இந்த மாத சம்பளம் … ? மிக சீரியசான இந்த விஷயத்தை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்….


மிக மோசமான ஒரு சூழ்நிலை
உருவாகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு,
ரிசர்வ் வங்கியை கலந்தாலோசித்து உடனடியாக
உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.

கடந்த 8-ந்தேதி, 500-1000 ரூபாய் நோட்டுக்கள்
செல்லாது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து,
நேற்று வரை,

பொது மக்களால், இந்த 500-1000 மதிப்புள்ள
கரன்சி நோட்டுக்கள் –
சுமார் 8.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

( இதைத்தவிர, 33,498 கோடி ரூபாய் அளவிற்கு
பழைய நோட்டுக்கள் திரும்ப கொடுக்கப்பட்டு,
அதே அளவிற்கு புதிய நோட்டுக்கள் மாற்றிக்
கொள்ளப்பட்டுள்ளன )

ஆனால், மத்திய அரசால் – வங்கிகளின் மூலம்,
தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது வரை
2.16 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே
கொடுக்க முடிந்திருக்கிறது.

( தகுந்த அளவு புதிய கரன்சி நோட்டுக்களை
முன் கூட்டியே அச்சடித்து கைவசம் வைத்திருக்காதது
காரணமாக இருக்கலாம்.. அல்லது மத்திய அரசு
வேண்டுமென்றே cash circulation-ஐ குறைக்க
விரும்பி இருக்கலாம்…. )

8.11 லட்சம் கோடி மைனஸ்
2.16 லட்சம் கோடி – ஆக

மக்களின் தேவைக்கும், மத்திய அரசால் கொடுக்கப்பட
முடிந்த தொகைக்கும் உள்ள குறைபாடு ( deficiency )
ஏற்கெனவே சுமார் 5.95 லட்சம் கோடி ரூபாய்.

நாளை நவம்பர் 30ந்தேதி, இந்த நாடு முழுவதும்
மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பணம் வங்கிகளில்
அந்தந்த நிறுவனங்களால், மாநில அரசுகளால் –
electronic mode -ல் செலுத்தப்படவிருக்கின்றது.

bank

மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான மக்கள்
தங்கள் மாதச் சம்பளத்தை எடுத்துக் கொள்வதற்காக
நாளை மறுநாள் வங்கிகளில் கூடப்போகிறார்கள்.
(ATM- கள் பெரும்பாலும் 2000 தான் கொடுக்கின்றன
என்பதாலும், மாதாந்திர தேவை பெரிது என்பதாலும்
மக்கள் வங்கிகளுக்குத்தான் செல்வார்கள்..)

ஏற்கெனவே, 5.95 லட்சம் கோடி அளவிற்கு
நோட்டு பற்றாக்குறையில் தவிக்கும் வங்கிகள்,
இந்த புதிய தேவையையும் எதிர்கொண்டாக வேண்டும்…

மிகப்பெரிய அவலங்கள் உண்டாகும் முன்னர்,
மத்திய அரசு இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் முறைகளை

ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து
உடனடியாக –

வங்கிகளில் கூட்டம் சேர்வதையும்,
பணம் வேண்டி மக்கள் பதட்டப்படுவதையும் தடுக்க
உரிய செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது
என்று அறிவிக்கப்பட்டது நல்லதா, கெட்டதா
என்கிற விவாதத்திற்குள்ளேயே
இங்கு நான் செல்ல விரும்பவில்லை.
இது ஒரு தனி பிரச்சினை…

ஒரு மிகப்பெரிய அவலத்தை, பதட்டத்தை – தவிர்க்க
மத்திய அரசு உடனடியாக மாற்று ஏற்பாடு
எதையாவது யோசித்து இன்றே அறிவிக்க வேண்டும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to இந்த மாத சம்பளம் … ? மிக சீரியசான இந்த விஷயத்தை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்….

 1. தமிழன் சொல்கிறார்:

  உண்மை. மக்களால் தனக்குத் தேவையான பணத்தை வங்கிகளிடமிருந்து, ஏடிஎம் களிடமிருந்து பணத்தை எடுப்பதில் கஷ்டம் இருந்தால் பஞ்ச காலத்தில் தேவைக்கு அதிகமாக வாங்கிப் பதுக்குவதுபோல் வீண் பதட்டத்தையும், அது சார்ந்த பல்வேறு பிரச்சனைகளையும் மக்களிடையே உருவாக்கும். இதைச் சாக்கிட்டு சக மனிதர்களிடம் கந்துவட்டி, கமிஷன் போன்றவைகளை வாங்கிக் கொழிக்கும் சமுதாயக் கிருமிகளும் பெருகிவிடும் ஆபத்து இருக்கிறது.

