மோடிஜியின் அடுத்த அதிரடி அறிவிப்பு ….

bjp-logo-with-slogan

இந்திய அரசியலில், காசு கொடுத்து ஓட்டு வாங்கும்
அவலத்தை ஒழித்துக் கட்ட,

அரசியல் கட்சிகள் – தேர்தல்களில் கணக்கில் வராத
கருப்பு பணத்தை பயன்படுத்துவதைதடுக்க –
மோடிஜி எடுக்கும் அடுத்த அதிரடி நடவடிக்கை….

கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை வாங்கினால் கூட
செல்போனை வங்கியாக ( போன் பேங்கிங் ) பயன்படுத்த
வேண்டும். ஹோட்டலில் இட்லி, காப்பி சாப்பிட்டால் கூட

எலெக்ட்ரானிக்ஸ் பணப்பரிமாற்றம் தான் பண்ண வேண்டும்
என்று சொல்லும்

மோடிஜி அவர்கள் அரசியல் கட்சிகளை –
அதுவும் சொந்த கட்சியை
விட்டு வைப்பாரா…?

அவரது அடுத்த அதிரடி அறிவிப்பு –

மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக,
பிற கட்சிகள் அனைத்தையும்,
இதையே செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளாக்கும் விதமாக –

டிசம்பர் 1-ந்தேதி முதல் –
பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து மட்டங்களிலும்,
டெல்லியில் உள்ள தலைமையகத்திலிருந்து,
மாநில, மாவட்ட கட்சிகளிலிருந்து, கட்சியின் கடைசி
கிராம கிளை வரைக்கும் –

நடைபெறும் அனைத்து பணப்பரிமாற்றங்களும் இனி
இண்டர்னெட் பேங்கிங், எலெக்ட்ரானிக் டிரான்ஸ்வர்,
மொபைல் பேங்கிங், செக் பேமெண்ட் –
ஆகியவற்றின் மூலம் தான் நடைபெறும்….

கட்சி ஆபிசில் ஒரு பத்து ரூபாய் நோட்டு கூட
கையில் வைத்திருக்கக்கூடாது.

உறுப்பினர்கள் சந்தாவாக இருந்தாலும் சரி,
பிரபலங்கள், பெரும் தொழிலகங்கள்
யாராவது கொடுக்கும் நன்கொடையாக இருந்தாலும் சரி –

இனி பாஜக வுக்கு கொடுக்கப்படும் எந்த வகை பணமாக
இருந்தாலும் சரி – அது ரொக்கமாக பெறப்படாது.

கொடுப்பவர் பெயர், ஆதார் எண், பான் கார்டு எண்,
முகவரி உட்பட விவரங்களுடன்
கம்ப்யூட்டர் மூலமே (எலெக்ட்ரானிக் டிரான்ஸ்வர் )
பணம் பெற்றுக் கொள்ளப்படும்.

அதே போல் பாஜக அலுவலகங்களால் செய்யப்படும்
எந்த செலவானாலும் சரி –

போஸ்டர் அடிப்பதிலிருந்து, தோரணம் கட்டுவதிலிருந்து,
தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்க தொண்டர்களை
லாரிகளில் அழைத்துப் போவதிலிருந்து –
காப்பி, டிபன், பஜ்ஜி, சொஜ்ஜி, கூல்ட்ரிங்க்ஸ் வகையறா
உட்பட –

அனைத்து வகையான செலவுகளும் –
செக் அல்லது எலெக்ட்ரானிக் பணப்பரிமாற்றம் மூலமே
செய்யப்படும். இவை அனைத்துமே ஆன்லைன்
கம்ப்யூட்டரில் வெளிப்படையாக நடைபெறும்.

இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை
ஒழித்துக் கட்டவும், தேர்தல்களில் ஓட்டர்களை

விலைகொடுத்து வாங்கும் அவலத்தை தவிர்த்து,
ஜனநாயகத்தின் மாண்பை நிலைநிறுத்தவும் –

உடனடியாக பாரதீய ஜனதா கட்சி,
அகில இந்திய அளவில் இந்த திட்டங்களை செயலுக்கு
கொண்டு வரும்.

