நாம் என்ன பைத்தியக்காரர்களா …? இல்லை நம்மைப்பற்றி அவர்கள் அப்படி நினத்துக் கொண்டிருக்கிறார்களா…?

m-i-p

மருத்துவச் செலவு உட்பட சில அவசியத்தேவைகள்.
வெளியே செல்ல முடியாதபடி ஒரு சிறு விபத்து
காரணமாக காலில் ஏற்பட்ட காயம்.
பக்கத்து வீட்டு நண்பரின் மகன் வெளியே போவது
தெரிந்தது. “எதாவது ஹெல்ப் தேவையா அங்கிள்”
என்று கேட்டான். சாதாரணமாக நான் மற்றவரை
என் வேலைகளுக்கு தொந்திரவு செய்ய மாட்டேன்.
இருந்தாலும் – சூழ்நிலை….

வங்கியிலிருந்து ஒரு 15,000 ரூபாய் எடுத்து வர முடியுமா
என்று கேட்டேன். ” sure with pleasure” என்று சொல்லிவிட்டு
சென்றவன் இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு வந்தான்.
sorry uncle – ஒன்றரை மணி நேரம் Q-வில் நின்றது தான்
மிச்சம். என் turn வருவதற்குள் cash தீர்ந்து விட்டது என்றான்.
பரவாயில்லை விடு. நான் வேறு ஏற்பாடு செய்துக்
கொள்கிறேன் என்று சொல்லி விட்டு –

இன்று நானே ஆட்டோ பிடித்து,
நொண்டிக்கொண்டே வங்கி சென்றேன்.
அதிகக் கூட்டம் இல்லை. 15 நிமிடத்தில் பணமும்
கிடைத்தது. ஆனால் எவ்வளவு….?

என் சேமிப்பு கணக்கில் –
50 ஆயிரத்து சொச்சம் இருக்கிறது.
நான் கேட்டது 15 ஆயிரம்.
அவர்கள் கொடுத்தது – வெறும் 4000 ரூபாய்.

இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று
கேட்டேன். சாரி சார். இருப்பதை ரேஷன் பண்ணினால்
தான் கொஞ்சம் பேருக்காவது கொடுக்க முடியும் என்றார்கள்.

என் உழைப்பு,
என் சேமிப்பு,
என் அத்தியாவசிய மருத்துவத் தேவைக்கு
அதில் ஒரு சிறு பகுதியை கூட எடுக்க முடியவில்லை.

“இந்த நிலை ஏன் வந்தது….?”

– என்று கேட்டால் நீ கருப்பு பணம் வைத்திருக்கிறாய்-
தீவிரவாதிகளுக்கு துணை போகிறாய்.
உனக்கு தேசபக்தியே கிடையாது என்கிற வசவுகளை
கேட்கத்தயாராக இருக்க வேண்டும்.

நேற்றிரவு, NDTV HT summit – ல், 5 Star hall -ல் இத்தனைக்கும்
காரணகர்த்தர்களில் ஒருவரான திருவாளர் அருண் ஜெட்லி
சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு –
விஸ்தாரமாக, வக்கணையாக பேசிக்கொண்டிருக்கிறார்.

– இந்தியா போன்ற பெரிய நாடுகளில்
Q-வும் பெரிதாகத்தான் இருக்கும். அதனாலென்ன ?

Q-வில் நிற்பவர் யாரும் கொந்தளிக்கவில்லையே –
disciplined, ஆக அமைதியாகத்தானே இருக்கிறார்கள்….

மக்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக
அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ள
தயாராக இருக்கிறார்கள்.

– 70 ஆண்டுகளில் நிகழ்ந்த தவறுகளை சரிசெய்வது
லேசான காரியமா…?

– நாம் cashless soceity -யை நோக்கி முன்சென்றாக
வேண்டும்.

– பணப்புழக்கம், கரன்சி நிலவரம் சுலபமாக இன்னும்
ஆறு மாதங்கள் ஆகலாம்….

