ஃப்ளாஷ் பேக் – டிசம்பர் 2011 …..


இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட,
நான்காம் கட்ட தலைவர்கள் –
அனைவரும் ஒன்று சேர கூறி விட்டார்கள்….

சில தமிழக தொலைக்காட்சி சேனல்கள் paid news
என்பதன் உண்மைப்பயனை இப்போது தான்
முதல் முறையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றன…

நாம் மட்டும் என்ன முட்டாள்களா…?
விவரம் தெரியாதவர்களா என்ன ….?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் … என்ன….
மக்கள் தீர்ப்பு இப்போதைக்கு தெரிய வராது…..

எனவே, மக்கள் தீர்ப்புக்கு பதிலாக,
மந்திரிகள் தீர்ப்பே – மகேசன் தீர்ப்பு…..! என்று
நாமும் ஏற்றுக் கொள்வோம்…!!!

முட்டாள்தனமாக சில பத்திரிகைகள் இப்போது
பழசை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன…

இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதை
இனி நாம் நிறுத்திக் கொள்வோமாக ….

ஊரோடு ஒத்து வாழ்வோமாக….!!!

sa-2

sa-4

sa-1

sa-3

sa-5

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஃப்ளாஷ் பேக் – டிசம்பர் 2011 …..

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இன்னுமொரு ” ஃப்ளாஷ் பேக்கும் இருக்கிறது தங்கள் புண்ணியத்தில் — அது :– // திருமதி சசிகலாவின் கணவராகிய ம.நடராசன் என்கிற …IPC-420
  Posted on ஜனவரி 22, 2012 by vimarisanam – kavirimainthan // என்னவோ .. இனி தமிழ் நாட்டின் தலையெழுத்தில் — ” நிதிகளும் — கரண் களும் ” தான் மாறி — மாறி — ஆதிக்கம் செலுத்த வேண்டும் – என்கிற நிலைபோலும் … என்ன செய்வது … ?

 2. Sharron சொல்கிறார்:

  KM Sir please don’t say like that. Please think about the next move to save Tamil Nadu.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்ப Sharron

   என் கருத்து –

   வெளியார் யாருடைய தலையீட்டையும் தடுக்கவும்,
   பழைய சுயநல உறவுக் கூட்டங்கள் மீண்டும்
   உள்ளே புகுந்து சுருட்டுவதை தடுக்கவும்,
   அனைத்து ஜாதி, மத சம நிலையை
   தொடர்ந்து நிலைக்கச் செய்யவும்
   தகுந்தாற்போல் –

   ஜெ. அவர்களால் ஏற்கெனவே அடையாளம்
   காணப்பட்ட 5 அல்லது 6 முக்கிய இரண்டாம் கட்ட
   தலைவர்களை கொண்ட ஒரு குழுவை நியமித்து
   அடுத்த ஒரு வருடத்திற்கு கட்சி நடவடிக்கைகளை
   நடத்திச் செல்லலாம்.

   ஆட்சியில் எந்தவித தலையீடும் இல்லாமல்,
   ஜெ.அவர்கள் அறிவித்த கொள்கையின் அடிப்படையில்,
   திரு.ஓ.பி.எஸ். அவர்கள் முதல்வராகத் தொடரலாம்.

   இத்தகைய ஒரு ஏற்பாடு தான் கட்சியின் அடிமட்ட
   தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்புடையதாக,
   திருப்தியும், நிம்மதியும் தருவதாக அமையும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  உங்கள் எண்ணம் எங்களுக்கு புரிகிறது.
  ஜெயலலிதா அவர்களின் உண்மையான விசுவாசிகளும்,
  பொதுமக்களும் இதை ஏற்றுக் கொள்ளவே
  மாட்டார்கள்.
  ஜெயலலிதா அவர்கள் அவமானப்படவும்,
  சிறைசெல்லவும் காரணமானவர்கள் இந்த கூட்டமே.
  அம்மா இருந்தவரை மறைந்திருந்தவர்கள்
  அத்தனை பேரும் அம்மா ஆஸ்பத்திரி போனவுடனேயே
  போயஸ் கார்டனுக்குள் புகுந்து விட்டார்கள்.
  ஜெ.அவர்களின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த
  ராஜாஜி மண்டபத்திலும், தொடர்ந்து மரீனாவிலும்
  அந்த கூட்டம் அதிகாரம் செய்ததைத்தான் எல்லாரும்
  பார்த்தோமே. பொதுமக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
  உங்கள் வருத்தமும், இயலாமையும் உங்கள் கட்டுரையில் தெரிகிறது. இப்போது தற்காலிகமாக
  எல்லாரும் வெளியேறி இருக்கிறார்கள். செயலாளர் பதவியை
  பிடித்தவுடன், மீண்டும் அத்தனை பேரும் குவிந்துவிடுவார்கள்.
  துவங்கி விடும் ஆதிக்கம்.
  ஓபிஎஸ் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை
  உருவாகும். அம்மாவின் மரணம் தமிழகத்திற்கு
  வந்துள்ள சாபம்.

