அப்போலோவில் ஜெ.யுடன் அனுபவம் எப்படி இருந்தது – பெண் நர்சுகள் சிலரின் கருத்து….

apollo-jj-team

கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யம் –
ஜெ.அவர்களுடனான இந்த அனுபவங்கள் ….

அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள்
அனுமதிக்கப்பட்டபோது, அவர் உடல்நலம் பெற
மருத்துவப் பணியில் ஈடுபட்ட பெண் நர்சுகள் சிலர்
தங்கள் அனுபவங்களை சொல்லி இருப்பது
செய்தி தளத்தில் வெளிவந்துள்ளது.

நமது நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே தந்திருக்கிறேன்.
தமிழ் மொழி பெயர்ப்பு – அவ்வளவு சரியாக அமையவில்லை.
இருந்தாலும், நண்பர்களின் வசதிக்காக தந்திருக்கிறேன்.

கீழேயே ஆங்கிலத்தில் ஹிந்து நாளிதழில் வெளிவந்ததையும்
தந்திருக்கிறேன். விரும்புபவர்கள், நேரடியாக ஆங்கிலத்திற்கே
போகலாம்… அது இன்னமும் சுவையாக இருக்கிறது.

—————————–

ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும்
நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவருக்கு
சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையிலும், அவர்
படித்த பள்ளியான பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும்
அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்பல்லோ
மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு
சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும்
அவருடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும்,
செவிலியர்களையும் தனது வீட்டுக்கு வருமாறும், அவர்களுக்குச்
சிறப்பான டீ தயார் செய்து அளிப்பதாகவும் சிகிச்சையில்
இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தன்னை
தினந்தோறும் கவனிக்க வரும் மூன்று செவிலியர்களுக்கும்
‘கிங்காங்’ என்று ஜெயலலிதா செல்லப் பெயரிட்டு
அழைத்துள்ளார். அவர்களிடம் ‘உங்களுக்கு என்ன செய்ய
வேண்டும் என்று சொல்லுங்கள். நான் செய்கிறேன்’ என்று
சிகிச்சையில் இருக்கும்போது ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர் எங்களை
பார்த்து புன்னகைப்பார். எங்களிடம் சிரித்து பேசுவார். சில நேரம்
நாங்கள் இருப்பதற்காகவே சிரமப்பட்டாவது சிறிது சாப்பிட
முயற்சிப்பார். அவர் என்ன சாப்பிட்டாலும் எங்களுக்கு ஒரு
ஸ்பூன் அளித்துவிட்டு, அவர் ஒரு ஸ்பூன் சாப்பிடுவார்” என்று
அந்த மூன்று செவிலியர்களில் ஒருவரான செவிலியர் ஷீலா,
ஜெயலலிதாவின் அன்பை நினைவுகூர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு பிடித்த உப்புமா, பொங்கல், தயிர் சாதம்,
உருளைக்கிழங்கு கூட்டு ஆகியவற்றை அவருடைய பிரத்யேக
சமையல்காரர் சமைத்து தருவார் எனவும் அவற்றை ஜெயலலிதா
முடிந்த அளவு விரும்பி சாப்பிடுவார் எனவும் அந்த மூன்று
செவிலியர்களும் தெரிவித்தனர். மூன்று ஷிப்டுகளிலும் 16
செவிலியர்கள் ஜெயலலிதாவை பார்த்துக்கொள்ள
நியமிக்கப்பட்டாலும், ஷீலா, ரேணுகா மற்றும் சாமுண்டேஸ்வரி
ஆகிய மூவரும்தான் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான
செவிலியர்கள் என்று தெரிவித்தனர்.

‘செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நிலை மோசமான நிலையில்
ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு வரப்பட்டார். நான்கு மணி
நேர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அவர் சாதாரண நிலைக்கு
திரும்பினார். சகஜ நிலைக்கு வந்ததுமே, தனக்கு சாண்ட்விச்சும்,
காபியும் வேண்டும் என்று கேட்டார். அவர் மிகவும் களைப்பாக
இருந்ததில்லை. சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களிடம்
பேசிக் கொண்டிருப்பார். சில நேரங்களில் சருமத்தை எப்படி
பாதுகாக்க வேண்டும் என்று பெண் மருத்துவர்களுக்கு டிப்ஸ்
அளிப்பார். ஒரு சமயம் பெண் மருத்துவர்கள் தங்களை சிகை
அலங்காரத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என
கட்டளைகூட இட்டுள்ளார். எவ்வளவு பிசியான வேலை
இருந்தாலும், பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள சிறிது
நேரம் ஒதுக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கருத்து”

என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்திய பாமா
நினைவுகூர்ந்தார்.

அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் காபி பிடிக்காது.
ஒருமுறை தனது அறை முழுவதும் மருத்துவர்களும்,
செவிலியர்களும் இருக்கும்போது, அங்கிருந்த அனைவரையும்
தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துள்ளார். “வாங்க
எல்லாரும் நம்ம போயஸ் கார்டன் வீட்டுக்கு போகலாம்.

உங்களுக்கு ஸ்பெஷல் கொட நாடு டீ தரச் சொல்கிறேன்” என்று
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
அளிக்கும் போது, ‘நான்தான் இப்போதைக்கு உங்கள் பாஸ். நான்
சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்’ என விளையாட்டாக
தெரிவித்துள்ளார். அதற்கு, ‘இந்த மாநிலத்துக்கே நான்தான்
தலைவி’ என்று அவருக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார்
ஜெயலலிதா.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர்
தேர்தல்களில் அதிமுக வெற்றியடைந்த செய்தியை ஜெயா
டிவி-யில் பார்த்ததும் புன்னகைத்தார். ஆனால், இந்த சூழ்நிலை
முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாறிப் போயுள்ளது.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அறைக்குள் நுழைந்து
வெண்டிலேட்டர் கருவியை சரி செய்து பார்த்த மருத்துவர்,
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். அதன்
பிறகு கடந்த திங்களன்று அவர் மரணமடைந்ததாக
அறிவிக்கப்பட்டது. “சிகிச்சை முடிந்த பின்பு எங்களை
சட்டமன்றத்துக்கு அழைத்துச் செல்வதாக அம்மா கூறியிருந்தார்.

ஆனால், இனி அதற்கு வாய்ப்பே இல்லை” என செவிலியர் ஷீலா
கூறியபோது அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

———————————————————–

http://www.thehindu.com/news/cities/chennai/For-medical-team-loss-of-a-witty-considerate-friend/article16774494.ece

Ramya Kannan CHENNAI: DECEMBER 08, 2016 01:00 IST

Nurses and doctors of Apollo Hospitals narrate tales of Jayalalithaa’s 73-day stay when she revealed a little-known aspect of her personality In over two months that she stayed at Apollo Hospitals, the staff grew to see and appreciate a never-seen side to Jayalalithaa. She dazzled the nurses, doctors and the hospital administrators alike with her intelligence,
wit and consideration for others.

As with every other patient, they would have liked her to go home, but as they got back to work a day later, those who worked with her intensely over the 73 days, seemed to feel a vacuum on the intensely buzzing hospital premises.

‘King Kong’ nurses

Everyone nearly has a tale to tell about their time with Ms. Jayalalithaa, and they don’t need any coaxing to tell it. A team of 16 nurses, working in three eight-hour shifts on rotation took care of her right through, till the end.

Three of them, however, were extra special. “She called these nurses, Sheela C.V., Renuka M.V, and Samundeeswari ‘King Kong’, and would ask for them, keeping track of their duty hours,” explains Sunitha, nursing superintendent at the hospital.

“We were so privileged to work with her. And to think the Chief Minister of

Tamil Nadu trusted us and smiled to welcome us every day, that’s another feeling,” says Sr. Sheela. “She was really nice to us, she’d say, ‘You tell me what I have to do and I will do it.’ When she was tired, she would ask us if we could do something a little later, she would not refuse to do anything.”

When physiotherapy was started, she would apparently make a game of
knocking little balls around, chucking them at the nurses. “And when we started oral feeds, she would say each spoon she took was for a nurse, mentioning them by name,” Sr. Sunitha chimed in. She would play old Hindi and English songs from a pen drive, and moments of nursing care were filled with songs.

“I cannot forget anything that happened these last 70-odd days,” says Sr. Renuka. “When she could write, she would write down her menu, and seemed to be fond of pongal, upma, curd rice and potatoes. We even had a separate kitchen, where her own cook was brought in sometimes, to make the food.” She would tease them sometimes about the food and invited them to Kodanad for the ‘best tea’. The nurses even got an invite to the Assembly, when she returns to work.

