அந்த புண்ணியமும் போகட்டும் அவருக்கே…..!!!

தங்கள் அன்பிற்குரிய தலைவரின் இறப்பு செய்தியைக்
கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த தமிழக மக்கள்,
லட்சக்கணக்கில் சென்னையில் கூடினர்.

அடுத்து என்ன ஆகுமோ, கலவரம் மூளுமோ
என்கிற அச்சத்தில் பலர்.

பஸ், ரெயில், ஆட்டோ, டாக்சி,
பிற போக்குவரத்து சாதனங்கள் –
பெரிய, சிறிய கடைகள்,
பெரிய, சிறிய – உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு
செயலிழந்து விட்ட நேரத்தில் –

மூன்று இடங்களில் மக்கள் வெள்ளம் –

மக்களின் இறுதி தரிசனத்திற்காக ஜெ.அவர்களின் உடல்
வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபம்,

அடுத்து இறுதி ஊர்வலம் சென்ற பாதை நெடுகிலும்,

அடுத்து – ஜெ.அவர்கள் இறுதியாக துயில் கொள்ள
அமைக்கப்படவிருந்த எம்ஜிஆர் நினைவிடம் –

முக்கியமாக ராஜாஜி மண்டபத்தில் எப்படியாவது
கொடுக்கப்பட்டுள்ள குறுகிய அவகாசத்துக்குள்
பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்து திரண்ட
மக்கள் வெள்ளம் –

நேரடியாக செய்தியைத் தர
அகில இந்தியாவிலிருந்தும் திரண்டு வந்திருந்த
மீடியாக்கள், தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்கள் –

ஜெயலலிதா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த
பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள்,
அரசியல் கட்சித்தலைவர்கள்,
ஒன்பது மாநிலங்களிலிருந்து முதல்வர்கள்,
பல மத்திய அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர்….

இத்தனை பேர் எதிரிலும் தான் மக்கள் தங்கள்
தலைவரை இறுதியாக தரிசித்துக் கொள்ள முந்தினர்.

அத்தனை பேரும் அச்சப்பட்டாலும்,
மீடியாக்கள் செய்தி நிறுவனங்கள் எதிர்பார்த்தாலும்,

ஒரு சின்னஞ்சிறிய அசம்பாவிதம் கூட நிகழாமல்,
மிக அற்புதமான முறையில் அமைதியாகவும்,
கண்ணியமாகவும் இறுதி ஊர்வலமமும், அதன் பின்னர்
அடக்கமும் நிகழ்ந்தன.

இந்த மாயம், அதிசயம் எப்படி நிகழ்ந்தது….?

பசி நோக்காமல், கண் துஞ்சாமல் என்று சொல்வார்களே
அது போல், தமிழக காவல்துறையைச் சேர்ந்த
உயர் அதிகாரிகளிலிருந்து, கடைசி மட்ட காவலர் வரை
( ஆயிரக்கணக்கான பெண்களும்,
தீயணைப்பு படையினரும் இதில் சேர்த்தி )
முழு ஈடுபாட்டுடன், பொறுமை காத்து,
தங்கள் கடமையை செய்தது முதல் காரணம்….

அனைத்து இடங்களிலும் மிக மிக விரைவாகவும்,
மிக நேர்த்தியாகவும் செயல் பட்ட தமிழக
பொதுப்பணித்துறை, மற்றும் அனைத்து நிர்வாகப்
பிரிவினரும் – அடுத்த காரணம்.

கூடவே, இத்தனை பெரிய சோக நிகழ்விலும்,
எந்தவித வன்முறை நிகழ்ச்சிகளுக்கும் இடம் கொடாமல்
உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலும், மிகக் கட்டுப்பாடுடன்
நடந்து கொண்டு, அகில இந்தியாவும் தமிழகத்தை
வியந்து நோக்கும் விதத்தில்

கண்ணியமான முறையில் தங்கள் சோகத்தை
வெளிப்படுத்திய தமிழக மக்கள் அனைவருமே –
இதற்கான வெகு முக்கிய காரணம்….!!!
தமிழக மக்கள் எப்போதும் இந்த கண்ணியத்தை,
இந்த பண்பினை காத்திட முன்வர வேண்டும்.

