பாஜக கருப்பு பணத்தை பதுக்கியதா…? விசாரணை கேட்கிறது நிதிஷின் JDU ….


..

..

இன்று, தொலைகாட்சிகளில், 500-1000 செல்லாக்காசு
ஆக்கப்படுபவதற்கு முன்னர், பாஜக தலைவர் திரு.
அமீத் ஷா அவர்களின் உத்திரவின் பெயரில் –
நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்களை
பாஜக நிலங்களில் முதலீடு செய்திருப்பதாக ஐக்கிய
ஜனதா தளம் புகார் கிளப்பி இருப்பதாக தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து,
இன்று மாலை வெளியாகியுள்ள
ஒரு பத்திரிகைச் செய்தி –

மோடியின் நடவடிக்கையை முன்பே தெரிந்துகொண்டு,
வீடுகள் மற்றும் மனைகளை வங்கிக் குவித்து, தங்கள்
வசமிருந்த கருப்புப் பணத்தை பதுக்கிவிட்டனர்
பாஜக-வினர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது
ஐக்கிய ஜனதா தளம்.

இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் செய்தித்
தொடர்பாளர்கள் சஞ்சய் சிங், நீரஜ்குமார் ஆகியோர்
பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1480098673

‘பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது
என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பீகாரில்
பாஜக-வினர் நிலங்கள், வீடுகள், மனைகளை வாங்கி
முதலீடு செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திலீப்குமார்,
ஜெய்ஸ்வால், சஞ்சீவ், சவுரசியா, லால்பாபு பிரசாத்
ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களில் பிளாட்டுகள்
வாங்கியிருக்கிறார்கள்.

பா.ஜனதா மேலிடத் தலைவர்களின் உத்தரவின்பேரிலேயே
தாங்கள் இந்த பிளாட்டுகளை வாங்குவதாக கட்டுமான
நிறுவனங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

கருப்புப் பணத்தை மாற்றுவதற்காகவே நிலங்களில்
முதலீடு செய்திருக்கிறார்கள். இதில்,
பா.ஜனதா மேலிடத் தலைவர்களுக்கு தொடர்புள்ளது.

அவர்களது உத்தரவின்பேரிலேயே இந்த நில முதலீடுகள்
நடைபெற்று இருக்கிறது.

பீஹாரில் நடந்த எட்டு நில பேரங்களுக்கான
ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன…

செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி லக்கி சாராய்
என்ற இடத்தில் பாஜக-வினர் ரூ.4.7 கோடிக்கு
நிலம் வாங்கியுள்ளனர்.
மதுபானி, மாதேபுராவில் செப்டம்பர் 14ஆம் தேதியும்,

கதிகாரில் செப்டம்பர் 16ஆம் தேதியும், கி‌ஷன் கஞ்ச்,
ஆர்வால் ஆகிய இடங்களில் செப்டம்பர் 19ஆம் தேதியும்
நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அவர்களுக்கு
முன்கூட்டியே தெரிந்திருந்ததால்தான் இவ்வாறு முதலீடு
செய்திருக்கிறார்கள். நிலம் வாங்க கருப்புப் பணம்
பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி நீதி விசாரணை நடத்த
வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும்
உத்தரவிட வேண்டும்’ என்று கூறினர்.

———————————

தங்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகள்
குறித்து மக்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை
போக்க, பாஜக தலைமை முழு விவரங்களையும்,
வெளிப்படையாக தெரிவிப்பது நல்லது.

—————————————————

பிற்சேர்க்கை –

பின் குறிப்பு –

ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக்கப்பட்டதை
தொடர்ந்து நான் எழுதி வரும் இடுகைகளின்
பின்னணி / காரணங்கள் இன்னமும் சில நண்பர்களுக்கு
போய்ச்சேரவில்லை என்பது தெரிகிறது.

எனவே, அனைத்து நண்பர்களுக்கும் இந்த செய்தி
கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பின்னூட்டத்தில் நண்பர் ஒருவருக்கு நான்எழுதிய விவரங்களை
இங்கு மீண்டும் தருகிறேன். நன்றி.

