செய்திகளும், திரு.ப.சி.மற்றும் பொதுமக்களின் கேள்விகளும்…..

முதலில் செய்தி –

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராம சுப்ரமணிய காந்தி –

“வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி பழைய நோட்டுகள்
திரும்ப பெறப்பட்டுள்ளன –

பதிலுக்கு வங்கிகளில் இருந்து, ரூ. 4 லட்சத்து
61 ஆயிரம் கோடி பணம் (மட்டுமே) பொது மக்களுக்கு
விநியோகிக்கப்பட்டுள்ளது ”

http://www.vikatan.com/news/tamilnadu/74815-rs-1244-lakh-crore-
worth-5001000-notes-received-in-banks.art

—————————————————————–

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
மத்திய அரசு அறிவித்து முழுவதுமாக ஒரு மாதம்
முடிந்துவிட்டது.

ஆனால், இந்த மாதம் ஊதியம் வாங்கிய ஏழை மற்றும்
நடுத்தர குடும்பத்தினர், கையில் பணம் இல்லாமல், தங்களது
அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள
முடியாமல் ஏடிஎம் மற்றும் வங்கி வாசல்களில் தான்
காத்து நிற்கிறார்கள்.

ஆனால், மக்களுக்கு பணம் எளிதாக கிடைக்கவும், பணத்
தட்டுப்பாடு முற்றிலுமாகக் குறையவும் நடவடிக்கை எடுக்க
வேண்டிய மத்திய அரசு, புதிதாக டிஜிட்டல் பரிவர்த்தனையை
ஊக்குவிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது.

நாட்டில் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம்களில் 95 சதவீத ஏடிஎம்கள்,
புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் தொழில்நுட்பம்
மாற்றப்பட்டு தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், 13 முக்கிய நகரங்களில் உள்ள 647 ஏடிஎம்களை நமது
எக்ஸ்பிரஸ் நிரூபர்கள் ஆய்வு செய்ததில்,

69.7% ஏடிஎம்கள் கடந்த ஒரு மாத காலமாக –
திறக்கப்படாமலேயே இருப்பது
தெரிய வந்துள்ளது.

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர்,
ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வெறும் 8 சதவீத ஏடிஎம்களே
செயல்பாட்டில் உள்ளன. இயங்காத ஏடிஎம்கள் அதிகம் கொண்ட
நகரத்தின் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.

http://www.dinamani.com/india/2016/dec/09

——————————————————————-

திரு.ப.சிதம்பரம் அவர்கள் நாக்பூரில்
செய்தியாளர்களிடையே –

2 ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் வரிசையில் வங்கிகள்,
ஏடிஎம் மையங்கள் முன்பு காத்துகிடக்கும் போது –

நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் –

தனிநபர்களிடம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு 2 ஆயிரம்
புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
எப்படி …?

keshav-cartoon

வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் அளவுக்கு ரொக்கப் பணத்தை
பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மத்திய
அரசின் அறிவிப்பு. ஆனால் மக்களால் அந்த அளவுக்கு
பணத்தை ஏன் பெற முடியவில்லை…?

நவம்பர் 8ஆம் தேதி மோடி பேசிய போது,
இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை

ஒழிக்க முடியும் என 24-க்கும் அதிகமுறை வலியுறுத்திய
நிலையில்,

அடுத்தச் சில நாட்களில் பண மதிப்பிழப்பின்
இலக்கு மாறி –
தற்போது டிஜிட்டல் பொருளாதாரம்,
பணமில்லா சமுகம் என்றாகி விட்டது…
ஏன் இந்தத் திடீர் மாற்றம்.?

கருப்பு பணத்தை இந்த அறிவிப்பு ஒழிக்கவில்லை
என்பதை அறிந்து கொண்ட மோடி, தனது பேச்சை
பணமற்ற பொருளாதாரம் என்பதை
நோக்கி நகர்த்திவிட்டாரா..?

