சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….

”’

”’

சென்று “உன் அம்மா”வுடன்
சேர்ந்து கொஞ்ச நாட்கள்
நிம்மதியாக இரு “அம்மா”….

jj-1

jj-2

jayalalitha-in-school-uniform-church-convent

jj-school-2

jayalalitha-with-mother-2

jj-young

——————————————————————-
நினைவுரைகள் –
——————————

குறைகள் இல்லாத மனிதர் யார்…?
நிறைகள் போதுமே என்றும் நினைவில் வைக்க –

——————

எத்தனையோ ஆண் சிங்கங்கள் நடமாடும்
அரசியல் காட்டுக்குள் –

ஒற்றை சிங்கமாக உள்ளே நுழைந்து
தன்னந்தனியே போராடி வென்று,
பல ஆண்டுகள் ராஜ தர்பார் நடத்தியவர் –

வென்றாலும், வீழ்ந்தாலும்,
மீண்டும் எழுந்து வீரநடை போட்டு
எல்லாரையும் அதிரவைத்த அந்த
அசாத்தியம் தைரியத்தை –

இன்றைய ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்
கொள்ள வேண்டும்

சம காலத்தில் வாழ்ந்த
இதைவிட சிறந்த சாதனைப் பெண்மணி
வேறு யாருமில்லை

நெருப்பின் ஊடே நிகழ்ந்த
நெடும் வெற்றிப்பயணம்
அந்த நெருப்பு பயணத்தை நினைவில்
வைத்துக் கொண்டால் போதும்

ஒவ்வொரு பெண்ணும்
ஓராயிரம் கஷ்டங்கள் வந்தாலும்
தாங்கும் பலம் தன்னாலே பெற்று விடுவார்கள்.

சொன்னால் சொன்னது தான் –
சொன்ன வார்த்தையில் மாற்றமில்லை

முன்வைத்த காலை
பின் வைத்ததுமில்லை

எவர் வீட்டு வாசலிலும்
இறைஞ்சி நீ நின்றதில்லை

எவருக்காகவும், எதற்காகவும்
எங்கேயும் –
காத்திருந்ததுமில்லை

யாருக்கு உண்டு உன் குணங்கள்…?

– நீ இருக்கும்போது தெரியாத அருமையை
இனி இல்லாத போது உணரும் தமிழகம் …

உன்னைச் சுற்றிலும் இனி

கயவர்கள் இல்லை
வேடதாரிகள் இல்லை
கபட நாடகங்கள் இல்லை
வழக்குகள் இல்லை –
தேர்தல்கள் இல்லை –
வெற்றி, தோல்விகள் இல்லை –

உன் அன்னையின் அன்பு மட்டுமே
உன்னுடன் இருக்க நிம்மதியாக உறங்கு அம்மா….!

அன்புடன்,
-காவிரிமைந்தன் –

——————————————————————-

இருக்கும்போது தெரியாத அருமையை
இனி அனைவரும் அவர் இல்லாத போது —
உணர வேண்டும் அல்லவா … ?
” அந்த ” அம்மா மட்டும் ” இப்போது இருந்து இருந்தால் ?

-என்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள் —
அதுவே — அந்த கேள்வியே அவரின் வாழ்க்கை —
வெற்றி எல்லாமும் …

ஏழு கோடி பேர்கள் இருந்தாலும் —
அம்மா இல்லாததால் —
அனாதையாக உணர்கிறது — தமிழகம் ….
அம்மா நீங்கள் ஒரு என்றும் மறையா — மறக்கா ..
சரித்திரம் தான் …

இறைவன் அழைத்துக் கொண்டதால் —
அங்கே வீண் பழி சுமத்தும் கயவர்கள் இல்லை —
வழக்கு போடும் பொறாமை பிடித்தவர்கள் இல்லை —

வேடதாரிகள் இல்லை … உங்களை அரசியலுக்கு
அழைத்து வந்த அந்த உன்னத மனிதரின் —
அருகிலேயே — வங்கக்கடலோரம் — நிம்மதியாய் —
நீங்கள் உறங்க சென்றாலும் — உங்களின்
ஆன்மா மட்டும் — இந்தநாட்டை —
இந்த தமிழக மக்களை –சுற்றியே — வந்துக் கொண்டுதான்

இருக்கும் என்பது தான் உண்மை — போய் வா …
எங்களின் தாயே … அம்மா … ! அம்மா … அம்மா …. !!!