இதோடு மட்டுமல்லாமல், நாடு பூராவும் உள்ள
பா.ஜ.கட்சியின் அசையும் மற்றும்
அசையா சொத்துக்களின்
விவரமும் ஆன்லைன் வலைத்தளத்தில் –

வெளிப்படையாக, வெட்ட வெளிச்சமாக
பதிந்து மக்கள் அனைவரது பார்வைக்கும் வைக்கப்படும்.

கட்சிக்கு இருக்கிற சொத்து விவரத்தை
வெளிப்படையாகச் சொல்ல, மற்ற கருப்புப்பண
கட்சிகள் வேண்டுமானால் நடுங்கலாம் –
பாஜக ஏன் தயங்க வேண்டும்…?
எனவே, இதை வெளிப்படையாக்குவதில்,
பாஜக முன்னுதாரணமாக இருக்கும்…

அரசியல் கட்சிகள், ரூபாய் 20,000-க்கு உட்பட்ட தொகைக்கு
நன்கொடை தருபவர் பற்றிய விவரங்களை பதிவு பண்ண
வேண்டியதில்லை என்கிற சட்டவிதிக்கு,

உடனடியாக திருத்தம் கொண்டு வரப்பட்டு,

அஞ்சு ரூபாய் நன்கொடை கொடுப்பவர் பெயர் கூட
தேதி, மற்றும் ஆதார் எண்ணுடன்
பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை சட்டப்படி
கட்டாயமாக்கப்படும்.

ஏற்கெனவே, லோக் சபாவில் பாஜக விற்கு
மெஜாரிடி பலம் இருக்கிறது. ராஜ்ய சபாவில் வரும்போது,
இதை எந்த கட்சியாவது தோற்கடிக்க முனைந்தால் –
அது கருப்புப்பண கட்சி என்பது தோலுரித்து காட்டப்படும்.

பின், ஏற்கெனவே உள்ள முன்னுதாரணப்படி –
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டி,
சட்டத்தை நிறைவேற்ற வழி செய்யப்படும்.

——————————————————————-
பின் குறிப்பு –

என்ன கே.எம்.சார்,
இது எந்த செய்தி தளத்திலும் வரவில்லையே
என்று கேட்பவர்களுக்கு –

இதுவரை அறிவிப்பு வராவிட்டாலும்,
அடுத்த அறிவிப்பு இதுவாகத்தான்
இருக்கும் என்று நம்புகிறேன்….

நீங்களும் நம்ப வேண்டுமென்று விரும்புகிறேன்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to மோடிஜியின் அடுத்த அதிரடி அறிவிப்பு ….

 1. palaniappan சொல்கிறார்:

  ponnga sir, enna eaamathitinga

 2. KALAKARTHIK சொல்கிறார்:

  சரியான சாட்டையடி.
  kalakarthik
  karthik ma

 3. jksm raja சொல்கிறார்:

  என்ன KM சார் ! பாரதிய ஜனதா கட்சியை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதில் ஏன் இந்த கொலை வெறி. எல்லாரும் பணம் print பண்ணுவதில் முன் ஏற்பாடு செய்யவில்லை என்று வாதிட்டு வருகிறார்கள். ஆனால் இதை கூர்ந்து கவனித்தால் தான் புரியும் இது திட்டமிட்டு வேண்டும் என்றே காலதாமதம் செய்கிறார்கள் என்று. இதன் மூலம் எல்லோரையும் ரிலையன்ஸ் பிரெஷ் ,பிக் பஜார் போன்ற பெரிய on line ஷாப்பிங் மால் பக்கம் திருப்பி சின்ன சின்ன மளிகை கடையையும் காய் கரி கடையையும் காலி செய்ய வேண்டும் என்பதே நோக்கம். கோடி கோடியாக பணம் கொடுத்த wall mart போன்றவர்கள் எவ்வளவு காலம் தான் காத்துக்கொண்டு இருப்பார்கள். கருப்பு பணம் வைத்திருக்கும் பெரியகருப்பனை பிடிக்கவோ அல்லது கருப்பு பணம் உருவாவதை தடுக்கவோ ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பதை யோசித்து பாருங்கள்.

