வெனிசுலாவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் …?

ven-5

vebezula-1

venesula-2

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா.
முன்னாள் ஸ்பெயின் காலனி…
இந்தியாவுடன் ஒப்பிட்டால் மிகக்குட்டி நாடு –
சுமார் மூன்றேகால் கோடி மக்கள் தொகை தான்…!

எண்ணை வளம் நிரம்பிய நாடு. உலகிலேயே அதிக அளவில்,
எண்ணை வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில்,
கிழக்கே கயானா என்று எல்லாமே ரெண்டாங்கெட்டான்
நாடுகள். கம்யூனிஸ்ட் என்கிற பெயரில்
தொடர்ச்சியான சர்வாதிகாரம்… தற்போதைய அதிபர்
நிக்கோலஸ் மதுரோ… மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த
சாவஜ் -ன் மறைவிற்குப் பிறகு, அவரது வாரிசாக 2013-ல்
பதவிக்கு வந்தார்.

எண்ணை ஏற்றுமதியை நம்பியே வளர்ந்த பொருளாதாரம்,
உலக அளவில் எண்ணை விலை வீழ்ச்சியடைந்தவுடன்,
கடும் நெருக்கடியை சந்தித்தது. பொறுப்பில்லாமல் மக்களை
செலவழிக்கத் தூண்டி வளர்ந்த பொருளாதாரம் பெரும்
நெருக்கடியில் சிக்கியது.

பக்கத்து நாடுகளிலிருந்து, முக்கியமாக கொலம்பியாவிலிருந்து
செயல்பட்ட drug mafia கும்பல்கள் வெனிசுலாவின்
பொருளாதாரத்தைச் சிதைத்து வந்ததாக புகார்….

வெனிசுலாவின் முக்கிய கரென்சி – 100 போலிவியர் நோட்டுகள்
(100-bolivar bills). இதன் மதிப்பு கடந்த சில
வருடங்களில் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. இந்த 100 போலிவர்
நோட்டுக்களை கொலம்பிய மாஃபியா கும்பல்கள் போதை
மருந்து கடத்தலுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்த,
பக்கத்து நாடுகளுக்கு எடுத்துச்சென்று பதுக்கி வைத்ததாகவும்
புகார். அமெரிக்கா வேண்டுமென்றே திட்டமிட்டு வெனிசுலாவின்
பொருளாதாரத்தை சீர்குலைக்க, 100 போலிவியர் நோட்டுகளை
பலவீனப்படுத்தியதாகவும் மதுரோ ஆட்சி
குற்றம் சாட்டுகிறது. ஒரு 100 போலிவியர் நோட்டின்
மதிப்பு 10 அமெரிக்க செண்டுக்கும் கீழே போய் விட்டது.

மக்கள், பைகளிலும், சாக்கு மூட்டைகளிலும் கரன்சி
நோட்டுக்களை எடுத்துச் சென்று, அன்றாடத்தேவைகளை
வாங்கும் அளவிற்கு கரன்சி மதிப்பின் வீழ்ச்சி.

இத்தகைய பின்னணியில், வெனிசுலாவின் பொருளாதாரத்தை
சீர்திருத்துகிறேன் என்று சொல்லி, அதன் அதிபர் நிக்கோலஸ்
மதுரோ திடீரென்று 100 போலிவியர் நோட்டுக்கள் செல்லாது
என்று கடந்த 11-ந்தேதி அறிவித்தார். கூடவே,72 மணி
நேரத்துக்குள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை
வங்கிக்கு சென்று புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ள
வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பழைய 100 போலிவியர் நோட்டுக்களுக்கு பதிலாக,
புதிதாக 500, 2000, 20,000 நோட்டுக்கள் வெளியிடப்படுவதாக
அறிவித்தார்.

ven-3

( இங்கே நம்ம ஊர் ஞாபகம் வருகிறதா…? )

பக்கத்து நாடுகளுக்கு கடத்தப்பட்ட 100 போலிவியர் நோட்டுக்கள்
வெனிசுலாவிற்குள் கொண்டு வரப்பட முடியாதபடி
அண்டை நாடுகளுடனான – தரை, விமானம் மற்றும் கடல்
போக்குவரத்து முடக்கப்பட்டது. எல்லைகள் அனைத்திற்கும்
சீல் வைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு மூடப்பட்டே இருக்கும்
என்றும் அறிவித்தார்.

ஆனால், வங்கிகளில் வந்து குவிந்த பழைய 100 போலிவியர்
நோட்டுக்களுக்கு பதிலாக, போதிய அளவில் புதிய நோட்டுக்கள்
தயார் ஆகவில்லை.

வெளிநாடு ஒன்றில் (ரகசியமாக) அச்சடிக்கப்பட்டிருந்த
நோட்டுக்கள், விமானம் மூலமாக வருவதை தடுக்க
எதிரிகள் சதி செய்து விட்டதால், உரிய
நேரத்தில், பதிலுக்கு புதிய நோட்டுக்களை கொடுக்க
முடியவில்லை என்று வெனிசுலா அரசு அறிவித்தது.