 2. Antony சொல்கிறார்:

  Valid point

 3. selvarajan சொல்கிறார்:

  ” நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு ” என்று இருப்பவர்கள் — இதற்கும் ஏதாவது — ஒரு நீலிக்கண்ணீர் ” டயலாக் ” கைவசம் வைத்து இல்லாமலா — மௌனம் காப்பார்கள் — ? இருந்தாலும் கா.மை அய்யாவுக்கு ” ரொம்ப அவசரம் ” அப்படித்தானே … ?

 4. selvarajan சொல்கிறார்:

  தினமணி செய்தி : // பாஜக எம்.பி.களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வைத்த ‘செக்’ //…… பாஜக எம்பிக்கள் அனைவரும், தங்களது வங்கிப் பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் .http://www.dinamani.com/india/2016/nov/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-2607297.html

  அய்யா .. அவர்கள் எழுதியவாறு { மோடிஜியின் அடுத்த அதிரடி அறிவிப்பு ….
  Posted on நவம்பர் 28, 2016 by vimarisanam – kavirimainthan } — மற்ற நடவடிக்கைகளும் நடந்தால் ” நிழல் – நிஜமாகிறது ” என்பது உண்மையாகும் —

  அது சரி — முன்பு கலைஞர் இலங்கை தமிழர் பிரச்சனையில் — ” எம்.பி.களின் ராஜினாமா கடிதங்களை ” வாங்கி தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொண்டதைப்போல — அமிஷாவிடம் கொடுப்பதும் நடந்தால் …. ? அங்கே தானே உதைக்கிறது … ?

 5. KALAKARTHIK சொல்கிறார்:

  இன்று வங்கிக்கு சென்றிருந்தேன்.வங்கியில் யாருக்கும் பணம் இல்லை என்ற பதில். டோக்கன் கொடுத்து (20) நாளை வர சொல்கின்றனர்.எந்த atm ளிலும் no கேஷ் அறிவிப்பு.கார்டு போட்டால் சர்வர் பிரச்சினை.என்ன நடக்க போகிறதோ??????????

 6. selvarajan சொல்கிறார்:

  29.11.1908: ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று! …. ! கருப்புப்பண விவகாரத்தினால் — மிகவும் கொந்தளித்துப்போன மனதை கலைவாணரின் ” சிந்திக்க வைக்கும் சிரிப்புகளை ” நினைத்து — கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாமா … நாம் அனைவரும் … !!!

 7. LVISS சொல்கிறார்:

  Some days back there was a news that the central govt employess can draw their salary in advance — I do not know whether it has been paid
  Your assumption that the govt may be holding back cash circulation may be correct because both the RBI and SBI chairperson have been assuring that there was no cash crunch and only logistic problems are there —
  RBI is giving 500 notes and Rs 10 coins for Rs 1000 to those who are coming to surrender their old notes with them-
  Details of the new amendment to IT act has come out — The banks have to deposit all the deposits recd from sep 9 and Nove 16 with RBI as cash reserve at zero rate –So all the money recieved cannot be given as loan by the bank — Even otherwise banks cannot give all the deposits in their books as loans to one sector –So it is wrong to say that only corporate sector will get loans and others dont —

 8. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Proper transformation to b planned,

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மீடியாக்களின் ஒரு தவறான புரிதல் –

  நேற்றிரவு முதல், ரிசர்வ் வங்கி தற்போது
  அனுமதிக்கப்பட்டுள்ள வரையரையான 24,000 (savings a/c)
  மற்றும் 50,000 (current account )-க்கு மேலும் வாடிக்கையாளர்களை தங்கள் கணக்கிலிருந்து திரும்பப்பெற அனுமதிக்கிறது என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

  இது ஒரு தவறான புரிதல் …

  புதிய உத்திரவின் சரியான சுருக்கம் கீழே –

  RBI on Monday said bank customers would be able to
  withdraw deposits made in current legal tender notes
  beyond the current limits, a move aimed at increasing currency circulation in system.

