கெஜ்ரிவால் வழியில் ராகுல் காந்தி….!!!

அதிகம் மெனக்கெடாமல், ஊடகங்களில் விளம்பரம்
பெற திருவாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நிறைய உத்திகள்
வைத்திருக்கிறார்.

அதில் ஒன்று – யார் மீதாவது சீரியசாக எதாவது
குற்றச்சாட்டை கூறிவிட்டு போய்க்கொண்டே இருப்பது.

அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதையும்
கொடுக்காமலும், குற்றச்சாட்டை தொடர்ந்து, அதனை
நிரூபிக்க எந்தவித மேல் முயற்சிகளும் எடுக்காமல்
இருப்பதும் அர்விந்த் கெஜ்ரிவாலின் வழக்கம்.

கொஞ்ச நாட்களாகவே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய
துணைத்தலைவர் திரு.ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவாலை
தனது அரசியல் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டிருப்பதாகத்
தெரிகிறது.

கெஜ்ரிவாலின் பல பாணிகளை அவரும் கையாளத்
தொடங்கி இருக்கிறார்.

அதில் லேடஸ்ட் –

செய்தியாளர்களிடம் ”

” பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல்
என்னிடம் இருக்கிறது…. அதை நான் பாராளுமன்றத்தில் தான்
சொல்ல விரும்புகின்றேன்….

அதை நான் பாராளுமன்றத்தில் பேசினால்,
பூகம்பம் வெடிக்கும்…. அதனால் தான் என்னை பேச
அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்….”

என்று கூறி இருக்கிறார்….

இவரிடம் ஆதாரபூர்வமான தகவல் எதுவும் இருக்குமானால்
அதை அதே செய்தியாளர் கூட்டத்திலேயே வெளியிட்டு
இருக்கலாம். அந்த செய்திக்கு நிச்சயம் உரிய விளைவு
கிட்டியிருக்கும்.

ஆனால், அவர் பாராளுமன்றத்தில் தான் சொல்வேன்
என்பதன் காரணம் –
ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும்…..!!!

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை ஒருவர்
பொதுவெளியில் கூறினால் வழக்குகளை சந்திக்க நேரிடும்.

ஆனால், பாராளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ –
உறுப்பினர்கள் பேசும் பேச்சுக்களுக்கு – அரசியல் சட்டம்,

சிவில்/கிரிமினல் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு
தருகிறது. அங்கே எதைச் சொன்னாலும், வெளியில்
வழக்கு தொடர முடியாது…

எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீச
சிறந்த இடம் நமது நாட்டில் பாராளுமன்றமும்,
சட்டமன்றங்களும் தான்.

( உறுப்பினர் பேசிய பிறகு, அந்த பேச்சை நீக்கிவிட
சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும் கூட,
பேசிய நபருக்கும், அவரது பேச்சுக்கும் – ஏற்கெனவே
மிகப்பெரிய விளம்பரம் கிடைத்திருக்கும் ….!!! )

கொஞ்சம் கொஞ்சமாக, திருவாளர் ராகுல் காந்தி
அரசியல் பாடங்களில் உரிய பயிற்சிகளைப்
பெற்று வருகிறார் என்பது புரிகிறது……!!!

அதுவும் சரி தான்….
பின் என்ன, இன்னும் எத்தனை காலம் தான்
இந்த நாட்டின் எதிர்கால பிரதமர்
குழந்தையாகவே இருப்பது…..? 🙂 🙂

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கெஜ்ரிவால் வழியில் ராகுல் காந்தி….!!!

 1. G.Rameshkumar சொல்கிறார்:

  K.M.

  //பின் என்ன, இன்னும் எத்தனை காலம் தான்
  இந்த நாட்டின் எதிர்கால பிரதமர்
  குழந்தையாகவே இருப்பது…..?🙂🙂//

  pinnitteenga sir.

 2. Sundar Raman சொல்கிறார்:

  எல்லாம் தெரிஞ்சா சரிதான் .

  மோடிக்கு எதிரா இந்த மாதிரி ஆசாமிகள் ( சரியாய் சொல்வதானால் சைத்தான் என்று தான் சொல்லவேண்டும்) நின்றால் , மோதி தன்னுடைய சாதாரண உயரத்தை விட மிக உயரமாக தெரிவதில் வியப்பு ஏதுமில்லை .

  • இளங்கோ சொல்கிறார்:

   Mr.Sundar Raman

   // எல்லாம் தெரிஞ்சா சரிதான் . //

   இதைச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

   What do you know about this blogsite ?
   மே 2014-க்கு முன்னால் உள்ள கட்டுரைகளை எல்லாம் போய் கொஞ்சம் படித்து பாருங்கள்.
   அப்போது பெரிய பெரிய காங்கிரஸ் தலைகள் எல்லாம்
   இங்கே எப்படி அடித்து, துவைத்து, தொங்கப்
   போடப்பட்டனர்
   என்பது தெரிய வரும்.
   மோதி’ னின்றால், உட்கார்ந்தால், குனிந்தால்
   “ஆஹா பேஷ் பேஷ்” என்று தாளம் போடும்
   ஜால்ரா கூட்டங்கள் எல்லாம் மோதி ஜெயித்து
   பதவிக்கு வந்த பிறகு இங்கு வந்து சேர்ந்த கும்பல் தானே ?
   அதற்கு எப்படி தெரியும் இந்த தளத்தின் அருமை ?

