கருப்புப்பணம் – இனி அரசே 50 % கமிஷனில் வாங்கிக்கொள்ளுமாம்…!!! கருப்பை ஒழிக்க மோடிஜியின் சூப்பர் நடவடிக்கை…!!!

money-1000

கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு விழித்துக்
கொண்டிருக்கும் அய்யோ பாவம், ஒன்றுமறியாத
அப்பாவி பெரிய கருப்பு பணக்காரர்களுக்கு மோடிஜி

இன்னுமொரு தடவை கருணை காட்டுகிறார்….

18 நாட்களாக வங்கி வாசலிலும், ATM வாசலிலும்
க்யூவில் நின்றிருந்த மக்களுக்கு சந்தோஷமான செய்தி –
நீங்கள் இவ்வளவு நாட்களாக க்யூவில் நின்று
மோடிஜியை வாழ்த்து பாடியது வீண் போகவில்லை….
இந்த நாட்டின் 127 கோடி மக்களையும் காக்க வந்த
அவதார புருஷருக்கு புது ஐடியா ஒன்று தோன்றி
இருக்கிறது.

உங்கள் வாழ்த்துதல்களால் –
கருப்புப் பணத்தை ஒழிக்க மோடிஜி அருமையான
புதிய ஐடியா ஒன்றை கண்டு பிடித்து விட்டார்….

பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருப்பதால்,
அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது. இல்லையென்றால்,
நேற்றே பிறப்பிக்கப்பட்டிருக்கும்…

புதிய சட்ட மசோதா ஒன்று பாராளுமன்றத்தில்
உடனடியாககொண்டு வரப்பட இருக்கிறது.

அதன்படி, கணக்கு காட்ட முடியாதபடி
அளவிற்கு அதிகமாக
பணம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
( அதாவது பெரிய கருப்பன்களுக்கு )
அவர்களது பிரச்சினைகளிலிருந்து விமோசனம் பெற
இந்த புதிய சட்டம் உதவும்.

அவர்கள், தங்களிடம் உள்ள மொத்த கருப்பு பணத்தையும் –
இது கணக்கு காட்ட முடியாத பணம் என்று
சொல்லி, வங்கியில் கட்டி விட்டால் –

அதில் பாதியை, அதாவது 50 % பணத்தை அரசு
வருமான வரியாக எடுத்துக் கொண்டு,

மீதி 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை அவர்கள் உடனே
திரும்ப எடுத்துக் கொண்டு போக அனுமதிக்கும்.

மீதி 25 சதவீதம் பணம் அவர்களது பெயரிலேயே
வங்கியில் நான்கு வருட கால Fixed Deposit ஆக
வைக்கப்படும்.

4 வருடங்கள் முடிந்தவுடன் அவர்கள்
தங்கள் பெயரிலேயே, தங்கள் கணக்கில் வைக்கப்பட்டுள்ள
அந்த மீதி 25 சதவீத பணத்தையும் யார் அனுமதியையும்
பெறாமலேயே எடுத்துக் கொள்ளலாம்.

இப்படி திரும்ப திரும்ப பெரிய கருப்பர்களுக்கு
சலுகை கொடுப்பதாக இருந்தால் –
18 நாட்களாக எங்களை ஏன் நடுத்தெருவில் நிறுத்தி
நாய்படாதபாடு படுத்தினீர்கள்,
நாங்கள் என்ன மாங்காய் மடையர்களா என்று
யாராவது கேட்டு விட்டால் ….?

கருப்பு பணக்காரர்களுக்கு, திருந்துவதற்கு ஏற்கெனவே
ஏகப்பட்ட வாய்ப்புகள் கொடுத்தாகி விட்டது.
தானாகவே முன்வந்து அறிவிக்கும் (Voluntary Disclosure
Scheme) திட்டம் எல்லாம் நிறைய கொடுத்து பார்த்தாகி
விட்டது. இவற்றை பயன்படுத்திக் கொண்டு
திருந்தாதவர்கள் மீது இனி கடுமையான நடவடிக்கைகள்
பாயும்…. பிடிபடும் பணம் முழுவதையும், அரசு
கைவசப்படுத்தும் –

என்றெல்லாம் செப்டம்பர் மாதம்
சொன்னீர்களே மோடிஜி என்று நீங்கள்
(அது செப்டம்பர், இது நவம்பர் என்று கூட புரியாத அப்பாவிகள் )
யாராவது தப்பித்தவறி கேட்டு விட்டால் –

அதற்கும் வழி கண்டுபிடித்தாகி விட்டது.

