தமிழ்நாட்டில் தங்குகிறார் டாக்டர் சு.சுவாமி….!!!

dr-s-s

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, தான் தொடர்ந்து
இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் தங்கியிருந்து
நிலைமையை அவதானிக்கப் போவதாக கூறுகிறார்…!!!

swamy-tweet-2

ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போது,
இவர் பலமுறை இங்கு வந்து சென்றிருக்கிறார்…

ஒன்றிரண்டு நாட்களில் திரும்ப போய் விடுவார்…
முன் விளம்பரம் கொடுப்பது வழக்கமில்லை.

இப்போது….
இரண்டு வாரங்கள் தங்கப்போகிறேன்
என்று முன்கூட்டியே அறிவிக்கிறார்….

ஆட, கூட, சேர – வருபவர்கள் எல்லாம்
வரலாமென்று திறந்த அழைப்பா ( open invitation….) ?

எதை எதிர்பார்க்கிறார்…
என்ன செய்ய நினைக்கிறார்…
எதை உருவாக்க நினைக்கிறார்…
என்ன “ஆக” நினைக்கிறார்…??????

அவர் என்னவெல்லாம் செய்யக்கூடும்…?

QUITE INTERESTING …..

நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்…?
உங்கள் எண்ணங்களை
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…..

..

பிற்சேர்க்கை –

..
ஒரு முக்கியமான விஷயம் – சொல்ல மறந்து விட்டேன்.
திரு.சு.சுவாமியின் பிரதம சீடர் ஆசீர்வாதம் ஆசாரி
இரண்டு நாட்களாக திருவாளர் (சசிகலா) நடராஜன்
அவர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றொரு
தகவல் கிடைத்திருக்கிறது…. 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to தமிழ்நாட்டில் தங்குகிறார் டாக்டர் சு.சுவாமி….!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பிற்சேர்க்கை –

  ஒரு முக்கியமான விஷயம் – சொல்ல மறந்து விட்டேன்.
  திரு.சு.சுவாமியின் பிரதம சீடர் ஆசீர்வாதம் ஆசாரி
  இரண்டு நாட்களாக திருவாளர் (சசிகலா) நடராஜன்
  அவர்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றொரு
  தகவல் கிடைத்திருக்கிறது…. 🙂 🙂

 2. selvarajan சொல்கிறார்:

  // தமிழக ஆளுநராக சுப்பிரமணியன் சுவாமி நியமனம்? மறுப்பு சொல்லாத பொன்.ராதாகிருஷ்ணன் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-senior-leader-subramaniyan-swamy-may-be-become-tn-governer-269605.html — இது நேற்றைய செய்தி — கசிந்த செய்தி …? உங்களின் இடுகையின் குறிப்பிட்டுள்ளதற்கும் இதற்கும் — ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கும் போல தெரிகிறது … முன்பு டிசம்பர் 7 -ம் தேதி — // சசிகலா VS ஓபிஎஸ்…. அதிமுக இரண்டாக உடைவது உறுதி- சு.சுவாமி பரபரப்பு பேட்டி //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/admk-will-not-survive-as-single-entity-says-swamy-269182.html — இவ்வாறு ” ஆருடம் ” கூறிய சுவாமி — சசிகலாவும் — ஓ .பி.எஸ்ஸும் ஒன்றாகி உள்ள சூழலில் — தற்போது கூறியுள்ளது எந்தவித விளைவுகளை உண்டாக்கும் என்பது தான் கேள்விக்குறி … ?

  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டாக்டர் சுப்ரமணிய சுவாமியால் ஒரு அருமையான பட்டப்பெயரை ” மன்னார்குடி மாபியாக்கள் ” என்று அழைக்கப்பட்ட சசிகலா கூட்டத்தின் நிலைமையும் — ” சின்னம்மா ” தான் பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டுகிற ஓ .பி .எஸ் மற்றும் மந்திரிகள் — கட்சி நிர்வாகிகள் — பல பிரமுகர்கள் — மதுரை ஆதினம் — அரங்கம் ஜீயர் — மொட்டையடித்துக் கொண்டு துக்கம் காட்டியவர்கள் — அனைத்து மாவட்ட கழக பிரிவினர்கள் என்று ” மாய்ந்து ” போகிறவர்கள் அனைவருக்கும் — உள்ளுக்குள் ஒரு உதைப்பு — சுவாமியின் வருகையால் — ஏற்படுமா … ? இல்லை அவரது கட்சிக்கு பேரம் நடக்குமா … ? எல்லாமே மோடிமஸ்தான் மந்திரம் போல மர்மமாக இருக்கிறது …. அப்படித்தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்கள் கடைசி வரியை இப்படி மாற்றிக்கொள்ளலாமா…?