-என்றெல்லாம், மக்களை சங்கடங்களுக்கு உள்ளாக்கி
விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியோ, சங்கடமோ,
வருத்தமோ சிறிதும் இன்றி சாவதானமாக கூறுகிறார்.

————————————————————–
உண்மையில் – கரன்சி நோட்டுக்களின் நிலவரம் என்ன…?

“ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு நான்கு மையங்கள்
செயல்படுகின்றன. இதற்காக, 1995-ம் ஆண்டு ‘ரிசர்வ் வங்கி
நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஒரு நிறுவனம்
உருவாக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான
துணை நிறுவனம்.

நாட்டில் உள்ள தேவைக்கும் விநியோகத்துக்குமான
இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரூபாய்
நோட்டுகளை அச்சடிப்பதற்காக இந்நிறுவனம்
உருவாக்கப்பட்டது. கம்பெனிகள் சட்டப்படி தனியார்
கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில்
இதன் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. மைசூரு
மற்றும் மேற்குவங்க மாநிலம், சல்போனியில் உள்ள
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களை நிர்வகிக்கிறது.

இந்த இரண்டு அச்சகங்களும், ஒரு நாளைக்கு
இரண்டு ஷிப்ட் அடிப்படையில் வருடத்துக்கு ரூபாய்
தாள்களாக 1,600 கோடி அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை.

இதுதவிர, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள தேவாஸ் ஆகிய இடங்களில்
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்கள்
செயல்படுகின்றன. இந்த இரண்டும் செக்யூரிட்டி பிரிண்ட்டிங்
அண்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
மூலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.

நிதி அமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி,
இந்த இரண்டு அச்சகங்களும் மொத்த ரூபாய் தாள்களின்
தேவையில் 40 சதவீதம் வரையில் அச்சடிக்கும் தகுதி
வாய்ந்தவை. மைசூருவிலும் சல்போனியிலும் உள்ள
இரண்டு அச்சகங்கள் 60 சதவீதம் வரை ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை.

ஆக, நான்கு அச்சகங்களும் இணைந்து மொத்தமாக
இரண்டு ஷிப்டுகளிலும் பணிபுரிந்தால் வருடத்துக்கு 2,666
கோடி ரூபாய் அளவுக்கு அச்சடிக்க முடியும்.

அதேவேளையில், மத்திய அரசின் புள்ளி விபரப்படி,
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியில் புழக்கத்தில்
இருந்த ரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய்.

இதில் 45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள். இதன் மதிப்பு
7,89,000 கோடி ரூபாய்.

புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு
6,84,000 கோடி ரூபாய். இது 39 சதவீதம் ஆகும்.

எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். ஆக, 1000 ரூபாய்
நோட்டுகளுக்குப் பதிலாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை
அச்சடிக்க 342 கோடி தாள்களே போதுமானது. புதிய
இரண்டாயிரம் ரூபாய் தாள்களை அச்சடிக்கும் பணியை,
கடந்த செப்டம்பர் மாதமே மத்திய அரசு தொடங்கி
விட்டதாகக் கூறுகிறது. அதன்படி பார்த்தால், இரண்டு மாத
காலத்தில் பணிகள் நிறைவடைந்திருக்கும்.

அதேபோல், மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால் 500 ரூபாய்
தாள்களின் எண்ணிக்கை 4000 கோடி தாள்களாக உயரும்.
இதில், 20 சதவீத வேலைத் திறன் 10 ரூபாயிலிருந்து 100
ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மீதமுள்ள 80 சதவீத வேலைத் திறன் 500 ரூபாய்
நோட்டுகளை அச்சடிப்பதற்காக பயன்படுத்துவதாக
எடுத்துக் கொண்டால், வருடத்துக்கு 3,200 கோடி தாள்கள்
அச்சடிக்கப்படும். புழக்கத்திலிருந்து செல்லாததாக
அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை
1,578 கோடி தாள்கள்.

