சென்னையில் நேற்று திரு.எஸ்.குருமூர்த்தி செல்லாப்பணம் குறித்து நிகழ்த்திய கருத்துரை…

sg-2

ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும், பொருளாதார நிபுணருமான
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் சென்னையில் நேற்று ஒரு
கருத்தரங்கத்தில் முக்கிய பேச்சாளராக உரையாற்றிய
கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.

“நானி பால்கிவாலா” அவர்களின் நினைவாக நடத்தப்பெற்ற
அந்த சிறப்பு உரையாற்றலின் ( Nani Palkiwala Memorial Lecture )
தலைப்பு –

“DEMONETISATION – Causes, Concerns & Consequences ”

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பிரமுகரான
திரு.குருமூர்த்தி அவர்கள் தனது உரையில்
எதிர்பார்த்தமாதிரியே, 500-1000 ரூபாய் நோட்டுக்களை
செல்லாததாக்கிய விவகாரத்தில், மோடிஜியையும்,
இந்த திட்டத்தையும் ஆதரித்தே பேசினார்.

sg-1

Indian Express ஆங்கில நாளேடு, இந்த செல்லாப்பணம்
குறித்த செய்திக்கு என்ன தலைப்பு வைக்கலாமென்று
அவரிடம் யோசனை கேட்டதற்கு “FINANCIAL POKRAN”
என்று தாம் கூறியதாக சென்னார்…!!!
மிகவும் பொருத்தமான தலைப்பு தான்…!!!

அரசை ஆதரித்து அவர் பேசியது எல்லாம் ஏற்கெனவே
பாஜக தலைவர்களால் சொல்லப்படுபவை தான்.
எனவே அவற்றை நான் இங்கு மறுபடியும் தரவில்லை.

வித்தியாசமாக அவர் கூறிய சிலவற்றை மட்டும்
இங்கே கூறுகிறேன்….

1) சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திலிருந்து
திரும்பப் பெறப்படும்போது –

மக்கள் வங்கிகளில் திரும்ப டெபாசிட் செய்யும் தொகைக்கும்
14 லட்சம் கோடியான மொத்த தொகைக்கும் – இடையே உள்ள
(திரும்ப வராத) தொகையே கருப்புப் பணம் என்று ஒரு கருத்து
நிலவுகிறது.

ஒரு வேளை மக்கள் திரும்ப டெபாசிட் செய்யும் தொகையும்
இதே எண்ணிக்கையை தொடக்கூடும். அப்போது கருப்புப்பணம்
எங்கே – திட்டம் தோல்வி என்று எதிர்க்கட்சியினர்
விமரிசனம் செய்யக்கூடும்.
(இப்படியும் ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது என்பது
அவரது எதிர்பார்ப்பு )

ஆனால், 14 லட்சமும் திரும்ப டெபாசிட் செய்யப்பட்டாலும்
கூட, இந்த திட்டம் வெற்றியே. ஏனெனில், முடங்கிக்கிடந்த
கருப்புப்பணம், இப்போது வங்கிகளில் வந்து மீண்டும்
புழக்கத்திற்கு திரும்பும்போது – அது அங்கீகாரம் பெற்ற
பணம் ஆகி விடுகிறது. இனி அது நியாயமான வழிகளில் தான்
பயணம் செய்ய முடியும்….!!!

2) மற்ற எல்லா நோக்கங்களையும் விட,
பாகிஸ்தானிடமிருந்து வரும் கள்ளப்பணத்தை (counterfeit
currency ) அழிப்பது தான் இந்த திட்டத்தின் முதன்மையான
நோக்கம். தீவிரவாதிகளின் செயல்பாட்டை பெரும் அளவிற்கு
இதன் மூலம் கட்டுப்படுத்தி விட முடியும்…!

3) பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லிக்
கொள்பவர்களும் ( ..? ), பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்
முற்றிலுமாக “செல்லாப்பணம்” திட்டத்தை குறை கூறுகின்றன.
அவர்களுக்கு நம்பிக்கை இல்லை…

ஆனால், பொதுமக்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக
நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் இதை
ஆதரிக்கிறார்கள். அதனால் தான் மோடிஜி குறைகூறல்களைப்பற்றி
கவலைபடுவதில்லை.