அதற்கும் வந்து விட்டது ஒரு புதிய திட்டம் /சட்டம்….!!!
இந்த பெரிய கருப்பர்களிடமிருந்து வசூலிக்கப்படும்
50 % வரி, தனி கணக்கில் வைக்கப்பட்டு, அதிலிருந்து,
இந்த நாட்டின் ஜனங்களுக்கு கல்யாணம்
பண்ணப்படும் …. 🙂 🙂

புரியவில்லையா….?
இந்தி தெரியாதவர்கள் இந்த செய்தியை கேட்டால்
இப்படித்தான் புரிந்து கொள்வீர்கள்…
அதனால் இன்னும் கொஞ்சம் விவரமாக
சொல்கிறேன்.

“ஜன் கல்யாண்” என்று ஒரு புதிய தலைப்பில் அந்த
நிதி தனியே வைக்கப்பட்டு, அதிலிருந்து பொது மக்களுக்கு
அவ்வப்போது ” நல்லது ” செய்யப்படும்..!

இவற்றை எல்லாம் என்ன ஏது என்று
யாராவது கேள்வி கேட்டீர்களோ தொலைந்தீர்கள்…
நீங்கள் –
“தேச விரோதிகள்”, அல்லது
“தீவிரவாதிகளுக்கு துணை போகிறவர்கள்”
ஆகி விடுவீர்கள்….

(கருப்பு பணக்காரர்களுக்கு இப்போது அவர்களே
துணை போகப் போவதால், இனி உங்களை அப்படி
அழைக்க மாட்டார்கள்….)

வாழ்க மோடிஜி அரசு… வாழ்க வாழ்கவே…!!!

பின் குறிப்பு –

ஒரு பெருத்த நிம்மதி….
இந்த இடுகை முழுவதும்,
பாஜக அன்பர்களையும் விஞ்சி,
மோடிஜியை புகழ்ந்து
பாராட்டியே எழுதி இருக்கிறேன் ….!!!

எனவே, பாயத் தயாராக க்யூவில் காத்திருக்கும்
பாஜக நண்பர்கள் என் மீது
இந்த தடவை பாய முடியாது… 😦 😦

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to கருப்புப்பணம் – இனி அரசே 50 % கமிஷனில் வாங்கிக்கொள்ளுமாம்…!!! கருப்பை ஒழிக்க மோடிஜியின் சூப்பர் நடவடிக்கை…!!!

 1. Sundar Raman சொல்கிறார்:

  KM sir , you have even beaten NDTV and Economic times, even they have not reported the way you reported. Though nothing untruth in your report of 50% tax . Enjoy sir , you have crossed the bar. ( on top now in anti mode brigade)

 2. Sundar Raman சொல்கிறார்:

  Anti Modi brigade.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Sundar Raman,

   Where is the Brigade….?
   Show me if any…
   So that I can seek some solace..

   Nowadays only Pro-Modi’s are active in the Net.
   Others are running after Banks, ATMs,
   and Financiars for money…

   -with best wishes,
   Kavirimainthan

   • Sundar Raman சொல்கிறார்:

    During election, there was big talk that Modi managed the media , Modi influenced the Media – I remember reading even in you blog, that NDTV, CNN, APP, India today all were against during election and now also. Arnab shifted his loyalty , Zee TV changed its colour . There are other chota motta news channels .

    In tamil manam it self , except for Muthusiva – I don’t see any support for Modi on this black money operations. Hence I wanted to say,, y
    You are standing anyway with Maran, Jagan Reddy , Balu, Raja, Kanimozi now you are a notch above than NDTV, CNN, India today.

    and I said nothing untruth in your report of 50% tax…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Sundar Raman,

     I don’t know since how long you are rading this
     Vimarisanam BLOG.