மத்திய அரசு பணப் பரிமாற்றத்திற்குத் தேவையான
ரூபாய் நோட்டுகள் நாட்டில் உள்ளது எனத்
தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில், வங்கிகளில்
ஏன் பணமில்லை.?

எந்த நாடு பணமில்லா பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது…?

உலகின் மிக வலிமையான பொருளாதார அமைப்பைக்
கொண்டிருக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா கூட முழுமையான
பணமில்லா பொருளாதாரத்தைக் கொண்டு இல்லை.

இப்படி இருக்கும் நிலையில் பல துறைகளில் முன்னேற்றம்
தேவைப்படும் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம்
தற்போது அவசியமா.?

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு விவகாரத்தில்
பாதிக்கப்பட்டுள்ளது பணக்காரர்களா அல்லது ஏழைகளா..?

நாட்டில் 45 கோடி தினக்கூலிகள். பால்காரர்,
துணி சலவையாளர்கள் மற்றும் விவசாயிகள்,
பாஜக அரசின் ரூபாய் மதிப்பிழப்பு உத்தரவால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, 3 சதவீதம் ரொக்கமில்லா பரிவர்த்தனை
மட்டுமே நடந்து வரும் இந்தியாவில்.
உடனடியாக ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை
என்பது சாத்தியமா…?
அதற்கு உரிய பயிற்சியும், அவகாசமும் வேண்டாமா..?

பெரும்பாலான நகரங்களிலுள்ள மார்க்கெட் பகுதிகள்
வியாபாரம் நடக்கவில்லை. கையில் காசு இல்லாததால்,
வாங்குவோர் குறைந்து விட்டனர். பொருட்கள்
விற்காத காரணத்தால், அவற்றின் விலை குறைந்துள்ளது.
வந்த விலைக்கு விற்கிறார்கள்.

இது கையில் பணம் இல்லாததால் வீழ்ச்சியடைந்த
செயற்கை பண வீக்க குறைப்பு. இந்த நடவடிக்கை
இந்திய பொருளாதாரத்தை எதிர்மறைக்கு கொண்டுசென்று

வீழ்ச்சியடைச் செய்து விடவில்லையா..?
இது வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா .. ?

ரூபாய் மதிப்பிழப்பு நீக்கத்தின் உண்மையான விளைவை
உணர பிரதமர் நரேந்திர மோடி
ஏடிஎம்-களுக்கு நேரில் சென்று அங்கு மக்கள் படும்
கஷ்டத்தை நேரில் காண்பாரா..?

பணமதிப்பு நீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர் குறித்த

விவரங்களையும்,
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டவை
தொடர்பான குறிப்புகளையும் – ரிசர்வ் வங்கி வெளியிடுமா..?

http://www.dinamani.com/india/2016/dec/13
——————————————————————-

செய்தி தளத்திலிருந்து –

அன்பார்ந்த பிரதமர் திரு.#மோடி அவர்களுக்கு,

சென்னையிலிருந்து எழுதுகிறேன். தாங்கள் நலமாக
இருப்பீர்கள் என நம்புகிறேன். இங்கே நாங்கள்
யாரும் நலமாக இல்லை.

ஒரு நாள் இயற்கைச் சீற்றம் என்றவுடன் மூன்று நாட்கள்
மின்சாரம் தடை செய்யப்படும் நாடு இது. இயல்பு நிலை
திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனவும்
அத்துறை சார்ந்தவர்களாலேயே சொல்லமுடியாத நிலை
நிலவும் நாடு.

தங்களது டிஜிட்டல் இந்தியாவில் இது போன்ற நேரங்களில்
பணமில்லாப் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கும் என
நம்புகிறீர்கள்?

வெள்ளிக்கிழமை காலியான ஏடிஎம்கள் செவ்வாய் ஆகியும்
காலியாகவே இருக்கின்றன. இருக்கும் 2000 ரூபாய்
நோட்டுக்குச் சில்லறை கொடுப்பாரில்லை. இல்லாத
தொலைத்தொடர்பால் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் ஏன்,
விசிட்டிங் கார்ட்கூட கடைகளில் உபயோகித்து பொருட்கள்
வாங்க இயலவில்லை.

