” திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ கொள்ளை ” “ORGANIZED LOOT- PLANNED PLUNDER” –

..

..

..

மிகவும் பலவீனமான குரல்…
மிகவும் இளைத்து விட்டார்…
முகத்தோற்றமே மாறி விட்டது…

– தனது அரசில் இயங்கும் மந்திரிகளின் ஊழலை
அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை
கண்டபோது முன்னர் அவர் மீதும், அவரது நிர்வாகத்திறமை
மீதும் நமக்கு மிகுந்த எரிச்சல் உண்டானது…

இருந்தாலும் –

1991-ல் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம்
ஒன்று உண்டாக மூல காரணமாக இருந்தவர் –
இன்று நாம் காணும் பல வளர்ச்சிகளுக்கு வித்திட்டவர் –
முக்கியமாக ஒரு மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்
என்கிற முறையில் –

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று திரு.மன்மோகன் சிங்
அவர்கள் ராஜ்ய சபாவில் பேசுவதை கண்டபோது,
எனக்குள் திருப்தியே நிலவியது.

எதிர்பார்த்த மாதிரியே 100 சதவீத உண்மையையே பேசினார்.
அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும்,
நாம் கடந்த 8-ந்தேதி இரவிலிருந்து சொல்லி வருபவற்றுடன்
ஒத்துப் போகிறது.

சற்று கூட, அரசியல் கலக்காமல், மிகைப்படுத்தாமல் –
முழுக்க முழுக்க உண்மைகளை மட்டும் பேசினார்.

டாக்டர் மன்மோகன் சிங் இன்று மதியம் ராஜ்யசபாவில்
ஆற்றிய உரையின் சுருக்கம் கீழே –

——————

manmohan

“ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு
எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால், ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற
நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும்
நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு
முன்னுதாரணம் ஆகிவிட்டது. நோட்டு நடவடிக்கை குறித்து
பிரதமர் கடந்த 8-ம் தேதி அறிவித்தார்.

ஆனால், அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் வங்கி
நடவடிக்கைகள் தொடர்பாக புதுப்புது அறிவிப்புகளை
மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இது நல்ல போக்கல்ல. இத்தகைய அறிவுப்புகள்
பிரதமர் அலுவலகம்,
நிதி அமைச்சகம் மற்றும்
ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை
குறைத்துவிடும்.

‘நோட்டு நடவடிக்கை ஒரு –

“திட்டமிடப்பட்ட திருட்டு;
சட்டபூர்வ கொள்ளை ”
(ORGANIZED LOOT – PLANNED PLUNDER)

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கை மீது
குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது
எனது இல்லக்கல்ல.

ஆனால், காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர்
துடைக்க இப்போதாவது பிரதமர்
ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல
முடிவுகளை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

அன்றாடம் அல்லல்படும் சாமானியர்களின் துயரங்களுக்கு
அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். இதை நான் மிகுந்த
பொறுப்புணர்வுடன் சொல்கிறேன். ஏனெனில் நோட்டு
நடவடிக்கையின் இறுதி பலன் எப்படி இருக்கும் என்பது
நமக்குத் தெரியாது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கம் 50 நாட்களில் சீரடையும்
என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 50 நாட்களும்
சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க
வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை
ஏற்படுத்தும். ஏழை மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில்
இருந்து எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பிரதமர் எனக்கு ஒரு விஷயத்தை
தெளிவுபடுத்த வேண்டும் –

“உலகெங்கிலும் எந்த ஒரு நாட்டிலாவது,
மக்கள் வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்த
சொந்த பணத்தை தங்கள் பயன்பாட்டுக்காக
எடுக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்களா?”

நோட்டு நடவடிக்கையில் மத்திய அரசை கண்டிக்க
இது ஒன்று மட்டுமே போதுமானது.

சாமானிய மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள
நிலையில், ஏழை மக்களின் துயர் துடைக்க சீரமைப்பு
நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நோட்டு நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்கள்
முடங்கியுள்ளன, கூட்டுறவு சேவை முடங்கியுள்ளன.

மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால்
வருங்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார
வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக
கணித்திருக்கிறேன் என்றே கூறுவேன்.

இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய
வாய்ப்புள்ளது. ஆனால், அரசோ விளைவுகளை மட்டுமே
குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.