இதில், சுமார் 20 சதவீதம் வரையில் கறுப்புப் பணமாக
இருக்கும் என்பதால், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது
என்கின்றனர். எனவே, 1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தைக்
கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள்
அச்சடிக்கப்பட வேண்டும். ஆனால், 1000 ரூபாய் நோட்டுகள்
முற்றிலும் நீக்கப்பட்டதால், குறைந்தபட்சம் அதில் 25
சதவீதமாவது புதிய 500 ரூபாய் நோட்டுகள்தான் வந்தால்தான்
நிலைமை சகஜமாகும் என்கின்றனர்.

அப்படியானால், ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த
மதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய் தாள்கள்,
அதாவது கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட
வேண்டும். இதன்படி மொத்தத் தேவையான 1,604 கோடி
எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்பட
வேண்டும்.

இவற்றை அச்சடிக்க குறைந்த பட்சம் –
ஆறு மாதம் காலம் தேவைப்படும்.

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தப் பணிகள்
தொடங்கியிருந்தால், அரசு சொல்வதுபோல் ரூபாய்
நோட்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைய வாய்ப்பில்லை.

இப்போதைக்கு மக்களின் இயல்பு நிலை திரும்புவதற்கும்
வாய்ப்பில்லை.

——————————————————–

இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது…

போதிய அளவு பதிலுக்கு புதிய கரன்சி நோட்டுக்களை
அச்சடித்து வைத்துக்கொண்டு,

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற முடிவை
அறிவித்தால் என்ன…? மக்களுக்கு இத்தகைய
தொந்திரவுகள் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாமே…
என்கிற கேள்வி எழுகிறது…?

இதற்கான உண்மையான பதிலை அவர்களால்
வெளியே சொல்ல முடியாது… சொல்ல மாட்டார்கள்.
இதற்கான எந்த சரியான விளக்கத்தையும் அவர்களால்,
இதுவரை கொடுக்க முடியவில்லை.

பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான
( பாராளுமன்றத்திற்கு 80 எம்.பி.க்களை தரும் )
உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிறது.
இங்கே வெற்றி பெற பணபலம் ஒரு முக்கிய அம்சம்.

இங்கு போட்டியில் இருக்கும் முக்கிய கட்சிகள்
மாயாவதியின் பிஎஸ்பி, முலாயம் சிங்கின் எஸ்.பி.
பாஜக ஆகியவையே…( காங்கிரஸ் இங்கு வலுவாக இல்லை.)

எல்லா கட்சிகளுமே தேர்தலில் கருப்புப் பணத்தை
அள்ளி விடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் மாநில தேர்தலில்
500-600 கோடிக்கு குறையாமல் செலவழிக்க நேரிடுகிறது.

இந்த தேர்தலில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க
பாஜக தீர்மானித்ததன் விளைவையே நாம் இன்று
எதிர்கொண்டிருக்கிறோம்.

முதலாவது –

500-1000 நோட்டுக்களை செல்லாது என்று திடீரென்று
அறிவித்ததன் மூலம், மாயாவதி, முலாயம் சிங் ஆகியோரின்
கட்சிகளின் பணபலம் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டது.
( பாஜகவின் பணம் வெவ்வேறு வழிகளில்
முன்கூட்டியே பத்திரப்படுத்தப்பட்டு விட்டது…)

இரண்டாவது –

கருப்புப் பண ஒழிப்பில் மோடிஜி ஒரு மிகப்பெரிய போரில்
ஈடுபட்டிருக்கிறார். எனவே, இந்தப் போரில் அவர் வெற்றி பெற
தேச நலனை முன்னிட்டு மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்து
அவர் கரங்களை வலுப்படுத்துவது அவசியம்….

——————————————-

இவை மட்டும் தானா காரணம்….?
போகப் போக புரியும்….!!!