  For example, if someone deposits valid legal tenders
  (new currency) of Rs 4,000, the withdrawal limit for that person
  would rise by Rs 4,000 over and above weekly withdrawal limit
  of Rs 24,000.

  29- ந்தேதிக்கு பின்னர், யாராவது, புதிய கரன்சிக்களை
  தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்திருந்தால்,
  வழக்கமான 24,000/50,000-க்கு மேலும், தாங்கள்
  புதிய கரன்சிகளில் டெபாசிட் செய்திருந்த அளவிற்கு
  withdraw செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதே
  சரியான செய்தி.

  இது பிரச்சினையின் தீவிரத்தை எந்த விதத்திலும்
  குறைக்கவில்லை. புதிய கரன்சி கிடைத்தவர்
  திரும்பவும் அதை வங்கியில் கொண்டு போய் டெபாசிட்
  செய்யும் நிலையிலா இருக்கிறார்கள்…?

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. எதிர்க்குரல் சொல்கிறார்:

  ஒரு தோராய கணக்கு போடுவாம். 8.45 இலட்சம் கோடி ரூபாய் இதுவரை வங்கிகளில் சேர்ந்துள்ளதாக செண்ட்ரல் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. செல்லா நோட்டு அறிவிப்பு கொண்டுவருவதற்கு முன்பாக வங்கிகளின் கையிருப்பு சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் 12.5 லட்சம் கோடி ரூபாய் இப்போது ரிசர்வ் வங்கி வசம் இருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் இரண்டு லட்சம் கோடியாவது அதிகரிக்கும். அப்படியானால் 14.5 லட்சம் கோடி. இந்தியாவில் இருந்த மொத்த 500 1000 ருபாய் நோட்டுக்களின் மதிப்பு சுமார் 14 அல்லது 15 லட்சம் கோடி. ஆக, ரகுராம் ராஜன் கூறியப்படி கிட்டத்தட்ட எல்லா பணமும் வங்கிகளுக்கு வந்துவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நடுவுல ரிசர்வ் வங்கி ஏதாவது டகால்டி வேலை செய்யாமல் இருந்தால் இது மிகவும் சாத்தியம். எல்லா காசும் திரும்ப வந்துவிட்டது என்றால் அப்ப கறுப்பு பணம் எங்கே போனது?

  இதில், இந்த திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு செலவழிக்கும் 1.25 லட்சம் கோடி ரூபாய்யை நான் சேர்க்கவில்லை. செல்லா நோட்டு அறிவிப்பு வெளியானவுடன், பாதி காசு கூட திரும்ப வராது என்று வைரலாக தகவலை பரப்பிக்கொண்டிருந்தவர்களை தான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன். 19 நாள்லயே 60% காசு திரும்ப வந்துடுச்சேப்பா.. நீங்க என்னாடான்னா வெறும் கைல கம்பு சுத்திகிட்டு இருக்கீங்க…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (எதிர்க்குரல்),

   மன்னிக்கவும்.
   உங்கள் கூட்டல், கழித்தல்கள்
   எனக்கு சரியென்று தோன்றவில்லை.

   circulation-ல் இருப்பதாக கூறப்படும்,
   பணத்தில் ஒரு பகுதி நிச்சயமாக திரும்ப வராது.

   கருப்புப்பணமும், கள்ளப்பணமும்,
   சந்தையில் இருப்பது உண்மையே.
   ஆனால் – அது எந்த அளவிற்கு என்பது குறித்து
   வெளிவரும் தகவல்கள் அனைத்தும் யூகமே…!

   இந்த பிரச்சினைகள் ஓரளவு தீவிரம் குறைந்த பிறகு,
   நிதானமாக, உண்மையான புள்ளி விவரங்களை
   வைத்துக் கொண்டு ஆராய்ந்தால், ஓரளவு நிலவரம் புரியலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Amount that was in circulation in 500 and 1000 rupee notes as on 8th minus actually recived in old 500 and 1000 will give an idea about the money held back ,which we may safely assume as unacounted money — Already some amount of cash have been burnt -The final picture will be known only after the scheme closes in December 30th –

 11. இருதயம் சொல்கிறார்:

  அரசு ஊழியர்களுக்கு 1௦௦௦௦ ரூபாய் ஏற்க்கனவே பணமாக பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. எனவே எதிர்பார்த்த அளவு பிரச்சினை வராது என்று நினைக்கிறேன்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.