93 % பேர் மகத்தான ஆதரவு – நேரடியாக தேர்தலுக்கு போய் விடலாம்….!!!

cell-phone

தெருவில் வண்டியில், கூடைகளில் காய்கறி
விற்றுக் கொண்டு போகிற பெண்மணி, பழ வண்டிக்காரர்,
கீரைக்கார அம்மா, வீட்டில் பால் பாக்கெட் போடுபவர்,
வீட்டில் பாத்திரம் சுத்தம் செய்யும் பெண்மணி,
தெருவில் வண்டி வைத்து அயர்ன் போடுபவர்,
பேப்பர்/புத்தக கடைக்காரர், பெட்டிக்கடைக்காரர்,
மளிகைக்கடைக்காரர்கள், பேக்கரிக்காரர்,
டீக்கடைக்காரர், தெருவோர டிபன்
கடைக்காரர்கள், ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர்கள்,
வேன் ஓட்டுநர்கள், பஸ், டேக்சி ஓட்டுநர்கள்,
ஓட்டல்களில் வேலை செய்யும் சர்வர்கள்,
சமையல்காரர்கள், க்ளீனர்கள், தெருவில் சுத்தம் செய்யும்
நகராட்சி ஊழியர்கள், மருத்துவ மனைகளில் –
மருந்துக்கடைகளில் வேலை செய்பவர்கள்,
பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெட் ரோல் பங்க்
ஊழியர்கள், காவல் பணியில் இருப்பவர்கள் –
எலெக்ட் ரீஷியன்கள், கொத்தனார்கள், பெயிண்டர்கள்,
கார்பென்டர்கள், கொத்து வேலை செய்பவர்கள்,
ரோடு போடுபவர்கள், பணிக்குச் செல்பவர்கள்,
இல்லத்தரசிகள், முதியவர்கள்,
கிராமங்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருப்போர்,

வங்கிகளின் வாசல்களில்,
ATM -களின் வாசல்களில்
15 நாட்கள் கியூவில் காத்துக் கிடந்த
அத்தனை பேருக்கும்
இந்தி /ஆங்கிலம் தெரிந்திருக்கிறது..!!!

அத்தனை பேருக்கும்
தங்கள் செல்போனில் இந்த “ஆப்”பை
டவுன்லோடு செய்யத் தெரிந்திருக்கிறது.

– அத்தனை பேரும்,
எப்போது இந்த “ஆப்” பற்றி செய்தி
வரும் என்று காத்திருந்து –

நேற்றிரவு செய்தி தொலைக்காட்சியில்
இது பற்றி செய்தி வந்ததும்,

தங்களது அனைத்து வேலைகளையும்
அப்படியே போட்டு விட்டு –

உடனடியாக தங்கள் தங்கள் “செல்போன்”களில் அந்த
“ஆப்”பை டவுன்லோடு செய்து –
(எனக்கு அதை புரிந்துகொள்ளவே 10-15 நிமிடம் ஆனது…)

அதில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருந்த
10 கேள்விகளையும் படித்து தெரிந்து, புரிந்து கொண்டு,
கரெக்டாக “யெஸ்” போட்டு,

500-1000 ரூபாய் நோட்டுக்களை
செல்லாக்காசு ஆக்கி
தங்களை கால்கடுக்க கியூவில் நிற்க வைத்ததற்காக –

உள்ளம் நிறைந்த பாராட்டுகளையும்,
மகிழ்ச்சியையும் தெரிவித்து

தங்கள் தேசபக்தியை,
தங்கள் அர்ப்பணிப்பு உணர்வை
வெளிப்படுத்தி விட்டார்கள்….!

இனியென்ன- உடனடியாக
அனைத்து மாநில அரசுகளையும்
கலைத்து விட்டு,
பாராளுமன்றத்தையும் கலைத்து விட்டு,
உடனடியாக –

ஒரே நேரத்தில், நேரடியாக சட்டமன்றங்களுக்கும்,
பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தி விடலாம்.

93 % அலை வீசுகிறது.
வெற்றி நிச்சயம்…

பின் குறிப்பு –

ஒரே ஒரு சந்தேகம் –
உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமாகச் சேர்த்து,

24 மணி நேரத்தில் – 5 லட்சம் பேர்
– அவ்வளவு தானா….?