பழைய நோட்டுக்கள் செல்லாது – புதிய நோட்டுக்களோ
போதிய அளவில் வந்து சேரவில்லை….
அன்றாட உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட
வழி இல்லாமல் போகவே, வெனிசுல மக்கள் கலகத்தில்
இறங்கினார்கள்…. வன்முறை வெடித்தது…
சூப்பர் மார்க்கெட்கள் சூறையாடப்பட்டன…..

வெனிசுலாவில் 40 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்குகள்
இல்லாததால், டிஜிடல் பரிவர்த்தனையும் நடைமுறையில்
சாத்தியப்படவில்லை…..!

மக்களின் கொதிப்பும், வன்முறையும் சில உயிரிழப்புகளுக்கு
காரணமாயின.

வேறு வழியில்லாத நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ
ஞாயிறு அன்று தொலைக்காட்சியில் தோன்றி,
100 பொலிவார் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு
தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.

பழைய நோட்டுக்கள் ஜனவரி 2-ந்தேதி வரை செல்லும் என்றும்,
அந்த தேதி வரை பழைய நோட்டுக்களை கொடுத்து விட்டு,
புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும்
அதுவரை அண்டை நாடுகளுடனான எல்லைகளும்
மூடப்பட்டே இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

மக்களுக்கு தேவையான அளவிற்கு புதிய நோட்டுக்களை
அரசால் இன்னமும் கொடுக்க முடியவில்லை என்பதால்,
கொந்தளிப்பும், கலவரமும் இன்னமும் தொடர்கிறது….!!!

மக்களை பொறுமை காக்கும்படி சொல்லிவிட்டு, அதிபர் நிகோலஸ் மதுரோ "சல்ஸா" நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்....!!!

மக்களை பொறுமை
காக்கும்படி சொல்லிவிட்டு, அதிபர்
நிகோலஸ் மதுரோ
“சல்ஸா” நடனம்
ஆடிக்கொண்டிருக்கிறார்….!!!

——————————–

சரி இந்த கதையெல்லாம் நமக்கு எதற்கு ….?
இந்தியாவிற்கும் வெனிசுலாவிற்கும் என்ன சம்பந்தம்…?

வெனிசுலாவையும் இந்தியாவையும் கொஞ்சம்கூட
(compare) ஒப்பிட முடியாது….. , சூழ்நிலை,
பொருளாதாரம், ஆட்சிமுறை, மக்களின் பண்பாடு
எல்லாமே வேறு வேறு தான்…

ஆனால் ஒரே ஒரு விஷயம் பயமுருத்துகிறது….

சரியான திட்டமிடல் இல்லாமையும்,
மூர்க்கத்தனமும் –
வெனிசுலா, இந்தியா
இரண்டுக்கும் பொதுவானவை தானே…!!!

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to வெனிசுலாவுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் …?

 1. இளங்கோ சொல்கிறார்:

  சரியான நேரத்தில் சரியான கட்டுரை.

  அதுவும், கடைசி வரிகள் பின்னிட்டீங்க கே.எம்.சார்.

 2. kayshree சொல்கிறார்:

  No I agree to disagree with you. Indian Government has well planned ahead of all these turmoil’s with great lot of Economic Pundits, the Finance Ministry and other Reserve bank Governor and officials. India’s population is about 124 billion people . How can you compare Venezuela with that of India. Venezuela is just equivalent to small Goan territory and their population is far below ours. Their culture is different . We follow here the Sanatana Dharma as the Basic Philosophy of Bharat. People are having diversified culture and speak many langguages and there are about 1600 castes/ though I appreciate some of your other articles but certainly not this. Your comparison is absolutely baseless and ridiculous. What is the per man capita of India ? and what is the per man yearning of Venezuela. What is the GDP of India and what is the GDP of Venezuela a tiny country with a miniscule dot in the world map ? Please focus your attention of the Indian economy and study and write before you wash the dirty linen in the public ……They are both incomparable and lacks any justification ….you have written with a filth mind , that is my gutsy feeling . ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப kayshree,

   எனக்கு பொருளாதாரம் தெரியாது என்று நினைத்து
   கற்றுக் கொடுக்க முனைகிறீர்களா ?
   உங்களுக்கு பொருளாதாரமும் தெரியவில்லை,
   தமிழும் தெரியவில்லை என்பதை
   உங்கள் பின்னூட்டத்தின் மூலம்
   நீங்களே புரிய வைக்கிறீர்களே…!

   நான் இடுகையில் கடைசி பகுதியில் என்ன சொன்னேன் ?

   // வெனிசுலாவையும் இந்தியாவையும் கொஞ்சம்கூட
   (compare) ஒப்பிட முடியாது….. , சூழ்நிலை,
   பொருளாதாரம், ஆட்சிமுறை, மக்களின் பண்பாடு
   எல்லாமே வேறு வேறு தான்…//

   – இதில் எந்த இடத்தில் தவறு காண்கிறீர்கள்…?
   இந்த பகுதியில் நான் சொன்னதைத்தான் நீங்களும்
   ஆர்.எஸ்.எஸ். மொழியில் சொல்ல முயற்சிக்கிறீர்கள்…

   அடுத்த பகுதியில் நான் சொன்னது –

   // ஆனால் ஒரே ஒரு விஷயம் பயமுருத்துகிறது….
   சரியான திட்டமிடல் இல்லாமையும்,
   மூர்க்கத்தனமும் –
   வெனிசுலா, இந்தியா
   இரண்டுக்கும் பொதுவானவை தானே…!!!//

   இதில் என்ன தவறு…?

