பிழையா, பித்தலாட்டமா….. ? (பகுதி-1)

நோட்டுக்களை செல்லாக்காசுகளாக்கிய அறிவிப்பு
வந்தவுடன் அனைவரும் (விமரிசனம் தளம் உட்பட)
அதனை வரவேற்றனர்….

பின்னர், அதில் உள்ள குறைபாடுகளும்,
உள்ளே ஒளிந்திருந்த உள்நோக்கங்களும் ஒவ்வொன்றாக
வெளிவரத்துவங்கியவுடன்,

பலதரப்பினரிடமிருந்தும்,
மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் –

( – திட்டத்தை கொஞ்சம்
மனிதாபிமானத்தோடு
செயல்படுத்தி இருக்கக் கூடாதா…? –
போன்றவை இந்த தளத்தில் கூட வெளிவந்தன…)

முக்கியமாக எதிர்க்கட்சிகளிடமிருந்தும் விமரிசனங்கள்
வெளிவரத் துவங்கின…

அவர்களில் பலரும், துவக்கத்தில்,
திட்டத்தை குறைகூறாமல், நிறைவேற்றலில் ( execution,
implementation ) உள்ள
குறைகளைத்தான் சுட்டிக் காட்டினர்.

கரன்சி நோட்டுக்கள், சில்லரைப்பணம் கிடைக்காமல்,
மக்கள் திண்டாடும் காட்சிகள் வெளிவந்தன.
வங்கிகளின் வாயில்களில்,
ATM வாயில்களில் மக்களின் நீண்ட வரிசை பற்றிய
புகைப்படங்கள் வெளிவந்தன.

திட்டம் அறிவிக்கப்பட்டு 17 நாட்கள் ஆகியும், இன்றும்
பல வங்கிகள் புதிய கரன்சி நோட்டுக்கள் ஸ்டாக் இல்லை –
சப்ளை வரவில்லை என்று சொல்கின்றன….
ஒரு இன்றைய செய்திப் புகைப்படத்தை கீழே காணலாம்.

panam-illai-1

..

..

இந்த திட்டத்தை கொண்டு வந்ததில் மத்தியில் ஆளும்
கட்சிக்கும், அதன் தலைமையில் உள்ள நிர்வாகிகளுக்கும்
ஏற்படக்கூடிய, தனிப்பட்ட லாபங்களைப்பற்றி இங்கு
நான் விவாதிக்கப்போவதில்லை…

தேவையான புதிய நோட்டுக்களை அச்சடித்து ஸ்டாக்
வைத்துக் கொள்ளாமலே, அவசர அவசரமாக பழைய
நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது ஒரு
இமாலயத் தவறு.

உரிய அளவு ஸ்டாக் வைத்துக் கொண்ட
பிறகு இதே திட்டத்தை அறிவித்திருக்கலாமே –
ஏன் செய்யவில்லை….? ( உத்திர பிரதேச, பஞ்சாப் மாநில
சட்டமன்ற தேர்தல்கள் அதற்குள் முடிந்திருக்குமே…
அதனால் தானே ….!!!)

மக்களின் துன்பங்களையும், குறைகளையும் போக்க
அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று கூறினால் –

அப்படி கூறுபவர்கள் அனைவரையுமே ஒரே வரிசையில்
நிறுத்தி – இவர்கள் அனைவரும் கருப்பு பணத்துக்கும்,
கள்ளப்பணத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் துணை
போகிறவர்கள் என்று முத்திரை குத்துகிறார் இந்த
நாட்டின் தலைமை நிர்வாகி.

இவரையும், இவரது கட்சியையும், எண்ணி எண்ணி
புளகாங்கிதம் அடைந்து, பெருத்த ஆதரவை அள்ளிக்
கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு படித்த, நடுத்தர வர்க்க
மற்றும் தீவிர இந்துத்வா கூட்டம்.

எந்தவித நடைமுறை சங்கடங்களையும் அனுபவிக்காதது
இந்த கூட்டம். மக்கள் படும் சொல்லொணாத் துன்பங்களை
மறைத்து, தங்கள் தலைவன் துதி பாடுவதையே
கடமையாக்கிக் கொண்டிருக்கிறது இந்த கூட்டம்.

இதில் உச்சகட்டம் இன்று காலை, இந்த தேசத்தின்
தலைமை நிர்வாகி கூறுகிறார் –

————–

“பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு வெகு சிலரே எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே
விஷயத்தையே முன் வைக்கின்றனர்.

அதாவது போதிய அவகாசம் கொடுக்காமல் ரூபாய் நோட்டு
நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.

உண்மையில் அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை
மாற்றிக் கொள்ள தங்களுக்கு கால அவகாசம் இல்லாமல்
போய்விட்டது என்பதே அவர்களுடைய கவலை.

