நண்பர்களுக்கு முன்னதாகவே தெரியுமா….?

15135746_1201809169886966_2923343592780166216_n-yatin-oza

பாஜக தலைவர் திரு.அமீத் ஷா குஜராத்தில்
அமைச்சராக செயல்பட்டு வந்த காலத்தில், அவருடைய
மிக நெருங்கிய நண்பராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு
வந்த திரு யதின் ஒஜா (Yatin Oza) என்பவர், திரு.மோடிஜி
அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அதை
செய்திப்பத்திரிகைகளுக்கும் அனுப்பி இருக்கிறார்.

http://www.kractivist.org/open-letter-to-modi-by-yatin-oza-ex-modi-confidante-and-amit-shahs-mentor/
என்கிற தளத்தில் அவரது ஆங்கில வடிவ கடிதம்
பிரசுரமாகி இருக்கிறது.

yatindra-oza

இது குறித்து தமிழில் சுருக்கமாக –
http://tamil.oneindia.com/news/india/centre-leaked-demonetisation-scheme-industrialists-says-yatin-oza-267739.html – -வில் வெளிவந்திருக்கிறது.

முழு கடிதத்தையும் தமிழில் மொழிபெயர்த்து, frontline
செய்தியாளர் திரு.விஜய்சங்கர் ராமச்சந்திரன் தனது
முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

vijay-ramachandran-front-line-2

நமது விமரிசனம் தள வாசகர்கள் படிக்க வசதியாக,
தமிழில் ஒன் இந்தியா செய்தித் தளத்தில் வெளிவந்திருக்கும்
செய்தியின் சுருக்கத்தை கீழே பதிப்பித்திருக்கிறேன் –

———————————-

http://tamil.oneindia.com/news/india/centre-leaked-demonetisation-scheme-industrialists-says-yatin-oza-267739.html

By: Mathi Published: Monday, November 21, 2016, 10:07 [IST] Subscribe to Oneindia Tamil அகமதாபாத்: அமித்ஷாவின் அலுவலகம் 37%கமிஷனுக்கு கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. யாதின் ஓஸ் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் யாதின் ஓஸ். தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறார்.
மோடிக்கு யாதின் ஓஸ் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நவ.8 . 2016 அன்று
.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற உங்களின் அறிவிப்பை கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களது இந்த துணிவு மிக்க வரலாற்று செயலை மிகவும் பாராட்டினேன்.

ஆனால் அந்த மகிழ்ச்சியான தருணம் சிறிது நேரத்தில்
முடிந்துவிட்டது. முன்னர் நான் உங்களுடன்
பணியாற்றியிருக்கிறேன். அதைவைத்து நான் யோசித்த போது,
50% கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நெருக்கமான தொழில்
அதிபர்களுக்கு இது முன்னதாக தெரிவிக்கப்பட்டிருக்க
வேண்டும் என நினைத்தேன். இது குறித்து நடத்திய
விசாரணையில் இந்த அறிவிப்பின் பின்னால் மக்களை
முட்டாள்கள் ஆக்கும் நோக்கம் உள்ளதை அறிந்து அதிர்ந்தேன்.

நவம்பர் 8-ந் தேதி முதல் தற்போது வரை அமித்ஷாவும்
அவரது சகாக்களும் கருப்பு பணத்தை கமிஷனுக்கு
வெள்ளையாக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். இதற்கான
வலுவான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன.
தேவைப்பட்டால் வெளியிட தயாராகவும் இருக்கிறேன்.

அதாவது ரூ1 கோடி கருப்புப் பணத்துக்கு 37% கமிஷன்
பெறுகிறது அமித்ஷா அலுவலகம். நாள்தோறும் இரவும்
பகலுமாக அமித்ஷா அலுவலகம், வீடுகளில் நீண்ட
வரிசைகளில் கருப்பு பண பதுக்கல்காரர்கள் நிற்கின்றனர்.

என்னிடம் உள்ள வீடியோ பதிவை பத்திரிகையாளர்களிடம்
முதலில் கான்பிக்கிறேன். பின்னர் நான் உங்களுக்கு
தெரிவிக்கிறேன்… அதன் உண்மைத்தன்மையை நீங்கள்
சரிபார்க்கலாம். இவ்வாறு யாதின் ஓஸ் கூறியுள்ளார்.

