இன்று முதல் திரு.சந்திரபாபு நாயுடுவும் தேசத்துரோகி ஆக்கப்பட்டு விடுவாரா….?

ரூபாய் நோட்டு செல்லாக்காசு ஆக்கப்பட்டதை ஒட்டி
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறைகூறுபவர்கள்
அனைவரும் தேசத்துரோகிகள் என்று பாஜக ஆதரவாளர்களால்
முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இது நாள் வரை, மோடிஜியை மிகத்தீவிரமாக
ஆதரித்து பேசிவந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும்
நேற்றிரவு, 40 நாட்கள் ஆகியும் பிரச்சினைக்கு எந்த விடிவும்
கிடைக்காததை குறை கூறி பேசி இருக்கிறார்….

இன்று முதல், திரு.சந்திரபாபு நாயுடு அவர்களும்
மோடிஜி பக்தர்களால், தேசத்துரோகிகள் பட்டியலில்
சேர்க்கப்படுவாரென்று நம்புவோமாக…..!!!

திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் பேச்சு பற்றிய
செய்தி கீழே –

—————————

ரூபாய் நோட்டு விவகாரம்: 40 நாள்களாகியும்
பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை – நாயுடு வேதனை …..

naidugaru

விஜயவாடா : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில்,
மக்கள் படும் கஷ்டத்தை மத்திய அரசு கவனத்தில்
கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு
நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின்
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வரும்,
தெலுங்கு தேச கட்சியின் தலைவருமாகிய சந்திரபாபு நாயுடு
பேசியதாவது:

செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியாகி,
40 நாட்கள் கடந்து விட்டது; பிரச்னை தீரவில்லை.
தற்போது இதுவொரு சிக்கல் நிறைந்த மற்றும்
உணர்வுப்பூர்வமான பிரச்னையாகி விட்டது.
வங்கிகளில், மக்கள் மணிக்கணக்கில்
காத்து இருக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனை
மாற்றத்திற்கு வங்கிகள் தயாராகவில்லை.
மக்கள் கஷ்டத்தை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள
வேண்டும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து
தினமும் 2 மணி நேரம் சிந்தித்தும், இப்பிரச்னைக்கு
தீர்வு காண முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை
வெளியிட்ட போது, தெலுங்கு தேசக் கட்சி பெரிதும்
வரவேற்றது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது
அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது

—————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இன்று முதல் திரு.சந்திரபாபு நாயுடுவும் தேசத்துரோகி ஆக்கப்பட்டு விடுவாரா….?

 1. selvarajan சொல்கிறார்:

  நம் தமிழ் நாட்டிலும் செல்லாத நோட்டு அறிவிப்பு வெளிவந்தவுடன் — ஆஹா … ஓஹோ … அருமையான அறிவிப்பு — கள்ள மற்றும் கருப்புப்பண பேர்வழிகளுக்கு பெரிய ” ஆப்பு ” வைத்து விட்டார் நம் பிரதமர் என்று ஆர்ப்பரித்து — ஆரவார அறிக்கைகளை விட்ட அல்லக்கைகளும் — அரசியல்வாதிகளும் — கட்சிகளும் — பிரமுகர்களும் — ரஜினி போன்ற நடிகர்களும் — மற்றும் பலரும் — தற்போது ” கோந்து ” அடைத்த வாயோடு அமைதியாகி விட்டார்கள் ….
  பாராட்டியவர்களை உற்று நோக்கினால் — ” நாம் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் ” நம்மையும் கருப்புப்பண பேர்வழி என்று எங்கே முத்திரை விழுந்து விடுமோ என்கிற ஆதங்கத்தில் — அவசரத்தில் விட்ட அறிக்கைதான் தவிர ” உளப்பூர்வமானது ” அல்ல என்பது தான் உண்மையிலும் -உண்மை …
  நாயுடு பராவாயில்லை தாமதமாக ” தேசத்துரோகி ” ஆகிவிட்டார் மோடியின் பார்வையில் — ஆனால் மற்றவர்கள் அவ்வாறு ஆக துணிவில்லாமல் உள்ளுக்குள்ளேயே பம்முகிறார்கள் … என்பது தானே உண்மை …. ?

 2. LVISS சொல்கிறார்:

  Please post one news item where any op BJP leader called the opponents as desh drohis –
  Having said that there has been utterances by some people which were anti national and helped our enemy to use them against us —
  Please stop this habit of saying that BJP brands every one who opposed them as desh drohis – People brand themselves as anti national and say the BJP will (future tense) call them anti national- The BJP has said that some utterances were anti national ie against national interest and causing embarasment to the country -which is different from branding some body as anti national —
  Mr Naidu is not a one man panel- There are others in the panel from whom he can get advise- If there were one or two persons who have worked in the bank and handled cash they would have given good suggestion — Anyway it is too late as the scheme is going to end shortly –We have to only see how it impacts the economy in the long run and how long will it take to normalise the cash position in the banks ( My guess is that whatever has happened ., ie keeping the cash available in a low position and slowly allowing the cash position to improve gradually by inducting other denomination notes in the coming days instead of putting all the new notes in one go and creating more instabiity , has been pre planned) -Most banks are ready to give out only 2000 notes and very few banks, particularly the chest branches , will be able give smaller denominations if at all –Smaller denomination notes of Rs 100 and below which are in circulation are being held up by those who have them for fear of not getting them back from the banks –

 3. LVISS சொல்கிறார்:

  Only by mid January the banks ATMs will begin to function close to normalcy — If a survey of non functioning ATMs before the 8th Nov had been taken it would have been no different from what we see now -At no point of time before the 8th Nov all the ATMs have had cash — Now it looks very obvious because the banks are not giving out the required cash to the customers – I have been visiting many banks in Chennai -The crowds are normal but the cash position is the same –

 4. kayshree சொல்கிறார்:

  CAUVERY AND GODAVARI CAN ONLY BE LIKE THAT …BUT NEVER GANGES AND THAT IS OUR HONOURABLE PRIME MINISTER NARENDRA MODI JI…….!!! purinjutha idil ulla similie…????

 5. LVISS சொல்கிறார்:

  Mr Chandrababu Naidu has since clarified his statement — About the difficulties faced by the public the PM himself has acknowledged and every one is aware of it –
  Has Mr K M thrown to the winds his promise not to write about Modi or BJP –Looks like it –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Mr.LVISS,

   So you also wish that I don’t write…

   thank you,
   Kavirimainthan

   • LVISS சொல்கிறார்:

    No sir I want you to write — If you stop blog will lose its readers– But my humble request is please cut out that extra stuff that borders on appearing to be personal — Politicians are doing their job in the manner they think is right and if we find they are wrong we can always say so –Let me say again I am not in fully in agreement with all the things that the govt does —
    Incidentally I find that some of the persons who used write their comments are not seen now –Some new ones have appeared —

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.