இறைவனிடம் ஒரு பிரார்த்தனை …. இவருக்கென்ன அவசரம்…?


வந்தவர் எல்லாம் ஒரு நாள்
போய்ச்சேரத்தான் வேண்டும்.
மனதுக்கு நிச்சயம் அது தெரிகிறது.

ஆனாலும், உனக்கேன் அவசரம்….?
உன்னிடம் நல்லவர்களுக்கா பஞ்சம் …?

இவரையாவது எங்களுக்கு விட்டுக் கொடு….
அதற்குள் அழைத்துக் கொள்ள ஏன் ஆசைப்படுகிறாய்…?
இவரை எங்களிடமிருந்து பிரித்து விடாதே…

இறைவா ……
உன்னிடம் ஒரு வேண்டுகோள் –
– தயவு செய்து விட்டு விடு இவரை –
இப்போதைக்காவது….

இருக்க விடு –
இன்னும் சில வருடங்களாவது இவரை எங்களுடன் …

எத்தனையோ பேரின் பிரார்த்தனைகளை,
எண்ணிலடங்கா முறைகள்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய் …..

இப்போது எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்
இறைவா…

இவர் எங்களுடனே தொடர்ந்து இருக்க –
கருணை காட்டு…

j-j

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இறைவனிடம் ஒரு பிரார்த்தனை …. இவருக்கென்ன அவசரம்…?

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நல்ல உள்ளங்கள் அனைத்தையும்
  விமரிசனம் வலைத்தளத்தின் சார்பில்
  இந்த பிரார்த்தனையில்
  கலந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.

  -வேண்டுதல்களுடன்,
  காவிரிமைந்தன்

  • seshan சொல்கிறார்:

   மூத்த பத்திரிக்கையாலர் சோ.ராமசாமி காலமானார்.
   By DIN | Published on : 07th December 2016 06:09 AM | அ+அ அ- |

   மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.இவர் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மனகான பிறந்தார். சோ ராமசாமி 1934 அக்டோபர் 5-ல் சென்னையில் பிறந்தார்.1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

   இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.

   பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

 2. Surya சொல்கிறார்:

  Jayalalitha has been a great inspiration for many, especially for many ladies in TN.

  Wish her a good health & recovery.

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காலானையே மிரட்டி விரட்டிக்கொண்டிருக்கும் ஒரு இரும்பு பெண்!

  இன்றைய ஆணாதிக்க உலகத்தில் இப்படிப்பட்ட தைரியமிக்க ஒரு பெண் சாதனையாளர் என்றே நினைக்கிறேன்.

  நிச்சயம் நானும் உங்களின் பிரார்த்தனையில் சேர்ந்து இறைவனை இறைஞ்சுகிறேன்.

 4. GVS சொல்கிறார்:

  முதல்வர் ஜெயலலிதா அவர்கள்
  விரைவில் உடல்நலம்பெற வேண்டும்
  உங்கள் பிரார்த்தனையில் நானும் இணைந்து கொள்கிறேன்.

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I have already started praying for her recovery followed by good health and long life. My
  prayer started from 22nd september.

 6. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நானும் சேர்ந்து கொள்கிறேன் உங்களுடன்:

  பூ போன்ற மகள் அப்பல்லோவில்
  படுத்துக் கிடக்கிறாளே என புலம்புதற்கு
  தாய் இல்லை….

  நோய் தீர்ந்து என் மகள் புன்னகை
  சிந்தி வருவாளென பார்த்திருக்கத்
  தந்தை இல்லை…

  தெய்வங்களைக் கேட்டே என் சகோதரி
  நலம் மீட்பேன் என்று பூசை செய்ய
  சகோதரன் இல்லை..

  மாற்றுடை வேண்டுமோ என
  உடுப்புகள் தேடி எடுத்துப் போக
  உடன் பிறந்த தங்கை இல்லை..

  பெற்றவள் நலம் மீட்ட பின்பே
  மற்ற வேலை என்று மார் தட்டிச்
  சொல்வதற்கு மகன் இல்லை..

  மருந்து மாத்திரை தேடி எடுத்து
  மணி தவறாமல் கொடுத்திட
  மகள் இல்லை.. ஆனாலும்

  ஈரெட்டு நாட்களாய் தாய் முகம்
  காணாமல் எத்தனை இதயங்கள்
  இங்கே கண்ணீரில் குளிக்கிறதே..
  கட்டுக்கடங்கா கூட்டம்…

  வாழ வைத்த தாய் வாடிக் கிடக்கலாமோ
  என செந்தனலில் இட்ட புழுவாய்
  தவிக்கிறது தமிழ்நாடு..

  – அம்மா… உங்கள் வருகையை
  எதிர்பார்த்திருக்கும் கோடான கோடி
  இதயங்களில் நானும் ஒருவனாய்! –

  எழுதியவர் யாரோ…
  ஆனால் சமூக வலைத் தளங்களில்
  வைரலாகப் பரவி வருகிறது இந்தக் கவிதை.

 7. Kamal சொல்கிறார்:

  Get well soon CM

 8. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நீங்கள் . நாங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இறைவனிடம் கேட்ட // இவரையாவது எங்களுக்கு விட்டுக் கொடு…. // என்ற பிரார்த்தனை குரலுக்கு ” அவன் சொன்ன பதில் ” — அதெப்படி உங்களிடமே அவரை விட்டு வைப்பது — எங்களோடும் அவர் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ” கங்கணம் கட்டி ” அழைத்துக்கொண்டேன் ….