  • தமிழன் சொல்கிறார்:

   ராஜா அவர்களே… தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம்மை வால்மார்ட்டில்தான் வாங்கவேண்டும் என்று யார் சொல்வது? நீங்கள் பெப்சி, கோக் இவைகளை வாழ்வில் ஒரு முறையாவது அருந்தியிருந்தால், இவ்வாறு மற்றவர்களைக் குறைகூறும் அருகதை இல்லாமல் போய்விடுகிறது. எப்படி பெப்சி, கோக் நம்முடைய மார்க்கெட்டைக் கபளீகரம் செய்தது தெரியுமா? நீங்கள் பரிதாபப்படும் சின்ன மளிகைக் கடைகளால்தான். நம்முடைய சுதேசி குளிர்பானங்கள் அழிந்ததற்க்குக் காரணம் என்ன? பொட்டிக்கடைகளும், நம் மக்களும்தான். எளியவர்கள் தள்ளுவண்டியில் விற்கும் காய்கறிகளையோ, அல்லது பொதுவான மார்க்கெட்டிலோ போய் காய்கறிகள் வாங்காமல், பழமுதிர்ச்சோலை போன்ற குளிர்சாதனக் கடைகளில் வாங்கும் மக்களால்தான் அந்த ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.

   நாம் ஏன் பிரதமர் போன்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? நாம் இன்றிலிருந்து நம் சக ஏழை எளிய மனிதர்களுக்கு உதவும் விதத்தில் நடந்துகொள்வோம்.

 4. Kamalakannan சொல்கிறார்:

  ஜெ-சசி-சோ கும்பலின் கறுப்புப்பண பதுக்கல் அடிவாங்கியதால் தங்களுக்கு கடுமையான ஆதங்கம் இருப்பது புரிகின்றது.

 5. Surya சொல்கிறார்:

  Nice one KM Sir.

  Can you also write up an article on what is really going on with Amma’s health? A suspense of 2+ months for TN people is a lot. At least, we should know who is currently ruling / taking decisions in TN.

 6. தமிழன் சொல்கிறார்:

  பண்ணமாட்டார் என்று நிச்சயம் இல்லை கா.மை சார். கட்சிகளுக்குக் கொடுக்கும் நன்கொடை எல்லாம் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். யார் கொடுத்தார்கள் என்பது பதியப்பட வேண்டும். இது எல்லா எளிய, படித்த இந்தியர்களின் எண்ணம். 20,000 ரூ வரை கொடுப்பவர் பெயர் பதியப்படவேண்டியதில்லை என்று யார் சட்டம் கொண்டுவந்தார்கள் என்று பார்த்தால், யார் ஊழலுக்கு ஆரம்பப் புள்ளி வைத்தார் என்று தெரியும். அப்போது (அந்தக் காலத்தில்) இதனைப் பதிவு செய்ய வழி இருந்திருக்காது. ஆனால் இப்போது, எல்லாவற்றையும் பதிவு செய்ய வழி இருக்கிறது. பொறுமை… பொறுமை வேண்டும்.

  500/1000 ரூ தடை கொண்டுவந்ததற்கு ஒரு காரணம் இருக்கும். எளிய மக்களைத் துன்பப்படுத்தவேண்டும், முதலாளிகளுக்கு உழைக்கவேண்டும் என்று யாருமே நினைக்கமாட்டார்கள். எந்தக் கட்சியும் நினைக்காது. யாராவது பிரதமர் பதவிக்கு வந்து எப்படி தன்னுடைய பெயரை நாசமாக்கிக்கொள்வது என்று வேலை பார்ப்பார்களா? ஒரு தேசத்தை நடத்துவது, அதுவும் நம்மைப்போன்ற, பன்முனை தேசத்தை நடத்துவது மிகவும் சிரமம்.