——————–

நண்ப Bandhu,

நான் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்
என்கிற நோக்கத்தை குறை சொல்லவில்லை…

சில நல்ல பலன்கள் ஏற்படும்
என்பதையும் மறுக்கவில்லை –

– தீவிரவாதிகளின் பணபலம் உடைக்கப்படும்…

– பாகிஸ்தானிலிருந்து கள்ளப்பணம் வருவது
குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்காவது நடக்காது.

-உயர்கல்வியில் கருப்புப்பணம் தடுக்கப்பட்டு,
செலவு குறையும்.

– ரியல் எஸ்டேட்டில், குறைந்த பட்சம் அடுத்த
ஒரு ஆண்டுக்காவது கருப்பு பண புழக்கம் தடுக்கப்படும்…

இவையெல்லாம் நிச்சயமான பலன்கள்.

ஆனால்,

நடைமுறைப்படுத்த விதத்தை மட்டும்
நான் குறை சொல்லவில்லை.

சரியான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல்,
மக்களை பரிதவிப்பில் ஆழ்த்திய,
அறிவித்த அவசரத்தை மட்டும் குறை சொல்லவில்லை.

இதில் மறைந்திருக்கும் உள்நோக்கங்களை
உங்களைப் போன்றே,
இன்னும் பெரும்பாலானோர் உணரவில்லை.

அந்த உள்நோக்கங்கள் –
முதலில் சந்தேகமாக இருந்தது,
இப்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

வரும் காலங்களில் வரப்போகின்ற செய்திகளுக்காக
காத்திருங்கள். பிறகு சொல்லுங்கள்…
நான் எழுதுவது சரியா தவறா என்று…

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பாஜக கருப்பு பணத்தை பதுக்கியதா…? விசாரணை கேட்கிறது நிதிஷின் JDU ….

 1. LVISS சொல்கிறார்:

  A probe will settle the issue
  In the meant time this is what the Bihar BJP has to say on this, that for over a year the party was in the process of buying land for its headquarters in Patna and for its offices in districts —
  If the lands were purchased for market value and thro cheques or other instruments it wont be a big deal to find —

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மேற்கண்ட இடுகையை ஏற்கெனவே படித்து விட்ட
  நண்பர்களுக்கு,

  கடைசியில் பிற்சேர்க்கை / பின் குறிப்பு ஒன்றை இப்போது கூடுதலாக இணைத்திருக்கிறேன். தயவுசெய்து அதையும்
  பார்க்கவும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  ஏதோ தன்னுடைய கட்சியினருக்கு அவரால் ” முடிந்ததை ” செய்து இருக்கிறார் —- JDU மட்டும் இவ்வாறு கூறவில்லை — காங்கிரசும் கூறியிருக்கிறது — அந்த செய்தியும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது —- ஆனால் திரு மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதை விடுத்து — வெளியே டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவிலும், பஞ்சாப் – பதிண்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு பேசியாது : — // பண மதிப்பு நீக்கமும் விளைவும்: மோடியின் 10 அம்ச விளக்கம் // —— என்று கூறுவதில்….. // எப்போதும் பணத்தை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் சூழலில் நாமும் அதற்கேற்ப மாறிக்கொள்ளலாம். மொபைல் வழியாக ஷாப்பிங் செய்வது வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவது போல் எளிதானது.

  * பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட வேண்டுமெனில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். வெகு குறுகிய காலத்தில் நாடு முழுவதும் 500 நகரங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்த முடியும். // என்று சூளுரைக்கிறார் ….

  உண்மைதான் யார்– யாருக்கெல்லாம் இது ” எளிதாக சாத்தியப்படுகிறது — சாத்தியப்பட்டுக்கொண்டு இருக்கிறது ” என்பதைப்பற்றி — மோடியின் பம்மாத்து செயலுக்கு வரிந்துக்கட்டி வாய்ச்சவடால் பேசுகிற விவாத விற்பன்னர்களும் — ஒரு சார்புடைய பொருளாதார மேதைகளும் — கணக்காளர்களும் — முக்கியமாக மறைக்க முயலுகிற ஒரு செயலைப்பற்றி மூச்சு காட்டுவதே இல்லை ….