நீங்கள்,
யாராவது பாஜக நண்பர்களைப் பார்த்தால் –

—————-
போதிய அளவு பதிலுக்கு புதிய கரன்சி நோட்டுக்களை
அச்சடித்து வைத்துக்கொண்டு,

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற முடிவை மோடிஜி
அறிவித்திருந்தால் என்ன…? மக்களுக்கு இத்தகைய
துன்பங்கள் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாமே…
——————

என்று கேட்டுப் பாருங்களேன்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to நாம் என்ன பைத்தியக்காரர்களா …? இல்லை நம்மைப்பற்றி அவர்கள் அப்படி நினத்துக் கொண்டிருக்கிறார்களா…?

 1. sridhar சொல்கிறார்:

  “போதிய அளவு பதிலுக்கு புதிய கரன்சி நோட்டுக்களை
  அச்சடித்து வைத்துக்கொண்டு”

  sir, i think cash can be printed only against those withdrawn from circulation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஸ்ரீதர்,

   அப்படி இல்லை. எதிர்கால தேவைகளுக்காகவும்,
   re-circulation / replacement of old currency -க்காகவும்,
   எவ்வளவு வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையும்,
   அதிகாரமும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இருக்கிறது.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. சாமி சொல்கிறார்:

  /போதிய அளவு பதிலுக்கு புதிய கரன்சி நோட்டுக்களை
  அச்சடித்து வைத்துக்கொண்டு,

  இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு
  ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற முடிவை மோடிஜி
  அறிவித்திருந்தால் என்ன…//

  விஷயம் வெளியில் தெரிந்து விட்டிருக்கும். எதற்கு இவ்வளவு நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும் என்று ஊழியர்கள் யோசித்து, அப்போ பழைய பணம் செல்லாததாகி விடுமோ என்று ஐயப்பட்டு, அது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவி, கறுப்புப் பண ஆசாமிகள் உஷாராகி, எல்லாப் பணத்தையும் நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்து தப்பித்துக் கொண்டிருப்பார்கள்.

  இப்போதோ எப்படி எப்படியெல்லாமோ செயல்படுகிறாகள். நாம் இங்கே வரிசையில் நின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க காரிலும், வீட்டிலும் லட்சம், கோடி என புதிய 2000 நோட்டுக்கள் எப்படியோ சிலருக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. எல்லாம் “அதிகாரிகள்” அர்ப்பணிப்போடு செய்யும் பணிதான் காரணம்.

  நாட்டில் அதிக அளவுக்கு “கள்ளப்பணம்” புழங்க விடப்பட்டதாலேயே, அவற்றை சரியாகக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை மக்களிடையே புழக்கத்தில் இருந்ததாலேயே பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

  உண்மையில் கஷ்டப்பட வேண்டியவர்கள் படவில்லை. நாம் கஷ்டப்படுகிறோம், என்ன செய்ய? 😦

 3. avudaiappann சொல்கிறார்:

  currency note will be abolished…caseless economy will come

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ஆவுடையப்பன்,

   //‘ CASH LESS MARKET ” இந்தியாவில் சாத்தியமில்லை…!
   இங்கே சில்லறை வணிகம் – முழுக்க முழுக்க ரொக்கப்பணத்தை நம்பித்தான் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் அப்படித்தான் நடக்கும்…!!! //

   இதைச் சொல்வது காவிரிமைந்தன் அல்ல…
   ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், பொருளாதார நிபுணர்
   திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் –

   அதுவும் கடந்த செவ்வாயன்று….சென்னையில்….

   அவரை விட நீங்கள் பெரிய பொருளாதார நிபுணர்
   என்றால் சரி- பிறகு எனக்கு சொல்ல ஒன்றுமே இல்லை…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • venkat சொல்கிறார்:

    we are not talking “cashless market” we are only striving for “less cash” market.
    amount of cash we are printing and managing in logistics is eating a good 2% into GDP. there are published international numbers on this. check this out.

    in long run, government, without having to tax comman man will be able to save more money and raise more money by bringing more people into the tax net. that money will naturally flow into infrastructural investment that you and i will enjoy.

    so don’t go to bank to withdraw 15K. be happy with 2K and spend the remaining via electronic channel. you will be doing a big service to the country than running this blog.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


     நண்ப வெங்கட்,

     // so don’t go to bank to withdraw 15K.
     be happy with 2K and spend the
     remaining via electronic channel.//

     தேவலையே …. !!!

