திருமதி சசிகலா என்னும் …….???

jj-at-rajaji-hall

மர்மங்களால் தன்னை போர்த்திக் கொண்ட ஒரு நபர்.
உண்மையில் இவர் எத்தகையவர்…?
இவரது உண்மையான குணங்கள் என்ன…?
ஜெ.அவர்களின் மீது இவர் கொண்டிருந்த நட்பு அல்லது
பாசம் அல்லது உறவு எத்தகையது…?
இவரால் அவருக்கு உண்மையிலேயே எதாவது
கெடுதல்கள் நிகழ்ந்தனவா…?

ஒரு வேளை இவர் ஜெ.வுக்கு உண்மையாக
நடந்து கொண்டிருந்தாலும், இவரது நெருங்கிய
உறவினர்களால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட
தொல்லைகள், கெடுதல்கல் பற்றி இவருக்கு தெரியாதா…?
தெரிந்தே, விரும்பியே அனுமதித்தாரா…?
அல்லது தடுக்க விரும்பியும் இயலாமல் இருந்தாரா…?

மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்களை
மற்றவர்கள் பார்ப்பதை தடுத்தது முதற்கொண்டு,
பல விஷயங்களில்,
பல பல கேள்விகள், சந்தேகங்கள் – இவர் மீது
எழுப்பப்படுகின்றன…
அவற்றில் சில நியாயமானவையும் கூட…

இந்த சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் –
உண்மையாக இருந்தாலும் சரி அல்லது
கற்பனையாகவும், வீண் பயமாகவும் இருந்தாலும் சரி.

ஏற்கெனவே 2011-ல் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும், அவர்களது தகாத நடவடிக்கைகள் காரணமாக
போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா அவர்களால்,
ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட பின் –

சில மாதங்களுக்குப் பிறகு, இவரை மட்டும் ஜெ. அவர்கள்
மீண்டும் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.
அப்போது, இவர் கொடுத்த வாக்குறுதிகளில் –

இனி தன் வாழ்நாளில்,
ஜெயலலிதா அவர்களால் வெளியேற்றப்பட்ட தன்
உறவினர்களுடன் தான் எந்தவித தொடர்பும்
வைத்துக் கொள்ள மாட்டேன்…..
தனக்கு எந்தவித அரசியல் அபிலாஷைகளும்
கிடையாது. தான் அதிமுகவிலோ, அரசிலோ – எந்தவித
பதவியையும், பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்
என்பன போன்றவை.

————

தற்போது, ஜெ.அவர்கள் மறைந்த துயரங்களுக்கிடையே,
அதிமுகவை அடுத்து யார் நடத்திச் செல்லப்போவது என்பது
குறித்த பலத்த விவாதங்கள் துவங்கி விட்டன.

ஏற்கெனவே, ஜெயலலிதாவால் வெறுத்து ஒதுக்கப்பட்ட
சசிகலா குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும்,
ஜெ.அவர்களின் தலைமாட்டில், ராஜாஜி மண்டபத்தில்
பார்த்த மக்கள் அனைவரும் மிகுந்த வெறுப்பில்
இருக்கிறார்கள். அதிமுக மந்திரிகள் அனைவரும் துக்கத்துடன்
படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தபோது, சசிகலாவின்
உறவினர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு –
ஜெயலலிதா அவர்களின் உடலைச் சுற்றி நின்று கொண்டு –
தொலைக்காட்சிகளுக்கு “போஸ்” கொடுத்ததை –
அதிமுகவில், சசிகலா ஆதரவாளர்கள் சிலர் வேண்டுமானால்
ரசித்திருக்கலாம். ஆனால், பொதுவாக, அந்த குடும்பத்தினரின்
பின்னணியை உணர்ந்த அத்தனை பேருக்கும் அது மிகுந்த
எரிச்சலை தந்தது என்பதே உண்மை.

அதிமுக கட்சி உறுப்பினர்களிடையே
சசிகலா அவர்களுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கக்கூடும்….
அதை ஊதிப் பெரிதாக்கி, அவரது ஒதுக்கப்பட்ட குடும்ப
உறவினர்கள் – சசிகலா அவர்களை அதிமுக பொதுச்செயலாளர்
ஆக்க தீவிரமாக முயற்சி செய்வது வெளிப்படையாகவே
தெரிகிறது.

