“ஆதிசங்கரரின் ஜென்ம பூமி” ….

k-1

ஆன்மிகத் தேடல்களை எல்லாம் அறுபது வயதுக்குப்
பிறகு வைத்துக் கொள்ளலாம் என்பது பொதுவாக
நம்மில் பெரும்பான்மையோரின் எண்ணம்.

ஆனால், அறுபதுக்குப் பிறகு தேடித்தெரிந்து கொள்வதை,
முப்பதிலோ – நாற்பதிலோ, ஓரளவாவது உணர்ந்து
கொண்டால் –

நடுவயதிலேயே வாழ்க்கைப் பயணம்
இன்னமும் கொஞ்சம் சுலபமாகவும், பாரம் குறைந்தும்,
அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்….

என் தேடல் முப்பதின் முடிவுகளிலேயே மெல்ல, மெல்ல
துவங்கி விட்டது. திருமுருக கிருபானந்தவாரியார்,
புலவர் கீரன், ஆகியோரின் கவர்ந்திழுக்கும் தமிழ்
உரைகளில் துவங்கியது –

சுவாமி சின்மயானந்தரின் ஆங்கிலத்திலான
கீதை விளக்க கூட்டங்களில் (Gita Gnana Yagna…)
கொண்டு போய் விட்டது.

கீதை கூறும் பாதையை, மிக எளிய நடையில்,
அனைவரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும்,
இடையிடையே நிறைய நகைச்சுவை கலந்தும்
உரையாற்றுவார் சின்மயானந்தர்.

swami-chinmayananda-ji

ஹிமாசல பிரதேசத்தில்,
இமயமலையின் அடிவாரத்தில்,
சித்பாரி-சந்தீபானி என்கிற இடத்தில் சின்மயானந்தரின்
சமாதி இருக்கும் சின்மயா ஆசிரம
கிளை ஒன்று இருக்கிறது.

15-20 வருடங்களுக்கு முன்னர், அந்த ஆசிரமத்திற்கு
சென்று ஒரு வார காலம் தங்கியிருந்து, அந்த சந்நியாச
வாழ்க்கையின் கட்டுப்பாடுகளுடன் வாழப்பழகி,
“அத்வைதம்” குறித்து அறிந்து கொள்ள முயன்றேன்.
மூத்த சந்நியாசிகள் மிக அழகாக பாடம் எடுத்தனர்.
கேட்கும்போது எல்லாம் புரிந்தது போலத்தான் இருந்தது.
ஆனால் பின்னால் யோசித்தால் – உணர்ந்து கொண்டது
மிக மிக, மிக மிக கொஞ்சமே…!!!

இப்போது நிறைய வசதிகள் வந்து விட்டன….
அத்வைதத்தைப்பற்றி அற்புதமான விளக்கங்கள்
எல்லாம் வலைத்தளத்திலேயே இருக்கின்றன.
என் அறிவைக்கொண்டு நான் அதையெல்லாம் விளக்க

முயல்வது என் அறியாமையையே வெளிப்படுத்துவதாக
அமையும்.

——————-

அத்வைதத்தை இந்த உலகிற்கு போதித்த மகான்
அந்த ஆதிசங்கரர்.

shankaracharya-statue

இதிகாச புராண பாத்திரங்கள் போல் அல்லாமல் –
சங்கரர் என்பவர் இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து,
பாரதம் முழுவதும் குறுக்கிலும், நெடுக்கிலும்
பலமுறை யாத்திரை சென்று, பல நூல்களை
இயற்றி, பல மடங்களை ஸ்தாபித்த
ஒரு சரித்திர நாயகன்.

அவர் பிறந்த நூற்றாண்டைப்பற்றி வேண்டுமானால்
இன்னும் சர்ச்சைகள் இருக்கலாம்…

ஆனால், அவரது செயல்களைப்பற்றி,
அற்புதமான சாதனைகளைப் பற்றி –
யாருக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது.

சங்கரர் எழுதியவற்றிலேயே மிக உயர்ந்ததாக
கருதப்படுவது – காசியில் இருக்கும்போது
அவர் இயற்றிய “பஜகோவிந்தம் ”

பலருக்கும் தெரிந்தது தான் …
மீண்டும் இங்கு ஒருமுறை அதன் சாராம்சத்தை
நினைவுகொள்வோமே –
———————–

முதுமை வந்த பிறகு ஆண்டவனை நினைக்கலாம்
என்று நினைத்து, சம்சார சாகரம் என்னும் மாயையில்
மூழ்கிக் கிடக்காதே முட்டாள் மனிதனே…

இறுதிக் காலத்தில் நீ நினைத்தாலும், இறைவனின்
நினைப்பு அவ்வளவு சுலபமாக வந்துவிடாது.

மங்கையரின் நினைப்பில் மனதை வீழ்த்தி விடாதே…
மோக சுகத்தில் மயங்கி விடாதே…

பணத்தை சம்பாதிக்க படாதபாடெல்லாம் பட
வேண்டியிருக்கிறது. அப்படி அரும்பாடு பட்டு
சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதோ,
அதைவிட சிரமமாக இருக்கிறது….

அவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில்,
ஒரு சல்லியைக் கூட கடைசியில் நீ போகும்போது
கொண்டு போக முடியாது.

சம்பாதிக்கிற வரை தான் உன் சொந்தங்கள்
உன் கூட இருக்கும்…
உன்னுடைய இறுதிப்பயணத்தில் உன் கூட
யார் வரப்போகிறார்கள்….

நீ ஆசை ஆசையாய் வளர்க்கும் மகன் வருவானா…?
ஆயுள்காலமும் துணையிருப்பேன் என்று சொன்ன
மனைவி கூட வருவாளா…?

இறுதியில் நீ அத்தனையையும் இங்கேயே
விட்டு விட்டு,
தனியே தான் போக வேண்டும்…

எனவே ஆசையை அறுத்து
நல்லெண்ணங்களால் –
உன் மனதையும், மூளையையும் நிரப்பு….
செல்வத்தின் மீது ஆசை வைக்காதே.
நற்செயல்களில் ஈடுபடு.

மீண்டும் மீண்டும் மரணம்,
மீண்டும் மீண்டும் அன்னையின் மூலம் பிறப்பு –
இந்த பிறவிக்கடலை விட்டு வெளியே வர,
இறைவனின் துணையை நாடு.

எங்கிருந்து வந்தாய் நீ,
எங்கே மீண்டும் போகப்போகிறாய்… யோசி

எனவே, இளமையிலேயே ஆண்டவனை நினை.
நல்ல எண்ணங்களால் உன் சிந்தையை நிரப்பு…
நல்ல செயல்களில் ஈடுபடு…

————————————————–

பஜகோவிந்தத்தை பாடல் வடிவில் திருமதி எம்.எஸ்.
அவர்கள் பாடி, வெளிவந்த இசைத்தட்டில்,
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தனது குரலிலேயே
ஆங்கிலத்தில், ஒரு அறிமுக உரை கொடுத்தார்….

அந்த உரை –

“Adi Sankaracharya wrote a number of Vedantic works
for imparting knowledge of the Self and the Universal Spirit.
He also composed a number of hymns to foster Bhakti
in the hearts of men.

One of these hymns is the famous Bhajagovindam.
The way of devotion is not different from the way of knowledge
or Jnana. When intelligence matures and lodges securely
in the mind, it becomes wisdom. When wisdom is integrated
with life, and issues out in action, it becomes Bhakti.

Knowledge, when it becomes fully mature, is Bhakti.
If it does not get transformed into Bhakti,
such knowledge is useless tinsel.

To believe that Jnana and Bhakti, knowledge and devotion,
are different from each other, is ignorance.
If Shri Adi Sankara himself who drank the ocean of Jnana
as easily as one picks water from the palm of one’s hand,
sang in his later years hymns to develop devotion,
it is enough to show that Jnana and Bhakti are one and the same.

Sri Sankara has packed into the Bhajagovindam song
the substance of all Vedanta, and set the oneness of Jnana
and Bhakti to melodious music.”
————————————————————

பஜகோவிந்தம் பாடலை கேட்கும்போதெல்லாம்
நாம் இன்னமும் சங்கரர் பிறந்த மண்ணான “காலடி”யை
தரிசிக்கவில்லையே என்கிற உணர்வு எனக்குள்
தோன்றிக் கொண்டே இருக்கும். கடந்தவாரம்
அந்த பாக்கியம் கிடைத்தது.

அங்கு நான் எடுத்த சில புகைப்படங்களை,
மேலேயும் கீழேயும் உங்கள் பார்வைக்காக
பதிப்பித்திருக்கிறேன்…

..

k-2-krishnar-koil

சங்கரர் 8 வயதில் சந்நியாசம் பெற்றுக்கொண்ட "பூர்ணா" நதி

சங்கரர் 8 வயதில்
சந்நியாசம் பெற்றுக்கொண்ட
“பூர்ணா” நதி

சங்கர மடத்தின் பின் பகுதியும், பூர்ணா நதியும்

சங்கர மடத்தின் பின் பகுதியும், பூர்ணா நதியும்

சங்கரர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில்

சங்கரர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில்

காலடியில், காஞ்சி சங்கர மடம் எழுப்பியுள்ள நினைவு ஸ்தூபி

காலடியில், காஞ்சி சங்கர மடம் எழுப்பியுள்ள நினைவு ஸ்தூபி

காஞ்சி ஸ்தூபியில் - சங்கரர் திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் காட்சி ஓவியம்

காஞ்சி ஸ்தூபியில் –
சங்கரர் திருச்செந்தூர்
முருகனை தரிசிக்கும் காட்சி ஓவியம்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “ஆதிசங்கரரின் ஜென்ம பூமி” ….

  1. Ganesan சொல்கிறார்:

    Thanks for the article.

  2. vignaani சொல்கிறார்:

    God bless you to continue your excellent work.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.