இனி பாஜக / மோடிஜி பற்றி எழுத மாட்டேன்….!!!

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இந்த விமரிசனம்
தளத்தில் எழுதி வருகிறேன். அரசியல், பொருளாதாரம்,
சமூக பிரச்சினைகள் பற்றி நிறைய கட்டுரைகள் –

சரித்திரம், இசை, ஆன்மிகம் மற்றும் பல பொருட்களிலும்
சில சமயங்களில் எழுதி இருக்கிறேன்.
எனக்கென்று எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி
என் மனதில் சரியெனப்படுபவற்றைத் தான் எழுதி
வருகிறேன்.

இதுவரை என்னை எழுதாதே என்று
யாரும் சொன்னதில்லை. எனது சில கட்டுரைகள்,
அவற்றிலிருந்த கருத்துகள் குறித்து,
என்னை தாக்கி பின்னூட்டம் எழுதியவர்கள்
உண்டு. ஆனால் எழுதாதே என்று யாரும்
இதுவரை சொன்னதில்லை.

என் கருத்தை ஏற்றோ, மறுத்தோ, விவாதித்து
பின்னூட்டங்களில் எழுதுபவர்கள் நிறைய உண்டு.
இந்த வலைத்தளத்தின் சிறப்பே உயிரோட்டமான
பின்னூட்டங்கள் தான்.

ஆனால் – அண்மையில் எனக்கு ஒரு விசித்திரமான
அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு இந்த வலைத்தளத்தில் ஏற்கெனவே அறிமுகமான
நண்பர்களில் சிலரும் – ,

இதுவரை இந்த தளத்தில் பின்னூட்டமே எழுதாத,
எந்த விவாதத்திலும் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்காத புதிய நண்பர்கள் பலரும் –

இவர்களை அரசியல்வாதிகள்,
ரவுடிகள் என்றெல்லாம் சொல்லி விட முடியாது –

எல்லாரும் நிறைய படித்தவர்கள் – விஷயம் தெரிந்தவர்கள் –

lotus

என்னை – எழுதாதே…. நிறுத்திக் கொள் என்கிறார்கள்.
சிலர் பாஜக பற்றி, மோடிஜி பற்றி எழுதாதே என்று
வலியுறுத்தி கூறுகிறார்கள்.
வலைத்தளத்திலும் கூறுகிறார்கள்….
தனிப்பட்ட முறையிலும் ஈமெயில் அனுப்புகிறார்கள்.

கொஞ்சம் யோசித்தேன்….

சரி… அவர்களும் “மகிழ்ச்சி” யாக இருக்கட்டுமே….!
அவர்களது
ஆலோசனையை,
உத்திரவை ஏற்று –
இனி எழுதுவதை, பாஜக / மோடிஜி பற்றி எழுதுவதை
நிறுத்தி விடலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

மகிழ்ச்சி தானே பாஜக நண்பர்களே / அன்பர்களே …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

41 Responses to இனி பாஜக / மோடிஜி பற்றி எழுத மாட்டேன்….!!!

 1. today.and.me சொல்கிறார்:

  அன்பின் காை ம ஜி
  அப்பாடா.

  இப்போது தான் புரிந்ததா உங்களுக்கு .

  காங்கிரஸ் வெறும் பினாமி
  பாஜக ஒரு சுனாமி

  இந்தியப் பேரிடர் .

 2. beneatheflowers சொல்கிறார்:

  பாஜக, மோடிஜியை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது தற்போது நல்லது. எதிராளிகளை முடக்க பார்க்கும் அரசு மத்தியில்.