பணமிருந்தும் தேவையானவற்றை வாங்க முடியாத –

பொருளிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு
விற்க முடியாத நிலை எதிரிக்கும் வந்துவிடக்கூடாது.

ஆனால், உங்கள் நாட்டு பிரஜைகளுக்கு
வரவைத்துவிட்டிருக்கிறீர்கள். யாரையோ காயப்படுத்துவதாக
எண்ணி சாமானியர்களைச் சிறுகச் சிறுகச்
சாகடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

நாங்கள் அமைதியாகத்தான் இருப்போம். வரிசையில்
நின்றபின்னும், எங்கள் பணத்தை எங்கள் தேவைக்குக்
கொடுக்கமுடியாது என வங்கிகள் சொன்னால்
-கேட்டுக்கொள்வோம்.

தேவையானவற்றை வாங்க இயலாவிட்டாலும்
அமைதியாகவே இருப்போம். பலரும் எங்கள் அமைதியைத்
தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

உள்ளே கனன்றுகொண்டிருக்கும் எரிமலை
வெளிப்பார்வைக்கு அமைதியாகத்தான் இருக்கும்.
அழுத்தங்கள் மீறி, ஒரு நாள் அக்கினிக் குழம்புகள் சீறிக்
கிளம்புகையில் அதன் தாக்கங்கள் மிக அதிகமாக இருக்கும்.

நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

நன்றி.//
Hariharan Venkatraman//

————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to செய்திகளும், திரு.ப.சி.மற்றும் பொதுமக்களின் கேள்விகளும்…..

 1. தமிழன் சொல்கிறார்:

  பிரதமரின் அறிவிப்பு ஓரளவுக்கு கறுப்புப் பணத்தை ஒழிக்கும். டிஜிடல் பரிவர்த்தனை நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியம். வெளிநாடுகளில் பணப் பரிவர்த்தனையும் இருக்கிறது. அது வெகு குறைந்த அளவுக்குத்தான், அதுவும் சாதாரணப் பொருட்களை வாங்குவதற்குத்தான் (சிலசமயம் மளிகை, உணவு போன்றவை. அதிலும் காஃபிடே, சரவணபவன் தர உணவகங்களில் பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை). நம் நாட்டில், எப்படி மக்களை இந்தத் தொழிலதிபர்கள் (கடைக்காரர்கள்) கொள்ளையடிக்கிறார்கள்!. கார்டு பரிவர்த்தனை செய்யும்போது, consumerக்கு ஒரு chargeம் கிடையாது. ஆனால், கடைகளுக்கு வங்கிகள் 1% முதல் 2.5% வரை commission எடுத்துக்கொள்ளும். இது கடைகளுக்கு நன்மைதான். ஏனெனில் money handling risk மிகவும் குறைகிறது. Effectively 1- 1.5% commissionதான் கடைகளுக்கு. ஆனால் நம் நாட்டில் இந்தக் தொழிலதிபர்கள் (வேற யாரு எல்லாப் பெரிய கடைக்காரர்கள்தான், அதாவது மாதம் 5 லட்சத்துக்கு மேல் sales உள்ள கடைகள்), consumerஇடம் இந்தப் பணத்தை வாங்குகிறார்கள். இது உலகில் வளர்ந்த, வளரும் நாடுகள் எங்குமே நடப்பதில்லை. அப்படி consumerஐப் பயப்படுத்தி, பணமாகத் தந்தால் இந்த 2.5% charge செய்யமாட்டேன் என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கணக்குக் காண்பிக்காமல், கறுப்புப் பணமாக ஆக்குகிறார்கள். இந்த அநியாயத்தை, அராஜகத்தை எல்லோரும் செய்கிறார்கள். (மளிகைக் கடைகள் இதனைச் செய்வதில்லை) அரசுக்கு ஒழுங்காக வரி கிடைக்கவேண்டுமானால், டிஜிட்டல் பரிவர்த்தனை 90-95% க்கு மேல் இருக்கவேண்டும்.