  அந்த செயல் தான் ” ஏற்றுமதி — இறக்குமதி ” என்கிற பெயரில்…இந்தியாவிலிருந்து வர்த்தகம் (Under Invoicing, Over Invoicing, Re – Invoicing) வாயிலாக வருடந்தோறும் வெளியே கொண்டுசெல்லப்படும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் கப்பலில் வெறும் நோட்டுகளாக ஏற்றி அனுப்புவதில்லை என்பதும் — திரு மோடி கூறியவாறு ” அனைத்தும் மின்னணு பரிமாற்றம் வழியாக நொடிப் பொழுதுகளில் வெளியேறியவைதான். ” என்பதும் தானே நடைமுறையில் உள்ளது — நிலைமை இவ்வாறு இருக்க —- , மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று கூறுவதும், சத்தியம் செய்வதும் யாரை ஏமாற்ற? என்பதை அவருக்கு வால் பிடிப்பவர்கள்தான் விளக்க வேண்டும் ….

  ஒரு நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்யும் பெரிய — பெரிய எத்தர்கள் காட்டும் கணக்கு பற்றி யாராவது உற்று நோக்கியிருக்கிறார்களா … ? — என்றால் இல்லை- என்பதுதான் பதில் — வாங்கியதாக இவர்கள் கூறும் விலைக்கும் — விற்றதாக வெளிநாடு காட்டும் கணக்குக்கும் — இருக்கும் ஏகப்பட்ட வித்தியாசமே — ” கருப்புப்பணமாக ” இங்கிருந்து சென்று பின் — பல நாடுகளில் முதலீடு செய்வதும் — பின் அந்த கள்ளப் பணத்தில் ஒரு சிறிய அளவு (பாட்டிசிபேட்டரி நோட்) அந்நிய முதலீடு என்ற பெயரில் இங்கு வந்துசேருகிறது . சிறிய அளவு பணம் மட்டுமே இந்த முறையில் வருவதும் —- மற்ற பணமெல்லாம் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன என்பது தானே உண்மை —

  சொகுசு பங்களாக்கள் — ஆடம்பர வாழ்க்கை — பலநாடுகளில் ஓட்டல்கள் என்று அடிக்கடி செய்திகளில் வருவதெல்லாம் இவ்வாறான வழியில் சென்ற கள்ள –மற்றும் கறுப்புப்பணம் தான் என்பதை ஏன்மறைத்து — அன்றாடங்காச்சிகளில் வயிற்றில் அடித்து அலைய விடுகிறார்கள் … ? கருப்புப்பணத்தை உண்மையில் ஒழிக்க வேண்டும் என்று மோடி விரும்பினால் — முதலில் இந்த ” பெரிய கருப்பர்களை ” கண்காணிக்க ஏற்பாடு செய்யட்டும் — செய்வாரா … ?

 4. தமிழன் சொல்கிறார்:

  ‘நான் இன்னும் இந்த 500/1000 ரூ செல்லாது என்ற அறிவிப்பை நல்லதற்காகத்தான் செய்துள்ளார்கள் என்று நம்புகிறேன். பிரதமர், யாருக்கும் தெரிவிக்காமல் இதனை suddenஆக அறிவித்தார் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

  இப்படித் தன் கட்சிக்கு மாத்திரம், தனக்குத் தெரிந்தவர்களுக்கு மாத்திரம் ஒரு ரகசியத்தைச் சொல்ல இயலாது. (சொல்லி, மீட்டிங்கைக் cancel செய்து மாட்டிக்கொண்டவர்களை ஜெயின் கமிஷன் அறியும்). அப்படி ஒரு வேளை நடந்தது என்று proof வெளியில் வருமானால், இன்று ஆதரிப்பவர்கள் நாளை நிச்சயம் எதிர்ப்பார்கள். Executionல் நம்முடைய (இந்தியாவின்) திறமையின்மை தெரிகிறது. இதற்கும் உள் பாலிடிக்ஸ் (பாஜக ஆதரவு, காங்கிரஸ் ஆதரவு) தான் காரணமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இல்லாட்ட, அரசிடம் சம்பளம் வாங்கும் கயவாளி, 2000 ரூ வை முதலிலேயே வெளியிடத் துணிந்திருப்பானா?