 3. KALAKARTHIK சொல்கிறார்:

  அண்ணா ,
  உங்களை போன்றவர்களே பயப் பட்டால், நாட்டில் யார்தான் உண்மையை மக்களுக்கு சொல்வது?எனக்கு உங்கள் அளவிற்கு விஷயம் தெரியாது.(ஏன் நீங்கள் எழுதலாமே என்று யாராவது கேட்டால்) எனக்கு உங்கள் அளவிற்கு விவரம் தர தெரியாது.தெரிந்தவர்கள் எழுதத்தான் வேண்டும்.தொடருங்கள்.
  கலா கார்த்திக்
  கார்த்திக் அம்மா

 4. தமிழன் சொல்கிறார்:

  காமை சார். இது என்ன திடீரென்று… உங்களின் எண்ணத்தை நீங்கள் எப்போதும்போல் எழுதுங்கள். சிலர்/பலர் அதில் உள்ள உண்மையை, அல்லது உங்களின் கருத்தை அறியமுடியும். ஜன’நாயகத்தின் அருமை வேறுபட்ட கருத்துக்களை அறிவதுதான்.

  நீங்கள், உங்கள் அனுபவத்தின்மூலம், வேறுமாதிரிச் சிந்திக்கிறீர்கள். நீங்கள் சொல்வது தவறு என்று சில விஷயங்களில் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதில் உண்மையிருந்தால்? யாருக்குத் தெரியும். அது நடக்கும்போதுதான் தெரியும்.

  தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், உங்கள் அச்சங்களையும், உங்கள் அனுமானத்தையும், உங்கள் விமரிசனத்தையும் எழுதுங்கள். அதுதான் இந்தத் தளத்தின் Value. எதிர்க்கருத்துக்களை நாகரீகமாக எழுதுவதையும் நான்(நாங்கள்) படிக்கிறோம்.

  • தமிழன் சொல்கிறார்:

   ‘நிச்சயமாக, படிக்கும் எங்களுக்குத் தெரியும், எது கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது, எது கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது என்று. நீங்கள், இந்த அறிவிப்பை ஆரம்பம் முதல் குறை சொல்லவில்லை. நீங்கள் அதிகம் எழுதுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததையும், அதனால் மிகவும் பாதிக்கப்படும் எளியவர்களைப் பற்றியும்தான். அதனால், உங்கள் கருத்தோடு நான் (‘நாங்கள்) ஒத்துப்போகிறோம் என்பதல்ல. ஆனால், நிச்சயமாக, கண்ணை மூடிக்கொண்டு, நீங்கள் எழுதுவது அனைத்தும் தவறு என்று சொல்லவில்லை. இதற்கு முழுமுதற் காரணம், you are at the ground.. நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள். நான் வெளியிலிருந்து இதனைப் பார்க்கிறேன்… தொடருங்கள்…. ஏனெனில், there is no personal agenda in your views. (எனக்குப் புரிந்தவரை)

 5. selvarajan சொல்கிறார்:

  நல்ல முடிவு ….? இதையே ,, நான் இதற்கு முந்தைய இடுகையின் பின்னூட்டத்தில் வேறு விதமாக கூறி இருந்ததை போல : _ // ஆனாலும் திரு கா.மை . அய்யா அவர்கள் — இந்த ” சப்பைக்கட்டு பேர்வழிகளுக்கு ” அடிக்கடி இதுபோன்ற இடுகைகளை வெளியிட்டு — அவர்களும் அதை நியாயப்படுத்த ஏகப்பட்ட இடங்களில் ” தேடி – தடவி ” எடுத்து எப்படி – எப்படியோ ஒப்பேத்த நினைப்பதை — பார்த்தால் கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது — பாவம் அவர்களது ” வேலைப்பளுவை ” கருத்தில் கொண்டு ஒரு சில இடுக்கைகளையாவது — சாதகமாக பதிவிட்டால் — நன்றாக இருக்கும் … அப்படித்தானே … ? // ” சாதகமாக ” செய்து இருக்கலாமே …. அய்யா …. ?