-செல்வராஜன்

———————————————————–

கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்…
சென்று வாருங்கள்

ஜெ.வின் சிறப்பென்ன? யார்க்கும் அடிபணிந்ததில்லை.
(தமிழக உரிமைகள் எதற்கும் சட்டத்தின்வாயிலாகத்
தீர்ப்பைப் பெற்றுத்தந்துள்ளார் அல்லது சட்டப்போராட்டம்

நடத்தியுள்ளார். தன்னுடைய சொத்துக்கும்
தொழிலுக்கும் பங்கம் வரக்கூடாது என்று தமிழகத்தின்,

தமிழர்களின் நலனை விட்டுக்கொடுத்ததில்லை)

சட்டத்தின் மாட்சிமைப்படியே ஆட்சி செய்துள்ளார்
(நீதிபதிகள் விஷயத்தில் தலையிட்டதில்லை.
இதை நீதிபதிகளும், உச்ச’நீதிமன்ற நீதிபதிகளும்
வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்)

கட்டைப் பஞ்சாயத்துகள் நடைபெற்றதில்லை.
(எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் அதிமுக அமைச்சர்கள்
குற்றவாளிகள் சார்பாகச் செல்லமுடியாது)
அடுத்தவரின் தொழில்களில் மூக்கை நுழைத்து
அரசியல் செய்ததில்லை (திரைப்படத் துறையினரைக்
கேட்டால் தெரியும்).

அதிமுக என்ற மக்களின் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று,
தன்னுடைய திறமையினால் தமிழர்கள் நலம் பெறவும்,
மானிலத்தின் நலத்திற்காகவும் உழைத்துள்ளார்.

இதில் சொந்த நலன் என்பது எப்போதும் இருந்ததில்லை.
மோடி அவர்களிடம் மதிப்பும் நட்பும் (குஜராத் முதல்வராக
இருந்த போதிலிருந்து) கொண்டிருந்தபோதும்,
அது அரசியல் வாழ்க்கையில் குறுக்கிடாமல்
பேலன்ஸுடன் ஆட்சிபுரிந்தவர் அவர். தனது தனித்
திறமையால், எம்ஜியார் ஆரம்பித்த இயக்கத்தைக்
கட்டிக் காத்தது மட்டுமல்ல, அதனை மேலும் வளர்த்து,
தன் சொந்தத் திறமையினால்
(மற்ற கட்சிகளிடம் கூட்டணி வைத்து அல்ல)

இந்த நிலைமையில் விட்டுச் செல்கிறார். அவருடைய
தைரியமும், சாதாரண மக்களிடம் இருந்த கனிவும்
எப்போதும் நம் மனதில் மறையாது.

எம்ஜியார் அவர்களின் இயக்கத்திற்கு சரியான
நபரைத்தான் அவர் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்
என்ற நம்பிக்கை அதிமுகவிடம் மட்டுமல்ல,
பொதுமக்களிடம் விதைத்திருந்ததே ஜெ.வின் சாதனை.
மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எல்லோரையும்
கவர்ந்தவர்.

என்னைப் பொறுத்தவரையில் அவரின் மிகப்
பெரிய ஆளுமை, சொந்த நலனுக்காக மானில
நலனையோ, மக்களின் நலனையோ அடகு வைக்காதது.

தன்னுடைய நலனுக்காக, மத்திய அரசிடம் கையேந்தாது.
நட்பு வேறு, தமிழக நலன்/தன்னுடைய பொறுப்பு வேறு
என்று கடைசி வரை வாழ்ந்தது. வரலாறு இந்தக்
காரணங்களுக்காக அவரை நினைவுகூறும்.

சென்று வாருங்கள்… ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’
என்று நீங்கள் முழங்கியதை, அதுவும் தன்னந்தனியாக
முழங்கியதை, மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான்,

உங்களுக்கு 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும்,
மீண்டும் ஆட்சிப் பொறுப்பையும் அளித்தார்கள்.