 4. இளங்கோ சொல்கிறார்:

  facebook.com/மாயவரத்தான் கி ரமேஷ்குமார்

  ’40 ஆண்டுகளாக ஜெ.விற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா’ என்று சப்பைக்கட்டு கட்டி ஒரு பதிவு கண்ணில் பட்டது.

  அரசியலுக்கு ஜெ. வருவதற்கு முன்னர் அவருடன் இணைந்தவரல்ல சசிகலா. அப்போதே மிகப்பிரபலமாக இருந்தவருடன் இணைந்தவர் தான். ஜெ.வுடன் சசிகலா இணைந்ததால் சசிகலா மட்டுமில்லாமல் அவருடைய சுற்றமும், நட்பும், உற்றார் உறவினர்களும் அடைந்த நற்பயன்கள் அளவிற்கு வேறு எந்த நட்பாவது எந்தவொரு ஜனநாயக நாட்டிலாவது அடைந்திருக்குமா என்று கேட்டால் பதில் கிடைக்க வாய்ப்பில்லை.
  ‘அம்மா’விற்கு உறுதுணையாய் கடைசி நிமிடம் வரை இருந்தார் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை தான். அதற்காக?
  யாரை எல்லாம் இறுதி வரை அனுமதிக்கவே முடியாது என்று அம்மா உறுதியாக இருந்தாரோ அவர்களெல்லாம் அடுத்த நிமிடமே அருகில் வந்து விட்டார்களே?
  சசிகலாவின் நட்பினால் ஜெ அடைந்தது லாபமா, அல்லது ஜெ.வின் நட்பினால் சசிகலா அடைந்தது லாபமா என்ற ஒற்றைக் கேள்விக்கான பதிலே பதிவின் முதல் வரிக் கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.
  ஜெ.விற்கு வாரிசா என்ன? அவர் தனித்து இருந்திருந்தால் அவருக்கு இத்தனை பிரச்னைகள் வந்திருக்காது. அவருக்கு இத்தனை கெட்ட பெயர்கள் வந்திருக்காது. அவர் இன்னும் சில பல ஆண்டுகள் வாழ்ந்திருந்திருப்பார். ஆண்டிருந்திருப்பார் என்ற சாமானியர்களின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
  ‘ஆமாம்.. சசிகலா தான் அடுத்து’ என்று ஜனநாயக மேற்பூச்சில் சர்வாதிகாரத்தனத்தை மேற்கொள்ளட்டும். ஆனால் அதற்கு ‘அவரை விட யாருக்கு தகுதி?’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்ட வேண்டுமா என்பதே கேள்வி.

 5. Raghuraman சொல்கிறார்:

  Dear Sir.,

  I understand the feelings and frustrations. I am an ardent fan of JJ and for her attitude, boldness and compassion about others but post her demise, not interested in any ADMK news. This may be the sentiments of many ADMK party men.

  Coming to current scenario – Is this not a repeat of 1987 – 89?

  Remember – Even Late Mr. Cho was against JJ claiming ADMK supremacy in 89. He changed his stance only later.

  Also this has been published in Vikatan. How far we can believe this magazine? They also started another series about how Sasikala became close aide of JJ. Are these magazines really concerned about ADMK? Are their tears are real?

  Currently the difference between claiming the ‘right to rule’ is only 20 MLAs. Even MK said that openly (even when JJ was alive) . By creating confusion, it is possible to create a wedge in the party and to gain the right. Many expected that there would be some Law and Order issue post JJ’s death. Thankfully it was averted.

  In a party of 135 MLAs , only a few can get plumb post. Others are looking for a chance. Many Pazha Karuppiah’s are there in the party.

  I remember that during Bangarappa’s regime in Karnataka, there was a news that he kept on paying detractors just to remain a CM.

  Current ADMK is having absolute majority. They should be allowed to rule till 2021. But many vultures are looking for a bite.

  Just read another article about pre-requisite for becoming General Secretary of ADMK – a person should have been a member without a break for atleast 5 years. Not sure how far it is true. if so, Sasikala cannot become Gen Secy of the party till April / May 2017.