  நம் நாட்டில், பணப் பரிவர்த்தனை ஒன்றுதான் பெரும்பாலும் இருந்தது. இதனால், யார் எவ்வளவு விற்பனை செய்கிறார்கள், அதன் வரி வந்ததா, பணம் கணக்குக் காண்பிக்கப்படுகிறதா என்பதெல்லாம் சுத்தமாகக் கண்டுபிடிக்கமுடியாத நிலைமை. தங்கம், பக்கத்து மளிகைக்கடை போன்று எல்லா இடங்களிலும் பணப் பரிவர்த்தனையால், ஏகப்பட்ட வரி ஏய்ப்பு. இதற்காகத்தான் அரசு 500/1000 ரூ வை விலக்கி மக்களுக்கு ஒரு அதிர்ச்சியையும் awarenessஐயும் கொண்டுவந்துள்ளனர். இது நிறைய பலன் அளிக்கக்கூடியது.

  நம் நாட்டில் கொள்ளையர்களுக்குப் பஞ்சமில்லை. இதை வெளிப்படையாக எழுதமுடியாது என்றாலும் பெரும்பான்மை அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பணத்தைச் சுருட்டுகிறார்கள். (இதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சிறுபான்மை என்று, நான் ‘பெரும்பான்மை’ என்று போட்ட இடத்தில் போட்டுக்கொள்ளலாம்). வங்கிகளுக்கு அனுப்பும் பணம், மக்களுக்குப் போய்ச்சேராமல், ரெட்டி போன்ற கொள்ளையர்களுக்கு யாரால் சென்று சேர்கிறது? வங்கி அதிகாரிகளால்தானே. . அவர்களை suspend செய்யக்கூடாது. Dismiss செய்வது மட்டுமல்ல, அவர்களது சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் (நாட்டு நலனுக்காக எண்ணி அரசு ஒரு செயலைச் செய்யும்போது, அதில் தில்லு முல்லு செய்பவர்கள், பணியில் இருந்த அத்தனை வருடங்களும் கொள்ளைதானே அடித்திருப்பார்கள்). பொதுமக்களும் இத்தகைய கொள்ளையர்களுக்குத் துணைபோவது (வரிசையில் நின்று புதிய நோட்டுக்களை அவர்கள் சார்பில் பெறுவது) வருந்தத்தக்கது.

  ப.சி அவர்கள் எதைச் சொன்னாலும் அதில் அர்த்தம் இல்லை. அவருக்கு அதிகாரம் இருந்தபோது, நேர்மையாக அவர் பையனே 3-4 வருடங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் பண்ணமுடிந்தது. அவருக்கு எங்கே கறுப்புப் பணத்தைப் பற்றியோ அல்லது இந்தியாவின் நலனைப் பற்றியோ சிந்திக்க நேரம் இருந்தது? அவர் அறிவுரை கூறக் கொஞ்சம்கூடத் தகுதியானவர் அல்ல. ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது ப.சி அவர்களுக்கும் கருணானிதி அவர்களுக்கும் மிகவும் பொருந்தும். அவர்களுக்கு அதிகாரம் இருக்கும்போது, தன்னுடைய, தன் குடும்பத்தின் நலனுக்காக உழைப்பார்கள். அதிகாரம் போனபின்பு, அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன என்ன செய்து மக்கள் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று விலாவாரியாக உபதேசம் செய்வார்கள்.