Banter with doctors

This bonhomie spilled over on to doctors, especially female Doctors. Medical director at Apollo Hospitals Sathya Bhama shared one such anecdote. “Once she told a doctor that she should change her hairstyle,

that it would look better on her. And then, followed it with playful banter: ‘I’m the Chief Minister, I’m ordering you.’

Of other women doctors, she would ask about their families, if it was not getting late for them, wonder how they came to work early, and tell them to take care of their health and skin. Her stay here was filled with such moments.” Despite her circumstances, irrespective of how she was feeling, she would ask her doctors to be seated, though she did demand that they seek her permission before entering.

“She would always ask us why we were doing something to her; how it
would help her and if there was any other procedure they could follow,”

says Ramesh Venkataraman, one of the critical care specialists who
attended to her. “Sometimes, she would tell us to adjust the settings of the ventilator to a particular specification when she was feeling uncomfortable. She followed everything we were doing very intently.”

“I’m the boss”

There is another story that is now legend in the hospital involving the London-based consultant Richard Beale. It is said Dr. Beale gathered together the younger staff who were completely in awe of her in her room one day and advised them in her presence that in the hospital they would call the shots, even if their patient was the Chief Minister. “Though she was unable to speak then, she gestured to Dr. Beale: “No. Here, I’m the boss” with a beaming smile. Everyone burst out laughing then,” recalls
Babu K. Abraham, critical care specialist.

These are just a few tales, there are many more. Surely, these are going to be told and retold, again and again, in lunch rooms, wards, sterile corridors and nurses bays for a long, long time to come.

——————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to அப்போலோவில் ஜெ.யுடன் அனுபவம் எப்படி இருந்தது – பெண் நர்சுகள் சிலரின் கருத்து….

 1. Surya சொல்கிறார்:

  Apollo nurses could have taken a selfie with Amma and released it to all. That would have told a big story than this article by nurses.

  Also, I am very skeptical when anyone says they like Upma and I tend to believe it is a made up story 😉

  KM sir – Did you believe this story?

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  இந்த பின்னூட்டம் தேவையில்லையெனில் நீக்கிவிடவும்!
  நான் இப்போது எந்த மீடியாவையும் நம்பத்தயாராயில்லை!
  இவனுங்களாலே கடந்த மூன்று மாதங்களாக ஒரு ஆணியையும் புடுங்க முடியவில்லை. அது என்ன மாயமோ மந்திரமோ, தெரியல.
  எவனுக்கும் தன் கடமை என்னவென்றே தெரிந்துகொள்ளாமல் காவடி தூக்கியதையும் ஃபாத்தியா ஓதியதையுமே கூறி ஏமாற்றியதுதான் மிச்சம்.
  இதில் செவிலியர் இப்படி சொன்னார்… மருத்துவர் அப்படி சொல்லி அழுதார் என்று ஃபிலிம் காட்டுவதை நெஞ்சம் ஏற்க மறுக்கிறது ஐயா!
  பொன்னையனையும் சரஸ்வதியையும் டாக்டர் ரெட்டியையும் மீடியாக்கள் நேரடியாக அழைத்து நேரலையாக பேட்டி எடுத்து ஒளிபரப்பத்தயாரா இவர்கள்.
  எச்சை எலும்புக்கு வாலாட்டும் நாய்கள் இவர்கள்

  • bandhu சொல்கிறார்:

   உண்மை தான். எந்த நியூஸ் மீடியாவையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் தங்கள் மேஜையில் இருந்துகொண்டே புலன் விசாரணை அறிக்கை தயாரிப்பவர்கள். ஆதாரமே இல்லாமல் எல்லோரும் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! அவர் மரணமடைந்து விட்டார் என்பது மட்டுமே நிஜம்!

 3. selvarajan சொல்கிறார்:

  பல விதமான செய்திகளும் — வதந்திகளும் வர ஆரம்பித்துவிட்டன … அம்மா இறந்ததிலிருந்து — அடக்கம் — மற்றும் இன்றுவரை வரை அனைத்து ஊடகங்களும் அவரது புகழ் பாடி — அவரது குணாதிசயங்களையும் — திட்டங்களையும் — மக்கள் நலப்பணிகளையும் போற்றி வருகிற சமயத்திலேயே ….