  Regards

 6. LVISS சொல்கிறார்:

  Like MGR Jayalalitha should have named some one as the next leader of the party even if it was Sasikala —

 7. தமிழன் சொல்கிறார்:

  இதைப் பற்றி நிறைய எழுதலாம். காலம் மட்டும்தான் நமக்குக் கண்ணாடியாக இருந்து ‘சரியாக நடந்துள்ளதா’ என்று சொல்லும். ஆனாலும் கீழ்க்கண்டவைகளைக் கவனத்தில் கொண்டால் நடப்பது ஆபத்தா நல்லதா என்பது தெரியும்.
  1. அரசியல் கட்சித் தலைவர், சிறுபான்மையினராகவே இருப்பதை (அதாவது சாதி அடையாளம் இல்லாத, எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதி அடையாளம் வந்துவிடாதவர்கள்) தமிழக மக்கள் ஆதரித்துள்ளனர். இதற்கு exceptionஆன காமராஜ் அவர்களும், நாடார் என்ற பின்னணியில் கட்சியிலோ ஆட்சியிலோ வந்தவரல்லர்.
  2. எம்ஜியாருக்குக் கிடைத்த இரண்டாம் கட்டத்தலைவர்கள் எம்ஜியாரை நேசித்தவர்கள். ஜெ.வுக்கு உண்மையான விசுவாசிகள் அவருடைய இரண்டாவது தேர்தலுக்குப் பிறகுதான் கிடைத்தவர்கள். இப்போது சசிகலாவுக்கு அந்த மாதிரி விசுவாசிகள் இருக்க சாத்தியமில்லை.
  3. ஜெ.வின் குறைகளை, அதிமுக ஆதரிப்பவர்களும், ஜெ.யினால் விளைந்தது அல்லது, அது சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலால் விளைந்தது என்று கூறுபவர்களே பெரும்பான்மை. ஜெ.தான் தலைவி என்று எண்ணித்தால் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். (இதில் எம்ஜியார் பக்தர்களும், ஜெவைப் பிடித்தவர்களும், கருணானிதி வெறுப்பாளர்களும் அடங்குவர்).
  4. கருணானிதி அல்லது திமுக மேல், softஆக நடந்துகொண்டால், அதாவது அதிமுக, திமுக ஒத்திசைந்து இருக்குமானால், அதிமுகவின் தேவை தமிழ்னாட்டில் இல்லாமல் போய்விடும். மக்கள், பொதுப் பிரச்சனைகளைத் தவிர, வேறு எதிலும் இந்த ஒத்திசைவை விரும்புவதில்லை.
  5. அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் சசிகலாவின் முன்னால் பணிவது பொதுமக்களுக்கு நிச்சயம் பிடிக்காது. சசிகலா எதையும் சாதித்தவர் அல்ல. அவர் கடந்த காலங்களில் பிரச்சனைகளின் வேராக இருந்துள்ளார். இப்படித்தான் பொதுமக்கள் அவரைப் பற்றின பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டுள்ளனர்.
  6. ஜெ.வைச் சுற்றி, (அவரது சடலத்தைச்) அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், சசிகலா/இளவரசி ஆகியோரும் இருந்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும். மன்னார்குடி கும்பல், நடராஜன் போன்றவர்கள் அதிமுக கட்சியைச் சார்ந்தவர்கள் கிடையாது. அந்தக் கும்பல், போயஸ் தோட்டத்தில் ஜெ.வைக்கப்பட்டிருந்தபோது தனது மரியாதையைச் செலுத்திவிட்டு மறைந்திருக்கவேண்டும். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது தமிழக முதலமைச்சர், அதிமுகவின் பொதுச்செயலாளர். அதனால் மன்னார்குடி கும்பல் அங்கு இருந்தது ஏற்புடையது அல்ல.
  7. முதலமைச்சர் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர், கோவையைச் சேர்ந்த கவுண்டர்களையும் பதவிகளுக்குக் கொண்டுவரவேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்துள்ளதை யாரும் விரும்பமாட்டார்கள். ஜெ. சிறுபான்மை இனத்தவரான பிராமண இனத்தைச் சார்ந்தாலும், சாதி அடையாளத்தைக் காண்பிக்கவில்லை. அதனால்தான் பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். சசிகலா தலைமைக்கு வருவது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். இனிமேல், யார் ஆதரித்தாலும் (அதிமுக செய்தித்தொடர்பாளர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள்) அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்ற கேள்வி பொதுமக்கள் மனத்தில் நிச்சயமாக எழும். அதிமுக என்பது, சாதிசாராத இயக்கமாக இருக்கும்வரைதான் அதற்கு ஆதரவு இருக்கும். (இதே காரணத்துக்காகத்தான், அன்புமணியோ அல்லது சாதீயப் பின்புலமுள்ளவர்களோ ஒரு காலத்திலும் பெரிய கட்சியாக ஆகமுடியாது)
  8. எம்ஜியார் எப்போதுமே ஜெ.தான் தனக்கு அடுத்தது என்று சொல்லவில்லை. அவரும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் ஜானகி/ஜெ அவர்கள் இருவரிடமும் கொஞ்சம் கஷ்டப்பட்டார் (அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையில்). அவரது விசுவாசிகளும் இதனால் இரண்டாகப் பிரிந்தனர். (வீரப்பனுக்கு விசுவாசியாக ஒரு அணியும், இன்னொரு அணி ஜெ வுக்கு விசுவாசிகளாகவும் மாறியது, எம்ஜியார் உயிருடன் இருக்கும்போதே)
  9. ஜூனியர் விகடன், திமுகாவின் விசுவாசிகளாக மாறி, குறைந்தது 6 வருடங்களுக்கு மேல் ஆகிறது. நக்கீரன், வேறு வழியில்லாமல், 1996லிருந்து திமுக பத்திரிக்கையாகிவிட்டது. அதிலும், நக்கீரன், திமுகாவின் மூன்று பேரிடமும் (அல்லது நாலு) யாரை ஆதரிப்பது, யாரைக் குறை சொல்வது என்ற சிக்கலில் மாட்டியே தன்னுடைய அடையாளத்தை இழந்துவிட்டது. இவர்கள் எழுதும் செய்திகளின் உண்மைத் தன்மை எப்போதும் பல்லிளிக்கும். (உங்களுக்கு நான் கவனித்த, நீங்கள் கவனிக்க மறந்த ஒரு தகவலைக் கூறுகிறேன். சமீபத்தைய இடைத்தேர்தலில், ஜூ.வி தான் யார் வெற்றிபெறுவார்கள் என்று கணித்திருந்த கட்சியின் வேட்பாளரைக் கலர் போட்டோவிலும், எங்கு சந்தேகம் இருந்ததோ அங்கு இரண்டு கட்சி வேட்பாளரையும் கலர் போட்டோ போட்டிருந்தது. ஆனால் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், முடிவு தான் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்தபோது அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. சந்தேகம் இருந்தால் அந்தக் கட்டுரைகளை மீண்டும் ஒருமுறை பாருங்கள்)
  10. யார் அதிமுக கட்சிக்குத் தலைமை ஏற்றாலும், வெளிப்படையாக தான் சாதி, தன் குடும்பம், மதம் சார்ந்தவரல்லர் என்பதைத் தன் செயல்களினால் நிரூபிக்கவேண்டும். இதனை சசிகலாவினால் செய்ய இயலாது. பாஜக, தன்னுடைய சுயலாபம் போன்றவற்றிர்க்காக, கட்சியைக் காவுகொடுக்கும் வேலைதான் இப்போது நடந்துவருகிறது என்று தோன்றுகிறது. இது ஜெ.வுக்கு இன்னும் நிறையப் புகழைச் சேர்க்கப்போகிறது.