  நிற்க… இந்தப் பணப்பிரச்சனை, நிறையபேரை வாட்டுவது உண்மை. இதனை அரசு உடனே தீர்க்கவேண்டும். எங்கும் 2000 ரூ கிடைக்கிறது. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதாவது, ஒருவர் சேமிப்பிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 2000ரூ வை செலவழிப்பது கடினமாக இருக்கிறது. அதாவது, 100, 50 ரூ அல்லது சில்லரைகள் தேவையான அளவு புழக்கத்தில் இல்லை. இந்திய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டில் இருப்பவர்கள். அதாவது, ஒரு நாளைக்கு 100 ரூக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் (மேன்மைமிகு மன்மோகன் சிங், ஒரு நாளைக்கு 25 ரூக்கு மேல் சம்பாதித்தால் பணக்காரர்கள் categoryல் கொண்டுவந்திருந்தார்). அவர்கள் எப்படி பொருட்களை வாங்கமுடியும்? அரசு உடனே, 50, 100, வேண்டுமானால் 200 ரூ வை நிறைய புழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும். இதைச் செய்யவில்லையானால், அந்த 75% பொதுமக்களின் எரிச்சலையும், வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்ள வேண்டியதுதான். இந்த எரிச்சல் பாஜகவை நிச்சயமாகப் பாதிக்கும்.

  5 லட்சத்துக்கு மேல் தனி ஒருவர் அல்லது குடும்பம் 2000 ரூ (அதாவது 250 நோட்டுக்குமேல்) வைத்திருந்தால், அரசுடமையாக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்தால், ஒருவேளை ரெட்டி போன்ற கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தலாம்.

  • G.Rameshkumar சொல்கிறார்:

   Mr.தமிழன்,

   When you write so much in favour of Govt. decision,
   why not you also explain the failures on these points ?

   //“வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி பழைய நோட்டுகள்
   திரும்ப பெறப்பட்டுள்ளன –

   பதிலுக்கு வங்கிகளில் இருந்து, ரூ. 4 லட்சத்து
   61 ஆயிரம் கோடி பணம் (மட்டுமே) பொது மக்களுக்கு
   விநியோகிக்கப்பட்டுள்ளது ”//

   //ஆனால், 13 முக்கிய நகரங்களில் உள்ள
   647 ஏடிஎம்களை நமது
   எக்ஸ்பிரஸ் நிரூபர்கள் ஆய்வு செய்ததில்,

   69.7% ஏடிஎம்கள் கடந்த ஒரு மாத காலமாக –
   திறக்கப்படாமலேயே இருப்பது
   தெரிய வந்துள்ளது.//

   // வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் அளவுக்கு ரொக்கப் பணத்தை
   பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மத்திய
   அரசின் அறிவிப்பு. ஆனால் மக்களால் அந்த அளவுக்கு
   பணத்தை ஏன் பெற முடியவில்லை…?//

   // மத்திய அரசு பணப் பரிமாற்றத்திற்குத் தேவையான
   ரூபாய் நோட்டுகள் நாட்டில் உள்ளது எனத்
   தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில், வங்கிகளில்
   ஏன் பணமில்லை.?//

   • தமிழன் சொல்கிறார்:

    ரமேஷ்குமார் அவர்களே!

    நீங்கள் எழுப்பியிருப்பது நியாயமான கேள்விகள். என்னிடம் பதில் இல்லை.. ஏடிஎம்கள் திறக்கப்படாதது (சொல்லமுடியாது… இங்க போடற பணத்தைப் புறவாசல் வழியா ரெட்டிகளுக்கு அனுப்பிவிடுகிறார்களோ என்னவோ), தேவையான புது நோட்டுக்கள் இன்னும் வந்துசேராதது, எப்போதும், ‘இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை சீர்ப்படும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பது, அரசே, காரணமாகத்தான் குறைந்த அளவு நோட்டுகள்தான் வெளியிட்டுள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லியது, 50/100ரூ தேவையான அளவு மார்க்கெட்டில் புழங்காதது ஆகியவை கவலை தரக்கூடியது மட்டுமல்ல, பொது ஜனங்களுக்கு எரிச்சல் தரக்கூடியது. இது நாளாக நாளாக மாற்றமுடியாத மனவெறுப்பை உண்டாக்கி தேர்தலில் வெளிப்படக்கூடியது. நீங்கள் groundல் இருப்பதால் உங்களுக்கு நேரிடையான பாதகங்கள் தெரிகின்றன. எனக்கும் இன்னும் 2 வாரங்களில் அனுபவம் கிட்டும்.

