உள்நோக்கங்கள்….? (பகுதி-2) பிழையா, பித்தலாட்டமா….. ?

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மோடிஜியின்
திட்டத்தில் பல உள்நோக்கங்கள் இருக்கிறது என்று
பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது இந்திய வங்கி
ஊழியர் சம்மேளனம்.

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழகப்
பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால், சாதாரண
மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.
பணத்தை மாற்றுவதற்காக வந்தவர்களில் இதுவரை
66 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை போலவே
வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 12 முதல் 14 மணி நேரம்
ஓய்வில்லாமல் வேலை செய்கின்றனர்.

இந்த நிலை எப்போது மாறுமோ ?
என்று ஏங்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய ரூ.500 நோட்டு வந்துவிட்டது என மத்திய அரசு
மற்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. தமிழகத்தைப்

பொருத்தவரையில், சேலத்தில் தனியார் வங்கி
ஒன்றை தவிர மற்ற இடங்களில் இதுவரை புதிய ரூ.500
நோட்டு வரவில்லை. ( இந்த பேட்டி 24/11/2016 அன்று
வெளியாகி இருக்கிறது )

மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம்,
ககர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கப்படுகின்றன.
இந்த நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் மூன்று ‘ஷிப்ட்’
அடிப்படையில் 24 மணி நேரமும் அச்சடிக்கப்பட்டால் கூட
முழுமையாக ரூபாய் நோட்டுக்கள் மக்களுடைய
புழக்கத்துக்கு வர குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாத
காலம் ஆகும்.

இதை வைத்து பார்க்கும்போது நமக்கு தேவையான
புதிய ரூ.500 நோட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்
இறுதியில்தான் முழுமையாக கிடைக்கும் என்பது தான்
உண்மை. இந்த உண்மையை மக்களிடம் சொல்லவில்லை.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மூடி மறைக்கிறது.

அவர்கள் தேவையான நோட்டுகள் கையிருப்பில் உள்ளது
என்று மாயையான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வங்கி
ஊழியர்களையும், பொதுமக்களையும் நேர் எதிரே நிறுத்தும்
மோசமான முயற்சியை செய்ய பார்க்கிறார்கள்.

big-bazar-money

258 பிக் பஜார்களில் ரூ.2,000 வரை நோட்டுகள் சப்ளை
செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறது.
ரிசர்வ் வங்கி அவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கொடுத்து
விட்டார்களா?

இதே அறிவிப்பை எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., ரயில்வே
போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செய்யலாமே?

இது எந்த உள்நோக்கத்துக்காக
செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புப் பணத்தின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளாமல் ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்ற அறிவிப்பு எவ்வித பலனும் தராது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கள்ளப் பணத்தை
ஒழித்துவிடும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.

சிறிய புலனாய்வு நிறுவனத்தின் சார்பில்
இந்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி,
மொத்த பணத்தில் கறுப்புப் பணம்
என்பது ரூ.400 கோடி தான்.

அதாவது செல்லாததாக
அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளின்
மொத்த மதிப்பான ரூ.14,18,000 கோடி மதிப்பில்
இது வெறும் 0.028 சதவீதம் மட்டும் தான்.

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று
புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் பணி மட்டும் தான்
பெரும்பாலும் நடைபெற்று வருகிறது.

இதனால் மூன்றாவது காலாண்டில் வங்கிகள்
அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும்.
உடனே, இதையே ஒரு காரணமாக வைத்து
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க
மத்திய அரசு முயற்சி செய்யும்.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது
என்று இந்த அரசாங்கத்தின் முடிவு கறுப்புப் பணத்தையும்,
கள்ள பணத்தையும் ஒழிப்பதற்காகத்தான் என்று நம்புவது
கடினமாக உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

——————————————————————-

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின்
மூத்த துணைத் தலைவர்
தாமஸ் பிரான்கோ அவர்களுடனான ஒரு பேட்டி –

——-

இக்கட்டான சூழ்நிலைகளில் வங்கி ஊழியர்கள்மீது எந்த
மாதிரியான நெருக்கடிகள் சுமத்தப்படுகின்றன?
அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில்
காத்திருக்கிறார்கள். பணம் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
ஒரு வங்கி அதிகாரியாக இந்தப் பிரச்னையை நீங்கள் எப்படிப்
பார்க்கிறீர்கள்? இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், ஒரு
வங்கி அதிகாரி எப்படிச் செயல்பட வேண்டும்?

