செல்லாக் காசு – சேமிப்பு உணர்வின் மீது விழுந்த மரண அடி!

before-atms-after-15-days

இன்றைய ராஜ்யசபா விவாதத்தின்போது
பண ஒழிப்பில் அடுத்து நடக்கப் போவதை மிக தீர்க்கமாகக்
கணித்துக் கூறினார் சிங்.
பணவியல் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட்
கீன்ஸின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி டாக்டர் சிங் இப்படிச்
சொன்னார்:

“இதுபோன்ற முன்னேற்பாடில்லாத திட்டங்கள்
குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை
மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில்… நம்மைச்
சாகடித்துவிடும்.”

(This measures (Demonitisation)
will cause distress in the short run, but in the long run,
I reminded of John M Keynes said one, all of us will dead.)

பண ஒழிப்பு சரியா தவறா என்பதல்ல இப்போது
பிரச்சினை. சிங் குறிப்பிடுவதும் அதையல்ல. நல்ல
திட்டமாகவே இருக்கட்டும்.

அதற்காக இப்படியா அலங்கோலமாக அமலுக்குக்
கொண்டுவருவது?
காய்ச்சலுக்குப் போடும் ஊசியை கண்ணில்
சொருகினால் எப்படி இருக்கும்? அமல்படுத்தும் விதம்,
Execution மிக முக்கியம்.

மோடியைப் போலவே அவசரப்பட்டு இதே பண ஒழிப்பைக்
கையிலெடுத்தவை இதுவரை 16 நாடுகள்,
ரஷ்யா, பர்மா உள்பட. இந்த பதினாறு நாடுகளுமே
அதன்பிறகு தலை நிமிரவே இல்லை. பொருளாதாரம்
அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

இந்தியாவில் இப்போது பண ஒழிப்பு காரணமாக வங்கி
க்யூவில், அதிர்ச்சியில் மற்றும் மருத்துவமனைகளில் காசின்றி
செத்தவர்கள் எண்ணிக்கை 76 பேர். இனிமேல்தான் மோசமான
இறப்புகள் காத்திருக்கின்றன.

கடந்த ஒரே வாரத்தில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் காலி.

ஜவுளி, கட்டுமானம், லெதர், நகைத் தொழில், நெசவு
போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணப் புழக்கம்
அடியோடு இல்லாததால் வேலை இழப்பு தொடர்கிறது.
இன்னும் பல லட்சம் வேலை இழப்புகள் காத்திருக்கிறது.
இவர்கள் என்ன செய்வார்கள்?

டாக்டர் சிங் கேட்பதைத்தான் அத்தனைப் பேரும்
கேட்கிறார்கள். ‘என் பணத்தை ஏன் எடுக்க விடாமல்
தடுக்கிறாய்? நாங்கள் என்ன லோன் கேட்டா வரிசையில்
நிற்கிறோம்?

500, 1000 ஐ தாராளமாக நிறுத்திக் கொள்.
அதற்கு இணையான பணத் தாள்களை எந்த சிக்கலுமின்றி,
நெருக்கடியும் இன்று வழக்கம் போல வழங்குவதுதானே?’

அப்படி வழங்க வழியில்லாமலா இருக்கிறது?
இந்திய பணத்தாள் அச்சடிப்பு மையங்கள்
அத்தனை மோசமா? இல்லை.. மோடியின் இலக்கு,
சாமானிய, நடுத்தர மக்களின் சேமிப்புகள்.

அத்தனை சேமிப்புகளையும் வங்கிகளில் டெபாசிட்டுகளாகக்
குவித்தாயிற்று. ஆனால் அதைத்
திரும்பத் தரக்கூடாது என்பதற்காக இத்தனைக்
கட்டுப்பாடுகள். போலீஸ் தடியடிகள்.

இப்போது குவிந்துள்ள 7 லட்சம் கோடிகளையும் வளர்ச்சிப்
பணிகள் என்ற பெயரில் மீண்டும் பெருந்தொழில்களுக்கு
முதலீடுகள் என்ற பெயரில்
கடன்களாக தரப் போகிறோம் என்று நிதியமைச்சர்
நேற்று கூறிவிட்டார்.
யாருக்கு கடன் தரப் போகிறார்கள்..
உங்களுக்கும் எனக்கும் அல்ல.
இப்போது யாருக்கெல்லாம் ரூ 1.13 லட்சம் கோடி + 7200
கோடிகளை வராக் கடன்களாக தள்ளுபடி
செய்தார்களோ, அதே பெரும் தொழிலதிபர்களுக்கு.

