டாக்டர் சு.சுவாமி – “அதிமுகவை உடைக்கவோ, பாஜக ஆட்சியை ஏற்படுத்தவோ என்னால் மட்டும் தான் முடியும் “…!!!

ss-and-jj-1

– அதிமுகவை உடைக்க என்னால் மட்டும் தான் முடியும்…
தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு
சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர
வைப்பேன்.

– ஜெ.இறப்பு பற்றிய மர்மம் விலகாவிட்டால்,
நானே வழக்கு தொடர்வேன்…

– சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதில் தவறு இல்லை…

– ஜெ.யுடனான எனது நட்பில் விரிசல் ஏற்பட்டது
எப்படி என்று எனக்கே தெரியவில்லை….

– ஜெ.யுடன் கூட்டணி வைத்துக்கொண்டபோது கூட,
அவர் மீது நான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ்
வாங்கும்படி கேட்கவில்லை…

– ஜெ….அறிவாளி, நல்ல ஞாபக சக்தி, எதையும் சுலபமாக
புரிந்து கொள்ளும் சக்தி உடையவர்….
திடீர் கோபம், அநாவசியமான சந்தேகம் கொள்பவர்….

தி இந்து செய்தித்தாளுக்கு டாக்டர் சுப்ரமணியன் சுவாமி
அளித்த பேட்டியில் தான் இவற்றை எல்லாம் கூறுகிறார்…

முழு பேட்டியும் கீழே –
( நன்றி : தி இந்து )

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது
பற்றி தங்கள் கருத்து?

மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க
அனுமதிக்கவில்லை. இதுகுறித்து ஒரு நல்ல விசாரணை
நடத்தப்படும்வரை அதுகுறித்த பல கேள்விகள் தொடரும்.

சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம்
அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.

இது உண்மை எனில், அவரது குரலை கட்சித்
தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க
மருத்துவமனையில் எம்ஜிஆர் இருந்தபோது செய்ததுபோல்,
வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம்.
இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான
ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு
அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின்
தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம்
விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான சொத்துக்
குவிப்பு வழக்கின் நிலை என்ன?

இறப்பின் காரணமாக, ஜெயலலிதாவின் பெயர் வழக்கில்
இருந்து நீக்கப்படாது. அதன் தீர்ப்பில் குற்றங்கள் ஏற்கப்பட்டு,
தண்டனை அளிக்கப்பட்டால் அதில், ஜெயலலிதா மறைவு
காரணமாக அவருக்கு மட்டும் தண்டனையை செயல்படுத்த
முடியாது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு
இனி யார் வாரிசு?

ஜெயலலிதாவின் குடும்பத்தார்தான் அவரது
சொத்துகளுக்கு வாரிசாக முடியும்.

அதிமுகவின் பொதுச் செயலாலராக சசிகலாவை நியமிக்க
அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள்
ஆதரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயக முறைப்படி கட்சிதான் ஒரு பொதுச் செயலாளரைத்
தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும்
சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால்
அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.

கடந்த 1999-ல் இருந்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த
ஜெயலலிதாவை காங்கிரஸுடன் பேசி, துணைப் பிரதமராக்க
நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுவது
குறித்து?

jj-ss-and-sg

இதுபோல், ஒரு முயற்சி நடைபெறவில்லை. தான் பிரதமர்
பதவிக்கு குறைவாக எதையும் ஏற்கக் கூடாது என்ற எண்ணம்
ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு. எனவே, அவர் துணை
பிரதமர் பதவியை எப்போதும் விரும்பியதில்லை.

தன்னை வாஜ்பாய் ஏமாற்றியதால்தான் அவரது ஆட்சியை
ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜனதா, மதிமுக, பாமக
உட்பட ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அமைந்த
கூட்டணியில் 30 எம்.பி.,க்கள் இருந்தனர். இது பாஜக ஆட்சி
அமைய பெரிய உதவியாகவும் இருந்தது.

இதனால், என்னை நிதி அமைச்சராக்க வேண்டும் என
வாஜ்பாயிடம் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். இதை
ஏற்றுக்கொண்டு, ஆதரவைப் பெற்ற வாஜ்பாய் அதை
நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் சட்டத்துறை
அமைச்சராக அமர்த்த கேட்டமைக்கும் வாஜ்பாய் மறுத்தார்.

இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின்
நட்பில் விரிசல் ஏற்படக் காரணம்?

இந்த கேள்விக்கான பதில்
எனக்கும் இன்றுவரை தெரியவில்லை.
வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார்.

ss-and-jj

என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு
அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான்
அவரிடம் பேசினேன். இதற்கு அவர், ’பாஜகவைவிட
தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன.
அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’
என மறுத்துவிட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து
வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மைதான்.

கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய
கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான்
அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது.
ஏனெனில், இதை அறிந்தபின்தான், அவர் என்னிடம்
கூட்டணியும் வைத்தார்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் மற்றும்
பிடிக்காதவை?

ஜெயலலிதா பிரமாதமான அறிவு கொண்டவர். அதிக
சுயமரியாதை எதிர்பார்ப்பவர். அவருக்கு இருந்த ஞாபக சக்தி
அபரிமிதமானது. 100 பக்கங்கள் கொண்ட கோப்பாக
இருந்தாலும் பத்து நிமிடங்களில் படித்து தெளிவாகப்
புரிந்து கொள்வார். நாள்தோறும் ஒரு நூல் படிக்கும்
பழக்கம் கொண்டவர். பேராசை என்பது அவருக்கு
இருந்தது கிடையாது. கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று
படித்திருந்தால் அவர் ஒரு பேராசிரியர் அல்லது
வழக்கறிஞராகி இருப்பார்.

அவருக்கு இருந்த அந்த ஆசையை என்னிடம் அடிக்கடி
வெளிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தனது தோல்விக்குப்
பின் ஒருமுறை என்னை பாபநாசம் சிவன் சாலை வீட்டுக்கு
வந்து சந்தித்தார். இருவரும் கூட்டணி சேர்ந்து
கருணாநிதியை தோற்கடிக்கலாம் எனக் கூறினார்.

இதற்கு நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை
வாபஸ் பெற முடியாது என நிபந்தனை விதித்தேன்.
இதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றார்.
இது, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள பெரிய
வித்தியாசம் ஆகும். அவருக்கு திடீர் கோபம், அநாவசியமான
சந்தேகம் போன்றவை வந்து புத்தி மாறும். அது எனக்கு
பிடிக்காது. திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில்
ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால், அவரை
அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம்
தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா
துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த
நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்று
விட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்.

அதிமுகவால் தனி மெஜாரிட்டியுடன் ஆளப்பட்டு வரும்
தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு
கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில்
தொண்டர்கள் அதிகம்.
ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை.
நரேந்திர மோடியை மக்களவை தேர்தலில் மட்டுமே
ஏற்கும் நிலை உள்ளது. தவிர, சட்டப்பேரவை தேர்தலில்
இல்லை.

இதற்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தால்தான்
பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு
எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான்
பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்.

எம்.எல்.ஏ.,க்களைப் பிரித்து பாஜகவும் காங்கிரஸும்
அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும்
செய்திகள் குறித்து?

இது ஒரு தவறான கருத்து. இரு கட்சிகளிடமும்
அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது.
ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.

இந்த சூழலில் தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக
கிளம்பிய செய்திகள் உண்மையா?

ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க
மறுத்துவிட்டேன்.

ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து
உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கும் தலைவராக வேண்டும்
என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து
விட்டேன்.

ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற
எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு
வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும்
செல்லமாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில்
ஈடுபடுவேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to டாக்டர் சு.சுவாமி – “அதிமுகவை உடைக்கவோ, பாஜக ஆட்சியை ஏற்படுத்தவோ என்னால் மட்டும் தான் முடியும் “…!!!

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இடுகையில், பேட்டி முழுவதையும், இடைஞ்சல் இல்லாமல்
  அப்படியே போட விரும்பினேன். எனவே, என் கருத்துக்கள்
  எதையும் அங்கே கூறவில்லை….

  – திரு.சு.சுவாமி – தமிழக அரசியலில் தன்னை
  நுழைத்துக்கொண்டு, நிரந்தரமாக இங்கேயே உட்கார
  முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்,
  ஜெயலலிதா அவர்களின் திடீர் மறைவு அவருக்கு ஒரு வாய்ப்பை
  உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

  -திருமதி சசிகலா கையில் அதிமுக போவது குறித்து,
  சென்ற வாரம் அவர் கூறியதற்கும் –
  இப்போது கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை ……
  கூர்ந்து பார்த்தால் – தெரியும்.