 6. Sundar Raman சொல்கிறார்:

  reminds me of Perumal Murugan 🙂

 7. seshan சொல்கிறார்:

  KM ji, wise decision.
  (hope auto came !!!!) (in mental hospital normal man also treated as a mental case only !)
  it remembering the https://www.savukkuonline.com/……status (no news from him)

 8. selvarajan சொல்கிறார்:

  // மோடிஜி ஆதரவாளர்களின் திருப்திக்காக ……
  Posted on பிப்ரவரி 15, 2015 by vimarisanam – kavirimainthan // ……// மோடிஜி அரசுக்கு பாராட்டுக்கள்…..!!!
  Posted on ஜூலை 17, 2015 by vimarisanam – kavirimainthan // … இதுபோன்ற நேர்மையான மனதுடன் பல இடுகைகள் மோடிஜியை பற்றியும் வெளியிட்டுள்ளார் திரு.கா.மை . அவர்கள் என்பதை கவனிக்க வேண்டும் …. !!!

 9. avudaiappann சொல்கிறார்:

  nantri …nantri…keep your promise

 10. இருதயம் சொல்கிறார்:

  அரசியல் பக்குவம் , அரசியல் சகிப்புத்தன்மை பாஜக வுக்கு கிடையாது என்பதற்கு இந்த பதிவு ஒரு சான்று….

  • Sundar Raman சொல்கிறார்:

   அட பாவிகளா ( உங்களை இல்லை ) , இந்த மீடியா துறை , அதுவும் டெல்லியில் உள்ள மீடியா துறை ( NDTV ,CNN – IBN , India Today , Times Now போன்ற சானல்கள் , மோடியை எப்படி எல்லாம் எழுதினார்கள் , காண்பித்தார்கள் , என்னவெல்லாம் குற்றச்சாட்டு , US விசாவை நிறுத்தினார்கள் ..இது தான் பாக்கி இல்லை அத்தனையும் செய்தார்கள் …. the more you punched him, the more stronger he becomes …ஊழல் குற்றச்சாட்டு இல்லை , ஆக்க பூர்வமான வெளிநாட்டு துறைகளின் பணி , பாகிஸ்தானுக்கு எதிராக தைரியமான முடிவுகள், சுத்தமாக ஊழல் என்ற பெயருக்கு கூட இடமில்லை , சுத்தத்திற்கு பிரதான இடம், வேகமான சாலை இடும் பணி , நஷ்டத்தில் நடந்த சில public sector கம்பெனி களில் லாபம், நாடெங்கும் மின்சார உற்பத்தி அதிகம் ( special attention to solar and wind energy ). கிராமங்களில் மின்சாரம் ( கிட்ட தட்ட பாதி கிராமங்களை இணைத்தாகிவிட்டது ) , .OROP for defence ..இதெல்லாம் இந்த இரண்டரை வருடங்களிலேயே …… கொஞ்சம் மனசாட்சியோடு குற்றங்களை படிக்கவும்.

   இருதயத்தில் கை வைத்து பின் உங்களின் குற்றங்களை சொல்லவும்

   • Seetha சொல்கிறார்:

    பொய்சொல்தவதற்கு ஒரு அளவு கிடையாதா?

   • இருதயம் சொல்கிறார்:

    நண்பரே….நீங்கள் சொன்ன அத்தனையும் திரு. மோடியின் சாதனை என்று நீங்கள் வர்ணிப்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. swatch பாரத் திட்டத்திற்கு அரசு கொடுத்த விளம்பரங்களின் தொகை தான் அதிகம். சில பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களை ஆதாரத்துடன் கொடுக்க முடியுமா…? முந்தைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சார திட்டங்களை தான் திரு.மோடி திறந்து வைக்கிறார். இந்த 2 வருட ஆட்சி காலத்தில் , அவர் தீட்டிய தொலைநோக்கு திட்டங்கள் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்… திரு. மோடி மீது நீங்கள் கொண்டுள்ள அதீத பற்று உங்கள் கண்களை மறைக்கிறது நண்பரே…!

  • Jipsy சொல்கிறார்:

   Absolutely true.

