ஜெ. மறைவு குறித்து டெல்லியிலிருந்து வரும் சில செய்திகள் ….

 


டெல்லியிலிருந்து, குறிப்பாக NDTV மற்றும்
CNN-18 தொலைக்காட்சி வட்டாரங்களிலிருந்து
வரும் செய்திகள் – இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா
என்று பதற வைக்கின்றன… NDTV செய்தி ஆசிரியர்
பர்கா தத் எழுதியுள்ள சில விஷயங்கள், பின்னணியில்
ஒரு சதி நடந்திருக்கலாமோ என்கிற சந்தேகத்தை
எழுப்புகின்றன. நான் அனைத்தையும் இங்கே
விவரமாக எழுத விரும்பவில்லை….

இங்கே அம்மா அம்மா என்று
அரற்றியவர்கள் அனைவரும் மனசாட்சியை
பதவிக்கும், பணத்திற்கும் விற்று விடுவது
வெளிப்படையாகவே தெரிகிறது….

கவலைக்கும், துன்பத்திற்கும்,
சோகத்திற்கும், பதிலாக –

பதவியில் இருப்போர்
அதனை தக்க வைத்துக் கொள்ளவும்,

இல்லாதோர் அதை பிடித்துக் கொள்ளவும்
காட்டும் அவசரமும், வேகமும்,
விரைந்து போடும் திட்டங்களும் தான்
அவர்களிடையே முந்தித் தெரிகிறது…
அதுவே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் –
ஒரு முழுமையான, வெளிப்படையான,
விசாரணை அவசியம்
என்றே தோன்றுகிறது….

தவறேதும் நடக்கவில்லை என்றே
வைத்துக் கொண்டாலும் கூட,
எழுந்துள்ள சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்க
அது அவசியமாகத் தெரிகிறது….

நீதிமன்றம் தலையிட்டால் தான் உண்டு….

fp

jj-health-burkha-tweet

jj-health-tweet-3

jj-indiatoday-news-headlines

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஜெ. மறைவு குறித்து டெல்லியிலிருந்து வரும் சில செய்திகள் ….

 1. Surya சொல்கிறார்:

  Only solution is to do post-mortem, but I don’t think it will be ever done.

  Sad to see such a discussion after a CM’s death…

 2. surya சொல்கிறார்:

  truth won’t come out. center also knows a to z about this task.
  they will use the chance.

 3. paamaranselvarajan சொல்கிறார்:

  பலவித சந்தேகங்கள் : மாலை ஐந்து மணி இறப்புசெய்தி தந்தி டி.வி பாண்டே கைங்கர்யம் , தாெண்டர்கள் ஆவேசம் , அப்பல்லாே உடனடி மறுப்பு , மந்திரிகள் .. நிரவாகிகள் மருத்துவணையில் ஆலாேசனை , மும்பையில் இருந்து கவர்னர் வருகை…

  இரவு 11.30 முதல்வர் இறப்பு ஆதாரபூர்வ அறிவிப்பு , உடல் பாேயஸ் கார்டன்செல்லல்.. மந்திரிகள் கவர்னர் மாளிகை வருகை . நல்லிரவில் முதல்வராக பன்னீசெல்வமும் மற்ற மந்திரிகள் பதவியேற்பு …

  உடனடியாக ஜெயா ” முன்னாள் முதல்வராக ” ஆக்கியது , அதன்பின் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை , உடலை சுற்றி சசிகலாவின் கூட்டம் , மக்கள் அஞ்சலி , டி.வி.க்கள்நேரடி ஒலிபரப்பு ..ஜெயா புகழ் பாடுதல் .. மாலை அரசு மரியாதையுடன் அடக்கம்….

  மறுநாள் சசிகலா மற்றும் அமைச்சர்கள் நினைவிடத்தில் கண்ணீர்.? சிந்தி அஞ்சலி, உண்மையான தாெண்டரகள் பல இடங்களிலிருந்து வந்து இன்று வரை அஞ்சலி செலுத்தய வண்ணம் உள்ளனர் ….. அடக்கம்செய்த மூன்றாவது நாளிலிருந்து காட்சிகள் மாறி வருவது அனைவருக்கும்தெரியும்.