————————————

நெருங்கி பழகிய நண்பர்கள் என்று
சொல்லப்படுபவர்கள் இத்தகைய கடிதங்கள்
மூலம் பொதுவெளியில் தங்கள்
கருத்துக்களை வெளியிடுவது,
பொது மக்களிடையே பலத்த குழப்பங்களையும்,
சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்
அனைத்தும் உண்மையாக இருக்காது என்றே நம்புவோம்….

இந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக
யாராவது, உடனடியாக முன்வந்து உரிய முறையில்
விளக்கங்களை கொடுத்திருக்க வேண்டும் / மறுத்திருக்க
வேண்டும். இதுவரை எந்தவித விளக்கமும் கொடுத்ததாக
தெரியவில்லை என்பது கவலை அளிக்கிற விஷயம்.

சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது விளக்கம்
அளிக்க வேண்டும்… குஜராத் மாநில மற்றும் மத்திய
அரசுகள், உரிய முறையில் இந்த புகாரை விசாரித்து
விவரங்களை விரைவாக வெளியிட்டு, மக்களிடையே
நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to நண்பர்களுக்கு முன்னதாகவே தெரியுமா….?

 1. ஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:

  ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் தொடர்பில் பின்வரும் காணொளியை கண்டு மிரண்டு விட்டேன். மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் CNBC ஊடகத்தின் இந்த வீடியோ மிகப் பெரிய செய்தியை சொல்கிறது. பெரும் பண முதலைகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்ப வரா நிலையில் திவால் நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வங்கிகளின் பாதையில் இரண்டாவது காலாண்டில் (ஜூலை – செப்டம்பர் 2016) மிகப் பெரிய மாற்றம். கண்டமேனிக்கு பணம் இந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளுமே இந்த காலக்கட்டத்தில் அளப்பரிய வளர்ச்சியை கண்டுள்ளன. பாலைவனமாக இருந்த வங்கிகளின் நிலையில் திடீர் வசந்தம் வந்தது மிகப்பெரிய மர்மமாக இருக்கிறது. அப்படியானால் இந்த ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் பாஜகவின் நண்பர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று CNBC ஊடகம் சந்தேகிப்பதில் நியாயம் உள்ளது. மிகப் பெரிய ஊழல் ஒன்று நாட்டை உலுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

  பார்க்க: https://www.youtube.com/watch?v=KzVccpgcUvg&feature=share

  • Ramasubbu சொல்கிறார்:

   A thorough Enquiry should be ordered
   by the highest court of this country
   to clear the doubts in the minds of people.

  • Antony சொல்கிறார்:

   Ashiq,
   What is your point here?
   If they have known it before, would they have tried to change it into properties or deposit on bank? If they are depositing the amount, they are going to show the account. May be they have escaped from the penalty, but still their black money is brought out. So the purpose is served however. Feel free to reply..

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  என்ன எழுத, எதை எழுதினாலும் இங்கு சிலர் சொம்பு தூக்கிட்டு வருவார்கள். இங்கே ஒரு அக்கா, “கன்டைனர் என்றாலும் கடுகு டப்பா என்றாலும் கருப்பு கருப்பு தான்” என்கிறது….ஐயோ, ஐயோ…

 3. gopalasamy சொல்கிறார்:

  Sir,
  I am not an economist; Not an intellectual. I have no right to comment anything about economics. So I am not able to understand your stand / articles in this connection. But some points on personal experience.
  1. I worked in gulf for some period. I know “a little ” about hawala . Mostly labourers sent money thro hawala. It is cheaper than bank rates.
  2. so many times fake notes were distributed thro hawala and some people were caught. They had to pay bribe to come out from that.
  3. Apart from banks and hawala agents, there are some firms ( non government ) exchanging cash . Mostly fake notes also will be distributed along with genuine notes.
  For NRE money there is no tax in India. so, learned people will not go for hawala.
  4. Even ordinary people know fake notes are coming from Pakistan .

 4. gopalasamy சொல்கிறார்:

  “மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்”. Jeyamohan’s article dated 22-11-2016.
  I request you to go thro this. It throws another light .

 5. gopalasamy சொல்கிறார்:

  Sir,
  I was having 28000 rupees as cash. I deposited in bank. My wife and myself went to the bank three days and withdrew 24000 rupees through cheque. Everyday we stood in “Q” roughly for forty five minutes. I have no debit / credit card. I don’t have any problem.