நோட்டு நடவடிக்கையின் தாக்கத்தால் இதுவரை 65 பேர்
உயிரிழந்துள்ளனர். உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள
செயல் –

மக்கள் மத்தியில் ரூபாய் மீதும் வங்கிகள் மீதும் நம்பிக்கை
இழக்கச் செய்யும்.

சாமானிய மக்களே அரசின் இந்த நடவடிக்கையால்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின்
இறுதி பலன் எப்படி இருக்கும் என்று என்னால்
இப்போது கணிக்க முடியவில்லை.

‘எதிர்கால நலனுக்கான திட்டமல்ல’

ரூ.500,1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கை
எதிர்காலத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று
ஆளுங்கட்சி கூறிவருகிறது.

அவ்வாறாக இது நீண்டகால நலனுக்கான திட்டம்
என்று கூறுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஜான்
கென்னியின் வார்த்தைகள்:

“நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்”
என்பதே அது”

———————————————————-

முரட்டு அகம்பாவிகளிடையே அவரது உரையால்
பலன் ஏதும் விளைகிறதோ இல்லையோ,
இன்றைய நிலைமையை மிகச்சரியாக கணித்து,
அளந்து பேசிய டாக்டர் மன்மோகன் சிங்
அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகளையும் –
அவர் நல்ல உடல் நலம் பெற்று வாழ
நமது உளமார்ந்த வாழ்த்துக்களையும்
தெரிவித்து கொள்வோம்.

Gallery | This entry was posted in Uncategorized, அரசியல், தமிழ், பொது, பொதுவானவை, இணைய தளம், கட்டுரை, அரசியல்வாதிகள். Bookmark the permalink.

” திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ கொள்ளை ” “ORGANIZED LOOT- PLANNED PLUNDER” – க்கு 16 பதில்கள்

  1. B.V.S. சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    மாயாவதி சவால் விட்டிருக்கிறார் –

    மோடி அவர்களே, “துணிவிருந்தால், 93 % ஆதரவு உண்மையென்றால்,
    பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவியுங்கள்
    பார்க்கலாம்.

    உங்கள் கட்டுரையை மாயாவதி படித்து விட்டார் போலிருக்கிறதே 🙂

  2. புது வசந்தம் சொல்கிறார்:

    தீர்க்கமான பேச்சு. உண்மைதான், மிகவும் சோர்த்து போய் விட்டார். கழுத்து நரம்பு புடைக்க, தேர்தல் பிரச்சாரம் செய்பவர் அல்ல இவர். நிதானமாக பேச கூடியவர். இதனாலேயே அவர் குரல் வெளியே கேட்கவில்லை.

  3. LVISS சொல்கிறார்:

    Mr K M, I think you did not hear Arun Jaitley’s counter to this after the parliament was adjourned –In a nutshell this is what Arun Jaitley said –to MMS 2G 3G Commonwealth scam coal scam were not organised blunders / loot — When the debate , if it happens , I expect Arun Jaitley or the PM to go to town with this– You are always in a hurry–
    Another thing, he never spoke much when he was the PM — Now they needed him to counter the demonetisation –Even then MMS did not find fault with the initiative per se –Like many others he pointed to the implementation which could have been better —
    I very often think that this gentle person should not have entered politics — He is not cut out for politics —
    There is merit in what many think , that the opposition are shifting goal posts to avoid debates –Mamta Banerjee issued three days ultimatum to roll back this –The govt immediately brushed aside this —
    The govt allows the people to withdraw Rs 24 k per week– How many families spend Rs 96 K per month –Did the govt at any time say dont withdraw a single paise from the account —
    What is wrong in issuing corrective notifications as and when required to, plug loop holes in implementing a policy —

    • Karthik சொல்கிறார்:

      it is really wrong that you cant quote past for his present right. that does not mean that he is wrong always. Go and talk to bank employees. Go and talk to Farmers.
      Go and talk to Petty shop owners. Go and talk to Share auto drivers. I did and i am explaining.

      They are serving for us. How long Patriotism will be in front unless u suffer personally.
      I can see in my villages How the perishable goods are looted for meager money.
      I can see my friend father is struggling for his daughuter’s marriage.
      I can see my friend’s grandmother cremation process went such a road blocks for each activities.
      Friends helped lot on each and every place to make it right. But how long. Stupidity and arrogance cant win longer time.