 11. Antony சொல்கிறார்:

  Very good decision KM,
  So I hope hereafter uou will right only about Prime Minister and Ruling party. Not Modi or BJP. 😉

 12. Mahesh Thevesh சொல்கிறார்:

  யார் என்ன கூறினாலும் திரு.மோடி தன் நிகழ்சி நிரல்படி ஐந்து
  வருடம் ஆட்சி செய்யத்தான் போகிறார்.அறுபது வருடம்
  காங்கிரஸ் ஆழ இடங்கொடுத்த உங்களால் ஏன் அவருக்கு ஐந்து
  வருடம் கொடுக்க தயங்குகிறீர்கள்.காங்கிரஸ் மேல் வைத்த அடிமை மனப்பான்மையாலா?

 13. venkat சொல்கிறார்:

  please sir, continue to write… pen is mightier than sword.
  i think you first take a stand and then weave a story around this. this approach results in sterotyping… pro jayalalitha, anti modi, anti karuna, pro tamil, anti su.swamy etc., rather if you take an impartial view and give your opinion you writing will go a long way. this is the same reason for which Cho. is respected while others are called “jalras”.

  i know… its your blog and you can take what ever stand you want to take…
  good luck.

 14. gopalasamy சொல்கிறார்:

  நீங்கள் எழுதா விட்டால் என்ன ? வினவு மற்றும் பல இணையதளங்கள் எங்களுக்கு உள்ளது . மேலும் ஆ வி , நக்கீரன் மாதிரி இதழ்களும் உள்ளன . படித்து மகிழ்ச்சி அடைவோம் .

  • gopalasamy சொல்கிறார்:

   மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை யாரும் முணுமுணுத்தால் கூட பயங்கர விளைவுகள் ஏற்படும் என்கிற நிலையை பார்த்தால் பயமாக உள்ளது . இவர் அளவிற்கு கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள் யாராவது சரித்திரத்தில் உண்டா என்கிற கேள்வியும் எழுகிறது

 15. gopalasamy சொல்கிறார்:

  ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதுதான் ஒரே தீர்வு . காரணங்கள் : 1. ஜனநாயகவாதி நேருவின் குடும்பம் . 2. உலகின் ஜனநாயக தொட்டிலான ஐரோப்பாவின் தொடர்பு . 3. ௬௦ வருடத்திற்கு மேலாக நல்ல முறையில் ஆட்சி செய்து , இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் .

  • Mahesh Thevesh சொல்கிறார்:

   நேருவின் அடிமைகள் யாரும் வரவில்லையே என ஆதங்கப்பட்டேன். இப்போது அந்தக்கவலை முடிவுக்கு வந்துள்ளது.

 16. Bagawan சொல்கிறார்:

  Our beloved PM took care of the most poor people of India like Ambani, Adani and other poor BJP functionaries which is on record said by Bhawani Singh Rajawat, the BJP MLA from Ladpura in Rajasthan’s Kota so that they can protect their livelihood. Why the PM should bother about crores of Black money holders standing in long ques and not able to withdraw their own money for emergencies.So like our PM don’t support for the black money holders,standing in long ques and not bother about some black money holders died standing in long ques. The PM and his team planned for 10 month in such a way that black money holders wont be able to touch their money for at least another 6 months. Jai hind

 17. LVISS சொல்கிறார்:

  the decision is yours — but i doubt you wont be able to do it —
  a few things have to be told here — when north Indians refer to him as Modiji one can sense respect in that -when we in south india use it it sounds a bit derisive — even in north india there is
  difference in the way they refer to the pm as Modiji —
  in the beginning, if i remember correctly , you used to refer him as modi ( eg your two blogs on Modi on may 14 2014) — when you switched over to referring to him as modiji it was clear which way you are going to take –On many occasions thereafter you latched on to any statement made by any one against him and added your own views on them – Nobody will find fault with criticising a govt action -a govt’s decisions are subject to fair criticism and fair analysis , but when it descends to attaching motives to the pm for collective decisions taken by a govt ,that is where a writer invites criticism —
  all parties have supporters but why are supporters of bjp are called modi bhakts -never could understand this —
  you have written on many other subjects which have nothing to do with politics most of which are interesting to read — you can continue writing such articles —