இத்தனை நாட்களாக, வருடங்களாக –
திருமதி சசிகலா,
உண்மையாகவே ஜெயலலிதா அவர்களுக்கு
விசுவாசியாக, தோழியாக, சகோதரியாக இருப்பதை மட்டுமே
விரும்பி அவருடன் வசித்து வந்தார் என்றால் –

அதை இப்போது செயலில் நிரூபித்துக் காட்ட வேண்டிய
அவசியம், அவருக்கு உருவாகி இருக்கிறது.
மேலும் மேலும் யூகங்களுக்கு இடம் கொடுக்காமல்,
கட்சியில் கோஷ்டிகள் உருவாவதை அனுமதிக்காமல் –
வெளிப்படையாக –

தான் அதிமுகவில் எந்த பதவிக்கு வருவதையும்
விரும்பவில்லை என்றும், ஜெயலலிதா அவர்களது
நினைவுடன், தான் அரசியலிலிருந்து விலகி இருக்கவே
விரும்புகிறார் என்றும் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இல்லையேல் –

இதுவரையிலான அவரது நடத்தைகள், செயல்பாடுகள் –
குறித்து எழுந்த, எழுப்பப்பட்ட வினாக்கள் அனைத்தும் –
உண்மை தானோ என்கிற பலத்த சந்தேகங்கள்
உறுதிப்பட்டு, (கட்சியில் அவர் எந்த நிலையில் இருந்தாலும் )

மக்களிடையே அவர் மீதான மதிப்பு
அதலபாதாளத்திற்கு போய் –

ஜெயலலிதா என்கிற மகத்தான பெண்மணியை,
தமிழகத்தின் மக்கள் தலைவரை –
தன் சொந்த, குடும்ப வளர்ச்சிக்காக –
பலி கொடுத்தவர் இவர் ….
என்கிற பிம்பமே மேலெழும்….
அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்…

———————————-

பின் குறிப்பு –

இந்த வலைத்தளத்தை தொடர்ச்சியாக படித்து வரும்
நண்பர்களுக்கு, என்னைப்பற்றிய சந்தேகங்கள் எதுவும்
எழுவதில்லை.

ஆனால், அவ்வப்போது,
சில கட்சிகளின்,
சில அபிமானிகளுக்கு – நான் அதிமுக ஆதரவாளனோ
என்கிற சந்தேகம் உருவாகி,
அதை தமக்குத் தாமே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு –
பலமுறை அதை பின்னூட்டங்களில் தெரிவித்துக்
கொண்டும் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும், இந்த தருணத்தில்
நான் ஒன்றை தெளிவாக தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறேன்.

நான் இதுவரை அதிமுகவை (இந்த தளத்தில்)
அதிகமாக விமரிசிக்கவில்லை என்பது உண்மையே.
அதற்கான காரணம் அதிமுக என்கிற கட்சியின் மீது
எனக்குள்ள எந்தவித ஒட்டுதலோ பற்றோ அல்ல.

மாறாக, ஜெயலலிதா அவர்களின் மீது நான் கொண்டிருந்த
மிகுந்த மதிப்பு, பாசம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு – ஆகியவை
தான் அதற்கான காரணங்கள்.

இன்று வரை ஜெயலலிதா அவர்களைப்பற்றி
நான் இந்த தளத்தில் விமரிசித்தது இல்லை.
அவர் துன்பப்பட்டபோது, மனம் வருந்தி சில இடுகைகள்
எழுதி இருக்கிறேன். உண்மையாகவே அவரை
எனது சொந்த சகோதரியாகவே நான் உருவகித்திருந்தேன்.
அவரது அரசியல் செயலாற்றங்களை எல்லாம்,
ஒரு சகோதரன் தொலைவில் இருந்து வியப்புடன்
கண்டு ரசித்தது போன்ற நிலை தான் என்னுடையது.

இது தவிர – வேறு எந்த விதத்திலும் –
நான் இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் அல்ல …
அனுதாபியும் அல்ல …
எதிர்காலத்திலும் எந்த கட்சியை சார்ந்தவனாகவும்
இருக்க மாட்டேன்.
எந்த கட்சிக்கும் நான் நிரந்தரமான விரோதியும் அல்ல….

என் மனதுக்கு பட்டதை, வெளிப்படையாகவும்,
சுதந்திரமாகவும் எழுதுவேன்.