     Thank you very much for your assessment and
     Certification.
     (If at all you get any time in between
     please go thro those Articles written
     in this very same Vimarisanam Blog about
     Maran, Balu, Raja, Kanimozi
     (of course I have not so far written
     anything about Jagan Reddy either positive of negative…)

     -with all best wishes,
     Kavirimainthan

 3. gopalasamy சொல்கிறார்:

  Only 400 crore black money ! what is the use of this announcement .

 4. LVISS சொல்கிறார்:

  This has to pass through the parliament –The parliament has been adjourned several times already -The first debate is still incomplete -So one cannot be certain whether it can be passed before the session comes to an end –If it is referred to some committee for studying and suggesting amendments it more time will be taken – First it has to be passed in LOk Sabha then go to RS There will be a discussion etc —
  Pay 50% tax ( tax 30 and penalty 20) 25 % will be paid back which will come back to circulation The rest 25% to be held in zero interest for 4 years –By that time the value of this 25% will erode considerably – This is the carrot part of it —
  ;The stick part of it is in the form of prosecution if detected by IT —
  If they dont want to declare there is always the option of buying other assets or try to launder it in some other way — Or if they donta want to stick their necks out there is always the option to burn them or send them floating in Ganga —Sleepless nights guaranteed —
  ( Am writing the comments without reading the article – )

 5. bandhu சொல்கிறார்:

  முதலில் ஒரு தன்னிலை விளக்கம். நான் வெளி நாட்டில் வாழும் ‘பரதேசி’. இருந்தாலும், மனதெல்லாம் இருப்பது இந்தியாவில் என்ற பற்பல NRI களுள் ஒருவன்.

  பத்திரப் பதிவுத் துறை, வாகன பதிவு துறை, காவல் துறை போன்ற கண்ணுக்குத் தெரிந்து ஊழலில் ஊறிக் கொண்டிருக்கும் துறைகளை பார்த்து நொந்து போயிருக்கும் பல்லாயிரக் கணக்கான இந்தியர்களுள் ஒருவன். நாலே வருடத்தில் அரசியல் வாதி பணத்தில் கொழிப்பதை பார்த்து வேதனைப் படுபவரில் ஒருவன்.

  வெறும் இருபதாண்டுகளில் நூறு மடங்கு அதிகமாகியும் பணத்தை கொட்டினால் மட்டுமே இடம் என்றாகிவிட்ட கல்லூரிகளில் புரளும் பணம் எத்தனை எத்தனை கோடி. ஒரு சிறிய கணக்கு. சென்னை புறநகரில் இருக்கும் ஒரு கல்லூரியில் என் உறவினர் மகனை சேர்க்க, ஐந்து லட்சம் கொடுத்தோம், சில வருடங்களுக்கு முன். முன்றெல்லாம், இதற்க்கென்று புரோக்கர் இருந்தார்கள். ஆனால், சமீப காலமாக, கல்லூரியில் நேரடியாக பணத்தை வாங்கிக்கொண்டு, எந்த விவரமும் இல்லாமல் ஒரு ரசீதும் கொடுக்கிறார்கள். ஆனால், பணம் வாங்கியவுடன் ‘நேர்மையாக’ இடம் கொடுத்து விடுகிறார்கள்.

  ஊழல் கல்லூரி நடத்துவதில் ஒரு அங்கமாகி விட்டது. ஊழலை கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டோம்!

  இப்படி வாங்கிய ஊழல் பணமெல்லாம் நகையாகவோ இடமாகவோ மாறிவிட்டதா? ஒரு 30 சதவிகிதமாவது பணமாக இருக்காதா?

  இந்தப் பணமெல்லாம் செல்லாது என்றபோது திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகாதா?

  வெறும் ஒரு லட்சத்தில் ட்ரஸ்ட் ஆரம்பித்துவிட்டு நூறு கோடி ரூபாய் ஆட்டையை போடும் காங்கிரஸ் தலைவர்களை பார்த்துக் கொடு தானே இருக்கிறோம்!

