திரு.சு.வாமி, திரு.ஜெட்லி – Who is going to be OUT …?

arun-jaitley

தான் உட்கார வேண்டிய நிதியமைச்சர் பதவியில்
விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் திரு.அருண் ஜெட்லியை

திரு.சு.சுவாமிக்கு சுத்தமாக பிடிக்காது என்பது
அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

திரு.ஜெட்லியை அங்கிருந்து வெளியேற்ற,
அந்த இடத்தை தான் பிடிக்க,
தன்னால் இயன்ற அனைத்தையும்
செய்து வருகிறார் சு.சுவாமி.

நேற்று வந்திருக்கும் ஒரு பத்திரிகைச் செய்தி கீழே –

—————

‘நிதிநெருக்கடிக்கு ஜெட்லி பொறுப்பேற்க வேண்டும்’:
சுப்ரமணிய சுவாமி!

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு
அறிவித்ததால் இந்தியர்கள் பெரும் துயரங்களுக்கு
ஆளாகியுள்ளார்கள். இது குறித்து பாஜக எம்பி
சுப்ரமணியன் சுவாமி ‘மத்திய அரசு திட்டமிடாமல்
காரியத்தில் இறங்கிவிட்டது’ என்று ஹாங்காங்கிலிருந்து
வெளிவரும், ‘திஸ் வீக் இன் ஆசியா’ என்ற பத்திரிகைக்கு
பேட்டி கொடுத்திருந்தது குறித்து ஏற்கனவே செய்தி
வெளியிட்டிருந்தோம்.

இப்போது மீண்டும் நிதியமைச்சகம் குறித்து விரிவான
விமர்சனத்தை முன் வைத்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

“இந்தியாவில் தற்போது நிலவும் நிதிநெருக்கடிக்கு-

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,
பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,
பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ்

-ஆகியோரின் முன்னேற்பாடு இல்லாத செயலே
காரணம். ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது
வரவேற்கப்பட வேண்டியது. அதில் எந்த மாற்றுக் கருத்தும்
இல்லை. பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியை
தடுக்க எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கை.
அரசின் இந்த நடவடிக்கையால் இனி ஓராண்டிற்காவது
பயங்கரவாத நிதி, கள்ள நோட்டுக்கள் உள்ளே வர முடியாது.

இதற்கான ஏற்பாடுகள் 2014ம் ஆண்டு மே மாதத்திற்கு
பிறகே தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர்
எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இருந்ததே
இந்த அறிவிப்பு தாமதமானதற்கு காரணம்.

தற்போது அவசர கதியாக அனைத்தையும் செய்துள்ளனர்.
பண தட்டுப்பாடு, மக்களின் சிரமங்களை குறைக்க
ஜெட்லி எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை.

அரவிந்த் சுப்ரமணியனையும், சக்திகாந்ததாசையும்
பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நான் கூறினேன்.

ஆனால் ஜெட்லி அவர்களை காப்பாற்றினார்.

ஆனால் அவர்கள் இதுவரை எந்த வேலையும்
செய்யவில்லை. மக்களின் சிரமங்களை தடுக்கும்
நடவடிக்கையில் இறங்குவதற்கு பதில் சும்மாவே
அமர்ந்திருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாட்டிற்கு யாராவது
பொறுப்பேற்று தான் ஆக வேண்டும் ”
என தெரிவித்துள்ளார்.

——————————-

மத்திய நிதியமைச்சர் பொறுப்பு என்பது மிகவும்
மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும், அந்தஸ்தும்
உள்ள ஒரு பொறுப்பு. மத்திய அரசில் பிரதமருக்கும்,
உள்துறை அமைச்சருக்கும் அடுத்து 3-வது இடத்தை
அவர் வகிக்கிறார்.