  கார்டனில் முப்பது டிகிரி அளவுக்கு சசியின் முன் குனிந்து கூழைக்கும்பிடு பாேட்டு முக்கிய நிர்வாகிகள்… மந்திரிகள் மற்ற கட்சியினர் … துக்கத்திற்கு மாெட்டை அடித்தவர்கள்… பலரும் அவரை ” வலுக்கட்டாயமாக”.? கட்சியை காப்பாற்றவும் … பாெ .செயலாளராக பதவி ஏற்கவும் வற்புறுத்துவது … விருப்பமே இல்லாத சசிகலாவுக்கு ?பெறும் சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிற இந்த தருணத்தில் ….

  இவ்வாறானசெய்திகள் வருவது நியாயமா என்று பாென்னையன் பாேன்றவர்கள் கேட்கிறார்கள்… கட்சியின் விதிகளை மாற்றி தற்பாேதைய ” சின்னம்மா … புரட்சித்தாேழி” அவர்ளை எப்படியும் பதவியில் அமரவைத்து துதிப்பாடி … கும்பிடு பாேடுவதே எங்களின் ஒரே கடமை என்று .. அம்மா இறந்த பத்தாம் நாளிலேயே … நாங்கள் அலைவது எங்களுக்காக அல்ல… அம்மா ஆன்மா சாந்தியடையவும் … கட்சியை நிறுவியவரின் நூற்றாண்டை காெண்டாடவுமே .. நாங்கள் அனைவரும் பாடுபடுகிறாேம் …

  ஆனால் எந்த பதவிக்கும் ஆசையில்லாத தாெண்டர்களும் ..நேர்மையானவர்களும் .. சசிகலா பதவிக்கு வருவதை தடுக்கவும் … எங்களின் உணர்வுகளை கெடுக்கவும் … வீண்பழிகளையும் …சந்தேகங்களையும் கிளப்பி விடுவது சரியா….?

  .சரி … சரி … நாங்கள் எல்லாேரும் பதினாேறாம் நாள் துக்கம் அனுசரிக்கவும் … புரட்சித்தாேழிக்கு பேனர்வைத்து அவர் புகழ் பாடவும் …செல்ல வேண்டி உள்ளதால் ” இறப்பு மர்மத்தை பற்றி பிறகு பார்ப்பாேம்….. பாென்னையனும் . மற்ற சகாக்களும் டாட்டா …..பை…பை … யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லைதானே …..?

 4. GVS சொல்கிறார்:

  டெல்லி டிவிக்களுக்கு இருக்கும் ஆர்வம் கூட
  தமிழக டிவிக்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் இல்லாதது ஏன் ?
  இதைப்பற்றி யாரும் விவாதிக்க முன்வராதது ஏன் ?
  கேடிகள் கோடிகளில் விளையாடி விட்டது தான் காரணமா ?

 5. GVS சொல்கிறார்:

  யாராவது முன்னெடுத்தால், பெருமளவில்
  மக்களின் கொந்தளிப்பு வெளிப்படும் என்பது மட்டும் உண்மை.
  மக்களின் மவுனம் தற்காலிகமானது.

 6. இளங்கோ சொல்கிறார்:

 7. தமிழன் சொல்கிறார்:

  இதனை முற்றிலுமாக நான் நம்பவில்லை. அதிமுக intact ஆக இருக்க ஒரு தலைவர் தேவை. அதிகாரத்தில் இருப்பவர்கள் (மாவட்டச் செயலாளர்கள், எம்ஏல்ஏக்கள், எம்பிக்கள் போன்றவர்கள்) தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டும். காலம் அந்தத் தலைவரின் பழைய கறைகளை, அவரின் வருங்காலச் செயல்களால் அகற்றும் என்று நம்புகிறேன். ஜெ.வின் தைரியம் வர வருடங்களாகும். இப்போதைக்கு கட்சியை intactஆக வைக்க பாஜகாவுக்காக சில compromise பண்ணவேண்டிவரலாம். ஏனென்றால் ஜெ இருந்தபோது இருந்த சக்தி இப்போது அதிமுகவுக்குக் கிடையாது.