    உங்கள் எல்லோரின் தகவலுக்காக. வெளிநாட்டில், 2000 ரூ நோட்டுக்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு எக்ஸ்சேஞ்ச் களில் கிடைக்கின்றன. ஆனால், அதற்குக் குறைவான மதிப்புடைய நோட்டுக்கள் இல்லை.

    ஒன்றுமே செய்யாமல் செயல்படாமல், யாரும் எக்கேடு கெட்டுப் போங்கள் என்றிருந்த மன்மோகன் அரசைவிட, இதைச் செய்து பார்ப்போமே என்று துணிந்து பிரதமர் அவர்கள் இறங்கியிருக்கிறார். நல்லது என்றுதான் மனதுக்குப் படுகிறது.

 2. இளங்கோ சொல்கிறார்:

  // ஒரு நாள் இயற்கைச் சீற்றம் என்றவுடன் மூன்று நாட்கள்
  மின்சாரம் தடை செய்யப்படும் நாடு இது. இயல்பு நிலை
  திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் எனவும்
  அத்துறை சார்ந்தவர்களாலேயே சொல்லமுடியாத நிலை
  நிலவும் நாடு.

  தங்களது டிஜிட்டல் இந்தியாவில் இது போன்ற நேரங்களில்
  பணமில்லாப் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கும் என
  நம்புகிறீர்கள்? //

  • தமிழன் சொல்கிறார்:

   எனக்கு நினைவு தெரிந்த காலத்தில், பஸ்சில் செல்வது ஆடம்பரம், அபூர்வம். டிஃபன் நிறைய வீடுகளில் அபூர்வம். அரிசிச்சாதம் 70 சதவிகிதத்துக்கு மேல் உள்ள வீடுகளில் வருடத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ… போன், குளிர்சாதனம் இவைகளை, நடுத்தர மக்கள்கூடக் கனவு காண இயலாது. எல்லாவற்றிலும் ‘நினைக்கமுடியா அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

   டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கும். அபூர்வமாக தடைகள் ஏற்படும்போது பணப்பரிவர்த்தனை நடக்கும். மக்கள் disciplinedஆக நடக்கத்தான் வேண்டும்.

   இந்தியா என்பதை ஒரு பெரிய குடும்பம் எனக்கருதினால், குடும்ப உறுப்பினர்கள் அவரவர்களுடைய வருமானத்தைப் பதுக்கிவைத்தால், எப்படி குடும்பத்தை நடத்த இயலும்? அரசியல்வாதிகளை மட்டும் குறை சொன்னால், அவர்களை அயல்நாடுகளா தேர்ந்தெடுக்கின்றன? குடும்பம் முன்னேற நன்றாகச் சம்பாதிப்பவர்களும் (தொழிலதிபர்கள்), சம்பாதிக்க இயலாமல் கஷ்டப்படுபவர்களும் (விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள்), குடும்பத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் சோம்பேறிகளும், குடிகாரர்களும், எல்லோரும்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நன்றாகச் சம்பாதிப்பவர்களுக்கு குடும்பத் தலைவர் சாதகமாகவும், கஷ்டப்படுபவர்களுக்கு கஷ்டத்திலிருந்து தூக்கிவிடும்வகையிலும்தான் தலைவர் செயல்பட முடியும்.

   எடுத்த முடிவு கஷ்டமாக இருக்கலாம். இன்னும் நல்லா சிந்தித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு. தலைவர் கடவுள் இல்லை. நல்லதை நினைத்துத்தான் முடிவு எடுத்திருப்பார்.

   ‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்” –

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  utter chaos,very poor implementation Erring bank officials should be punished

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Very well said MThamizhan. Your views are unbiased and honest I I feel.Especially your
  reply to Mr.Rameshkumar shows your honesty and unbiased opinion. Best wishes…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பிரதமரின் மாறும் பிரச்சார உத்தி:

   கருப்புப் பண ஒழிப்பு என்பதிலிருந்து
   “பணமற்ற சமூகம்” – cashless soceity
   என்று மாறி விட்டதன் பின்னணி –

   உண்மை நோக்கமே cashless soceity -யையும்,
   அனைத்து பரிமாற்றங்களையும் வங்கிகள் மூலம்
   கொண்டு வருவது தான். கருப்புப்பண ஒழிப்பு
   என்பது ஒரு கவர்ச்சிகரமான முகமூடி.

   ஏன் cashless soceity..?
   காய்கறி, கனிகள் விற்பனை செய்பவர்களிடமிருந்து
   துவங்கி, டீக்கடைகள், பெட்டிக்கடைகள்,
   சிறு மளிகைக்கடைகள், சிறு,குறு வர்த்தகர்கள்,
   electricians, plumbers, mechnics என்று அத்தனை
   வகையினரையும் – வரிக்கட்டமைப்புக்குள்
   கொண்டு வந்து, நேரடி மற்றும் மறைமுக வரி
   வருமானத்தை அதிகரிக்க…

   சேமிப்புகளையும், கடன் பரிவர்த்தனைகளையும்
   தனியாரிடமிருந்து கைப்பற்றி – அரசு நிதியமைப்புகள்,
   தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ்
   நிறுவனங்கள் வசம் கொண்டு வருவது…

   கையில் பணம் வைத்து செலவழிப்போர் எல்லாரும்
   கருப்புச் சந்தைக்காரர்கள் என்று மூளைச்சலவை
   செய்து, அனைவரையும் பணப்பரிவர்த்தனை
   அட்டைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர –

   டிஜிட்டல் பேமண்ட் ஆப்கள், இ-வாலட் நிறுவனங்களை
   பெரிய அளவில் வளர்த்து விடுவது…
   ( நேற்றைய ஒரு செய்தி கூறுகிறது – mastercard –
   மூலமான பரிவர்த்தனை கடந்த ஒரு மாதத்தில்
   10 மடங்கு அதிகரித்திருக்கின்றதாம்…
   இந்த நிறுவனங்கள் இந்த சேவையை சும்மாவா
   செய்கின்றன…? )

   ————————————

   இதையெல்லாம் நான் கூறவில்லை.
   தமிழ் ஹிந்துவில்-

   ” பணமற்ற பொருளாதாரம்: பிரதமரின் மாறும்
   பிரச்சார உத்தியும் பின்னணியும்”

   என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும்
   கட்டுரை கூறுகிறது.

   விவரமாக படிக்க விரும்புவோருக்கு –

   • LVISS சொல்கிறார்:

    Most the money transactions will come under digital transaction –This is the main advantage of less cash society – If a person doesnt have income over the exemption limit he need not worry about paying tax –In what way the small traders who have small incomes are going to be affected –Actually the small traders ,if they are able to substantiate their income to get loans from the banks it would be easy if they can show proof of their income thro the recorded digital transactions because the ability to repay loans comes from having enough income —Having an idea about the income will make it easy for a bank to assess the loan requirements of a trader or any businessman–
    The PM says they will reveal their cards one by one and that they are proceeding with full scale design in mind –Which means that the idea of cash less society was already there and is not an after thought —

 5. srinivasan k iyer சொல்கிறார்:

  hari do not shed crocodile tears….where were you before demonetization ? did you even write a single article on the under privileged or below poverty line people ? did you raise your voice when Manmohan singh right hand …montek singh aluwalia said that it was sufficient if one yearns only twenty rupees ….that the commoner can push off his life every day…where were you at that time..dont throw mud on BJP and PM just because you have not understood the ground reality of the govt surrounded by political mafias and goons ….you know that every day of operation of parliament cost around ten crores ? that the parliament of the winter session is completely wiped off and this happening continuously for the last ten years…where were you then ? don’t accuse Modi alone that he is responsible for all the inconveniences that are bound to arise because of demonetization and he is doing his best to save India from the clutches of these corrupt bureaucratic gangs and political mafias ..terrorists pum[ing money through stock exchanges to make further money at the cost of the Indian Republic..do you know all these thinngs ? better have some reasoning and logic and do some exercise before you spill the beans…thanks …