  மருத்துவமனை சிகிச்சை — இறப்பு — அடக்கம் — சசிகலா — மற்றும் – ஜெயாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த சசியின் உறவு முறைகளின் ” என்ட்ரி ” — கட்சியின் நிலைமை — சொத்துக்கள் இன்னும் பல விஷயங்களை பற்றி ” சர்ச்சைகளை ” ஆரம்பித்தும் விட்டன — விவாதங்களில் இறங்கி எப்போதும் போல குழப்பத்தை உருவாக்க — துவங்கி விட்டன …..

  இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று –நமது ” ஆஸ்தான சகுனியான ” திருவாளர் சு.சுவாமி அவர்கள் – கட்சி பிளவுபடும் என்றும் — // சசிகலா VS ஓபிஎஸ்…. அதிமுக இரண்டாக உடைவது உறுதி- சு.சுவாமி பரபரப்பு பேட்டி //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/admk-will-not-survive-as-single-entity-says-swamy-269182.html …. கொளுத்தி போட்டுள்ளார் …. அதுமட்டுமின்றி … இன்றைய தி இந்து பத்திரிக்கையிலும் // ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கோரி பிரதமருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்: சொத்துகளை நிர்வகிக்க அலுவலரை நியமிக்கவும் வலியுறுத்தல் // என்றும் பலவித செய்திகள் வந்தவண்ணம் உள்ளன …

  கட்சி ” சசிகலாவின் ” கட்டுப்பாட்டிற்குள் சென்றால் தொண்டர்கள் ஏற்று கொள்வார்களா .. என்கிற கேள்வியும் தொக்கி நிற்கிறது …. கட்டுக்கோப்பான ஒரு கட்சி ” கலகலத்து ” போய் விடுமோ …. ?

 4. RAJAN சொல்கிறார்:

  கா மை அவர்களே, வணக்கம். அப்பொல்லோ நிர்வாகம் ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சையின் தரம் மற்றும் அதன் நம்பகத்தன்மை பலமான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.சொல்லப்போனால் ஒரு சதி பற்றிய சந்தேக வளையமே அதன் மீது விழுந்துள்ளது.இந்த நிலையிலிருந்து வெளியே வருவதற்கே எல்லா ஊடகங்களுக்கும் ‘கவர் (வழங்கி) நியூஸ்’ வரவழைக்கிறது. அது நிலை நிறுத்த விரும்புவது ஜெயலலிதா என்ற தலைவரின் பிம்பம் பற்றிய கட்டமைவு போல தோன்றினாலும் அதனூடாக தனது நிறுவனம் தலை தப்புவது தான் பிரதானமானது.இதன் பயனாக தனது மிகமுக்கிய பிரமுகரான நோயாளியை தான் மீட்டெடுத்து விட்டதாகவும் தற்செயலான ஒரு திடீர் நிகழ்வில் அவர் உயிர் போனதாகவும் சித்தரிக்க விரும்புகிறது.மாலை 5.30க்கு காட்சி ஊடகங்கள் தவறான தகவல் வழங்கியதாக 6 மணிக்கு மறுப்பு தெரிவித்தபின் 11.30 வரை நடந்த முயற்சிகள் வழங்கிய சிகிச்சை என்ன என்பது பற்றிய அறிக்கை என்ன சொல்கிறது? சாதாரண காய்ச்சல், நீர்சத்து குறைபாடு என்று அனுமதிக்கப்பட்டவர் இத்தனை சிக்கலான பலமுனை நோய் தாக்குதலுக்கு ஆளான நிகழ்வின் போக்கு அவர்கள் அவ்வப்போது வழங்கி வந்த அறிக்கைகள் மக்களுக்கு ஒரு தொடர்ச்சியான புரிதலை ஏற்படுத்தினவா? ஆரம்பத்தில் கருணாநிதி எழுப்பிய கேள்விகளை இரக்கமற்ற அரசியலாகத் தானே அனைவரும் புரிந்து கொண்டனர்? அதில் இருந்த தர்கத்தை எல்லொரும் புரிந்து கொண்டு கேள்வி எழுப்பியிருந்தால் ஒருவேளை ஜெயாவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்து கொண்டிருந்திருக்க முடியும்.அதன் மூலமாக ஒருவேளை அவருடைய இந்த நிலை தவிர்க்கப்பட்டிருக்கவும் கூடும்.அப்பொல்லோ இப்போது நிகழ்த்துவது ஒரு விளம்பர காட்சி. இதில் ’அம்மா’வின் பிம்பம் நன்றாக வந்திருப்பதாக கருதி மகிழ்வீர்களானால் நீங்கள் ஒரு அப்பாவியாகத் தான் இருக்கமுடியும்.