  – தொடர்ந்து இன்னும் சிலவற்றை அவரிடமிருந்து
  அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம்….

  -// ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற
  எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு
  வந்தவன் நான். //

  இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்……!!!

  அவரது குறிக்கோள், லட்சியம், குறி எல்லாமே –
  மத்திய நிதியமைச்சர் அல்லது
  உள்துறை அமைச்சர் பதவியை பிடிப்பதாகவே இருந்தது….
  இப்போது மத்திய அமைச்சரவையில் அவரைச்
  சேர்த்துக் கொள்வது என்கிற வாய்ப்பு அறவே போய் விட்டது.

  மோடிஜியை பகைத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லை.
  எனவே – அடுத்த வாய்ப்பை தேடி தமிழகம் வருகிறார்…

  வெகு சீக்கிரத்தில், அதிமுகவில் – சுப்ரமணியன் சுவாமிக்கான
  ஆதரவு கோஷங்களை எதிர்பார்க்கலாம்….!!!

  இவை குறித்து நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்
  என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Two things I have said are coming true ,that he wont accept Governor post or any post in BRICS bank- He may or may not be able to install a BJP govt but he wont be a part of it –
   You are back to your game of telling us that Mr Swamy wants to become this and that minister — You are imagining,rather want to see the PM and swamy at logger heads – Nothing of that may happen as the PM doesnt have any issues with any one leave alone Mr Swamy – I will give you a recent example — After making very serious personal allegations Mr Raghul Gandhi met the PM along with some other leaders – The PM showed no signs of displeasure or anger with him – Any other person would have shown some signs of uneasiness in meeting a person who levelled allegations of corruption against him -As a matter of fact he told Raghul that they should meet often – This is the mental maturity of the PM – Those who have criticised him severely like Smriti Irani, Kiran Bedi, Arvind Subramanian , M J Akbar are part of his team in running the administration – As far as I could observe the PM holds no grudge against him —
   Mr Swamy has said some good things about Jayalalitha –You should be happy with that –

   • LVISS சொல்கிறார்:

    Two things I have said are coming true ,that he wont accept Governor post or any post in BRICS bank- He may or may not be able to install a BJP govt but he wont be a part of it –
    You are back to your game of telling us that Mr Swamy wants to become this and that minister — You are imagining,rather want to see the PM and swamy at logger heads – Nothing of that may happen as the PM doesnt have any issues with any one leave alone Mr Swamy – I will give you a recent example — After making very serious personal allegations Mr Raghul Gandhi met the PM along with some other leaders – The PM showed no signs of displeasure or anger with him – Any other person would have shown some signs of uneasiness in meeting a person who levelled allegations of corruption against him -As a matter of fact he told Raghul that they should meet often – This is the mental maturity of the PM – Those who have criticised him severely like Smriti Irani, Kiran Bedi, Arvind Subramanian , M J Akbar are part of his team in running the administration – As far as I could observe the PM holds no grudge against him —
    Mr Swamy has said some good things about Jayalalitha –You should be happy with that –

   • இளங்கோ சொல்கிறார்:

    திரு.எல்விஸ்,

    எங்கயோ போயிட்டீங்களே
    நீங்கள்ளாம் எங்கேயோ இருக்க வேண்டியவங்க சார்.
    //You are back to your game of telling us that Mr Swamy wants to become this and that minister — You are imagining,////
    ” நிதியமைச்சர் ஆகணும்கறது என்னோட விருப்பம் –
    நான் நிதியமைச்சர் ஆனா income tax இருக்காது.
    All black money /property in foreign countries will be Nationalised ”
    ன்னெல்லாம் சொன்னது – காவிரிமைந்தன் சார் இல்ல
    இதே சு.சுவாமி தான் சார். பாஜக மோகம் இருக்கலாம்
    ஆனாலும் இந்த அளவுக்கா ?