 6. selvarajan சொல்கிறார்:

  ” பணமற்ற பொருளாதாரம் ” ஒலிக்க நன்றாக உள்ளது — நடைமுறைக்கு ஒத்துவருமா … என்பது கேள்வியே … இதையே முன்பு கைக்கொண்ட ” அமெரிக்க சப் பிரைம் ” பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பல நாடுகள் சீரழிந்தன என்பது கண்கூடு —-. அதற்குக் காரணம் அங்கு பரிவர்த்தனை அனைத்தும் வங்கிகளில் நடந்தது தான்….. அந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம் நிலைத்து நின்றதற்குக் காரணம், இங்கு பணத்தைக்கொண்டு ரொக்கமாக நடைபெற்றது தான். என்பதை உணர்ந்தும் இதை செய்வது வேடிக்கையானது

  அனைத்து பொருட்களிலும் மறைமுக வரி–கல்வி வரி–சேவை வரி— விற்பனை வரி என்று அனைத்துக்கும் நாம் கட்டிக்கொண்டு இருக்கும் போது — கீரைக்கும் — டீ தண்ணிக்கும் — வெங்காயத்துக்கும் கூட அட்டையை தேய்த்து அதற்கும் ஒரு எக்ஸ்டரா தொகையை அழ வேண்டும் என்றால் — எப்படி … ? சாதாரண மக்களுக்கு கெடுபிடிகளை உருவாக்கி விட்டு —

  கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை —7.5 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி,
  இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்க ஏற்பாடு….. செய்வதோடு — வங்கிகளை ஏமாற்றுபவர்களுக்கு — ” வினோதமான பட்டப்பெயரை ” சூட்டி ஆனந்தப்படும் — இவர்களை என்னவென்று சொல்வது
  50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். 50 நாட்கள் கழித்து பாருங்கள் என்கிறார் நம் பிரதமர் — பார்க்கத்தானே போகிறோம் …. !
  விலைவாசி இறங்கிவிடுமா?– –வேலை வாய்ப்புகள் பெருகி விடுமா?– கருப்புப் பணம, கள்ளப் பணமோ 50 நாட்களுக்குப் பிறகு இருக்கவே இருக்காதா ? நீர்வளம் — நிலவளம் -கனிமங்கள் — காடுகள் — காக்கப்படுமா?— சிறுவணிகம்
  விவசாயம் செழியத்து விடுமா ?
  பங்குச் சந்தை— வணிக சூதாட்டங்கள் நிறுத்தப்படுமா? இன்னும் எவ்வளவோ இருக்கிறது …

  அய்யா … ! நம்முடை சேமிப்பு பணத்தை – அவசரத்திற்கு கேட்டும் கொடுக்காத ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தது 100 — நபர்கள் சென்று எங்களுடைய கணக்கை முடித்துக் கொள்கிறோம் { account closing } என்று கேட்டால் என்ன நடக்கும் … ? ஹி …ஹி .. ஹி …!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இன்று மக்கள் இருக்கும் மன நிலையில்,
   நிறைய பேர் அதைச் செய்யவே விரும்புவார்கள்…

   ஆனால் ஏற்கெனவே நிறைய விதங்களில்,
   நாம் பந்தத்தில் கட்டுப்பட்டு விட்டோம்…. 🙂 🙂

   LPG subsidy, term deposits, etc..etc..

   என்ன செய்வது…
   கட்டுண்டோம், பொறுத்திருப்போம்…
   காலம் மாறும் … காத்திருப்போம்…!!!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 7. LVISS சொல்கிறார்:

  I think Cash less society ( less of cash transaction) was misread as cashless society (bereft of any cash transaction )–Today in an interview Mr Gurumooorthy said that when he asked Modi whether he meant cashless society he was told it was cash less (or less cash ) society —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.