     ஆனால், அமெரிக்காவில் உட்கார்ந்து அட்வைஸ்
     செய்வதற்கு முன்னால்,
     சென்னையில் எத்தனை டாக்டர்கள் க்ரெடிட் கார்டு
     பேமெண்ட் ஏற்றுக் கொள்கிறார்கள்
     என்பதை தெரிந்து கொண்டால் நல்லது.

     முதலில் எத்தனை டாக்டர்கள் இங்கு
     வாங்குகிற fees-க்கு ரசீது கொடுக்கிறார்கள்
     என்று தெரிந்து கொள்வது அதை விட நல்லது…

     ரசீதே கொடுக்காத டாக்டர்களின், வக்கீல்களின்
     ஆண்டு வருமானம் எவ்வளவு,
     அவர்கள் எத்தனை வரி கட்டுகிறார்கள் என்று
     இதுவரை அரசு செக் செய்திருக்கிறதா
     என்று யாரிடமாவது கேட்டாவது
     தெரிந்து கொள்வதும் நல்லது.

     இதுவரை, எந்த டாக்டர் அல்லது
     வக்கீல் வீட்டிலாவது
     Income tax raid நடந்ததாக சரித்திரம் உண்டா…?

     சென்னையில் கால் உடைந்து அடிபட்டுக் கிடப்பவனுக்கு
     அமெரிக்காவில் இருந்து மோடிஜி சார்பாக அட்வைஸ்…!
     வெரி நைஸ்….!!!

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • Arun சொல்கிறார்:

      எத்தனையோ ஊழல் பாத்திருக்கோம் இது வரைக்கும்… ஒரு 6 மாசம் வெயிட் பண்ணி தான் பார்க்கலாமே… மரத்த சுத்திட்டு வயித்த தொட்டு பார்த்த கதையா விமர்சனம் பண்ண வேண்டாமே…

    • GVS சொல்கிறார்:

     venkat,

     நீங்கள் சொல்வதில் கொஞ்சமும் realty இல்லை. 8th november அன்று மோடிஜி சொன்ன காரணங்களில்
     cash-less or less-cash பற்றி சொன்னாரா…?

     இப்போது மக்களுக்கு கொடுக்க புதிய கரன்சியை அச்சடித்துக் கொடுக்க முடியாமல் அரசு திணறுகிறது.
     அதை மறைக்க புதிதாக கண்டுபிடித்த காரணம் தான்
     இந்த cash-less or less-cash தந்திரம்.

     • venkat சொல்கிறார்:

      i agree with you that the less-cash thing is not the prime motive. but on day 1 to day 3 after seeing the digital channel opening up, Government has requested Minister Piyush Goyal to manage the digital initiatives on day to day basis and track them. he has held several rounds of stake holder meetings with bank, wallet operators, pos manufacturers, visa, mastercard, npci ( rupay ) etc., i have already been part of two such meetings… some of the initiatives…

      1. all banks have been given target to install POS. i serve some 15 banks. I am submitting daily reports to ministry on new installations by the city name and town.
      2. all charges on debit card has been waived off. this is to encourage merchnts.
      3. in order to reduce the cost of POS machine, customs duty has been waived. initially it was waived only for local manufacturers. there are hardly any certified POS manufacturers in the country. unfortunately all of them are importing machines from China. hence immediate decision was made to waive of import duty.
      4. we worked day and night to enable Cash@POS option so that you can go to many outlets including pertol bunk to withdraw cash using your card. idea is that those merchant are already sitting with cash. easy to recirculate them rather than loading atm with the same or new notes.
      5. and many more…..

      after knowing a resonable amount of inner workings, i am saying with confidence that the issue is handled the best way it can be. just hold your horses and watch out.