    • LVISS சொல்கிறார்:

     If I remember correctly what he said was that he would make a better FM —
     Please post a link where I can find Swamy saying his desire was to become FM -i tried to find out but couldnt – He did say that there will be no income tax — Tell me why he was not made FM by Narasimha Rao – He could have expressed the desire then also —

     • இளங்கோ சொல்கிறார்:

      // If I remember correctly what he said was
      that he would make a better FM — //

      குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

  • selvarajan சொல்கிறார்:

   அய்யா …. ! // வெகு சீக்கிரத்தில், அதிமுகவில் – சுப்ரமணியன் சுவாமிக்கான
   ஆதரவு கோஷங்களை எதிர்பார்க்கலாம்….!!! // ” சுவாமியே … சரணம் ” என்று சராணாகதி தானா ….? ஏதோ நல்லவிதமா ” வியாபாரம் ” நடந்தால் சரி …. அப்படித்தானே …. ?

 2. தமிழன் சொல்கிறார்:

  ஜெவின் சிறந்த குணம் இந்தப் பேட்டியில் வெளிப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிறுமையும், ஜெ வின் பெருந்தன்மையையும் ஏற்கனவே கட்ஜு அவர்கள் தெரிவித்திருந்தார். வாஜ்பாய் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு உண்மையான காரணம் இப்போது வெளிவந்துள்ளது. When condition was breached it had happened, not for personal benefits or reasons. சர்க்காரியா, மற்றும் வழக்கு வாபசுக்காக, பாதிக்குப் பாதி கூட்டணி வைத்தவருக்கும், ஊழல் செய்ததால் கழுத்தில் சிபிஐ என்ற பாம்பின் பிடி இறுகியதால் 65 சீட்டுக்களை விட்டுத்தந்து கூட்டணி வைத்தவருக்கும், காவிரி, மீத்தேன் என எல்லாத்தில் தமிழக நலன்களையும் காவு கொடுத்தவருக்கும், ஜெவுக்கப் பெயர் வரக்கூடாது என்பதற்காக மன்மோகன் சிங்கை 1000 யூனிட் மின்சாரம் மத்தியத் தொகுப்பிலிருந்து கொடுக்கப்படும் சம்மதிக்காதவருக்கும், எப்போதும் தன் கௌரவத்தையும் கட்சியின் கௌரவத்தையும் தமிழக நலன்களையும் விட்டுத்தராத ஜெ வுக்கும் உள்ள வித்தியாசம் நமக்குப் புரியும்.

 3. இளங்கோ சொல்கிறார்:

  முதலில் பாஜக சசிகலாவை தவிர்த்து விட்டு,
  தம்பிதுரையை கொண்டு வர நினைத்தது.
  இப்போது சசிகலாவையே தங்கள் கண்ட் ரோலில்
  கொண்டு வர முடியும் என்ரு நம்புகிறது.
  சு.சுவாமி கொஞ்ச நாட்கள் இங்கேயே தங்குவது
  இதையெல்லாம் செய்யத்தானோ சார் ?

  அவர் முயற்சியில் வெற்றி பெறுவாரென்று நினைக்கிறீர்களா ?

 4. LVISS சொல்கிறார்:

  A small correction -The sentence commencing “as far as I could should end as “no grudge against anybody “

  • Guru Maharaj சொல்கிறார்:

   Yes Mr. LVISS

   HE HAS NO GRUDGE AGAINST ARVIND KEJRIVAL…

   HE HAS NO GRUDGE AGAINST MAMATA BANERJEE

   HE is a GREAT SAINT from GUJARAT where he loved everybody.

   • LVISS சொல்கிறார்:

    If he had taken ofence to what Raghul said he could have avoided the meeting him at any cost —
    He was asked by a channel whether he would go to US( he has spent lot of time in US as a pracharak ) because he was banned earlier — His reply was that personal issues should not stand in the way of national interest –Judge for yourself the import of these words —
    Did I say he was saint —Why you people put your words in others mouth —

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Mr subramania swamy has got lot of potential in all areas&that should b properly utilised

 6. Karthik சொல்கிறார்:

  KM ayya,
  First snap is excellent. Must preserve and share in twitter & FB

 7. vennai சொல்கிறார்:

  இந்த தேசத் துரோகிதான் தலைவர் ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டது. இந்தியாவைக் குட்டிச் சுவராக்க ஈனப்பிறவியாக அவதாரம் எடுத்திருப்பது. இதற்குக் கடவுள் தகுந்த தண்டனை கொடுப்பான் என்பது மட்டும் வேதம் கூறும் உண்மை. இவனுக்கும் நல்ல வாழ்வும் இருக்காது, நல்ல சாவும் இருக்காது. பாழாய்ப் போவான் இவன்.

