opposite to you,but, they trust you / giving much importance to your posts,including me.

  So,dont compare yourself to these paid medias.

  thanks

 2. Thanmanamigu Thamizhan சொல்கிறார்:

  Thamizhargalin maanbu pirarai mathithu thanilai arithal.

 3. Senthil சொல்கிறார்:

  மேல் குறிப்பிட்ட என் பழைய பின்னுட்டதை .காரணம் காட்டி, நல்லவன் போல் என்னை மெய்ப்பிக்க வில்லை காமை அய்யா…,

  தகாத வார்த்தை களால் எழுதியதும் நானே, என்னை நாய் என்றவரையும் நண்பனாக்கி லொள் லொள் என்றதும் நானே,

  உண்மையில் பார்த்தால்,என் தன்மை என்பது எல்லாமும் கலந்ததாக தான் இருக்கிறது…

  Thanks

  • B.V.Subramanian சொல்கிறார்:

   Senthil,

   காவிரிமைந்தன் அவர்கள் மிகத்தெளிவாக தன் நிலையை விளக்கி இருக்கிறார்.

   // நான் என் கருத்துக்களை இடுகைகள் மூலம்
   வெளியிடுகிறேன். நண்பர்கள் அவரவர்
   கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலம்
   தெரிவிக்கிறார்கள்.

   ஆக, அனைத்துவிதமான கருத்துக்களும்,
   வாசக நண்பர்களை சென்றடைகின்றன.

   எதை ஏற்பது, எதை ஏற்பதில்லை என்பதை
   முடிவு செய்வது வாசக நண்பர்களே.….!
   எதையும் யார் மீதும் திணிக்க முடியாது….//

   // உங்களுக்கு என் வலைத்தளத்தில் எழுதப்படுவது
   பிடிக்கவில்லை என்றால் – படிக்காதீர்கள்…
   இங்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
   நீங்களாகவே follow /subscribe போட்டு,
   இடுகைகளை வரவழைத்து படித்து விட்டு
   பின் வருத்தப்படுவானேன்…? //

   இதை விட விவரமாகவும், தெளிவாகவும் யாரும் எழுதி நான்
   இதுவரை படித்ததில்லை.
   ஆனால், நீங்கள் இவருக்கு செய்திருப்பது என்ன ?

   // இந்த தளத்தில் எழுதுவதால்,
   என் அம்மா, மனைவி, மகள் போன்ற இல்லத்தினரை
   அசிங்கமாக திட்டும் முதல் நபரை இப்போது தான்
   சந்திக்கிறேன். மன பக்குவம் இல்லாத இந்த மனிதர்
   தன்னை திரு.நித்யானந்தா, திரு.ஜக்கி வாசுதேவ்
   ஆகியோரின் சீடர் என்று வேறு கூறிக்கொள்கிறார்.
   அவரது குருமார்கள் இதைத்தான் அவருக்கு
   கற்றுக் கொடுத்திருக்கிறார்களா…? //

   உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நிஜமாகவே
   உங்கள் குருவிடமிருந்து நீங்கள் நல்ல
   விஷயங்களை கற்றிருந்தால், உடனடியாக காவிரிமைந்தன்
   சாரிடம் நீங்கள் செய்ததற்கு
   மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேலும் இது போல் எழுதுவதை
   உடனடியாக நிறுத்த வேண்டும்.

   உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இங்கு வருவதை
   நிறுத்தி விடுங்கள். அநாவசியமாக மற்றவர்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்காதீர்கள்>

   • senthil சொல்கிறார்:

    நீங்கள் ஒரு நடு நிலையான பொது வாசகர் …என்னை மதித்து , நீங்கள் இட்ட பின்னுட்டதுக்கு நன்றி…

    நீங்கள் எல்லோரும் சொல்வதை பார்த்தால்…

    நான் நன்று என்று நினைத்து செய்தது…

    உங்களால் தீமை என புரியப்பட்டுள்ளயது என்பதை அறிகிறேன்…..

    உங்கள் அனைவராலும் தீமை என புரியபட்டதால்.. …. நான் செய்தது தவறு என உணர்கிறேன்..

    நான் செய்த அனைத்திற்கும் காமை சாரிடம் மன்னிப்பு கோருகிறேன்….