இந்தத் திட்டம் கறுப்புப் பணத்தை ஒழிக்குமா?
இல்லையா? என்பது போன்ற விவாதங்களுக்குள்
நான் போகப் போவதில்லை. ஆனால், இந்தத் திட்டம்
முறையான திட்டமிடலோடு அறிமுகப்படுத்தப்படவில்லை
என்பது உறுதி.

மோடிஜி அமல்படுத்தியிருக்கும் இந்தத் திட்டத்தில்,
பல முக்கிய அடிப்படைத் தேவைகளை கருத்தில்
கொள்ளாமலே அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
பணத்தை தடை செய்வது குறித்த முடிவுகளை
வெளியிடுவதற்கு முன்னரே, அதற்குத் தகுந்த
புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளிலும் ஏடிஎம்
மையங்களிலும் கிடைக்கும்வண்ணம் ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்களுக்கு
தேவைப்படும் ரூ.500 நோட்டுகளைத்தான் முதலில்
வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் பல
பகுதிகளிலும் இன்னும் ரூ.500 நோட்டுகள்
விநியோகிக்கப்படவில்லை.

மோடியின் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னரே
வங்கிகள் திறக்கப்பட்டாலும் மக்கள் பணத்தை
மாற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள், கணினியின்
மென்பொருள் செயலிகள் போன்றவைக்கூட முழுமையாக
தயார் நிலையில் இல்லாமல் இருந்த நிலையில் தான்
பொதுமக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மிக முக்கியமாக, பல வங்கிகளுக்கு புதிய ரூபாய்
நோட்டுகளே சென்று சேரவில்லை. இந்த நெருக்கடியால்
எங்களிடம் இருந்த ரூபாய் 100 நோட்டுகளை வைத்து
எவ்வளவு பேரை சமாளிக்க முடியும்?

மறுநாளிலிருந்து மக்கள் காலை 7 மணி முதலே
வங்கிகளின் முன்னால் வரிசைகளில் காத்திருக்கத்

தொடங்கினார்கள். மக்கள் கூட்டம் அலைமோத
தொடங்கியது. இதற்காக, இரவு 10 மணி வரை கூட
வங்கிகள் செயல்பட்டு மக்களுக்குப் பணத்தை மாற்றிக்
கொடுத்துக் கொண்டிருந்தன.

——–

அதுவரைக்குமான பணம் உங்களிடம் இருந்ததா?

அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள். தொடர்ந்து
மக்களிடம் ரூபாய் 100 நோட்டுகளைக் கொடுத்து
சமாளித்து வந்தோம். பின்னர், எங்களிடம் பணம்
தீர்ந்த பிறகு ரிசர்வ் வங்கியை அணுகியபோது,
அவர்கள் பழைய அழுக்கடைந்த ரூபாய் 100
நோட்டுகளைக் கொடுத்தார்கள். அந்த பழைய ரூபாய்
நோட்டுகளை அடுக்குவதற்கும் எண்ணுவதற்கும்

எந்திரங்களைப் பயன்படுத்த முடியாததால்
நாங்கள் அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மிலும்
போட முடியாதபடி இருந்ததால்தான் ஏடிஎம்களிலும்
கடுமையான பணத் தட்டுப்பாடு இருந்தது.

——–

புதிய ரூபாய் நோட்டுகள் புழங்கும்படி ஏடிஎம் மெஷின்கள் மறு
சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறதே!

ஆம். புதிய ரூபாய் நோட்டுகள் தற்போதுள்ள ஏடிஎம்களில்
பொருந்தாது. அவற்றுக்கான மறுசீரமைப்புப் பணிகள்
மோடி அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்திலேயே
தொடங்கிவிட்டன. அதில் சோகம் என்னவென்றால்,
புதிய ரூபாய் நோட்டுகள் வருவதற்கு முன்பே நாங்கள்
அந்தப் பணிகளை செய்யத் தொடங்கியிருந்தோம்.

பெரும்பாலான ஏடிஎம்களில் ரூபாய் 100 நோட்டுகளாகவே
ரூ.2.1 லட்சம் வரை பணம் நிரப்ப முடியும். ஒரு நபர் ரூபாய்
2,000 எடுக்கலாம் என்ற அரசாங்க அறிவிப்பின்படி,
அந்த ரூ.2.1 லட்சம் பணத்தை 105 பேர் மட்டுமே எடுக்க
முடியும். ஆனால் ஒவ்வொரு ஏடிஎம் முன்பாகவும் 300
பேருக்கு குறையாமல் நிற்கிறார்கள்.