காரணம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புத்
தொழில்கள் அவர்கள் வசம்தான்.
பண ஒழிப்பு என்ற பெயரில் செயற்கை அவசர
நிலையை உருவாக்கி, மக்கள் பணம் மொத்தத்தையும்
உறிஞ்சியிருக்கிறது மோடி அன்ட் கோ என்பதை இன்று
சாமானியனும் உணர ஆரம்பித்துவிட்டான்.

‘உன் பணத்தை வங்கியில் போடு…
ஆனா திருப்பிக் கொடுக்க மாட்டேன்’ –
இது என்ன மாதிரியான மக்கள் நலத் திட்டம்?

நமது அடிப்படைக் குணம் சேமிப்பு. காலங்காலமாக நமது
முன்னோர்களும், ஆட்சியாளர்களும் ஊட்டி வளர்த்த உணர்வு
அது.

தபால் நிலையங்களில் அட்டைகளில் தபால் தலை
ஒட்டி பணம் சேர்த்துப் பழக்கப்பட்டவர்கள்.

வீடுகளில் அரிசிப் பானை, அஞ்சறைப் பெட்டி,
கள்ளிப் பெட்டிக்கு அடியில் உள்ள ரகசிய சிறு அறைகளில்

சேமித்துப் பழகியவர்கள்.
இதெல்லாம் கறுப்புப் பணம் அல்ல.
அத்தனையும் கஷ்டப்பட்டு உழைத்த பணம்.

இப்போது அந்த சேமிப்பு உணர்வின் மீது சம்மட்டி அடி
அடித்துவிட்டார்கள். இனி சேமிப்பு சாத்தியமில்லை.
அனைத்தையும் வங்கியில் வை. வங்கி என்ற புரோக்கர்
அவர்கள் இஷ்டப்படி முதலீடுகளுக்குப் பங்கிட்டுக்
கொடுப்பார்கள்.

திரும்பத் திரும்ப பணமெடுக்க வந்தால் முகத்தில் மை
பூசுவோம் என்ற அவமதிப்பு வேறு. முன்பெல்லாம் வங்கிகள்
மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்திடம் டெபாசிட் கேட்டு
கெஞ்சிக் கொண்டிருந்தன.
இனி ‘நோ நீட் ஃபார் டெபாசிட்’.

இலவசமாகவே மக்கள் பணம் பலலட்சம் கோடியாகக்
குவிந்து கிடக்கிறதே. அதில் விளையாடிக் கொள்ளலாம்…

மோடியின் திட்டம் நமக்கு 50 நாட்கள் கழித்து சொர்க்க
வாசலைத் திறக்கப் போகிறது என
நம்பிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும்,
அந்த நரகத்தை அனுபவிக்க இப்போதே தயார்ப்படுத்திக்
கொள்ள வேண்டியதுதானா!

( நன்றி – http://tamil.oneindia.com/news/india/how-modi-s-
demonetisation-will-be-kills-people-savings-habit-268119.html )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to செல்லாக் காசு – சேமிப்பு உணர்வின் மீது விழுந்த மரண அடி!

 1. Antony சொல்கிறார்:

  It would be better if you have pointed your views on this article too..or are you seconding it line by line?.. so many misleading information.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.Antony,

   I donot certify the correctness of the article.

   I am just re-publishing it and bringing it to
   the notice of this Blog Readers for their comments.

   You are welcome to point out the mis-leading points
   on this article.