  இப்போது ச்சிகலாவைக் குறைகூறுபவர்களின் agenda வேறு. அவர்கள் அதிமுக நன்மையை எதிர்பார்ப்பவர்கள் இல்லை. அவர்கள் திமுக, பாஜக கட்சியின் நன்மைக்காகப் பேசுபவர்கள் என்பதில் நான் உறுதியான கருத்து கொண்டிருக்கிறேன். கட்சியின் நன்மைக்காக சில compromiseகளைச் செய்கிறது.

  5 மணிக்குத்தான் ஜெ மறைந்திருக்கவேண்டும். அன்று காலையே அதிமுக ஓபிஎஸ் போன்ற சீனியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். 2 மணிக்கே எல்லோருக்கும் நம்பிக்கை போயிருக்கவேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக ஊர் உறங்கியபிறகு தெரிவித்தார்கள். (அப்போலோ, அதன் ஊழியர்களை 3:30க்கு கிளம்பச் சொல்லியது. நாரதர் சு.சு 6 மணிக்கு செய்தியை எதிர்பாருங்கள் என்று சொன்னது. Reputed media 5 மணிக்கு announce செய்தது). 75 நாட்களாகவே எதிர்பார்த்த செய்தி, வருத்தம், முந்தின நாளே முடிவு தெரிந்தது எல்லாமே அதிமுக தலைவர்களின் அழுகையை ராஜாஜி ஹாலில் குறைத்துவிட்டது. அப்படியும் ஓபிஎஸ் அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  யார் இந்த சசிகலா புஷ்பா? கட்சித் துரோகி, எதிரியான திமுகாவுடன் சேர்ந்து கட்சியைக் காட்டிக் கொடுத்தவர். ஜெவைப் பற்றி பாராளுமன்றத்தில் குறை சொன்னவர். அவர் அஜெண்டாஅதிமுகவின் அழிவு, பிளவு. தொண்டர்களுக்கு இது தெரியாதா?

  ஜெ அறிவுள்ளவர், able person என்று நம்பினால், அவர் 35 வருடங்களாக சொந்தபுத்தி இல்லாமல் சசிகலாவை நம்பி அவரின் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்று சொல்வது அறிவீனமல்லவா? தற்போதைய ஒரே அஜெண்டா அதிமுகவின் stability. அதற்கு மாறாக inner agendaவுடன் எழுதும் எதையும் மனம் நம்ப மறுக்கிறது. (Unless we all accept that AIIMS, Foreign doctors, reputed apollo, Central Govt, Governor, Congress Leader, தமிழக தலைமைச் செய்லர்/காவல்துறைத் தலைவர்கள், அதிமுகவின் அனைத்து இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் fraud என்று ஏற்றுக்கொண்டாலொழிய. அப்படி எங்கேனும் நடக்குமா?)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   நான் இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும்.

   // இப்போது சசிகலாவைக் குறைகூறுபவர்களின்
   agenda வேறு. அவர்கள் அதிமுக நன்மையை
   எதிர்பார்ப்பவர்கள் இல்லை. அவர்கள் திமுக,
   பாஜக கட்சியின் நன்மைக்காகப் பேசுபவர்கள்
   என்பதில் நான் உறுதியான கருத்து கொண்டிருக்கிறேன்.//

   So – உங்களுடைய இந்த உறுதியான கருத்து
   எனக்கும் பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளலாமா…?
   உங்கள் மனசாட்சியை
   தொட்டுப்பார்த்து விட்டு சொல்லுங்கள்….!
   நீங்கள் கூறி இருப்பது என் விஷயத்தில் சரியாக இருக்குமா…?