  • Kamal சொல்கிறார்:

   //all parties have supporters but why are supporters of bjp are called modi bhakts -never could understand this //
   Each party has got thrir own names for their supporters by their behaviour.
   BJP-Bhakts
   Congress-Adimais
   ADMK-Koththadimais
   Not sure about DMK.

 18. LVISS சொல்கிறார்:

  Mr K M in one of the blogs you expressed to know the real Modi Here is a real life story (this is not the only one though ) with a twist —-

  http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-openpage/a-train-journey-and-two-names-to-remember/article6071074.ece

 19. GVS சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  பிஜேபிகாரர்கள் கோபப்படுகிறார்கள் அல்லது
  வருத்தப்படுகிறார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஏன்
  யோசிக்க வேண்டும் ? நீங்கள் ஒரு விமரிசகர்.
  நல்லது என்று தோன்றுவதை பாராட்டுகிறீர்கள்.
  கெட்டது என்று தோன்றும்போது அதைப்போட்டு
  public ஆக உடைக்கிறீர்கள். நீங்கள் செய்வது ஒருவித
  சமூகத்தொண்டு. ஒரு நண்பர் சரியாகவே சொல்லி இருப்பது போல் உங்களுக்கு இதில் hidden agenda எதுவும் இல்லை.
  உங்கள் நோக்கம் உயரியநோக்கம் public cause & social welfare. ஆகையால் எந்தவித யோசனையோ, தயக்கமோ இல்லாமல் நீங்கள் தொடர்ந்து உங்கள் பாணியில் வெளுத்து விளாச வேண்டும் என்பது என் /எங்கள் விருப்பம்.
  பிஜேபிகாரர்கள் இப்போதெல்லாம் அந்தக்கால திராவிட அரசியல்வாதிகளை போல நடந்து கொள்கிறார்கள்.
  குறை சொல்பவர்களை மிரட்டுகிறார்கள். டிவி டிபேட்டுகளில்
  தான் நிறைய பார்க்கிறோமே. உங்கள் வீட்டுக்கு ஆட்டோ
  வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ?
  அப்படி எதாவது இருந்தால் சொல்லுங்கள். இந்த காலத்தில்
  மீடியாவுக்கு அதை எடுத்துச் சென்றால் அவர்கள் கதை கந்தலாகி விடும். அசிங்கப்பட்டு விடுவார்கள்.
  எது எப்படி இருந்தாலும் சரி, நாங்கள் உங்களை வழக்கம்போல்
  யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எழுதும் காவிரிமைந்தனை
  பார்க்கவே விரும்புகிறோம்.
  PLEASE CONTINUE TO WRITE AS USUAL IN YOUR OWN WAY.

 20. VS Balajee சொல்கிறார்:

  Sir
  You should not do this.. kindly write and expose who ever do mistakes to people. I am long time fan of yours and modi fan !

 21. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த இடுகைக்கு பின்னூட்டங்கள் எழுதியிருக்கும்
  அனைத்து நண்பர்களுக்கும் நன்றி…..

  – நான் எழுதப்போவதில்லை என்று
  சொன்னதற்காக மிகவும் மகிழ்ந்து நன்றி தெரிவித்த
  பாஜக நண்பர்களுக்கும் –

  – என் முடிவை மாற்றிக்கொண்டு
  நான், வழக்கம்போல் அனைத்தைப் பற்றியும்
  எழுத வேண்டும்
  என்று வலியுறுத்திய எனதன்பு நண்பர்களுக்கும் –

  -எல்லாருக்கும் சேர்த்து – ஒரே ஒரு விளக்கத்தை மட்டும்
  கொடுத்து விட்டு, அடுத்த நிலைக்கு போக விரும்புகிறேன்.