நான் இது குறித்து ஒரு இடுகை எழுத முனைந்தபோது,
தமிழக கவர்னரிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்திருக்கிறது.

தமிழ் நாடு காவல்துறையும், அனைத்து இதர
துறைகளும், வெகு சிறப்பாக பணியாற்றி,
இந்த நிகழ்வில் பெருமை தரும் விதத்தில்
பணியாற்றியதாக கவர்னர் அவர்கள்
தமிழக காவல்துறை தலைவருக்கும், முதன்மை
செயலாளருக்கும் தனித்தனியே கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழக மக்களையும் அவர் பாராட்டி இருக்கிறார்.

இத்தகைய ஒரு பாராட்டை வெளிப்படையாகத்
தெரிவிக்க வேண்டும் என்று உணர்வுபூர்வமாக
நினைத்து, அதனை வெளிப்படுத்திய கவர்னர் வித்யா சாகர்
ராவ் அவர்களுக்கு நாமும் நமது பாராட்டுக்களை
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

———————–

கூடவே – கவர்னர் அவர்கள் கூறாமல் விட்ட
இன்னுமொரு விஷயத்தையும் நான் இங்கு பதிவு செய்ய
விரும்புகிறேன்.

chennai-shuts-2

மணிக்கணக்காக காத்திருந்த மக்கள்
குடிநீருக்கும், உணவுக்கும் பரிதவித்த நேரத்தில் –

சென்னையில் 350 “அம்மா உணவகங்கள்” துடிப்புடன்
செயல்பட்டு, வந்தவர்களுக்கெல்லாம் –
காசு எதுவும் வாங்காமல் –
உணவு அளித்த அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது.

சாதாரணமாக நமது பண்பாட்டில், எந்த வீட்டிலாவது
இறப்பு நேர்ந்தால், அந்த வீட்டில் அன்றைக்கு
சமைக்க மாட்டார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள்
தங்கள் இல்லத்தில் எதாவது சமைத்து துக்கத்தில்
பங்கேற்க வந்தவர்கள் பசியாற வழி செய்வார்கள்.

அன்றைக்கு அம்மாவின் இறப்பிற்காக வந்திருந்த
மக்களுக்கு – பசிக்கு உணவளிக்க
இயங்கிய இத்தனை அம்மா உணவகங்களும்
உருவாகக் காரணமாக இருந்தவர் யார்…?
அன்றைய அம்மா உணவக செலவு முழுவதும்
அரசே பொறுப்பேற்க வழி ஏற்பட்டது எப்படி…?

இறந்து போனவரே – தன் இறப்பிற்காக வந்தவர்களுக்கு,
இங்கு உணவளிப்பவராகவும் மாறிய விந்தையை

எண்ணிப்பார்த்தால் அதிசயமாக இல்லை…?

இந்த அதி முக்கிய தேவையை,
கூடவிருக்கும் லட்சக்கணக்கான மக்களின்
உணவுத்தேவையை – முன்கூட்டியே யோசித்து,
அதற்கான ஏற்பாடுகளை மின்னல் வேகத்தில் செய்து
முடிக்க காரணம் யாரோ – அந்த பெயர் தெரியாத
அதிகாரிக்கும், அவரது குழுவினருக்கும்
நமது உள்ளம் நிறைந்த பாராட்டுகள்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to அந்த புண்ணியமும் போகட்டும் அவருக்கே…..!!!

