திரு.அருண் ஜெட்லி – சீறியது இதற்காகத்தானா … ?

“நீதிபதிகள் மீது திரு.அருண் ஜெட்லி கடுமையான
குற்றச்சாட்டு – பின்னணி….?” என்கிற தலைப்பிலான
நேற்றைய இடுகையில், ஓய்வு பெற்ற தலைமை
நீதிபதியை கவர்னராக நியமித்து, ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கியதில் பாஜக-வின்
பங்கை பார்த்தோம்.

ஏற்கெனவே சட்ட அமைச்சராக பதவி வகுத்த
அனுபவமுள்ள திரு.அருண் ஜெட்லிக்கு நீதிபதிகள்
பற்றிய இந்த விஷயம் புது அனுபவமா என்ன…?

எனவே, தற்போது திடீரென்று திரு.அருண் ஜெட்லி நீதிபதிகளை ஏளனப்படுத்தி கருத்து கூறியதன்
பின்னணி என்ன என்று யோசித்தால் –

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ
என்று தோன்றுகிறது.

தற்போதைய தலைமை நீதிபதிக்கும், மத்திய அரசுக்கும்
சில விஷயங்களில் ஒத்து வரவில்லை.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலேஜியம் குறித்தும் சரி,
காலியாக இருக்கும் நீதிபதி பதவிகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிப்பது குறித்தும் சரி – மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இரண்டு தரப்பும் கடுமையான வார்த்தைகளை,
கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றன….
“லக்ஷ்மண் ரேகா”வை தாண்ட வேண்டாம் என்று
அண்மையில் மத்திய சட்ட அமைச்சர் திரு.ரவிசங்கர்
பிரசாத் வெளிப்படையாகவே நீதித்துறையை
எச்சரித்ததையும் பார்த்தோம்.

அண்மையில் மற்றொரு செய்தி
அரசல் புரசலாக வெளியாகி இருக்கிறது.

justice-t-s-thakur

இப்போது தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும்
நீதிபதி டி.எஸ்.தாக்கூர் இன்னும் ஒரு மாதத்தில்,
அதாவது -வருகிற ஜனவரி, 4-ந்தேதியுடன்
பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அதே போல் துணை-ஜனாதிபதி திரு.ஹெச்.ஏ.அன்சாரி
அவர்களின் பதவிக்காலமும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11-ல்
முடிவுக்கு வருவதால் புதிய துணை-ஜனாதிபதியை
தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஜஸ்டிஸ் தாக்கூர் அவர்கள் ஏற்கெனவே ஒரு சிறந்த
சட்ட மற்றும் அரசியல், பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டவர்.

அவரது தந்தை திரு தேவி தாஸ் தாக்கூர் – அந்நாளில்
ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும்,
ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல்வராகவும்,
அஸ்ஸாம் மாநில கவர்னராகவும் கூட பணியாற்றியவர்.

இத்தகைய பின்னணியை கொண்ட ஜஸ்டிஸ் தாக்கூர்
அவர்களை அடுத்த துணை-ஜனாதிபதி பதவிக்கு
எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக தேர்ந்தெடுக்க
ஒரு முயற்சி நடந்து வருவதாக தெரிகிறது. இது குறித்த
முயற்சிகள் நீதிபதி தாக்கூர் அடுத்த மாதம் பதவி ஓய்வு
பெற்ற பிறகு தீவிரமாகக்கூடும்.

இவருக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், முலாயம்,
மாயாவதி, நிதிஷ், பட்நாயக் மற்றும் பல மாநில
கட்சிகளின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. முயற்சிகள்
வெளிப்படையாக துவங்கப்பட்டால், இவருக்கு ஆதரவு
கூடலாம்.

எனவே, பாஜகவின் சார்பாக நிறுத்தப்படப்போகும்
வேட்பாளருக்கு எதிராக – ஒரு பலமான போட்டி
உருவாகக்கூடும்.