  • LVISS சொல்கிறார்:

   Mr Gopalaswamy I advise to get a debit card and keep the PIN very secret -When you apply for the debit card ask whether both of you can use it independently -It will help you in times of urgent need —-I have another advise for you –Dont ever go to the bank after a holiday unless it is extremely urgent –Transact your cash transactions in the second week or third week –You will see less crowd – In some banks there will be less crowd on Tuesdays and Fridays —

 6. nimiththigan சொல்கிறார்:

  வணக்கம். பட்ஜெட் தாக்கல் என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதுதான் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி, வரிச் சலுகை முதலியவை தெரியவருகிறது. பட்ஜெட்டைத் தயாரிப்பது நிதித்துறையின் மிக உயர் அதிகாரிகள், நிதி அமைச்சர், பிரதமர் ஆகியோர்தான். ஒவ்வொருவருக்கும் பலன் பெறக்கூடிய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதனால், அவர்களுக்கு முன்கூட்டியே பட்ஜெட் பற்றிய தகவலை, மேற்படி பட்ஜெட் தயாரிப்பில் உள்ளவர்கள் தெரிவித்திருப்பார்கள் என சந்தேகப்படுவது சரியா? அதில் இரகசியம் காக்கப்பட்டிருக்கும் என்றால், ‘இப்போதைய பண முடிவிலும்’ இரகசியம் காக்கப்பட்டிருக்கும் என்று நம்பித்தான் ஆக வேண்டும். இதில் இரகசியம் காக்கப்படவில்லை என்று சந்தேகப்பட்டால், பட்ஜெட்டிலும் இரகசியம் காக்கப்பட்டிருக்க் வாய்ப்பில்லை என்று சொல்ல நேரிடும்.

  ‘செல்லாப் பண விவகாரம்’ சரியா தவறா என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால், இரகசியம் காக்கப்பட்டிருக்குமா எனக் கேள்வி எழுப்பினால், இந்திய அரசின் (எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும்) ஆட்சி முறையே, நம்பகத்தன்மை இழந்து விடும். இரகசியம் காக்கப்பட்டிருக்கும் என நம்புவதே நல்லது.

  அன்புடன்
  நிமித்திகன்

 7. LVISS சொல்கிறார்:

  Without any further delay Mr Yati Oza should release the video – We have a right to know the truth —Let the press see it first
  Having said that why should one respond to allegations —

 8. LVISS சொல்கிறார்:

  We hear politicians saying that rich people are not in the queues –They normally dont transact their business in cash They have other avenues in e banking like net banking NFT etc –If at all they will keep unaccounted wealth in assets – It is also wrong to say only poor people are in the queue –Even techies of middle class drawing good salary are standing in the queue — Across the board every section of society have become queue standers –

 9. Narasimhan சொல்கிறார்:

  நீங்கள் ஒன் இந்தியா வலைத்தளத்தை தினசரி படிப்பவாரா ? அப்படியானால் அதன் நம்மிக்கைதன்மை எவ்வளவு என்பது உங்கள் கருத்து என்ன ? குமுதம் குழும பத்திரிகைகள் ஒரு சார்பாக எழுதினால் விகடன் குழும பத்திரிகைகள் இன்னொரு சார்பாக எழுதுவது போலத்தான் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப நரசிம்ஹன்,

   பின்னூட்டம் எழுதும் முன்னர் இன்னும் கொஞ்சம்
   யோசித்திருக்கலாம்.

   நான் ஒன் இந்தியா மட்டுமா quote பண்ணி இருக்கிறேன்…?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. Sundar Raman சொல்கிறார்:

  ஒன்னும் இல்லாத சமாசாரத்தையே ஊதி பெரிதாகும் இந்த நேரத்தில் , இப்படி ஒரு வீடியோ இருந்தால் , அதில் உண்மை இருந்தால் , யாரவது விடுவார்களா , அதுவும் aap பார்ட்டியை சேர்ந்தவர் , அங்கு கெஜ்ரிவால் இஞ்சி தின்ன குரங்கு போல துள்ளுகிறார்… நீங்கள் இப்படி போவீர்கள் என துளி கூட நினைக்கவில்லை , கொஞ்சம் நடுநிலையை காப்பாற்றுங்கள் . மனசாட்சி படி எழுதுங்கள் .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சுந்தரராமன்,

   //இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்
   அனைத்தும் உண்மையாக இருக்காது என்றே நம்புவோம்….