 8. தமிழன் சொல்கிறார்:

  திருத்தம் –

  ஜெ யினால் விளைந்தது அல்லது – ஜெ.யினால் விளைந்தது அல்ல என்றிருக்கவேண்டும். குறைகள் எல்லாம் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலால்தான் என்று நம்புவர்கள்தான் மிக அதிகம்.

  நவனீதகிருஷ்ணன், கனிமொழியுடன் சிரித்துப் பேசியது (போராட்டதின்போது), யாரும் ரசித்திருக்கமாட்டார்கள். நவனீதகிருஷ்ணன் represent பண்ணுவது 50 எம்பிக்கள் உள்ள அதிமுக. கனிமொழி-சில எம்பிக்கள் உள்ள கட்சியின் எம்பி.

 9. இளங்கோ சொல்கிறார்:

  அப்பாடா இவர் ஒருவராவது சொல்கிறாரே:

  பொதுச்செயலாளர் நியமனத்தில் அவசரம் கூடாது.
  இந்த 200 பேர் அல்ல.
  கடைக்கோடியில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.
  அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும்
  2 கோடி தொண்டர்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் –
  ———– நடிகர் ஆனந்தராஜ்

 10. bandhu சொல்கிறார்:

  இந்த குழப்பத்தில் மீன் பிடிப்பது எப்படி, யாருக்கு சாதகம் இது என்பது பற்றி என் சிந்தனைகள்..
  http://eliyavai.blogspot.com/2016/12/blog-post.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.