   42 நாட்களுக்குப் பிறகும் மக்கள் நீண்ட க்யூ வரிசையில்
   நின்று கொண்டிருக்கிறார்கள். 95 % ஏடிஎம்கள் செயல்படவில்லை.
   இன்று நான் 9 ஏடிஎம்களுக்கு சென்றேன். 8 செயல்படவில்லை.
   ஒரே ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் மாலை 4 மணிக்கு மேல்
   (வெறும்) 2000 ரூபாய் கொடுத்தது.

   சென்ற வியாழக்கிழமை முதல் நான் கையில்
   24,000 ரூபாய் செக்குடன் தினமும் அலைகிறேன். இன்று வரை
   கேஷ் வரவில்லை என்றே சொல்கிறார்கள். கடைசியாக,
   நாளை வாருங்கள்… 6000 ரூபாய் கிடைக்கக்கூடும் என்று
   சொன்னார்கள்.

   பதிலுக்கு புதிய கரென்சியை தயார் செய்து வைத்துக்
   கொள்ளாமல், பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாது
   என்று அறிவித்தது –

   ஆயிரம் முறை சொல்வேன் –
   ” சரியான திட்டமிடல் இன்மை தான்…”

   நான் நாகரிகமாகச் சொல்கிறேன். நான் சந்திப்பவர்கள்,
   க்யூவில் நிற்பவர்கள் – இதைவிட நாகரிகமாகச் சொல்கிறார்கள்
   ” அறிவு கெட்டத்தனம்” என்று…

   செய்த தவறை அரசும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
   துரித நிவாரண நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது.
   உங்களைப்போன்ற வக்காலத்துதாரர்களும் மறுக்கிறீர்கள்…
   இதற்கான definition தான் “மூர்க்கத்தனம்”

   எத்தனை நாட்களாக இந்த விமரிசனம் தளத்தை படிக்கிறீர்கள்…? என்னைப்பற்றியும், என் எழுத்தைப்பற்றியும்
   என்ன தெரியும் உங்களுக்கு … ?
   ” you have written with a filth mind ” – என்று எழுதுகிறீர்கள்…?

   கட்சிப்பாசத்தையும், மோடிஜி விசுவாசத்தையும் மூட்டை
   கட்டி வைத்து விட்டு நான் இங்கு எழுதி இருப்பவற்றை
   மீண்டும் ஒரு முறை படியுங்கள்…

   74 வயது கிழவன் ஒருவனை அவனது சொந்த பணத்தை
   எடுக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் இந்த
   அயோக்கியத்தனத்தை கண்களை மூடிக்கொண்டு
   வக்காலத்து வாங்குவது, ஆதரிப்பது சரியா என்பது
   ஒருவேளை புரிந்தாலும் புரியலாம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • தமிழன் சொல்கிறார்:

    “Indian Government has well planned ahead of all these turmoil’s ” – ‘நான் 500/1000 ரூ தடைக்கு ஆதரவு எண்ணம் உள்ளவன். இருந்தாலும், Well Planned என்பது கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது. அரசு நிச்சயம் நல்லாத் திட்டமிடவில்லை. திட்டமிட்டிருந்தா, ‘கையில் மை’, ‘தடை செய்த அன்றுமுதல் பழைய ரூபாயில் தங்கம் விற்பனையைக் கட்டுப்படுத்தாதது’, ‘தானியங்கி இயந்திரத்தில் புதிய 2000ரூ வைக்க வழியில்லாதது’ , ‘இடையில் பழைய அழிக்கவேண்டிய 100 ரூ நோட்டுக்களை மீண்டும் உபயோகத்தில் விட்டது’ போன்று பல flaws இருந்தன. ஆனால், நான், அரசு எல்லோரிடமும் ஆராய்ந்து திட்டமிட்டிருந்தால், கொள்ளையர்கள் தப்பித்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.. இப்போதே, எல்லோர் கண் முன்பே, பல அரசியல்வாதிகள், பணக்காரர்கள் கையில் புதிய 2000 ரூ ஏகப்பட்டது பதுங்கிக்கிடப்பதே நம் நாட்டு அதிகாரிகளின் integrityக்குச் சான்று.

    கீழே உள்ள மற்றவர்களின் எண்ணத்தையும் படித்தேன்… நல்ல எண்ணத்தில்தான் பிரதமர் அவர்கள் செய்திருப்பார் என்று இன்னும் நம்புகிறேன். ஜியோவுடன் தொடர்புபடுத்துவது எல்லாம் கொஞ்சம் too much என்று தோன்றுகிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தெரிந்துவிடும்.

    நடப்பதைத் தெரிவிப்பதற்கும், விமரிசனம் செய்வதற்கும், காமை சார் மேல் பாய்ந்து என்ன பயன். அவர் fair mindடுடன் விமரிசனம் செய்கிறார். நம் நாகரீகமான எதிர்க்கருத்தையும் (reasonable feedback) பதிவு செய்கிறார்தானே..