என் எழுத்துக்கள் –
மீண்டும் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன் –
எந்த விதத்திலும்,
சுயநலம் கருதி எழுதப்படுபவை அல்ல….
அவ்வப்போது என் மனதில் தோன்றும்
எண்ணங்களின் வெளிப்பாடே…அவை.

பலருக்கு பிடிக்கலாம் – சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
ஆனால், அது ஒரு சுயநலமற்ற கருத்து வெளிப்பாடு
என்கிற வகையில் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்
என்று விரும்புகிறேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
10/12/2016

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to திருமதி சசிகலா என்னும் …….???

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! // தான் அதிமுகவில் எந்த பதவிக்கு வருவதையும்
  விரும்பவில்லை என்றும், ஜெயலலிதா அவர்களது
  நினைவுடன், தான் அரசியலிலிருந்து விலகி இருக்கவே
  விரும்புகிறார் என்றும் உடனடியாக அறிவிக்க வேண்டும். // அறிவிக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்களா … ? என்கிற கேள்விக்கு பதிலாக : நிலைமை வேறு விதமாக சென்று கொண்டு இருக்கிறது —- முதல்வர் மற்ற அமைச்சர்களுடன் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்திப்பதும் — மற்றவர்கள் ” சசிகலா அம்மா ..? ” என்று பாசத்தோடு அழைக்க ஆரம்பித்துள்ளதும் — திரு பொன்னையன் அவர்கள் இதெற்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டி அறிக்கை விடுவதும் — கூட்டாக சென்று நினைவிடத்தில் ” கண்ணீர் ” விடுவதும் — கட்சி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது … மேலும் ஜெயாவால் முடக்கப்பட்டு — தடை செய்யப்பட்ட பல திட்டங்கள் நடைமுறைக்கு வர பச்சை கொடி காட்டியுள்ளதும் — இவர்கள் ” யார் ” என்பதை கொஞ்சம் – கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன ….

  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டி — கூழை கும்பிடு போட்டவர்களின் — நிலை ” உண்மையான அம்மா ” மறைந்த நான்கு நாட்களுக்குள் வெளிப்பாட்டுக் கொண்டு இருப்பதும் — இதையெல்லாம் உற்று நோக்கிக் கொண்டு இருக்கும் தொண்டர்களின் நிலைப்பாடு — இவர்களுக்கு தக்க நேரத்தில் பதிலளிக்கும் என்பது மட்டும் நிதர்சனம் …. அப்படித்தானே …. ? ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும் — அனைவரும் கவனிக்க தொடங்கி விட்டார்கள் தானே … ? தொண்டர்களின் நிலைப்பாடு விரைவில் தெரிய வருமா … ?

 2. Srini சொல்கிறார்:

  Dear KM sir, Agreeing on all your views about Sasi. But one question that runs in my mind is… why not sasi. She was with JJ for more than 3 decades like a shadow. if she keeps the family at distance, she can also be a good leader. She was mentored by JJ for so long.. even If she is 60% to 70% of JJ it will be a good thing for TN. Currently we don’t have too many choices and ADMK also should not break. Karuna and team must be working on the strategy from the day of hospital admission. they are like that… We need a strong leader for TN but someone outside DMK or its allies… who is going to be that.. only time can tell that…

  On a different thing…. they say that … If you are in search for GURU, the GURU appears on its own… Same way… Let us wait for the right leader to rise and lead from front.

  Blog readers including me may differ on views on some issues, but no one will doubt your integrity and honesty in writing. Pranams.

  • Antony சொல்கிறார்:

   Hi Srini,
   //why not sasi.
   //if she keeps the family at distance
   you have got your answer in the question itself.

   //சசிகலாவின்
   உறவினர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு –
   ஜெயலலிதா அவர்களின் உடலைச் சுற்றி நின்று கொண்டு//

 3. NS RAMAN சொல்கிறார்:

  ADMK is always single person controlled party. After MGR, JJ managed to get the control of party after few years of struggling in spite of able other senior leaders like Navalar, STS, Veerappan.
  MGR developed second line leaders but unfortunately JJ was not developed any second line leaders and encouraged only so called “loyalists” and they behind her for power and money. They also proved their loyalty by forming ministry within 3 hrs of her death !!!

  JJ in her first term was very close to Sasi family known to whole world. She lost her power due to the relationship and atrocities of Sasi family.

  During her subsequent terms Sasi family controlled party and power by putting their people in ministry as well as administration.