4) இது முக்கியமானது –
மோடிஜிக்கான advise ஆக அமைந்தது.,,

500-1000 பணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டதால்,
பணப் புழக்கம் குறைந்து –
( Small & Medium Enterprizes, merchants ) சிறு மற்றும் குறு
தொழில்களும், வர்த்தகர்களும்
பெருத்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகாறும் வங்கியில் சேரும் பணம், பெரும்பாலும் பெரிய
தொழிலதிபர்களுக்கே கடனாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறையாவது , பெரும் அளவில் வந்து குவியும் டெபாசிட்டுகள், சிறு /குறு தொழில்களின் / வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு

உதவியாக இருக்க வேண்டும். நாடு முழுவதும், பரவலாக
இவர்கள் தான் வேலை வாய்ப்புக்கும், வளர்ச்சிக்கும்
உறுதுணையாக இருக்கிறார்கள்.

5) இது அதிமுக்கியமானது –

மோடிஜி பெயரையோ, அரசின் பெயரையோ இழுக்காமல்
நேரடியாக ஒரு கேள்விக்கான பதிலாக சொன்னது –

‘ CASH LESS MARKET ” இந்தியாவில் சாத்தியமில்லை…!
இங்கே சில்லறை வணிகம் – முழுக்க முழுக்க ரொக்கப்பணத்தை
நம்பித்தான் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் அப்படித்தான் நடக்கும்…!!!

பின் குறிப்பு –

இந்த இடுகையில் என் கருத்து என்று எதையும்
கூறவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவன்
என்கிற முறையில் இது நேரடியான ஒரு
ரிப்போர்ட்..அவ்வளவே..!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to சென்னையில் நேற்று திரு.எஸ்.குருமூர்த்தி செல்லாப்பணம் குறித்து நிகழ்த்திய கருத்துரை…

 1. Sundar Raman சொல்கிறார்:

  What about Mudhra loans and the break put by RBI- R3 ( in the past ) for Mudhra loan. Is it not a good scheme, brought out by Modi ? . Did it not lend money to weaker sections , ( ladies ), Dalits , and other down ridden people of the society ? Let us have hope , why should the money goes only to the corporate?

 2. Karthik சொல்கிறார்:

  Transparent Speech. Must have guts to speak in the large forum.

 3. LVISS சொல்கிறார்:

  Cash less market is not possible and neither desirable for a country like us- Even in US, which the govt wants to emulate transactions below $ 10 can be made only by cash-=-There must be some cash in evry one’s hand – You cannot depend on these electronic things wholly – It is not desirable -The middle class and poor people may get to know how to use the gadgets for cashless transactions but onlt to a certain extent —
  I do not know how long it took for US to become a less cash society after independence – But all people seem comfortable with this — May be because there is no other alternative – ONe aspect of this is living by cards is that we may not know how much we are spending since we will be swiping our money away for every transaction —

 4. LVISS சொல்கிறார்:

  There are norms for lending fixed by RBI for lending — First the csh reserve ratio and statutory liquidity ratios have to met -Only the balance will be available for lending –Banks cannot dole out all the deposit it has to corporates or any one sector — Priority setor lending is important —

 5. தமிழன் சொல்கிறார்:

  இரண்டாவது பாயிண்டுதான் நமக்குக் கிடைக்கப்போகும் உடனடி லாபம். குருமூர்த்தி அவர்கள் சொன்ன 4வது பாயிண்டும் ஏற்புடையதே. இது மிகவும் முக்கியம். நம்முடைய மக்கள் தொகையையும், படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பணமில்லாப் பொருளாதாரச் சந்தை என்பது இந்தியாவில் இப்போதைக்கு சாத்தியமில்லை.

  அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் ஒருவருடைய கிரெடிட் ரேட்டிங்க் பார்க்கிறார்கள். அதுதான் ஒருவருடைய அளவுகோல். விசா போன்றவற்றிர்க்கும் வங்கி ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். LVISS சொல்வதுபோல் ஏழைகள் அட்டைகளை உபயோகப்படுத்தமுடியாது. மிடில் கிளாஸ் மக்கள் நிச்சயமாக உபயோகப்படுத்தமுடியும். இதேபோல், எல்லா வணிக நிறுவனங்களும் வங்கிப் பரிவர்த்தனைதான் செய்யமுடியும் (விற்பனையின்போது) என்ற நிலை வரவேண்டும். அதற்காக exceptionஐ நினைக்கவேண்டாம். எல்லாப் பரிவர்த்தனைகளும் கணிணியில் பதிவுசெய்தல் வேண்டும்.

  பிலிப்பைன்ஸில், எல்லாக் கடைகளும் (வணிகவளாகத்தில் உள்ளவை) POS (Point of Sales) வைத்திருக்கவேண்டும். Software or Hardware – மாற்றுவதற்கு முன்னால் முனிசிபாலிட்டி அதிகாரி முன்னிலையில்தான் இதைச் செய்யமுடியும். எல்லா transactionம் transparent to Govt. இது வரி ஏய்ப்பு செய்யாமல் இருப்பதற்காகச் செய்யப்படுவது.

  • LVISS சொல்கிறார்:

   When the PM decided to go for this he would not have imagined that people will start moving towards digital payments –At this rate 75% digital transactions can beome a reality sooner than the govt expected –In one way itis good because no one need to worry about change even if the payment involves decimals —
   These POS machines should be hack free —

   • தமிழன் சொல்கிறார்:

    ‘நல்ல வளர்ந்த நாடுகளிலேயே எந்த ஒரு systemலயும் problem இருக்கும். உதாரணமா, நான் என்னுடைய டெபிட் கார்டை சாதாரண சூப்பர் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கு உபயோகப்படுத்திவந்தபோது, ஒரு தடவை, கடைக்காரர் தவறுதலாக இரண்டுமுறை Swipe பண்ணிவிட்டதைப் பார்த்தேன். வங்கி ஸ்டேட்மென்ட் பார்த்துவிட்டு, வங்கிக்குச் சென்றபோது, அவர் இதுபோல், 5 முறை நடந்திருக்கிறது என்று சொல்லி, அவராகவே அந்த entriesஐ reverse செய்தார். கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு transactionக்கும், நம்முடைய பாஸ்வேர்ட் போடும்படியாக, எல்லாக் கடைகளிலும் மாற்றிவிட்டார்கள். By the by, POS machineஐ HACK பண்ணமுடியாது, அதில் பிரயோசனமும் இல்லை. கடைக்காரர் செய்யமாட்டார். கண்டுபிடித்தால் கடையை நடத்தமுடியாது.

    • LVISS சொல்கிறார்:

     Use a card which works only when a password is input –Some credit cards dont need passwords — When a card is swiped twice you can ask the shop keeper to reverse te entry –If you what you say is true that the POS machines cannot be hacked it must be safer –

 6. LVISS சொல்கிறார்:

  Boththe RBI and the SBI have been asserting that there is no shortage of cash –I think the RBI and the Banks are working in tandem to encourage people to move to digital mode of payments gradually by keeping the cash in the banks at a lower than normal level The link below seems to suggest that —

  http://economictimes.indiatimes.com/news/economy/finance/cash-available-in-the-system-may-be-brought-down-drastically-from-pre-demonetisation-times/articleshow/55714278.cms

 7. LVISS சொல்கிறார்:

  It is worthwhile to go through ” Payment and settlement system in India Vision 2018 ” published in the RBI website to know that the country will be moving gradually towards a less cash society —

 8. Jipsy சொல்கிறார்:

  தாங்கள் ஆர்எஸ்எஸ் உறுபினர் என்பதை இந்த கட்டுரை மூலம் அறிந்துகொண்டேன். நீங்கள் இந்த தளத்தின் பெயரை அரைடவுசர் அனுதாபி என்று மாற்றிவிட்டு கட்டுரை எழுதினால் மிக பொருத்தமாக இருக்கும். இனிமேல் நடுநிலை விமர்சனம் என்ற வார்த்தயை உச்சரிக்க தகுதிஇல்லாதவர் நீங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   jipsy…?