  ஒவ்வொன்றாக பிரதமர் செய்வார் என்று நம்புகிறேன். இது தமிழகமல்ல. இந்தியா. வெறும் இலவசப் பிச்சை போட்டால் எல்லா இந்தியர்களும் ஓட்டுப்போடமாட்டார்கள்.

  உங்களுக்கு இப்போது நடப்பது என்னைவிட நன்றாகத் தெரிந்திருக்கும். அதில் அனுபவமும் இருக்கும். இருந்தாலும், இந்த அறிவிப்பு தேசத்துக்கு நல்லது. Accountabilityஐ இவ்வளவு விரைவாக இந்தியர்கள் மத்தியில் வேறு எந்த வழியிலும் கொண்டுசென்றிருக்கமுடியாது.

  நிச்சயம் சாதாரண மக்கள் கஷ்டப்பட்டாலும், அவர்களுக்கு இந்தத் தடை மூலம் இந்தியாவுக்கு நல்லது கிடைக்கும் என்றே நம்புகிறார்கள். ‘சாப்பிடப் பணமே இல்லை’ என்று முச்சந்தியில் கோஷம் போடும் ஸ்டாலின் வகையராக்களை மனதில் சிரிப்புடன் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள், பணத்தைச் சுருட்டிய அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிக்க எதிர்ப்புத் தெரிவிக்க, பாஜக வுக்கு லாபம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் தமிழன் இந்த இடுகையின்
   உள்கருத்தைப்பற்றி கொஞ்சம் விவரமாக
   விவாதித்திருக்கிறார் –

   அவருக்கும், அதன் மூலம் மற்ற நண்பர்களுக்கும்
   என் விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்….

   1) // பண்ணமாட்டார் என்று நிச்சயம் இல்லை
   கா.மை சார்.//

   முதலில் அதைப்பண்ணி விட்டு, பிறகு இதற்கு
   வந்திருந்தால் நம்பகத்தன்மை கூடி இருக்கும்….

   2) // இப்போது, எல்லாவற்றையும் பதிவு செய்ய வழி இருக்கிறது. பொறுமை… பொறுமை வேண்டும்.//

   இப்போது தான் அந்த வசதி, டெக்னாலஜி வந்திருக்கிறது.
   மிகச்சரி. எதற்காக இன்னும் பொறுமை…?
   இரண்டரை வருடங்கள் ஏற்கெனவே ஓடி விட்டனவே..

   இதை செய்வதற்கு அரை நாள் போதுமே…
   பாஜக தயாராக இல்லை என்று சொல்லுங்கள் –
   அது தான் சரியாக இருக்கும்.

   3) // முதலாளிகளுக்கு உழைக்கவேண்டும் என்று
   யாருமே நினைக்கமாட்டார்கள்.//

   இவர்கள் முதலாளிகளுக்கு சலுகை காட்டவில்லை
   என்று நெஞ்சில் கைவைத்து, உங்களுக்கு மட்டும்
   கேட்கும்படியாவது உங்களால் சொல்ல முடியுமா…?

   4) //யாராவது பிரதமர் பதவிக்கு வந்து எப்படி
   தன்னுடைய பெயரை நாசமாக்கிக்கொள்வது
   என்று வேலை பார்ப்பார்களா? //

   அதில் தான் புத்திசாலித்தனம்..
   நீங்களே சொல்லுங்கள் – இதை செய்ததால்
   பொது மக்களிடையே பிரதமரது பெயர்
   கெட்டு விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா…?

   சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால் போதும் –
   திருமதி இந்திரா காந்தி, வங்கிகளை
   தேசிய மயமாக்கும்போது ( Nationalisation of Banks )
   கடைபிடித்த அத்தனை டெக்னிக்குகளும்
   இப்போது கடைபிடிக்கப்படுகின்றன.
   இந்திரா காந்தி அப்போது அரசியலில் ஜெயிக்க உதவிய,
   அந்த அரசுத்துறை வங்கிகள் இப்போது யாருக்காக செயல்படுகின்றன…?

   வருடா வருடம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள்,
   யாருக்காக தள்ளுபடி செய்யப்படுகின்றன…?
   குப்பனுக்கும் சுப்பனுக்குமா அல்லது அம்பானிக்கும்
   எஸ்ஸாருக்குமா…?