   • LVISS சொல்கிறார்:

    Why is it that you brand every one who differs from you as RSS or BJP people -(this is how I myself became a BJP bhakt in your opinion –) Cant they be supporters of one of the allies of BJP — You wirte from one angle and you expect every body to agree with whatever you write — On the top of it you talk about freedom of expression being snatched by the govt —

 3. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! என்ன திடிரென்று ” வெனிசுலா ” செய்தி .. ! மோடிஜி கூறிய 50 நாட்கள் என்றதில் – 42 நாட்கள் கடந்து விட்டன — இன்னும் எட்டே எட்டு நாட்கள் தான் … அதன் பிறகு பாருங்கள் ஒவ்வொரு இந்தியனும் எப்படி ” ஜொலிக்க போகிறான் ” என்று … என்ன இதுநாள் வரையில் வங்கி மற்றும் ஏ டி எம் வாசலில் வரிசைக்கட்டி நின்று கொண்டு இருந்தவன் — ஐம்பத்தியோராவது நாள் உட்கார்ந்து இருக்க போகிறான் … நின்று – நின்று கால் வலிக்குமல்லவா … ?

  மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூறுவதை பாருங்கள் : மோடியின் 8-ஆம் தேதி அறிவிப்பு பற்றி — உங்களைப்போலவே எங்களுக்கும் தெரியாது, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதும் எங்களுக்கும் தெரியாது. ஆனால், அவர் ஒரு திட்டத்தோடு செயல்படுகிறார். நம்புங்கள். நல்ல காலம் வருகிறது — என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் … என்பது மட்டும் உண்மை ….

  நவம்பர் எட்டு முதல் இன்று வரை திடீர் அறிவிப்புகள் மட்டும் 50 -க்கும் மேல் அறிவித்த இந்த அரசு எந்த முன் நடவடிக்கையும் — முன்யோசனையும் இல்லாமல் ” தன்னிஷ்டத்திற்கு ” செயல் படுகிறது என்பது மட்டும் வெட்ட வெளிச்சம் ….

  ரொக்கமற்ற ” மின் பரிவர்த்தனை ” என்று கூறி சாதாரண மக்களை கைபேசி வழியான பரிவர்த்தனைக்கும் — அட்டைகளை தேய்க்கவும் — தள்ளுவதன் மூலம் என்ன பலன்கள் ஏற்பட போகிறது என்பதை — அவர்கள் தான் விளக்க வேண்டும் …. உண்மையில் பலனை அனுபவிக்க போவது யார் …. ?

 4. Sekar சொல்கிறார்:

  kayshree,

  உங்கள் பதில் மூலம் நீங்கள் ஒரு பாஜக பஜனை மடம் என்று நிரூபித்து விட்டீர்களே.
  முதலில் மோடிஜி பூதக்கண்ணாடியை கழட்டி விட்டு கே.எம்.சார் எழுதி இருப்பதை ஒழுங்காக படியுங்கள்:

  கே.எம். சார் ஏற்கெனவே சொல்லி விட்டார் :

  //வெனிசுலாவையும் இந்தியாவையும் கொஞ்சம்கூட (compare) ஒப்பிட முடியாது….. , சூழ்நிலை, பொருளாதாரம், ஆட்சிமுறை, மக்களின் பண்பாடு
  எல்லாமே வேறு வேறு தான்…//

  //சரியான திட்டமிடல் இல்லாமையும்,//
  500-1000 நோட்டுக்களை செல்லாக்காசாக்கி 42 நாட்கள் ஆகி விட்டன. இன்னமும்
  காசு கிடைக்க மாட்டேனெங்கிறது. வங்கியிலும் சரி, ஏடிஎம் மிலும் சரி.
  இது தான் திட்டமா ?

  // மூர்க்கத்தனமும் –//
  எங்கேயாவது பேங்கிலோ, ஏடிஎம்மிலோ கியூவில் நின்று கொண்டிருப்பவரிடம்
  உங்கள் பாஜக பஜனையை பாடிப்பாருங்கள்.. உங்கள் மூர்க்கத்தனத்துக்கு
  செருப்படி விழும்.
  பாஜக அடிமை என்பதைத்தவிர வேறு எந்த புத்திசாலித்தனமோ,
  கருத்துச்செறிவோ காணப்படவில்லை உங்கள் பின்னூட்டத்தில்.
  போய் டெட்டால் விட்டு உங்கள் கண்ணையும், கைகளையும் கழுவுங்கள்.
  முடிந்தால் மூளைச்சலவையிலிருந்து வெளியில் வரப்பாருங்கள்.
  வந்து விட்டார் வரிந்து கட்டிக் கொண்டு. பாஜக ஜால்ரா கூட்டத்தை கண்டாலே
  மக்கள் காரி துப்பக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
  வெளியில் எங்கேயாவது சென்று இந்த மாதிரி எல்லாம் பேசி மாட்டிக் கொள்ள
  வேண்டாம். உங்கள் பெண்டு பிள்ளைகள் திண்டாடுவார்கள்.