   பர்கா தத் தெரிவித்ததை தாண்டியும், சில செய்திகள்
   இருக்கின்றன. ஆனால், அவற்றை என்னால்,
   இங்கு பகிர்ந்து கொள்ள இயலாது. உங்களுக்கு பிடிக்காத
   செய்திகளையும் கேட்க மனதை திறந்து
   வைத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்ல
   விரும்புகிறேன்.

   Anyway – உங்கள் நம்பிக்கை உங்களுக்கு…
   இதற்கு மேல் நான் இதில் ஒன்றும் சொல்ல
   விரும்பவில்லை.

   மற்றொரு விஷயம் –
   திருமதி சசிகலா தலைமைக்கு வருவதை பாஜக விரும்பவில்லை என்பது பழைய நிலை.
   அந்த நிலை மாறி, பாஜகவும் அதற்கு ஒத்துழைக்கிறது
   என்பது தான் தற்போதைய நிலை…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    அன்புள்ள காமை சார்,

    “பெரும்பான்மையினர்” என்று எழுதினால் அது தவறாகப் புரியலாம் என்று எண்ணியதால், “அனைவரும்” என்று குறிப்பிட்டேன். நிச்சயமாக உங்களையோ, துக்ளக் போன்ற அரசியல் கண்ணாடிகளையோ குறிப்பிட்டு எழுதியதல்ல. நான் எழுதியதன் உட்கருத்து “சசிகலா”வுக்கான certificate அல்ல. அவரைப் பல (35) வருடங்களாகச் சுற்றியிருந்த சந்தேக மேகங்கள் இன்னும் கலையவில்லை. தற்போது உடனடியாக தமிழகத்தின், அதிமுகவின் நன்மையைக் கருதி எழுதியது. இன்றைக்கு ச்சிகலா அவர்கள் தேர்வானால் தவறில்லை. விகடன் குழும்ம் ச்சிகலாவைப் பற்றி எழுதுவதில் hidden agenda இருக்கிறது. இந்து ராம் எழுதுவதில் உள்நோக்கம் இருக்கிறது. ஒரு கட்சியின் ஆதரவாளர்களோ, சார்பானவர்களோ எழுதுவதில் உள்நோக்கம் இருக்கிறது. This is definitely not the time to discuss about Sasikala.

    ஜெ நிலைக்கு மாறாக சில முடிவுகளை எடுத்திருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனக்கும் சில தோன்றுகிறது. உடனேயே முடிவுக்கு வர விருப்பமில்லை. ஆனால் பாஜக பின்வாசல் வழியாக அதிமுக கட்சிக்கான ஆதரவை ஒருகாலத்திலும் மக்களிடமிருந்து தன்னுடையதாக்கிக்கொள்ள முடியாது. வெங்கையா ஜெ பாஜகாவுடன் கூட்டணி வைக்காத்தற்குத் தன்னிடம் சொன்னதாக்க் கூறிய காரணத்தையும் மக்கள் நம்ப மாட்டார்கள். வெங்கையா கருத்து உள்நோக்கமுடையது.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கீழ்க்கண்ட கேள்விகளை படியுங்கள்…
  இவற்றை நான் கேட்கவில்லை…

  முதலில் கேட்பவர் யார் என்பதை மறந்து விட்டு,
  கேள்விகளைப் பற்றியும், அதில் உள்ள
  நியாயங்களைப் பற்றியும் யோசியுங்கள்…

  அதன் பின் – இவற்றை யார் கேட்டிருப்பார் …?
  யோசித்து சொல்லுங்களேன்….

  ” 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால்,
  இப்படி வேறு ஒருவரை முன்னிறுத்தும் வேலைகளைத்
  தொடங்கியிருக்க மாட்டார்கள். ஆட்சி நிறைவடைய இன்னும்
  நான்கரை ஆண்டு காலம் இருக்கிறது. அதுவரையில் இந்த
  அதிகாரத்தை விட்டுக் கொடுக்க இவர்கள் விரும்பவில்லை.

  அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இவர்களை விட்டால்
  வேறு யாருமில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிகப்படியான அதிகாரிகளை இவர்கள்தான் நியமனம் செய்தார்கள். அதனால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். மீதமுள்ள ஆட்சி காலத்தைப் பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்க முடியும்
  என்றுதான் பார்க்கிறார்கள்.

  ஜெயலலிதா பிறந்தநாளன்று எவ்வளவு சுவரொட்டிகள்
  ஒட்டினார்கள்? அவர் இறந்தபோது எவ்வளவு சுவரொட்டிகள்
  ஒட்டப்பட்டிருந்தன? அப்படியானால் இவர்கள் அனைவரும்
  பதவிக்காக இவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்தார்களா?

  அவர் இறந்த அடுத்த நொடியிலேயே காட்சிகள் மாறிவிட்டன.
  ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்கள். அவர் சிறையில்
  இருந்தபோது, ‘நம்மைப் பார்ப்பார்’ என்ற காரணத்துக்காக, அழுது புரண்டு ஒப்பாரி வைத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தது ஏன்?”

  என் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கிறேன் என்றால், யாருக்கும்
  சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு மாநிலத்தின்
  முதலமைச்சர். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில்
  இருந்திருக்கிறார். அவருக்காக ஓட்டுப் போட்ட
  ஒவ்வொருவருக்கும் அவரது உடல்நிலையைப் பற்றி அறிந்து
  கொள்ளும் உரிமை இருக்கிறது. ‘மருத்துவர்களோடு பேசிக்
  கொண்டிருக்கிறார்’ என்று சொன்னார்கள். அதைப் படம் எடுத்து
  வெளியிட்டிருக்கலாம். அப்படி வந்திருந்தால் இந்தக் கேள்விகள்
  எழுந்திருக்காது. அப்போலோவில் என்ன நடந்தது என்றே
  தெரியவில்லை.

  ‘அவருடைய வெற்றிக்கு சசிகலா துணையாக இருந்தார்’
  என்கிறார்கள். இதை ஏன் ஜெயலலிதா உயிரோடு
  இருக்கும்போது, இந்தத் தலைவர்கள் தொலைக்காட்சிகளில்
  பேசவில்லை? ‘

  அவர் செய்தது மிகப் பெரிய தியாகம்’ என்கிறார்கள்.
  ஒருவருக்குத் தோழியாக இருப்பதே தியாகம் என்றால்,
  இந்த நாட்டுக்காக செக்கிழுத்து, சொத்துகளை இழந்து கடைசி
  காலத்தில் மண்ணெண்ணெய் விற்று இறந்து போன வ.உசிக்கு
  என்ன பெயர்?

  செல்வந்தராகப் பிறந்து சொத்துகளை எல்லாம் ஏழை
  மக்களுக்குக் கொடுத்துவிட்டு காவி வேட்டி அணிந்து வாழ்ந்த
  முத்துராமலிங்கத் தேவருடைய தியாகத்துக்கு என்ன பெயர்?

  ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேச விடுதலைக்காக சிறையில்
  இருந்தார் காமராஜர். அவரை நாம் என்ன பெயர் சொல்லி
  அழைப்பது?

  ஜெயலலிதா உடலைப் பார்த்து, அப்பாவி மக்கள்தான் கதறியபடி
  நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓர் அமைச்சர்
  கதறியதைக்கூட கண்ணால் பார்க்க முடியவில்லை. ஓர்
  எம்.எல்.ஏ, ஒரு மாவட்டச் செயலாளர் என ஒருவராவது
  மொட்டை அடித்தார்களா?

  சாமி வரம் கொடுக்கும் வரையில்தான்
  நல்ல சாமி என நினைத்து இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

  உளவியல்ரீதியாக இந்த அமைச்சர்கள் எப்படி இதைக் கடந்து
  போகிறார்கள். அவர்களுக்கு நிம்மதியாகத் தூக்கம்
  வந்திருக்கலாம்.

  அன்று இரவு முழுக்க என்னால் தூங்கவே
  முடியவில்லை. தூரத்தில் இருந்த நமக்கே இப்படி என்றால்,
  அருகில் இருந்தவர்கள் ஜெயலலிதா இறப்பை, ஒரு பெரிய
  இழப்பாகவே காட்டிக் கொள்ளவில்லை.