 8. LVISS சொல்கிறார்:

  Read the article again — It was jayalalitha who recommended him( nibanthanai which is more forceful than recommendation) for the FM post –The why we are told that he is promoting himself –
  One more thing – When an economist can double up as a lawyer and make a mark in it why not the other way , a lawyer as a successful economist also —
  How many economists did we have as FMs — Only name that come to my mind is Manmohan Singh —

 9. LVISS சொல்கிறார்:

  What we could make out from the interview was that the Vajpayee govt was brought down because Mr Vajpayee disappointed ( ematriyadhu is the word used here ) the AIADMK leader – What was the expectation of the AIADMK from the Vajpayee govt then —

 10. S.Pandi சொல்கிறார்:

  Mannar Aatchiyai ,mallarkulam earkathu,Makkalatchikku ,Theventhirar Mallarkulam vazhivakukum,,Theventhirapandian

 11. தமிழன் சொல்கிறார்:

  சு.சுவாமி அறிவாளி. ஆனால் நல்ல எண்ணம் இல்லை. அவர் ஜெ.வின்மீது வழக்குத் தொடுத்ததற்கு, சந்திரலேகாவுக்கு நடந்த நிகழ்ச்சிதான் காரணம். சு.சுவாமியினால் positiveஆக எதையும் செய்ய இயலாது. அவர் தமிழக கவர்னராக வந்தால், பாஜகவுக்குப் பின்னடைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவர் தேசத்துக்கு எதிராக எதையும் செய்ததாகச் சொல்ல ஒரு ஆதாரமும் கிடையாது. ராஜீவ்காந்தி கொலையில் ஈடுபட்டது பிரபாகரன் அவர்கள்தான். மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதனைத் தடுக்காமல் இருந்திருக்கலாம். ராஜீவ்காந்தி அவர்களை eliminate பண்ணினால், தான் எண்ணியவாறு தமிழீழம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்டது இந்தப் படுகொலை. அந்த முடிவு தவறு என்பதை 18 வருடங்களுக்குப் பின் அவர் உணரும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

  ‘ஆளு’நராக’, ‘கோரிக்கை’, ‘தமிழ்’நாட்டுக்கு நல்லது செய்ய’ – காமைசார் சொன்னதுபோல் ரெண்டு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

 12. selvarajan சொல்கிறார்:

  // சசிகலா பொதுச் செயலாளரானால் இதுதான் நடக்கும்! சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அலர்ட் // http://www.vikatan.com/news/tamilnadu/75197-this-is-what-will-happen-if-sasikala-becomes-general-secretary.art இந்த செய்தியில் :- //
  ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், இந்த துரோகச் செயலை மக்களிடத்தில் எடுத்து சென்று மக்களை திரட்டி ஊழல் ஆட்சியை துரோக அரசியலை அகற்றி ஊழலில்லா மக்கள் வளர்ச்சிக்கான நல்லாட்சி அமைய சட்ட பஞ்சாயத்து இயக்கம் களமிறங்கும் என துரோகிகளை இதன் மூலம் எச்சரிக்கிறோம்” // ……….என்று உள்ளதில்—- // ஊழலில்லா மக்கள் வளர்ச்சிக்கான நல்லாட்சி அமைய // இந்த வாக்கியங்கள் நடைமுறை சாத்தியமா …? காசுக்கு ஓட்டுகளை விற்பவனும் — போட்டி போட்டுகொண்டு ” அதிக விலைக்கு ” வாங்க அலையும் கட்சிகளும் இருக்கின்ற நாட்டில் நடக்கிற காரியமா … ? பல ஆண்டுகள் ஆனாலும் … ?

 13. selvarajan சொல்கிறார்:

  // சசிகலாவுக்கு ‘செக்’ வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் // http://www.vikatan.com/news/tamilnadu/75205-did-jayalalithaa-gives-membership-card-to-sasikala.art?artfrm=news_most_read — சூடு பிடிக்க துவங்கி விட்டதா ….?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.