(…… கட்சியில் வேகமாக செல்போன் “ஆப்”பை
கையாளத் தெரிந்தவர்கள்….????? )

( டெக்னாலஜி – கொஞ்சம் பழசு….
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதே
பார்த்தாகி விட்டது….)

————————————————————–

பிற்சேர்க்கை –

இதே விஷயத்தை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா
ஆங்கில செய்தித்தாளும் ஒரு கருத்து கணிப்பு
நடத்தி இருக்கிறது. அதன் photo-shot கீழே –
( நன்றி – நண்பர் ஆஷிக் அஹ்மத்…)

times-of-india-polls

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to 93 % பேர் மகத்தான ஆதரவு – நேரடியாக தேர்தலுக்கு போய் விடலாம்….!!!

 1. natchander சொல்கிறார்:

  what seemed at firstto be a masterstroke by modi ji now looks like a GRAVE MISCALCULATION..
  Well for one it is clear that the govt was simply too cavalier in its planning
  Nw that 86 percent of indias currency is no longer valid the govt has struggled to print replacement denominations
  and the new notes are the wrong size for existing atms .
  modi asked people to be patient for fifty days but the process could take as long as six months..

 2. natchander சொல்கிறார்:

  Large parts of rural economy use cash for eighty percent of transactions and have been hardly hit..
  many indians particularly women do not have an active bank account..
  Arun jaitley wondered how many poor people would even have rs 1000 notes probably a rhetorical question.
  someone should have sought the answer before SHUTTING DOWN INDIAS FINANCIAL SYSTEM..
  The govts plan is likely to be ineffective in the long run..
  Economists agree it will have no effect on the generation of black money through corruption..

 3. natchander சொல்கிறார்:

  Modi has dropped dark hints that this is just the begining raising fears that business should now worry about the constant tax raids and the is time it has severely dented its image for efficienccy.. reopening of decades old cases. in fact that dark new age may already be here.
  the long term effects of this monetary shock on indias informal economy could be severe.. the large proportion of marginal firms may not survive the loss of a fortnight of income..
  the costs to the govt could be equally high
  modis administration has put political considerations over economic detail once too often and this time it has severely dented its image for efficiency and practicality…

 4. natchander சொல்கிறார்:

  Even if the long ques vanish in the next few months that damage to the governments reputation is PERMANENT

 5. ஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:

  ஹா ஹா ஹா. செமையான பதிவு. கிறுக்குத்தனத்தின் உச்சிக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சரி நாமளும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து போடுவோம். இது டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து..

  செல்லா நோட்டு திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

  நல்ல திட்டம், சிறப்பான செயல்வடிவம் – 39%
  நல்ல திட்டம், ஆனால் மோசமான செயல்வடிவம் – 13%
  தவறான திட்டம், மோசமான செயல்வடிவம் – 48%

  http://timesofindia.indiatimes.com/what-do-think-of-the-demonetisation-of-notes/polls/55414493.cms

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப ஆஷிக் அஹ்மத்.

   வாசக நண்பர்களின் பார்வை வசதிக்காக,
   இதை இடுகையினூடேயே
   பதிப்பித்து விடுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    A TV channel conducted a survey in Rae Bareily( Rahul Gandhi’s constituency) and Amethi( Sonia Gandhi’s constituency) on this –The anchor at the end said that majority of the people in these tow places welcomed the move by the govt —

 6. LVISS சொல்கிறார்:

  I am going to write something not connected with this survey —
  This app is not a new one -Just to see what it is I downloaded the app and read an article on this “cancellation of legal tender character of high denomination —” The official press release describes it this way –I understand that demonetisation is possible only through amendment to Sec 26(2) of RBI ACT — This is perhaps why the PM announced it and not RBI (This is one of the allegations against the PM ” how he can announce it –I am waiting to hear the PM or FM on this in Parliament — However Mr Venkaiah Naidu said that reply to the debate can be given by the concerned minister or any other person on behalf of the govt in line with the rules of the House — Throughout the last two years this was made an issue , that the PM does not reply —

  Dont go by this survey or poll anyway –BTW the app can be used in six languages including Tamil –The others apart from English are Hindi Gujarati, Kannada and .Malayalam —
  Dont under estimate poor people -If you have doubt go to my wife’s village and see how women handle the cellphone –Even here in my place I have seen a cobbler using a cell phone with absolute ease– Not a great deal if you set your mind on it—

  • G.V.S. சொல்கிறார்:

   Mr.LVISS,

   How about this :
   Why not you comment something on this also ? 😦

   // 24 மணி நேரத்தில் – 5 லட்சம் பேர்
   – அவ்வளவு தானா….?