    • GVS சொல்கிறார்:

     // without having to tax comman man//
     (பொதுமக்களுக்கு வரி போட வேண்டிய அவசியமின்றி)
     //bringing more people into the tax net//
     (இன்னும் அதிக மக்களை வரி விதிப்பிற்குள் கொண்டு வந்து)

     – உளறலாகத் தெரியவில்லை ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Avudaiappan They may not completely abolish currency That is neither possible nor desirable –Lot of transactions will need to be in cash in future also — They may reduce the printing of notes and keep it at a certain limit –Less cash economy is possible but cashless economy is not —

 4. LVISS சொல்கிறார்:

  About rationing of notes –Even in the best of times banks have to ration notes to distribute the available cash to customers equitably – –We are feeling it very badly now because all of us are going to the bank at the same time —How many times before demonetisation have we been able to get the notes of our choice —
  Jaitley spoke in general terms –Many people standing in the queues were heard saying that they support the move despite the hardship they are facing -What is the reason –Because they believe that the man who leads the movement will not put his hand in the till —
  Only a foolish govt will announce that certain notes will become after some months –This has been told several times –Only notes that have been withdrawn form circulation or destroyed will be replaced by printing new notes —

 5. venkat சொல்கிறார்:

  from what i know government has no plans to print new notes equivalent to the invalided notes. it will be much much lower than that number inorder to create a scarcity for cash. the idea is to force people to use electronic, digital and plastic cards channels. 6 months is a good amount of time for consumers to change behaviours, merchants to adopt new channels and banks to install POS machine etc.,

  consider it as a forced migration!! timing this around UP election could be a by-product benefit.

  in the last 2 years RBI took various initiatives to make the digital channels popular. we have seen at least 2 vision documents and various initiatives like reducing what commission merchants pays on accepting debit cards to .75% ( from 2%), subsiding financial including project etc., they all gave only small incremental benefit. hence, this major move…

  i run a credit/debit card transaction processing company. I have seen 5 times increase in transactions processed and 200% increase for the demand for POS machines . The country is going in the right direction….

  please write some articles about old songs, tirupathi, kaladi etc.,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   // i run a credit/debit card transaction processing company.
   I have seen 5 times increase in transactions processed
   and 200% increase for the demand for POS machines .
   The country is going in the right direction….//

   பின்னூட்டத்திற்கும், விசுவாசத்திற்கும் அது தான்
   காரணமோ….?

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • இருதயம் சொல்கிறார்:

   Dear Mr.Venkat , your arguments are acceptable. In India , more than 6 lakh villages are there , but hardly 4000 villages are given bank facility. Now please tell me , villagers those who are not given bank facility , should die…? you expect that…?

   • venkat சொல்கிறார்:

    why will they die? are they dying now? anyways they don’t have a bank. so why bother. whoever is paying them cash will pay them by cash and they will continue to spend the same way that they are doing now.

  • Arun சொல்கிறார்:

   venkat, interesting information…. well said…

 6. Raghuraman சொல்கிறார்:

  i See lot of small vendors moving to online transactions. Even a tea vendor accepting online transaction. https://www.youtube.com/watch?v=ZvLRbj5rP3Q
  Need of the hour is this move to e-payment. It is really unfair for 2% of the population paying income tax when rest are left untouched though they make equal earning.
  Please understand the motive of the government and support. Don’t make fictitious stories like i wanted to withdraw 15k. You could as well pay online to hospital as you have bank account. You guys should write articles on how to do e-payments and benefits. You will also write blogs about black money and governments inability to tackle it and when government does, you will blame.