எம்ஜியார்கூடப் பெறாத அளவு பாராளுமன்ற
உறுப்பினர்ளைக் கொடுத்ததற்கும், எம்ஜியாருக்குக்
கொடுத்த அதே கௌரவமான, தொடர்ந்து தமிழக ஆட்சிப்
பொறுப்பை அளித்ததற்கும், தமிழக மக்கள் உங்கள்
முழக்கத்தை ஏற்றுக்கொண்டதுதான் முழுமுதல் காரணம்
என்ற மன’நிறைவோடு சென்று வாருங்கள்.

கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.
உங்கள் இயக்கம் தகுந்த தலைமையில், மக்கள் நலன்
கருதிச் செயல்படவேண்டுமே என்ற கவலை இருந்தாலும்….
காலம் தகுந்த பதில் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு…

உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறோம்.

– தமிழன்

—————————————————–

பின் குறிப்பு –

நினைவுரையில் சேர விரும்பும் மற்ற நண்பர்களும்
பின்னூட்டங்களின் மூலம் சேர்ந்து கொள்ளலாம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to சென்று “உன் அம்மா”வுடன் சேர்ந்து கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இரு “அம்மா”….

 1. LVISS சொல்கிறார்:

  Tamil Nadu has lost a great true leader –She is one of the best administrators the country has seen -Though born in a rich family she knew what the poor people of the state required — She has given many pro poor schemes –Her Amma Cabteen will give her eternal fame — She was fiercely independent and unbelievingly bold —

 2. LVISS சொல்கிறார்:

  She was an excellent performer –She has acted in a movie direted by CHO Yarukkum Vetkamilai –
  She has also written some articles in Tughlak –One striking thing about her is that though she was from the cine field she did not depend on the Kollywood stars for her campaign —

 3. kayshree சொல்கிறார்:

  that is an excellent article………hats off to you all…fotos are too good to be remembered for ever !

 4. Ganesan சொல்கிறார்:

  “‘சொன்னால் சொன்னது தான் –
  சொன்ன வார்த்தையில் மாற்றமில்லை
  முன்வைத்த காலை
  பின் வைத்ததுமில்லை
  எவர் வீட்டு வாசலிலும்
  இறைஞ்சி நீ நின்றதில்லை
  எவருக்காகவும், எதற்காகவும்
  எங்கேயும் –
  காத்திருந்ததுமில்லை”‘ உண்மை.
  “‘இருக்கும்போது தெரியாத அருமையை
  இனி அனைவரும் அவர் இல்லாத போது —
  உணர வேண்டும் அல்லவா … ?
  ” அந்த ” அம்மா மட்டும் ” இப்போது இருந்து இருந்தால் ?
  -என்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள் —
  அதுவே — அந்த கேள்வியே அவரின் வாழ்க்கை —
  வெற்றி எல்லாமும் “‘ உண்மை.

 5. maniam24 சொல்கிறார்:

  வஞ்சனை கள் செய்து வா ய் ச் சொல் வீரர் களிடம்(??) தமிழகத்தை காப் பாற்றி ய தாய்க்கு செய்யயவேண்டியெ கடமை் அவர் வழி யில் ஆட்சி செய்து தமிழகத்தை முதல்மா நிலமாக முன்னேற்ற வேண்டும்

 6. srinivasanmurugesan சொல்கிறார்:

  [12/6, 8:34 AM] ‪+91 91502 06720‬: *Jayalalitha’s daring speech in 1999 given to a English channel.*
  *A question was posed to her. Tell us about your personal life, as the rumou rs stick on every corners of your life?*
  *She boldly answered, ” I was a failure in my personal life.My life is a open book. Everyone loves MGR ,even I did. But I was not accepted in a legal relationship. That made a fire in my mind to make an identity for myself. I would always feel that if my mother was alive in my crucial hours ,my personal life would have been more better than this. But I want to prove that Dr.MGR is my identity. So I entered the politics. An Indian tradition is that a girl is born as a daughter, then a wife and should die as a mother. I couldn’t achieve myself as a wife. But I will definitely die as a mother”.*
  *This is the bold answer given by the lady.*
  [12/6, 8:35 AM] ‪+91 91502 06720‬: HATSOFF….. Congrats Dr. and his Team…..
  [12/6, 8:37 AM] ‪+91 91502 06720‬: வாழ்த்துக்கள்…..💐💐💐
  குமராட்சி ஒன்றியம்
  [12/6, 8:40 AM] Kumaresan Natanasabesan: Thanks
  [12/6, 8:45 AM] ‪+91 91502 06720‬: *சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தில் மோட்ச தீபம் நான்கு கோபுரங்களிலும் ஏற்றபட்டது*

