துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் குணாதிசயங்களுக்கு – இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்….!!!

cho-and-mgr

முதலிலேயே சொல்லி விடுகிறேன்…
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு “சோ” அவர்களைப்பற்றி
அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பேன்….

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பார்கள்.
நான் சிறு வயதிலேயே இவற்றைப்பற்றி நிறைய
படித்திருந்தேன். என் இளைய வயதில் இதன் பின் பகுதியை
மட்டுமே ஏற்க முடிந்தது.. முன் பகுதியை ஏற்க முடியவில்லை….

பின்னர் வளர வளர, அனுபவப்பட அனுபவப்பட –
பலரையும் நெருங்கி அறிய ஆரம்பிக்க –
தாய் தந்தையரின் influence, குணாதிசயங்கள் பிள்ளை /
பெண்களின் மீது எந்த அளவிற்கு படர்ந்திருக்கிறது என்பதை
நடைமுறையில் உணர்ந்தேன்.

பின்னர், சில ஆண்டுகள் தொடர்ச்சியாக, இதை
– character study பண்ணுவதை –
ஒரு ஆராய்ச்சியாகவே செய்து பார்த்தேன்.
அப்போது தான் DNA என்றால் என்ன, அதன் தாக்கம் என்ன
என்பதை நடைமுறையில் உணர முடிந்தது.

என்னிடமே கூட என் தாய், தந்தையின் பல குணங்கள்
இயல்பாகவே படிந்திருப்பதை நானே உணர முடிந்தது.

பின்னர், பெருமுயற்சி செய்து,
அவற்றில் – தேவையானவற்றை மட்டும் வைத்துக்
கொண்டு மற்றதை மாற்றிக் கொண்டு விட்டேன்.
( என் அம்மாவிற்கு ரோசம், பிடிவாதம், முன்கோபம்
உண்டு… ரோசத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை
விட்டு விட்டேன்…)
(அப்பா – சுதந்திர போராட்ட தியாகி –
பெண்டாட்டி, பிள்ளைகள், குடும்பத்தை சுத்தமாக மறந்தவர் ..
நான் தேசபக்தியை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பத்தின்
மீது எனக்கான கடமையை முழுமையாக நிறைவேற்றுகிறேன்…)

நான் இதையெல்லாம் இங்கு சொல்ல
வந்ததற்கான காரணம் –
ஆசிரியர் “சோ” அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரையை
படித்ததன் விளைவே …!

“சோ” அவர்கள் தனது குடும்ப பின்னணியைப்பற்றி
ஒரு பேட்டியில் கூறுகிறார். அவர் தாய் வழி முன்னோர்களை
பற்றியும், தந்தை வழி முன்னோர்களைப் பற்றியும்
படிக்கும்போது தோன்றியது தான் இந்த கருத்து.

“சோ” அவர்களின், புத்திசாலித்தனம், நேர்மை, தைரியம்,
எதிரே இருப்பவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்
தன் இயல்புபடியே நடந்துகொள்வது ….
ஆகிய குணங்களுக்கு அவரது முன்னோர்களும் ஒரு முக்கிய
காரணம் என்பது தெளிவாகவே தெரிகிறது.
அடேயப்பா … எல்லாரும் எவ்வளவு பெரிய மனிதர்கள்…!!!

நான் படித்த பேட்டியை
நீங்களும் படிக்க வேண்டாமா…?

கீழே …….

cho-bg-1

cho-bg-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் குணாதிசயங்களுக்கு – இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்….!!!

  1. selvarajan சொல்கிறார்:

    அய்யா …! ” விதை ஒன்று போட்டால் – சுரை ஒன்றா முளைக்கும் ” என்பதைப்போல உருவாவது தானே சிறக்கும் — குணாதிசியங்களுக்கு இதுதானே முழு முதற்காரணம் — சில மாறுபாடுகள் கால மாற்றங்கள் — வெளிவட்டார தொடர்புகள் — வேலையின் தன்மை — தற்கால வாழ்க்கை முறைகள் போன்றவைகளால் ஏற்படுவதும் உண்டு ……

    திரு பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு — ” சோ ” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது….. நாடகத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக — தன்னுடைய புனைப்பெயராக சோ என்பதை வைத்துக்கொண்டார் .. ராமசாமி என்றால் நிறைய பேருக்கு தெரியாது — சோ என்றால் உடனே தெரிகின்றவாறு அந்தப்பெயர் அவருக்கு நிலைத்து விட்டது … பல கலைகள் ஒன்றாக அமைவது ஒரு சிலருக்கே — அதில் சோவும் ஒருவர் … அப்படித்தானே …. ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.