  செல்வராஜன் அவர்கள் சொல்வதுபோல், பெரிய முதலைகளை, இப்போதிருக்கும் சட்டங்களை வைத்துப் பிடித்துவிடமுடிந்தால், அதனை நிச்சயமாக அரசு செய்திருக்கும். நமது மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள், இதனை எதிர்ப்பதற்குப் பதிலாக, உடனே கட்சிகளுக்குள்ள அறக்கட்டளைகளையும், 20000 ரூக்கு மேல்தான், டொனேட் செய்பவர்களது விவரத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பதையும், பெரிய கம்பெனிகளிடமிருந்து தேர்தல் நிதி வசூலை உடனே சட்டப்படி நிறுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சட்டமாக்குவதில் தங்கள் தேச நலனைக் காட்டுவார்களாக. மற்றபடி வேறு எந்த suggestionம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

  • GVB சொல்கிறார்:

   பிரதமர் பொறுப்பை ஏற்று இரண்டரை வருடங்கள்
   ஆகி விட்டன. ஒரே ஒரு பெரிய கருப்பனையாவது
   இதுவரை உள்ளே தள்ளி இருக்கிறாரா ?
   ஒருத்தர் மீது கூடவா ஆதாரம் கிடைக்கவில்லை ?

  • GVB சொல்கிறார்:

   பார்லிமெண்ட் தேர்தலின்போது, தான் பதவிக்கு வந்தால்,
   ஒரு வருடத்திற்குள்ளாக எம்.பி.க்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள்
   அத்தனையும் துரிதமாக விசாரித்து முடிக்கப்பட்டு,
   பார்லிமெண்ட் “சுத்தம்” செய்யப்பட்டு விடும் என்று வாக்குறுதி
   கொடுத்தாரெ – அந்த “சுத்தம்” என்ன ஆனது ?
   எவ்வளவு எம்.பி.க்கள் வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டது ?
   கோர்ட் தாமதித்தால் மோடி என்ன செய்வார் என்று சால்ஜாப்பு
   சொல்லாதீர்கள். தன்னால் ஒன்றும் செய்ய முடியாது
   கோர்ட் தான் இதைச்செய்ய முடியும் என்று வாக்குறுதி கொடுக்கும்போது
   தெரியாதா ? ஏமாற்று வேலை தானெ ?

 5. gopalasamy சொல்கிறார்:

  நானும் தமிழ் மனம் படிக்கிறேன் . கருப்பு பண நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் எல்லா பத்தியாளர்களும் மோடியை கடுமையாக எதிர்த்து கொண்டு இருந்தனர் . வை கோ தவிர எல்லா அரசியல்வாதிகளும் மோடிக்கு எதிர்ப்புதான் . அமைதி புறா பாகிஸ்தானுடன் மோடி என்கிற போர் வெறியர் இந்தியாவை போர் என்னும் படுகுழியில் தள்ள பார்க்கிறார் என்றும் எழுதுகின்றனர் . சீனா எப்படி முதல் வல்லரசு ஆவது என்று ஐடியா மழை பொழிகிறார்கள் . எல்லோரும் அறிவாளிகள் . உண்மை இல்லாமல் இருக்காது . ஆகவே நானும் இன்று முதல் மோடி எதிர்ப்பு என்கிற பாசறையில் ஐக்கியம் ஆகி , வாளினை ஏடு வீணர் கூட்டத்தை வீழ்த்த என்று சீரும் சிங்கமாக பரணி பாடி புறப்பட முடிவு செய்து உள்ளேன்

  • GVB சொல்கிறார்:

   அடடா, திரு.கொபாலசாமி மோடிஜிக்காக
   ஆங்கிலத்தை தியாகம் செய்து விட்டு
   தமிழில் எழுத ஆரம்பித்து விட்டாரே

 6. gopalasamy சொல்கிறார்:

  1953, 1954 இல் , எப்படி தமிழ் நாட்டு மக்கள் படிப்பதற்கு எதிராக குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து ராசாசி தோல்வி அடைந்தாரோ , அதே மாதிரி மோடியும் தோல்வி அடைந்து அவரது கட்சிக்காரர்களாலே தூக்கி எறிய பட போவது உறுதி . ஏழை எளிய மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் வெற்றி அடையாது

 7. Elango Vijayasundaram சொல்கிறார்:

  Sir, could you please do some exercise on this article’s genuineness? http://www.epw.in/journal/2016/47/web-exclusives/did-modi-receive-rs-55-crore-sahara-group-gujarat-cm.html

 8. avudaiappann சொல்கிறார்:

  aatharam ellamal pesukivarrakal nambamudiyaathu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.