   ராகுல் காந்தி குட்டை என்று
   சொன்னால், உடனே மோதி நெட்டை என்று ஆகி விடுமா ?
   குட்டை எப்போதும் குட்டை தான்.
   பக்கத்தில் இன்னொரு குட்டை நிற்பதால் குட்டை நெட்டை ஆகி விடாது.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்ப இளங்கோ… 🙂 🙂

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

   • Sundar Raman சொல்கிறார்:

    நீங்களே கொஞ்சம் திரு கா.மையின் இந்த கட்டுரையை திருப்பி படிக்கவும் … எல்லாம் தெரிஞ்சா சரி தானுக்கு அர்த்தம் புரியும் .( தலைப்பையும் கவனிக்கவும்)
    காங்கிரஸ் தலைவர்களை ( தலைவிகளை) கடந்த காலத்தில் துவைத்து போட்டததால் …இப்போ அதுக்கு பிராயச்சித்தம் செய்யணும்னு அவசியம் இல்லை . மோடி மீதுள்ள தவறை உரக்க கூவுங்கள் , நன்றாக எழுதுங்கள் , அதில் உண்மை இருந்தால் அது காலம் கடந்து நிற்கும் , மேலும் சில நல்ல தலைவர்கள் பாஜகாவில் இருப்பதால் , அந்த விமர்சனத்தை பார்த்து அவர்கள் திருத்தி கொள்ள உதவும் .

 3. G.Rameshkumar சொல்கிறார்:

  Vow Elango – appadi podunga.

 4. தமிழன் சொல்கிறார்:

  ” பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல்
  என்னிடம் இருக்கிறது…. அதை நான் பாராளுமன்றத்தில் தான்
  சொல்ல விரும்புகின்றேன்….” – எனக்கு இதைப் படிக்க சிரிப்புதான் வருகிறது. அதுவும் ஊழலுக்காக (ஊழல் இல்லை. பகல் கொள்ளை) மட்டுமே தூக்கி எறியப்பட்டது காங்கிரஸ். மோடி அவர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி result காண்பிக்கவில்லையானால், இந்தியாவில் regional parties அதன் பலனை அறுவடை செய்யும். நிச்சயமாக காங்கிரஸ் செய்யாது என்பது என் கணிப்பு. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதே ராகுல்ஜி தன் ஆளுமையைக் காண்பிக்கவில்லை. வெறும் மோடிஜி எதிர்ப்போ, மக்கள் பாஜகவிடம் ஏமாற்றமடைவதோ காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டுவரும் என்று தோன்றவில்லை. தனிப்பட்ட முறையில் ராகுல்ஜி நல்லவர் என்றே தோன்றுகிறது.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பைத்தியம் முற்றியது –

  இன்றைய அறிவிப்பு –

  டிஜிதன் வியாபாரி யோஜனா
  லக்கி கிரகாஹ் யோஜனா

  மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க
  ரூபாய் 125 கோடியில் திட்டம் – மத்திய அரசுக்கு
  நிதி ஆயோக் பரிந்துரை .

  நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி-
  மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்
  வகையில் ரூபாய் 340 கோடியில் 2 பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

  மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு
  சிறப்பாக செயலாற்றும் 7 ஆயிரம் வியாபாரிகளுக்கு
  டிஜிதன் வியாபாரி யோஜனா திட்டத்தின் மூலம்
  வாரந்தோறும் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசும்,
  டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை
  சிறப்பாக மேற்கொள்ளும் 15 ஆயிரம் நுவர்வோருக்கு
  லக்கி கிரகாஹ் யோஜனா திட்டத்தின் மூலம்
  நுகர்வோருக்கு குலுக்கல் முறையில் நாள்தோறும்
  தலா ரூபாய் 1000 பரிசும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  பரிவர்த்தனைகளை
  சிறப்பாக மேற்கொள்ளும் 15 ஆயிரம்
  நுவர்வோருக்கு – என்றால் என்ன அர்த்தம்…?
  அதிகமாக செலவழிக்கும் 15 ஆயிரம் பேருக்கா…?

  இதன் பெயர் கருப்புப் பண ஒழிப்பா…?
  அல்லது புதிய லாட்டரி திட்டமா…?

 6. LVISS சொல்கிறார்:

  It is surprising why Raghul should follow the methods of kejriwal —
  Raghul may not say this outside because the PM may not take this one lightly –

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.