 5. Sekar சொல்கிறார்:

  When we talk of economics,
  some brainless fellows talk about “Sanatana Dharma”
  After repeatedly talking about “cashless” ,
  they have become “brainless” now.
  //// We follow here the Sanatana Dharma
  as the Basic Philosophy of Bharat. //
  Who asked you about your dharma here ? Have you come here
  to teach as RSS Pracharak ?
  Fools will not understand Economics.
  They understand only BJP /RSS Bhajanas

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  பூனை கண்ணை மூடி விட்டால் உலகமே இருட்டு என நினைக்குமாம், இங்கு அப்படி ஒரு கூட்டமே இருக்கு.

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு நண்பரின் முகல்நூலில் இருந்தது…

  • kayshree சொல்கிறார்:

   ஒரு நாய் ஊளை இட்டால் எல்லா நாயும் ஊளையிடும்….அதுதான் நமது பண்பாடு நாகரீகம்….எத்தனை நாய்கள் என்னை பார்த்து குறைக்கிறது ….இது அல்லவோ நமது அறிவு….

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப kayshree,

    நான் அவ்வளவு விவரமாக உங்களுக்கு என் அனுபவங்களை
    எழுதினேன்.

    நீங்கள் பதிலுக்கு “நாய் ஊளையிடுகிறது” என்று எழுதுகிறீர்கள்…!

    இது தானா சனாதன தர்மத்தில் நீங்கள் கற்றுக் கொண்டது…?.

    உங்கள் ” பண்பாடு ” என்னை பிரமிக்க வைக்கிறது.
    நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 8. LVISS சொல்கிறார்:

  Only on one point of demonetisation the two countries can be compared — Otherwise it is stupid to comapre the way the two countries handled the issue –Moreover our is not demonetisation, it is just suspending legal tender nature of notes – People were given 50 days for exchanging old notes in their possession —Even today ,with just 10 days to go for the deadline, some individuals are keeping the notes with them -Why? Venezuela did not give time enough for exchange — Where our scheme took a beating and went astray and all calculations went awry was when the new currency notes intended to be distribtuted to public and given by the RBI to the bank were given to individuals –Now these confiscicated cash have to brought into the system – If this has not happened things would have been much better —
  Where did you find “moorkathanam ” in this –Generally our people are lackadaisical about so many things almost every thing -They dont take things seriously –They have to be goaded to do things —

  • G.Rameshkumar சொல்கிறார்:

   Mr.LVISS,

   ( கே.எம்.சார் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் )

   // it is stupid to comapre the way the two countries handled the issue //
   யார் கம்பேர் பண்ணினார்கள் ?
   கே.எம்.சார் தாண்ட் கம்பேர் பண்ண முடியாது
   என்று சொல்லி விட்டாரே ?
   //People were given 50 days for exchanging old notes //
   எட்டரை மணிக்கு நோட்டுக்கள் செல்லாது என்று
   அறிவித்தார். 12 மணியிலிருந்து – நள்ளிரவிலிருந்து –
   நோட்டுக்கள் செல்லுபடியாகவில்லை
   என்பது தான் உண்மை. மாற்றிக்கொள்ள மதுரோ கூட தான்
   72 மணி நேரம் கொடுத்தாரே ?

   //Where our scheme took a beating and went astray and all calculations went awry was when the new currency notes intended to be distribtuted to public and given by the RBI to the bank were given to individuals //

   இதற்கு பெயர் தான் “moorkathanam ”

   பதினைந்தரை லட்சம் கோடியை வாபஸ் வாங்கிக்கொண்டு,
   42 நாட்களுக்குப் பிறகும் 5 லட்சம் கோடி கூட replace செய்ய முடியவில்லை. இருந்தாலும் நியாயப்படுத்த
   முயற்சிக்கிறீர்கள்.
   இதற்கு பெயர் தான் “moorkathanam ” – புரிகிறதா ?
   அரசு செய்தாலும், உங்களைப்போன்ற ஜால்ராக்கள் செய்தாலும்,
   இது தான் “moorkathanam ”.

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கீழே இருப்பது,
  எனது தனிப்பட்ட மெயில் ID-க்கு
  வந்துள்ள ஒரு நண்பரின் மின்னஞ்சலிலிருந்து
  சில பகுதிகள் ….
  சில விஷயங்கள் சீரியசாக யோசிக்க வைக்கின்றன….

  ——————————————————-

  இந்திய குடிமகனின் தனிப்பட்ட ரகசிய அடையாளங்களை [ ஆதார் & விரல் ரேகை ] — அம்பானியின்
  ரிலையன்ஸ் ஜியோவுக்கு கொடுத்தது எந்த மக்களின்
  நன்மையை கருதி ? அதனால் கொடுத்தவர்களும்,
  வாங்கிக்கொண்டவர்களும் பெற்ற ஆதாயங்கள் என்ன ?

  கருப்பு – கள்ள பண ஒழிப்பு என்று செல்லா நோட்டு
  உத்திரவும் — ரிலையன்ஸின் குறிப்பிட்ட காலத்திற்கு
  இலவச ஜியோ கார்டு என்ற அறிவிப்பிற்கும் உள்ள \
  தொடர்பு என்ன ?

  இன்றில்லா விட்டாலும், நாளையும் இல்லா விட்டாலும்
  என்றாவது ஒரு நாள் இதன் பின்னணியில் நிறைய விஷயங்கள் அடங்கி இருப்பது வெளிவந்து தானே தீரும் ?