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டி நடராஜர் கோவிலில் உள்ள நான்கு கோபுரத்திலும் 6-12-2016 அன்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

  நடராஜர் கோவிலில் நான்கு கோபுரத்திலும் ஒரு கோபுரத்திற்கு 15 கிலோ எண்ணையுடன் 4 கோபுரத்திற்கும் 60 கிலோ எண்ணையுடன் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

  பின்பு நடராஜருக்கு 15 கிலோ நெய்தீபம் சன்னதியில் ஏற்றப்பட்டது.

  தொடர்ந்து மூன்று நாட்கள் மோட்சதீபம், மற்றும் ஸ்ரீநடராஜர் சபையில் 10 முகம் கொண்ட நெய்தீபம் மூன்று நாட்கள் ஏற்றபடும் என பொது தீட்ஷீதர் முன்னாள் செயலாளர் பாஸ்கர் தீட்ஷீதர் தெரிவித்தார்.
  [12/6, 8:45 AM] Kumaresan Natanasabesan: Thanks
  [12/6, 8:48 AM] ‪+91 91502 06720‬: I am very shocked in a pleasant way and for this particular reason I want to appreciate the entire ADMK cadre and the common public – Absolutely no violence for the most influential leaders. I think other cities should learn from Chennai to remain calm and composed. Understand that she was in hospital for 70+ days etc…still its a great display of character by the TN people , unlike many other cities that create public nuisance for trivial things…
  Without military, para forces , 144, lathi charges…this is a historical funeral procession…Hats off.
  One more surprise no communication was sent to any non govt bodies to shut down….only schools and colleges…yet 100% of the business men including that being owned by opposition parties came forward and shut down business…great tribute to the leader and just like last year TN is displaying a great character and civic sense.
  Big Salute to the Tamil Nadu Govt for planning this and executing it so beautifully .. The Tamil Nadu police needs a big cheer for maintaining order for an event that is actually unmanageable .. Finally, the calmness and the composure shown by the AIADMK MLAs and MPs as they marched down sombrely along.. impressive show…. Amma would have been proud .. The spirit of the Tamilian is yet again in full force,like last

  Forwarded post!! From my what’s App

 7. Karthik சொல்கிறார்:

  No Words to record here. She is ultimatum. Being from Andipatti, we all love MGR and Amma in every place and every action. I cant control my tears everytime i cross the newschannel, newspaper and blogposts. I thought i was tough heart, but i am not.
  It is big loss to Tamil Nadu, India and whole world. it is not an emotional statement. It is fact.

  Today another shock news, Cho sir passed away. Oh my god. Good people are leaving earth. What is happening. December is really painful month last few years.

  God,Pl give strength to TN people and new TN rulers to continue the Amma Legacy & ” Do Right, Fear Nobody”.

 8. Vgcsekaran சொல்கிறார்:

  A tribute to Amma from my daughter though she is far enough from current politics but she wrote this. This is how Amma inspired everyone especially girl children.
  The tree which fed thousand of life which sheltered thousand of life..
  Has dried yesterday 5/12/2016…
  The tree gave everything needed for us without caring about her….
  But at last took the hope of us as cost….
  The tree was soaked in flood last year…
  But it is soaked with the drops of millions of eye this year…
  The tree bloomed daily to feed people with tasty fruits…
  But not to make another tree of its own….
  The axe of the bad couldn’t do anything but it was the sacrifice of her own that led to yard….
  Though the tree dried it was used as wood which gave the warm inspiration as it burned….
  May her soul rest in peace…..