      It is like to make one wrong right, they are making continuous wrongs. puncturing each and every system and process.
      Centeral govt cant announce the validity of expired note to be used in certain places. but they announced. it is illegal. Dictationship is not good for democracy.

  4. Sundar Raman சொல்கிறார்:

    Wow support to 2G/coal scam / CWG scam – hats off to you sir. Where was his voice or inner voice ( of MM singh) during those days . May be only you heard it.

  5. selvarajan சொல்கிறார்:

    // “திட்டமிடப்பட்ட திருட்டு;
    சட்டபூர்வ கொள்ளை ”
    (ORGANIZED LOOT – PLANNED PLUNDER) // ….. அருமையான வார்த்தை பிரயோகம் — முன்பெல்லாம் வங்கிகள் ” மக்களிடம் கெஞ்சி — டெபாசிட்டுக்காக ” கூவி — கூவி அழைத்துக் கொண்டு இருந்தன — இனி ” இந்த வித டெபாசிட்டுக்கள் ” தேவையில்லாமல் — மக்கள் பணத்தை மேலே உள்ள தலைப்பின் படி வாங்கி குவித்துக் கொண்டன ….

    அடுத்து — இருக்கவே இருக்கிறார்கள் ” வாங்கி ஏய்ப்பாளர்கள் — வாராக்கடன் பேர்வழிகள் ” அவர்கள் வளமடைய வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை போட்ட ஏழை மக்களுக்கு எந்தவித பலனும் இல்லாமல் கூடி கும்மாளம் அடிக்க — வழி வகை செய்தவர்களை — பாராட்டவே ஒரு கூட்டம் அலை மோதுகிறது —

    சிறுக — சிறுக — சேமிப்பு என்பதை ஒழித்துக்கட்டி — வங்கியில் குவிந்துள்ள பணத்தை தங்களின் இஷ்டப்படி — பெரிய – பெரிய ” முதலைகளுக்கு ” முதலீடாக கொடுத்து விட்டு — போட்டவர்கள் அடிக்கடி பணம் எடுப்பதை தடுத்து அவர்கள் முகத்திலும் ” மைபூசி ” விடுவார்கள் — என்பது தானே உண்மையாக போகிறது … ?

    கறுப்புப்பணம் — கள்ள நோட்டு ஒழிப்பு என்று அதிரடியாக செய்து — மக்களின் பணத்தை வாங்கி குவித்துக்கொண்டவர்களின் கூற்றுப்படி — ஐம்பது நாட்களில் ” சொகுசான சொர்க்கவாசல் ” திறக்குமா …? இல்லை நரகம் தான் மிஞ்சுமா என்பதை வரையறுக்க போவது யார் …. ?

  6. gopalasamy சொல்கிறார்:

    Modi did a Himalayan blunder. He should see how Manmohanji ruled for 10 years. He should follow his footsteps. Somebody should suggest Modi to get orders from Soniaji to come out from this situation.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்கள் – திருவாளர்கள்,

      LVISS,
      Sundar Raman,
      gopalasamy – ஆகியோர் கவனத்திற்கு,

      காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்த ஊழல்கள்
      அத்தனையையும், தினந்தோறும் வெளிக்கொண்டு
      வந்து அதி தீவிரமாக விவாதித்தது
      இதே விமரிசனம் வலைத்தளம் தான் என்பதையும்,

      திரு.மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்
      அவரை மிகத்தீவிரமாக விமரிசித்ததும் இதே தளம்
      தான் என்பதையும் –

      2014- மே மாதத்திற்கு முந்திய இந்த வலைத்தளத்தின்
      இடுகைகளை இப்போது பார்த்தாலும் யாரும் புரிந்து கொள்ளலாம்.

      பாஜக வுக்கு வக்காலத்து வாங்கும்
      bullet (!) வேகத்தில் ……..
      சுத்தமாக அல்லது சௌகரியமாக
      மறந்து விட்ட
      நண்பர்களை குறைந்த பட்சம் இந்த இடுகையையாவது மீண்டும் ஒரு முறை துவக்கத்தில் இருந்து படிக்கும்படி வேண்டுகிறேன்.

      முக்கியமாக கீழேயுள்ள வார்த்தைகளை –

      // – தனது அரசில் இயங்கும் மந்திரிகளின் ஊழலை
      அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை
      கண்டபோது முன்னர் அவர் மீதும், அவரது
      நிர்வாகத்திறமை மீதும் நமக்கு மிகுந்த எரிச்சல்
      உண்டானது…//

      காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்த ஊழல்களை
      நான் மறக்கவும் இல்லை – மறைக்கவும் இல்லை
      என்பதை இந்த வார்த்தைகள் உறுதிப்படுத்தவில்லையா…?