   (…… கட்சியில் வேகமாக செல்போன் “ஆப்”பை
   கையாளத் தெரிந்தவர்கள்….????? )

   ( டெக்னாலஜி – கொஞ்சம் பழசு….
   கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதே
   பார்த்தாகி விட்டது….)

   • LVISS சொல்கிறார்:

    If the survey is for a day yes it is only 5 lacs –I do not know whether the survey is open till Dec 31 –
    Sorry I dont understand what is meant to be conveyed by the words within brackets – –
    Personally I do not attach much importance to any survey because unlike elections most do not take part —

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல நையாண்டி பதிவு. இப்போதைக்கு அவர்களுக்கு எதுவும் கண்ணுக்கு தெரியாது….ஆப் கி பார் ஆப் மட்டுமே…,

 8. selvarajan சொல்கிறார்:

  ஒரு வேதனையின் வெளிப்பாடு …. :—
  // கொழுத்தவன் கொண்டுபோன மானம் தேய்ந்தவனின் கோவணத்திலா இருக்கிறது? – யுகபாரதி

  ஏய்ப்பவர்கள் நிற்கவேண்டிய
  எல்லா வரிசையிலும்ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா
  சோத்துக்கில்லாதவனிடம்
  சொல்லாமல் வசூலிக்கிறது
  கருப்புப்பணத்தை!

  பித்தலாட்ட பெரும்புள்ளிகள்
  கட்டாத பணத்தையெல்லாம்
  வட்டியோடு வாங்கப்பார்க்கிறது
  பஞ்சப் பராரிகளிடம்!

  அதிக அதிகமாய்ச்
  சொத்து சேர்த்தவர்களை
  அதிகாரத்தில் அமர்த்திவிடும்
  அன்னாடங் காய்ச்சிகளிடம்
  ஆரம்பிக்கிறது விசாரணையை!

  கோடியிலே கொழுத்தவர்கள்
  கொண்டுபோன மானத்தை
  தேடிக்கொண்டிருக்கிறது
  தேய்ந்தவனின் கோவணத்தில்!

  ஓட்டுக்கு மை வைத்தே
  ஒன்றும் நடக்கவில்லை… அதற்குள்
  நோட்டுக்கு மை வைக்க
  நுழைகிறது நடவடிக்கை!

  பத்துக்கு நூறாக
  பணமுதலைப் பெருத்திருக்க
  ஒப்புக்குக் கணக்கெழுதி
  உருப்படுமா இந்நாடு!

  ஒண்ணுக்கு வந்தாலும்
  ஒதுங்கவும் வழியில்லா
  வங்கிகளை வைத்துக்கொண்டு
  எண்ணம் பலி க்குமென்று
  எத்தனைநாள் பேசுவது?

  ரூபாயில் சிரிக்கிறார் காந்தி
  சிரிப்பாய் சிரிக்கிறார்கள் மக்கள்!

  கவிஞர் யுகபாரதி
  நன்றி : ஜூனியர் விகடன்….. //
  யார் எழுதியதாக இருந்தாலும் — யதார்த்தை உற்று நோக்கினால் … யோக்கியர்கள் ….தானே !!!

  • B.V.S. சொல்கிறார்:

   அருமையான தேர்வு

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நன்றிகளும், பாராட்டும் –
   எழுதிய கவிஞர் யுகபாரதிக்கும், தேர்ந்தெடுத்து இங்கு
   பதிப்பித்த உங்களுக்கும்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. palaniappan சொல்கிறார்:

  super selvaraj sir

 10. selvarajan சொல்கிறார்:

  // Reliance Ports gets Rs 1,767 crore irregular tax benefit: CAG //
  http://economictimes.indiatimes.com/industry/banking/finance/reliance-ports-gets-rs-1767-crore-irregular-tax-benefit-cag/articleshow/55561897.cms — … இந்த செய்தியை தமிழில் படிக்க : — // ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ. 5245 கோடிக்கு வரி விலக்கு – சிஏஜி அறிக்கை // …….. http://theekkathir.in/2016/11/23/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/ — வரி விலக்கு வழங்கட்டும் — வாரி — வாரி வழங்கட்டும் — !!!