  அப்படியானால், அவரது மரணம் முன்கூட்டியே
  திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.

  அப்படித்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. 1969 பிப்ரவரி
  3-ம் தேதி அண்ணாதுரை இறந்து போனார். உடனே யாரும்
  பதவியேற்கவில்லை. தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன்
  பதவியேற்றார். அவரை அடக்கம் செய்த பிறகே, முதலமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

  எம்.ஜி.ஆர் இறந்தபோதும் தற்காலிக முதல்வராக
  நெடுஞ்செழியனை அறிவித்தார் ஆளுநர் குரானா. அதன்பிறகு
  கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி வி.என்.ஜானகியை தேர்வு செய்தார்கள்.

  தற்போது ஜெயலலலிதா மரணத்துக்குப் பிறகு ஏழு நாள்
  துக்கத்தை அரசு அறிவித்தது. அதன்பிறகு, ஓ.பி.எஸ் தேர்வு
  செய்யப்பட்டிருந்தால், எல்லாம் இயல்பாக நடந்திருக்கும்.

  உயிர் போன அடுத்த நொடியில் ஆளுநர் மாளிகையில்
  பதவியேற்பது என்பது என்ன மாதிரியான மனநிலை?
  அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
  ஒரு மனிதனாக தொலை தூரத்தில் இருந்து
  பார்க்கும்போது எப்படி நினைப்பது?

  இந்தக் காட்சிகளைப் பார்க்கும் ஒரு மனிதன் எப்படிப்பட்ட
  மனநிலைக்கு ஆளாவான்?
  இருக்கும் வரையில் புரட்சித் தலைவி அம்மா, டாக்டர்,
  தங்கத் தாரகை, இதய தெய்வம் என்றெல்லாம் அழைத்தீர்கள்.

  இறந்தவுடன், செல்வி ஜெயலலிதா என்கிறார்கள்.

  யார் மரணம் அடைந்தாலும், எப்படி நடந்தது என எல்லோரும்
  கேட்பார்கள். அதுபோன்ற ஒரு விசாரணைகூட வேண்டாம்
  என்றால் எப்படி?

  ‘அதிகாரம் மிக வலிமையானது’ என அம்பேத்கர் சொல்வார்.
  ஆனால், அதிகாரம் மிகக் கொடுமையானது என்பது
  ஜெயலலிதாவின் இறப்பின்போதுதான் உணர முடிகிறது.

  ஜெயலலிதா அவர் உயிரோடு இருந்த வரையில்,
  மத்திய அரசின் நீட் தேர்வு, சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி),
  உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் ஆகியவற்றைக்
  கடுமையாக எதிர்த்தார். காரணம். ‘மாநில உரிமைகளுக்காக
  நிற்கின்ற கட்சி அ.தி.மு.க. மாநில நலனை பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களை ஏற்க முடியாது’ என அறைகூவல்
  விடுத்தார் ஜெயலலிதா.

  அடுத்த ஒரு வாரத்தில் இந்த நான்கு திட்டங்களிலும்
  எதிர்ப்பில்லாமல் தமிழக அரசு இணைந்துவிட்டது.
  கட்சியின் தலைவர் எதிர்த்த ஒன்றுக்காக, பொறுப்பை ஏற்றுக்
  கொண்ட ஓ.பி.எஸ் கையெழுத்துப் போடுகிறார்.

  ஒருவேளை அவர் சிகிச்சை முடிந்து மீண்டு வந்திருந்தால், இதையெல்லாம் எதிர்த்தது போல் நடித்தீர்களா எனக் கேள்வி கேட்டால், ஜெயலலிதாதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்த ஒன்றுக்கு கையெழுத்து போடுகிறீர்கள் என்றால்,

  அவர் திரும்பி வர மாட்டார் என முடிவு செய்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

  மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாளிலேயே, அடக்கம்
  செய்யப்பட்ட இடத்தில் மார்க் பதிவு செய்தார்கள். இப்போது அதே இடத்தில்தான் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதுகுறித்தெல்லாம் கேள்வி
  எழுப்பாமல் எப்படிக் கடந்து போக முடியும்?