   எவ்வளவு விசாலமான அறிவு உங்களுக்கு…!!!

   மோடிஜியை குறை சொல்வதற்காக
   என்னை சபித்துக் கொண்டிருக்கும்
   பாஜக / ஆர்.எஸ்.எஸ். நண்பர்களிடையே,
   முதல் முறையாக என்னை ஆர்.எஸ்.எஸ்.
   அனுதாபி என்று சொல்லி விட்டீர்களே….!!!

   ஒரு வலைத்தளத்தின் தன்மையை,
   அதில் வரும் இடுகைகளின் பொருளை
   புரிந்து கொள்பவர்களிடையே
   மிகவும் வித்தியாசமானவர் நீங்கள்…

   உங்கள் அறிவுக்கேற்ற தீனி
   இந்த தளத்தில் கிடைக்காது தான்…
   மன்னித்துக் கொள்ளுங்கள்.

   வாழ்த்துக்கள்,
   காவிரிமைந்தன்

 9. Jipsy சொல்கிறார்:

  CASH LESS MARKET ” இந்தியாவில் சாத்தியமில்லை…!
  இங்கே சில்லறை வணிகம் – முழுக்க முழுக்க ரொக்கப்பணத்தை
  நம்பித்தான் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் அப்படித்தான் நடக்கும”
  இது அந்த குருமூர்த்தியின் பொருளதார அறிவு எவ்வளவு விசாலம் என்பதை தெளிவாக அறிந்துகொள்ளமுடிகிறது.
  தற்பொழுது Paytm சிறு வணிகர்கள் மற்றும் மக்களிடம் மிகவும் பிரபலமாக பயன்படுத்தபட்டு வருகிறது. Paytm உபயோக படுத்துவது மிக எளிது ஒரு சாதாரண அலைபேசி இருந்தால் போதும் குறைந்தபட்சம் ₹10 வரை பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

 10. Raman A V சொல்கிறார்:

  Dear Jipsy, Paytm moolama rendu bajji oru tea sapida vazhi sollunga. Our muzam poo vanga vazhi sollunga please.

 11. Raman A V சொல்கிறார்:

  Dear Jipsy, ennoda office OMRle irukku. From Thiruvanmiyur to Solinganallur ennale oru paytm accept panra kadaiya kooda kandupudikka mudiyale.

 12. Raman A V சொல்கிறார்:

  Oru naal bandwidth irunda oru two hours (kootam kuraincha piragu) ethavathu oru SBI Branch poi observe pannunga. Degree holdersnu sollikara oru pasangalakku kooda DD challan fill panna teriyadu. 2% plastic cards use panra oru countrile how this transition will happen in over night??

 13. Sanmath AK சொல்கிறார்:

  KM SIr,

  Moving towards a cashless market and making every movement of money accountable is all accepted. In addition to our income tax, through various indirect tax means, we pay more than 40% of income to Govt. Fine, accepted. But where is this money going to ??

  For a country like India, parallel economy is ALSO one of the few blocks of country’s economical vertebral column – this suits to any developing nation. What is going on presently is a direct attack on that.

  I also see this as a attack(in a smaller intensity) on Indian muslim community.

  Congress was doing this slowly, which BJP is doing it aggressively – connecting India and its all economic activity as a node in global economic process so that all the nodes can be loosened by swing at any end – by the one who(corporate) is holding it.

  Many reading this blog have a widespread reading practice, I guess. It is this small guy’s insistence for all of you all to do a very little research on world’s banking activities.

  Whatever is going on, is just troubling the salaried people and causing tremors to MSMEs – including parotta kadai, petti kadai, idli kadai – if anyone says I am speaking childish, appreciated – please do recall that the economical activity with more of local dependence saved India during 2008 recession(actually recession started in 2006 itself).

 14. R KARTHIK சொல்கிறார்:

  Another interesting speech by Mr. S. Gurumurthy

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.