   இந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக
   யாராவது, உடனடியாக முன்வந்து உரிய முறையில்
   விளக்கங்களை கொடுத்திருக்க வேண்டும்

   சம்பந்தப்பட்டவர்கள் இப்போதாவது விளக்கம்
   அளிக்க வேண்டும்… குஜராத் மாநில மற்றும் மத்திய
   அரசுகள், உரிய முறையில் இந்த புகாரை விசாரித்து
   விவரங்களை விரைவாக வெளியிட்டு, மக்களிடையே
   நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.//

   இது தான் நடுநிலைமை என்று நான் நினைக்கிறேன்.

   மற்றபடி நீங்கள் எதிர்பார்க்கிற
   நடுநிலையில் என்னால் யோசிக்க முடியவில்லை….
   மன்னித்துக் கொள்ளவும்…!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • gopalasamy சொல்கிறார்:

   KMJI writes his opinions in his own blog. . Yatin Oza tells his opinion. Oza is openly against Modi since so many years. Recently Supreme court condemned him for his “opinions” about two Gujarat high court judges. Due to so many reasons people use to form their own opinions. We need not expect anybody to be neutral, which is farce.

 11. selvarajan சொல்கிறார்:

  கள்ள நோட்டு — கறுப்புப்பணம் — செல்லாத நோட்டு — சாயம் போகிற புது நோட்டு — என்று குட்டையை குழப்பி — இந்த வழியிலும் ” மீன்களை ” பிடித்திருக்கும் இவர்கள் — ” திறமைசாலிகள் தானே ” — ஆதாரத்தை வெளியிட ஏன் நேரம் – காலம் பார்க்கிறார் யாதின் ஓஸ் — பழைய நண்ப விசுவாசம் குறுக்கீடுதா … இல்லை சும்மா பயமுறுத்துகிறாரா …. ? ….. அடுத்து :—

  // 5 ஆண்டுகளில் 647 ரயில் விபத்துகள்… 92 பைசாவுக்கு உங்கள் பயணத்தை காப்பீடு செய்யுங்கள்! // http://www.vikatan.com/news/coverstory/73053-647-train-accidents-in-5-years-insure-your-travel-with-92-paisa-insurance.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=6447 — காப்பீடு எடுப்பது எல்லோருக்கும் உண்டா என்றால் …. // ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, பயணக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம் … இந்த சேவை ஆன்லைனில் டிக்கெட் வாங்கினால் மட்டுமே கிடைக்கும். // இந்த ” கண்டிஷனை ” எல்லோருக்குமானதாக மாற்றினால் நல்லது தானே … ?

  • LVISS சொல்கிறார்:

   The govt is aiming to push the country towards digital transactions –This could be the reasons — Nowadays many internet centres are booking rail tickets — I think we can book thro them and pay the insurance amount along with ticket amount —

   • Ramasubbu சொல்கிறார்:

    Please just do not blindly support every stupid action of the Govt.
    If at all they are interested in the welfare and safety
    of the passengers, they should have included this amount with
    every ticket and made Insurance applicable to all automatically.

    • Antony சொல்கிறார்:

     LVISS,
     I also thought of the same. It looks like an activity to promote card transactions which will ensure the transactions areade through banks and not with black money. Again there will be criticisms asking what to do with the people who does not have a card.

   • Sharron சொல்கிறார்:

    Pushing the country towards digital transactions is a great move and we have to welcome it. But not in a rush like this.Step by step they have to bring the change.

  • Antony சொல்கிறார்:

   Selvarajan,
   According to your link 48% notes returned by either deposit or change. Moreover if the black money holders will not change it within time it is going to be waste paper and new notes will be printed by government. So effectively, remaining money can be considered as a gift to the government.

 12. gopalasamy சொல்கிறார்:

  Oza is a former BJP MLA from Gujarat. However, he parted ways with the party, joined the Congress and contested against Modi. He again quit and has now joined the Aam Aadmi Party.
  In my opinion, OZA is the most dependable person in the earth and except truth he can not speak anything. We have to blindly accept him.

 13. gopalasamy சொல்கிறார்:

  http://www.jeyamohan.in/92500#.WDKM2GewvMk. this is jeyamohan’s article.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.