  சில்லறை வர்த்தகத்தில் நோட்டு பரிவர்த்தனைக்கு பதிலாக மின்பரிவர்த்தனை என்றும் – ரொக்கமாற்றம் கையிடை பேசிமூலம் என்றும் கூறுவதை உற்று நோக்கினால் —
  என்ன உண்மை புரிகிறது ?

  இலவச ஜியோ கார்டு என்றவுடன் ஏறி விழுந்து —
  குஷியோடு வரிசையில் நின்ற குடிமகன்கள் —
  விரைவில் வங்கி மற்றும் ஏ .டி . எம் . களின் முன்னாள் அவதியோடு நிற்க போகிறோம் என்பதை உணர விடாமல்
  செய்தது தானே — அந்த இருவரின் சாமர்த்தியம் ?

  அம்பானி அறிவித்த செய்தி மிக முக்கியத்துவம் வாய்ந்தது ரிலையன்ஸ் சார்பாக ஜியோ மணி (JIO Money) என்கிற மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்குவது தொடர்பானது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்று இதை ஆரம்பிக்க 11 – நிறுவனங்கள் அனுமதி பெற்று இருந்தாலும் …..

  பாரத வங்கியும் — ரிலையன்சும் சேர்ந்து செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் படி ….அடுத்த சில வாரங்களில் நாடெங்கும்
  உள்ள சுமார் ஒரு கோடி சிறு வணிகர்களை ஜியோ மணி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவித்த அம்பானி, ஜியோ மணி செயலியில் மக்கள் தங்களது பணத்தைச் சேர்த்துக் கொள்ள நாடெங்கும் மிக விரைவில் மைக்ரோ ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது –
  மக்கள் முட்டாள்கள், எவ்வளவு ஏமாற்றினாலும்,
  அவர்களுக்கு எதுவுமே புரியாது என்கிற எண்ணத்தில் தானே ?

  அனைத்தையும் கூர்ந்து நோக்கினால் இறுதியில் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருடைய கைகளில் ???

  பண பரிவர்த்தனை இல்லா ” பாரதம் ” என்று முழங்குவதற்கு முன்பே ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடைபெற்று இருக்கின்றன என்பதற்கு ஜியோ கார்டு ஒரு உதாரணமா ?

  மின் பரிவர்த்தனை என்று துவங்கப் போவதை அறிந்து தானே அம்பானியின் செயல்கள் நடந்தேறி உள்ளன ?
  அவர் ஆதார் சான்று கேட்டதற்கும் – இன்று வங்கிகளில்
  ஆதார் கட்டாயமாக்கப்பட்டதற்கும் — ஏகப்பட்ட ஒற்றுமை இருப்பது எப்படி ? தற்செயலா ?

  சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
  பலரை பல நாள் ஏமாற்றலாம்.
  எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியுமா ?

  —————————————————

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 10. kayshree சொல்கிறார்:

  if 84 lakhs fools are in India hanging aroung Jio…not all the 127 crores are fools…first understand that ….The Govt of India (BJP) is an open book …that is why , today , the Honorable Prime Minister has sent warning signals to his own party hench men. today..understand that …..did any previous congress govt’s take any action like this….we had lots of 2g , mines mafia….common wealth games mafias….what action did they take during their regime….??? digitalization is an innovative policy for blocking black monies..and when the whole world going towards digital world, we as an advanced or advancing economy has to go forward and people must be willing to stand by the government…for the last two years …did any one hear off any corruption in this government ..don’t cry wolf and cat and blow your nasty guttural sounds like illiterates…. for your information I have been doing cash less transactions for well over ten years…yes I am not a wizard in computer and internet but my dedicated hard work paid the rewards…and I swear by GOD that I did not enter any banks since demonetization of currencies….till now…..that is because of ingenuous handling of all my requirements through internet banking and other wallet services….am also 75 years old …I know what are the difficulties faced by the common man…if you want to read more about me …you go to my time line in face book which srinivasan k iyer ….and read todays article on SALAM NEIGHBOUR and look at the alleppo reffugees from Syria how they were subjected to hardship and how they are pushing their lives in their concentration regfugee camps in Jordan and how they have developed their empire of a multi million dollar industry from trash to art …how they lead their lives …how two americans focused their attention in producing this film ….so pathetic…we think we are educated unfortunately we are educated white collared criminals directing the economy to go on the wrong direction from democrazy through sabotage …we have lots and lots of CRONY INTELLECTUALs, who are hell bent on wrecking the Indian Democrazy ……we boast our selves that we maintain and act as per Santana Dharma and striving for Rama Rajya….bogus criminals….pirates …lacking the sixth sense ..we have vairgya but do not have vivekha vairagya…..