 9. selvarajan சொல்கிறார்:

  ஏ … டிசம்பர் மாதமே … உனக்கு என்ன கோபம் இந்த ” தமிழகத்தின் ” மீது .. ஏன் இந்த ஆக்ரோஷம் … உன்னை ஆண்டின் கடைசி மாதமாக ஆகியவர்களின் மீது காட்ட வேண்டிய வெறுப்பை — எங்கள் மீது ஏன் காட்டுகிறாய் … ?

  1972 டிசம்பர் 25 .. முதல் கவர்னர் ஜெனரல் — திரு .ராஜாஜி அவர்களை இழந்தோம் …
  1973 டிசம்பர் 24 .. தந்தை பெரியார் அவர்களை இழந்தோம் …
  1987 டிசம்பர் 24 .. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை இழந்தோம் …
  2004 டிசம்பர் 26 .. சுனாமியால் பல உயிர்களை பிரித்தாய் …
  2011 டிசம்பர் 30 .. தானே புயலை வீசி பலரை பலிகொண்டாய் ….
  2015 டிசம்பர் 01 .. பெரு வெள்ளத்தினால் பல சேதங்களை உருவாக்கினாய் …
  2016 டிசம்பர் 05 .. தமிழகத்தின் ” அம்மா ” செல்வி ஜெயலலிதாவை எங்களிடம் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டாய் … அப்படியும் உன் வேட்கை அடங்காமல் …
  2016 டிசம்பர் 07 .. இன்று வழக்குரைஞர் — நடிகர் — தேர்ந்த பத்திரிக்கையாளர் –அரசியல் விமர்சகர் — அரசியல் ஆலோசகர் என்று பல விதங்களிலும் கோலோச்சிய — திரு .சோ . அவர்களையும் — கொண்டு சென்றுவிட்டாய் … இன்னும் என்னென்ன உயிர்குடிக்கும் எண்ணத்தோடு –அடாவடிகளையும் — அட்டகாசங்களையும் — அரங்கேற்ற போகிறாயோ..? டிசம்பர் என்றாலே … ” திகில் ” … தானோ … ?

  உன்னத ” தலைவிக்கு ” இரங்கற்பா பாடி ஓய்வதற்குள்– இன்னமொரு இடியாய் திரு .சோ . அவர்களின் மறைவு …

  ஜெயாவின் மீது பற்றும் — பாசமும் கொண்டு தக்க தருணங்களில் அரசியல் ஆலோசனைகளை அளித்து — ஜெயாவின் 60 – ம் ஆண்டு நிறைவின் போது அவருக்கு ஆசீர்வாதம் அளித்த – என்றும் அவருக்கு உரு துணையாய் இருந்தது போதாது என்று — அவர் மறைந்த இரண்டே நாட்களில் — அங்கேயும் அவருக்கு துணையாக சென்று விட்டாரோ … திரு சோ அவர்கள் …?

  இவர்களில் யாரை – எப்போது நினைத்தாலும் — மற்றவர்களின் நினைவும் வந்தே தீரும் என்பது தான் — விதியின் விளையாட்டு போலும் … அனைவரின் ஆன்மாக்களும் சாந்தியடைய – அஞ்சலி செலுத்துவோமாக … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   பல சமயங்களில் நமது எண்ணங்கள் ஒரே திசையில்
   செல்கின்றன என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
   நான் கிட்டத்தட்ட எழுதியிருந்த நிலையில் –
   நீங்களும் அதே கோணத்தில் யோசித்திருப்பதை பார்க்கிறேன்.

   உயர்ந்த மனிதர்கள் ஒவ்வொருவராக போய்க்கொண்டே
   இருக்கின்றனர்….வருத்தமாக இருக்கிறது.

   கிட்டத்தட்ட இது oneway traffic ஆக இருப்பது தான்
   துயரமளிக்கும் விஷயம். புதிதாக இவர்களைப் போன்ற
   சிறந்த மனிதர்களே உருவாகக் காணோமே….
   இந்த உலகமே முழுவதுமாக சுயநலவாதிகளின்
   வசிப்பிடம் ஆகிவிடும் போலிருக்கிறதே…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 10. gopalasamy சொல்கிறார்:

  I lost interest totally in Tamilnaadu politics as my favourite phenomenal personalities Jaya and Cho
  are no more. I could not control my grief.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.