 5. D. Chandramouli சொல்கிறார்:

  All said and done, it is pathetic that officially, not even one photo or a video clipping of the CM was released to the media during the seventy and odd days when she was in hospital. Simply unpardonable!!

 6. srikanth சொல்கிறார்:

  Mr. Rajan, Your points are well said.

 7. Karthik சொல்கிறார்:

  வணக்கம் கா.மை ஐயா.. நலம் தானே?
  இங்கு மற்ற நண்பர்கள் கருத்துகளுடன் உடன்படுகிற அதே நேரம் மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டாலும், ஓரிரு மணித்துளி பேசக்கூடிய ஆடியோ கூட வராததுதான் அதிர்ச்சியூட்டுகிறது. ஆரம்ப நாட்களில் அவர் சுயநினைவின்றி இருந்திருந்தாலும் அதன்பின் உடல்நிலை தேறி ICU வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றியதாக சொல்லும்போது அப்போதாவது ஒரு ஆடியோ க்ளிப் வந்திருக்கலாம். வெள்ளக்காலத்தின்போது ஏற்கனவே பேசி வாட்சப்களில் வந்தனவே.

  இந்த இரும்புத்திரை மறைப்புதான் பின்னால் என்ன நடந்ததோ என நினைக்க வைக்கிறது. இது சிகிச்சை பலனளிக்காத இயல்பான மரணம் என்றால் சரி. ஒருவேளை பின்னணியில் சதிவலை இருந்தால்?

 8. தமிழன் சொல்கிறார்:

  செவிலியர் யாரும் கேமரா கொண்டுபோயிருக்க முடியாது. ஜெ வுடன் போட்டோ எடுத்துக்கொள்ள request பண்ணக்கூடத் தெரியவில்லையா? என் அப்பா ஐ.சி.யுவில் இருந்தபோது நான் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேனே. அதுதான் போகட்டும். ஒரு முக்கியப் புரமுகரையும் ஜெ. தான் ஆஸ்பத்திரியில் இருந்தபோது சந்திக்க விரும்பவில்லையா? (ஒருவேளை ஒருத்தரை அனுமதித்தால் எல்லோரையும் அனுமதிக்கவேண்டிவரும் என்பதனால் தவிர்த்தாரா?) அவர் நல்ல குணமடைந்துகொண்டுவந்திருந்தால் ஒரு போட்டோவும் எடுத்து வெளியிடவேண்டாம் என்று நினைத்திருப்பாரா? நிறைய விடை தெரியாத கேள்விகள்.

  நான் நினைப்பது, 5:30க்கு மறைந்ததை, யாரும் (வீடு திரும்புபவர்கள், பொதுமக்கள்) கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நள்ளிரவில் சொல்லியிருக்கிறார்கள்.

  இதில், ராகுல் ஆஸ்பத்திரியில் வந்து நலம் விசாரித்ததை வியப்பாகவும் (big gesture, though political reasons are there), மிகுந்த நட்பு என்று சொல்லிக்கொண்டு பிரதமர் வந்துபார்க்காத்தைக் மோடி அவர்களுக்குக் கரும்புள்ளியாகவும் நான் பார்க்கிறேன்.

  எத்தகைய விமரிசனம் வைத்தாலும், ஜெ மறைவிலிருந்து அடக்கம் வரை எல்லாவற்றையும் கண்ணியமாகச் செய்த ச்சிகலாவையும் அதிமுக நிர்வாகிகளையும் பாராட்டுகிறேன். ஒரே ஒரு கரும்புள்ளி நடராஜன், மற்றும் ஒரிருவர் தவிர மற்ற மன்னார்குடி கும்பலை மேடையில் அனுமதித்தது.

 9. Srini சொல்கிறார்:

  KM sir, leave all this. Ilayaraja has composed one song on “AMMA”. Did you hear that..

 10. இருதயம் சொல்கிறார்:

  இந்த கதை நல்லா இருக்கே….!

 11. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  Damage Control by Apollo 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.