எம்.ஜி.ஆர்…. இன்னமும் நினைவு கூறப்படுவது ..

நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் ஒரு அபூர்வ புகைப்படம்

நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் ஒரு அபூர்வ புகைப்படம்

எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 29 ஆண்டுகள் ஆகி விட்டன.
ஜனவரி வந்தால் அவரது நூறாவது பிறந்த நாள்…

இப்போதும் கூட, தினமும், செய்திகளில் எங்காவது
எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே
தான் இருக்கிறார்கள். மறக்க முடியாத அந்த மாமனிதரின்
குணச்சிறப்பை சொல்லும் கட்டுரை ஒன்றினை படித்தேன்.

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி
கீழே பதிகிறேன்….

k-2

k-3

k-3

k-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எம்.ஜி.ஆர்…. இன்னமும் நினைவு கூறப்படுவது ..

 1. தமிழன் சொல்கிறார்:

  எம்.ஜி.யாரின் அரிய குணங்களை நிறைய புத்தகங்களில் படித்துள்ளேன். அது ஒவ்வொருவரும் அவருடைய அனுபவங்களின் மூலமாகச் சொன்னது. வாலி, எம்ஜியாரின் பாதுகாவலர் எஸ் ராமகிருஷ்ணன், நடிகர் சிவகுமார், வலம்புரி ஜான் மற்றும் பலர் சொன்னது. அவர் மனதினில் உண்மையாகவே ஏழைகளிடத்தில் பற்றுக்கொண்டிருந்தார். தாயைத் தெய்வமாக மதித்தது மட்டுமல்லாமல், எல்லோரையும் அவ்வாறே அவரவர் தாயை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். பெரியவர்களை அவ்வளவு மதித்தார்.

  தன் துறையில் முன்னோடிகளை அவர்களது வயது கருதி எப்போதும் மதித்தவர். தான் முதல்வர் ஆகிவிட்டோமே என்று மரியாதைக் குறைவாக எண்ணியதில்லை. சிவகுமாரின் வயதான தாயார் தலைமைச் செயலகத்துக்கு வந்தது அறிந்து, மாடியிலிருந்து கீழே இறங்கி அவரை வரவேற்றுச்சென்றவர் முதல்வர் எம்ஜியார், அதுவும், அவரைப் பார்த்தவாறே பின்பக்கமாக ஏறியவர் எம்ஜியார். (வகை தொகையில்லாமல் எல்லா நடிகர்களையும் தான் இந்திரன் சந்திரன் என்று புகழுமாறு கட்டாயப்படுத்திப் புளகாங்கிதம் அடைந்தவரல்ல அவர்)

  இந்த நிகழ்ச்சியைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். வேறு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டியதற்குப் பதிலாக, மண்டபம் மாறிவந்தாலும், திருமணம் நடந்துகொண்டிருக்கும் மணமக்களுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி பரிசளித்தவர் எம்ஜியார். இவற்றைத் தன் சொந்தப் பணத்திலிருந்து செய்தவர்.

  தனக்கு உதவி செய்தவர்களுக்கு, அதை உடனே திருப்பிச் செய்ததுமல்லாமல், பலமடங்காக உதவியவர் எம்ஜியார். இயல்பாக அனைவரின் கஷ்டத்தையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப கேட்காமலேயே உதவி செய்தவர் அவர். ராமாவரம் தோட்டம் மட்டுமல்ல அவர் இருக்கும் இடங்களில், வந்தவர் முதலில் உணவு சாப்பிட்டாரா என்று கேட்டு கட்டாயப்படுத்தி உணவு உபசரித்தவர். வலம்புரிஜான் காலை 7 மணிக்கு எம்ஜியாரின் உத்தரவின் பேரில் அவரை ராமாவரம் தோட்டத்தில் பார்க்கிறார். எம்ஜியார், சாப்பிட்டாகிவிட்டதா என்று கேட்டதற்கு, ஆமாம் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்கிறார் வலம்புரி. எம்ஜியார், ‘யார் 6 மணிக்கு முன்னால் வீட்டில் உணவு ரெடி செய்து உண்டு அதன்பின் புறப்பட முடியும்’ என்று கேட்டு, முதலில் கீழ்த்தளத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின் வருமாறு சொல்கிறார். மனித நேயம் மிக்கவர் அவர்.

  விடுதலைப் புலிகளின் சுதந்திர தாகம் அறிந்து, அதன் நியாயம் உணர்ந்து உதவி செய்தது மட்டுமல்ல, மத்தியில் அதற்காக மிகவும் வாதாடியவர். அவர்களுக்குச் செய்த உதவியை ஒரு நாளும் அவர் வெளியில் சொன்னது கிடையாது. சொன்னது விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் தான். (அந்தக் காலத்தில் என்னிடம் 10 பைசா கேட்டு வந்தாயே, நான் 1 ரூபாய் கொடுத்தேனே என்று சல்லித்தனமாகப் பேசி உதவி ஏற்றுக்கொண்டவர்களை எள்ளி நகையாடும் ஈனத்தனம் உள்ள தலைவர்கள் உள்ள தேசம் தமிழ்’நாடு) அவர் என்றுமே பிறருக்கு உதவியதைச் சொல்லிக்காட்டியதில்லை.

  நல்லவர்களை மட்டும்தான் மக்கள் மறப்பதில்லை. வெறும் வெள்ளித் திரை வேஷத்தினால் அல்ல. எம்ஜியார் தனிப்பட்டவராகவும், திரையிலும் எடுத்துக்காட்டாக இருந்தார். அவரிடமும் குறைகள் இருந்தன. ஆனாலும் நிறைகள் வெகுவாக இருந்த காரணத்தினால்தான், மக்களின் வெறுப்புக்கு அவர் இருந்தபோதும், இறந்தபோதும் ஆளானதில்லை. அவரைவிடத் திறமை பெற்றவராக கருணானிதி இருந்தபோதும், அவரால் எப்போதும் எம்ஜியாரின் பெயரில் 50 சதவிகிதம்கூடப் பெறமுடியவில்லை.

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  மிக உயர்ந்த மனிதர் இவரின் நல்ல குணங்கள் இன்றளவும் மக்கள் இவரை போற்றுகின்றனர்

 3. Antony சொல்கிறார்:

  The great human being indeed even though there are criticism against him..

 4. Sundar Raman சொல்கிறார்:

  MGR …மறக்க முடியாத மனிதர், என்னுடைய நினைவுகள் அப்படிண்ணு … முன்பு எழுதின ஒரு பதிவு (http://trichisundar.blogspot.ae/2009/05/6.html)

  ஒரு வாரம் கழித்து வந்த பொழுது , MGR கோட்டூர்புரம் வந்தார். , அப்பொழுது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார், திண்டுகல்லில் மாயாண்டி தேவர் வென்ற சமயம் . நானும் இன்னும் சில பசங்களும் MGR இன் நீல அம்பசிடர் காரை பின் தொடர்ந்து ஓடி, அவரிடம் கை கொடுத்தோம் , தம்பி… பாத்து பாத்து ,என்று சொன்னது இன்னமும் நினைவில் நிற்கிறது. MGR பற்றி சொல்லவேண்டுமானால், நீங்கள் எந்த கலர் வேண்டுமானலும் கற்பனை செய்து கொள்ளுங்கள் , பால் வெண்மை , ரோசா பூவு மாதிரி சிவப்பு , ..அல்லது தங்க நிறம் ….. ஆனால், MGR நேரில் , கற்பனையை விட ஒரு 50 % அழ்காக வசீகரமாக இருந்தார். .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.