 11. Sekar சொல்கிறார்:

  முட்டாள் –
  மெத்தப்படித்தவர் போல் ஆங்கிலத்தில் எழுதும்
  படித்த முட்டாள்:
  மேலே உள்ள இவர் பதிலில் மட்டுமே
  எனக்கு கிடைத்தது
  இவ்வளவு spelling mistakes:

  hanging aroung
  Honorable
  your nasty guttural sounds like illiterates
  focused
  white collared
  democrazy
  Indian Democrazy
  San tana Dharma
  bogus criminals…
  vairgya

 12. selvarajan சொல்கிறார்:

  தீவிர மோடி எதிர்ப்பு பதிவுகளை — வெளியிடும் பல தளங்களில் ஏதாவது ஒன்றில் ஒரே ஒரு பின்னூட்டம் அளிக்க இந்த மோடி ஆதரவாளர்களுக்கு திராணி இருக்கிறதா — அங்கே இவர்களை ” அடித்து – துவைத்து – பிழிந்து – கந்தலாக்கி ” காயப்போட்டு விடுவார்கள் — ஏனென்றால் அவர்களின் நிலை அப்படி ….

  இங்கே கா.மை . அய்யா அவர்களும் – மற்ற பின்னூட்ட நண்பர்களும் நாகரீகமான — பண்பான — மேன்மையான — நடுநிலையான –ஆதாரமான ” மறுமொழிகளை ” பதிவிட்டு வருகிறார்கள் — ஏனென்றால் இந்த தளம் ஆரம்பித்த ஜூலை / 2009 – ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இதற்கென்று ஒரு நெறிமுறைகளோடு — ஒருசார்பு அற்ற நிலையை தவிர்த்து — அந்தந்த காலங்களின் செய்திகளை அடிப்படையாக கொண்டு இடுக்கைகள் வெளிவந்துக் கொண்டு இருக்கிறது …

  எந்த கட்சி மத்தியிலும் — நம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தாலும் ” மக்கள் நலனுக்கு — நல்லிணக்கத்திற்கு –அன்றாட வாழ்க்கைக்கு ” ஒவ்வாத செயலை திட்டமிட்டாலும் — அரசியல் — அரசியல்வாதிகள் — அறிவியல் — நாடுகள் — மதவாதிகள் — போலி சாமியார்கள் இன்னும் பல பிரிவுகளில் — தவறுகள் நடப்பதை சுட்டிக் காட்டி — பலதரப்பட்டவர்களும் அறிய வேண்டும் என்கிற உறுதியோடு உள்ள தளம் தான் இது …..

  இங்கேயும் தன்னுடைய ஒரு சார்பு நிலையுடனும் — தன் தலைவனின் துதிபாடும் விசுவாசிகளும் பின்னூட்டங்கள் இட எந்த வித தடையில்லை என்பதும் — அநாகரிகமான — அசிங்கமான — வார்த்தை பிரயோயக்கங்களுக்கும் தக்க பதிலை சொல்லி வருகிறார்கள் கா.மை மற்றும் நண்பர்கள் — அப்படியிருந்தும் எல்லை மீறி போகும் போது தடையை ஏற்படுத்துவது இயல்புதான் …. திடீரென்று வந்து தளத்தின் மாண்பை குலைக்க வரும் புல்லுருவிகள் — வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டு காணாமல் போவதும் — அடிக்கடி நடக்கின்ற ஒன்று ….

  என்னிடம் கெடுபிடி செய்து — கிடுக்கிப்பிடி போட்டு பெற்ற தனிமனித அடையாளத்தை — கார்பொரேட்களின் காலை நக்க அளித்ததைப்பற்றி விளக்க துப்பிலல்லாமல் — அவன் கேட்டால் நீ ஏன் கொடுக்கிறாய் என்று கேட்கும் அறிவாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் ….

  இன்னுமொரு அதி மேதாவி 125 கோடி ஜனத்தொகையில் வெறும் 84 லட்சம் பேர்கள் தானே ஆதார் அடையாளத்தை ஜியோவிடம் கொடுத்தார்கள் என்று கேட்பதும் — மக்கள் படும் அவதிகளை பற்றி கிஞ்சித்தும் அக்கறையின்றி தான் வங்கிக்கு செல்லாமலேயே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டேன் என்று தன் பெருமையை கூறுவதும் ….

  வெளியே நடப்பது என்னவென்றும் — தன் பணத்தை எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி அல்லாடுகிற மக்களைப்பற்றி அறியாமல் — வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடைக்கும் நபர் தன் கட்சியையும் — தலைவனையும் துதி பாடி மனிதநேயத்தை கொச்சைப்படுத்த முயல்வதும் –வந்தேறிகளின் செயல் அன்றி வேறு அல்ல … தளத்தில் வந்து தன் மொக்கை விருப்பமான மதத்தையும் – சனாதன தர்மத்தையும் விளம்பரப்படுத்த வந்து — கொச்சைப்படுத்தி கொள்கிறது – ஒரு டுபுக்கு ….

  மற்ற நண்பர்களை பார்த்து நாய்கள் என்றும் — கூறுகிறது இந்த வெறிபிடித்து அலைகின்ற நாய் — இந்த ஒரே எண்ணத்தில் ஊளையிடுகிற வெறிபிடித்த நாய் — சனாதன தர்மம் பற்றி கூற எந்த தகுதியும் இல்லை … இந்த தளத்தில் வந்து இதனுடைய மதத்தையும் — மற்ற தர்மங்களையும் பரப்ப நினைத்தால் — அந்த பப்பு வேகாது ….