    அவரது அபிமானிகள் , எனது செயளினால் மன வருத்தம் ஏற்பட்டிருக்குமாயின், மன்னியுங்கள்…

    I already written once to km sir that I try to avoid reading his blog…

    Don’t know why… I failed to follow what I said…

    I came again and all these happened…

    Sorry to all…

    Hope, I will never come back again…

    However, i am thanking all…

    Bye…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     அனைத்து நண்பர்களுக்கும்,

     இந்த விஷயம் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள்
     அனைவருமே தங்கள் நிலை குறித்து சிறப்பாக
     விளக்கம் அளித்து விட்டதால்,
     இது குறித்த விவாதங்களை
     இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று
     நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி
     தெரிவித்துக் கொள்வதோடு,
     இது குறித்து மேற்கொண்டு பின்னூட்டங்கள்
     எதுவும் வேண்டாம் என்று
     நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

     ——————————-

     நண்பர் செந்தில் அவர்களுக்கு –

     ..
     உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

     எந்தவித கசப்பு உணர்வும் இன்றி,
     உங்களுக்கு வாழ்த்து சொல்லி
     விடை பெற்றுக் கொள்கிறேன்.

     ஒரே ஒரு ஆலோசனை/வேண்டுகோள்….

     இது நிகழ்கால அரசியல், சமூக நிகழ்வுகளை
     விமரிசனம் செய்யக்கூடிய ஒரு தளம்.
     இங்கு பெரும்பாலும் சூடாகவும், எதிர்மறை
     கருத்துக்களோடும் தான் விவாதங்கள் நிகழும்.

     இதனை தாங்கிக்கொள்ளும் தன்மை
     நீங்களே சொல்லி இருக்கிறபடி –
     உங்களிடம் இல்லையென்பதால்,

     அநாவசியமாக பிரச்சினைகள் உண்டாவதை தவிர்க்க –
     தயவுசெய்து இந்த தளத்திற்கு வருவதையும்,
     இங்கு பின்னூட்டம் போடுவதையும் தவிர்த்து
     விடுங்கள்.

     இந்த விமரிசனம் தளத்திற்கு நீங்கள் follow
     போட்டிருப்பதை un-subscribe செய்து விட்டீர்கள்
     என்றால், இந்த கட்டுரைகள் உங்கள் Inbox-க்குள்
     தாமாகவே வந்து உங்களை தொந்திரவு செய்வதை
     தவிர்த்து விடலாம்.

     உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,
     அமைதியும், இனிமையும் தொடர
     என் நல்வாழ்த்துக்கள்.

     —————————————–

     -அனைவருக்கும் வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்
     20/11/2016

 4. Amuthan சொல்கிறார்:

  அய்யா நீங்கள் எழுதுவது தவறு என்று கூற வில்லை. அந்த கருத்துக்கு மட்டுமே மறுப்பு தெரிவித்தேன். அதுவும் என்னுடைய கருத்து சுதந்திரம் தானே. மேலும் நீங்கள் யாராவது ஏதாவது கருத்துக்கு விருப்பம் / வெறுப்பு தெரிவித்தால் நீங்கள் அதை வைத்துக் கொண்டு நீங்கள் அந்தகே கட்சியை/ அவருடைய ஆதரவாளர் என கூறுவது தவறு. அதைத் தான் கூறினேன். நீங்கள் முழுவதும் கருத்துக்கு முக்கியத்துவம் கொண்டுங்கள். நீங்கள் எப்படி நடுநிலையோடு உங்கள அறிவிற்கு உட்பட்டதை உணர்வுக்கு இடம் இன்றி அறிவிக்கு இடம் கொடுத்து எழுதுவீர்களோ அந்த அளவிற்கு ஒரு சிலரும் பின்னூட்டம் இடுவார்கள். நீங்கள ஒரு சாராரை எதிர்த்து எழுதுவதால் நீங்கள் அவருக்கு ஆதரவாளர்/அந்த கட்சியை சார்ந்தவர் என்றாகி விட முடியாது அல்லவா?? அது போலவே பின்னூட்டம் இடுபவர்களும். அதற்காக நான் ஆபாசமாக பின்னூட்டம் இடுபவர்களுக்குகாக பரிந்து பேச வில்லை. சரியானா முறையில் பின்னூட்டம் இடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  மேலும் நான் தங்களை வருத்தப்படும் படி இதுவரையில் ஏதேனும் எழுதி இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறுபடியும் நான் கூறுகிறேன், கண்டிப்பகா நீங்கள் விமர்சினம் எழுதுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஏன்என்றால் நீங்கள் இதுவரையில் பாரபட்சமின்றி அனைத்தையும் எழுதுவீர்கள் என எனக்குத் தெரியும், அதற்கு யாரும் விதி விலக்கல்ல.

