துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் குணாதிசயங்களுக்கு – இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்….!!!

cho-and-mgr

முதலிலேயே சொல்லி விடுகிறேன்…
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு “சோ” அவர்களைப்பற்றி
அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பேன்….

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பார்கள்.
நான் சிறு வயதிலேயே இவற்றைப்பற்றி நிறைய
படித்திருந்தேன். என் இளைய வயதில் இதன் பின் பகுதியை
மட்டுமே ஏற்க முடிந்தது.. முன் பகுதியை ஏற்க முடியவில்லை….

பின்னர் வளர வளர, அனுபவப்பட அனுபவப்பட –
பலரையும் நெருங்கி அறிய ஆரம்பிக்க –
தாய் தந்தையரின் influence, குணாதிசயங்கள் பிள்ளை /
பெண்களின் மீது எந்த அளவிற்கு படர்ந்திருக்கிறது என்பதை
நடைமுறையில் உணர்ந்தேன்.

பின்னர், சில ஆண்டுகள் தொடர்ச்சியாக, இதை
– character study பண்ணுவதை –
ஒரு ஆராய்ச்சியாகவே செய்து பார்த்தேன்.
அப்போது தான் DNA என்றால் என்ன, அதன் தாக்கம் என்ன
என்பதை நடைமுறையில் உணர முடிந்தது.

என்னிடமே கூட என் தாய், தந்தையின் பல குணங்கள்
இயல்பாகவே படிந்திருப்பதை நானே உணர முடிந்தது.

பின்னர், பெருமுயற்சி செய்து,
அவற்றில் – தேவையானவற்றை மட்டும் வைத்துக்
கொண்டு மற்றதை மாற்றிக் கொண்டு விட்டேன்.
( என் அம்மாவிற்கு ரோசம், பிடிவாதம், முன்கோபம்
உண்டு… ரோசத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை
விட்டு விட்டேன்…)
(அப்பா – சுதந்திர போராட்ட தியாகி –
பெண்டாட்டி, பிள்ளைகள், குடும்பத்தை சுத்தமாக மறந்தவர் ..
நான் தேசபக்தியை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பத்தின்
மீது எனக்கான கடமையை முழுமையாக நிறைவேற்றுகிறேன்…)

நான் இதையெல்லாம் இங்கு சொல்ல
வந்ததற்கான காரணம் –
ஆசிரியர் “சோ” அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரையை
படித்ததன் விளைவே …!

“சோ” அவர்கள் தனது குடும்ப பின்னணியைப்பற்றி
ஒரு பேட்டியில் கூறுகிறார். அவர் தாய் வழி முன்னோர்களை
பற்றியும், தந்தை வழி முன்னோர்களைப் பற்றியும்
படிக்கும்போது தோன்றியது தான் இந்த கருத்து.

“சோ” அவர்களின், புத்திசாலித்தனம், நேர்மை, தைரியம்,
எதிரே இருப்பவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்
தன் இயல்புபடியே நடந்துகொள்வது ….
ஆகிய குணங்களுக்கு அவரது முன்னோர்களும் ஒரு முக்கிய
காரணம் என்பது தெளிவாகவே தெரிகிறது.
அடேயப்பா … எல்லாரும் எவ்வளவு பெரிய மனிதர்கள்…!!!

நான் படித்த பேட்டியை
நீங்களும் படிக்க வேண்டாமா…?

கீழே …….

cho-bg-1

cho-bg-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் குணாதிசயங்களுக்கு – இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்….!!!

  1. தமிழன் சொல்கிறார்:

    குமுதம் செய்த ஒரு முக்கியமான, தேவையான செயல், சோவிடம் அவரது அனுபவங்கள் பற்றி ஒரு நெடும் தொடர் வாங்கிப் பிரசுரித்ததுதான். சோவின் ஆரம்பகாலங்களையும், அவர் பழகிய மனிதர்களைப் பற்றியும், அவர் அப்பா, சோவின் கருத்து/செய்கைகளினால் (அப்பா தீவிர காங்கிரஸ் காரர்) சங்கடப்பட்டதையும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். சமயத்தில் சில பெரியவர்களிடம் அதிகப்பிரசங்கியாக நடந்துகொண்டதையும், அதைத் தவறு என்று பிற்பாடு உணர்ந்துகொண்டதையும் வெளிப்படையாக எழுதியிருப்பார். அவருடைய நிலைப்பாடு, தன்னுடைய கட்சிக்கு எதிராக இருப்பதால், கட்சி சார்பானவர்கள் சோவை விரும்பியதில்லை. அவர், அரசியலைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்ந்தார். எத்தனை முறை அவரைப் பற்றிப் புதிய செய்திகளோ, தெரிந்த செய்திகளோ படித்தாலும், interestingஆகத்தான் இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.