  நடப்பு நிலை அறியாமல் — உப்புசப்பில்லாத விளக்கங்களை கொடுத்து பின்னூட்டம் இடுகின்ற நபர்களுக்கு நாம் எந்த மறுமொழியும் கூறாமல் தவிர்த்தால் — அதுவே அவர்களுக்கு ” தான் ஒரு அறிவுஜீவி … ” { அதுகள் அறிவுஜீவியா — இல்லை அறிவு சூன்யமா என்பது நமக்கு நன்கு தெரியும் } அதனால் யாரும் எதிர்ப்பு காட்டவில்லை — என்கிற மிதப்போடு — மீண்டும் — மீண்டும் குரைக்காமல் அடங்கிவிடும் என்பதுதான் நிதர்சனம் … !!! அப்படித்தானே … ?

  • selvarajan சொல்கிறார்:

   பிழை திருத்தம் : — இரண்டாவது பத்தியில் // ஒருசார்பு அற்ற நிலையை தவிர்த்து // என்கிற வாக்கியத்தில் ” அற்ற ” என்பதை நீக்கி வாசிக்கவும் ….

 13. kayshree சொல்கிறார்:

  sariyana vadikattina porukki …sekar……yennai pattri thalvaga kevalamaga ezhutha unakku angiharam alittatu yaruda….masirandi…onnoda velaya paruda somberi mavane….yoggiyan somba thookina kathaya irukku…comparison thappudannu solren adai vittuttu masiru yenakku budhi mathi solran….beggars and loafers….ivaru peria pudingi ….yen onga aala….Maldives …Fiji islands…west indies….innum ethanayap chinna chinna nadellam irukku adoda oppittu pakka chollu…

 14. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! kayshree அவர்கள் நண்பர் சேகருக்கு அளித்துள்ள மறுமொழி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளோடு இருப்பது கவனிக்க தக்கது — அவருடை முழுப்பெயர் ” srinivasan k iyer ” என்று குறிப்பிட்டுள்ளார் — அதுவுமில்லாமல் ” Patanjali yoga and social harmony — ” பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும் தெரிகிறது — அவருடைய பெயருக்கு அடையாளமா போட்டுள்ள தெய்வத்திற்கும் — அவருடைய வார்த்தைகளுக்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா .. மீண்டும் தொடர விட்டால் ” தளத்தின் மாண்பு ” இருபக்க நண்பர்களின் வார்த்தைகளால் கெடும் என்பது மட்டும் நிச்சயம் … இனி உங்களின் மறுமொழியை நோக்கி … !!!

 15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  செல்வராஜன்,

  அவர் மிகவும் கௌரவப்படுத்தப்பட வேண்டிய ஒரு நபர்….
  எனவே, அவருக்காக இப்போது தான்
  ஒரு தனிப்பதிவு போட்டிருக்கிறேன் –

  “ஒரு மோடிஜி பக்தருக்கு விசேஷ கவுரவம் கொடுக்க விரும்புகிறேன்…..!!!”

  தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அங்கே பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 16. kayshree சொல்கிறார்:

  think who started accusing me firstly, branding me as a stooge of r.s.s. and fired salvos and made derogatory remarks and thus assaulting me personally.. I always think twice before I right and it was not habit to accuse any one for that matter deliberately unless am being torpedoed making innuendoes about my self. if they don’t stop … I will give a befitting reply. neer yenna vakkaluttu vangareengala avanukku…mudallu avana thiruttunga….apparoma yenna sadunga …these fellows making diversionary tactics ..instead of discussing about the government’s regulations..who is he to call me a MUTTAL…???? DO YOU ACCEPT THAT ..???? arivu jeeviya or arivu soonyama endru oruvan kattran…adellam ongal parvayil romba arumayana varthaigala..??? innoru kasandu …adi medhavi ..engiran….oru dupukku….yenna meaning adukku….tamila kollatheenga ….innoru vadigattina pisasu…vandherigal endru ivan yennomo yogyam mathiri ..oru peria role model mathiri pesaran…aduvellam onga parvayila theriyaliya….pulluruviyam….pachonthi paya ezhutharan…”some brainless talk” yettan peru Inga yenna adikka kathu irukkenga … I have clearly written at first that I like KAVERI MAINTHAN’S readings and I told him that I did agree with his comparison…and highlighted only the valid points between India an Venezuela……the talk is only between me and kaveri mainthan and not any one else…why others are making unnecessary personal attacks…are you all educated or what …I may pluck any thing who are you all to talk about my profile and pattern…what do you all know about me ? behave like good citizens …if you don’t like MODI ..its your fault and not mine…I know about me …nobody need to teach me about anything ….

 17. Gnana Sekaran சொல்கிறார்:

  இந்த பதிவை எழுதும் முன் உங்களுக்கு உங்களுக்கு அறிவு இருக்கிறதா திரு சேகர் அவர்களே , வெனிசுலாவில் மக்கள் தொகை 4 கோடி மக்கள் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் , அந்த 4 கோடி பேருக்கு பணத்தை கொடுக்க முடியாத ஆட்சியாளர்களுக்கும் , இங்கே 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருக்கும் ஆட்சியாளருக்கு எவ்வுளவு வித்தியாசம் இருக்கிறது , இங்கே மக்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க பட்டு இருக்கிறது , அதன் காரணமாகதான் இங்கே அது போன்ற கலவரம் நடைபெற வில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.