   5) //உங்களுக்கு இப்போது நடப்பது என்னைவிட
   நன்றாகத் தெரிந்திருக்கும். அதில் அனுபவமும்
   இருக்கும். இருந்தாலும், இந்த அறிவிப்பு
   தேசத்துக்கு நல்லது. //

   நான் அரசியல்வாதி இல்லை.
   நான் மோடிஜிக்கு எந்தவிதத்திலும் விரோதி இல்லை…
   எனக்கு இதில் எந்தவித சுயநலமும் இல்லை.

   இது பொதுநலத்துக்காக மட்டும்
   அறிவிக்கப்பட்டிருந்தால்,
   நானும் ஆதரித்து தான் எழுதுவேன்.
   ஆனால், இதன் பின்னால் புதைந்துள்ள
   மிக மிக ஆபத்தான சில காரணங்கள்
   என் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

   எதிர்காலத்தில், அந்த செயல்கள் நிகழுங்கால்-
   உங்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிய வரலாம்.
   நான் இதற்கு மேல், இதைக்குறித்து எழுதுவது
   தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால்
   எழுதுவதற்கில்லை.

   6) // தீதும் நன்றும் பிறர் தர வாரா.
   நம்மை வால்மார்ட்டில்தான்
   வாங்கவேண்டும் என்று யார் சொல்வது? //

   // சுதேசி குளிர்பானங்கள் அழிந்ததற்க்குக்
   காரணம் என்ன? பொட்டிக்கடைகளும்,
   நம் மக்களும்தான். //

   நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.
   நமது மக்கள், முக்கியமாக நகரவாசிகள் தான்
   இதற்கு முதல் காரணம்.

   7) // நாம் இன்றிலிருந்து நம் சக ஏழை எளிய
   மனிதர்களுக்கு உதவும் விதத்தில்
   நடந்துகொள்வோம். //

   இதைத்தான் நம் மக்கள் உணர வேண்டும்.
   தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு
   அடிமையாகி, அந்நியத் தயாரிப்புகள் மீது
   மோகம் கொள்வதை புரிந்து கொண்டு,
   அந்த மோகத்திலிருந்து வெளிவர வேண்டும்.

   சுதேசி பொருட்களை, நம் நாட்டு
   தயாரிப்புகளைத்தான் (consumer goods ) வாங்குவது
   என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

   நான் just என் மனதில் படும் விஷயங்களை எல்லாம்
   இந்த வலைத்தளத்தில் எழுதுகிறேன்.
   மற்றவர் பார்வை இவற்றிலிருந்து மாறுபடலாம்/ வேறுபடலாம்.

   நான் சொல்வதைத்தான் நம்ப வேண்டும் /ஏற்க வேண்டும்
   என்று நான் என்றுமே வாதித்தது இல்லை.
   என் கருத்துக்கள் எனக்கு….
   உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு….
   இங்கு நடப்பது கருத்து பரிமாற்றம் மட்டுமே.

   பல விஷயங்களில் உங்கள் பார்வையும்
   என் பார்வையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே
   இருப்பதை பார்க்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    Who knows this might be the next step –When donations are recorded through POS every amount received can be traced —
    Today the PMO staff were taught how to do use mobiles to do cash less transactions –
    I have used ATM cards for some transactions But the lingering fear that the machines might contain some strip to steal our card details is always there –The rupay card may be the answer to this problem –In some ATMs you can draw money using adhaar cards – In days to come you may be able to pay in POS (point of sales) machine through adhaar cards as you can connect adhaar card with ur account—

   • தமிழன் சொல்கிறார்:

    “வருடா வருடம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள்,
    யாருக்காக தள்ளுபடி செய்யப்படுகின்றன…?
    குப்பனுக்கும் சுப்பனுக்குமா அல்லது அம்பானிக்கும்
    எஸ்ஸாருக்குமா…?” – இது நான் எப்போதும் கேள்விப்படுகிற வார்த்தைகள். இதில் உண்மையும் இருக்கக்கூடும். கொடுத்துள்ள பாயிண்டுகளைப் பற்றிச் சிந்திக்கவும்.