——-

இதுதொடர்பாக, கிராமப்புறங்களில் பணிபுரியும் வங்கி
ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்?

கிராமப்புறங்களில் பணிபுரியும் எனது சகாக்களிடம்
இதுபற்றி விசாரித்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உத்திரவாத சட்டத்தின்மூலம் பயன்பெறும் தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் போன்றோர்
இந்த திடீர் நடவடிக்கையால் பெருமளவு
பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். ஆனாலும்
இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்கும் நோக்கில்
வங்கி ஊழியர்கள் அனைவரும் கடுமையாக
உழைத்துள்ளார்கள். கடந்த 8 மற்றும் 9 ஆகிய நாட்களில்
கிட்டத்தட்ட இரவு முழுக்க பணியாற்றியிருக்கிறார்கள்.

———

வங்கிகளுக்கு இதனால் என்ன மாதிரியான இழப்பு
ஏற்பட்டிருக்கிறது?

வங்கிகளின் அனைத்து வழக்கமான செயல்பாடுகளும்
தடை செய்யப்பட்டுள்ளன. முழுக் கவனமும் ரூபாய்
நோட்டு மாற்றத்திலேயே உள்ளது. மற்ற அனைத்துச்
செயல்பாடுகளும் ஸ்தம்பித்துள்ளன. இதன் மூலம் வங்கிக்கு
எந்தவிதமான சிறப்பு வருவாயும் கிடைக்கப் போவதில்லை.

வங்கியின் முக்கிய வருவாயாகிய கடன், வட்டி போன்றவை
முற்றிலும் தடைபட்டுள்ளன.

——————————————————————-

பின் குறிப்பு –

மேலே இருப்பது பத்திரிகைகளில் வெளிவந்துள்ள
செய்திகள் மட்டும் தான். இதில் எனது பங்கு
தொகுத்து அளித்தது மட்டுமே.

சாதாரணமாக மக்களின் பார்வைக்கு வராத
செய்திகளை இங்கு எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
இதில் எதை எடுத்துக் கொள்ளலாம்,
எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதை
வாசக நண்பர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to உள்நோக்கங்கள்….? (பகுதி-2) பிழையா, பித்தலாட்டமா….. ?

 1. LVISS சொல்கிறார்:

  When the petrol bunks were giving cash against debit cards no question was asked — Now they are– The banks have entered into arrangement for disbursing cash thro petrol bunks and now the BIg Bazaar —They use machines supplied by the bank — As far as public is concerned they will get cash — This also reduces crowd at various ATM —This may become the new normal in the coming days , ie various establishments dispensing cash on behalf of banks —-

  http://indianexpress.com/article/india/india-news-india/big-bazaar-allows-cash-withdrawal-up-to-rs-2000-from-nov-24-4390379/

 2. paamaranselvarajan சொல்கிறார்:

  இந்த 17 நாட்களாக இவர்கள் அவசரகதியில் அறிவித்த செல்லாத நாேட்டு என்கிற செயலை சமாளிக்க இதுவரை தினமும் விட்ட புது…புது சப்பைக்கட்டு அறவிக்கைகளின் … எண்ணிக்கை எத்தனை என்பதைதெரிவித்தால் புண்ணியமாக இருக்கும் …. தானே…..?

  • கருப்பசாமி சொல்கிறார்:

   எனக்கு தெரிஞ்சு 50.
   எதுக்கும் கொஞ்சம் பொறுங்க சார்.
   ஒருத்தர் வருவார் இங்கிலீஷில் பதில் போட.

  • LVISS சொல்கிறார்:

   Does it matter how many notifications were issued after the announcement of cancellation of legal tender to high denomination of note as long as the issues are addressed -It is not demnetisation as many call it —
   The last count of notifications is about 17 –Many more will be forthcoming till the scheme is closes in Dec –There will be notifications regarding removing ceiling of withdrawal money from ATM, restoring the limit to the original , withdrawal of limit of debits to accounts ,, complete withdrawal of the schemes etc – Course correction in managing situations is not a crime —

 3. Surya சொல்கிறார்:

  The points are very valid. But I think the same topic being discussed seems a bit overdose.

  Can an article come out on Amma’s health?

 4. gopalasamy சொல்கிறார்:

  It is shocking and disappointing to note the apex court termed the documents produced by Prashant Bhushan as “zero”, “fictitious” and “not authentic”. Very strange !