  இருக்கும்போது தெரியாத அருமையை இனி அனைவரும் அவர் இல்லாத போது — உணர வேண்டும் அல்லவா … ? ” அந்த ” அம்மா மட்டும் ” இப்போது இருந்து இருந்தால் ? -என்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள் — அதுவே — அந்த கேள்வியே அவரின் வாழ்க்கை — வெற்றி எல்லாமும் …

  ஏழு கோடி பேர்கள் இருந்தாலும் — அம்மா இல்லாததால் — அனாதையாக உணர்கிறது — தமிழகம் ….அம்மா நீங்கள் ஒரு என்றும் மறையா — மறக்கா .. சரித்திரம் தான் …

  இறைவன் அழைத்துக் கொண்டதால் — அங்கே வீண் பழி சுமத்தும் கயவர்கள் இல்லை — வழக்கு போடும் பொறாமை பிடித்தவர்கள் இல்லை — வேடதாரிகள் இல்லை … உங்களை அரசியலுக்கு அழைத்து வந்த அந்த உன்னத மனிதரின் — அருகிலேயே — வங்கக்கடலோரம் — நிம்மதியாய் — நீங்கள் உறங்க சென்றாலும் — உங்களின் ஆன்மா மட்டும் — இந்தநாட்டை — இந்த தமிழக மக்களை –சுற்றியே — வந்துக் கொண்டுதான் இருக்கும் என்பது தான் உண்மை — போய் வா … எங்களின் தாயே … அம்மா … ! அம்மா … அம்மா …. !!!

 9. தமிழன் சொல்கிறார்:

  கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்… சென்று வாருங்கள்

  ஜெ.வின் சிறப்பென்ன? யார்க்கும் அடிபணிந்ததில்லை.(தமிழக உரிமைகள் எதற்கும் சட்டத்தின்வாயிலாகத் தீர்ப்பைப் பெற்றுத்தந்துள்ளார் அல்லது சட்டப்போராட்டம் நடத்தியுள்ளார். தன்னுடைய சொத்துக்கும் தொழிலுக்கும் பங்கம் வரக்கூடாது என்று தமிழகத்தின், தமிழர்களின் நலனை விட்டுக்கொடுத்ததில்லை) சட்டத்தின் மாட்சிமைப்படியே ஆட்சி செய்துள்ளார் (நீதிபதிகள் விஷயத்தில் தலையிட்டதில்லை. இதை நீதிபதிகளும், உச்ச’நீதிமன்ற நீதிபதிகளும் வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்) கட்டைப் பஞ்சாயத்துகள் நடைபெற்றதில்லை.(எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் அதிமுக அமைச்சர்கள் குற்றவாளிகள் சார்பாகச் செல்லமுடியாது) அடுத்தவரின் தொழில்களில் மூக்கை நுழைத்து அரசியல் செய்ததில்லை (திரைப்படத் துறையினரைக் கேட்டால் தெரியும்). அதிமுக என்ற மக்களின் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று, தன்னுடைய திறமையினால் தமிழர்கள் நலம் பெறவும், மானிலத்தின் நலத்திற்காகவும் உழைத்துள்ளார். இதில் சொந்த நலன் என்பது எப்போதும் இருந்ததில்லை. மோடி அவர்களிடம் மதிப்பும் நட்பும் (குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து) கொண்டிருந்தபோதும், அது அரசியல் வாழ்க்கையில் குறுக்கிடாமல் பேலன்ஸுடன் ஆட்சிபுரிந்தவர் அவர். தனது தனித் திறமையால், எம்ஜியார் ஆரம்பித்த இயக்கத்தைக் கட்டிக் காத்தது மட்டுமல்ல, அதனை மேலும் வளர்த்து, தன் சொந்தத் திறமையினால் (மற்ற கட்சிகளிடம் கூட்டணி வைத்து அல்ல) இந்த நிலைமையில் விட்டுச் செல்கிறார். அவருடைய தைரியமும், சாதாரண மக்களிடம் இருந்த கனிவும் எப்போதும் நம் மனதில் மறையாது. எம்ஜியார் அவர்களின் இயக்கத்திற்கு சரியான நபரைத்தான் அவர் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் என்ற நம்பிக்கை அதிமுகவிடம் மட்டுமல்ல, பொதுமக்களிடம் விதைத்திருந்ததே ஜெ.வின் சாதனை. மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எல்லோரையும் கவர்ந்தவர். என்னைப் பொறுத்தவரையில் அவரின் மிகப் பெரிய ஆளுமை, சொந்த நலனுக்காக மானில நலனையோ, மக்களின் நலனையோ அடகு வைக்காதது. தன்னுடைய நலனுக்காக, மத்திய அரசிடம் கையேந்தாது. நட்பு வேறு, தமிழக நலன்/தன்னுடைய பொறுப்பு வேறு என்று கடைசி வரை வாழ்ந்தது. வரலாறு இந்தக் காரணங்களுக்காக அவரை நினைவுகூறும்.

  சென்று வாருங்கள்… ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’ என்று நீங்கள் முழங்கியதை, அதுவும் தன்னந்தனியாக முழங்கியதை, மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான், உங்களுக்கு 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஆட்சிப் பொறுப்பையும் அளித்தார்கள். எம்ஜியார்கூடப் பெறாத அளவு பாராளுமன்ற உறுப்பினர்ளைக் கொடுத்ததற்கும், எம்ஜியாருக்குக் கொடுத்த அதே கௌரவமான, தொடர்ந்து தமிழக ஆட்சிப் பொறுப்பை அளித்ததற்கும், தமிழக மக்கள் உங்கள் முழக்கத்தை ஏற்றுக்கொண்டதுதான் முழுமுதல் காரணம் என்ற மன’நிறைவோடு சென்று வாருங்கள்.

  கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம். உங்கள் இயக்கம் தகுந்த தலைமையில், மக்கள் நலன் கருதிச் செயல்படவேண்டுமே என்ற கவலை இருந்தாலும்…. காலம் தகுந்த பதில் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு… உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.