நீதிபதிகள் மீது திரு.அருண் ஜெட்லி கடுமையான குற்றச்சாட்டு – பின்னணி….?

arun-jaitley

..

மத்திய நிதியமைச்சர், முன்னாள் சட்ட அமைச்சர்-
திரு.அருண் ஜெட்லி நீதிபதிகளின் மீது கடுமையான
குற்றச்சாட்டு ஒன்றை போகிற போக்கில் சொல்லி விட்டு
போயிருக்கிறார்…

பாஜக-வின் சட்டப்பிரிவு நடத்திய கூட்டம் ஒன்றில்
பேசும்போது திரு.ஜெட்லி –

“ரிடையர் ஆவதற்கு முன்னால், நீதிபதி
கொடுக்கும் தீர்ப்புகள் –

ரிடையர் ஆனவுடன் அவருக்கு கிடைக்கப்போகும்
பதவியைப் பொறுத்து அமைகிறது…”

” நீதிபதிகளில் இரண்டு விதம் –
சட்டம் தெரிந்தவர்கள் சிலர்…

சட்ட அமைச்சரை தெரிந்தவர்கள் சிலர்….!!!”

அதாவது ரிடையர் ஆகும் நிலையில் உள்ள நீதிபதிகளுக்கு,
ரிடையர் ஆனவுடன் நல்ல பதவியை கொடுப்பதாக
ஆசை காட்டி, தங்களுக்கு தேவையான மாதிரி தீர்ப்புகளை
பெற்றுக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள்….!!!

ஆங்கிலத்தில் திரு.ஜெட்லி கூறிய வார்த்தைகள் –

“There are two kinds of judges –
those who know the law and
those who know ——— the Law Minister,”

“Pre-retirement judgements are
influenced by post-retirement jobs.”

மிக மிக கடுமையான குற்றச்சாட்டு திரு.ஜெட்லியுடையது.
ஆனால், அதில் பொதிந்துள்ள உண்மையை நாம் மறுக்க
முடியாது.

ஆனால், இதற்கு காரணம், நீதிபதிகள் மட்டும் தானா…?
அரசியல்வாதிகளும் காரணம் இல்லையா …?

நீதிபதிகள் பதவி ஓய்வு பெற்ற பிறகு
அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு
வேறு எந்தவித அரசு சார்ந்த அமைப்பிலும்
பதவி ஏற்கக்கூடாது என்கிற விதியை இவர்கள்
ஏன் ஏற்கவில்லை…?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
குற்றம் சாட்டும் பாஜக ஆட்சித் தலைமை என்ன செய்தது…?

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த
ஒருவரை, அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற
நான்கு மாதங்களுக்குள் ஒரு மாநிலத்தின் கவர்னராக
நியமித்தது யார்…?

இதே அருண் ஜெட்லி அவர்கள் அங்கம் வகிக்கும்
பாஜக / மோடிஜியின் அரசு தானே…?

அவருக்கு அந்த பதவி கொடுக்கப்பட முக்கிய காரணமாக
அமைந்தது திரு.அருண் ஜெட்லியின் நெருங்கிய
நண்பரும் பாஜக தலைவருமான திரு.அமீத் ஷா அவர்கள்
மீதான ஒரு (fake encounter case ) பழைய கிரிமினல்
வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது தான்..
– என்று இவர்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டதே…?
அதற்கு இவர்களிடம் சரியான விளக்கம் ஏதுமில்லையே…!

ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட
பாஜக கட்சியிலேயே வேறு யாரும் தகுதியான
நபர்கள் இல்லையா …?
டஜன் கணக்கில் இருக்கிறார்களே…

அவர்களை எல்லாம் விட்டு விட்டு,
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியை மோடிஜி அரசு
ஏன் கவர்னராக நியமித்தது என்று திரு.அருண் ஜெட்லி
முதலில் விளக்கம் அளிப்பாரா … ?

பின் குறிப்பு –

திரு.ஜெட்லி இப்போது நீதிபதிகளின் மீது
குமுறக் காரணம் என்னவாக இருக்கலாம்
என்று ஓரளவு யூகிக்க முடிகிறது…

அதை அடுத்த இடுகையில் தனியே பார்ப்போமே.

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

நீதிபதிகள் மீது திரு.அருண் ஜெட்லி கடுமையான குற்றச்சாட்டு – பின்னணி….? க்கு 2 பதில்கள்

  1. தமிழன் சொல்கிறார்:

    “இதற்கு காரணம், நீதிபதிகள் மட்டும் தானா…? அரசியல்வாதிகளும் காரணம் இல்லையா …?” – இந்த மாதிரிக் குற்றச்சாட்டுகளுக்கு முடிவே இல்லை. பொதுவாக, அரசியல்வாதிகளைவிட, பொதுமக்களும், நீதித்துறையினரும், காவல் துறையினரும் ஒழுக்கமாக இருக்கவேண்டும். ‘அவன் திருந்தட்டும் அப்புறம் நான் திருந்தறேன்’ என்ற attitude பிரச்சனையை அதிகமாக்கவே செய்யும்.

    உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்றாலே, அவர்கள், Best of the Elitesஆகத்தான் இருக்கமுடியும். அது அத்தனை கௌரவம் உள்ள பதவி. வெறும் வழக்கறிஞர்களாக இருந்தால் அவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும். இப்படிப்பட்டவர்கள் ஏன் அரசு அளிக்கும் பதவிகளில் போய் உட்கார்ந்துகொள்கிறார்களோ. பார்க்கவே அசிங்கமாக இருக்கு. இதே போன்று, எம்.கே.’நாராயணன் போன்றோர், சி.பி.ஐ இயக்குனர்கள் போன்றோர். இப்படிப் பதவியை ஆசையுடன் ஏற்றுக்கொள்வதால் (மனித உரிமை ஆணையத் தலைவர்.. போன்ற பலவும் இதில் அடங்கும்), நிச்சயமாக, அவர்கள் பணிக்காலத்தில் நேர்மையாக நடந்துகொண்டிருந்திருப்பார்களா என்ற சந்தேகம் வருவது இயற்கை. இது எதனால் என்றால், மனிதர்கள், ரொட்டித் துண்டுக்கு வாலாட்டும் நாய்களை தினப்படிப் பார்த்து வருவதால்தான்.

    அருண் ஜெட்லி குற்றச்சாட்டுக்கு அர்த்தம் கிடையாது. உச்சநீதிமன்றம் அவ்வப்போது மத்திய அரசைக் குறை சொல்வதுபோல (அதுவும் selfish approachதான்), சமயம் கிடைக்கும்போது, மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டைப் பற்றி இந்த மாதிரிப் பேசுகிறது. ஆனைக்குப் பானை சரி.

  2. இருதயம் சொல்கிறார்:

    கூட்டல் கணக்கில் ஒரு நீதிபதி தப்பு விட்டாரே…அவர் என்ன பண்ணுகிறார்…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s