   -with best wishes,
   Kavirimainthan

 2. LVISS சொல்கிறார்:

  You cannot compare the way our country manages its economy with other countries –When the U S and other European countries struggled during recession it didnt affect us much precisely because our method of managing economics is different –To give an example – We have something called on account budget by which allot funds are allotted to depts to run smoothly for a few months when the govt is not able to pass the regular budget -But the US manages the situation in a different way —
  The same misinformation, is being said that we are not allowed to draw our own money – Who prevents you from drawing Rs 24k weekly from your account the govt? –How many of us have money to spend Rs 96 K per month ? I was able to draw the amount I wanted without any hassle on two days —
  Two days back an unconfirmed news item appeared in the paper -the govt is going to wire Rs10k to every JanDhan account holders with zero balance to help them out — if this does happen , then how will people who say that the govt is trying to hold your money back react —
  A responsive govt doesnt sit and whine like us but try to find solutions to problems as and when it is brought to its notice –This is what the govt is doing –When it was brought to its notice that there was large scale booking of air tickets , ,( probably to convert black to white) minutes after the announcement was made by the PM , an order was issued not to allow cancellation of tickets purchased with old notes because these persons might cancel the tickets later and convert some of the black into white — The govt shouldnt mind issuing a 100 notifications if it can overcome specific problems –That is how it should be –A country wallowing in pessimism will wither –Ours is not such a country —
  The stoppage of exchange facilities at the banks came much before I expected — Banks which which were attending to every other persons other than their own customers to whom the owe their very existence will be relieved —From the look of it normalcy in banking transactions might return earlier than 50 days sought by the govt –
  When you vote they put an ink to show that you have voted –When you buy from ration card they make some marking –Dont they –When I went to get a senior citizen card they asked for my ration card — They wanted to make a note in the card to indicate that I have been issued a card –Can I say all this as humiliation -What nonsense is this –There were people coming again and again in the queue to exchange note depriving many others -These were probably exchanging money for others –Now after the ink mark was put these people cannot go to another bank to do the same -Where does the humiliation come in here ?

 3. selvarajan சொல்கிறார்:

  ஒன்இந்தியா தமிழ் பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தும் ” நம்பகத்தன்மை ” அற்றவை .. ? என்று கூறுபவர்கள் இந்த செய்தியையாவது ஒத்துக்கொள்வார்களா என்பதே சந்தேகம் தான் … // “வெந்தும் வேகாமலும்” வரும் புதிய ரூ. 500 நோட்டுக்கள்.. அவசரமாக அச்சடித்ததால் தவறு: ஆர்பிஐ //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/confuse-over-two-types-new-rs-500-notes-268145.தம்ள … பாவம் … இயந்திர கோளாறு … ?

 4. NS RAMAN சொல்கிறார்:

  No one can deny problems in implementing the scheme for the first few days

  But so many wrong information spread by media and so called educated people is deadly.

  உன் பணத்தை வங்கியில் போடு…
  ஆனா திருப்பிக் கொடுக்க மாட்டேன்’ –
  இது என்ன மாதிரியான மக்கள் நலத் திட்டம்?

  Only cash transactions in high value in getting affected. how it is bad for the common man.
  No one stopping cheque transaction for legal transactions

  This is not new even existing IT act requires transactions more than 20000 by cheque

  நமது அடிப்படைக் குணம் சேமிப்பு. காலங்காலமாக நமது
  முன்னோர்களும், ஆட்சியாளர்களும் ஊட்டி வளர்த்த உணர்வு
  அது.

  தபால் நிலையங்களில் அட்டைகளில் தபால் தலை
  ஒட்டி பணம் சேர்த்துப் பழக்கப்பட்டவர்கள்.

  வீடுகளில் அரிசிப் பானை, அஞ்சறைப் பெட்டி,
  கள்ளிப் பெட்டிக்கு அடியில் உள்ள ரகசிய சிறு அறைகளில்

  சேமித்துப் பழகியவர்கள்

  Even in schools savings through post office or banks taught to students

  household savings no one keeping Lakhs of rupees in kitchen

  Common man already suffered for and back to normal life as he already converted or deposited in ac.

  Only people with tons of currency at home still worrying

 5. Tamilian சொல்கிறார்:

  சாதாரணரகள தங்கள் சேமிப்பை வங்கியில் செலுத்தி இருப்பார்கள் . அப்படி கணக்கு காட்டி செலுத்த முடியாதவரகளுக்குத்தான கஷ்டம் . மரணங்களில் சில இந்த நேரங்களில் ஏற்பட்டதை இவர்கள் இதனால ஏற்பட்டது என்று எழுதுகிறார்கள். தொழிற்சங்கங்கள் இடதுசாரபு உடையவை. அவை அகட்சிகளின் நிலைப்பாட்டை எடுப்பது எதிர்பார்த்தது . ஆனால் அரசு மக்களுக்கு நோட்டுக்களை வழங்க இன்னும் மேன்மையான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் .

 6. avudaiappann சொல்கிறார்:

  wait and see…..after march 31 india will raise

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.