எதிர்க்கட்சிகள் அத்தனையும் கருப்புப் பணத்தை
ஆதரிக்கின்றன….”

——————-

பண்பட்ட ஒரு மூத்த, அனுபவமிக்க தலைவராக,
இந்த தேசத்தின் தலைமை நிர்வாகியாக,
மக்கள் இவரிடம் எதிர்பார்த்தது –

” மிகப்பெரிய ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில்
மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நான் உணர்கிறேன்.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நடைமுறை சங்கடங்களுக்காக
வருந்துகிறேன். மக்களின் சிரமங்களை போக்க
தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு
விரைந்து எடுக்கும். ”

இதைச் சொல்லக்கூட வக்கில்லாமல்,
குறைகூறுபவர்களை எல்லாம் –
‘” தேசதுரோகி”, “கருப்புபணம்
வைத்திருப்பவர்” என்று முத்திரை குத்தும் இந்த
அகம்பாவிக்கு மக்களும், தெய்வமும் உரிய காலத்தில்
பாடம் புகட்டுவர்….

இனி, இந்த ரூபாய் நோட்டு பிரச்சினைகள்
குறித்த அனைத்து செய்திகளையும் தேடியெடுத்து
இந்த தளத்தில் ஒருங்கிணைத்து பதிவதை நான் ஒரு
சமூகக்கடமையாக மேற்கொள்வேன்….

முதல் பகுதியாக கீழே கார்டூனிஸ்ட் சுரேந்திராவின்
சில கார்ட்டூன்கள். நான் மூன்று பக்கங்களில் எழுதி
விளக்கக்கூடிய விஷயங்களை இந்த மூன்றே கார்ட்டூன்கள்
மிக எளிதாக விளக்கி விடுவதை பார்க்கலாம்…

surendra-cartoon-3

surendra-cartoon-1

surendra-cartoon-2

———————

பின் குறிப்பு –

இவர் சொல்வதனால் மட்டுமே,
இந்த implementation-ஐ குறை சொல்லும்
நானோ, என் போன்ற மற்றவர்களோ தேசபக்தி இல்லாதவர், கருப்புபணத்தை ஆதரிப்பவர்
ஆகி விடுவார்களா ….?

இதைச் சொல்ல இந்த சுயநலவாதிக்கு என்ன தகுதி இருக்கிறது…?

இவர் சேவை செய்ய வந்திருப்பதாகச் சொன்னாலும்,
அதில் சுயநலம் இல்லாமலா இருக்கிறது…?
ஏன் -அன்னா ஹஜாரே மாதிரி தேர்தலில் நிற்காமல்,
பதவியைத் தேடி ஓடாமல் –
தேச சேவை செய்வது தானே…?

நான் மட்டுமல்ல, குறை சொல்பவர்களில் ஒரு சிலரைத்தவிர,
மீதி அத்தனை பேரும், மக்களின் துன்பத்தையும், துயரத்தையும்
பார்த்து தான் புலம்புகிறோம்… எதிர்க்கிறோம்…

இவரைப் போல் – அரசியல் ஆதாயமும் எதிர்பார்த்தல்ல…

பாரத் மாதா கி ஜெய் என்று மேடையில் முழங்கினால்
மட்டும் போதாது…. மனதில்,
மக்கள் பற்றிய உண்மையான கவலை வேண்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to பிழையா, பித்தலாட்டமா….. ? (பகுதி-1)

 1. B.V.S. சொல்கிறார்:

  Fantastic.
  Please Go Ahead.
  We are with You.

 2. கருப்பசாமி சொல்கிறார்:

  பிழை பாதி
  பித்தலாட்டம் மீதி
  இரண்டும் கலந்த கலவை இது

 3. LVISS சொல்கிறார்:

  First things first -Today’s Kunkumam contains an article titled “Sali ora kadaiyilum ini card swiping dhan” This is about vendors in Koyambedu in Chennai –Let us , the eternal complaining and whining middle class people ,who call ourselves enlightened, stand in a queue and hang our heads in shame — These people show us how to find ways out of a difficult situation –There are photos of vendors handling these POS ( Point Of sales ) machines —One of the vendor is quoted as saying that he started using this machine the VERY NEXT DAY after the announcement was made by the PM =-Another vegetable vendor says ” I do not know how to read and write -I found it difficult initially to run the shop – I went to my bank and sought their advice and they gave me this machine –Now the business is good ” —
  Like many intellectuals you also think that all supporters of BJP belong to what you call Hindutva brigade –Sorry, you are wrong — You can see quite a few belonging to other religions as spokesmen of the party in tv debates —
  There is an ocean of difference between saying some body is saying or doing something anti national and calling them anti national —Why brand oneself as anti national at the slightest pretext and say ‘they are calling me anti national because I am criticising them ”
  It is okay for you if the leaders of the parties go and sit with those who allowed slogans to be raised against the country in a campus and talk politics, criticise the PM personally or go to the tired people standing in ATM queues and talk politics — But the PM cannot say a word about the opposition who he thinks indulge in misrepresentation of facts in a platform of his choice –In all this bashing there is a common thread ,they dont criticise the govt which should be held collectively for responsible ‘ but almost every second or third sentence is prefixed or suffixed with Modi — It is okay for you –What sort skewed logic is this —
  We cannot say Modi should have said this instead of this according to our likes — Does he need script writers —
  It is okay to say I like to serve the people -But you can serve the people really only if you are in politics — Why did kejriwal move away from Anna Hazare and form a party — Because he realised that sitting in a group and shouting slogans and saying we are here to serve the people wont do —He has to have some political power to do something for the people —
  A bank which usually gives cash to about 500 people a day on usual banking days now having to give cash to 2000 people a day ,day after day will definitely run out of cash — Even a currency chest banks will experience shortage of cash despite regular replenishment of cash –
  -You would have come across this one —-‘Peelipey sagadum achirum Appandum sala miguthu peyin -This is what is happening in banks —

 4. ஆஷிக் அஹ்மத் அ சொல்கிறார்:

  பூச்சி மருந்து அடிக்கும் ரிசர்வ் வங்கி…

  வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் திக்கென்று இருக்கிறது. IANS செய்தி நிறுவனம் அப்படியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நூறு ரூபாய் நோட்டுக்கள் பெரும் தட்டுப்பாடாக இருப்பதால், நிலைமையை சமாளிக்க, ரிசர்வ் வங்கி கிடங்கில் அழிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய நூறு ரூபாய் நோட்டுக்களுக்கு புத்துயிர் அளிக்கப்படுகின்றது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இவை மிகவும் அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும், துர்நாற்றம் வீசுபவையாகவும் இருப்பதால் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டும், நறுமணங்கள் தெளிக்கப்பட்டும் வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

  (சாப்பிடும்) வலது கையில் இரசாயன மை வைப்பதால் உடல் நலத்திற்கு கேடு வர அதிகம் வாய்ப்புள்ளது என்று ஒரு பக்கம் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்க, இப்போது இந்த செய்தி இன்னும் அச்சத்தை தருகின்றது. முறையான திட்டமிடல் இல்லையென்றால் நாம் நினைக்காத புறத்திலிருந்து எல்லாம் பிரச்சனைகள் குவியும் என்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

  இச்செய்தி குறித்து விரிவாக படிக்க: http://www.ianslive.in/index.php?param=news/Banks_disbursing_soiled_notes_sprayed_with_perfume_insecticides-532752/LatestNews/31

  • LVISS சொல்கிறார்:

   As a measure to prevent termites from destroying the cash banks resort to this -It is not perfume but some kind of anti termite chemical — If you visit a bank on the day this is done you can get this pungent smell —

   • கருப்பசாமி சொல்கிறார்:

    Mr. LVISS,

    இதைச் சொல்ல நீங்கள் தேவையா ?
    ஜால்ரா போடுவதற்கும், ஒரு எல்லையே இல்லையா ?
    காவிரிமைந்தன் சார் நாங்கள் இப்படி எல்லாம் வதைபடுவதை
    நீங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்களா ? தெய்வமே !

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப கருப்பசாமி,

     பொறுமை….
     இங்கு கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      HORRIBLE …

      நண்பர் ஆஷிக் அஹ்மத் கொடுத்திருக்கும்
      லிங்க்கில் உள்ளது மிக முக்கியமான
      ஒரு செய்தி – நண்பர்கள் சுலபமாக அறிய
      அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
      (நன்றி – ஆஷிக்…)

      http://www.ianslive.in/index.php?param=news/Banks_disbursing_soiled_notes_sprayed_with_perfume_insecticides-532752/LatestNews/31

      New Delhi, Nov 19 (IANS) Battling an unprecedented cash crunch after the government spiked high-value currency notes, banks at various places have been receiving soiled Rs 100 notes for disbursal that were otherwise supposed to be dumped after being taken out of circulation years ago.

      Many customers in Delhi complained to IANS that they received some of these soiled and almost mouldy currency notes that in the odd case even smelt bad.

      A bank manager, who wished not to be named, told IANS: “The RBI is sending old 100 rupee notes stored for years but not destroyed, These notes smell. We are spraying them with perfumes and insecticides before disbursing them.”

      The manager said that a large number Rs 100 notes worth millions of rupees have been returned for circulation to narrow down the huge cash demand-supply gap after the November 8 demonetisation of 500 and 1,000 rupee notes — which accounted for 86 per cent of the currency in circulation.