இத்தகைய பொறுப்பில் இருக்கும்
பெரிய பாஜக தலைவரான திரு.ஜெட்லியை ,
அதே கட்சியை சேர்ந்த வேறு எம்.பி. யாராவது
இவ்வாறு தரம் தாழ்த்தி, குறைகூறிப் பேசினால்,
கட்சி அந்த எம்.பி.யை சும்மா விட்டு வைத்திருக்குமா…?

கட்சியை விட்டு வெளியேற்றுவதையோ,
தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதையோ –
விடுங்கள் –

குறைந்த பட்சம் – பிரதமர் மோடிஜியோ,
பாஜக அகில இந்திய தலைவர் திரு.அமீத் ஷா’வோ
அந்த எம்.பியை “பொது வெளியில் இவ்வாறு
குறைகூறுவது தவறு” என்று கண்டித்தனரா…?

ஏன் செய்யவில்லை….?

திருவாளர் சு.சுவாமி –
திரு.ஜெட்லியை குறைகூறுவதன் மூலம்,
பிரதமரின் மீது வரும் குற்றச்சாட்டு –
பிரதமருக்கு வசதியாக திரு ஜெட்லியின்
மீது திசை திருப்பப்படுகிறது….. என்பது தான் காரணமா…?

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற நடவடிக்கைகள்
சம்பந்தமாக, நிதியமைச்சக அதிகாரிகளை பிரதமரே
நேரடியாக தொடர்பு கொண்டு வழிநடத்துகிறார்
என்பதால் –

ஒருவகையில், சு.சுவாமியின் தாக்குதல் –
மத்திய அரசின் செயல்பாட்டை பற்றிய விமரிசனம்,
பிரதமருக்கும் பொருந்தும்.

மோடிஜியின் மீது வரக்கூடிய தாக்குதல்களை –
திசை மாற்ற சு.சுவாமி உதவுகிறார் என்பதால் –

திரு.அருண் ஜெட்லி அவமானப்பட்டாலும் பரவாயில்லை
என்று மோடிஜியும், பாஜக தலைவரும் சு.சுவாமியை
கண்டிக்காமல் சும்மா இருக்கிறார்களா….?

திரு.அருண் ஜெட்லி, இந்த அவமானப்படுத்துதலையும்,
சொந்த கட்சியை சேர்ந்தவரின் மரியாதைக்குறைவான
இந்த தாக்குதல்களையும்,

தேவையே இல்லாமல், எவ்வளவு காலம், ஏன் –
பொறுத்திருப்பார்….?

திரு.அருண் ஜெட்லி, மோடிஜியிடம் தன் எதிர்ப்பை
தெரிவித்தால் அதன் பிறகு என்ன நடக்கும்….?

ஒன்று மோடிஜி, திரு.சு.சுவாமியை வெளிப்படையாக
கண்டிப்பார்…..

தவறினால், திரு.அருண் ஜெட்லி தனது பதவியை
ராஜினாமா செய்வார்….

எது நடக்கப் போகிறது….?

————————————–

பின் குறிப்பு –

– ஒரு வேளை யாருக்கும் சொரணை இல்லாமல்,
ஒன்றுமே நடக்காமல் இருந்தாலும் இருக்கலாம்….
“அரசியலில் இதெல்லாம்……….” !!!

அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்குவது
இப்போது தானா புதிதாக நடக்கிறது…? )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to திரு.சு.வாமி, திரு.ஜெட்லி – Who is going to be OUT …?

 1. selvarajan சொல்கிறார்:

  ஒருவருக்கு ” கிரடிட் ” மற்றோருவருக்கு ” டெபிட் ” … ? நடுவுல சு.சா . என்கிற கில்லாடி …! அதெல்லாம் உள் { குத்து } கட்சி பூசல் என்று மழுப்பிவிட — ஆட்கள் ரெடியாக இருப்பார்கள் … !!

  தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் — வெளிநாட்டு வங்கிகள் என்று பலவித வங்கிகள் இந்த இக்கட்டான நேரத்தில் செயல் பட்டாலும் …. ஒரு சொரணையுள்ள ” கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் துணிச்சலாக விமரிசனம் செய்துள்ளது — அந்த செய்தி ….. // மோடியை விமர்சிக்கும் வங்கி யூனியன் // http://www.vikatan.com/news/tamilnadu/72934-rrbea—pandian-village-bank-workers-union-boldly-criticises-modis-demonetisation.art#vuukle_div ….. இது எப்படியிருக்கு … ?

 2. selvarajan சொல்கிறார்:

  // ரூபாய்க்கு பதில் புதிய பணம் – மிசோரம் மக்களின் பலே ஐடியா! // — http://www.vikatan.com/news/india/72925-alternate-idea-for-currency-by-mizoram-people.art …. இந்த ஐடியா .. நல்லாயிருக்கே — ஆளில்லாத கடைகளை கொண்ட நாடு — தற்போது செல்லாத நோட்டு விவகாரத்தை சமாளிக்கும் முறை — சூப்பர் … அப்படித்தானே …. ?

 3. LVISS சொல்கிறார்:

  This is not the first time you are writing about the two – What Mr Swamy says every one is saying so it is nothing new —That It could have been handled better –But in the given circumstances this is the most a govt can do –I agree with Mr .Jaitley on this – The ATM cannot be calibrated preceeding the announcement as that would have definitely aroused suspicion and word would have spread that something is in the offing— Even for that the ATM operation would have required to be calibrated and the operation of ATM suspended for a few days — Even now they are filling up the ATM with 2000 notes — In some ATMs 100 notes are already –In these ATMs if you draw less than 2000 you may get in 100 rupee notes — I heard one man saying this -I must test it to confirm this — The limit for withdrawal may be increased if 500 rupee notes are loaded in the ATMs
  –Even on normal days one would have observed not all ATMs are functional — No one noticed it or felt it because there were many others to fall upon–
  Another thing that we hear is that rural areas people do not have banks –In Yercaud which is a tribal area there three to four banks catering to about 50 plus hamlets – In Each household , though not all, at least one person with land holding will be having some loan account –Most of them have SB accounts also —
  Then there was a question why replace 1000 with 2000 rupee notes -In an interaction with students in a TV programme Mr. Bibek . a member of the NITI Ayog explained why this was done—–
  According to a news item yesterday about 80 % of the notes that were withdrawn from circulation have been replenished –This is probably value wise because now there are 2000 rupee notes instead of 1000 rupee notes -This also explains why the limit for exchange was reduced to 2000 – — When some more percentage .say 90 to 95 % of old notes come in, the exchange amount may be still reduced or totally abolished — There wont be any need to continue the exchange –Then till Dec 30 the notes could be credited into an account –After that date we may know the approximate value of notes burnt or sent floating in Ganga —
  The link below may be of some interest to know about what the govt was doing before the announcement was made —

  http://www.businessinsider.in/Mysores-little-airport-secretly-regulatedchartered-flights-to-ferry-all-Rs-2000-notes-from-the-mint/articleshow/55389035.cms

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   வழக்கம்போல் சௌகரியமாக விஷயத்தை
   திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்…. 🙂

   நான் கேட்டது simple கேள்வி –

   திரு.சு.சுவாமி, திரு ஜெட்லியை குறை கூறுவது -அதாவது,
   ஒரு கட்சியின் எம்.பி. அதே கட்சியின் மூத்த அமைச்சரை
   பொது வெளியில் குறை கூறுவது சரியா…?

   இதை பிரதமரும், பாஜக தலைவரும்
   ஏன் கண்டிக்கவில்லை ?

   ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை…?

   அவர்கள் சு.சுவாமி கூறுவதை ஏற்றுக் கொள்கிறார்களா…?
   நிதியமைச்சகம் சரியாக செயல்படவில்லை என்று
   சு.சுவாமி சொல்வதை ஏற்கிறார்களா…?
   மறைமுகமாக பிரதமரும் கூடத்தானே அதற்கு பொறுப்பு…?