ஏற்கெனவே, மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும்
மோதல் சூழ்நிலை தொடரும்போது –

எதிர்க்கட்சிகளின் சார்பில் துணை-ஜனாதிபதி பதவிக்கு
போட்டி போடப்போகிறவர் என்கிற விஷயமும்,
திரு அருண் ஜெட்லியின் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to திரு.அருண் ஜெட்லி – சீறியது இதற்காகத்தானா … ?

 1. தமிழன் சொல்கிறார்:

  “இப்போது தெரிகிறதா எப்படி எல்லா இடங்களிலும் அரசியல் விளையாடுகிறது என்று. கொலேஜியம் எப்படிப்பட்டவர்களைப் பரிந்துரை செய்திருக்கும், எப்படி குன்ஹா உயர்நீதிமன்ற நீதிபதியானார் என்பதெல்லாம்? எது தன் எதிர்காலத்துக்கு நல்லது என்று அரசியல் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட ஆரம்பித்தால், இவர்கள் தரும் தீர்ப்பை எப்படி நம்புவது? கர்னாடகா தண்ணீர் விடாமல், தீர்ப்பை மதிக்காமல் இருந்ததை ஏன் உச்சநீதிமன்றம் கேட்கவில்லை என்று தெரிகிறதா? ” இப்படியெல்லாம் யாரும் கனவில்கூட நினைத்துவிடாதபடி நடக்கவேண்டிய கடமை தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் உண்டு என நினைக்கிறேன்.

 2. LVISS சொல்கிறார்:

  The post of Vice President is renewable —
  If what you say is true the opposition may be mistaken in thinking that the vp of their choice will favour them – Mr Thakur has so far shown himself to be independent —

  • GVB சொல்கிறார்:

   LVISS

   நீங்கள் ஏன் நேர்வழியை விட்டு விட்டு குறுக்கு வழியிலேயே
   யோசிக்கிறீர்கள் ?
   // Mr Thakur has so far shown himself to be independent —//

   இந்த காரணத்திற்ககாகவே கூட எதிர்க்கட்சிகள் அவரை
   விரும்பலாமே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.எல்விஸ்,

   நான் சொன்னதை சௌகரியமாக மறந்து விட்டு,
   வேறு திசைக்கு போகிறீர்களே…!!!

   இடுகையின் மையக்கருத்து ( main issue ) –
   திரு.அருண் ஜெட்லி, நீதிபதிகளைப் பற்றி
   இவ்வாறு கருத்து சொன்னதற்கு எது காரணமாக
   இருந்திருக்கும் என்பது பற்றி தான்.

   ஜஸ்டிஸ் தாக்கூர் துணை ஜனாதிபதியாக
   தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பதல்லவே….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. GVB சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  டெல்லியில் 40 கோடி புது கரன்சி ஒரே நபர்/நிறுவனம்,
  மூன்று தவணைகளாக
  ஆக்சிஸ் வங்கி மூலம் மாற்றி இருக்கிறது.

  ஈரோட்டில், பாஜக பிரமுகர் 18 லட்சத்திற்கு புது 2000
  ரூபாய் நோட்டு வைத்திருக்கிறார்.
  ஹைதராபாதில் 3 கோடி புது கரன்சி ஒரே ஆளிடம் பிடிபட்டிருக்கிறது.
  இன்றைய செய்தி, பெங்களூரில் 4 கோடி புது கரன்சி
  கட்டிட தொழில் சம்பந்தப்பட்ட இரு
  நபர்களிடமிருந்து அகப்பட்டிருக்கிறது.

  இதெல்லாம் எப்படி நடக்கிறது ?
  நான் நினைப்பது மத்தியில் ஆளும் கட்சியின்
  செல்வாக்கான லோக்கல் நபர்கள், சில வங்கி அதிகாரிகள்,
  கருப்பு பண கெட்டிக்காரர்கள் இந்த மூன்று ரகமும்
  சேர்ந்த கலப்பட கும்பல் தான் காரணம் என்று.

  நீங்கள் இது பற்றி என்று நினைக்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப GVB,

   கிட்டத்தட்ட காரணங்களை நீங்களே சொல்லி
   விட்டீர்கள். இவற்றைத் தவிரவும் இன்னும் சில
   காரணங்கள் இருக்கலாம். போகப் போக
   தெரிய வரும்.