      பாஜக மோகம் தலைக்கேறி ஆடிக்கொண்டிருப்பவர்கள்
      தான் இடுகையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள
      பிரச்சினைகளைப்பற்றி பேசாமல்,

      சௌகரியமாக
      மூடி மறைத்து விட்டு –

      வேறு விஷயங்களை எல்லாம் பேசுகிறார்கள்
      என்று – எடுத்துக் கொள்ளலாமா
      நண்பர் செல்வராஜன் அவர்களே… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • gopalasamy சொல்கிறார்:

        Only Modi bashing is the correct step. This is what I understand.

      • selvarajan சொல்கிறார்:

        // ” திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ கொள்ளை ” // என்கிற விவாதத்திற்குள் வராத என்னுடைய பின்னூட்டத்தை நினைத்து நான் தற்போது சிரித்து கொண்டுதான் இருக்கிறேன் … ! என்ன அய்யா ….. செய்வது ஏதோ ஒரு வேதனையில் கிறுக்க வேண்டியதாகி விட்டது … தவறுக்கு … மன்னிக்கவும் …. !!!

        இந்த மக்கள் தங்களுடைய சேமிப்புகளை மாற்ற முடியாமலும் — வங்கிகளில் போட்டிருந்த தொகையை தேவையான அளவு எடுக்க முடியாமலும் — அங்கே — இங்கே என்று அலைந்து — அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது — ஒரு பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது — ” துன்பம் வரும் வேளையில சிரிங்க .. என சொல்லி வச்சாரு வள்ளுவரும் .. சரிங்க ” என்று அந்த மக்களிடம் கூற முடியுமா …. ? ஆனால் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுபவர்களை நினைத்தால் … ?

  7. தமிழன் சொல்கிறார்:

    யார் சொல்லுகிறார்கள் என்று பார்க்கவேண்டாம். டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் அனுபவமிக்கவர். அவருடைய கருத்து அர்த்தமுள்ளது. அரசு இதனை நிச்சயம் கருத்தில்கொள்ளும் என்று நம்புகிறேன். “நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே”

    அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோர் முரட்டு அகம்பாவிகளே. இல்லாவிட்டால், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியின் முன்னால், கட்டிய கட்டடங்கள் இடிந்துவிழுந்தது கண்டும் காணாமல்போலிருந்தவர்கள் அரசியல்வாதிகள். 2ஜி பகல் கொள்ளையை அனுமதித்தவர்கள். இல்லாத மணலைத் தோண்டுகிறோம் என்று சேதுசமுத்திரத் திட்டத்தில் கொள்ளை அடிப்பதை ஆதரித்தவர்கள். 60 சதவிகித ownerஐ விட்டுவிட்டு, 20 சதவிகித ownerஐச் சிறையில் அடைத்தவர்கள். உண்மைதான். பெரும்பான்மையோர் முரட்டு அகம்பாவிகளே

  8. Mahesh Thevesh சொல்கிறார்:

    Time will give the answer for all your concern. Wait for some time.

  9. srinivasanmurugesan சொல்கிறார்:

    திரு.மோடி அவர்களின் ரூபாய் நோட்டு நடவடிக்கை சரியான தாகவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளிவருவது பிரமிப்பு ஆக உள்ளது.ஆயினும் பலன் வேறுவிதமாக ஆகிவிட்டால்…..என்ற பயமும் இருக்கிறது.₹100,50,20,10,2&1 நோட்டுகளை தாராளமாக வெளியிடுவதில் என்ன தயக்கம் என்பதும் புரியவில்லை.எது எப்படி இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கம் தடை பெறுவது நல்லதில்லை.அரசியல் கட்சிகளின் கணக்குகள் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

  10. R.Gopalakrishnan சொல்கிறார்:

    When I think of Dr.MMS, some how my mind recollects that song ” Seradha idam serndhu
    vanjathil veezhaayada Karna…”

  11. avudaiappann சொல்கிறார்:

    saattan vetham othukirathu…thanathu achial karappupanathai olikka enda nadavadikkaiyum edukkavillai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s