   எல்லாமே “மோடிஜி+சுவாமிஜி” மந்திரம் போல
   மர்மமாக இருக்கிறது…..!!! 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Srini சொல்கிறார்:

  KM Sir, It would be good, if he becomes the governor of TN. Also my wish is Sasikala becomes the CM of TN, keep the relatives at distance. give a good government. Swamy can be a good check for her when ever she goes overboard. if this happens it will good in the following aspects

  1. ADMK will still continue in the power. DMK can be kept outside power which is very important.
  2. United, unsplit ADMK and govt is good for TN and country.
  3. Strong leader in the absence of JJ – is very important.
  4. Corruption can be checked, if swamy becomes the governor, as he will ensure that
  5. ADMK will support BJP in the center. state- center cooperation will increase.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   நீங்கள் நினைப்பது நல்லதாக இருந்தாலும் –

   இது நடைமுறைக்கு வந்தால் –
   அதிமுக-விலிருந்து ஒரு குழு பிரிந்து திமுகவுடன்
   சேரக்கூடும்…

   விளைவு –

   கொஞ்ச நாட்களுக்கு “சுவாமி ஆட்சி” (அதாவது ஜனாதிபதி ஆட்சி )
   அமுலுக்கு வரக்கூடும்.

   உங்கள் சந்தோஷம் ரெட்டிப்பாகக்கூடும்….!
   உங்கள் சந்தோஷத்தை கெடுக்க எனக்கு
   விருப்பமில்லை …. 🙂 🙂

   வாழ்த்துகள்…

   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    ‘நாட்டுல என்னமாதிரியான ஆசைகள்லாம் இருக்கு. சசிகலா முதல்வராவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இரண்டாவது, அரசியல் கொஞ்சம் தெரிந்தவர்களுக்கும் தெரிந்த விஷயம், சு.சுவாமியால் நேர்மறையாக எதையும் செய்யமுடியாது. குறை கண்டுபிடிக்க முடியும். குடைச்சல் கொடுக்கமுடியும். எப்போதும் நல்லது செய்ய முடியாது. அடுத்தவனைக் குறைகூறி அதன்மூலம் bi-productஆக நல்லது நடந்தால்தான் உண்டு.

    சு.சுவாமியின் attitude, அவருடைய தலைக்கனம் ஆகியவற்றால், அவரால் இன்னொருவருடன் ஒத்திசைந்து போகமுடியாது. ‘கவர்னர்’ பதவி வெறும் அலங்காரப் பதவி என்றாலும், அது மானிலத்தின் ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் நிலையில் உள்ள பதவி. அதனால்தான், ஜெ. ரோசையாவையே தொடர விருப்பப்பட்டார். ஜெ.விடம் குடைச்சல் கொடுத்தால், அவர் வீரியமாக எதிர்ப்பார். பார்க்கலாம், அதிமுக எப்படி இதனை மெச்சூர்டாக எதிர்கொள்கிறது என்று.

 4. Raghuraman சொல்கிறார்:

  I meant – who will be a good check for him.

 5. தமிழன் சொல்கிறார்:

  பிள்ளைப்பூச்சியைத் தன்னிடமிருந்து துரத்த முயல்கிறார்கள். பல மத்திய அமைச்சர்களுக்கு அது நல்ல செய்தியாக இருக்கும். தமிழ்னாட்டில் குழம்பிய குட்டையில் ஏதேனும் மீன் சிக்குமா என்று பார்க்க தமிழ் தெரிந்த, ஓரளவு பரிச்சயமான அரசியல்வாதி, கவர்னராகுவது, பாஜவுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

  இங்கு அவர் நிச்சயமாக அதிமுகவுக்கு problem கொடுக்க முயலுவார். அதன்மூலமாக எல்லாவிதமான மசோதாக்களுக்கும் அதிமுகவின் ஆதரவைப் பெறுவது திட்டமாக இருக்கும். ஆனால் இதனாலெல்லாம் கட்சி வளராது.

  இவரின் செய்கைகள் அதிமுகவை unitedஆக ஆக்கினால் நல்லது. அதேசமயம் corruption குறையும், அரசு மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்யும். திமுகவை வளரச் செய்யும் முயற்சியில் சு.சுவாமி ஈடுபடமாட்டார் என்று நம்புவோம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   // தமிழ்நாட்டில் குழம்பிய குட்டையில்
   ஏதேனும் மீன் சிக்குமா என்று பார்க்க
   தமிழ் தெரிந்த, ஓரளவு பரிச்சயமான
   அரசியல்வாதி, கவர்னராகுவது,
   பாஜவுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//

   இது எனக்கும் தோன்றியது –

   கூடுதலாக advantages –

   சுவாமிஜிக்கு புதிய interesting responsibilities
   கொடுப்பதன் மூலம் –
   கொஞ்ச நாட்களுக்கு மோடிஜிக்கு
   சுவாமிஜியிடமிருந்து விடுதலை…

   – கூடவே, அருண் ஜெட்லிஜிக்கும்….. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Somehow there should be proper check for the ‘Theeya sakthi’

 7. srinivasanmurugesan சொல்கிறார்:

  சு.சுவாமி தமிழர் தானே… அவர் தமிழக கவர்னர் ஆக முடியுமா?

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப srinivasanmurugesan,

  சாதாரணமாக அதே மாநிலத்தை சேர்ந்தவரை
  கவர்னராக நியமிப்பதை தவிர்க்கிறார்கள் என்பது உண்மையே..
  ஆனால், சட்டபூர்வமாக எந்தவித தடையும் இல்லை.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 9. LVISS சொல்கிறார்:

  Mr Swamy cannot attend to cases filed if he takes up any post — Why no one in thinking along these lines —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.