என் விருப்பம் – 6 ( பிறவியிலிருந்தே பார்வை இல்லாத அற்புத இசைமேதை – ரவீந்திர ஜெயின் )

ravindra-jain-1

…..

பிறவியிலேயே பார்வை இல்லாத ஒருவர்
ஹார்மோனியம் வாசிப்பதில் சிறந்த தேர்ச்சி பெற்று,

பின்னர் புகழ்பெற்ற பாடகராகவும்,
இசையமைப்பாளராகவும் திகழ்ந்து….

எண்ணற்ற ஹிந்துஸ்தானி பாடல்கள்,
பஜன் பாடல்கள், திரைப்பட பாடல்களை உருவாக்கி,
தேசிய அளவில் ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று
2015-ல், தனது 71-வது வயதில் – காலமாகும் வரையில்
இந்தி இசையுலகில் தனி மேடை அமைத்து ஆட்சி புரிந்த
ஒருவரை நமது விமரிசனம் தள வாசகர்களுக்கு இன்றைய
என் விருப்பம் வாயிலாக அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

ravindra-jain-president

உத்திரப் பிரதேசம், அலிகார் நகரில் 1944-ல் பிறந்தவர்
திரு.ரவீந்திர ஜெயின்.

நான் அவரைப்பற்றி சொல்வதை விட –
அவரது இசையில் உருவான சில பாடல்களை
சொன்னால் உங்களுக்கு சுலபமாக புரிந்து விடும்…..

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், தொலைக்காட்சி
நமக்கு அறிமுகமான புதிதில்,

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையும்,
இந்திய தேசம் முழுவதையும்,
ஓரிடத்தில் கட்டிப்போட்ட –

புகழ்பெற்ற இந்தி இயக்குநர்,
ராமானந்த் சாகர் அவர்கள் தயாரித்து அளித்த
“ராமாயண்” இந்தி தொடர் நினைவிருக்கிறதா…?

அதன் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் தான்….!!!

ravindra-apj-kj

அதே போல், புகழ்பெற்ற பாடகர் கே.ஜே.யேசுதாஸ்
அவர்களை இந்தி திரையுலகில் “சிட்சோர்” என்கிற
இந்தி படத்தின் மூலம் அறிமுகம் செய்து
வைத்ததும், அந்தப்படத்தின் மூலமே யேசுதாஸ் அவர்கள்
அகில இந்தியாவுக்கும் அறிமுகமானதும் வரலாறு….

நம் விமரிசனம் வலைத்தள நண்பர்களுக்கு அவரை
அவரது சில பாடல்கள் மூலம் நினைவுபடுத்த
விரும்புகிறேன்….

ஞாயிறு அன்று – வீட்டில் இருப்பீர்கள்,
வசதியாக குடும்பத்துடன் இந்த பதிவை
பார்க்கலாம், கேட்கலாம் என்பதால் விரிவாகவே
போட்டிருக்கிறேன்.

முழுவதையும் பார்க்க அவகாசம் கிடைக்காவிட்டால்,
முடிந்த வரை இன்று பார்த்து விட்டு
மற்றதை வேறோரு நாள் பாருங்கள் ….. தவறாமல்…!!!

Aise Bhagat Kahan Kahan – Ramayan –

jab deep chale-

நமது திரையிசைத்திலகம் கே.வி.மஹாதேவன் அவர்களுடன்
சேர்ந்து ரவீந்திர ஜெயின் இசையமைத்த ஒரு டிவி தொடர்
திருமதி ஹேமமாலினி அவர்களின் நூபுர்…

அதிலிருந்து ஒரு இசை / நடன காட்சி…..

Hema Malini dance in noopur-

सो बरु मिलिहि जाहिं मनु राचा (Ramayana)

Gori Tera Gaon Bada Pyara –

Sita Swayamvar – SitaRam Vivah-

tuje mere sur mein –

राम कहानी.. सुनो श्री राम कहानी (Ramayana)-

Luv Kush Singing Ramayan in Ayodhya-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to என் விருப்பம் – 6 ( பிறவியிலிருந்தே பார்வை இல்லாத அற்புத இசைமேதை – ரவீந்திர ஜெயின் )

 1. GVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  “ராமாயண்” சீரியல் அப்படியே மனதில் இன்னமும் பசுமையாக
  நினைவில் இருக்கிறது. நீங்கள் சொன்னதுமாதிரி, இந்தியா
  முழுவதையும் ஞாயீறு காலைகளில் கட்டிப்போட்ட சீரியல் அது.
  ஆனால், அதற்கு இசையமைத்தவர் இவர் தான் என்பது
  எனக்குத் தெரியாது. இவரைப்பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
  இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின், ஒரு அற்புத சாதனையாளர்
  என்பதில் சந்தேகமே இல்லை. பிறவியிலிருந்தே பார்வை யில்லாத ஒருவர்
  இந்த அளவிற்கு இசை ஞானம் பெற்று, சாகாவரம் பெற்ற பாடல்களை
  எல்லாம் படைத்திருக்கிறாரே.
  அருமையான ஒரு அறிமுகத்தை இன்று நீங்கள் தந்ததற்கு
  உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் புண்ணியத்தில் இன்று ராமாயணத்தின்
  சில பகுதிகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பார்க்கும் வாய்ப்பு
  கிடைத்திருக்கிறது. என் குடும்பம் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்கிறது.

  நன்றி.
  ஜிவிஎஸ்

 2. Srini சொல்கிறார்:

  Dear KM sir,

  Though I heared his name, I never knew that he was blind. You have introduced a great person to all your blog readers. God Bless you!

 3. G.Rameshkumar சொல்கிறார்:

  K.M.Sir,

  simply beautiful.
  so sweet.
  thank you for the introductions.