 1. தமிழன் சொல்கிறார்:

  பாராட்டத்தக்கதை உடனே பாராட்டி எழுதியது சிறப்பு. எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் ஜெ வின் இறுதி யாத்திரை நடந்தது வெகு சிறப்பு. ராஜாஜி மண்டபத்தில் கடைசி 1 மணி நேரத்துக்கும் குறைவாக, அதிமுக்கியப் பிரமுகர்கள் வரும் வழி, ஆவலுடன் காத்திருந்த மக்களும் கலந்ததனால் சிறிது குலைந்தது. எந்த விதமான சிறு சலனமும், ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிப் பிரமுகர்களிடம் காணப்படவில்லை (அவர் கோஷ்டி, இவர் கோஷ்டி என்று). இதுவே அதிமுகவை எம்ஜியாரைவிடப் பல வருடங்களுக்குக் கட்டிக்காத்த ஜெவுக்குச் செய்த மரியாதை. அம்மா கேன்டீனில் இலவச உணவு வி’நியோகத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சிந்தித்துச் செய்தவர்(கள்) வாழ்க. மறைந்த தலைவருக்குப் பெருமை சேர்க்கும்படியாகக் கடைசி நாளை நடத்திய அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

 2. D. Chandramouli சொல்கிறார்:

  Excellent arrangements indeed. The icing on the cake was the free food provided in Amma Unavagam. Kudos to all concerned.

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  great,salute

 4. Sundar Raman சொல்கிறார்:

  Great Sir , A Big Namaskarams to every one .

 5. LVISS சொல்கிறார்:

  Every body is fullof praise for the Police and other departments which conducted the whole thing smoothly-It also goes to the credit of the state people who expressed their sorrow in a dignified way — Some times I used to think whether these people had any refreshments between their arduous work —
  After the rains last year the state had again demonstarated its compassionate side by Amma canteen providing food to people who came there —

 6. M.Syed சொல்கிறார்:

  இதனுடன் சம்பந்தப்பட்ட செய்தி . இவர்களுக்கும் நாம் நன்றி சொல்லுவோம்.

  M.செய்யது
  Dubai

  ஜெயலலிதா மறைவு நாளன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு குடிநீர், உணவு: தமுமுக அமைப்பினரின் மனிதநேயம்

  ஜெயலலிதா மறைவு நாளன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு குடிநீர், உணவு: தமுமுக அமைப்பினரின் மனிதநேயம்

  முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கம் மற்றும் அதைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று குடிநீர், உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

  தலைவர்கள் மரணம், கடை யடைப்பு, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், தேசிய தலைவர் கள் பங்கேற்கும் மாநாடுகள் என்றாலே பாதுகாப்பு பணி என்ற பெயரில் சில தினங்களுக்கு போலீஸார் சாலையில் நிற்க வேண்டியிருக்கும். அவர்கள் பெரும்பாலும் வெளியூரிலிருந்து அழைக்கப்பட்டிருப்பர். அவர் களுக்கு நேரத்துக்கு உணவு, தேவையான குடிநீர் கிடைப்ப தில்லை. அதிலும் முழு கடை யடைப்பு, தலைவர்கள் மரணம் போன்ற சூழல்களில் உணவகங் கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் போது எதுவும் கிடைப்பதில்லை.

  ஓய்வு இல்லாத பணி, மேலதிகாரிகளின் அழுத்தம், நேரத்துக்கு உணவு கிடைக் காத சூழல் போன்ற காரணங் களால் போலீஸார் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை நிர்வாகமும் சரி, பொது மக்கள் தரப்பிலும் சரி, அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

  இந்நிலையில் நேற்று முன் தினம், ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப் பட்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீஸா ருக்கு, அவர்களின் நிலையைப் புரிந்துக் கொண்டு, மனித நேயத்தோடு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போலீஸாருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இது போலீஸார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமுமுகவின் இந்த மனிதநேய பணியை அனைத்து போலீஸாரும் பாராட்டினர்.

  இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறும்போது, இதுபோன்ற அசாதாரண சூழல் களில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களும், போலீஸாரும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை முடிந்தவரை செய்யுமாறு எங்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

  அதன் அடிப்படையில் நேற்று போலீஸார் மற்றும் பொதுமக் களுக்கு 30 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுமட்டுமல்லாது, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் ரயிலை தவறவிட்ட பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இதற்காக ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டது என்றார்.

  thank to http://tamil.thehindu.com

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது எதிர்பார்க்க்காதது – பிரமிப்பை தருகிறது….

  தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்…
  நீங்களும் பாருங்கள்….
  ஜெயலலிதா அவர்கள் மீளாத் துயில் கொள்ளும் இடத்திற்கு
  அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துகொண்டே
  இருக்கிறார்கள்.
  பாதிப்பேர் கட்சிக்காரர்கள் – மீதி, முற்றாக பொது மக்கள்.
  குடும்பம் குடும்பமாக வருகிறார்கள்.
  மலர்களுடன் வருகிறார்கள். இறுதிஅஞ்சலி நிகழ்ந்த இடத்தில்
  மலர்க்காணிக்கை செலுத்துகிறார்கள்.

  வரிசை வேகமாக நகர்கிறது. ஆனாலும் குறைந்த பட்சம் இரண்டு
  மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

  இன்று, அந்த நினைவிடத்திலேயே, அனைவருக்கும்
  உணவு -பொட்டலமாக தரப்படுகிறது.
  குடிநீருக்கும், டாய்லெட்டுக்கும் சென்னை மாநகராட்சி விசேஷ ஏற்பாடுகள்
  செய்திருக்கின்றன.

  நிஜமாகவே நம்ப முடியவில்லை –
  நம் மக்கள் அன்பு செலுத்தும் விதத்தையும்,
  அரசு, நகராட்சி ஊழியர்கள் – மிகச்சிறப்பாகவும், வேகமாகவும்,
  தேவை அறிந்தும் – செயல்படுவதை….!

  மனதுக்கு இதமாக இருக்கிறது….

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 8. இளங்கோ சொல்கிறார்:

 9. selvarajan சொல்கிறார்:

  வன்முறை கலாச்சாரத்தை எப்போதுமே விரும்பாத இரு தலைவர்களின் [ எம்.ஜி.ஆர்.– ஜெயலலிதா ] வழி வந்தவர்கள் தங்களின் தலைவிக்கு செலுத்த வந்த இறுதி மரியாதை …

  அவர்கள் மனதில் சோகம் மட்டுமே நிரம்பி — கண்டிப்பாக தங்கள் தலைவியின் முகத்தை — கடைசியாக கண்டுவிட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இருந்ததால் மற்றவர்களின் ” எதிர்பார்ப்பு ” பொய்த்து போனது …. என்பதே உண்மை ….

  அத்தனை நிறுவனங்களும் — அங்காடிகளும் — ஏன் அனைத்து தரப்பினரும் ஒட்டு மொத்தமாக — சோகத்தில் ஈடுபட்டதால் தான் … எந்த அசம்பாவிதமும் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது ….

  ” மன்னன் எவ்வழி — மக்கள் அவ்வழி ” என்பதைப்போல — மனிதாபிமானம் மிக்க தலைவரால் உருவாக்கப்பட்டு — தலைவியால் வழி நடத்தப்பட்ட இயக்கம் என்பதால் — // இந்த அதி முக்கிய தேவையை,
  கூடவிருக்கும் லட்சக்கணக்கான மக்களின்
  உணவுத்தேவையை – முன்கூட்டியே யோசித்து,
  அதற்கான ஏற்பாடுகளை மின்னல் வேகத்தில் செய்து // இருக்கிறார்கள் …. என்பது தான் இரு தலைவர்களின் புகழுக்கு கைம்மாறு — மற்றவர்களும் இந்த– நற்செயல்களை பின்பற்றுவார்கள் என்று நம்புவோமாக …. !!!

 10. உண்மையிலேயே பாராட்டிற்குரிய செயல்தான்
  பாராட்டுவோம் போற்றுவோம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.