  • B.V.S. சொல்கிறார்:

   என்னை தீயிட்டு பொசுக்கினாலும் சரி –
   அம்பானியைப் போன்ற ஏழைகளுக்கு உழைப்பதே என் லட்சியம்
   93 சதவீத மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்
   யாராலும் என்னை தடுக்க முடியாது !
   இந்த ஏழைகளிடமிருந்து பிரித்து விட முடியாது.

 11. Sundar Raman சொல்கிறார்:

  If what you are saying is true , Be happy Sir – but as far as I know no body would take an action knowing that this is against people , so that I lose my people support. And certainly Modi will not do that.
  He stopped the subsidy in electricity and instead provided 24 hrs power to the farmers . Same logic here, real pain to those who holds black money in cash – and lots of gains to the banks , govt which will translate into a benefits for common people. Wait sir, have patience.

 12. gopalasamy சொல்கிறார்:

  “real pain to those who holds black money in cash”. Absolutely true. Now we see the people who are supporting black money, hawala, fake notes openly came out .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   So Mr. Gopalasamy,

   According to you –

   CPI ( M ) Parliamentarian and Leader in Rajya sabha
   Mr. Sitaram yechury and

   also Mr. Binarai Vijayan, Chief Minister of Kerala

   who are fighting now
   also belong to that category of
   //those who hold black money in cash….//

   FINE …!!!

   with all best wishes,
   Kavirimainthan

   • gopalasamy சொல்கிறார்:

    Are you sure they are not having black money ?

    • B.V.S. சொல்கிறார்:

     இந்தியாவிலேயே முதல் முறையாக ஒருவர்
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை
     கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் என்று சொல்கிறார்
     பாஜக பாசம்,
     மோ… மோகம்
     அவர் கண்களை மறைக்கிறது.
     இப்படி எல்லாம் எழுத வைக்கிறது.
     இறைவா, தான் என்ன சொல்கிறோம் என்பதையே அறியாமல்,
     பாசத்தாலும், மோகத்தாலும் பிதற்றுபவர்களை மன்னித்தருளும்.

     • gopalasamy சொல்கிறார்:

      Whether it is BJP or communists, if they are participating elections, without black money they cant . Even Mr.Kannaiya kumar , the new hero mostly travels by air. Branded clothes and shoes. Their family income 3000 Rs. Who are paying to these people. I am not in a dream world. Modi hatered drives some people to believe anything. I am sympathetic with people for their innocence. I never saw Indian communists condemning china fror any reasons. For one or two seats they are begging regional parties also. Can anybody declare communists are not getting money from these parties for election expenses. We saw Yechury, a JNU product, standing in front of a Separatist house in Kasmir!

      COOMUNIST பாசம்,
      மோ… மோகம்
      அவர் கண்களை மறைக்கிறது.
      இப்படி எல்லாம் எழுத வைக்கிறது.
      இறைவா, தான் என்ன சொல்கிறோம் என்பதையே அறியாமல்,
      பாசத்தாலும், மோகத்தாலும் பிதற்றுபவர்களை மன்னித்தருளும்.

      மறுமொழி

 13. jksm raja சொல்கிறார்:

  ” He stopped the subsidy in electricity and instead provided 24 hrs power to the farmers” .
  எங்கே எலக்ட்ரிசிட்டி subsidy stop பண்ணி 24 மணிநேரம் power supply கொடுக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? நான் குஜராத்தில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் அங்கே எப்பொழுதும் எலக்ட்ரிசிட்டி subsidy கொடுக்கப்பட்டதே இல்லை. அங்கு தமிழ் நாட்டை போல் கிணற்று பாசனம் கிடையவே கிடையாது . மேலும் தொண்ணுறுகளில் இருந்தே மின் மிகை மாநிலம் தான். ஆகையால் தான் தொண்ணுறுகளில் இந்தியாவின் 90 சதவிகிதம் மருந்து கம்பெனிகள் பரோடா வை சுற்றி ஆரம்பிக்கப்பட்டது

 14. தமிழன் சொல்கிறார்:

  மோடி அவர்கள் யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

  நம்ம நாட்டில், எல்லோரையும் கேட்டு முடிவெடுக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு மன்மோகன் சிங்தான் தேவை.