 7. jksm raja சொல்கிறார்:

  மோடியின் இந்த அறிவிப்பினால் நன்மை என்ன என்று கேட்பவர்களுக்கு என் பதில் குப்பன் சுப்பன் முதல் இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒரே நாளில் பொருளாதார மேதைகள் ஆக்கியதுதான். இதனால் பாருங்கள் ஜனவரி ஒண்ணாந்தேதி முதல் இந்தியா வல்லரசு ஆகிவிடும். உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ளமுடியாத கற்பனைவாதிகள்

 8. selvarajan சொல்கிறார்:

  // ஜியோ விளம்பரத்தில் மோடி புகைப்படம்.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் ! //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/reliance-jio-may-face-fine-rs-500-using-pm-narendra-modi-ph-268893.html —- பாவம் …. இந்த ” அபராதமே ” அம்பானிக்கு அதிகம் தானே … ? // மக்களே எனது எஜமானர்கள்.. ஊழலை ஒழிக்க நினைப்பது ஒரு குற்றமா? மோடி ஆவேச பேச்சு // http://tamil.oneindia.com/news/india/is-fighting-corruption-crime-ask-modi-268865.html —- ஊழலை ஒழிப்பது குற்றமில்லை அய்யா … யானைகளை விட்டு விட்டு — சித்தெறும்புகளுக்கு தொல்லைக்கு கொடுத்து — தெரு – தெருவாக பைத்தியமா அலைய விடுவது சரியா என்பது தான் கேள்வி …

  ” வீட்டுல எலி வெளியே புலி ” என்கிற சொலவடைக்கு ஏற்ப முன்பு ஒரு தமிழ் படம் கூட வந்தது … இந்த ” விமரிசன தளத்தின் ” முதல் இடுக்கையே – அந்த படத்தில் நடித்த கதாநாயகன் எஸ்.வீ . சேகர் தான் — அவரும் பல இடங்களில் சுற்றியலைந்து தற்போது ஐக்கியமாகி இருப்பது பா.ஜ . க. வில் தான் … அவர்கூட சமீபத்தில் ஒரு விவாதத்தில் கூறியது : 120 கோடி ஜனத்தொகையில் — நோட்டு விவகாரத்தில் செத்த 25 பேர்கள் ஒரு இழப்பா என்று கேட்டு புல்லரிக்க வைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததுதான் …

  அந்த படத்தின் தலைப்பை போலவே நமது ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தவர் பாராளுமன்றத்தில் எலியாகவும் — வெளியே புலியாகவும் இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை …. ஒரு சில நண்பர்கள் பிரதமர் தான் விடையளிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று கூறுகிறார்கள் — ஆனால் திடிரென்று ஊடகங்களில் தோன்றி அதிரடியாக இந்த செல்லாத நோட்டு பற்றி அறிவித்தது அவர்தானே என்பதை மறந்து விட்டதைப்போல மறைக்க முயலுகிறார்கள் என்பது தானே உண்மை — அறிவித்தவர் பதிலும் — விளக்கமும் மன்றங்களில் கூற தயக்கம் காட்டு ஏன் என்பது அவருக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்காவது தெரியுமா என்பதும் கேள்விதான் …

  ஆனாலும் திரு கா.மை . அய்யா அவர்கள் — இந்த ” சப்பைக்கட்டு பேர்வழிகளுக்கு ” அடிக்கடி இதுபோன்ற இடுகைகளை வெளியிட்டு — அவர்களும் அதை நியாயப்படுத்த ஏகப்பட்ட இடங்களில் ” தேடி – தடவி ” எடுத்து எப்படி – எப்படியோ ஒப்பேத்த நினைப்பதை — பார்த்தால் கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது — பாவம் அவர்களது ” வேலைப்பளுவை ” கருத்தில் கொண்டு ஒரு சில இடுக்கைகளையாவது — சாதகமாக பதிவிட்டால் — நன்றாகா இருக்கும் … அப்படித்தானே … ?

 9. Tamilian சொல்கிறார்:

  திரு . கா மை அவர்களுக்கு , மருத்துவ மனைக்கு செக் /காரட் கொடுக்க முடியும். அவர்கள் மறுக்க முடியாது. நேற்று எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மனைக்கு டெபிட கார்டு வைத்துதான் பணம் அளித்தேன் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.