 5. gopalasamy சொல்கிறார்:

  மொத்த பணத்தில் கறுப்புப் பணம் என்பது ரூ.400 கோடி தான். Very valid statement. Everybody should accept this.
  Moreover nobody should blame Pakistan for fake currency. Absolutely no fake currency. Hawala is helping Indian economy. I wish somebody should give more light. Trade union people know better.

 6. selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! இந்த இடுகையின் விவாதத்திற்கு ஒவ்வாத செய்தி தான் என்றாலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏன் — ” ஒரே மாதிரியாக ” இருக்கிறார்கள் என்கிற சந்தேகத்தோடும் — இந்த செய்திகளை பற்றிய மற்றவர்கள் கருத்து அறியவும் பதிவிட்டு இருக்கிறேன் .. அனுமதிக்கவும் …. // குண்டு துளைக்காத குளியலறை வசதியுடன் கூடிய 1 லட்சம் சதுர அடி புதிய வீட்டில் குடியேறுகிறார் தெலங்கானா முதல்வர்// —- https://ennanadakkuthu.com/tamilnews-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/

  // படுக்கை அறை, கழிப்பறை உள்பட ரூ.5 கோடியில் சொகுசு பஸ். தெலுங்கானா முதல்வர் மீது குற்றச்சாட்டு // http://www.chennaitodaynews.com/telangana-cm-kcr-gets-rs-5-crore-mercedes-benz-bus/ …..
  ஏழைபங்காளர்கள் — எளியவர்கள் — மக்கள் குறைதீர்க்க வந்த மாமனிதர்கள் — வாழ்க — வளர்க — ?

 7. Sundar Raman சொல்கிறார்:

  அதை விட பெரிய நிறைய வீடுகள் உண்டு – ஜெகன் ரெட்டிக்கு , ED /CBI … அவரை பிடித்து விசாரணை செய்தது …ஆனால் கோர்ட் பெயில் கொடுத்திருக்கிறது . மல்லையா ..மல்லையா என புலம்பும் இந்த வாய் சவடால் வீரர்கள் ( யெச்சூரி , ராகுல் ) – மிகவும் சாமர்த்தியமாக , இந்த கடன், மற்றும் அதை திரும்பவும் மாற்றி கொடுத்தது …எல்லாமே UPA சமயத்தில் . ED மல்லையாவின் பாஸ்ப்போர்ட்டை முடக்க கோர்ட்டை அணுகிய போது , கோர்ட் , அதெல்லாம் முடியாது, பாஸ்ப்போர்ட்டை திரும்பி கொடு என்று தீர்ப்பு வழங்கியது, மேலும், மல்லய்யாவின் சொத்துக்களை தற்பொழுது ஜப்தி செய்து , கடனில் பெரும் பகுதியை திரும்ப பெற முயற்சிகள் இந்த ஆட்சியால் தான் நடக்கிறது . NPA என்கிற வாரா கடன்கள் மிக பெரும் பகுதி ( 95%) … UPA சர்க்காரால் கொடுக்கப்பட்டது ( எடுப்பதை எடுத்துக்கொண்டு) – உங்களுக்கு எல்லாம் தெரியும் , இருந்தாலும் தற்சமயம் ….

  • GVB சொல்கிறார்:

   லலித் மோடி என்று இன்னொரு மோடி இருந்தாரே
   அவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா சார் ?
   உங்க தலைவர் சுஷ்மாஜி கூட ஹாலிடே டூர் போக
   உதவினாரே அவர் தான். அவரை உடனே இந்தியாவுக்கு
   கொண்டு வரப்போவதாக பாவ்லா காட்டினார்களே.
   அந்த விஷயம் இப்போது எந்த கட்டிலில் படுத்து
   உறங்கிக் கொண்டிருக்கிறது ?
   பாஜக அரசு ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது ?

 8. Sundar Raman சொல்கிறார்:

  Of course sir , he got his passports form the court order. Where as this govt has taken all possible steps through ED / Interpol – the so called United kingdom is a sanctuary for criminals and absconders – what can Indian Govt do ? send their commandos ? He was a close friend of Rajasthan CM, …but it wasn’t a crime… the allegation of Sushma or Vasundhara is close to L.Modi .will not hold in court , otherwise why no body went to court , because every one knows..including you .

 9. avudaiappann சொல்கிறார்:

  vanki union thalaivarkal communist katchi kararkal..valai seivatharku kastapadukirarkal

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.