  All the troubles of court cases are due to Sasi & family relationship only. No one can say all these done without the knowledge of JJ. She opted to stay with Sasi and due to bad company she lost her fame and finally life.

  75 days Apollo episode is full of mystery and neutral court monitored investigation is necessary.
  MK was asking question due to political reason, but he was not wrong in this case.

  Central government having full control of intelligence is fully aware of Apollo episode. But due to some political compromise they kept quiet. This may be one of the reasons Modi was not attempted to meet JJ.

  Who knows Sasi may be a next CM of Tamil Nadu !!!!!!

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  அய்யா ….! தற்பாேது 6.39pm அனைத்து மந்திரிகளும் ” சின்னம்மா” தான் தலமை ஏற்கவேண்டும் என்றகெஞ்சுகிற செய்தி வந்துக் காெண்டே இருக்கறது ..பாவம் … எம்.ஜி.ஆரும்… தாெண்டர்களும்… ?

 5. Jipsy சொல்கிறார்:

  உங்களின் கருத்து முற்றிலும் சரி சசிகலா தன்னை தூய்மை படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக பயன்படுத்திகொள்ளவேண்டும்.

 6. Surya சொல்கிறார்:

  As a loyalist to JJ, you could have shared your thoughts on what could have happened to her during her 75 days hospitalisation. Can you?

 7. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Why not Sasikala? No public has heard her voice even. JJ will not keep anybody that much
  close unless they are worth and clever. My instinct says she has got the qualities of leadership.
  If there is any selfishness let it be. I vote for Sasikala.

 8. palanikumar Raju சொல்கிறார்:

  very soon we can expect statements from some speakers of AIADMK, like this-Only because of Sasi “j”could make huge victories. …(But the truth is, if Sasi is not with her, “J” would not have lost in any election and remained CM from 1991 to till death. I won’t tell till 2016,because she would have survived for some more elections had Sasi was not with her. Especially the credit for heavy loss in 1996 election,in which J herself lost in Bargur , goes to Sasi only,because people could not accept Sasi even standing equal to ‘J’. Even some good things like total prohibition which was decided by J, could not be implemented ,because of the mafia only. ….By the compromise with BJP if Sasi captures power ,then it will be a dummy government run by BJP only. If anyone of the leaders like OPS,who was indirectly identified by J ,takes power definitely it will be a real J government and even has a chance of winning next election.
  What is the fate of Tamilnadu? We have to wait and see.

 9. LVISS சொல்கிறார்:

  Things are moving in the direction that Mr K M doesnt want to happen — Sasikala seems to have been gathering support from those who matter in the party for quite some time –Otherwise how can you explain the phenomenon of ministers immediately supporting her elevation in the party
  This may lead to a split in the party -Other parties waiting in the wings will be expecting a vertical split in the party – A section of the party may lean towards DMK party — As for BJP, if my guess is not wrong , it has never had a smooth relationship with AIADMK ever since Vajpaye’s govt was brought down — That also explains why the local leaders of the BJP are not keen for a tie up with the party in the elections — It may even welcome full break up of the party so that it can build its cadre base –All this is only guess work for the moment –Politics is all about promoting one’s own party’s interests at the expense of others —

 10. தமிழன் சொல்கிறார்:

  அதிமுகவின் இப்போதைய priority கட்சியை intact ஆக வைத்துக்கொள்வது. மக்கள் அதிமுகவிற்கு 5ஆண்டுகள் ஆட்சிபுரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள். 45 எம்எல்ஏக்கள் பிரிய மாட்டார்களா, ஆட்சியில் அமர்ந்துவிட முடியாதா என்று வல்லூறுகள் சூழ்ந்துவரும் நிலையில் அதிமுக ஆட்சி தொடர என்ன வழி இருந்தாலும் அது நடப்பதுதான் நியாயம், தமிழகத்துக்கு நல்லது. அடுத்த 2-3 வருடம் இவர்களின் போக்கை அனுமானிக்க உகந்த period (அதுவரை இவர்கள் சேர்ந்து இருந்தால்). தவறுகள் செய்தாலொழிய அனுமானத்தில் விமரிசிப்பது ஓநாய்களுக்கே வழிவகுக்கும். பத்திரிகைகளில் பணத்தின் துணை கொண்டு எத்தனை gossipகளை மற்றவர்கள் வரவைக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

 11. Narayanan,lndia in chennai சொல்கிறார்:

  காவிரி மைந்தன் : நான் எந்த கட்சிக்கு விரோதி இல்லை ( திமுக வை மட்டும்
  விரோதியாக பார்ப்பேன்)
  அப்படி என்று வெளிப்படையாக பதிவிட வேண்டியது தானே அதை தானே
  இவ்வளவு நாள் செய்திர்கள்
  இப்ப…..என்ன….புரியலையே….