    1. தொழிலாளி உழைப்பை மட்டுமே தரமுடியும். முதலாளிதான் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கமுடியும். அரசின் முதல் கடமை, குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது. அது அரசால் முடியாது. முதலாளிகள்தான் அதனைக் கொடுக்க முடியும்.
    2. பரம்பரைப் பணக்காரர்களைத் தவிர, எப்போதும் ஒரு தொழிலுக்கு முதல் தேவை. எல்லாவற்றையும் முதலாளியால் போட இயலாது. வங்கிகள் கடன் கொடுக்கவேண்டும். அரசுக்கு இதனால் ஆதாயம் இருப்பதால் (மக்களுக்கு வேலை கொடுப்பது, பொருளாதாரம் போன்றவை), கடன் அனுமதிக்கப்படுகிறது.
    3. சில தொழில்கள் சரிவர நடத்தாதலாலோ அல்லது ஊழல் செய்வதாலோ (முதலாளிகள், சட்டத்தை ஏமாற்றி, இன்னொரு பிசினஸில் பணத்தை மாற்றுவது, நடத்துவதில் மிகவும் சிக்கல் வருகிற தொழிலை நசிக்கச் செய்வது (இது தொழிலாளிகளினாலும் நடக்கும். மார்க்கெட் நிலவரத்தாலும் நடக்கும். அரசியல் காரணங்களுக்காகவும் நடக்கும். உதாரணம் மால்யாவின் ஏர்லைன்ஸ், ராபர்ட் வதோராவின் காரணமாக நசிந்துபோனது.) இதனால், முதலில் வாங்கின கடன் தொகையைக் கட்டமுடியாதது.
    4. அரசியல் கட்சிகள் வகை தொகையில்லாமல், முதலாளிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெறுகின்றன. முதலில் நியாயமான நன்கொடையாக இருந்தது, பன்னாட்டு வர்த்தகம் ஆரம்பித்தபிறகு, கொள்ளையடிப்பதில் பங்கு என்பதாக மாறிவிட்டது. ஆனானப்பட்ட டாட்டாக்களே இந்தமாதிரி லஞ்சங்களில் ஈடுபடும்போது, வேறு என்ன சொல்ல? ஒருவனைப் பிடித்தால், பல உள்விஷயங்கள் வெளியில் வரும். அது எந்தக் கட்சிக்கும் நல்லதல்ல.
    5. பணத்தை நியாயமாக சேமித்து, வரி கட்டிக் கணக்கு காண்பிக்க முடியாததால், புண்ணாக்கு விக்கிறவர்கள் முதல்கொண்டு அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். இந்த அறக்கட்டளைகள் 100 சதவிகிதம் கருப்புப் பணம்தான். கொள்ளையடித்த பணம்தான். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
    6. ஒரு அம்பானியால், கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள். அசித் ப்ரேம்ஜியால் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள். முதலாளிகளை அழிப்பதால், இவர்கள் மட்டுமல்ல, தொழிலாளிகளும் பாதிக்கப்படுவார்கள். நோக்கியா ஆலை மூடியது, சேலம் உருக்காலை தனியார்மயமோ அல்லது மூடுவதோ, நேரடியாகத் தொழிலாளர்களைப் பாதிக்கும். முதலாளிகள் பிழைத்துவிடுவார்கள் (நடிகர், நடிகைகளைப் போல). தொழிலாளிகள் பஞ்சத்தில் தள்ளப்படுவார்கள் (துணை நடிகர் மற்ற சினிமா தொழிலாளிகளைப்போல)
    7. ஆஸ்திரேலியாவில் சுரங்கம் தோண்ட, ஏன் அதானிக்கு வங்கி கடன் கொடுக்கவேண்டும்? நான் நம்புவது.. தொழில் வளர்ச்சிக்குத்தான். பணம் இந்தியாவுக்கு வரும். வேறு இந்திய அரசுக்குச் சாதகமான பாயிண்டுகளும் இருக்கலாம். இதனைத் தவிர, ‘புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்’ கணக்காக இருக்கக்கூடும் ஆனால் இது தவிர்க்கமுடியாதது.