  பிரதமர் ஒரு முடிவை எடுத்துள்ளார். அதனை ஏய்ப்பதற்கு, யார் இரவோடு இரவாக தங்கம் வாங்கியது? 4000 ரூ வை மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னபோது, எத்தனைபேர் மற்றவர்களின் பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்கள்? பிரதமர், பணத்தைத் தன் அக்கவுண்டில் போடச் சொல்லவில்லை. அவருக்குத் தெரியாதா, தான் எடுக்கும் இந்த முடிவு தன் மற்றும் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று? இது சரியான வழி என்று எண்ணி இறங்கிவிட்டார். இதில் பின்வாங்கும் அம்சம் கிடையாது. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

  நீங்கள் விமரிசிப்பதைத் தவறாக எண்ணவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், எனக்குத் தெரிந்து குயவர்களிடமும், காய்கறி விற்பவர்களிடமும், அன்னாடங்காய்ச்சிகளிடமும் சென்று இந்தக் கருத்துக்கணிப்பை எடுத்ததுபோல் தெரியவில்லை.

  முரசொலியில், ஜெயலலிதா நல்லாட்சி செய்கிறாரா என்று கருத்துக்கணிப்பு எடுத்தால் 95% பேர், இல்லை என்றுதான் சொல்லுவார்கள். ஜெயா டிவியில் கேட்டால், நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்றுதான் சொல்லுவார்கள். கருத்துக்கணிப்புக்கு இதுதான் மரியாதை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப தமிழன்,

   // 1) மோடி அவர்கள் யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

   2)டைம்ஸ் ஆஃப் இந்தியாவும், எனக்குத் தெரிந்து குயவர்களிடமும், காய்கறி விற்பவர்களிடமும், அன்னாடங்காய்ச்சிகளிடமும் சென்று இந்தக் கருத்துக்கணிப்பை எடுத்ததுபோல் தெரியவில்லை.

   3) கருத்துக்கணிப்புக்கு இதுதான் மரியாதை. //

   உங்கள் கருத்து உங்களுக்கு …
   அவை குறித்த என் கருத்தையும் சொல்லி விடுகிறேன்…

   1) யுத்தம் நடத்தி ஆட்சிக்கு வரவில்லை.
   ஆனால், பெரும்பாலான மக்களை ஏமாற்றி விட்டு,
   பதவிக்கு வந்திருக்கிறார்….
   ( உதாரணம் –
   குஜராத் பற்றிய முக்காலே மூணுவீசம் புள்ளி விவரங்கள்
   பொய் அல்லது மிகைப்படுத்தப்பட்டவை..

   தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொருவர் பாக்கெட்டிலும்,
   15 லட்சம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து மீட்கப்படும் கருப்புப்பணம் போடப்படும்….)

   2) நான் டைம்ஸ் ஆப் இந்தியாவை முன்வைத்து
   அந்த இடுகையை எழுதவில்லையே…?
   என் சொந்த வாதங்களைத் தானே முன்வைத்தேன்…?
   (டைம்ஸ் ஆப் இந்தியா, பிற்பாடு நண்பர் ஆஷிக்
   கொடுத்த supplementary தான்….)

   3) ஆக, மோடிஜி நடத்திய செல்போன்
   கருத்துக் கணிப்பும் –
   முரசொலி, ஜெயா டிவி-
   போன்றவைகளின் கருத்துக் கணிப்பு
   போன்றது தான்
   என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

   நான் சொல்ல வந்ததும் அதே தான்….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 15. Antony சொல்கிறார்:

  Everybody knows this is a **** ****.

 16. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் Rishbaraj –

  மன்னிக்கவும். உங்களது பின்னூட்டம்
  மத துவேஷத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில் இருந்ததால்,
  விலக்கி விட்டேன்.

  நான் ஜாதி, மத நல்லிணக்கத்திற்காக ஏங்குபவன்.
  ஜாதி மற்றும் மதங்களை அடிப்படையாக வைத்து ஒருவரை ஒருவர்
  ஏசிக் கொள்வதை நான் அனுமதிப்பதற்கில்லை.

  நீங்கள் உங்கள் கருத்துக்களை,
  உரிய முறையில் கூறினால், அது இங்கு
  நிச்சயம் பதிவேற்றப்படும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.