 12. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  It seems as a leader,administrator JJ had not installed systems in the party,&government.This is common for the dravida parties.All are driven by caste politics&money politics.

 13. Alathur Giri Giri சொல்கிறார்:

  சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்,
  ஒரு மானம் இல்லை, அதில் ஈனம் இல்லை
  அவர் எப்போதும் வால் இல்லை கால் பிடிப்பார என்ற தீர்க்கதரிசன வரிகள். மத்திய அமைச்சராக ,போகும் தம்பிதுரைக்கு மட்டுமல்ல அனைதது் தமிழகத்தை அடகு வைக்கும் அமைச்சர் Mp Mla ஜால்ராகளுக்கும் இது பொருந்தும்…

 14. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  You are an experienced man and you might traveled around India. Can you tell few states or places ruled by any other party(especially nationalized parties), where there is development, access, easy commutation ? Please dont say kerala, I am presently in Cochin(considered to be an International Tourist destination) where the city sleeps by 8.30pm and you cant move out to places relying on any mode of transport other than train, that too only to major city/towns.

  I do agree, the dravidian parties were “one of the most corrupts in India”, but our state has got some benefits only because of them(of course they made fortune by implementing schemes in the name of welfare). But compared to other states of India, people got benefited.

  Considering above, dravidian parties should be strong, irrespective of their alignment towards central govt for their “own” benefits. We require DMK & ADMK, to be strong – THANKS to present Modi govt to make us realize the importance of dravidian thoughts.

  Someone strong enough should emerge to run the party. Presently that is Sasikala for ADMK, mainly due to her octopus hands(relatives) and her calculative husband Natarajan. This will definitely have dent on party’s influence in South(by Nadars), in west(by Goundars) and in Central, North(by Vanniyars). To some extent this can be managed by shrewd placements and appointments in the party and also in the government.

  We need both of them – that is what I feel from the politics I understand as there is no other replacement.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சன்மத்,

   திருமதி சசிகலா நல்லவரோ இல்லையோ –
   நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூட,

   அவரது உறவினர் கூட்டம் – மகா கொடியது, மோசமானது,
   தமிழ்நாட்டை சூறையாடி விடும்…

   திருமதி சசிகலாவால்
   அவர்கள் யாரையும்,
   அவரே நினைத்தலும் கூட கட்டுப்படுத்த முடியாது.
   இது தான் பிரத்தியட்சமான உண்மை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    Sasikala & Co’s activities and her relatives’ interference is all well-known and I strongly I agree that she would control anyone and neither regulate. But, till another leader comes up to run the party like revolting against Sasikala, she is the right one to run the party at least for time being…… By biggest worry is, ADMK should not become pseudo-BJP…. Now BJP is doing all their efforts in this…. At least to protect this, Sasikala has to be there…..

    At least to be in politics and to show that they are doing something to the people, they will do – for the state in tamil’s view….. Hope you will not deny that JJ too did the same…..

    One more thing, party personnel who are now using the word “jayalalitha” instead of “amma” deserve only such leadership(i also believe that these party personnel use such words on instructions from Sasikala to show to BJP that party is in her control)……

 15. Guruvayurappa Dhasan (@aimkleemsowhu) சொல்கிறார்:

  ஆழ்வார் கூறியபடி “பாராளும் படர் செல்வம் பரதன் நம்பிக்கே அருளி ஆரா அன்பின் அரும் கானம் அடைந்தோன்”என்று தனது அருமைத்தம்பி ஓபி அவர்கட்கு அரசை அளித்து விட்டு மீண்டும் ஒரு போதும் திரும்பி வராத இடத்திற்கே சென்று விட்டாரே அம்மா !அன்று ராமன் சீதையை தேடி சென்றான் இன்று சீதை ராமனை தேடி மீளாமல் சென்று விட்டார்! மாரீச்ச மாய மான்கள் மட்டும் சுதந்திரமாக உலவுகின்றன !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.