  ————–

  ” சில நண்பர்கள் அஞ்சியது போல் என் வீட்டுக்கு
  ஆட்டோ எதுவும் வரவில்லை….( இந்த நவீன யுகத்தில்
  வேறு விதமான வழிமுறைகள் இருப்பதாலோ ….! )

  என்னை இதுபோல் எழுதுவதை கைவிடச்சொல்லி
  பலர் அழுத்தம் கொடுத்தார்கள் என்றாலும் –
  அதை பயமுருத்தல் என்று வகைப்படுத்த முடியாது…

  இந்த அழுத்தங்களுக்கெல்லாம் நான் கூறிக்கொள்வது –
  நான் கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்து,
  மதிப்பு கொடுத்து நடப்பவன்.
  என் எழுத்தில் “சுயநலம்” – எதுவும் கிடையாது.
  “பொது நலன் ” மட்டுமே.
  சட்டத்திற்கு புறம்பாக, சட்டவிரோதமாக
  நான் எதையும் எழுதுவதில்லை…
  எனவே வேறு எதற்கும், யாருக்கும் – அஞ்சத் தேவை
  இல்லை என்பது என் நிலை

  எனவே, என் முடிவுக்கு காரணம் –
  பயம் அல்ல, பயமுருத்தலும் அல்ல ….

  வெறுப்பும், வேதனையும், விசனமும் தான் காரணம்.

  புரிபவர்களுக்கு புரியும் – என்ன வேதனையென்று….!
  பாரதி பாடலொன்று நினைவிற்கு வருகிறது.
  அதிலிருந்து சில வரிகள் மட்டும் –

  ————————

  நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
  …..
  …..
  ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குழைத்திகழ்வார்

  ….
  கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
  காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
  பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
  பரிதவித்தே உயிர் துடிதுடித்து
  துஞ்சி மடிகின்றாரே -இவர்
  துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

  நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் –

  எண்ணிலா நோயுடையார்-இவர்
  எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
  கண்ணிலாக் குழந்தைகள்போல்-பிறர்
  காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார்

  நண்ணிய பெருங்கலைகள் – பத்து
  நாலா யிரங் கோடி நயந்துநின்ற
  புண்ணிய நாட்டினிலே -இவர்
  பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார்

  ——————————————–

  நான் மீண்டும் வழக்கம்போல் எழுதவேண்டும் என்று
  விரும்பும் எனதன்புள்ள நண்பர்களுக்கு –

  கொஞ்ச நாட்கள் போகட்டும்…
  என் ரணங்கள் கொஞ்சம் ஆறட்டும்…
  மீண்டும் முன்போலவே,
  முன்னை விடவும் அதிகதெம்புடன்,
  நிச்சயம் எழுதுகிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • selvarajan சொல்கிறார்:

   அய்யா … ! எனக்கு தெரிந்த வகையில் — தொடர்ந்து உங்கள் தளத்தின் வாசகன் என்கிற முறையில் — தாங்கள் முன்பு பதிவிட்ட ஒரு இடுக்கை .. தற்போதைய சூழலில் ” கண்டிப்பாக ” அனைவரும் மீண்டும் படிக்க வேண்டியது அவசியம் …. அந்த இடுக்கை :– // “வலையில் எழுதுவதால் என்ன பயன் ? அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது சாத்தியப்படுமா ?”
   Posted on ஏப்ரல் 3, 2012 by vimarisanam – kavirimainthan //

   • selvarajan சொல்கிறார்:

    மேலே குறிப்பிட்ட இடுகைக்கு தங்களின் பின்னூட்டம் அன்று :— // vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
    5:28 முப இல் ஏப்ரல் 6, 2012
    மகிழ்ச்சியான விஷயம் – அனைத்து நண்பர்களுமே
    நம்பிக்கையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள்.