   ஆமாம் – இந்த மாதிரி மாட்டும் நபர்களின்
   ஊர், பெயர், தொழில், ஆகியவற்றை வெளியிட்டு,
   அவர்களின் திருமுகங்களையும் மீடியாவில்
   காட்டினால் என்ன…?
   இது எவ்வாறு நிகழ்ந்தது, யார் காரணம் என்பதையும்
   மீடியாவில் வெளிப்படையாகச் சொன்னால் என்ன…?

   இவற்றை செய்ய முடியாமல் குறுக்கே நிற்பது
   எது / யார்….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • GVB சொல்கிறார்:

    K.M.sir,

    This is the latest one –

    http://www.ironyofindia.com/2016/12/techie-associated-with-pms-make-in-india-project-arrested-for-printing-3-crs-of-rs-2000-fake-notes/

    —————–
    Techie associated with PM’s ‘Make in India’ project arrested for printing 3 crs of Rs 2,000 fake notes

    The mastermind of fake currency case Abhinav is also in the list of those who have become part of PM Modi’s innovative ‘Make in India’ project.(PTI images)

    Mohali : An MBA student and her cousin were among three persons arrested with fake Rs 2,000 currency notes amounting to Rs 42 lakh in Mohali on 30th Nov.

    21-year-old B.Tech student Abhinav Verma who belong to an army family and his 20-year-old cousin Vishakha Verma were allegedly involved in printing 2000 rupee fake currency notes. In exchange of old notes, new fake Rs 2000 currency notes were being offered in order to convert black money into white. In this way they expanded 2 crore rupees in market. He also took 30% commission for the job.

    On Tuesday, Mohali police caught Abhinav and her cousin Vishakha from Jagatpura in Mohali. At that time they were carrying 42 lakh rupees fake notes in a red Audi car. This money was to be used to convert black money into white.

    Ludhiana resident middleman Suman Nagpal was also sitting in the car. He was responsible for bringing customer. Police arrested all three of them.

    Later police raided their office located at Chandigarh Industrial area. Fake currency worth Rs 20 lakh, computer, scanner and other stuff has been seized by the police from their office. Two more people are involved in this, search is going on.

 4. LVISS சொல்கிறார்:

  The term of the VP is upto Aug 2017 —That is a long time away –By that time Mr Thakur may be forgotten –He himself may not be keen to take the job – Mr Ansari has been quite dignified and there is no reason why he should not continue for another term –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எல்விஸ்,

   ஆக மொத்தம், ஜஸ்டிஸ் தாக்கூர் அவர்கள் துணை ஜனாதிபதி
   ஆகி விடக்கூடாது என்பது உங்கள் விருப்பம் – சரி தானே … ? 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    You take a few lines for minister’s speech and write an article based on hear says and rumours ( arasal purasal seidhigal) — Words like “therigirathu ” only shows that you are not sure of your self —How did you come to the conclusion that I wont like or like to see a person in a particular post —

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  நேற்று வரை வங்கிகள் செய்யும் பணப்பட்டுவாடாவை
  control பண்ணி வந்த மத்திய அரசு,
  (வாரத்திற்கு 24,000, ATM-ல் 2500 ) இன்று மாத சம்பளக்காரர்களுக்கு
  கரன்சி கொடுக்க முடியாத நிலைக்கு வங்கிகள்
  தள்ளப்பட்டதும் –

  இனி, பணப்பட்டுவாடா சம்பந்தப்பட்ட விஷயங்களை
  ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என்று மடை மாற்றி
  விட்டிருக்கிறதே – இதைப்பற்றிய உங்கள் கருத்து
  என்ன…?

  பழைய நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கும் அளவிற்கு
  உரிய அளவு புதிய கரன்சி கைவசம் இல்லை என்று
  தெரிந்தே, அவசர அவசரமாக “நோட்டுக்கள் செல்லாது”
  என்று கொள்கை முடிவை அறிவித்த மத்திய அரசு,

  இவ்வளவு நாட்களாக பணப்பட்டுவாடாவை தானே
  control செய்து வந்த மத்திய அரசு –

  இப்போது பிரச்சினை வெடிக்கிறது என்று தெரிந்தது ரிசர்வ் வங்கி கவர்னரை
  பலிகடா ஆக்கும் விவகாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

  வங்கிகளில் போய் பணம் கேட்கும்
  மாத சம்பளக்காரர்களுக்கு – வங்கிகளால் உரிய அளவு
  பணம் கொடுக்க முடியாத ஒரு நிலை இன்றைக்கு
  ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம் என்று
  நீங்கள் நினைக்கிறீர்கள் ?