      As a normal practice, such soiled and damaged notes are usually returned to banks and sent to RBI offices where they are put into shredder machines and ferried to dumping sites.

      However, it appears that the central bank may not have dumped some of these notes in years and these have now come to the RBI’s rescue in these times of a severe cash crunch.

      Long queues outside banks and ATMs continued for the ninth day on Saturday with people jostling to get cash to meet their daily needs.

      Although the Finance Ministry and the RBI insist that there are sufficient number of new Rs 2,000 and Rs 500 notes to replace the estimated Rs 14.5 lakh crore sucked out of the economy by the demonetisation, there is clear evidence of a shortage.

      While some attribute this to logistical issues — the problem of getting the new notes to bank branches across the country — others have made calculations, based on the printing capacity of the four currency presses in the country, to contend that the demand-supply mismatch will take anywhere between six and nine months to bridge.

      ——————-

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 5. Sundar Raman சொல்கிறார்:

  கா.மை சார் , என்ன கோபம் … இப்போ பாங்கில் வரிசை இல்லை , ATM இல் பணம் கிடைக்கிறது , சின்ன சின்ன கடைகள் கூட எப்படி pay TM அல்லது POS மெஷின் வைத்து வியாபாரத்தை பெருக்குவது ( அல்லது தக்க வைத்து கொள்வது ) என யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . சில பல டீ எஸ்டேட்களில் சம்பளம் பேங்க் மூலம் கொடுக்கப்படுகிறது … நிச்சயம் டிசம்பர் இறுதிக்குள் நிலைமை சீராகிவிடும் … நிச்சயமாக கட்டிட தொழில் அல்லது ரியல் எஸ்டேட் பிசினஸ் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கு … ஏற்கனவே கட்டிய வீடுகள் நிறைய விற்பனை ஆகாமல் இருக்கு , இப்போ கருப்பு பணம் வேறு கிடையாது … நிச்சயமாக நிறய பேருக்கு வேலை கிடையாது . அரசாங்கம் அதற்க்கு பதில் நிறய low cost housing கட்ட போவதாக செய்தி வருகிறது , இந்த புழக்கத்தில் இருந்த ஆனால் திரும்பவும் பாங்கிற்கு வாராத பணம், நிச்சயம் சாலை பணிகள், வீடு காட்டும் பணிகள், மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யப்படும் , அப்பொழுது, அந்த இழந்த வேலை வாய்ப்புகள் திரும்பவும் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு. வாய்ப்பே கொடுக்காம இப்படி வாய்க்கு வந்தபடி வசை கொடுக்கலாமா . நீங்கள் மிகவும் நடுநிலையாளர் , மாயாவதி, முலாயம் , மாறன் , பாலு, மற்றும் ஜெகன் ரெட்டி வரிசையில் நீங்கள் நிற்கலாமா ?

  • Amuthan சொல்கிறார்:

   நீங்கள் கூறுவது நல்ல விஷயம் தான், அடிப்படை கட்டமைப்பு, தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் முதலீடுகள் வரவேற்க வேண்டியவை தான். ஆனால் விவசாயம் பற்றி பேசவே இல்லையே!???

  • LVISS சொல்கிறார்:

   One of the collateral objective of this exercise is to take the people towards digital dispensation — I have written on this in another comment — If small vendors could absorb the early shock and devise some means to carry on their trade why cant we draw inspiration from them and try to bear the pain for some time —To me they are the heroes -The political parties are shooting from their shoulders —
   Now it is the govt’s duty to repay the trust and take early steps to bring normalcy in the country —

 6. gopalasamy சொல்கிறார்:

  Sri KMji, you can publish Dinamani Madhi’s cartoons also, even though it does not suit your stand. . I think he is not a mad person !

 7. Amuthan சொல்கிறார்:

  வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பண தட்டுப்பாட்டுக்கு மற்றுமொரு காரணம் , உள்ளூர் பண முதலைகள் அந்தந்த பகுதிகளின் வங்கி மற்றும் தபால் நிலைய ஊழியர்களை விலைக்கு வாங்கி அவர்களுக்குத் தேவையான கருப்பு பணத்தை மாற்றியதும் காரணம் தான்.

  • LVISS சொல்கிறார்:

   That is precisely the reason why they introduced the inking procedure —
   One small correction here –Seeing that the same persons were coming again and again to exchange cash the bank employees representatives took up the matter with their managements who then decided to introduce the inking –It has had the desired effect going by the reduction in the crowd in the banks —

 8. avudaiappann சொல்கிறார்:

  entha oppaari ellam march 31 piraku kaanaamal pokum..entha maaruthalum seiyamal naattai munrethamudiyaathu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.