  கடந்த 60 வருடங்களில் எந்த பிரதமரும் இதை ஒரு சீரியஸ் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாத போது, (லால் பகதூர் சாஸ்திரி / மொரார்ஜி தேசாய் விதிவிலக்கு), மோடி இதை கையில் எடுத்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

  அதை செயல்படுத்திய விதத்தில் மக்களுக்கு விளைந்திருக்கும் பிரச்சனைகள் கண்கூடு. அதை நீங்கள் குறை சொன்னால் ஞாயம்.

  இது சரியாக செயல்படுத்தப் படவில்லை. ஆனால் சரியான திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப Bandhu,

   நான் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்
   என்கிற நோக்கத்தை குறை சொல்லவில்லை…

   சில நல்ல பலன்கள் ஏற்படும் என்பதையும் மறுக்கவில்லை –

   – தீவிரவாதிகளின் பணபலம் உடைக்கப்படும்…

   – பாகிஸ்தானிலிருந்து கள்ளப்பணம் வருவது
   குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்காவது நடக்காது.

   -உயர்கல்வியில் கருப்புப்பணம் தடுக்கப்பட்டு,
   செலவு குறையும்.

   – ரியல் எஸ்டேட்டில், குறைந்த பட்சம் அடுத்த
   ஒரு ஆண்டுக்காவது கருப்பு பண புழக்கம் தடுக்கப்படும்…

   இவையெல்லாம் நிச்சயமான பலன்கள்.

   ஆனால்,

   நடைமுறைப்படுத்த விதத்தை மட்டும்
   நான் குறை சொல்லவில்லை.

   சரியான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல்,
   மக்களை பரிதவிப்பில் ஆழ்த்திய,
   அறிவித்த அவசரத்தை மட்டும் குறை சொல்லவில்லை.

   இதில் மறைந்திருக்கும் உள்நோக்கங்களை
   உங்களைப் போன்றே,
   இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை.

   அந்த உள்நோக்கங்கள் –
   முதலில் சந்தேகமாக இருந்தது,
   இப்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

   வரும் காலங்களில் வரப்போகின்ற செய்திகளுக்காக
   காத்திருங்கள். பிறகு சொல்லுங்கள்…
   நான் எழுதுவது சரியா தவறா என்று…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sundar Raman சொல்கிறார்:

    கா.மை சார் , உங்கள் வலை பக்கங்களை வெகு நாட்களாகவே படிக்கிறேன் , எனக்கும் ஒரு வலை பக்கம் உண்டு (http://trichisundar.blogspot.ae/.) அரசியலை புரிந்து கொள்வது என்பது முடியாதது என்று தெளிவாக புரிகிறது. பின் ஏன் அம்பானியின் கண்ட்ரோலில் உள்ள NDTV , இந்தனை அதி தீவிரமாக மோடியை எதிர்க்கிறது , ( இதில் CNN -IBN ம் அடக்கம்), ஆனால் அம்பானியின் மருத்துவ மனை திறப்பு விழா நடத்த மோடியையும் அழைக்கிறார்கள் , மோடியும் GAS விற்பனை விலையை , அம்பானிக்கு சாதகம் இல்லாமல் , அரசுக்கு சாதகமாகத்தான் முடிவு எடுக்கிறார். அரசு நினைத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க முடியும் , ஆனால் இந்த Indian Express , மற்றும் இந்த லிட்டன் டெல்லி , என்ற மேட்டுக்குடி மக்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார், அவர்களை ரெய்டு செய்து, வீட்டில் உள்ள விஸ்கி பாட்டில் வைத்து இருந்ததாக , உள்ள போடலாம், அவர்கள் எல்லாம் ஒரு வேளை கூட ஜெயில் சாப்பாடு சாப்பிட முடியாது…. மோடியின் தீவிரம் போதாது . தவறு செய்தவர்களை விடவே கூடாது. சாதாரண டெலிபோன் கம்பியை திருடினால், போலீஸ் முட்டிக்கு முட்டி தட்டும் , ஆனால் , டெலிபோன் எக்ஸ்சேஞ்சு திருடிய தயாநிதி மாறனை ஒன்றுமே செய்யவில்லை. சிதம்பரம் திருடியதை கணக்கு பண்ண முடியாது , கணக்கு வழக்கே கிடையாது. நீங்கள் ஒரு மோடிக்கே இப்படி பயப்படுகிறீர்கள் , நாங்கள் ஒரு நூறு மோடியாவது வரணும்ன்னு நினைக்கிறோம் .