   இல்லை திரு.அருண் ஜெட்லியை scape goat ஆக்க
   பிரதமரும் முயற்சிக்கிறாரா…?

   கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பார்ப்போம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    A member of the party criticising another is nothing new – –If you expect the party to take any action the fault does not lie with the party because no party does that –You and I cannot force a party to take action against a member by repeatedly wring about it -They dont run according to our writs –We may have axe to grind but parties function in the way we want- –From what I could make out the PM respects to both Mr Swamy and Mr jaitley –Dont expect him to take sides , he will disappoint you — You are imagining that the PM would do this and that –Nothing of that sort is going to happen –He is much more balanced person than what you and I think —
    What do you mean by indirectly responsible —
    Who is the scape goat What is the meaning of the word scape goat –Who is blaming whom –The PM wont find fault with the ministry –He is convinced that he has taken the correct decision and the ministry is implementing it –He is willing to face the consequences of his decision —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   இது உங்கள் மறுமொழியில் கூறும் இன்னொரு விஷயம்…
   கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, விமானம் மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்த சாமர்த்தியம் பற்றியது…..

   ஆக ஏழு மாதங்களாக நோட்டு அச்சடித்துக் கொண்டிருந்தார்கள், பற்றாக்குறை எதுவும் இல்லை
   என்று சொல்லப்படும் செய்தியை
   நீங்கள் நம்புகிறீர்கள்… அப்படித்தானே…?

   உங்களைப் போன்ற படித்த பெரியவர்கள் எல்லாம்
   reel -க்கும் real -க்கும் வித்தியாசம் தெரியாமல்
   இருக்கலாமா…?

   நான் எழுதும் கட்டுரைகளை கண்ணில் விளக்கெண்ணை
   இட்டுக்கொண்டு படித்துப்பார்த்து, உடனுக்குடன்
   விளக்கம் கொடுக்கிறீர்கள்… மகிழ்ச்சி…

   ஆனால் முக்கியமான விஷயங்களில் பொய்யை
   நிஜமென்று நம்பி கோட்டை விட்டு விடுகிறீர்களே….

   ரிசர்வ் வங்கியின் கவர்னராக திரு.உர்ஜித் படேல்
   பதவியேற்றுக் கொண்டது –
   செப்டம்பர், 6, 2016 அன்று தான்…
   அதாவது சுமார் இரண்டரை மாதங்கள் தான் ஆகின்றன.

   அவர் கவர்னராக கையெழுத்து போட்ட
   நோட்டு எப்படி ஏழு மாதங்களுக்கு முன்னரே
   அச்சடிக்கப்பட்டிருக்கும்…..???

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    To believe a news report or not is your prerogative– I dont want to argue with that —
    I go thro all your blogs with equal interest Where I think I can put in my views I do it -And I normally back it up with a link so that you wont say I made it up —

    Explanation for printing 2000 note was already given –You may get to see the explanation for Urjit Patel signature in the notes –He was named as governor on Aug 20—However I am also waiting to see the answer for this —
    You have not mentioned about another controversy, spelling mistake in the notes –There is mention of the value of the notes in two languages which look similar -One says ‘Don hazar rupaye ” and another “Dhuyi hazar rupiyon” One is said to be konkani and the other is marathi —
    The report says six months and you have made it 7 months —

    • Ramasubbu சொல்கிறார்:

     Mr.LVISS,

     // What do you mean by indirectly responsible — Who is the scape goat
     What is the meaning
     of the word scape goat ––//
     Don’t you really understand the meaning of these terms ?

     the plan is announced by pm.
     Implementation is the responsibility of finance ministry.
     But Officials of Finance Ministry, are directly being
     instructed / controlled by pm and not by the fm.
     So if there is a flaw, failure in its execution,
     the blame should go to pm also and not fm alone.
     thus pm is indirectly responsible for failure in execution.