 4. G.Rameshkumar சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  மீண்டும் தமிழில் சொல்ல வேண்டுமென்று
  தோன்றுகிறது. உங்கள் ஆர்வமும், ரசனையும், உழைப்பும்
  உண்மையாகவே எனக்கு பிரமிப்பை தருகிறது.
  எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது உங்களுக்கு !
  நீங்கள் ரசிப்பதை, நீங்கள் உணர்வதை, நல்ல ரசனைகளை
  மற்றவர்களும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்கிற
  ஆர்வமும், இந்த வயதில் அதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும்
  அக்கறையும் உழைப்பும் என்னை
  மீண்டும் மீண்டும் பாராட்டச் சொல்கிறது. மிக்க நன்றி சார்.

  ஜி.ரமேஷ்குமார்

 5. kayshree சொல்கிறார்:

  congrats….!

 6. Subburathnam சொல்கிறார்:

  Sir,

  You have missed out a GEM of a song sir,

  “Gunguroo ki tarah” what a meaningful and soul stirring song that was.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சுப்புரத்னம்,

   உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை
   கொடுக்கிறது. பெரும்பாலும் ஹிந்தி தெரியாதவர்களே
   இந்த தளத்தை படிப்பார்கள் என்று நினைத்து வந்த
   எனக்கு ஒரு ஹிந்தி தெரிந்த, அருமையான
   பாடல் ரசனை உடைய ரசிகரும் வருகிறார்
   என்பதை அறிய மகிழ்ச்சி…

   உங்கள் வருத்தம் நியாயமானது தான்.
   ரவீந்திர ஜெயின் அவர்களின் துவக்க காலத்திலேயே
   வந்த ஹிட் பாடல் அது.. கிஷோர் குமார் பாடியது.
   உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. நம் இருவரின்
   சார்பிலும் அனைவரும் கேட்டு, பார்த்து மகிழ –

   –வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Subburathnam சொல்கிறார்:

    அது என்னவோ தெரியவில்லை கிராமப் புற பின்னனியை சேர்ந்த நான் விமானப் படை யில் 1974 ல் சேருவதற்கு முன்பிருந்தே இந்தி ப் பாடல்கள் கேட்பதில் ஓர் ஆர்வம். அதுவும் .மொழி தெரியாமல். எதுகை மோனை அதிகம் உள்ளதாலும் விரும்பியிருக்க கூடும். என்னை அறியாமல் ஈர்க்கப்பட்டேன்.

    ஒஹொரே தால் மிலே நதிக்கெ ஜல்மெ,
    நதி மிலே சாஹர்மே
    சாஹர் மிலே கோன்செ ஜல்மெ
    கொயி ஜானெனா

    சாஹர் கித்நா மெரெ பாஸ்ஹெ,
    மெரெ ஜீவன்மெ phirபி ப்யாஸ்ஹெ

    மேரா ஜீவ்ன் கோரா காகஸ் கோராஹி ரெஹக்யா?

    எழுதிக்கொண்டே போகலாம். மொழி எதுவாகினும், அதனை கையாலும் விதத்தில் அது ஒருவரின் ஆத்மாமாவோ உறவாட வைக்க முடியும் என்னும் போது மெய் சிலிர்க்கிறது.
    அதிக உரிமை எடுத்துக் கொண்ட தற்கு மன்னிக்கவும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப சுப்புரத்னம்,

     வரவேற்கிறேன்…
     எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள்…
     மனதில் உள்ளதை எல்லாம் வெளிப்படுத்த தானே
     இந்த வலைப்பதிவு.

     // மேரா ஜீவன் கோரா காகஸ் கோராஹி ரெஹக்யா //

     கோரா காகஸ் பாடலில்,
     கிஷோர்குமாரின் பாடல் பின்னணியில்
     ஜெயா பாதுரியின் அமைதியான நடிப்பு …..

     —-

     //ஒஹொரே தால் மிலே நதிக்கெ ஜல்மெ,
     நதி மிலே சாஹர்மே//

     முகேஷின் தனிக்குரல்…
     அருமையான, மறக்க முடியாத ரோஷனின் பாடல்கள்…

     இவை எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள் தான்.
     முன்பெல்லாம் (பணியில் இருக்கும்போது)
     இரவு நேரங்களில், தூங்கும் முன்னர் –
     படுக்கையில் படுத்துக் கொண்டு, அரை மணி நேரம்
     இந்த மாதிரி பழைய பாடல்களை
     கேட்பது வழக்கம்.

     இப்போதெல்லாம் – நிறைய படிக்கிறேன்… எழுதுகிறேன்.
     படுக்கப் போகும்போதே இரவு ஒன்றரை மணியாகி விடுகிறது.
     பாடல்கள் கேட்க நேரம் தனியே ஒதுக்க முடியவில்லை.
     பாடலை கேட்டுக் கொண்டிருந்தால் – எழுதுவதில்
     concentrate பண்ண முடிவதில்லை….

     – அதற்கு வடிகாலாகத் தான் சில நேரங்களில்
     “என் விருப்பம்”……!!!

     ——–

     நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள்.
     பின்னூட்டங்களில்,
     இடுகையிலான விவாதங்களில் கலந்து கொள்ளலாமே.

     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

     • subburathnam சொல்கிறார்:

      சார்
      உங்கள் பாராட்டுக்கு, நன்றி. உங்கள் ஆளுமை கண்டு வியக்கமட்டுமே முடியும். நான் வெளியில் நின்று வியக்கும் ரகம். முயற்சிக்கிறேன்.
      நன்றி

 7. shiva சொல்கிறார்:

  Mr KM
  Thanks for the post and sharing some of my favourite songs.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.