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப சுந்தர் ராமன்,

     நான் நீங்கள் உருவகத்தில்
     நினைத்துக் கொண்டிருக்கும்
     “உண்மையான மோடி”
     வர வேண்டும்
     என்பதில்
     உங்களை விடவும் ஆர்வமாக
     இருக்கிறேன்.

     வந்தால், உங்களை விடவும்
     அதிக மகிழ்ச்சி கொள்வேன்.

     என்னால் முடிந்த சிறிய உழைப்பையும்
     நிச்சயம் தருவேன்.

     இந்த தேசத்தையும், தேச மக்களையும்,
     கடவுள் காப்பாற்றுவார் /இயற்கை காப்பாற்றும்
     என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

     ..

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

   • Amuthan சொல்கிறார்:

    இல்லை அய்யா, முன்னேற்பாடுகள் செய்திருந்தால் கண்டிப்பாக அது பண முதலைகளுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம். தற்போது வங்கி மற்றும் தபால் துறை ஊழியர்கள் பண முதலைகளிடம் விலை போய் விட்டார்கள். முன்னேற்பாடுகள் செய்திருந்தால் இதை விட அதிகமாக தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகரிக்கத் தானே செய்யும்?????

 6. LVISS சொல்கிறார்:

  To the students of Tamil grammar this is a good example of “Uyarvu Navirchi ani”

 7. Uma சொல்கிறார்:

  Hi KM Sir,

  I was reading your blog for atleast 3 years back from now. I never commented.I respect your words as you gained father like figure via your blogs. But your blogs nowadays on demonetization is questioning your nutrality. I am also a sufferer being one of the middle class. But I welcome this move and will support. To my knowledge there is no other way than this. Yes, there is inconvenience, sufferings, deaths, even somebody has known already and made arramgements… but nation well-being is more important than these. Will we recall our soldiers because they are suffering in border so much??

  Sorry for taking a opposite position.

  Thanks

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   உமா அவர்களுக்கு,

   இடுகைகளின் கீழ் வரும் பின்னூட்டங்களை
   தொடர்ந்து படித்து வருகிறீர்களா…?

   நான் ஒரு நண்பருக்கு எழுதியிருந்த
   இந்த விளக்கத்தை படித்தீர்களா…?

   ————-

   நான் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்
   என்கிற நோக்கத்தை குறை சொல்லவில்லை…

   சில நல்ல பலன்கள் ஏற்படும் என்பதையும் மறுக்கவில்லை –

   – தீவிரவாதிகளின் பணபலம் உடைக்கப்படும்…

   – பாகிஸ்தானிலிருந்து கள்ளப்பணம் வருவது
   குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்காவது நடக்காது.

   -உயர்கல்வியில் கருப்புப்பணம் தடுக்கப்பட்டு,
   செலவு குறையும்.

   – ரியல் எஸ்டேட்டில், குறைந்த பட்சம் அடுத்த
   ஒரு ஆண்டுக்காவது கருப்பு பண புழக்கம் தடுக்கப்படும்…

   இவையெல்லாம் நிச்சயமான பலன்கள்.

   ஆனால்,

   நடைமுறைப்படுத்த விதத்தை மட்டும்
   நான் குறை சொல்லவில்லை.

   சரியான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல்,
   மக்களை பரிதவிப்பில் ஆழ்த்திய,
   அறிவித்த அவசரத்தை மட்டும் குறை சொல்லவில்லை.

   இதில் மறைந்திருக்கும் உள்நோக்கங்களை
   உங்களைப் போன்றே,
   இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை.

   அந்த உள்நோக்கங்கள் –
   முதலில் சந்தேகமாக இருந்தது,
   இப்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

   வரும் காலங்களில் வரப்போகின்ற செய்திகளுக்காக
   காத்திருங்கள். பிறகு சொல்லுங்கள்…
   நான் எழுதுவது சரியா தவறா என்று…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 8. avudaiappann சொல்கிறார்:

  varaamal eruntha panam 50% varam enpathu nallathaa kettathaa

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.