 5. natchander சொல்கிறார்:

  senthil iyyah
  go and consult a psychiatrist for your mental illness. …

 6. senthil சொல்கிறார்:

  அன்புள்ள ஐயா…

  கடவுள் இருக்கான் குமாரு மூவி…சினி சிட்டி தியேட்டர் ல பார்த்திட்டு இருக்கேன்…இப்ப பாட்டு ஓடுது…

  அதனால் ….மொபைல் ஆன் பண்ண சான்ஸ் கிடைச்சுது….உங்க அட்வைஸ் பார்த்தேன்…

  உடனே போகணுமா? படம் முடிந்ததும் போனால் பரவ இல்லையா?

 7. Suresh Ramachandran சொல்கிறார்:

  Dear Mr.K.M.

  It is a hard nut to crack.
  It seems that NOBODY can change him.

  Arivaaligaludan deal pannalaam.
  Muttaalgaludanum deal pannalaam.

  AANAAL thannai ARIVAALI yenru ninaithukondu seyalpadum
  MUTTAALUDAN deal seivathu miga miga kadinam.

  It is nice that Mr.Amuthan gave an opportunity
  to all of us to to know the real size of this person.

  I suggest you go ahead with your plan.
  You can send a mail to me anytime.
  I am ready to help you.

 8. மிகத்தெளிவாக பெருந்தன்மையுடன் இருக்கின்றது ஐயாவின் விளக்கம் இதுதான் வயதின் அனுபவம் – கில்லர்ஜி

 9. Woraiyur Pugal சொல்கிறார்:

  தெளிவான விளக்கம் நீங்க தொடருங்க தலைவரே

 10. selvarajan சொல்கிறார்:

  முந்தைய இடுகைக்கு நான் இட்ட பின்னூட்டமே இந்த இடுக்கைக்கும் — பொருந்தும் என்பதால் — அதை அப்படியே இங்கேயும்:– // selvarajan சொல்கிறார்:
  7:59 முப இல் நவம்பர் 19, 2016

  திரு கா.மை அவர்களின் தளத்தின் பெயர் ” விமரிசனம் ” என்பதுதான் …. செய்தி தாள்களில் — ஊடகங்களில் — தின நடைமுறை எதார்த்தங்களில் இருந்து பல செய்திகளை — அவரது பாணியில் இடுக்கையாக வெளியிட்டு விமரிசிக்கிறார் என்பதை புரிந்தவர்கள் — அறிந்தவர்கள் அவரை ” தனிமனித தாக்குதல்களை ” தொடுக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம் ….

  ” அனைத்துக்கும் ஆசைப்படு ” என்றவரும் — ” கதவைத் திற காற்று வரட்டும் ” என்றவரும் எவ்வளவோ சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு — விமரிசனங்களுக்கும் — ஊடகங்களின் தாக்குதல்களுக்கும் — பல எதிர் நடவடிக்கைகள் எழுந்த போதும் — எந்தவித எதிப்பும் தெரிவிக்காமல் — அவர்களது மையங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் — அதன் காரணம் என்னவென்றால் — ” மனப்பக்குவம் ” அடைந்து விட்டவர்கள் என்று வெளியே காட்டுவதற்க்காக கூட இருக்கலாம் …..

  அப்படிப்பட்டவரை { ர்களை } தன்னுடைய ” குரு ” என்று கூறிக்கொள்ளுபவர்களுக்கு ஏன் அந்த வித மனப்பக்குவம் ஏற்படவில்லை என்பதை பற்றி சிஷ்யர்கள் தான் சிந்திக்கவும் பதில் அளிக்கவும் வேண்டும் ….

  விமரிசனங்களை தாங்கி கொள்ளாமல் தனிமனித தாக்குல்களை குருமார்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா … ? இந்தவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து — ஈஷா மையத்தைப்பற்றி இடுக்கை வெளியிட்டதில் இருந்து — இன்றுவரை திரு கா.மை .அவர்களை விகார மனதுடன் — விரசமாக — ஆபாசமாக விளித்து ” பல பின்னூட்டங்களை ” பதிவிட்டுக்கொண்டே இருக்கும் — நண்பர் தனது குருவை பற்றியும் — அவரது பக்குவ நிலையை பற்றியும் — அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தான் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளுகிறோம் என்பதைப்பற்றியும் சிந்தித்து இருக்கிறாரா … என்பதே ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது ….