     // Who is blaming whom //

     mr.s.swamy is blaming the finance minister arun jaitly,
     chief economic adviser mr.arvind subramanian and
     economic affairs secy.mr.sakthi kantha das ( only ).

     while positive aspects are attributed to pm
     negative aspects are passed on to these persons.
     thus these three people are made scape goats
     for any failure.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப எல்விஸ்,

     என் கேள்விகளையும், நீங்கள் அளித்துள்ள
     விளக்கங்களையும் தயவுசெய்து இன்னுமொரு
     முறை படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

     உங்கள் விளக்கம் உங்களுக்காவது
     திருப்தியாக இருந்தால் சரி…

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 4. B.V.Subramanian சொல்கிறார்:

  ஹூ ஹூம் – திருத்தவே முடியாது.
  காவிரி சார், முடிந்தால் நீங்கள் திருந்திக் கொள்ள
  வேண்டியது தான். 🙂

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  /*– ஒரு வேளை யாருக்கும் சொரணை இல்லாமல்,
  ஒன்றுமே நடக்காமல் இருந்தாலும் இருக்கலாம்….
  “அரசியலில் இதெல்லாம்……….” !!!

  அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்குவது
  இப்போது தானா புதிதாக நடக்கிறது…? )*/ இது தான் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு சப்பைக்கட்டு சொல்ல ஆட்கள் உண்டு. இங்கும் சிலர் உண்டு…

 6. தமிழன் சொல்கிறார்:

  கா மை சார்.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் யதார்த்தம் புரிகிறது. இதற்குச் சப்பைக்கட்டு பதில்கள் கொடுக்கமுடியாது.

  பிரதமர் அவர்கள், யாரும் செய்ய அச்சப்பட்ட ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார். அவர், இந்தச் செயல் உதவும் என்று நினைத்து முடிவு எடுத்துள்ளார். அது முடிந்தவரை back fire ஆகாமல் இருக்க முயற்சி எடுக்கவேண்டியது பாஜக அரசின் கடமை. ஒருவேளை இது மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியாக உருவெடுத்தால், பிரதமருக்குக் கீழே உள்ளவர்கள் (அதிகாரியோ அல்லது அமைச்சருமோ), தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாக எடுக்கவில்லை என்று காரணம் கூறி பதவி விலகுவார்கள் அல்லது விலக்கப்படுவார்கள். இது தவிர்க்கமுடியாது. பிரதமரின் பெயரை ரிப்பேர் செய்ய பாஜக துணியாது. ஓட்டு மோடிக்குத்தான். (நம் அரசியல் முறையில்). ஜெட்லிக்கோ அல்லது சு.சுவாமிக்கோ அல்ல. அதனால், இது பொதுவான ஒரு நடைமுறைதான்.

  சரி.. அப்படி நடந்தால் சு.சுவாமிக்கு வாய்ப்பு கிட்டுமா? என்னுடைய assessment கிட்டவே கிட்டாது. அவர் யாருக்கும் அடங்குபவர் கிடையாது. பாம்பு போன்று எந்தப் பக்கம் பாய்வார் என்பது யாருக்குமே (அவருக்குமேகூட) தெரியாது. யாராவது பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பார்களா? சு.சுவாமி, எதற்காவது, மோடி அவர்கள்தான் காரணம் என்று குறைகூறினால் ஒழிய, சு.சுவாமிக்குப் பாதிப்பில்லை.

  இந்த 500/1000 ரூ செல்லாது என்ற அறிவிப்பு, நாட்டில் ஏற்படுத்திய இம்பாக்ட், நாட்டுக்கு மிகவும் அவசியம். இது நம் எல்லோருக்கும் நல்லதாக அமைய நமது பங்களிப்பும் அவசியம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.