  நண்பர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள
  விரும்புகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   I am afraid you are wrong –The central govt has no role in distribution of cash( pattuvada ) as such –It only issues instructions regarding drawal of cash etc — –The RBI supplies currency to currency chests and it is the banks concerned which distribute cash( pana pttuvada ) to their branches — you are confusing pana pattuvada with instructions given by the govt regarding withdrawal limits etc ) —
   AS for cash shortage that we speak of shortage despite assurances from the RBI that there is sufficient cash– I think we will hear more about the reasons behind this in the coming days — I have certain views on this shortage of cash —-
   When you get your salary for the month do you spend all of it in one single item or at one stretch -You space your spending gradually to stretch upto the next pay day or near abouts-

  • selvarajan சொல்கிறார்:

   // நாட்ல மக்கள் தொகை அதிகம்.. கியூவூம் பெருசாதான் இருக்கும்.. அருண் ஜேட்லி அசால்ட் பதில் //
   Read more at: http://tamil.oneindia.com/news/india/finance-minister-arun-jaitley-says-because-large-population-there-will-be-queues/slider-pf215823-268775.html —- // ரூபாய் நோட்டு இப்போதான் பிரிண்ட் ஆகுது.. லேட்டாகத்தான் வரும்.. அருண் ஜேட்லி ஒப்புதல் //
   Read more at: http://tamil.oneindia.com/news/india/printing-new-notes-will-take-time-it-is-time-consuming-says-arun-jaitley-268792.html —-

   என்னவோ — ” டெபிட் — கிரெடிட் ” என்றெல்லாம் கட்டுரைகள் வெளிவந்தது — தற்போதைய இவரது பேச்சுக்களை பார்த்தால் — அந்த இரண்டில் இவர் ” எந்த ராகம் ” …. ?

   ஐம்பது நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் — ஐம்பது நாட்களுக்கு பிறகு — என்னதான் நடக்கும் — நடக்கப்போகிறது — என்பதை யாராவது கூறுங்களேன் … ! …

   பாராளுமன்ற தேர்தலின் போது கூறினார்களே : மோடி வந்தால் ” தேனாறும் — பாலாறும் ” சந்து – பொந்துகளில் எல்லாம் ஓடும் என்று — தற்போது ஓடவில்லை — அங்கங்கே பாய்ந்துக் கொண்டு இருக்கிறது — 50 – நாட்களுக்கு பிறகு அந்த ஆறுகளில் ” உல்லாசப்படகு ” விடுவார்களா … மக்களை குஷிப்படுத்த … ? அடுத்த ஆப்பு தங்கத்துக்கு தானே ….. ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    இங்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றி கொஞ்சம்
    யோசித்து, பரிசீலனை செய்து பாருங்கள்…
    மற்ற மீடியாக்களில் நடக்கும் விவாதங்களையும் கவனியுங்கள்…
    சில விஷயங்கள் புலப்படுகின்றன.

    மோடிஜி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர்,
    எப்படியாவது அவர் இமேஜை உயர்த்தி மக்களிடையே
    நம்பிக்கையை ஊட்ட ஒரு பெரிய டீம் வேலை செய்தது.
    முக்கியமாக social media -க்களில்…
    பெரிய அளவில், அவர் இமேஜை பன்மடங்கு பூஸ்ட் செய்தார்கள்.

    தேர்தல் முடிந்து பதவியேற்றுக் கொண்ட பிறகு,
    அவரிடம் தொனிப்பது பூராவும் அதிகாரமும் ஆணவமும் தான்.
    அவரைப் பொறுத்த வரை யோசனை, பேச்சு எல்லாமே
    one way traffic தான். அவர் எங்கே,
    எத்தகைய இடங்களில் பேசுகிறார் – கவனித்துப் பாருங்கள் …!!