  மிகுந்த வலியோடுதான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறேன்.

  யாரிடமும் கேட்க வழியில்லாமல் எனக்குள் நானே கேட்டுக்
  கொள்கிறேன். இவ்வளவு காலம் ஒரு மனுஷியை நேசித்ததாகக்
  காட்டியது எல்லாம் வேடமா? ஒரேநாளில் வேறு ஒருவரின்
  படத்தை நெஞ்சுக்குள் எப்படி செருக முடிந்தது?

  இதை தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்”

  • selvarajan சொல்கிறார்:

   எப்போதுமே நடக்காத அவசரம் காட்டி — இறந்த ஒரு மணி நேரத்திற்குள் ” நிரந்தர முதல்வராக ” பதவியேற்று ஜெயாவை ” முன்னாள் ” என்று அழைக்கும்படி செய்தது ஏன் … ? அதுமட்டுமல்லாது இவர்கள் அனைவரும் மிகவும் சுதந்திரமாக — விரைவாக — தீயாய் வேலைகளை செய்வதைப்போல— முதல்வர் — அமைச்சர்கள் அனைவரும் ஒரு தோற்றத்தை உருவாக்கு ஏன் … ? மீடியாக்களிலும் செய்திகளை பரப்புவது ஏன் .. ?

   முன்னாள் முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இவர்களின் செயல்கள் இருப்பது ஏன் .. ? மக்கள் இந்த தேர்தலில் என்றில்லாமல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. ஜெயிக்க வாக்கு அளித்ததே எம்.ஜி.ஆருக்கும் — ஜெயாவுக்குமே என்பதை இவர்கள் எளிமையாக மறந்துவிட்டு — ” வீட்டு வேலைக்காரி ” சசிகலாவை தூக்கி வைத்து ஆடுவது ஏன் — ஜெயா போட்ட பிச்சையினால் பதவிகளை பெற்ற துரோகிகள் — காரில் பின்புறம் முகத்தைக் காட்டவும் கூச்சப்பட்டு மறைந்து ஜெயாவோடு வந்தவரை — திடிரென்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இவர்கள் — பெரிய நடிகர்கள் … ஜெயாவின் கெடுபிடிகளும் – கண்டிப்பும் இவர்களை ஓரளவாவது ஒழுங்காக நடக்க வைத்தது —

   ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் — இவர்களின் ” நிறம் மாறும் ” குணம் — போக- போக சசிக்கும் புரியும் — புரிய வைப்பார்கள் — இவர்களின் கூழை கும்பிடும் –குனிந்த பவ்வியமும் வெளி வேஷமே அன்றி உண்மையல்ல — மக்களை இவர்கள் எளிதாக ஏமாற்ற நினைத்தால் — அது நடக்காது — காசுக்கு வாக்கை விற்கும் ஜென்மங்கள் வேண்டுமானால் ஆதரிக்கும் — அவ்வளவே ….

   இன்னும் இருக்கும் நான்கரை ஆண்டுகளை நம்பி நடக்கும் இவர்கள் — பலவித பயமுறுத்தல்களுக்கும் — ரெய்டுகளுக்கும் — வழக்குகளுக்கும் பதில் சொல்ல வைக்க — அடிமைகளை போல நடித்தவர்களை — ” உண்மையில் அடிமைகள் ” ஆக்க அங்கே ஒரு ஓநாய் காத்துக் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம் — இவர்களின் நன்றி மறந்த செயலுக்கு தக்க தண்டனை கிடைக்கணும் …. கிடைக்குமா …?