  திரு கா.மை. அவர்கள் ஏதோ புதிதாக கண்டுபிடித்து எழுதியைப்போல நினைத்து கண்டமேனிக்கு பின்னூட்டம் இடும் அந்த நண்பர் — கா.மை. மேற்கோள் காட்டியுள்ள ” சவுக்கு — நக்கீரன் ” போன்ற இன்னும் பல தளங்களில் அவரது குருவைப்பற்றி — கடுமையான செய்திகள் பதிவான போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – என்பது அவருக்கே வெளிச்சம் …..

  விவாதங்களை விரிவாக — ஆணித்தரமாக எடுத்துக்கூறுவது அனைவருக்கும் பயன்படும் — ஆனால் விதண்டாவாதமாக — விரசமாக — தனிமனித தாக்குதல் என்பது ஒருவருக்கு இழுக்கை தான் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தால் — யாருக்கும் மன வருத்தம் ஏற்படாது …. அல்லவா .. ?

  பக்குவப்பட்ட மனதோடு — தனிமனித தாக்குதல்களை விடுத்து — அனைவரையும் அரவணைத்து — ” அனைத்துக்கும் ஆசைப்படு ” என்றால் — நல்லது தானே …. ?.

 11. தமிழன் சொல்கிறார்:

  “விமரிசனம்” என்பது உங்கள் தளத்தின் உரிமை. எதையுமே விமரிசித்தால் சிலர் ரசிப்பார்கள், பலர் எரிச்சல் கொள்வார்கள். இடுகையின் தலைப்பைப் பொருத்து, ‘சிலர்’ பலராகவும் ‘பலர்’ சிலராகவும் மாறும். யாருக்கும் கருத்துவேறுபாடு வரக்கூடாது என்றால் எதையும் எழுத இயலாது.

  உங்கள் கருத்து மாறுபட்டிருக்கும்போதுகூட அது உங்கள் கருத்து என்பதாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். தொடருங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பொதுவாக அனைத்து நண்பர்களுக்குமே,

   இந்த வலைத்தளத்தின் மூலம் தனிப்பட எனக்கு நிறைய
   நட்புகள் கிடைத்திருக்கின்றன. சில நண்பர்கள் என்னுடன்
   தனிப்பட்ட முறையிலும், கருத்துப் பரிமாற்றங்கள்
   நிகழ்த்தி வருகிறார்கள்.

   இந்த தளத்தில், இடுகையில் நான் சொல்லும்
   கருத்துகளுக்கு மாற்றாக அல்லது எதிராக எதாவது
   கருத்து சொல்வதனால், அந்த நட்பு கெட்டு விடுமோ
   என்கிற தயக்கம் நண்பர்கள் யாருக்கும் வேண்டாம்.

   ஒரு விஷயத்தில் எல்லாருமே ஒரே மாதிரி கருத்து
   கொண்டிருக்க மாட்டார்கள். ஒரே குடும்பத்தில் கூட,
   ஒவ்வொருவர் ஒவ்வொரு கட்சியின் சார்பாக
   பரிந்து விவாதிப்பதை நம் இல்லங்களிலேயே பார்க்கலாமே.

   நாம் நெருங்கிப் பழகும் நண்பர்களின் குழுவில் கூட
   பல சமயங்களில் கருத்து மோதல்கள் வெடிப்பது சகஜம்.

   ஆனால், இவை எதுவுமே, உறவையோ, நட்பையோ
   எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதில்
   நான் தெளிவாக இருக்கிறேன்.

   இது தனி… அது தனி…

   அதே தெளிவு இந்த தளத்தில் பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கும் இருக்கும் என்பதில் எனக்கு
   எந்தவித சந்தேகமுமில்லை.

   எனவே, மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்களை
   சொல்கிறோமே என்று யாரும் தயங்க வேண்டாம்.
   இந்த தளத்தில் பல்வேறு வகையான
   கருத்து பரிமாற்றங்களை
   நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

   எல்லாரும் நான் சொல்வதை ஏற்க வேண்டும்
   என்று நான் எதிர்பார்ப்பதும் இல்லை….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.