    பாராளுமன்றத்தில் – இல்லை.
    செய்தியாளர் கூட்டத்தில் – இல்லை.
    தொலைக்காட்சி பேட்டியில் – இல்லை.

    கேள்விகள் எழக்கூடிய எந்த இடத்திலும் அவர் பேசுவதில்லை.
    அவர் பேசுவார் – எதிரே இருப்பவர் கேட்டுக் கொள்ள வேண்டும்.
    அவ்வப்போது ஆரவாரத்தோடு கூச்சலிட வேண்டும்.
    அத்தகைய பொதுக்கூட்டங்களில், நிகழ்ச்சிகளில்
    மட்டுமே அவர் பேசுகிறார்.
    இத்தகைய இடங்கள் அனைத்திலும் அவரை கேள்வி கேட்பவர்
    யாரும் இருக்க மாட்டார்கள். கேட்கக்கூடியவர்கள் இருக்கக்கூடிய
    இடத்தில் அவர் பேச மாட்டார்.

    தேர்தலுக்கு முன் அவரை ப்ரமோட் செய்த ஒரு ஆதரவாளர் கூட்டம்
    அவர் அதிகாரத்திற்கு வந்த பின்,
    அவரைப்போலவே ஆணவமும், அகம்பாவமும் கொண்டதாக
    மாறி விட்டது.
    Social Media -க்களை பாருங்கள். மோடிஜியையோ, பாஜக அரசையோ
    யாராவது குறை சொல்ல முயன்றால்,
    பாய்ந்து பாய்ந்து குறுக்கிடுகிறார்கள். எதை எதையோ quote
    செய்து, பேசுபவர், கருத்து தெரிவிப்பவர்களை offensive mode-லேயே
    குறுக்கிடுகிறார்கள். அவர் எதைச்செய்தாலும், நியாயப்படுத்துகிறார்கள்.

    நிஜமாகவே ஏற்படும் சங்கடங்களை கூட மறுக்கிறார்கள்.
    Reality-யை ஏற்றுக் கொள்ள, ஒப்புக்கொள்ள – மறுக்கிறார்கள்.
    சிலர் அறியாமையாலும், விசுவாசத்தாலும் செய்கிறார்கள்.
    வேறு பலர் அதிகாரத்துடனும், இறுமாப்புடனும் செய்கிறார்கள்.

    இவை எல்லாம் எங்கே கொண்டு போய் விடப்போகின்றன….?

    இவர்களையும்,
    சாதாரண மக்களையும்,
    இந்த நாட்டையும்….????????

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • LVISS சொல்கிறார்:

     Modi did not have support of media any time before the elections –Yet they built him up , not by writing good things but by talking about 2002 riots —It took a lot of time to come to realise that they are writing about a person who has been elected by the people of the same state three times with thumping majority despite all the negative publicity –Only now we see a few channels are supporting his actions — He never had a favourable media —
     I think you have not heard his speeches in the parliament –There is no need for PM to speak on every subject , It is enough if the concerned minister answers the questions — If he is to speak on every subject what is the need for council of ministers =–That is why he does not intervene in debates though he attends parliament — When other party leaders criticise him( it is Modi did this Modi did that and not NDA govt) in every available platforms he also chooses to answer them in a platform of his choice and in the process informs the public about his actions –Is there any unwritten rule that PM or ministers should address the media –Even otherwise the media get the news they want —
     For the record he had given two interviews to media on completion of the first two years and recently to Times Now –You want him to appear every third day —

 6. Raghavendra சொல்கிறார்:

  Sir,

  How about this NEWS of Promptly acting … …?

  Present CBI Director
  is retiring today.

  With govt yet to finalise new director,
  Rakesh Asthana, IPS Gujarat Cadre is made CBI in-charge

  Asthana was made incharge as the government
  could not finalise the name for the new CBI director till now.

  The panel which chooses the CBI director from among
  eligible IPS officers is yet to meet to select the new director.
  It comprises the PM, leader of opposition and the
  Chief Justice of India.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.