  • தமிழன் சொல்கிறார்:

   இதில் உள்ள கேள்விகளில் பல அர்த்தமற்றவை (As I am writing thru iPad not able to explain point by point). சில இப்போது கேட்கப்படக் கூடியதல்ல. ஒரு பாயிண்ட்தான் எனக்கும் வெகு வியப்பாகவும், கசப்பாகவும் ஜீரணிக்க இயலாத்தாகவும் எண்ணுகிறேன். மாநில முதலமைச்சர் 7 1/2 கோடி மக்கள் பிரதிநிதி. அவரது சிகிச்சையை மூடுமந்திரமாக அனைவரும், including all political parties வைத்திருந்தது. இது எப்படி சாத்தியம்? ஒரே ஒரு காரணம்தான் மனதில் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் ஓரளவு அர்த்தம் இருந்திருக்கும், ஆனாலும் பெரிய தவறு.

 9. surya சொல்கிறார்:

  when ops took charge at mid night itself cat came out. this is center master plan. it is not that much urgent for tn. already 74 days running without driver, using the cleaner. center prefer 2 heads for party and govt due to take the individual grip due to their previous excellent jobs.

  and karma speaks in kaligalam same era. how may ladies cursed the head for the loss of their life due to tasmarc.

 10. selvarajan சொல்கிறார்:

  // அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன தீபா… பேட்டியை ஒளிபரப்பாமல் நிறுத்திய தந்தி டிவி //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thanthi-tv-canceled-jayalalithaa-s-nice-deepa-interview-269905.html இதற்கு பதிலாக தமிழக அமைச்சர் தங்கமணியின் பேட்டி ஒளிபரப்பு என்று தனது பேஸ்புக்கில் ரங்கராஜ் பாண்டே போட்டுள்ளது — ” விபச்சார ஊடகங்கள் ” என்பதையும் — ” paid நியூஸ் ” போடுபவர்கள் என்பதையும் நிரூபிக்கின்றனவா ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு.ரங்கராஜ் பாண்டே “உரிய” “நம்பத்தகுந்த”
   விளக்கத்தை – உடனடியாக – அளித்தால் ஒழிய “நீங்கள் கூறியுள்ளதையும்”
   “பயம், நடுக்கம்” போன்ற இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும்
   சேர்த்து கூட கூறலாம்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 11. selvarajan சொல்கிறார்:

  // முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி //
  http://tamil.thehindu.com/india/article9429976.ece#.WFTcIecugZY.gmail இந்த பேட்டி பற்றி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   வழக்கம் போல் – நா ….ட …..க…..ம்.

   (முழு பேட்டியையும் தனியே இடுகையாக
   போட்டிருக்கிறேன்… அங்கு பேசுவோமே…)

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 12. தமிழன் சொல்கிறார்:

  செல்வராஜன் சார்… தந்தி தொலைக்காட்சி, from inception ஆளுங்கட்சி சார்பானது. இது வியாபார தர்மம். கருணாநிதி சில மாதங்களுக்குமுன் தந்தி தொலைக்காட்சியின்மீது கோபம் கொண்டு, திமுக விவாதங்களில் பங்கேற்காது என்றபோது, தந்தி அதிபர் அவரைச் சந்தித்ததும் அதன்பின் திமுக பங்கேற்றதையும் அனைவரும் அறிவோம். தீபாவின் “எடுத்தேன் கவிழ்த்தேன்” போக்கு ஏற்கத்தக்கதல்ல.

  அரசியல் கட்சிகளில் யார் வேண்டுமானாலும் தலைவராகிவிடலாம் ஆனால் நிலைக்கமுடியாது. தேர்தலில் வெற்றிபெற முடியவில்லையென்றால் (மக்கள் ஆதரவைப் பெறமுடியாவிட்டால்) எந்தக் கட்சியிலும் பிளவையோ, தலைவர் மாற்றத்தையோ தவிர்க்க இயலாது

 13. surya சொல்கிறார்:

  Why not?
  Still Deepa thinks, she can be successor of Jayalalitha, she can contest in RK nagar bi election as independent, if she win she can talk about next. else she can thought about only the jaya’s asset for claiming blood relation manner with her brother support. but very cleverly party people covered her brother deepak already.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.