    வலையெழுத்தால் –
    கொஞ்சமாவது பயன் விளையும்
    என்று தோன்றுகிறது.

    தொடர்ந்து – சேர்ந்து பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே……

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன் //

 22. Srini சொல்கிறார்:

  Respected KM sir,
  Good decision. Its your blog and your decision. Since you communicated that you are stopping, I am appreciating it. Otherwise as readers, we don’t have much option. Whatever be the reason for stopping it, its a good decision. Continue your writing sir. we all came to your blog by getting attracted on your writing skill. Not everyone has got the ability. Humbly requesting you not to get obsessed on a particular view point and over do it. God Bless you sir.

  @LVISS: Sir, Appreciate your persistence till date to boldly defend your views and documenting it, though you were chased out many times. I admit I don’t have that quality in me and I stopped commenting long back. Except you, there were not many who were regularly defending the anti-BJP posts, though it was always mentioned as though a truck load of Modi bakhths put on job to only write comments on this blog. Dont change your views for anyone. Keep reading Vimarisanam blog. KM sir is basically a good person. God bless you and your tribe also.

  • LVISS சொல்கிறார்:

   Mr Srini sir,, Thank you for the kind words — I never thoght my views are read by any one –Mr K M has not blocked any of my comments -On the other hand he gave me a wide space to put across my contrarian views –
   I will continue to be a reader of this blog –

 23. R KARTHIK சொல்கிறார்:

  This comments is not related to this blog.

  Found this URL interesting and wanted to share it with you. Its interesting to know about a great man Mr. Sreedharan.

  https://kaipullai.com/2012/02/24/dr-elattuvalapil-sreedharan-the-bharat-ratna-no-one-talks-about/

 24. தமிழன் சொல்கிறார்:

  உங்கள் அடுத்த இடுகை, ஜெ. அவர்கள், நட்பு வேறு, தமிழக நலன் என்பது வேறு என்று எல்லாப் பிரச்சனைகளிலும் தமிழக நலனை விட்டுக்கொடுக்காமல் இருந்ததையும், ‘நட்பு’ என்ற முகம் காட்டினாலும், மருத்துவமனைக்கு வந்து பார்க்காத ‘சிறந்த நட்பையும்’, தன் கட்சியை விட்டு விலகி இருந்தாலும், 15 வருடங்களாக கூட்டணியில் இல்லாதபோதும், நேரில் வந்து பார்த்த, ராகுல் காந்தியின் மனிதாபிமானத்தைப் பற்றியும், தன்னுடைய வழக்குக்காக, அரசியல் ரீதியாக எதையும் விட்டுத்தராத மாண்பையும் பற்றி, நீங்கள் எழுதத்தான் வேண்டும். அப்படி எழுதும்போது, 200 கோடியில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெயில் திட்டத்தை ஆதரித்தவர்களைப் பற்றியும், 1,76000 கோடியை எண்ணுவதற்காக, தமிழர்கள் நலனைப் பற்றிச் சிந்தியாதவர்களைப் பற்றியும்கூட எழுதவேண்டியிருக்கும்.

 25. Jipsy சொல்கிறார்:

  நீங்கள் எல்லோரையும் பற்றி நடுநிலையாக எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள் இல்லையென்றால் அரசியலை ஒதுக்கிவிட்டு எழுதுங்கள்.

  நான் அரைடவுசர்களை பற்றி எழுதமாட்டேன் சிலருக்கு பிடிக்கவில்லை என்றால் காங்கரஸ் மற்ற கட்சிகளை பற்றி எழுதுவது சிலருக்கு பிடிக்காது அவர்களுக்கு உங்கள் பதில் என்னா?
  எனக்கேன்னோமோ நீங்கள் காக்கி அரைடவுசர் விரைவில் அனியபோகிறிர்கள் என்று நினைக்கிறன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.