 7. M. செய்யது சொல்கிறார்:

  சொந்தகாசுலே சூனியம் வைத்துக்கொள்ள நம்ம ஜீ க்கு என்ன கிருக்கா பிடித்திருக்கு ? நீங்கள் எவ்வளவு தூண்டினாலும் சுறா மீனு வலையில் அகப்படாது சார் .

  M.செய்யது
  Dubai

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும்
  அதிர்ச்சியான ஒரு தகவல் ….
  Posted on நவம்பர் 17, 2014
  by vimarisanam – kavirimainthan

  ———–
  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர்,
  இந்த வலைத்தளத்தில் எழுதப்பட்ட
  இந்த பழைய இடுகையை கடந்த
  இரண்டு-மூன்று நாட்களாக நூற்றுக்கணக்கான
  வாசக நண்பர்கள் எடுத்து படிப்பதை
  என் dash-board -லிருந்து பார்க்கிறேன்.

  வலது பக்கம், “முன்னணி இடுகை” வரிசையில்
  இது top -ல் இருப்பதை நீங்களும் பார்க்கலாம்.

  இதற்கு திடீரென்று எப்படி மவுசு வந்தது என்று
  தெரியவில்லை….

  நண்பர்கள் யாருக்காவது காரணம் தெரிந்தால்
  பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   The last news I head about this project is that it has been dropped orbeing given up -I think you are referring to the project mentioned in the link below–

   http://www.thehindu.com/business/Industry/adani-may-abandon-australian-coal-mine-project/article8693361.ece

   The news item is dated June 5 2016 –The first sentence says ” bogged by six years delay” which means it was there from 2010 .which means it was before the NDA came to power –Am I right —

  • Sharron சொல்கிறார்:

   Australian people are against Adani ‘s coal mine.

  • selvarajan சொல்கிறார்:

   எனக்கு மிகவும் பிடித்த இடுக்கை — நீங்கள் மேற்கோள் காட்டிய மவுசு இடுக்கை வெளிவந்து ” ஓராண்டுக்கு பிறகு வந்த இடுக்கை — ! தற்போது கூட மிகவும் ” கஷ்டமான வேலைப் பார்க்கும் ” — நமது பிரதமர் — பாவம் எவ்வளவு கஷ்டங்கள் அவருக்கு — அந்த இடுக்கை : //ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!
   Posted on நவம்பர் 25, 2015 by vimarisanam – kavirimainthan // …. இன்று மக்கள் படும் கஷ்டங்களை விட … அதிகம் … தானே … ??

 9. LVISS சொல்கிறார்:

  What is stated in the third para is already a reality –The vendors in Koyambedu market in Chennai are already doing business using point of sales machines –There is an article about it i int KUnkumam weekly –

 10. bandhu சொல்கிறார்:

  I think you believe that the demonetization is being / will be used as a tool by Shri Modi as a tool to annihilate all other political parties. Am I correct?

  • bandhu சொல்கிறார்:

   Or could it be more sinister than this? if it is to annihilate other parties, i understand that it is a possibility. And even though that can be good in a short time, who wants likes of rahul / mamta / mayavati, can be dangerous in the long run leading to a dictatorship. I cannot understand the motive of anything beyond.

  • LVISS சொல்கிறார்:

   Different people are reading different meanings into this move by the govt –Yours is one of them –But will any party do anything to ruin its own party —

 11. LVISS சொல்கிறார்:

  A request to Mr KM — In the latest issue of Tughlak ( dt 7.12.16)from which you refer regularly there is an article about removing pakistan from SAARC in page 15– This article gives another angle ,which most of us may not be aware of , to this issue of demonetisation and why Modi govt was forced to do it — I request you to put this in this blog so that some misgivings about this step taken by this govt can be cleared —

 12. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Mr A run -Salem should be expelled friom B.J.P.Legan action to be initiated

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.